Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை, சுவாரசியமாக உள்ளது.தொடருங்கள்.

  • Replies 346
  • Views 27.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 9: சிங்கை வேலை தேடும் படலம்

சிங்கை போவது என்று முடிவெடுத்த உடனேயே தமிழகத்தில் சில தயார்ப்படுத்தல்களுக்கு முயன்று இருந்தேன். என் பழைய முதலாளி காலில் சிகிச்சை laugh.gif என்று வெளிக்கிடும்போதே அவரிடம் எனது வேலை அனுபவத்திற்கான சான்றிதழைப் பெற்று வைத்திருந்தேன் :rolleyes:. அதுபோல கணினியில் பயிற்சி வேணும் என்பதற்காக ஒரு நிறுவனத்திற்கும் சென்று கேட்டுப் பார்த்தேன். அப்போது எனது கணினிப் பயிற்சி பூச்சியம்..! கல்லூரியில் தொட்டுப்பார்த்த அனுபவம் இருந்தது என்று வேணுமானால் சொல்லலாம். laugh.gif

அப்போது எனக்கு Windows க்கும் Microsoft office க்கும் வித்தியாசம் தெரியாது. :D ஒரு கணினி நிறுவனத்திற்குச் சென்று விண்டோஸ் பயிற்சி இருக்கா என்று கேட்டு வைத்தேன்.. laugh.gif

அவர்களும் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு அதெல்லாம் இல்லை என்றார்கள்.. நான் ஏதோ பில் கேட்சுக்கு நிகரா எதையோ தொடங்கப்போறன் எண்டு நினைத்திருப்பார்களோ என்னவோ.. :D உண்மையில் நான் கேட்க நினைத்தது Microsoft office பயிற்சி கொடுப்பீர்களா என.. laugh.gif பதில் சொன்னது ஒரு அழகான ஃபிகர் என்பதால் மானரோசம் கருதி பேசாமலே திரும்பி விட்டிருந்தேன். :wub:

இப்போது சிங்கையில் கணினிப் பயிற்சி ஏதுமில்லாமல் வந்து இறங்கியிருக்கிறேன்.. unsure.gif நண்பர்களின் வீட்டில் அவர்கள் துணையுடன் ஒரு வேலைக்குறிப்பு (Resume) வந்த அடுத்த நாளே தயார் செய்து பத்திரிகைகளைப் பார்த்து வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். unsure.gif

நண்பர்களின் வீடு ஒரு வேடந்தாங்கல் மாதிரி. என்னைப் போன்று வேலை தேடுபவர்கள் வருவார்கள். வேலையை எடுப்பார்கள் உடனே இன்னொரு இடத்தைப் பார்த்துப் போய்விடுவார்கள். :rolleyes: இப்போது என் முறை.unsure.gif

வேலைக்குறிப்பில் போடுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. செய்த வேலைகளைக் கொஞ்சம் நீட்டி முழக்கி எழுதியிருந்தேன்.. இதில் Microsoft office, AutoCad தெரியும் என்கிற கதை வேறு. :D

அப்போது இருந்த மனநிலையில் எப்படியாவது சிங்கையில் வேலை எடுத்துவிட வேண்டும் என்கிற வெறி மாத்திரமே இருந்தது. வேலை கிடைத்தால் எதையாவது செய்து சமாளித்துக் கொள்ளலாம் என்கிற ஒரு நப்பாசைதான். unsure.gif

போய் ஐந்தாவது நாள் ஒரு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருகிறது. எட்டாவது நாள் தேர்வுக்குச் செல்லவேண்டும். என்ன வேலை என்று தெரியாது. unsure.gif

இதற்குள் இன்னொரு நிறுவனத்தில் இருந்தும் அழைப்பு. சீனியர் பொறியியலாளர் வேலைக்குக் கேட்டிருந்தார்கள். நானோ படு ஜூனியர். :D இருந்தாலும் சும்மா விண்ணப்பம் போட்டிருந்தேன். அவன் கெட்ட காலம். என்னையும் அழைத்துவிட்டான். laugh.gif (நமக்குத்தான் Microsoft Office, AutoCad எல்லாம் தெரியுமே.. :icon_mrgreen: )

இரண்டாவது நேர்முகத் தேர்வு ஒன்பதாம் நாள் என முடிவாகியிருந்தது.

