Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக உயர்சபையை அமைக்க அனைத்து கட்சிகளும் இணக்கம்: சித்தார்த்தன் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Siththarththan_150PL.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக உயர்சபையை அமைப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள தமிழரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், தமிழரக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் ரொலோவின் சார்பில் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி, சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி லண்டன் சென்றுள்ள போதும் இன்று பேசப்பட்டு எடுக்கப்படும் தீர்மானத்துக்கு தமது ஒப்புதல் இருக்கும் என்று தெரிவித்ததாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்

தமிழரக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டில் தமிழரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டிருந்தது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி திகழ்கின்றது என்று சம்பந்தன். தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தினை சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக கண்டித்திருந்தார் எனவே அது குறித்தும் இன்றைய கூட்டத்தில் பேசப்ப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழர் நலன்கருதி ஒருமித்த குரலை முன்னெடுப்பதற்காக உயர்மட்டக்குழு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் வெளியிட்டதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை வவுனியாவில் நின்று சொந்த மக்களை கொன்றவர்களுக்கு இன்று திடீர் ஞானம் பிறக்கிறது என்றால் அதற்கு உள்ள ஒரே காரணம்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கும்.. அதன் கீழ் போட்டியிட்டால்.. கதிரை கிடைக்கும் என்ற நிலையும் ஆகும்.

இதே சித்தார்த்தன்.. ரெலோ.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட விடுதலைப்புலிகளின் முன்மொழிவோட முன் வந்த போது அன்றைய பொழுதுகளில் அதனை எதிர்த்தவர். இது 1998 களில் நடந்த ஒன்று. இன்று இந்தப் பச்சோந்திகள்.. நமக்கு.. மக்களின் ஒற்றுமைக்காக.. ஒரே அணியில் நிற்கப் போகிறதாக கதையளக்கிறார்கள்.

இவர்களின் ஒற்றுமை.. விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உருவாக்கிக் கொடுத்த அந்த நற்பெயரின் பின்னால் நின்று.. தங்கள் பாராளுமன்றக் கதிரைகளையும் சிங்கள அமைச்சு பதவிகளையும் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளதே அன்றி.. தமிழ் மக்களின் மீது இவர்களுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை என்பதே யதார்த்தமான உண்மை..!

இதனை புலம்பெயர் மற்றும் தாயக மக்கள் தெளிவாகவே உணர்ந்து செயற்படுவதோடு.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்தின் பின்னால் ஒளிந்திருந்து ஆதாயம் தேட விளையும் பச்சோந்திகளையும் துரோகிகளையும் மக்கள் இனங்கண்டு நிராகரிக்க வேண்டும்..! இவர்களின் ஒற்றுமையோ.. ஓரணியோ மக்களுக்கு எனி வேண்டாம். செய்த துரோகங்களோ ஏராளம். இவர்களின் பசப்பு வார்த்தைகளில் மக்கள் மயங்கும் நிலை வேண்டவே வேண்டாம். இவர்கள் இப்படியே அரசியல் அனாதைகள் ஆக்கப்படுவதே இந்த பேராசை பிடித்த துரோகிகளுக்கு மக்கள் வழங்கும் சரியான தண்டனையாக இருக்க முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கூட்டமைப்பு , கூட்ட்மைப்பாக செயற்படுவதும், ஒரு சில தனி நபர்கள் கூட்ட்மைப்பின் சார்பில் தீர்மானம் எடுப்பதும் இதனால் தடுக்கப்படும்.

தமிழ் மக்களின் சனனாயக உரிமைக்காகப் போராடும் அமைப்பு , அமைப்பினுள் சனனாயகதைக் கொண்டிருப்பது, துரோகத் தனங்களை ,சுயலாபச் செயற்பாடுகளைக் குறைக்கும்.

தமிழத் தேசிய விடுதலையை நோக்கிச் சென்றவர்கள், தமது `துரோகத்தை` உணர்ந்து மீள மக்களின் விடிவு நோக்கிப் பயணிப்பது வரவேற்கத் தக்கது.

