Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தைரியமானவர்களாக வளருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள அநேகரின் கருத்தை வாசிக்கிறப்போ.. தெரிஞ்சு கொள்ளுற விசயம்.. பெற்றோர் பெண் பிள்ளைகளை இட்டு ஏதோ பயப்பிடுகிறார்கள் என்று..!

அந்த ஏதோ என்ன...????!

அந்த ஏதோவிற்கு ஏன் பயப்பிடனும்..??!

இதில இரண்டு விடயம் தான் அந்த ஏதோவுக்குள் இருக்க முடியும்..

1. பெண்ணின் பாலியல் நடத்தை.

2. அவளின் அசாதாரண நடத்தைகள்..! (குடி.. சிகரெட்.. போதை.. கண்ட பயலோடும் ஊர் சுத்துதல்.. கடத்தல்.. கொலை... இப்படி... என்று வைச்சுக்குவமே..!)

இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக பாலியல் தவறு செய்கிறார்கள். வலிந்து ஆண்களை பாலியல் தவறு செய்யத் தூண்டவும் செய்கிறார்கள். அதில் பெண்கள் எதையோ பெறுகிறார்கள்.

அதேபோல்.. பெண்கள்.. சிகரெட் குடிக்கிறாங்க.. போதைப்பொருள் பயன்படுத்திறாங்க.. கடத்தல் செய்யுறாங்க... ஏன் கொலை கூடச் செய்யுறாங்க. இந்த விடயத்தில் அவர்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல..!

சரி யார்.. எப்படியான பெண்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள்....

தன்னிலை அறியாத.. தனது எதிர்காலம் பற்றிய ஆபத்து.. நோக்கம் அறியாதவர்கள் தான் இதனை செய்கிறார்கள்..!

இந்த நிலைக்குள் ஒரு பெண் வந்தால் மட்டும் எங்கட சமூகம் ஒதுக்கி வைப்பதில்லை. ஒரு ஆண் வந்தாலும்.. நிச்சயம் அவனும் கெட்டவன்... காவாலி.. காடை.. தறுதலை.. ரவுடி.. கொலைகாரன்.. பொம்பிளப் பொறுக்கி.. பொறுக்கி.. நாய்.. தெரு நாய்.. சனியன்.. மூதேவி.. ரேப்பிஸ்ட்.. குடிகாரன்.. படிப்பறிவில்லாதது.. வேலைவெட்டி இல்லாத முண்டம்... சோத்துமாடு.. தண்டச் சோறு.. என்று எத்தனையோ பட்டங்களை.. எத்தனையோ மன அழுத்தங்களை சுமக்கிறான் தான்..! ஒதுக்கி வைக்கப்படுறான் தான்..!

ஏதோ இங்குள்ள பெண்கள் நினைக்கிறாப் போல... இது என்னவோ பெண்களுக்கான பிரச்சனை என்பதாக இல்லை. எங்கட சமூகம்.. ஆண்களை ஒன்றும்.. உட்சாரக் கொப்பில தூக்கி.. சீராட்டிக் கொண்டிருக்கல்ல. அவனை ஒரு உழைக்கும்.. பணம் கொண்டு வரும்.. இயந்திரமாகவே தான் மாற்றுகிறார்கள். அதை நோக்கித்தான் படிக்கவும் வைக்கிறார்கள்.

எத்தனை படித்த ஆண்களிடம் சமூக அக்கறை உள்ளது. வெகு சிலரிடம் மட்டுமே உள்ளது. பலரிடம் அது அறவே இல்லை. ஆனால் சுயநலம் எல்லோரிடமும் இருக்கிறது..! இது எதனால்.. எமது சமூகத்தின் கட்டமைப்பு அப்படி என்பதால்..!

ஆக.. பிரச்சனை என்பது பெண்களுக்கான ஒன்றல்ல..! ஆண்களுக்கும் பெண்களைப் போலவே பல பிரச்சனைகள் உள்ளன. ஆண்கள் அவற்றை எல்லாம் சவாலோடு தான் தாண்டி போராடி வாழ்கின்றனர். பெண்களால் அதனை தாண்ட முடியவில்லை என்றவுடன்.. அடக்கிறான்.. ஒடுக்கிறான்.. என்று பாவம்.. ஆண்கள் மீது பாய்கிறார்கள்.

பெண் பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்துபவர்களாக தந்தையரை விட தாய்மாரே உள்ளனர். அந்தத் தாய் யார்..????! பெண்..! அந்தப் பெண்ணுக்கு தன் பிள்ளைகளின் மீது முழு நம்பிக்கை இன்மையே.. அவள் அவர்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்க காரணமாகிறது.

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் நெருங்கி செயற்பட வேண்டிய உலக இயக்கத்தில்.. பெண்ணை தூர விலக்கி வைச்சு.. அல்லது ஆணை தனியப் பிரிச்சு வைச்சு.. ஒன்றும் வெட்டி விழுத்த ஏலாது.

ஆண்களும் பெண்களும் சகஜமாக பழக விடப்பட வேண்டும். பாலியல்.. நன்னடத்தைகள் சார்ந்த பாதுகாப்புக்களை... ஒழுக்கங்களை போதிப்பது கட்டாயம். அதன் கீழ் அவர்கள் செயற்படும் நிலை வரும் வரை.. பெற்றோர் கண்காணிப்பென்பது இருபாலாருக்கும் அவசியம்..! இதன் கீழ் தான்.. பெண்களை தவறாக நடத்த முயலும் ஆண்களையும் ஆண்களை தவறாக நினைக்கும்.. நடத்த முயலும் பெண்களையும் சீர்வழிப்படுத்த முடியும். பாலியல் மற்றும் சமூகச் சீரழிவுகளை இனங்காட்டி.. ஆணும் பெண்ணும் சகஜமாக பழகும் சூழல் ஏற்படுவதை தடுப்பது ஆபத்தான பின் விளைவுகளையே உண்டு பண்ணும். அதிலும்.. பாலியல்.. மற்றும் சமூகச் சீரழிவுகள் பற்றிய தெளிவான வழிகாட்டுதலோடு.. பிள்ளைகளை வளர்த்தல் நல்லது..!

மற்றும்படி.. ஆண்களைப் பற்றிய பயங்காட்டுதலோடு.. பெண்களை வீட்டுக்க இருத்தி வைப்பதன் மூலமாக.. பெண்களின் இயற்கையான ஆசைகளை.. அந்தரங்க விருப்புக்களை அறவே ஒழித்துக்கட்டிவிட முடியாது. அதேபோல் தான் ஆணிற்கும்.

ஆணோ பெண்ணோ.. அவன் அல்லது அவளாக.. இதுதான் சிறந்த முறையான வாழ்க்கை.. இந்த வாழ்க்கைச் சூழலில் இதுவே எனக்குப் பாதுகாப்பான வாழ்க்கை.. எனது இருப்பை உறுதிப்படுத்தும் வாழ்க்கை என்பதை உணரச் செய்யும் போது.. நிச்சயம்.. அவர்கள் மேற்சொன்ன.. முக்கியமான தவறுகள் அடங்கும் அந்த இரண்டு வகைகளில் இருந்தும் தெளிவாக விலகி இருப்பர்.

இந்த உணர்தலைச் செய்ய வேண்டியது யார்..??! பெற்றோர் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சமூகமும் ஆகும்.

ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைச்சு வைப்பதாலோ.. இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு.. சகஜமாகப் பழகி.. தவறுகள்.. செய்யக் கூடாததுகளை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின்.. நிச்சயம் அதுவே.. மனித வாழ்கை சிறக்க உதவும்..!

அதைவிடுத்து.. புரட்சி.. மண்ணாங்கட்டி என்று கொண்டு ஆண் அடக்கிறான்.. ஆணாதிக்கம்.. என்று அலட்டிக் கொண்டு திரிவதாலோ.. ஊருக்குப் பயந்து பெண்களை பெண்களே வீட்டுக்குள் பூட்டி வைச்சுப் போட்டு.. பெண் விடுதலை வேண்டும் என்று கூப்பாடு போடும்.. பிற்போக்குத்தனங்களாலோ.. எந்தப் பயனும் இல்லை. இந்த இரு தரப்பும்.. மனிதச் சமூகவியல் அறிவற்ற முட்டாள்கள் என்பதைத் தவிர வேறு சொல்வதற்கில்லை..! இதுதான் நிஜம்.