முதலாவது நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறேன்.. unsure.gif

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் புங்கையூரன், நுணா.. :D

இந்தியா போதுமடா சாமி என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.. ஒரு நண்பனின் அண்ணன் சிங்கையில் இருந்தார். இப்பவும் இருக்கிறார்.. :rolleyes: அவரிடம் அங்குள்ள வேலைவாய்ப்பு பற்றிப் பேசினேன்.. சிவிலுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டெனத் தெரிவித்தார்.. :unsure:

சரி.. செலவோடு செலவு.. நெக்ஸ்ட் ஸ்ரொப்.. சிங்கப்பூர் என்று முடிவு செய்தேன்.. :lol:

தமிழகத்தை விட்டு வெளியேறும் பொழுது அங்கு செய்த தொழிலை யாருடமாவது கொடுத்துவிட்டா வெளியேறினீர்கள்?

பி. கு. இசை இதை அப்படியே மறக்காமல் பிரதி எடுத்து உங்கள் பிள்ளைகளுக்கு சரியான தருணத்தில் கொடுத்துவிடுங்கள், அந்த டாவு விஷயம் உட்பட. அவர்கள் நிச்சயம் பில் கேட்சாக வருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை விட்டு வெளியேறும் பொழுது அங்கு செய்த தொழிலை யாருடமாவது கொடுத்துவிட்டா வெளியேறினீர்கள்?

பி. கு. இசை இதை அப்படியே மறக்காமல் பிரதி எடுத்து உங்கள் பிள்ளைகளுக்கு சரியான தருணத்தில் கொடுத்துவிடுங்கள், அந்த டாவு விஷயம் உட்பட. அவர்கள் நிச்சயம் பில் கேட்சாக வருவார்கள்.

தொழிலை விட்டு வெளியேறுவது சாதாரணமானதல்ல என்று எனக்கு விளங்கியே இருந்தது. ஏனென்றால் பழைய முதலாளி பல இடங்களிலும் கடன் எடுத்துக்கொண்டு ஓடியிருந்தார். அதையெல்லாம் அடைக்கவேண்டி இருந்தது. :unsure:

முன்னேற்பாடாக வேலை ஒப்பந்ததாரர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போதெல்லாம் அவர்களிடம் வெற்று வௌச்சர்களில் கையெழுத்து வாங்கி வைத்திருந்தேன். :rolleyes:

இறுதியில் அண்ணரிடம் கொடுத்து (அவர் ஒரு கணக்காளர்) கணக்கெழுதி கணக்கைச் சமன்செய்யும்படி கேட்டேன். அவர் செய்து கொடுத்ததை புரஜெக்ட் உரிமையாளர்களிடம் கொடுத்து கணக்குவழக்கை முடித்துவிட்டேன்..! :D

தொடர் நன்றாகப் போகிறது. தொடர்ந்து வாசிக்கும் ஆவல் நிறைகிறது.

பல வருடங்களிற்கு முன்னர் பல்கலைக்களத்தில் ஒரு சக மாணவனைக் கிண்டல் பண்ணுவதற்காக நண்பர்கள் கூறிய கதை ஒன்று நினைவிற்கு வந்தது.

இன்ரவியூவின் ஒரு கட்டத்தில சம்பள எதிர்பார்ப்புப் பற்றி அவர்கள் கேட்டபோது மேற்படி மாணவன் ஒரு தொகையினைக் குறிப்பிட்டாராம். அதற்கு அவர்கள், நாங்கள் உங்களை அமர்த்த இருக்கும் பணிக்கான ஊதியமாக நீங்கள் ஆரம்பநிலை ஊழியர் என்பதால் தொடக்கத்திற்கு 75 ஆயிரம் டொலர்கள் வருடாந்த ஊதியமும், 6 வாரங்கள் விடுமுறையும், தங்குமிடமும் பி.எம்.டபிள்யூ எம் 3 காரும் கொடுப்பதாக முடிவு செய்துள்ளோம். இது உங்களிற்கு உடன்பாடான ஊதியமா என்று கேட்டார்களாம். தன்செவிகளையே நம்ப முடியாத மேற்படி மாணவன் 'பகிடி விடுறியள்' என்றானாம். அதற்கு அவர்கள் ஆர் முதலில தொடங்கினது என்றார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் மாமோய்,

நல்ல நகைச்சுவையாய் அருமையாக தொடர்கிறீர்கள். வாழ்த்துக்கள் :)

ஆமா.. ஏன் மாமோய் ஊரிலை பல்கலைக்கழகம் முடிக்கவில்லை?