துரோகத்தை உணர்ந்தவர்களை மன்னிப்பதும் உள் வாங்குவதும் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலைப் பல முள்ளதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நீண்ட கால துரோகிகளின் தீய நோக்கங்களை மக்களுக்கு பலமாக இனங்காட்டும் சந்தர்ப்பவாதிகளே விடுதலைப்புலிகளுக்கும் வெற்றிக்கு அறிவுரை கூறியவர்கள். அன்று என்ன விடுதலைப்புலிகளுக்கு இவர்களால் பரிசளிக்கப்பட்டதோ.. அதே நாளை.. இந்த நீண்ட கால துரோகிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் கொழுத்த அரசியல் முதலைகளாக வளர்த்தெடுப்பதன் பயனை மக்களுக்கு காட்டும். அது.. மக்களை மீண்டும் ஒரு பெரிய பேரழிவுக்குள்.. அரசியல் விடிவற்ற துரோகத்தனத்துக்குள் சிக்க வைக்கும்..!

3 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தன் சாணக்கிய அரசியல் செய்வதாகச் சொன்னவர்களும் இவர்களே..! இன்று...?????! :):icon_idea:

Edited by nedukkalapoovan

கருணா துரோகி ஆகும் போது சித்தார்த்தன் தமிழ்த்தேசியாவாதி ஆகிவதில் தவறில்லை ஆனால் கருணா புலிகள் அமைப்பில் இருக்கும் போது படுகொலை செய்யப்பட்டவர்களும் , சித்ததார்த்தனால் படுகொலைசெய்யப்பட்டவர்களும் தற்ப்போது ஆவியாக அலைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் ஈழ நாசம் என்ற தளத்தில் வாந்தி எடுத்த பயல் .. இந்த ஆள் எப்பூடி இங்க.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கருணா துரோகி ஆகும் போது சித்தார்த்தன் தமிழ்த்தேசியாவாதி ஆகிவதில் தவறில்லை ஆனால் கருணா புலிகள் அமைப்பில் இருக்கும் போது படுகொலை செய்யப்பட்டவர்களும் , சித்ததார்த்தனால் படுகொலைசெய்யப்பட்டவர்களும் தற்ப்போது ஆவியாக அலைகிறார்கள்.

கருணா.. பிள்ளையான்.. புலிகள் அமைப்பில் இருந்த போது செய்த கொலைகளை விட.. சிங்கள அரசோடு இணைந்து பணத்திற்கு பதவிக்கு பகட்டு வாழ்க்கைக்காக செய்த கொலைகள் அதிகம்..! அதை ஏன் மறைக்கிறீர்கள்..????!

சித்தார்த்தன்.. சங்கரி.. வரதராஜப் பெருமாள்.. டக்கிளஸ்.. இவர்கள் எல்லாம் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் தலைவர்களாம். இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து.. 1987 - 90 வரை தீர்மானித்த தமிழர்களின் தலைவிதியே போதும்.. எப்படியான தலைவிதி எமக்கு எதிர்காலத்தில் எம்மிடம் கையளிக்கப்படப் போகிறது என்பதை அறிய..!

இதுபோதாதென்று.. சம்பந்தனும்.. சுமந்திரனும்.. சுரேஸும் மண்டை கழன்று போய் ஏதேதோ உளறி சர்வதேச அரங்கில் தமிழினத்தை துகில் உரிந்து கொண்டிருக்கிறார்கள்..! இத்தனை மக்களின் உயிர்ப்பலி கூட அவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. சிங்கள அரச.. கொடி.. விசுவாசம் மட்டும் முன்னிற்கிறது...! இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை உண்மையில் தீர்மானிக்கக் கூடிய தலைவர்கள் தானா..???!

அதுபோக.. சித்தார்த்தன்.. சங்கரி.. வரதராஜப் பெருமாள்.. என்ற இந்தத் துரோகிகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான.. உப்புச்சப்பற்ற.. கூட்டிணைவு.. சம்பந்தனையும் தமிழரசுக் கட்சியையும் எந்த வகையில் பாதிக்கும்...????! தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பையே தான் அது பாதிக்கச் செய்யப் போகிறது.

