Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவில் வந்தது நிஜத்தில் தோன்றியது.. நிஜக் கதை..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்.. வீட்டு முற்றத்தில்.. ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தபடி.. நான்...

திடீர் என்று.. பெரிய விமானம் ஒன்று அதன் முதுகில்.. நாசாவின் விண்ணோடம் ஒன்றை தாங்கிய படி.. பறந்து வருகிறது. இதனை அவதானித்த நான்... அதனை வியப்போடு வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். என்னைக் கடந்து சென்ற விமானம்.. நான் எதிர்பார்க்காத வகையில்.. மீண்டும்.. திரும்பி வந்து.. வட்டமிட்டு வட்டமிட்டு நான் நின்ற பகுதியில் பறக்கிறது.. இந்தக் காட்சிகள் எல்லாம் அப்படியே மனதில் பதிவாகின்றன..!

எந்தப் பெரிய விமானம்..அதன் முதுகில் பெரிய விண்ணோடம்... இந்தப் பறப்புப் பற்றி முன்னர் கேள்விப்பட்டிருந்தாலும்.. பார்த்ததில்லை. ஆனாலும்.. நேற்றிரவு தூக்கத்தில்... அதுவும் கனவில்..பார்த்தது வியப்பாகவே இருந்தது.. இருந்தாலும் காலையில் அது மறந்து போய்விட்டிருந்தது.

இரவு 1 மணிக்கு தூங்கப் போயிருந்தாலும்.. காலை 7 மணிக்கெல்லாம் எழுந்துவிட்ட நான்.. வழமையான எனது பணிகளை செய்ய ஆரம்பித்தேன். இன்று எனது வீட்டைத் துப்பரவும் செய்யும் நாளும் கூட. இருந்தாலும் அதற்கிடையில் மடிகணணியை இயக்கி.. யாழ் களத்துக்கு செய்தி படிக்க.. வந்த நான்.. வழமை போல.. மெலோடியில் சிலவற்றை கேட்டுக் கொண்டே யாழைப் படித்துக் கொண்டிருந்தேன்.

"என்னமோ.. ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்.." பாடல் எழுந்தமானமாக.. என் எண்ணத்தை ஆட்கொள்ள... செவிகளை அதனால் நிரப்ப.. யு ரியுப்பில்.. தட்டிக் கேட்டுக் கொண்டு அதனை யாழிலும் பகிர்ந்துவிட்டு.. வீட்டை துப்பரவு செய்ய வெளிகிட்ட நான்.. அதனை முடித்து.. உடுப்பை எல்லாம் சலவை இயந்திரத்தில் போட்டு சுத்தப்படுத்தி.. உலர்த்திவிட்டு.. அதன் பின் குளித்து என்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தேன். வீட்டை விட்டு.. வெளியில் போய் ஆகாயத்தைப் பார்க்கிறேன்.. கருமுகில் படர்ந்திருக்க.. மழை தூறிக் கொண்டிருந்தது.

http://youtu.be/_VhWRtX6-5c

ஒருவித ஏமாற்றத்தோடு..சமையலறைக்குச் செல்கிறேன். மணி காலை 11.30 ஆகி இருந்தது. சரி.. ஒரு இஞ்சி தேனீர் குடிப்பம் என்று... யோசிச்சிட்டு.. அங்க போய் குளிர்சாதனப் பெட்டியை திறந்து.. பார்த்தால் வாங்கி வைச்சிருந்த இஞ்சியை யாரோ ஆட்டைப் போட்டிருந்தாங்க. ஏமாற்றத்தோடு.. மின்சாரக் கேற்றிலை இயக்கி.. தண்ணியைச் சூடாக்கி.. வெறும் தேனீர் போட்டுக் கொண்டு.. பிஸ்கட் சிலவற்றை அதில் நனைத்து சாப்பிட்டுவிட்டு.. தேனீரையும் பருகிவிட்டு.. மீண்டும் யுனி வேலை செய்வம் என்று கணணிக்கு வந்தேன். அப்படியே யாழையும் எட்டிப்பார்த்தேன்.