வியாபாரி மூலையிலை தானே டாவடிச்சதா சொன்னாங்கள். திடீரெண்டு எப்படி இந்தியாவிலை?

இல்லை அவையும் இந்தியாவிலை தான் இருந்தவையோ? :rolleyes: :rolleyes:

கொஞ்சம் டீட்டெயிலா :icon_mrgreen: எழுதுங்கோப்பா.. :lol::icon_mrgreen:

தொடர் நன்றாகப் போகிறது. தொடர்ந்து வாசிக்கும் ஆவல் நிறைகிறது.

பல வருடங்களிற்கு முன்னர் பல்கலைக்களத்தில் ஒரு சக மாணவனைக் கிண்டல் பண்ணுவதற்காக நண்பர்கள் கூறிய கதை ஒன்று நினைவிற்கு வந்தது.

இன்ரவியூவின் ஒரு கட்டத்தில சம்பள எதிர்பார்ப்புப் பற்றி அவர்கள் கேட்டபோது மேற்படி மாணவன் ஒரு தொகையினைக் குறிப்பிட்டாராம். அதற்கு அவர்கள், நாங்கள் உங்களை அமர்த்த இருக்கும் பணிக்கான ஊதியமாக நீங்கள் ஆரம்பநிலை ஊழியர் என்பதால் தொடக்கத்திற்கு 75 ஆயிரம் டொலர்கள் வருடாந்த ஊதியமும், 6 வாரங்கள் விடுமுறையும், தங்குமிடமும் பி.எம்.டபிள்யூ எம் 3 காரும் கொடுப்பதாக முடிவு செய்துள்ளோம். இது உங்களிற்கு உடன்பாடான ஊதியமா என்று கேட்டார்களாம். தன்செவிகளையே நம்ப முடியாத மேற்படி மாணவன் 'பகிடி விடுறியள்' என்றானாம். அதற்கு அவர்கள் ஆர் முதலில தொடங்கினது என்றார்களாம்.

நன்றி இன்னுமொருவன். நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை மறந்து சிரிக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் இன்னுமொருவன், பகலவன் உங்கள் கருத்துக்களுக்கு.. :D

ஜீவா மாப்பிளை.. எனக்கு அப்பவே தெரியும்.. நீங்கள் வேறை யாரையோ நானென்று நினைச்சுக்கொண்டிருக்கிறியள் எண்டு..! :icon_mrgreen: அப்பிடியே இருக்கட்டும் எண்டு விட்டிட்டன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கவனத்துக்கு.

ஊரில் இருந்தது இத்தனை வருடங்கள்

இந்தியாவிலிருந்தது இத்தனை வருடங்கள்

சிங்கப்பூரில் இத்தனை வருடங்கள்

கனடாவில் இத்தனை வருடங்கள் = வயசு :lol::icon_idea:

விசுகு அண்ணை.. இப்பிடி யோசிச்செல்லாம் எழுதேல்லை.. :lol:

நீங்கள் யோசிக்கவில்லை.

நான் யோசித்தேன்.

அண்ணனல்லவா?

:icon_idea:

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 10: தயார்ப்படுத்துதல்

என்னைப் பொறுத்தமட்டில், நேர்முகத் தேர்வுக்குத் தயார்ப்படுத்துதல் என்பது மிக முக்கியமானது. அது சிறிதளவு நீங்கள் செய்யப்போகும் தொழில் அறிவு குறித்தும், பெருமளவில் தேர்வாளர்களை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

இரண்டு கேள்வி/பதில்கள்.