தமிழ் சமூகத்தில்.. மனித சமூகப் புரிதல் மிகக் குறைவான மட்டத்தில் இருக்கக் காரணம்.. தொழிலை வருவாயை.. அடிப்படையாகக் கொண்ட சுயநல வாழ்வியல் தரும் அந்தஸ்தை.. அவர்கள் உயர்த்திப் பிடிப்பதும்.. பெண்களின் மூலம் சமூக ஒழுங்கை நிலை நிறுத்த முயல்வதுமே ஆகும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 68
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சந்தோசமாக இருக்கு.

பலர் கருத்து எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. சிலர் எழுதாது விருப்பு வாக்கு போட்டுவிட்டு பின் வாங்கிருக்கினம்.

தன் இனத்துக்காக போராட எழுத தாங்கள்தான் தயாராகணும்.

என்ன செய்வது ரதி சொன்னது போல் நான் ஒரு சாதாரண சகலரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒருவன்.

ஆயிரம் தடவை யோசித்துத்தான் ஒவ்வொன்றையும் செய்யணும்.

கால் வைக்கணும்.

இல்லையென்றால்

அம்மாவுக்கு பதில் சொல்லணும்

அண்ணனுக்கு பதில் சொல்லணும்

தப்பான முடிவென்றால் பிள்ளைகளுக்கும் பதில் சொல்லணும்.

நன்றி கு.சாமியண்ணை

எனது பல கருத்துக்களை நீங்களே பதிந்துள்ளீர்கள்.

மற்றும் நெடுக்... வழமைமபேபால் காரமான எழுத்து சமூகத்தை நோக்கி. என்னைக்குறிவைக்காதற்கு நன்றி. என்னை அப்பாவி என்று கணித்திருப்பார். அது தான் உண்மையும் கூட.

Edited by விசுகு

ஆண் நிலை சார்ந்த எம் குடும்ப அமைப்பில் என்றும் பெண் ஆணுக்கு அடங்கி வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுடன் வளர்க்கப்படும் போதே பெண் குழந்தை கோழையாக வளர்க்கப்படுகின்றாள். தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாங்கள் இந்தக் கோட்பாட்டையே பொதுவாக கடைப்பிடிக்கின்றோம். விளையாட்டு சாமான்கள் பிள்ளைகளுக்கு வாங்கும் போது பெண் பிள்ளைக்கு விளையாட்டு பொம்மையும் (அல்லது டெடி பியர்) ஆண் பிள்ளைக்கு விளையாட்டுக் காரும் வாங்கிக் கொடுப்பது போன்ற செயல்களை செய்யும் போதே நாம் பெண் பிள்ளைகளை பாலியல் மற்றும் பிள்ளை பெறுதல் போன்ற செயல்களுக்கான கருவிகளாக பார்க்கத் தொடங்குகின்றோம். இதன் நீட்சிதான் பெண் தனக்குள் தனகான முக்கிய சமூகப் பொறுப்பு என்பது பிள்ளை பெறுவதும் அதனை வளர்ப்பது மட்டுமே என்று நினைப்பதும் அதில் ஆணுக்கு ஒரு பொறுப்பு இல்லை என கருதுவதுமாகும். சிறு வயதில் இருந்தே வளர்க்கப்படும் இந்த சிந்தனை முறைக்கு ஏற்றவாறே பெரும்பாலான பெண்கள் தாம் வளர்ந்த பின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அணுகுகின்றனர். குடும்பத்தில் ஆணின் வன்முறைக்கு பெண் தகுந்த முறையில் எதிர்வினை ஆற்ற முடியாமல் இருப்பதும் இதனால் தான்.

என் மகளின் முதலாம் பிறந்த தினத்திற்கு நண்பர்களையும் உறவினர்களையும் அழைக்கும் போது போட்ட ஒரே ஒரு நிபந்தனை எவரும் பொம்மைகளை பரிசாகக் கொண்டு வரக்கூடாது என்பதே ஆகும். ஆனால் ஏன் அவ்வாறு கூறுகின்றேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் பலர் பொம்மைகளை வாங்கிக் கொண்டு வர அவற்றை எறிய வேண்டி வந்தது. அதே போல் ஆடை அணிகலன் தவிர வேறு எந்த விடயத்திலும் பாலின வேறுபாட்டை உணர்த்தும் எந்த விடயங்களையும் எம் பிள்ளைகளின் வளர்ப்பில் காட்டப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்.

பெற்றோர் துணிவான பெற்றோர் எனில் வளர்க்கப்படும் பெண் குழந்தையும் துணிவாகத்தான் வளரும். அத்துடன் மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றோரின் அதிகாரம் பெண் குழந்தைகளை (ஆண் குழந்தைகளையும் தான்) எட்டாமல் பெற்றோர் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள் துணிவுடன் வளர்வதைக் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் குழந்தைகள் மீது தமிழ்ப் பெற்றோர் அதிகம் கவனமாகத்தான் இருக்கின்றார்கள்.. மிகவும் கெட்டித்தனத்துடனும், எது சரி எது பிழை என்று புரிதல்களுடன் பெற்றோர்கள் மீது அதிக பாசத்துடன் இருக்கும் பெண்பிள்ளைகளை அவர்தம் பெற்றோர் கண்ணுக்குள் எண்ணையை விட்டுக் கண்காணிப்பதையும் பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் தம் பிள்ளைகள் தானாகப் பிழையாகப் போகாவிட்டாலும் சினேகதங்களின் தூண்டுதலால் ஏதாவது தப்பாகச் செய்துவிடுவார்களே என்ற பயத்தின் அடிப்படையில்தான் உருவாகின்றது.. ஆண்பிள்ளைகளையும் சினேகிதர்கள் கெடுத்துவிடுவார்கள் என்று பயந்தாலும் பெண்பிள்ளைகளை அதிகம் கட்டுக்கோப்பாக வளர்க்க முயல்வது ஆண்சிந்தனையைக் கொண்ட தமிழர்களிடம் இயல்பாக உள்ள விடயம்.

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடன் உரையாடவேண்டும். வளர்ந்த பெண்பிள்ளைகள் என்றால் தகப்பன்மார் பொதுவாக எல்லா விடயங்களையும் பேசுவதில்லை. பெண்களுக்கேயுரிய விடயங்கள் என்று சிலவற்றை தாய்மாரிடமே விட்டுவிடுவார்கள்.. இந்தக் குறைபாடுகளைக் களைந்தால் நமது தமிழ்ப் பெண்கள் மென்மேலும் சாதனைகளைப் புரிவார்கள்..

நிழலி சிறு வயதிலிருந்தே ஆண்/பெண் குழந்தைகளுக்கு சமவுரிமை கொடுத்து தான் வளர்க்க வேண்டும் ஆனால் பெண் குழந்தைக்கு பொம்மை விளையாடக் கொடுக்கா விட்டால் அப் பெண் குழந்தைக்கு ஆண்களது முரட்டுக் குணம் வராதா?...ஆண் முரடு என்றும் பெண் மென்மை என்றும் சொல்வார்கள் அதுவும் மூட நம்பிக்கை தான் ஆனால் பெண்கள் வெட்கப் பட வேண்டிய நேரத்தில் வெட்கப் படத் தானே வேண்டும்? அது தேவையில்லை என்கிறீர்களா?

ஏன் உங்களால் பொண்ணுக்கு பொம்மை விளையாடக் கொடுத்து பையனுக்கும்/பொண்ணுக்கும் சம உரிமை நிலை நாட்ட முடியாமல் போனது?...பொம்மையை ஒரு விளையாட்டு சாமானாய் கருதி அதை ஏன் உங்கள் இரு குழந்தைகளுக்கும் பொதுவாக விளையாட‌க் கொடுக்கலாமே?...முக்கியமாக ஏன் உங்கள் பையனுக்கு பொம்மையை விளையாட‌க் கொடுக்கவில்லை பெண்மை வந்து விடும் என்பதாலா?

உரிமை என்பது ஒரு ஆண் பிள்ளையை எவ்வளவு சுதந்திர‌த்திர‌மாக வளர்க்குறோமோ அதே சுதந்திர‌த்துட‌ன் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பது என் கருத்து.