இப்போதும்.. மாவையும் சம்பந்தனும்.. சுமந்திரனும்.. தமிழரசுக் கட்சிக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைக் கூட சிறீலங்கா சிங்கள தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய முன் வருகிறார்கள் இல்லை.

இந்த நிலையில்.. இந்த துரோகிகளின் இணைவு.. சம்பந்தனை எந்த வகையில் கட்டுப்படுத்தும். இது துரோகிகளுக்கு வெள்ளை வேட்டி உடுத்தி... அரசியல் களத்தில் இறக்கி.. தமிழ் மக்களை அவர்களின் உரிமைகளை.. எதிரிக்கும் உலகிற்கும் பதவிக்காக தாரைவார்க்கவே உதவும். அதற்கான முன்னேடியாகவே இது பார்க்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதுகாக்கவும் உயிர்ப்போடு போனவும் வேண்டின்.. இந்த துரோகிகள் அமைக்கும்.. உயர் சபைக்கு.. அதி உச்ச சபை அமைக்கப்பட வேண்டும். அதில் புலம்பெயர் தமிழ் மக்களும்.. இளையோர் அமைப்புக்களும்... தாயக.. புலம்பெயர் அரசியல் சாரா சமூக தலைவர்களும்.. உண்மையான கல்விமான்களும்.. வரலாற்றியலாளர்களும்.. விழுமியலாளர்களும் இடம் பெற வேண்டும்.

அதி உச்ச சபை பரிந்துரைகளுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும்.கட்டுப்பட முடியாதவர்கள்.. பகிரங்கமாகவே தமிழ் மக்கள் விரோதிகள் துரோகிகள் என்று கருதப்படுவார்கள். அவர்களை தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் புறக்கணிக்கவும் தனிமைப்படுத்தவும்.. அரசியல் அனாதைகளாக்கவும் பாடுபடுவார்கள்.

அதி உச்ச சபை பரிந்துரைகளின் கீழ்...தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. முதலில் அரசியல் கட்சியாக பதியப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள்.. ஆளாளுக்கு கட்சி வளர்க்கும் பணியை விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த காலத்தின் தேவைக்கு ஏற்ப.. அதற்கான பொதுக் கொள்கை வகுத்து அதன் கீழ் செயற்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு என்றான தனியான கட்சி யாப்பும்... வழிமுறைகளும்.. ஒழுக்கக் கோவைகளும் தீர்மானிக்கப்பட்டு அதன் கீழ் அவற்றை ஏற்றுக் கொண்டு.. எல்லோரும் உண்மையான ஜனநாயக வழியில் மட்டும் செயற்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள... முன்னாள்.. இன்னாள் ஆயுத தாரிகள்.. ஆயுதங்களை ஆயுதக் குழுக்களை செயற்படுத்துவதை முற்றாக நிறுத்த வேண்டும். மக்களைப் படுகொலை செய்வது.. துன்புறுத்துவது.. கப்பம் வாங்குவது.. கடத்தல் செய்வது.. இவற்றை முற்றாக கைவிட்டு.. மக்களிடம் தவறுகளுக்கு பகிரங்க மன்னிப்புக் கோருவதோடு.. மக்களின் நலன்நோக்கிய திட்டங்களில் கைவைக்காது.. ஆயுதக்குழு உறுப்பினர்களுக்கு மறுவாழ்வளித்து.. அவர்களை உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும்.

மிதவாதி என்று கூவித்திரியும்.. சந்தர்ப்பவாதிகளான சங்கரி... போன்றவர்கள்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உச்ச சபை தீர்மானிக்கும்.. பொதுக் கொள்கைக்கு அமைய கருத்துச் சொல்ல வேண்டுமே தவிர.. அவரா நினைச்சப்படி.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரின் கீழ்.. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆள்பிடிக்கவோ.. வாக்குச் சேர்க்கவோ.. சந்தர்ப்பவாத முயல் அடிக்கவோ முயலக் கூடாது. இது மற்றவர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக சம்பந்தனுக்கும்.. சுமந்திரனுக்கும் பொருந்தும்..!