  1. உங்களுக்கும், நீங்கள் பெறப்போகும் வேலைக்கும் குறுக்கே நிற்பவர்கள் யார்? :rolleyes: அந்த நேர்முகத் தேர்வாளர்கள்தான். :wub:
  2. நீங்களும், உங்கள் நண்பரும் காட்டில் கரடியிடம் மாட்டிக்கொண்டால், எவ்வளவு வேகமாக ஓடினால் கரடியிடம் இருந்து தப்பலாம்? :rolleyes: பதில்: உங்கள் நண்பரைவிட வேகமாக ஓடினால்.. laugh.gif

நாம் எந்த அளவு தராதரத்துடன் இருக்கிறோம் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். நேர்முகத்தேர்வில் உங்கள் முன் அமர்ந்து இருப்பவர்களும் மனிதர்களே.. அவர்களைத் திருப்திப்படுத்துவதில் உங்கள் எதிர்காலம் தங்கியுள்ளது.

சிங்கப்பூரில் எனது முதலாவது நேர்முகத்தேர்வு. ஒரு மாலைநேரம். அந்த அலுவலகத்திற்குச் சென்றால் எல்லோரும் வேலை முடிந்து சென்றுவிட்டார்கள். அந்த அதிகாரி மட்டும் உட்கார்ந்திருந்தார். பார்த்தால் இந்தியர் மாதிரி இருந்தது.

அன்று நான் முழுவதும் சரணாகதி அரசியல் செய்யப் போயிருந்தேன். :D முக்கியமான விடயம், ஐயா பிச்சை தாங்கோ என்று கேட்பதாக இருந்தாலும், கம்பீரமாக நின்று மரியாதைமிக்க முறையில் கேட்க வேண்டும். laugh.gif

என்னிடம் எங்கே படித்தீர்கள், என்ன செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சாதாரணமான பதில்தான். எனது பழைய வேலைக்கான சான்றிதழ் கைகொடுத்தது. அத்துடன் என்னுடைய கல்விச் சான்றிதழ்களைக் காட்டினேன். (வட அமெரிக்காவில் அவற்றைப் பார்க்கமாட்டார்கள்.)

சரக்கு இல்லாவிட்டால் எதையாவது உருவாக்கிக் கொள்ள வேணும்தானே.. :D கல்லூரியில் நான் செய்த புரொஜெக்ட் தீசிஸ் எடுத்துச் சென்றிருந்தேன். அது ஒரு புத்தகவடிவில் இருக்கும்.

அதைச் செய்யும்போதே கட்டட வடிவமைப்பு சம்பந்தமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். நானும் இரு வகுப்புத் தோழர்களும் சேர்ந்து செய்தது. அது பலமாடிகள் கொண்ட ஒரு குடியிருப்பும் நிலக்கீழ் கார் நிறுத்துமிடமும் எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்தது.

நேர்முகத் தேர்வில் அதையும் வெளியே எடுத்து விட்டேன். அடேயப்பா.. இவன் பெரிய ஆளா இருப்பான் போலை என்று நினைத்துவிட்டார் போலை. laugh.gif

ஒரு கட்டட வரைபடத் தொகுதியை மேசையில் விரித்தார். அதில் இரும்பினால் ஆன கூரை வடிவமைப்பு காட்டப்பட்டிருந்தது. எனக்கென்றால் தலை கால் புரியவில்லை.. நாம் வேலை செய்த நிறுவனத்தில் 1:2:4 என்று சிமெண்ட் கலவை சொன்னதிலேயே காலம் போய்விட்டிருந்தது. laugh.gif இதெல்லாம் எங்கே தெரியப் போகுது. :wub:

நான் என்னுடைய அவதானங்களைச் சொன்னேன். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இன்றைய நிலையில் நான் அன்று சொன்ன பதில்களைச் சொன்னால் அடித்துத் துரத்திவிடுவார்கள். ஆனால் அன்று அனுபவம் இல்லாதவன் என்கிற முத்திரை இருந்ததால் அதை உபயோகிக்க வசதியாக இருந்தது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து வைத்திருப்பதும், அதை ஒத்துக்கொள்ளத் தயங்காத தன்மையும் மிக முக்கியம்.