அதற்காகத்தான்

இதற்காகவாவது வந்து கருத்து எழுதிய தமிழ் இனிக்கு எனது விருப்பு வாக்கை இட்டேன். :icon_idea: :icon_idea: :icon_idea:

நல்லது. :)

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, அவர்கள் வெளிப்படுத்தினால்தானே மற்றவர்களுக்கும் பிரச்சனை விளங்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பெண்பிள்ளைகளுக்கு பொம்மையும் அதை வைத்து தள்ள ஒரு விளையாட்டு பிள்ளையை வைத்து தள்ளும் வன்டிலும் வாங்கி கொடுப்பார்கள்.(வெள்ளைகளும்தான்)ஆண் பிள்ளைக்கு றிமோட்ட கார்.நடைமுறைப்படிப்பாத்தால் தள்ளு வன்னில் ஆண்(குழந்தைகளுக்கு)களுக்குத்தான் வாங்கிக்குடுக்க வேனும். :lol:

  • தொடங்கியவர்

இங்குள்ள அநேகரின் கருத்தை வாசிக்கிறப்போ.. தெரிஞ்சு கொள்ளுற விசயம்.. பெற்றோர் பெண் பிள்ளைகளை இட்டு ஏதோ பயப்பிடுகிறார்கள் என்று..!

அந்த ஏதோ என்ன...????!

அந்த ஏதோவிற்கு ஏன் பயப்பிடனும்..??!

இதில இரண்டு விடயம் தான் அந்த ஏதோவுக்குள் இருக்க முடியும்..

1. பெண்ணின் பாலியல் நடத்தை.

2. அவளின் அசாதாரண நடத்தைகள்..! (குடி.. சிகரெட்.. போதை.. கண்ட பயலோடும் ஊர் சுத்துதல்.. கடத்தல்.. கொலை... இப்படி... என்று வைச்சுக்குவமே..!)

இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக பாலியல் தவறு செய்கிறார்கள். வலிந்து ஆண்களை பாலியல் தவறு செய்யத் தூண்டவும் செய்கிறார்கள். அதில் பெண்கள் எதையோ பெறுகிறார்கள்.

அதேபோல்.. பெண்கள்.. சிகரெட் குடிக்கிறாங்க.. போதைப்பொருள் பயன்படுத்திறாங்க.. கடத்தல் செய்யுறாங்க... ஏன் கொலை கூடச் செய்யுறாங்க. இந்த விடயத்தில் அவர்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல..!

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி உருவாகும் எத்தனை பெண்களுக்கு திருமணம் நடக்கிறது? சரி, திருமணத்தைத் தான் விட்டாலும், சமூகத்தில் அவர்களையும் ஒரு மனுசரா மதிக்காட்டியும் கூட பறவாயில்லை எத்தனை பேர் வார்த்தைகளால் காறி உமிழ்ந்து மிதிக்காமல் இருக்கிறாங்க? அல்லது அடைக்கலம் என்ற பெயரில் அவர்களை மேலும் மனரீதியாக சிதைக்காமல் இருக்கிறார்கள்?

சரி யார்.. எப்படியான பெண்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள்....

தன்னிலை அறியாத.. தனது எதிர்காலம் பற்றிய ஆபத்து.. நோக்கம் அறியாதவர்கள் தான் இதனை செய்கிறார்கள்..!

இப்படியான மனநிலையில் பிள்ளைகளிடையே உருவாக அடிப்படைக் காரணம் என்ன? (குறைந்த கட்டுப்பாடு அல்லது அதிகக் கட்டுப்பாடு)

இந்த நிலைக்குள் ஒரு பெண் வந்தால் மட்டும் எங்கட சமூகம் ஒதுக்கி வைப்பதில்லை. ஒரு ஆண் வந்தாலும்.. நிச்சயம் அவனும் கெட்டவன்... காவாலி.. காடை.. தறுதலை.. ரவுடி.. கொலைகாரன்.. பொம்பிளப் பொறுக்கி.. பொறுக்கி.. நாய்.. தெரு நாய்.. சனியன்.. மூதேவி.. ரேப்பிஸ்ட்.. குடிகாரன்.. படிப்பற்றிவில்லாதது.. வேலைவெட்டி இல்லாத முண்டம்... சோத்துமாடு.. தண்டச் சோறு.. என்று எத்தனையோ பட்டங்களை.. எத்தனையோ மன அழுத்தங்களை சுமக்கிறான் தான்..! ஒதுக்கி வைக்கப்படுறான் தான்..!

இவர்களுக்குத் திருமணச் சந்தையில் சீதனத்தொகையோடு ஒரு பெண் கிடைக்காமாலா இருக்கு?

தன்னம்பிக்கையோடு, வாழ்கையில் எந்தக் கஸ்ரங்களை முகம் கொள்ளக் கூடிய ஒரு பெண் கிடைக்குமா? அல்லது மனத் தைரியம் குறைந்த சொல்வதெற்கெல்லாம் தலையாடும் பெண் கிடைக்குமா? இரண்டாவதாகக் குறிப்பிட்ட பெண் கிடைத்தால், அந்தப் பெண்ணின் நாளைய (திருமணத்திற்குப் பின்) நிலை என்ன? இதை அடிப்படையாக வைத்தே இந்தத் திரியை ஆரம்பித்தேன்...

மனவிரக்தி அடையாமல் எதனையும் முகம் கொள்ளும் தைரியமாக மனநிலையுடன், போதிய கல்வியறிவுடன் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளையும் வளருங்கள், அதுவே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குக் கைகொடுக்கும்!

ஏதோ இங்குள்ள பெண்கள் நினைக்கிறாப் போல... இது என்னவோ பெண்களுக்கான பிரச்சனை என்பதாக இல்லை. எங்கட சமூகம்.. ஆண்களை ஒன்றும்.. உட்சாரக் கொப்பில தூக்கி.. சீராட்டிக் கொண்டிருக்கல்ல. அவனை ஒரு உழைக்கும்.. பணம் கொண்டு வரும்.. இயந்திரமாகவே தான் மாற்றுகிறார்கள். அதை நோக்கித்தான் படிக்கவும் வைக்கிறார்கள்.

எத்தனை படித்த ஆண்களிடம் சமூக அக்கறை உள்ளது. வெகு சிலரிடம் மட்டுமே உள்ளது. பலரிடம் அது அறவே இல்லை. ஆனால் சுயநலம் எல்லோரிடமும் இருக்கிறது..! இது எதனால்.. எமது சமூகத்தின் கட்டமைப்பு அப்படி என்பதால்..!

ஆக.. பிரச்சனை என்பது பெண்களுக்கான ஒன்றல்ல..! ஆண்களுக்கும் பெண்களைப் போலவே பல பிரச்சனைகள் உள்ளன. ஆண்கள் அவற்றை எல்லாம் சவாலோடு தான் தாண்டி போராடி வாழ்கின்றனர். பெண்களால் அதனை தாண்ட முடியவில்லை என்றவுடன்.. அடக்கிறான்.. ஒடுக்கிறான்.. என்று பாவம்.. ஆண்கள் மீது பாய்கிறார்கள்.

போராட முடியாதவர்கள் என்று சொல்வதை விட, போராட நினைத்தால் அவர்களை சமூகம் (சமூகத்தில் உள்ள நாம்) அவர்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க பார்க்கிறோம்/ பார்க்க முனைகிறோம்...

திருமணத்திற்குப் பின் பெண்கள் போராட வெளிக்கிட்டால் அவர்களுக்கு விபச்சாரிப்பட்டம் கொடுக்க சொந்தச் செலவில் விழா எடுப்போம்...

பெண் பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்துபவர்களாக தந்தையரை விட தாய்மாரே உள்ளனர். அந்தத் தாய் யார்..????! பெண்..! அந்தப் பெண்ணுக்கு தன் பிள்ளைகளின் மீது முழு நம்பிக்கை இன்மையே.. அவள் அவர்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்க காரணமாகிறது.

மகள் பிழை விடக் கூடும் என்று தாய் ஒரு ஊகத்தை தனது மனதில் வைத்துக் கொண்டு அது தான் சரி என்று நினைப்பதால் வரும் விளைவுகள் மகளின் மனதளவில் பாரிய தாக்கத்தை உருவாக்க வழியமைக்கக் கூடுமென நினைக்கிறன்... எந்தப் பிள்ளையும் தவறு விடாமல் வளர முடியாது... அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டி அதன் விளைவுகளை வெளிப்படையாக அவர்களுக்கு எடுத்துக் கூறி போதிய அறிவுரை அளித்து வளர்ப்பதன் மூலம் பிள்ளைகள் தமது பிழைகளை தாங்களே திருத்த வாய்ப்பளிததாகவும் இருக்கும், எதிர் காலத்தில் அதே பிழைகளை விடாமலும் இருக்க ஒரு பாடமாக இருக்கும்...