தமிழ் தேசிய கூட்டமைப்பையும்.. அதன் இருப்பையும் வளர்ச்சியையும்.. பாதுகாக்க.. அதன் மூலம் தமிழ் மக்களுக்கு காத்திரமான அரசியல் சம உரிமை பெறப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு அதி உச்ச சபை அமைக்கப்பட்டு.. அதில் தாயக.. புலம்பெயர் மக்களின்.. இளைய சமூகத்தினரின்.. பங்களிப்பும்.. தலைமைத்துவமும்.. உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். இன்றேல்.. துரோகிகளின் கையில் சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. அதன் ஆரம்பகால கொள்கை இலட்சியம் எல்லாம் களைந்து.. சுக்கு நூறாகி.. சிதைந்து சின்னாபின்னமாவது கண் முன்னே இன்னும் சில காலத்துள் நடப்பதைக் காண நேரிடும்..! அதன் பின் இந்த நிகழ்வுகளுக்காக வருந்தி எந்தப் பயனும் இல்லை. அவை எதிரிகளுக்கே அனுகூலமாகி நிற்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சித்தார்த்தன் சுய புத்தியை இழந்து இந்தியப் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக நீண்டகாலம் இருந்து வந்தது தெரிந்ததே!

சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி போன்ற சுயபுத்திக் குறைபாடுடைய கைகூலிகளை கொண்டிராத, தவறான முடிவுகளை தடுத்து நிறுத்தும் வலுவுடைய, தெளிவாக எழுதப்பட (சம்பந்தன், சுமந்திரன், ஆனந்தசங்கரி போன்ற அரைவேக்காட்டு சட்டத்தரணிகள் இல்லாத குழுவால் எழுதப்பட) வரைபுகளை உடைய ஆலோசனை சபை இக்காலத்திற்கு தேவைப்படுகிறது.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே சித்தார்த்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் ஆதரவும் அதற்கு இருந்தது. ஆயினும் சில விடயங்களில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்த முயற்சி கைகூடவில்லை.

தற்பொழுது புளொட் இயக்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருப்பது நல்ல விடயமே. வரவேற்கத்தக்கதே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒவ்வொரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தவேயே. அவற்றை எல்லாம் இப்பொழுது ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

பல தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து போவதன் ஊடகாவே ஓரளவு உரிமைகளை என்றாலும் வென்றெடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு , கூட்ட்மைப்பாக செயற்படுவதும், ஒரு சில தனி நபர்கள் கூட்ட்மைப்பின் சார்பில் தீர்மானம் எடுப்பதும் இதனால் தடுக்கப்படும்.

தமிழ் மக்களின் சனனாயக உரிமைக்காகப் போராடும் அமைப்பு , அமைப்பினுள் சனனாயகதைக் கொண்டிருப்பது, துரோகத் தனங்களை ,சுயலாபச் செயற்பாடுகளைக் குறைக்கும்.

தமிழத் தேசிய விடுதலையை நோக்கிச் சென்றவர்கள், தமது `துரோகத்தை` உணர்ந்து மீள மக்களின் விடிவு நோக்கிப் பயணிப்பது வரவேற்கத் தக்கது.

துரோகத்தை உணர்ந்தவர்களை மன்னிப்பதும் உள் வாங்குவதும் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலைப் பல முள்ளதாக்கும்.

அப்ப கருணாவையும் ஏற்பீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் படித்தபோது "Rearranging Deck Chairs On The Titanic" என்பதுதான் நினைவுக்கு வந்தது.. இவர்கள் தொடர்ந்து தலைமையில் இருக்கும்வரை தமிழ்த் தேசியம் நலிவடைந்து, குறுகிக் காணாமல் போகும்..

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தேசியகட்சியில் இருக்கும் தமிழ் ஆயுதகுழுக்களைவிட தமிழ்தேசியத்தில் இருக்கும் ஆயுததாரிகள் மேல்.....