அங்கே லண்டன் குட்டி கரியின்.. நகைச்சுவை பதிவைக் காண்கிறேன். அண்மையில் நான் ரசித்த குட்டி கரியின் காணொளியும் தலைப்புக்கு ஏற்ப விடயங்களைக் கொண்டிருந்ததால்.. அதனையும் யாழில் இணைத்துவிடுகிறேன். அப்படியே யாழின் இதர பக்கங்களை பார்க்க மடிகணணியின் மடியில் தடவி.. உருட்டுகிறேன்..

அக்னி V பரிசோதனை என்ற ஈசனின் தலைப்பு கண்ணில் பட.. என் இணைய உலாவியில் ஓடிக்கொண்டிருக்கும்.. பிபிசி தலைப்புச் செய்தியில் அந்தத் தலைப்பைப் பார்த்த ஞாபகம் வர.. பிபிசியின் இணைய முகவரியில்.. அந்தப் பக்கத்தை திறந்து.. அக்னி V பற்றிய செய்தியை படிக்கிறேன். அக்கினி V பறப்பு வீச்சுப் பற்றிய பிபிசி வெளியிட்ட படம் என்னைக் கவர.. அதனை யாழில் பகிர்ந்து கொள்கின்றேன். அப்படியே..

பிபிசி காணொளிகளில் என் பார்வையைப் பரப்பியது தான் தாமதம்.. அப்படியே கனவில் கண்ட காட்சி.. காணொளியின் thumbnail ஆகத் தோன்ற.. அதனை அழுத்திப் பார்க்கிறேன். அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல்.. கனவில் வந்த காட்சிகள் சில.. காணொளியில்.. பதிவாகி இருந்தன..! ஆச்சரியத்தோடு அந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் இரண்டு தடவை பார்க்கிறேன். கனவில் வந்த காட்சிகள் அங்கு அப்படியே... உறுதி செய்து கொள்கிறேன். இந்தக் காணொளியை நான் முன்னர் பார்க்கவே இல்லை..! ஆச்சரியம் பொங்க.. இந்த நிகழ்வை அப்படியே ஒரு குட்டிக் கதையாக்கி விட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

bbc-pic.jpg

http://www.bbc.co.uk...onment-17755597

http://www.bbc.co.uk...canada-17749899

இப்படி முன்னரும் பல முறை நடந்துள்ளது. ஒரு முறை கனவில் கடற்புலியாகி நான் கடலில் சண்டை இட்டு.. சிங்கள எதிரிப் படகுகளை அடித்து விரட்டுகிறேன். அதில் ஒன்று மூழ்கிப் போகிறது. என்ன ஆச்சரியம்.. கடற்புலியாகி.. கடலில் சண்டை போட்டேனா.. என்ற ஆர்வத்தில்.. வியப்பில்.. எண்ணம் ஓட.. கனவு கலைகிறது.

காலை எழுந்து இணையத்தில் செய்தியை படிக்கிறேன்.. மன்னார் கடலில் கடற்புலிகளால் டோரா மூழ்கடிப்பு என்ற செய்தி பளிச்சிடுகிறது.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றன.. இன்றைய அறிவியல் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்தாலும்.. எமது அறிவையும் ஆற்றலையும் மிஞ்சிய சில.. அதிசயங்கள்.. நடக்கக் காணத்தான் நேரிடுகிறது. இவற்றின் மூலம் தான் என்ன.. விடைக்கான தேடலோடு.. நான்.. உங்கள் முன் இப்பதிவோடு..!

(இது ஒரு நிஜக் கதை)

Edited by nedukkalapoovan

  • Replies 60
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பலமுறை இதை நானும் உணர்ந்திருக்கின்றேன்.

சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது இதை முதலிலேயே எங்கோ பார்த்த அல்லது அது போல் நடந்ததாக உணர்வேன். அது கனவில் வந்தவையாகவே பல தடவை இருந்திருக்கின்றன. அநேகமான தடவைகளில் முடிவை முன்பே என்னால் சொல்லக்கூடிடிய அளவுக்கு அவை எனது ஞாபகத்தில் இருந்திருக்கின்றன.