(யாரோ ஒருவரின் பிள்ளை ஒரு தவறை விட்டால், அதனைக் கேள்விப்பட்டு தனது பிள்ளையும் இப்படித் தான் தவறு விடுவாளோ என்று ஒன்றும் செய்யாத தனது பிள்ளையை அடக்குமுறைக்கு உட்படுத்துவது தவறு... அதைத் தான் பலர் செய்கிறார்கள்...பெத்த தாயே தனது பிள்ளைகளில் நம்பிக்கை வைக்காவிட்டால் வேறு எவர் அந்தப் பிள்ளைகளில் மேல் நம்பிக்கை வைப்பார்கள்? இது ஒரு தாயே தனது பிள்ளைகளுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?)

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் நெருங்கி செயற்பட வேண்டிய உலக இயக்கத்தில்.. பெண்ணை தூர விலக்கி வைச்சு.. அல்லது ஆணை தனியப் பிரிச்சு வைச்சு.. ஒன்றும் வெட்டி விழுத்த ஏலாது.

ஆண்களும் பெண்களும் சகஜமாக பழக விடப்பட வேண்டும். பாலியல்.. நன்னடத்தைகள் சார்ந்த பாதுகாப்புக்களை... ஒழுக்கங்களை போதிப்பது கட்டாயம். அதன் கீழ் அவர்கள் செயற்படும் நிலை வரும் வரை.. பெற்றோர் கண்காணிப்பென்பது இருபாலாருக்கும் அவசியம்..! இதன் கீழ் தான்.. பெண்களை தவறாக நடத்த முயலும் ஆண்களையும் ஆண்களை தவறாக நினைக்கும்.. நடத்த முயலும் பெண்களையும் சீர்வழிப்படுத்த முடியும். பாலியல் மற்றும் சமூகச் சீரழிவுகளை இனங்காட்டி.. ஆணும் பெண்ணும் சகஜமாக பழகும் சூழல் ஏற்படுவதை தடுப்பது ஆபத்தான பின் விளைவுகளையே உண்டு பண்ணும். அதிலும்.. பாலியல்.. மற்றும் சமூகச் சீரழிவுகள் பற்றிய தெளிவான வழிகாட்டுதலோடு.. பிள்ளைகளை வளர்த்தல் நல்லது..!

மற்றும்படி.. ஆண்களைப் பற்றிய பயங்காட்டுதலோடு.. பெண்களை வீட்டுக்க இருத்தி வைப்பதன் மூலமாக.. பெண்களின் இயற்கையான ஆசைகளை.. அந்தரங்க விருப்புக்களை அறவே ஒழித்துக்கட்டிவிட முடியாது. அதேபோல் தான் ஆணிற்கும்.

ஆணோ பெண்ணோ.. அவன் அல்லது அவளாக.. இதுதான் சிறந்த முறையான வாழ்க்கை.. இந்த வாழ்க்கைச் சூழலில் இதுவே எனக்குப் பாதுகாப்பான வாழ்க்கை.. எனது இருப்பை உறுதிப்படுத்தும் வாழ்க்கை என்பதை உணரச் செய்யும் போது.. நிச்சயம்.. அவர்கள் மேற்சொன்ன.. முக்கியமான தவறுகள் அடங்கும் அந்த இரண்டு வகைகளில் இருந்தும் தெளிவாக விலகி இருப்பர்.

இந்த உணர்தலைச் செய்ய வேண்டியது யார்..??! பெற்றோர் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சமூகமும் ஆகும்.

ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைச்சு வைப்பதாலோ.. இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு.. சகஜமாகப் பழகி.. தவறுகள்.. செய்யக் கூடாததுகளை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின்.. நிச்சயம் அதுவே.. மனித வாழ்கை சிறக்க உதவும்..!

அதைவிடுத்து.. புரட்சி.. மண்ணாங்கட்டி என்று கொண்டு ஆண் அடக்கிறான்.. ஆணாதிக்கம்.. என்று அலட்டிக் கொண்டு திரிவதாலோ.. ஊருக்குப் பயந்து பெண்களை பெண்களே வீட்டுக்குள் பூட்டி வைச்சுப் போட்டு.. பெண் விடுதலை வேண்டும் என்று கூப்பாடு போடும்.. பிற்போக்குத்தனங்களாலோ.. எந்தப் பயனும் இல்லை. இந்த இரு தரப்பும்.. மனிதச் சமூகவியல் அறிவற்ற முட்டாள்கள் என்பதைத் தவிர வேறு சொல்வதற்கில்லை..! இதுதான் நிஜம்.

தமிழ் சமூகத்தில்.. மனித சமூகப் புரிதல் மிகக் குறைவான மட்டத்தில் இருக்கக் காரணம்.. தொழிலை வருவாயை.. அடிப்படையாகக் கொண்ட சுயநல வாழ்வியல் தரும் அந்தஸ்தை.. அவர்கள் உயர்த்திப் பிடிப்பதும்.. பெண்களின் மூலம் சமூக ஒழுங்கை நிலை நிறுத்த முயல்வதுமே ஆகும்..! :):icon_idea:

உங்கள் கருத்திற்கும் நன்றி நெடுக்ஸ்! :)

  • தொடங்கியவர்

ஆண் நிலை சார்ந்த எம் குடும்ப அமைப்பில் என்றும் பெண் ஆணுக்கு அடங்கி வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுடன் வளர்க்கப்படும் போதே பெண் குழந்தை கோழையாக வளர்க்கப்படுகின்றாள். தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாங்கள் இந்தக் கோட்பாட்டையே பொதுவாக கடைப்பிடிக்கின்றோம். விளையாட்டு சாமான்கள் பிள்ளைகளுக்கு வாங்கும் போது பெண் பிள்ளைக்கு விளையாட்டு பொம்மையும் (அல்லது டெடி பியர்) ஆண் பிள்ளைக்கு விளையாட்டுக் காரும் வாங்கிக் கொடுப்பது போன்ற செயல்களை செய்யும் போதே நாம் பெண் பிள்ளைகளை பாலியல் மற்றும் பிள்ளை பெறுதல் போன்ற செயல்களுக்கான கருவிகளாக பார்க்கத் தொடங்குகின்றோம். இதன் நீட்சிதான் பெண் தனக்குள் தனகான முக்கிய சமூகப் பொறுப்பு என்பது பிள்ளை பெறுவதும் அதனை வளர்ப்பது மட்டுமே என்று நினைப்பதும் அதில் ஆணுக்கு ஒரு பொறுப்பு இல்லை என கருதுவதுமாகும். சிறு வயதில் இருந்தே வளர்க்கப்படும் இந்த சிந்தனை முறைக்கு ஏற்றவாறே பெரும்பாலான பெண்கள் தாம் வளர்ந்த பின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அணுகுகின்றனர். குடும்பத்தில் ஆணின் வன்முறைக்கு பெண் தகுந்த முறையில் எதிர்வினை ஆற்ற முடியாமல் இருப்பதும் இதனால் தான்.

என் மகளின் முதலாம் பிறந்த தினத்திற்கு நண்பர்களையும் உறவினர்களையும் அழைக்கும் போது போட்ட ஒரே ஒரு நிபந்தனை எவரும் பொம்மைகளை பரிசாகக் கொண்டு வரக்கூடாது என்பதே ஆகும். ஆனால் ஏன் அவ்வாறு கூறுகின்றேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் பலர் பொம்மைகளை வாங்கிக் கொண்டு வர அவற்றை எறிய வேண்டி வந்தது. அதே போல் ஆடை அணிகலன் தவிர வேறு எந்த விடயத்திலும் பாலின வேறுபாட்டை உணர்த்தும் எந்த விடயங்களையும் எம் பிள்ளைகளின் வளர்ப்பில் காட்டப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்.

பெற்றோர் துணிவான பெற்றோர் எனில் வளர்க்கப்படும் பெண் குழந்தையும் துணிவாகத்தான் வளரும். அத்துடன் மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்றோரின் அதிகாரம் பெண் குழந்தைகளை (ஆண் குழந்தைகளையும் தான்) எட்டாமல் பெற்றோர் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள் துணிவுடன் வளர்வதைக் கண்டுள்ளேன்.

குடும்பத்தினரின், உறவினர்களின் (positive thinking) உறுதியான, நேர்த்தியான, ஓர வஞ்சனை இல்லாத சிந்தனையும் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய காரணிகளாகும்...