இந்தச் செய்தியைப் படித்தபோது Rearranging Deck Chairs On The Titanic என்பதுதான் நினைவுக்கு வந்தது.. இவர்கள் தொடர்ந்து தலைமையில் இருக்கும்வரை தமிழ்த் தேசியம் நலிவடைந்து, குறுகிக் காணாமல் போகும்..

நான் சொல்ல வாறதும் இதுதான்... சம்பந்தனாலும் கூட்டமைப்பாலும் தமிழர்களுக்கு தற்போது ஏற்படுத்திய பாதிப்புகளிலை இருந்து தமிழ் மக்கள் வெளிவரவே நீண்டகாலம் செல்லலாம்... கூட்டமைப்புக்குள் இப்ப ஏற்படுத்த பட இருக்கும் மாற்றங்கள் கூட எதையும் மாற்றப்போவது இல்லை...

இரண்டு வருசத்துக்கு முன்னமும் இதை பற்றி கதைச்சம் , இப்பவும் கதைக்கிறம் எண்டது கேவலமானது... கூட்டமைப்பின் சாதனைகளுக்கு இதுவே சாட்ச்சி...

கருணா.. பிள்ளையான்.. புலிகள் அமைப்பில் இருந்த போது செய்த கொலைகளை விட.. சிங்கள அரசோடு இணைந்து பணத்திற்கு பதவிக்கு பகட்டு வாழ்க்கைக்காக செய்த கொலைகள் அதிகம்..! அதை ஏன் மறைக்கிறீர்கள்..????!

சரி அப்போ சித்தார்த்தன் தமிழ்த்ததேசியயத்தின் இணைந்த பின் பல கொலைகளை செயது சமன்நிலையை கொண்டுவரட்டும்.

அப்ப கருணாவையும் ஏற்பீங்களா?

சுமந்திரனை ஏற்க்கும் போது கருணாவையும் சம்ந்தன் ஜயா ஏற்பார் ஆனால் கேனைத்தளப்அதி கருணா கூட்டமைப்பை ஏற்பானா என்பதுதான் கேள்விக் குறி :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கருணா.. சித்தார்த்தன்.. டக்கிளஸ்.. வரதராஜப்பெருமாள்.. சங்கரி.. இவர்கள் எவருமே வெவ்வேறானவர்கள் அல்ல. இவர்கள் எல்லோருமே ஒரே வகையினர் தான்.

சித்தார்த்தன் ஏலவே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயரால் செய்த படுகொலைகள்.. ஏராளம் இருக்க இன்னும் படுகொலைகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் அளவிற்கு எமது மக்கள் நாதியற்றவர்களானது தான் கவலைக்குரிய விடயம்.

இந்த நிலையை சிங்களத்துக்கு எந்த வேளையிலும் விலை போகக் கூடிய.. சம்பந்தனோ.. சுமந்திரனோ.. சுரேஸ் பிரேமச்சந்திரனோ.. மாற்ற முடியாது. புலம்பெயர்.. தாயக.. இளைய தலைமுறை ஒன்றே மாற்ற முடியும்..!

அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.. ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும்.

இந்தத் துரோகிகளை நம்புவதைக் காட்டிலும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சம்பந்தன் பலவீனமாக்குவாராக இருந்தால்.. அவரின் தமிழரசுக் கட்சியை பலவீனமாக்கி.. பலமான தமிழ் தேசிய அமைப்பை அரசியல் களத்தில் உருவாக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதற்கு தயாராக்கப்படுவது அவசியமாகும்..!

Edited by nedukkalapoovan

தமிழர்களை எல்லாம் பயங்கரவாதிகள ஆக்கிவிட்டு போய் தொலைந்துவிட்டார்கள் .எங்களையும் உலகம் மனிதர்களாக பார்க்க வைக்கும் செயற்பாடுகள் தான் இப்போ நடந்துகொண்டிருக்கின்றது .இவர்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயற்பட்டால் தான் ஏதாவது விடிவு எமக்கு வரும் .