அத்துடன் எனது மகளுக்கு ஒரு பெண் மாவீரரின் பெயர்.( இந்தப்பெயரை அவருக்கு வைத்திருக்கின்றேன் என்று முக்கிய இடத்தில் நான் சொன்னபோது அவர்கள் எனக்கு சொன்னது. மிகவும் ஆக்ரோசமானவர். கவனம் என்று.)

ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுடன் சர்வதேச சிக்கல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்காவை யார் யாருக்கு பிடிக்காது என்று பேச்சு வந்தது. பக்கத்திலிருந்த எனது மகள் சொன்னாள் தலைவருக்கும் அமெரிக்காவை பிடிக்காது என்று. எமக்கு அதிர்ச்சி. சில கணம் யோசித்துவிட்டு உனக்கு தலைவர் என்ன தந்தவர் என கேட்டேன் ஒரு செக்கனும் யோசிக்கவில்லை. துவக்கு தந்தவர் என்றாள். நம்புவீர்களோ தெரியாது அவளுக்கு அப்பொழுது 3 வயதுதான்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உங்களின் அனுபவப் பகிர்விற்கும் நன்றி விசுகு அண்ணா..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை வாசித்தவுடனே செருப்பெடுத்து என்னை அடிக்கோணும் போல இருந்திச்சுது :D:rolleyes: :rolleyes:

உங்கள் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

சில நேரங்களில், எமது எண்ணத்தில் தோன்றுபவை- நாம் நினைப்பவை கனவில் தொடரக் கூடும் என்று கேள்விபட்டிருக்கிறேன். இது எவ்வளவுக்கு உண்மை என்று என்னால் சொல்லமுடியவில்லை.

எனக்கும் சில கனவுகள் இப்படி நிஜமானதும் உண்டு..

* ஊரில் 8 வயதில் ஒரு இரவு வந்த கனவை எனது தாயாருடன் அடுத்த நாள் காலையில் பகிர்ந்து கொண்டது... மிக நீண்ட ரயிலில் நீண்ட நேரம், அப்பாவுடனும் பல முன்பின் தெரியாதவர்களோடு நான் பயணிப்பதாக... 18 வயதில் அது நிஜத்தில் நடந்தது, 2 நாட்களுக்கு மேல் அப்பாவுடன் ரயிலில் தொடர்ந்து பயணம்..

* ஊரில் ஒரு மரணச் சடங்கு நடக்கிறது, தெரிந்தவர்கள் எல்லாரும் நிக்கிறார்கள், ஆனால் மரணித்தவரின் முகம் கடைசி வரைக்கும் கனவில் தெரியாததால், குழம்பிப் போய் ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்... அம்மா, அப்பாவிடம் இதனைப் பகிர்ந்த போது, அவர்கள் அப்படி ஒன்றும் நடக்காது என்று சொல்லித் தைரியப் படுத்தினார்கள்..

அடுத்த நாள் பின்னேரப் பொழுதில் வெடித்த வெடிச்சத்தத்தில் வீட்டின் கண்ணாடி ஜன்னல் அதிர்வினால் வெடித்த போது அந்தக் கனவு மீண்டும் நினைவில் வருகிறது... அடுத்த நாள் காலையில் அப்பா வந்து சொன்ன செய்தி 'தம்பி கேடில்ஸ் போட்டான்! அவர் கையில் கட்டி இருந்த மணிக்கூட்டை வைத்துத் தான் அடையாளம் சொன்னார்களாம்' என்று (கேடில்ஸ் அண்ணா ஒரு பெரிய மணிக்கூடு கையில் கட்டி இருப்பார், wall clock ஐ ஏன் அண்ணா கையில கட்டி இருக்கிறீங்கள் என்று சொல்லி அவரோடு சேர்ந்து சிரிப்போம்.. :()

* அயல் நாட்டில் இருக்கும் போது, உறவுக்கார சகோதரி ஒருவர் கல்லறைகள் மத்தியில் நின்று அழுவதாக கனவு...

அவரின் தாயார் ஊரில் அன்று இறந்தது ஒரு சில நாட்கள் கழித்துத் தான் எமது குடும்பத்திற்குத் தெரிந்தது.