நான் அவரிடம், நான் வடிவமைத்தது கொங்கிரீட்டில் ஆன கட்டடத் தொகுதி. இரும்பு வடிவமைப்பில் பரீட்சயம் இல்லையென்று சொல்லிவைத்தேன். (சரணாகதி அரசியல்) :D

அவர் சொன்னார் அது பரவாயில்லை, நீங்கள் விரைவில் கற்றுக்கொள்வீர்கள் என.. :rolleyes:

நேர்முகத் தேர்வில் எனக்கு வடிவமைப்பு வேலையில் இருந்த ஆர்வத்தைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அது ஒரு வடிவமைப்பு நிறுவனம் அல்ல. அவர்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தினர்.

சிங்கப்பூரில் இரண்டுவகையான விசாக்கள் உண்டு. தொழில்சார் நிபுணர்களுக்கு Employment Pass. கூலி வேலை செய்பவர்களுக்கு Work Permit. குறைந்தபட்ச சம்பளம் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும்.

நான் தான் தொழில்சார் நிபுணராச்சே.. :D எனக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் $2050 (மாதம்) நிர்ணயிக்கப்பட்டது. நான் வாங்கின 1000 ரூபாக்கு இது ரொம்ப அதிகம் என நினைத்துக் கொண்டேன். laugh.gif

இது கட்டுமான நிறுவனம் ஆகையால், இந்தச் சம்பளத்துடன், வேலைக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் என்றார். எனக்கு வேறு வழி இல்லாவிட்டாலும், அடுத்தநாள் வரப்போகும் நேர்முகத் தேர்வில் அதிக ஆர்வம் இருந்தது. இரண்டு நாள் கழித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். :rolleyes:

(தொடரும்.)

நேர்முகப்பரீட்சைகளில் கேட்கப்படும் கேள்விகளை இரண்டாகப்பிரிக்கலாம் என எண்ணுகிறேன்.

- தொழில்துறை சார்ந்தவை (technical skills)

- பொதுவான கேள்விகள் ( இவை தனிப்பட்ட குணாதிசயங்கள், பொது அறிவு சார்ந்தவை... ஆக இருக்கும்) (behaviour)

I can teach you how to drive a car :D, but what I cannot teach you, how to behave <_<.

எனது அனுபவத்தில் பொதுவான குணாதிசயங்களே முக்கியம் எனப்படுகின்றது. ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும்பொழுது அவரின் பெரும்பான்மையான குணாதிசயங்கள் அவரில் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது, அவற்றை மற்ற முடியாது . நல்ல குணாதிசயங்கள் உள்ளவர்கள் எதையும் கற்பார்கள், சேர்ந்து வேலை செய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கவனத்துக்கு.

ஊரில் இருந்தது இத்தனை வருடங்கள்

இந்தியாவிலிருந்தது இத்தனை வருடங்கள்

சிங்கப்பூரில் இத்தனை வருடங்கள்

கனடாவில் இத்தனை வருடங்கள் = வயசு :lol::icon_idea:

இனிமேல் என்ன பொம்பிளையா பார்க்கப் போகினம்..! :D போனால் போகுது..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகப்பரீட்சைகளில் கேட்கப்படும் கேள்விகளை இரண்டாகப்பிரிக்கலாம் என எண்ணுகிறேன்.

- தொழில்துறை சார்ந்தவை (technical skills)

- பொதுவான கேள்விகள் ( இவை தனிப்பட்ட குணாதிசயங்கள், பொது அறிவு சார்ந்தவை... ஆக இருக்கும்) (behaviour)

I can teach you how to drive a car :D, but what I cannot teach you, how to behave <_<.

எனது அனுபவத்தில் பொதுவான குணாதிசயங்களே முக்கியம் எனப்படுகின்றது. ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும்பொழுது அவரின் பெரும்பான்மையான குணாதிசயங்கள் அவரில் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது, அவற்றை மற்ற முடியாது . நல்ல குணாதிசயங்கள் உள்ளவர்கள் எதையும் கற்பார்கள், சேர்ந்து வேலை செய்வார்கள்.

அகூதா..

இது நாடுகளுக்கு நாடு வேறுபடுகிறது.. கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது என நினைக்கிறேன். :unsure:

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணம் மிக முக்கியம். தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதே சீன முதலாளிகளின் முதல் இலக்கு. தொழிலாளர் சட்டங்கள் சில இருக்கின்றன. ஆனால் வட அமெரிக்கா அளவுக்கு இல்லை..! நாம்தான் சுயமாக நீந்திக் கடக்க வேண்டும்..! :rolleyes:

உண்மை இசை, நான் கூறியது மேற்குலக நாடுகளை அடிப்படையாக வைத்தே.