புலம் பெயர்ந்த தேசத்தில் வாலுகள் கொஞ்ச காலத்திற்கு ஆடிக்கொண்டுதான் இருக்கும்.இந்த வாலுகள் கொட்டம் அடக்கும் ஒரு நடவடிக்கையாக தான் பிரிட்டனின் நாடு கடத்தல் .பாவம் சில அப்பாவிகள் இதில் பலியாகிப்போவது .

சுமந்திரன் மிக அழகாக சொன்னார் .ஒரு பத்து லட்சம் தமிழர்கள் போராட்டத்தை காரணம் காட்டி நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள் ,இன்னுமொரு ஆயுத போராட்டம் தொடங்கினால் அடுத்த பத்து லட்சம் ஓட இலங்கை சிங்கள நாடாக மாறிவிடும் .

நாட்டைவிட்டு ஓடிவந்து அங்கு தமிழனின் இருப்பையே இல்லாமல் ஆக்கி வெறும் மண்ணுக்கு மட்டும் போராட போடுகின்றான் புலம் பெயர் தமிழன்,அதற்குள் தலைவர் புலம் பெயர் மக்களிடமே போராட்டத்தை ஒப்படைத்தவராம் ,உலகமே செக் மேற் வைத்த பின் வழியில்லாமல் சொன்ன வார்த்தைகள் அவை .

சுமந்திரனுக்கும் சம்பந்தருக்கும் புலம்பெயர்ந்த ஆட்களில் தான் கோபம்.ஏனெனில் அவர்கள் தான் கேள்வி கேட்கிறார்கள்.விமர்சிக்கிறார்கள்.

வடக்கு,கிழக்கு மக்கள் வாய்திறந்து பேசமுடியாத நிலையில் தான் தோன்றித்தனமாகவும் மற்றையவர்களின் கைப்பொம்மையாகவும் தான் கூட்டமைப்பு செயற்படுகிறது என்பதை சிறுவனே ஊகிக்க முடியும்.

இதற்குள் அல்லக்கைகள் சித்த்தார்த்தன் போன்ற ஜந்துக்களையும் சேர்த்து உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக்கண்ணன் நிலைக்கு தான் தள்ளப்படுவார்கள்.அரசின் சூழ்ச்சியாக இவர்கள் கூட்டமைப்புக்குள் அனுப்பப்பட்டு குழப்பத்தை /பிரிவுகளை ஏற்படுத்த அனுப்பப்பட்டிருக்கலாம்.

.புலம் பெயர்ந்த தேசத்தில்வாலுகள் கொஞ்ச காலத்திற்கு ஆடிக்கொண்டுதான் இருக்கும்.இந்த வாலுகள் கொட்டம் அடக்கும் ஒரு நடவடிக்கையாக தான் பிரிட்டனின் நாடு கடத்தல் .பாவம் சில அப்பாவிகள் இதில் பலியாகிப்போவது .

அது சரி...

உங்கட கோமாளித்தனத்தை இன்னும் நிப்பாட்ட இல்லையே... ???

பிரித்தானியா என்னவோ தமிழர்களை மட்டும் தான் திருப்பி அனுப்புது எண்டு யார் அண்ணை உங்களுக்கு சொன்னது..?? விசயம் தெரியாமல் விழுத்த மாட்டிலை குறி சுடுகிறதே உங்கட வேலையா போச்சு... :D

தமிழர்களை எல்லாம் பயங்கரவாதிகள ஆக்கிவிட்டு போய் தொலைந்துவிட்டார்கள் .

பழைய PLOTE காறர் எல்லாம் என்ன தியாகிகள் பட்டத்தோடையே ஒளிஞ்சவை...?? உந்த சீசன் இப்ப மாறி வேறை வந்திட்டுதண்ணை... ஆயுதம் தூக்க வைத்து ஆட்ச்சியை மாற்றுறதுதான் இப்ப உலக அரசியல்... செய்திகளை படிக்கிறதே இல்லை போல...

Edited by தயா

அது சரி...

உங்கட கோமாளித்தனத்தை இன்னும் நிப்பாட்ட இல்லையே... ???