நன்றி நிழலி உங்கள் கருத்திற்கும் :)

பெண் குழந்தைகள் மீது தமிழ்ப் பெற்றோர் அதிகம் கவனமாகத்தான் இருக்கின்றார்கள்.. மிகவும் கெட்டித்தனத்துடனும், எது சரி எது பிழை என்று புரிதல்களுடன் பெற்றோர்கள் மீது அதிக பாசத்துடன் இருக்கும் பெண்பிள்ளைகளை அவர்தம் பெற்றோர் கண்ணுக்குள் எண்ணையை விட்டுக் கண்காணிப்பதையும் பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் தம் பிள்ளைகள் தானாகப் பிழையாகப் போகாவிட்டாலும் சினேகதங்களின் தூண்டுதலால் ஏதாவது தப்பாகச் செய்துவிடுவார்களே என்ற பயத்தின் அடிப்படையில்தான் உருவாகின்றது.. ஆண்பிள்ளைகளையும் சினேகிதர்கள் கெடுத்துவிடுவார்கள் என்று பயந்தாலும் பெண்பிள்ளைகளை அதிகம் கட்டுக்கோப்பாக வளர்க்க முயல்வது ஆண்சிந்தனையைக் கொண்ட தமிழர்களிடம் இயல்பாக உள்ள விடயம்.

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடன் உரையாடவேண்டும். வளர்ந்த பெண்பிள்ளைகள் என்றால் தகப்பன்மார் பொதுவாக எல்லா விடயங்களையும் பேசுவதில்லை. பெண்களுக்கேயுரிய விடயங்கள் என்று சிலவற்றை தாய்மாரிடமே விட்டுவிடுவார்கள்.. இந்தக் குறைபாடுகளைக் களைந்தால் நமது தமிழ்ப் பெண்கள் மென்மேலும் சாதனைகளைப் புரிவார்கள்..

உங்கள் கருத்திற்கும் நன்றி கிருபன்.. :)

பொதுவாக பெண்பிள்ளைகளுக்கு பொம்மையும் அதை வைத்து தள்ள ஒரு விளையாட்டு பிள்ளையை வைத்து தள்ளும் வன்டிலும் வாங்கி கொடுப்பார்கள்.(வெள்ளைகளும்தான்)ஆண் பிள்ளைக்கு றிமோட்ட கார்.நடைமுறைப்படிப்பாத்தால் தள்ளு வன்னில் ஆண்(குழந்தைகளுக்கு)களுக்குத்தான் வாங்கிக்குடுக்க வேனும். :lol:

இனி வரும் காலத்தில் ஆண்பிள்ளைகளுக்கு சில வேளை ரிமோட் கொன்றோலர் காருக்குள் ஒரு பொம்மை கார் சீற்றும் செய்து விற்றாலும் விற்பார்கள்... ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணாவின் சிந்தனை மிகவும் வரவேற்க தக்க ஒரு விசயம்...காரணம் இந்தப் பொம்மைகள் கூட பிள்ளைகளின் மனதை தவறான வளிக்கு இட்டு செல்வதை அவதானிக்கலாம்..சில பிள்ளைகளை பார்த்தால் பொம்மைகளை வைச்சுக் கொண்டு சகிக்க முடியாத சேட்டைகள் எல்லாம் செய்வார்கள்..ஏன் இப்படியான பொம்மைகளை எல்லாம் தயாரித்து விக்கிறார்களோ என்று நானும் பல தருணங்களில் சிந்தித்து இருக்கிறேன்.அத்தோடு கூடிய வரைக்கு மிக நெருங்கிய குடும்ப உறவுகள் அல்லாதவர்களின் திருமணம் மற்றும் விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்..அங்கே இருந்தும் சில வேண்டாத விடையங்களை பிள்ளைகள் கற்றுக் கொள்ள சாத்தியக் கூறுகள் இருக்கிறது..பிள்ளைகளைத் தனியாக விட்டுட்டு போக முடியாதவர்கள் கூட்டிக் கொண்டு தான் செல்ல வேண்டும் ஒத்துக் கொள்கிறேன்...ஏன் கூட்டிப் போக வேணாம் என்றுசொல்கிறேன் என்றால் அங்கே நடப்பதை பார்த்துட்டு வந்து, என்ன என்றே புரிந்து கொள்ள முடியாத பருவத்திலயே தாங்களும் பெரியவர்களாகிட்டோம் என்று பெரிய,பெரிய எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் செயல்பாடுகளில் மனதை செலுத்த முயற்சிக்கிறார்கள்.நான் பல குழந்தைகளின் செயல்பாடுகளை கண்டிக்கப் போய் மன வருத்தத்துக்கு உண்டாகிய சம்பவங்களும் உண்டு.

நிழலி சிறு வயதிலிருந்தே ஆண்/பெண் குழந்தைகளுக்கு சமவுரிமை கொடுத்து தான் வளர்க்க வேண்டும் ஆனால் பெண் குழந்தைக்கு பொம்மை விளையாடக் கொடுக்கா விட்டால் அப் பெண் குழந்தைக்கு ஆண்களது முரட்டுக் குணம் வராதா?...ஆண் முரடு என்றும் பெண் மென்மை என்றும் சொல்வார்கள் அதுவும் மூட நம்பிக்கை தான் ஆனால் பெண்கள் வெட்கப் பட வேண்டிய நேரத்தில் வெட்கப் படத் தானே வேண்டும்? அது தேவையில்லை என்கிறீர்களா?

ஏன் உங்களால் பொண்ணுக்கு பொம்மை விளையாடக் கொடுத்து பையனுக்கும்/பொண்ணுக்கும் சம உரிமை நிலை நாட்ட முடியாமல் போனது?...பொம்மையை ஒரு விளையாட்டு சாமானாய் கருதி அதை ஏன் உங்கள் இரு குழந்தைகளுக்கும் பொதுவாக விளையாட‌க் கொடுக்கலாமே?...முக்கியமாக ஏன் உங்கள் பையனுக்கு பொம்மையை விளையாட‌க் கொடுக்கவில்லை பெண்மை வந்து விடும் என்பதாலா?

உரிமை என்பது ஒரு ஆண் பிள்ளையை எவ்வளவு சுதந்திர‌த்திர‌மாக வளர்க்குறோமோ அதே சுதந்திர‌த்துட‌ன் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பது என் கருத்து.

முரட்டுத் தனம் என்பது மூலம் நீங்கள் எதனை குறிப்பிடுகின்றீர்கள் எனப் புரியவில்லை. பொம்மையை பெண் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுக்காவிடின் முரட்டுத் தனம் வரும் என்று நிறுவ முடியாது. ஆனால் பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் சிறு பிராயத்திலிருந்தே பொம்மைகளை வாங்கிக் கொடுத்து விளையாடவிடுவதன் பின்னால் உளவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. பொம்மைகளை (இங்கு நான் பொம்மைகள் என்று குறிப்பிடுவது மனித உருவங்களைக் கொண்ட பொம்மைகள் மற்றும் டெடி பியர் போன்ற பொம்மைகளை மட்டுமே). பொம்மைகளை வைத்து விளையாடும் பெண் பிள்ளைகள் அதற்கு தாய் சொல்லிக் கொடுத்த விதத்தில் ஆராரோ ஆரிராரோ பாடி தூங்கவைப்பது, சூப்பிப் போத்தல் கொடுத்து பாலுட்டுவது போன்ற பிள்ளை வளர்ப்பு சம்பந்தமான விடயங்களையே அது விளையாடும். கொஞ்சம் அளவில் பெரிய பொம்மைகளை தூங்கும் போதும் தன்னருகில் வைத்து நித்திரை கொள்ளும். அதன் சின்ன புத்தியில் போடப்படும் முதல் விதையே அதன் பால் சார்ந்த ஒரே ஒரு கடமையே பிள்ளை வளர்ப்புதான் என்று போதிக்கப்படுகின்றது இதன் மூலம். பிள்ளை வளர்ப்பு என்பதே பெற்றோர் இருவருக்குமான ஒரு கடமை என்ற பொறுப்புணர்வில் இருந்து பெண்களை மட்டும் பிரித்தெடுத்து அவர்களின் ஆளுமையை சிதைக்கும் ஒரு உத்தியாகவே பார்க்க முடிகின்றது இதனை.