இறப்பு சம்பந்தமான கனவுகள் வந்தால், உள்ளூர ஒரு மனக் கலக்கமும், யோசனையும் உண்டாகும்... :mellow::blink::(

* சில நேரங்களில் எமக்குப் பிடித்தவர்களைக் கனவில் சில வினாடிகள் தன்னும் கனவில் கண்டால், அவர்கள் அன்று/ சில தினங்களில் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்களோடு கதைக்கும் சந்தர்ப்பமோ ஏற்படுகிறது... இது டெலிப்பதியா இருக்குமோ என்றும் யோசிப்பதுண்டு?? :lol::D:wub:

குட்டிக் கனவாக இருந்தாலும், அந்தக் கனவு மூலம் என்ன information எனக்கு சொல்லப்பட்டது என்று சில நேரம் யோசிப்பதுண்டு... பல நேரங்களில் யோசிக்கும் போது அலாரம் அடித்து கண்ட கனவையே மறந்து போனதுமுண்டு... :huh::lol::icon_mrgreen:

மற்றவர்களுக்கு எப்படியோ தெரிய இல்லை, ஆனால் எனக்கு நான் காணும் சில கனவுகளுக்கும் எனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது என்றே சொல்லுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் அரைகுறை நித்திரையில் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும்

பார்த்து விட்டு அதைக் கனவென்று நினைக்கவில்லைத் தானே

பகிர்விற்கு நன்றிகள் :D

நெடுக்ஸ் அண்ணா, விசுகு அண்ணா, குட்டி அண்ணா... உங்கள் பகிர்வுக்கு நன்றி. சிலருக்கு சில சம்பவம் நடக்க போகிறது என்பது முதலிலேயே கனவில் தெரிவதுண்டு... பல மக்கள் நம்பாவிட்டாலும் இது உண்மை....

எனது அம்மம்மா இப்படி பல சம்பவங்களை கனவில் கண்டு எம்மிடம் சொன்ன பிறகு அது உண்மையில் நடந்திருக்கிறது...

எனக்கு பெரிதாக கனவு வருவதில்லை. ஆனால் வந்த சிலதில் ஒன்றிரண்டு தரம் இப்படி நடந்திருக்கிறது...

இதனை வைத்து தான் அழகிய தமிழ் மகன் படமும் எடுத்திருந்தார்கள்... (சில தம் கற்பனைகளையும் உள்ளடக்கி).

எனது மகன் ஒருநாள் இரவு திடீரென நித்திரையில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயம் என திரும்ப திரும்ப கத்திக்கொண்டேயிருந்தான். நானும் திடுக்கிட்டு விழித்து அவனது அறையை திறந்து போய் அவனை உலுப்பி என்ன நடந்தது என கேட்டால். தான் தள்ளாடி இராணுவ முகாமை தகர்த்து விட்டதாகவும் தலைவர் மாமா தான் துவக்கு தந்ததாகவும் சொன்னான். அவனிற்கு பால் மாவை கரைத்து போத்தலில் ஊற்றி வாயில் செருகிவிட்டு திரும்பவும் வந்து கணவரை அணைத்தபடி படுத்துவிட்டேன். இத்தனைக்கும் நீங்க நம்பவே மாட்டிங்க அவனிற்கு ஒண்ணரை வயதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீரன் கருவிலேயே உருவாகின்றான்.

ஒரு வயதுக் குழந்தை கனவு காண்பதில்

ஒரு புதுமையும் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணம் முதலாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

தீர்க்க தரிசனமான சில சம்பவங்கள் முன் கூட்டியே தெரிய வருமென்கிறார்கள்.

நெடுக்ஸ் நீங்க திருகோண நட்சத்திரமா?

சில நிகழ்வுகள் நடக்கும் பொழுதும், இடங்களைப் பார்க்கும் பொழுதும் அவற்றை முன்பே கண்டது மாதிரி உணர்வதுண்டு. இதனை பலவருடங்களிற்கு ஒருமுறைதான் உணர்ந்திருக்கிறேன். மனக்குழப்பமாக இருக்குமென நினைத்து விட்டு விடுவேன்.