பிரித்தானியா என்னவோ தமிழர்களை மட்டும் தான் திருப்பி அனுப்புது எண்டு யார் அண்ணை உங்களுக்கு சொன்னது..?? விசயம் தெரியாமல் விழுத்த மாட்டிலை குறி சுடுகிறதே உங்கட வேலையா போச்சு... :D

பழைய PLOTE காறர் எல்லாம் என்ன தியாகிகள் பட்டத்தோடையே ஒளிஞ்சவை...?? உந்த சீசன் இப்ப மாறி வேறை வந்திட்டுதண்ணை... ஆயுதம் தூக்க வைத்து ஆட்ச்சியை மாற்றுறதுதான் இப்ப உலக அரசியல்... செய்திகளை படிக்கிறதே இல்லை போல...

இதுக்குத் தான் தயா யாழ் கள பக்கம் வர வேணும் என்கிறது, அர்ஜுன் அண்ணாச்சி காமடி பண்ணவே பிறந்தவர் அவரைப் போய் நிப்பாட்டச் சொல்லுறியலே

இதுக்குத் தான் தயா யாழ் கள பக்கம் வர வேணும் என்கிறது, அர்ஜுன் அண்ணாச்சி காமடி பண்ணவே பிறந்தவர் அவரைப் போய் நிப்பாட்டச் சொல்லுறியலே

உங்களுக்கு நக்கல் கூடிப்போச்சுது...

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை ஏற்க்கும் போது கருணாவையும் சம்ந்தன் ஜயா ஏற்பார் ஆனால் கேனைத்தளப்அதி கருணா கூட்டமைப்பை ஏற்பானா என்பதுதான் கேள்விக் குறி :lol::icon_idea:

கருணா கூட்டமைப்பை ஏற்க மாட்டார் என சொல்கிறீர்கள் பிறகு எப்படி அவரை கேனை என்கிறீர்கள் :lol:

உந்த புளட்காரன் தான் தங்கட இயக்கதிலயும் செயற்குழு என்று ஒண்டை வைச்சு கொண்டு கன பேரை டம் பண்ணினவை, வாமன் ஒரு பக்கத்தால,கந்தன் ஒரு பக்கத்தால் என்டு போட்டு தள்ளினவை, உங்கயும் ஏதோ அழிவு வைக்க போறான் போல கிடக்கு. சம்பந்தர் கவனம்

கருணா கூட்டமைப்பை ஏற்க மாட்டார் என சொல்கிறீர்கள் பிறகு எப்படி அவரை கேனை என்கிறீர்கள் :lol:

கரிநாகம் புலிகளில் இருந்து பிரியும் போது சொன்ன குற்றசாட்டில் புலிகள் அமைப்பில் கிழக்கு பகுதி புலிகளுக்கு சதந்திரமில்லை என்று ஆனால் சிங்களவனின் கையில் கருணா கேவலமாக இருக்கான் அதனால் தான் கேனை என்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே சித்தார்த்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் ஆதரவும் அதற்கு இருந்தது. ஆயினும் சில விடயங்களில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்த முயற்சி கைகூடவில்லை.

தற்பொழுது புளொட் இயக்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருப்பது நல்ல விடயமே. வரவேற்கத்தக்கதே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒவ்வொரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தவேயே. அவற்றை எல்லாம் இப்பொழுது ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

பல தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து போவதன் ஊடகாவே ஓரளவு உரிமைகளை என்றாலும் வென்றெடுக்க முடியும்.

எவளவு பட்டும் நீங்கள் தெளியவில்லை.........

இனி அதற்கு சந்தர்ப்பமே இல்லையா?

இவங்கள் பிரிஞ்சு பிரிஞ்சு இருந்தா அவன் இதை அடிச்சான் அவன் இதை சுர்ட்டினான் என்று மாறி மாறி சொல்லியாவது சனம் கொஞ்சம் விழிப்படையும்.

ஒன்றாய் சேர்ந்தால்? மொத்த இனத்தையும் ஒரே விலையில் எங்காவது விற்கலாமா? இந்த திட்டம்தான் முன்பு கைகூடாமல் இருந்து இனியாமல் இருந்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.