மற்றப்படி 'வெட்கம்' என்ற உணர்வு பற்றி எழுதியிருந்தீர்கள். வெட்கம் என்பதே சமூகத்தின் முன் நாம் நடத்தும் ஒரு போலி நடிப்பு என்றே நம்புகின்றேன். இது பற்றி மேலதிகமாக எழுதி திரியை திசை திருப்ப விரும்பவில்லை.

நீங்கள் கேட்டு இருந்தது 'ஏன் ஆண் குழந்தைக்கு இதனைக் கொடுக்கவில்லை' என. இரு குழந்தைகளுக்கும் முதன் முதலில் விளையாட்டுப் பொருட்களை அறிமுகப்படுத்துவது பெற்றோர் தான். பிறந்து தொட்டிலில் போட்டவுடன் அதன் கருத்தைக் கவர தொட்டிலின் மேல் தொங்கவிடும் Music Toy இல் இருந்து குழந்தை தானாகவே விரும்பிக் கேட்டு விளையாட்டுச் சாமாங்களை தெரிவு செய்து வாங்கும் வயது வரை அவர்களுக்கு விளையாட்டுச் சாமாங்களை அறிமுகப்படுத்துவது நாங்கள் தான். அதன் படி இருவருக்குமே வாங்கிக் கொடுத்தது தட்டினால் இசை எழுப்பக் கூடிய பொருட்களையும், விதம் விதமான கலர்களில் அமைந்த வடிவங்களையும் தான். அத்துடன் கார், பெரிய இயந்திரங்களை ஒத்த சின்ன உருவங்களையும் (model) வாங்கிக் கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என் சிந்தனைக்கு எட்டியவரைக்கும் இவை அவர்களின் ஆளுமையை வளர்க்க உதவுவன என்று நம்புகின்றேன்.

பெண் பிள்ளைகள் தைரியமில்லாதவர்களாக ஆவதே வீட்டின் சூழ்நிலையாலும், வளர்க்கப்படும் முறையாலும் மற்றும் அதன் பாடசாலையாலும் தான். 'நீ பெண் பிள்ளை' எனவே இன்ன மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று குட்டிக் குட்டி வளர்க்கபடும் முறையால் தான் அவள் தைரியமற்றவளாக வளர்கின்றாள். தன் வீட்டில் தன் அம்மாவை தன் அப்பா அடிக்கும் போது அம்மா அழுது கொண்டு எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் காட்சியை தொடர்ந்து பார்க்கும் பெண் குழந்தை பெண் என்றால் அடியை வாங்கிக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்ற பதிவைத்தான் உள்வாங்குகின்றாள். அதே போன்று ஆண் குழந்தை, பெண்ணுக்கு அடிக்கலாம் என்ற பதிவைத் தான் தனக்குள் பதிக்கின்றது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. இப்படி எத்தனையோ நடக்கும் போது அந்தப் பெண் எவ்வளவு படித்து, பெரிய தொழில் நிலையை அடைந்தாலும் உள்ளுக்குள் கோழையாகவே வளர்க்கப்படுகின்றாள். இதனால் தான் கடல் கடந்து வந்து சட்ட ரீதியில் நல்ல பாதுகாப்பு இருக்கும் நாடுகளில் கூட domestic violence எனப்படும் வீட்டு வன்முறை மூலம் பாதிக்கப்படும் பெண்கள் தனக்கு இருக்கும் சட்ட ரீதியான உரிமைகளைக் கூட விரும்பாதவர்களாக இருக்கின்றனர்.

அண்மையில் விஜய் ரீவியில் பெண்களின் ஆடைகள் அணியும் விதம் பற்றிய ஆணுக்கும் பெண்ணுக்குமான விவாதக் களத்தில் ஒரு பெண் மனோதத்துவர் கூறியதை கூற விரும்புகின்றேன். பேரூந்துகளிலும், பொது இடங்களிலும் பாலியல் சேட்டைகளில் ஈடுபடும் ஆண்கள் தமக்கான இலக்குகளாக அப்பாவியாகத் தெரிகின்ற, பயந்தாங்கொள்ளியாக தோன்றுகின்ற, தம் செயலுக்கு எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றத் தெரியாத பெண்களைத் தான் கொள்கின்றனர் என. ஒரு பெண் கோழையாக தைரியமில்லாதவளாக இருப்பது முதலில் அவளது பாதுகாப்பைத் தான் கேள்விக்குட்படுத்துகின்றது என்பது இதிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆகவே தம் மகளின் வாழ்வில் உண்மையான நேர்மையான அக்கறை இருக்கும் பெற்றோர் செய்ய வேண்டியது ஆண் சார்ந்த இந்த சமூகக் கட்டமைப்பில் அவளை மிகுந்த துணிச்சல் உள்ளவளாக வளர்ப்பதுதான். அதற்கான வழிவகைகளை கண்டறிவது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே எழுதியுள்ள ஒருசில கருத்துக்களை வாசிக்கும் ஏதோ எழுத்தாளர்கள் புத்தகத்திற்க்காக எழுதுவது போல் எழுதியுள்ளார்கள்.இவர்கள்....இது சம்பந்தமாக.....ஒருசில பிரச்சனைகளைகளுக்கு முகம்கொடுக்காதவர்களாகவே தெரிகின்றார்கள்.

அவரவருக்கு அந்தந்த பிரச்சனைகள் வரும் போது....அப்போது தெரியும்.

இருப்பினும்.....ஒரிருவரியில் ஒரு சம்பவம்.

தங்கள் பெண்பிள்ளையை சகல உரிமைகளும் கொடுத்து அதாவது ஜேர்மன் பிள்ளைகளுக்கு என்ன உரிமை சுதந்திரம் இருக்கின்றதோ.........அதேபோல் வளர்த்தார்கள்.பிள்ளையும் படிப்பில் சுட்டி......அதே போல் காதலிலும் சுட்டி...பெற்றோர்கள் அதற்கு பச்சைக்கொடி......பிள்ளை காதலித்தது தமிழ்ப்பொடியனை என்பதுதான் பச்சைக்கொடிக்கு முக்கிய காரணம்.

எனவே காதல் அரும்பி களவாக ஒருசில விடயங்கள் நடக்கமுதல்...புத்திசாலிதனமாக பெண்பிள்ளையின் பெற்றோர் பெடியனின் பெற்றோரை சந்தித்து......பேச்சுக்கால் நடத்தி.... ஒருசில ஒப்பந்தங்களோடு.... பெருவெற்றியும் பெற்றனர்.

ஒப்பந்தம்:பிள்ளை யூனியிலை படிக்குது...பெடியன் சொறி மாப்பிளையும் வேறை இடத்திலை நல்லபடிப்பு படிக்கிறார்.

ஆகவே இரண்டுபேரும் படிக்கிறார்கள்.

அதனால் முதலில் எழுத்து.....சட்டப்படி கால் பூட்டாம்.......படிப்பு பட்டங்கள் முடிய திருமணம்.இதுதான் ஒப்பந்தம்.

இருமனதும் ஒருங்கிணைந்தது போல்......இரு சம்பந்திகளும் ஒப்பந்தத்தில் ஒருங்கிணைந்தார்கள்.பதிவுத்திருமணக்கொண்டாட்டமும் படு விமரிசையாக நலமாகவே நடந்தேறியது.

இதன் பின் இருவரும் படித்துக்கொண்டே குடும்பமும் நடத்தினார்கள்.

பொது இடங்களிலும் பில்கிளிண்டன்-கிலாரி போன்று அன்னியோன்யமாக காட்சி கொடுத்தார்கள்.

இரு வருடங்களின் பின்......தெரிந்தது அவர்களின் விரிசல்களும்..பிரச்சனைகளும்........மாப்பிளை...........

(இதர விடயங்கள் அடக்கி,அமுக்கப்பட்டுள்ளது.)

பிள்ளை கண்ணை கசக்கிக்கொண்டு பிறந்தவீடு திரும்பி வர....

பெற்றவர்களும் கண்ணீர் மல்க வரவேற்க வேண்டிய கட்டாயம். சட்டபூர்வமாக விவாகரத்தும் எடுக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அந்த பிள்ளைக்கு..லண்டன்...ஜேர்மனி..கனடா..இலங்கை..நோர்வே...என பலநாடுகளின் மாப்பிளை தேடினார்கள்.இரண்டாம் தாரமாக ஏற்க எந்த ஆண்மகனும் முன்வரவில்லை.