கனவுகளை மாத்திரம் கன்னிகளே ஆக்கிரமிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை வாசித்தவுடனே செருப்பெடுத்து என்னை அடிக்கோணும் போல இருந்திச்சுது :D:rolleyes: :rolleyes:

ஏன் அக்கா.. அப்படி கனவு கண்டீங்களோ..! :):lol:

------------------------------------------

நன்றி குட்டி உங்களின் அனுபவப் பகிர்வு சுவாரசியமானதாக உள்ளது. :)

------------------------------------------

முதல் நாள் அரைகுறை நித்திரையில் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும்

பார்த்து விட்டு அதைக் கனவென்று நினைக்கவில்லைத் தானே

பகிர்விற்கு நன்றிகள் :D

இல்லை வாத்தியார். நான் இதே விமானத்தை ஊரில் வைத்துக் கண்டேன். காணொளி வேறிடத்தில் பதிவாகியுள்ளது. ஆனால்.. அதே விமானம்.. அதே வகையில் பறப்பது எல்லாம் கனவில் வந்தது. இடம் மட்டும் வித்தியாசம்..! அதுவும் இல்லாமல் பிபிசி தம்நெயிலில் அதே காட்சி. இவை எல்லாம் coincident என்று வரையறுக்கப்பட முடியுமா..??! எனக்கென்றால் ஏதோ ஒன்று இவற்றை இணைக்கிறது என்பதாகவே உணர முடிகிறது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. காதல் பொண்ணு.. (காதல் என்று விளிக்க மனதுக்கு சிரமமாக உள்ளது.) மற்றும் சுமங்களா அக்கா உங்கள் கருத்திற்கு..! :)

திருகோணம் முதலாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

தீர்க்க தரிசனமான சில சம்பவங்கள் முன் கூட்டியே தெரிய வருமென்கிறார்கள்.

நெடுக்ஸ் நீங்க திருகோண நட்சத்திரமா?

அண்ணா எனக்கு உந்த சாத்திர சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை இல்லை. coincident ராக இருக்கலாம்.. ஆனால்.. இவ்வளவு அச்சொட்டாக அது இருப்பது தான் ஆச்சரியம் அளிக்கிறது..! :)

சில நிகழ்வுகள் நடக்கும் பொழுதும், இடங்களைப் பார்க்கும் பொழுதும் அவற்றை முன்பே கண்டது மாதிரி உணர்வதுண்டு. இதனை பலவருடங்களிற்கு ஒருமுறைதான் உணர்ந்திருக்கிறேன். மனக்குழப்பமாக இருக்குமென நினைத்து விட்டு விடுவேன்.

கனவுகளை மாத்திரம் கன்னிகளே ஆக்கிரமிக்கிறார்கள்.

கனவில் வரும் கன்னிகளை நேரில் காணக் கிடைப்பதில்லையே..! ஆனால் இங்கு காணக்கிடைத்தது தான் ஆச்சரியமாக இருந்தது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

எனது மகன் ஒருநாள் இரவு திடீரென நித்திரையில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயம் என திரும்ப திரும்ப கத்திக்கொண்டேயிருந்தான். நானும் திடுக்கிட்டு விழித்து அவனது அறையை திறந்து போய் அவனை உலுப்பி என்ன நடந்தது என கேட்டால். தான் தள்ளாடி இராணுவ முகாமை தகர்த்து விட்டதாகவும் தலைவர் மாமா தான் துவக்கு தந்ததாகவும் சொன்னான். அவனிற்கு பால் மாவை கரைத்து போத்தலில் ஊற்றி வாயில் செருகிவிட்டு திரும்பவும் வந்து கணவரை அணைத்தபடி படுத்துவிட்டேன். இத்தனைக்கும் நீங்க நம்பவே மாட்டிங்க அவனிற்கு ஒண்ணரை வயதுதான்

இந்த நல ஒரு கருத்துக்காக உங்களை நிழலி தடை செய்தால்? பாரிய போராட்டம் வெடிக்கும். :lol::D

இந்த நல ஒரு கருத்துக்காக உங்களை நிழலி தடை செய்தால்? பாரிய போராட்டம் வெடிக்கும். :lol::D

பலமுறை இதை நானும் உணர்ந்திருக்கின்றேன்.

சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது இதை முதலிலேயே எங்கோ பார்த்த அல்லது அது போல் நடந்ததாக உணர்வேன். அது கனவில் வந்தவையாகவே பல தடவை இருந்திருக்கின்றன. அநேகமான தடவைகளில் முடிவை முன்பே என்னால் சொல்லக்கூடிடிய அளவுக்கு அவை எனது ஞாபகத்தில் இருந்திருக்கின்றன.

அத்துடன் எனது மகளுக்கு ஒரு பெண் மாவீரரின் பெயர்.( இந்தப்பெயரை அவருக்கு வைத்திருக்கின்றேன் என்று முக்கிய இடத்தில் நான் சொன்னபோது அவர்கள் எனக்கு சொன்னது. மிகவும் ஆக்ரோசமானவர். கவனம் என்று.)

ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுடன் சர்வதேச சிக்கல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்காவை யார் யாருக்கு பிடிக்காது என்று பேச்சு வந்தது. பக்கத்திலிருந்த எனது மகள் சொன்னாள் தலைவருக்கும் அமெரிக்காவை பிடிக்காது என்று. எமக்கு அதிர்ச்சி. சில கணம் யோசித்துவிட்டு உனக்கு தலைவர் என்ன தந்தவர் என கேட்டேன் ஒரு செக்கனும் யோசிக்கவில்லை. துவக்கு தந்தவர் என்றாள். நம்புவீர்களோ தெரியாது அவளுக்கு அப்பொழுது 3 வயதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  நல ஒரு கருத்துக்காக உங்களை நிழலி தடை செய்தால்? பாரிய போராட்டம் வெடிக்கும். :lol::D

நிர்வாகம் தடை செய்தால் என்று வர வேண்டும் என் நினைக்கின்றேன்

ஆனா என்னக்கு முன்பு எல்லாம் வேற மாதிரி கனவுகள் வரும் அதாவது மாசக் கனக்கில் கை கழுவவிலை என்றால் இரவில் யாரோடு ஏதோ செய்வது போல் இருக்கும்...........................

நன்றி.. காதல் பொண்ணு.. (காதல் என்று விளிக்க மனதுக்கு சிரமமாக உள்ளது.)

சரி அப்பா..... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்பா..... :lol::D

அப்பா என்று அநேக தமிழ் பெண்கள் கணவரைத் தான் சொல்வார்கள். ஏன் எதுக்கு அப்படிச் சொல்கிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதனால் அப்பா என்பதும் உங்கள் பெயரைப் போல.. உச்சரிக்க.. சரியா இல்ல..! :):lol::D

அந்த அநேக தமிழ் பெண்களுக்குள் நான் அடங்கமாட்டேன்.... :D எனவே நான் அப்பா என்று சொல்லலாம்...

இந்தியாவில் பெருமளவு பெண்கள் கணவரை மாமா என்று கூப்பிடுவார்கள்.. அதற்காக அம்மாவின் தம்பியை மாமா என்று கூப்பிடாமலா இருக்கிறார்கள்/இருக்கிறோம்? :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த அநேக தமிழ் பெண்களுக்குள் நான் அடங்கமாட்டேன்.... :D எனவே நான் அப்பா என்று சொல்லலாம்...