இசை,

சுயவாழ்க்கைத் தொடர் நன்றாக விறுவிறுப்பாகப் போகின்றது. வேலை தேடும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி 'சரணாகதி அரசியல்' செய்வது நல்லது. அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருக்கும் சிறு கொளும்பைப் பிடித்துக் கொண்டு மேலும் முன்னேறலாம்.

சிங்கப்பூரில் Auto CAD என்ன version பாவித்தீர்கள்? இருபரிமாணமா? முப்பரிமாணமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை,

சுயவாழ்க்கைத் தொடர் நன்றாக விறுவிறுப்பாகப் போகின்றது. வேலை தேடும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி 'சரணாகதி அரசியல்' செய்வது நல்லது. அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருக்கும் சிறு கொளும்பைப் பிடித்துக் கொண்டு மேலும் முன்னேறலாம்.

சிங்கப்பூரில் Auto CAD என்ன version பாவித்தீர்கள்? இருபரிமாணமா? முப்பரிமாணமா?

சிங்கப்பூரில் அப்போது இருபரிமாணம் தான்.. ஆனால் நான் பாவிக்க வேண்டிய தேவை வரவில்லை.. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்..! :D

நீங்கள் கேட்கிற கேள்வியைப் பார்த்தால் நீங்களும் சிவிலுக்குள்ளை தடக்குப்பட்ட ஆள்போல தெரியுது??!! :rolleyes:

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம்

1800 சிங்$ இப்போது வரையும் இருக்குது இந்த வருட ஜூலை இலிருந்து 3000 sing$ஆக்க போகிறார்களாம்

நன்றி கிருபன் தகவல்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் ஊருக்குப் போய் வீடு கட்டப் போகிறேன் நல்ல ஒரு அமைப்பான வீட்டை வடிவமைத்துத்தாருங்கள். இலவசமாக செய்துதாருங்கள் டொலர்கணக்கில் சம்பளம் தர முடியாது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கவனத்துக்கு.

ஊரில் இருந்தது இத்தனை வருடங்கள்

இந்தியாவிலிருந்தது இத்தனை வருடங்கள்

சிங்கப்பூரில் இத்தனை வருடங்கள்

கனடாவில் இத்தனை வருடங்கள் = வயசு :lol::icon_idea:

அண்ணா இ.கலைஞனுக்கு எத்தனை வயசாய் இருந்தால் எங்களுக்கென்ன இந்தக் காலத்தில வயசா முக்கியம் :lol::D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம்

1800 சிங்$ இப்போது வரையும் இருக்குது இந்த வருட ஜூலை இலிருந்து 3000 sing$ஆக்க போகிறார்களாம்

நன்றி கிருபன் தகவல்களுக்கு

இடையில் குறைத்திருக்கிறார்கள் போலுள்ளது.. நான் இருந்தபோது $2050 தான். :rolleyes: எங்கடை சீனன்கள் ஒரு டொலரும் குடுக்க மாட்டான்கள்..! :D

இசை நான் ஊருக்குப் போய் வீடு கட்டப் போகிறேன் நல்ல ஒரு அமைப்பான வீட்டை வடிவமைத்துத்தாருங்கள். இலவசமாக செய்துதாருங்கள் டொலர்கணக்கில் சம்பளம் தர முடியாது :icon_mrgreen:

வீடா??.. :D இங்கே வீடுகட்டுறதுக்கு பொறியியலாளர் தேவையில்லை (ஒரு குறிப்பிட்ட வரைமுறை மட்டும்).. புத்தகத்தை வாங்கி அதன்படி செய்யலாம்..! :D

அப்பாடா .. ஓசி வேலை செய்துகுடுக்கிறதில இருந்து எஸ்கேப்..