இங்கு எழுதும் சிலரது கருத்துகளைப் பார்த்தால் எம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒற்றைப் பார்வையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. துணிச்சல் மிக்க, தைரியமிக்கவர்களாக பெண் பிள்ளைகளை வளர்த்தால் அவர்கள் தவறான வழியில்; முக்கியமாக பாலியல் சார்ந்த தவறுகளை விடக்கூடியவர்களாகவே ஆவார்கள் என்று நிறுவ முற்படுகின்றனர் இவர்கள். "பிள்ளையை துணிச்சலாக வளர்க்காதை...வளர்த்தால் அவள் பாலியல் ரீதியான தவறுகளை செய்து போட்டுவிடுவாள்" என்று சொல்லி சொல்லி தொடந்து பெண்களை கோழையாக வைத்திருக்கவே முயல்கின்றனர் இவர்கள்.

துணிவுடனும், சுதந்திரமாகவும் வளர்க்கப்படும் எந்த பிள்ளைகளும் தவறான பாதைக்கு செல்லாது. துணிவும், சுதந்திரமும் எது சரி எது பிழையென பிரித்தறிந்து செயலாற்றத் தக்க அறிவையும் பக்குவத்தையுமே கொடுக்கும். இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூகம்..சமூகம் என ஒற்ரை வழி பாதையை நான் இங்கே குறிப்பிடவில்லை.

சமதர்மமாக வளர்ந்த தமிழ் பெண்பிள்ளையை தமிழ்மாப்பிளை கூடியிருந்து கைகழுவி விட்டான்.இதர தமிழ்மாப்பிளைகளுக்கு இவள் இரண்டாம் தாரமாம்.

இதற்கு அந்தப் பெற்றோர்தான் காரணம். காதல் என்றவுடன் சில பெற்றோர்கள், உடனடியாகவே பதிவுத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். பதிவுத் திருமணம் செய்து விட்டால், அப்பிள்ளைகள் எப்படிக் கூத்தாடினாலும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லையாம். அவர்கள் மேல் பழி வந்துவிடக்கூடாது என்பதற்காகச் செய்யும் வேலைதான் இது. பிள்ளைகளின் வயது, அவர்களின் படிப்பு போன்றவற்றை அவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. இதுவே, புரிந்துணர்வுள்ள பெற்றோர்கள் எனில், உரிய புத்திமதிகளைக் கூறி அந்தப் பெண்ணையே சுயமாக முடிவெடிக்கச் சொல்வார்கள். நீங்கள் கூறியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அப்பெண் இரண்டாம் தாரமாகத்தான் எனக்குத் தெரிகிறார். அதை அவர் ஏற்றுக் கொள்ளவேண்டிய பக்குவம் இல்லையெனில், அது அவரின் அறியாமையே. நிழலி குறிப்பிட்டதுபோல, உரிய சுதந்திரத்துடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சரி, பிழைகளை அறிந்து நடந்து கொள்வார்கள். அப்படியே அவர்கள் சில தவறான முடிவுகளை எடுத்தாலும் அந்தத் தவறுகளைத் திரும்பச் செய்ய மாட்டார்கள். மிகவும் சுதந்திரமாக வளர்க்கப்படும் ஆண்களே பல தடவைகள் தவறாகத் தான் நடந்து கொள்கிறார்கள். விகிதாசாரத்தில் பார்க்கும்போது, சுதந்திரமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் குறைவான பெண் பிள்ளைகளே குறைந்தளவில் தவறான முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.

நிழலி அண்ணாவின் சிந்தனை மிகவும் வரவேற்க தக்க ஒரு விசயம்...காரணம் இந்தப் பொம்மைகள் கூட பிள்ளைகளின் மனதை தவறான வளிக்கு இட்டு செல்வதை அவதானிக்கலாம்..சில பிள்ளைகளை பார்த்தால் பொம்மைகளை வைச்சுக் கொண்டு சகிக்க முடியாத சேட்டைகள் எல்லாம் செய்வார்கள்..ஏன் இப்படியான பொம்மைகளை எல்லாம் தயாரித்து விக்கிறார்களோ என்று நானும் பல தருணங்களில் சிந்தித்து இருக்கிறேன்.அத்தோடு கூடிய வரைக்கு மிக நெருங்கிய குடும்ப உறவுகள் அல்லாதவர்களின் திருமணம் மற்றும் விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்..அங்கே இருந்தும் சில வேண்டாத விடையங்களை பிள்ளைகள் கற்றுக் கொள்ள சாத்தியக் கூறுகள் இருக்கிறது..பிள்ளைகளைத் தனியாக விட்டுட்டு போக முடியாதவர்கள் கூட்டிக் கொண்டு தான் செல்ல வேண்டும் ஒத்துக் கொள்கிறேன்...ஏன் கூட்டிப் போக வேணாம் என்றுசொல்கிறேன் என்றால் அங்கே நடப்பதை பார்த்துட்டு வந்து, என்ன என்றே புரிந்து கொள்ள முடியாத பருவத்திலயே தாங்களும் பெரியவர்களாகிட்டோம் என்று பெரிய,பெரிய எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் செயல்பாடுகளில் மனதை செலுத்த முயற்சிக்கிறார்கள்.நான் பல குழந்தைகளின் செயல்பாடுகளை கண்டிக்கப் போய் மன வருத்தத்துக்கு உண்டாகிய சம்பவங்களும் உண்டு.

யாயினி, நீங்கள் குறிப்பிடுவது எனக்கு சரியாகப் படவில்லை. பிள்ளைகளை அதிகளவில் வெளியில் கூட்டிச் செல்வதே சிறந்தது. அப்போதுதான் அவர்கள் வெளியில் நடந்து கொள்ளும் விதத்தை அறிந்து, அவர்கள் விடும் தவறுகளைத் திருத்த முடியும். அவர்களைப் பொத்தி வளர்ப்பதும் மிகவும் தவறு. சுதந்திரமும் கட்டுப்பாடும் கலந்து வளர்ப்பதே சிறந்தது. அதைவிடப் பெற்றோர் பிள்ளைகள் உறவுகளுக்கிடையில் விரிசலோ தயக்கங்களோ இருக்கக்கூடாது.

முதலில் நான் இங்கு கருத்து எழுதவில்லை காரணம் எனக்கு பெண்பிள்ளைகள் இல்லை ,எதையும் எழுதி தனக்கு தனக்கு என்று வந்தால் தான் தெரியும் என்று உதை வாங்க ரெடி இல்லை .

எம்மவரிடம் சில இந்தியன் ,பாகிஸ்தானிகள் ,ஆப்கானிஸ்தானிகள் போன்று போன்ற மிக பிற்போக்கான பெண்களை பற்றிய பார்வைகள் இல்லாவிட்டாலும் இன்னமும் நாமும் பிற்போக்காகாத்தான் இருக்கின்றோம் .

பெண்பிள்ளைகளை அப்பிடி உடுப்பு போடாதே ,இப்படி காலை வைக்காதை ,ஆக்களுக்கு முன்னால்பல்லை காட்டாதே என்ற அடிப்படையில் தான் நாட்டில் வளர்த்தோம் ,ஏனெனில் போற இடத்தில பிரச்சனை வரும் என்று .அப்ப அவர்களை யாரையோ சந்தோசப்படுதுவதற்காகத்தான் வளர்க்கின்றோமே ஒழிய அவர்கள் விருப்பத்திற்கு வளர விடுவதில்லை.

புலம் பெயர்ந்த நாடுகளிலும் பெற்றோரின் சிந்தனையில் மாற்றமில்லை ஆனால் சூழலும் பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் பெற்றோரை அவர்கள் விரும்பாவிட்டாலும் சில இறுக்கங்களை தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுகின்றது .

இந்த தளர்வு எவ்வளவு என்பதில் தான் இங்கு பெற்றோருக்கும் -பெண்பிள்ளைகளுக்குமான உறவும் இடைவெளியும் தீர்மானிக்கப்படுகின்றது .எம்மவரால் எதையும் தாங்கமுடியும் ஆனால் பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் அரிவாளை தூக்கிவிடுவார்கள்.அதனால் தான் பல பிரச்சனைகள் - வீட்டை விட்டு ஓடுவதில் இருந்து கொலை வரை போகின்றது.பிரச்சனை செய்யும் ஒரு பிள்ளை ஆண் என்றால் பெரிதாக கண்டிக்காத பெற்றோர் பெண்பிள்ளை என்றதும் துள்ளி எழுகின்றனர்.

சிகரெட் ,தண்ணி ,போதைவஸ்து இப்படியான பழக்கங்கள் அதுவும் வயது வர முதல் எவர் செய்தாலும் பிழைதான்.

