Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது! (படங்கள்)

Featured Replies

தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.

பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது.

தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதேவேளை பள்ளிவாசல் உடைப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் அப்பகுதி மக்களால் முறையிடப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பு கண்டனம்:

dambulla-3.jpgசிறுபான்மை இன மக்கள் எவரும் இலங்கையில் வாழவே முடியாது இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்தச் சம்பவம் அமைந்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித நாகரிகம் உள்ள ஒரு இனம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை ஒரு போதும் மேற்கொள்ளாது. இந்தச் சம்பவங்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் துணை நின்றிருப்பது சிறுபான்மை இன மக்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உட்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களிலும் சிறுபான்மை இன மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களும் இணைந்து பேரினவாத அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவதை இனிமேலும் தடுக்க முடியாது. பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது என்றும் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்:

தம்புள்ளையில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலொன்று தகர்க்கப்பட்டுள்ளதாக கூறிய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவுடனான ஆயுத குழுவொன்றினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தினார்.

முஸ்லிம் விவகார திணைக்களத்தில் மேற்படி பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் எனவே அது சட்டவிரோதமானது என எவரும் கூற முடியாது எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் தெரிவித்தார்.

இப்பள்ளிவாசல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கபீர் ஹாசிம் எம்.பி. கூறினார்.

இந்நாட்டு மக்கள் தமது சமய கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறினால், அவர்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மாற்று வழியை நாட நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.

311.jpg211.jpg111.jpg

http://thaaitamil.com/?p=16394

நாட்டுல நல்லதெல்லாம் நடக்குது.ம்ம்

சிங்களத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின்[ஐ.நா ] தீர்மானத்திற்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்தவர்கள் .இவ்வளவு விரைவில்

சிங்களத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போகும் நிலைமை என்று எதிபார்த்திருக்கமாட்டார்கள் பாவம்.......................

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நாடாக ஏறி இறங்கிய ஹக்கீமுக்கு சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் இனியும்... விலாங்கு மீன் மாதிரி,

மீன் முகத்துடனும், பாம்பு வாலுடனும் இருக்கப் படாது என்பதற்கு நல்ல செய்தி.

ஸ்ரீலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று, ஜூம்மா தொழுகை செய்ய முடியாமல்... இருப்பதற்கு வருந்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நாடாக ஏறி இறங்கிய ஹக்கீமுக்கு சமர்ப்பணம்.

நாட்டுல நல்லதெல்லாம் நடக்குது.ம்ம்

:icon_idea: :icon_idea: :icon_idea:

உலகின் முஸ்லிம் நாடுகள் அரபு நாடுகள் குறிப்பா மலேசியா, இந்தோனேசியா ,பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் இந்த விடயத்தை கையில் எடுத்து இலங்கைய கண்டிப்பதோடு இலங்கைக்கு வழங்கும் சகல உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று இலங்கை முஸ்லிம்கள் சார்பில் கேட்டு கொள்ளுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் சகோதரர்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிராக மாற்று வழிகளில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதே வேளை சிங்கள சகோதரர்களும் தமது பௌத்த பிரதேசங்களைக் காப்பாற்ற தீவிர நடவடினக்கையில் இறங்கவேண்டும். இருதரப்பாரும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது உடனடி பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடாவிடில் இலங்கையில் எதிர்காலத்தில் இரு சமயங்களுக்கும் நல்லதல்ல.

அடுத்த ஜெனீவா மனித உரிமைப்பில் எமக்குப்பலம் சேர்க்க இஸ்லாமிய நாடுகளுக்கு இவை சம்பந்தமாக தகவல்களை அனுப்பவேண்டும்.

இது இரண்டுகரையும் சேர்ந்து விடுகிற நடிப்பு.

இதற்காக மகிந்தாவின் ஒரு மந்திரி இரண்டொருநாளில் வந்து கெட்ட அரசியல்வாதிகள் பள்ளிவாசல் உடைப்பை தங்கள் பிரசாரத்திற்கு பாவிக்கிறார்கள் என்பார். மற்றவர் இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்போவதாக வாக்குறுதி கொடுப்பார். முன்றாமவர் கடைசியில் வந்து தான் முஸ்லீம் மக்களுக்குக்காக எப்படி கஸ்டப்பட்டு மகிந்தாவிடம் பள்ளி உடைப்பு நடந்ததை தெரிவித்ததாயும் மகிந்தா அதை கேள்விப் பட்டவுடனே கமிசன் வைத்து விசாரிக்க கட்டளையிட்ட பெருந்தன்மையையும் பற்றிக்கூறுவார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் சகோதரர்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிராக மாற்று வழிகளில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதே வேளை சிங்கள சகோதரர்களும் தமது பௌத்த பிரதேசங்களைக் காப்பாற்ற தீவிர நடவடினக்கையில் இறங்கவேண்டும். இருதரப்பாரும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது உடனடி பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடாவிடில் இலங்கையில் எதிர்காலத்தில் இரு சமயங்களுக்கும் நல்லதல்ல.