:lol:

அண்ணா இ.கலைஞனுக்கு எத்தனை வயசாய் இருந்தால் எங்களுக்கென்ன இந்தக் காலத்தில வயசா முக்கியம் :lol::D:lol:

சரி.. சரி.. கதையை விட்டுப்போட்டு படத்தை முதல்ல அனுப்புங்கோ.. :icon_mrgreen:laugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் ஏன் இங்கு வீடு கட்டப் போகிறேன் ஊரில் கட்டப்போகிறேன் என்றுதான் கேட்டேன் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சரி.. கதையை விட்டுப்போட்டு படத்தை முதல்ல அனுப்புங்கோ.. :icon_mrgreen:laugh.gif

காதோட காது வச்சாப்போல படம் வந்ததும் அப்பிடியே என்ற மெயிலுக்கும் அனுப்பி விடுங்கோ... :icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 11: திருப்புமுனை

அடுத்த நாள்.. மத்தியானம் 3 மணிக்கு அடுத்த நேர்முகத் தேர்வு..

இந்த நிறுவனமும் ஒரு கட்டுமான ஒப்பந்தக்காரர்கள். ஆனால் அதற்குள்ளேயே ஒரு வடிவமைப்பு செய்யும் அலுவலகமும் உண்டு. அதற்குத்தான் ஒரு பொறியியலாளர் தேவையாக இருந்தது.

கொங்கிரீட் வடிவமைப்பில் ஒரு தொழில்நுட்பம் உண்டு..! அதாவது அதியுச்ச சக்திகொண்ட கம்பிகளைப் பயன்படுத்தி கொங்கிரீட்டை அழுத்தி கொங்கிரீட்டின் தாங்கும் வலுவை அதிகரித்தல் (Prestressing). என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்த நிறுவனத்தை ஆரம்பித்தவரே இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரும் ஆவார். :rolleyes: அவர் பிரான்சை சேர்ந்தவர். அந்த நிறுவனத்தின் கிளைகளில் ஒன்று சிங்கப்பூரில்..

ஆகா.. இவரைப்பற்றி பல்கலைக்கழகத்தில்தானே படித்திருக்கிறோம். இவரது நிறுவனத்தில் வேலைசெய்தால் எப்படி இருக்கும் என மனம் கணக்குப் போட்டது.. :rolleyes:

முதல்நாள் இரவு ஒரு நண்பரிடம் இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசித்து மீள் அசை போட்டுவிட்டு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன்..

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தொழில்நுட்ப மேலாளரும் (சீனர்கள்) என்னைக் கேள்விகள் கேட்கக் காத்திருந்தார்கள்..

சம்பிரதாய வணக்கங்கள், வந்து இறங்கிய கதைகள் பேசியபின் தேர்வு ஆரம்பிக்கிறது. தொழில் நுட்ப ரீதியாக சில கேள்விகள் கேட்டார்கள்.. முதல்நாள் வாசித்ததில் இருந்து சிலவற்றை எடுத்துவிட்டேன். என்னுடைய கல்விச்சான்றிதழ்கள், வேலை அனுபவச் சான்றிதழ், புரஜெக்ட் தீசிஸ் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்.. ஒருசில கேள்விகளில் சொதப்பினேன்.. :D

கடைசியில் நிர்வாக இயக்குனர் ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார்..

"ஆக, உங்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது.." :blink:

"அட நாயே.. இதைத்தாண்டா அப்பப் பிடிச்சு சொல்லிக்கொண்டிருக்கிறன்." என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.. :lol:

கடைசியில், வேலைக்கு எடுக்க முன்வந்தார்கள். சம்பளம் அதே $2050 தான்.. அன்றே வேலை விசாவுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து குடிவரவுத்துறையில் சமர்ப்பிக்கச் சொன்னார்கள்..! :rolleyes:

சமர்ப்பித்துவிட்டு வீட்டுக்குப் போகிறேன்.. ஆனந்தம் ஆனந்தம்.. டாவைக் கல்யாணம் கட்டி குழந்தை குட்டி பெறுவது வரையில் மனத்திரையில் ஓடியது.. :lol:

(தொடரும்.)

பாகம் 11: திருப்புமுனை

கடைசியில் நிர்வாக இயக்குனர் ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார்.."ஆக, உங்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது.." :blink:

இப்படி இருந்தும் எதற்காக உங்களை அவர்கள் வேலையில் சேர்த்தார்கள் என எண்ணுகிறீர்கள்? குறிப்பாக அந்த வெற்றிக்கான காரணங்கள் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.