இந்தியாவில் பெருமளவு பெண்கள் கணவரை மாமா என்று கூப்பிடுவார்கள்.. அதற்காக அம்மாவின் தம்பியை மாமா என்று கூப்பிடாமலா இருக்கிறார்கள்/இருக்கிறோம்? :lol::D

நீங்களும் தமிழ் பேசுவதால்.. அந்த அநேக தமிழ் பெண்ணாக அடையாளம் காணப்படும் ஆபத்து உள்ளதால்.. அப்பா என்று உச்சரிப்பது சரியாக அமையாது.. தானே..! :lol:

இந்தியாவில் கணவனை பெண்கள் அத்தான் என்றும் அழைப்பார்கள்.. அதற்காக அக்கா கணவனை.. அத்தான் என்று அழைக்கும் தங்கைக்கும் அவர் கணவனாக முடியுமா என்ன..???! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிவுக்கு எட்டாத பல இருக்கு, பல நாட்களுக்கு முன் இந்த விண் கலத்திற்கு ஓய்வு கொடுக்கப் போவதாக செய்திகள் வந்தது, அது உங்கள் அடி மனதில் பதிந்து இப்ப வந்திருக்க சந்தர்ப்பம் இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

எனக்கு இப்படியான எதிலுமே நம்பிக்கை இல்லை ,அதனால் தானோ என்னவோ ஒன்றும் நடக்குதில்லை.மனைவியும் அவர்கள் வீட்டாரும் எதிர்மாறு ,அவர்கள் அம்மா இலங்கை போய் இறந்த அன்று இங்கிருக்கும் மற்ற சிஸ்டர் கனவுகண்டாவாம் அதை சிலருக்கு சொல்லி வேறு இருக்கின்றார் ,அம்மாவிற்கு எதுவும் நடந்துவிடுமோ என நினைத்துக்கொண்டு படுத்திருக்கலாம்.

அப்படி ஒன்று நடந்திருக்காவிடில் அந்த கனவும் மறைக்கப்பட்டிருக்கும் அப்படிதான் பலர் கனவுகள் .

நீங்களும் தமிழ் பேசுவதால்.. அந்த அநேக தமிழ் பெண்ணாக அடையாளம் காணப்படும் ஆபத்து உள்ளதால்.. அப்பா என்று உச்சரிப்பது சரியாக அமையாது.. தானே..! :lol:

சரி தந்தையே.. :lol::D:icon_idea:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சில நிகழ்வுகள் நடக்கும் பொழுதும், இடங்களைப் பார்க்கும் பொழுதும் அவற்றை முன்பே கண்டது மாதிரி உணர்வதுண்டு. இதனை பலவருடங்களிற்கு ஒருமுறைதான் உணர்ந்திருக்கிறேன். மனக்குழப்பமாக இருக்குமென நினைத்து விட்டு விடுவேன்.

கனவுகளை மாத்திரம் கன்னிகளே ஆக்கிரமிக்கிறார்கள்.

எனக்கும் உதே விஷயம் நடந்திருக்கு. உயர் தரத்தில் ஒருமுறை சோதினை செய்யும் போது பல கேள்விகளை எங்கோ பாத்த மாதிரி இருந்தது, பின்னர் நண்பர்களுடன் இது பற்றி கதைக்கும் போது அவர்களில் இரண்டு பேருக்கும் உதே மாதிரியான உணர்வு வந்திருக்காம்.ஏதாவது பழைய சோதனைப் பேப்பர்களில் கண்டிருப்போம் எண்டு யோசித்துப் பார்த்தால் அந்தக் கேள்விகள் முன்பு ஒரு போதும் வராதவை. வீதியில் வாகனம் ஓட்டும் போதும் இந்த இடத்திற்கு முன்பு வந்திருக்கிரனே எண்டு யோசிப்பேன் ஆனால் புத்தம் புதிய இடம். பிரச்சனை என்ன எண்டால் அப்பிடியான சந்தர்ப்பம் நிஜத்தில் வரும் போதே பழைய கனவு ஞாபகம் வரும். இல்லாவிட்டால் எதுவுமே ஞாபகம் வருவதில்லை. முன்பு ஏதாவது கனவு கண்டு நித்திரையால எழும்பிய பின்னர் அந்த ஞாபகம் இருந்தால் அதை எழுதி வைக்க வேண்டும் என யோசிப்பேன். ஆனால் ஒரு போதும் செய்தது இல்லை. அவ்வாறு திகதி நேரத்துடன் எழுதி வைத்து பிறகு அது சரி வந்தால் அவற்றுக்கு இடையில இருக்கும் தொடர்புகள் பற்றி சிந்திக்கலாம் என யோசித்ததுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.