அப்ப... தமிழ்ச்சகோதரர்கள் பனங்கொட்டையை... சூப்பிக் கொண்டிருக்க வேண்டுமா? :o

தமிழின அழிப்புக்கு தொடர்ந்து துணை போன இசுலாமிய ஈனர்களுக்கு நடப்பதைப் பார்த்து கவலைப்பட முடியவில்லை.

தொப்பி பிரட்டாத இசுலாமிய சந்தர்பவாத அரசியல்வாதிகள் இதை இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு மனதாபிமான நடவடிக்கை என்றுதான் அடுத்த ஜெனீவா கூடத்தில் சொல்லவேண்டும். இல்லை என்றால் தொப்பி பிரட்டி என்றுதானே அழைக்க வேண்டும்?

இதில் ஹிந்தி வெறி கொண்ட பி. ஜே. பி. யின் சுஷ்மா சுவராஜ் கவிழ்ந்திருப்பா.

பொயட் அண்ணய காணயில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்புக்கு தொடர்ந்து துணை போன இசுலாமிய ஈனர்களுக்கு நடப்பதைப் பார்த்து கவலைப்பட முடியவில்லை.

தொப்பி பிரட்டாத இசுலாமிய சந்தர்பவாத அரசியல்வாதிகள் இதை இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு மனதாபிமான நடவடிக்கை என்றுதான் அடுத்த ஜெனீவா கூடத்தில் சொல்லவேண்டும். இல்லை என்றால் தொப்பி பிரட்டி என்றுதானே அழைக்க வேண்டும்?

நாங்கள் களவிதியை மீறவில்லை மட்டூஸ்.

ஆராவமுதன், சிரிச்சு வயுறு நோகுது. நன்றியப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் களவிதியை மீறவில்லை மட்டூஸ்.

ஆராவமுதன், சிரிச்சு வயுறு நோகுது. நன்றியப்பா....

:D:lol:

முஸ்லீம் சகோதரர்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிராக மாற்று வழிகளில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதே வேளை சிங்கள சகோதரர்களும் தமது பௌத்த பிரதேசங்களைக் காப்பாற்ற தீவிர நடவடினக்கையில் இறங்கவேண்டும். இருதரப்பாரும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது உடனடி பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடாவிடில் இலங்கையில் எதிர்காலத்தில் இரு சமயங்களுக்கும் நல்லதல்ல.

Allah kari ballah என்று கூக்குரல் இட்டவாறு தான் உடைத்தார்களாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

Allah kari ballah என்று கூக்குரல் இட்டவாறு தான் உடைத்தார்களாம். :D

கரி நாய் என்று சொல்லி அடித்த சிங்களவர், அவ்வளவு சோனகரையும் அடுத்த முறை அடிக்கும் போது... பாகிஸ்தான் வரை திரத்தி அடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் செயபாலன் அவர்களை எவ்வளவிற்குப் பத்தித்து இருக்குமென்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனாலும் என்ன, அவரது உற்ற நண்பர் ரவூப் ஹக்கீம் தனது பேச்சாற்றலால் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று முஸ்லீம் நாடுகளுக்குப் காக்கா போல பறந்து பறந்து சொல்லுவார் என்கிற நம்பிக்கை செயபாலனுக்கு இருக்கும். என்னவிருந்தாலும் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் அல்லவா. ஜெனீவாவில் தமிழன் அழிவை நியாயப்படுத்தியதுபோல தம்புள்ள சம்பவத்தைடும் தனது பேச்சாற்றலால் முஸ்லீம் நாடுகளில் கற்பூரத்தை அணைத்து நடக்கவேயில்லை என்று சத்தியம் செய்து வாதிடுவார் என்று நம்புவோமாக.

சிங்களத்துடன் இணக்க அரசியலை தவிர வேறு வழியில்லை எனக்கூறுவது சுலபம். ஆனால் அது மரணத்தை ஆகையில் வைத்தபடியே வாழும் வாழ்கை என இந்த நிகழ்வும் அண்மைய தமிழர்கள் வீடு எரிப்பும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

சிறுபான்மையின மக்கள் சேர்ந்தே போராடவேண்டும். இல்லாவிடில் சிங்களம் அழித்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... தமிழ்ச்சகோதரர்கள் பனங்கொட்டையை... சூப்பிக் கொண்டிருக்க வேண்டுமா? :o

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... தமிழ்ச்சகோதரர்கள் பனங்கொட்டையை... சூப்பிக் கொண்டிருக்க வேண்டுமா? :o

நல்ல பனம்பழமாய் எடுத்து அடுப்பில சுட்டு சூப்பிக்கொண்டு விடயங்களை அவதானிக்க வேண்டியதே இப்போதைக்கு சரியான வழி. அதை விடுத்து முஸ்லீம் சகோதரர்கiளின் மனத்தைப் புண்படுத்தி அவர்களை நமக்கெதிராகத் திருப்பவோ அல்லது சிங்கள சகோதரர்களின் ஆவேசத்தைத் தணித்து பிரச்சனையை அடித்து நூர்க்கவோ முற்படுவது இலங்கைக்கு நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... தமிழ்ச்சகோதரர்கள் பனங்கொட்டையை... சூப்பிக் கொண்டிருக்க வேண்டுமா? :o -

அதைதானே அவர்களும் மேலே எழுதியுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.