இங்கு பாடசாலைகளிலேயே அனைத்து விதமான பிரச்சனைகளையும் எப்படி கையாளுவது என்று சொல்லி கொடுக்கின்றார்கள் .பிள்ளைகளில் நம்பிக்கை வைத்து சரி ,பிழை அனைத்தையும் மனம்விட்டு கதைத்து முழு சுதந்திரமும் கொடுத்து வளர்த்தால் தான் பிள்ளைகளால் எதையும் சாதிக்கமுடியும் (சாதிப்பது என்பது டாக்டர் ,என்ஜினியர் ஆவதோ அல்லது நல்ல வருங்கால மனைவி ஆவதோ அல்ல ).

எங்கும் போய் எதையும் கதைத்து,சாதிக்க வேண்டியதை சாதித்து ஒரு முன்னோடியாக இருக்கவிட வேண்டும் .பெரும்பாலான கனேடிய தமிழ் குடும்பங்களில் இந்த நிலை இப்போ உருவாகிவிட்டது .முன்னூறு நானூறு மைல்களுக்கப்பால் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு(அமெரிக்காவில் ,மேற்கிந்திய தீவுகள் ) தனியாக போயிருந்து படிப்பதும் ஜெர்னலிசம்,சட்டம் ,அரசியல் ,சூழலியல் என்றெல்லாம் படிக்க தொடங்கிவிட்டார்கள் .

அடுத்த தலைமுறை முற்றிலும் மாறிவிடும் ,

கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் கனேடிய மூன்று வானொலிகளிலும் வந்து ஐயோ ,குய்யோ என்று சில மிக பிற்போக்கான பெற்றோர் ,சமூக ஆர்வலர்கள் இப்பவும் கத்திக்கொண்டு இருப்பதுதான் வேடிக்கை .இவர்கள் தமிழ்நாட்டு சீரியல்கள் தாண்டி எதையுமே அறியாதவர்கள் என்பதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதியுள்ள ஒருசில கருத்துக்களை வாசிக்கும் ஏதோ எழுத்தாளர்கள் புத்தகத்திற்க்காக எழுதுவது போல் எழுதியுள்ளார்கள்.இவர்கள்....இது சம்பந்தமாக.....ஒருசில பிரச்சனைகளைகளுக்கு முகம்கொடுக்காதவர்களாகவே தெரிகின்றார்கள்.

அவரவருக்கு அந்தந்த பிரச்சனைகள் வரும் போது....அப்போது தெரியும்.

இருப்பினும்.....ஒரிருவரியில் ஒரு சம்பவம்.

தங்கள் பெண்பிள்ளையை சகல உரிமைகளும் கொடுத்து அதாவது ஜேர்மன் பிள்ளைகளுக்கு என்ன உரிமை சுதந்திரம் இருக்கின்றதோ.........அதேபோல் வளர்த்தார்கள்.பிள்ளையும் படிப்பில் சுட்டி......அதே போல் காதலிலும் சுட்டி...பெற்றோர்கள் அதற்கு பச்சைக்கொடி......பிள்ளை காதலித்தது தமிழ்ப்பொடியனை என்பதுதான் பச்சைக்கொடிக்கு முக்கிய காரணம்.

எனவே காதல் அரும்பி களவாக ஒருசில விடயங்கள் நடக்கமுதல்...புத்திசாலிதனமாக பெண்பிள்ளையின் பெற்றோர் பெடியனின் பெற்றோரை சந்தித்து......பேச்சுக்கால் நடத்தி.... ஒருசில ஒப்பந்தங்களோடு.... பெருவெற்றியும் பெற்றனர்.

ஒப்பந்தம்:பிள்ளை யூனியிலை படிக்குது...பெடியன் சொறி மாப்பிளையும் வேறை இடத்திலை நல்லபடிப்பு படிக்கிறார்.

ஆகவே இரண்டுபேரும் படிக்கிறார்கள்.

அதனால் முதலில் எழுத்து.....சட்டப்படி கால் பூட்டாம்.......படிப்பு பட்டங்கள் முடிய திருமணம்.இதுதான் ஒப்பந்தம்.

இருமனதும் ஒருங்கிணைந்தது போல்......இரு சம்பந்திகளும் ஒப்பந்தத்தில் ஒருங்கிணைந்தார்கள்.பதிவுத்திருமணக்கொண்டாட்டமும் படு விமரிசையாக நலமாகவே நடந்தேறியது.

இதன் பின் இருவரும் படித்துக்கொண்டே குடும்பமும் நடத்தினார்கள்.

பொது இடங்களிலும் பில்கிளிண்டன்-கிலாரி போன்று அன்னியோன்யமாக காட்சி கொடுத்தார்கள்.

இரு வருடங்களின் பின்......தெரிந்தது அவர்களின் விரிசல்களும்..பிரச்சனைகளும்........மாப்பிளை...........

(இதர விடயங்கள் அடக்கி,அமுக்கப்பட்டுள்ளது.)

பிள்ளை கண்ணை கசக்கிக்கொண்டு பிறந்தவீடு திரும்பி வர....

பெற்றவர்களும் கண்ணீர் மல்க வரவேற்க வேண்டிய கட்டாயம். சட்டபூர்வமாக விவாகரத்தும் எடுக்கப்பட்டு விட்டது. இன்றுவரை அந்த பிள்ளைக்கு..லண்டன்...ஜேர்மனி..கனடா..இலங்கை..நோர்வே...என பலநாடுகளின் மாப்பிளை தேடினார்கள்.இரண்டாம் தாரமாக ஏற்க எந்த ஆண்மகனும் முன்வரவில்லை.

அண்ணா ஆண்பிள்ளைகளுக்கு எவ்வளவு சுதந்திர‌ம் கொடுக்குறோமோ அதேயளவு சுதந்திர‌ம் பெண்பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் அதாவது இரு குழந்தைகளையும் சின்ன வயதில் இருந்தே எந்த வித பாகுபாடு காட்டாமல் வளக்க வேண்டும் இதற்கும் மேற்கத்திய கலாச்சார‌த்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை...சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு எங்கள் க‌லாச்சார‌த்தையும்,பெண்கள் திருமணத்திற்கு முன் ஒருத்தரோடு உறவு வைத்தால் அதனால் வரும் பாதகங்களையும் சொல்லி வளர்க்க வேண்டும்...அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளை தப்பு செய்ய மாட்டார்கள்...ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் எது நல்லது,கெட்டது என்பதை அவர்கள் தாங்களாக உணர்வார்கள்...வீட்டுக்குள்ள பெண்களை பூட்டி வைத்தால் அவர்கள் சமயம் கிடைக்கும் போது பிழை விட‌ப் பார்ப்பார்கள் ஆனால் சின்னனில் இருந்து ஆண்,பெண் வித்தியாச‌மில்லாமல் வளர்ந்தவர்கள் மற்றவர்களோடு சோச‌லாய்த் தான் பழகுவார்கள் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எங்கேயாவது பெண்களை அடக்கி வளர்க்க வேண்டும் அல்லது நல்லது கெட்டது தெரியாமல் வளர்க்க வேண்டுமென சொன்னேனா? இல்லையே? ஒரு சிறு பிரச்சனையிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்பிள்ளைகள் தான்.....இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.....ஒரு ஆண் தவறுவிடுவததையும்...ஒரு பெண் தவறுவிடுவதையும்....சமூகம் வெவ்வேறு கண்களுடனேயே பார்க்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ எழுதிய ஓவ டோஸ் கதைதான் ஞாபகம் வருகின்றது. மனைவிக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்து அவா மேலைதேய பழக்கங்களுக்கு அடிமையாகி வீட்டைவிட்டு ஓடிவிட்டா, பிறகு தன் மகளை ஊரில் கொண்டு போய் கட்டுப்பாட்டுடன் வளர்க்க மகளும் வெறுத்துப்போய் கடிதம் எழுதி வைத்திட்டு போட்டா "அப்பா நீங்க செய்தது ஓவ டோஸ் அம்மாவுக்கும் எனக்கும் என்று"

பிள்ளைகளை சாதாரணமாக வளர்த்தால் சரி, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, அவர்களுக்களுடன் ஒரு நண்பனாக பழகி வந்தால் அவர்களும் எங்களுடன் தங்கள் பிரச்சனை மனம்விட்டு கதைப்பார்கள், அப்ப அவர்களுக்கு நல்லதை எடுத்து சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.