Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Malta ஒரு புதிய அனுபவம் - 08

Featured Replies

  • தொடங்கியவர்

எங்க போனாலும் உந்த கறியை கண்டால் விட மாட்டினம் எங்கன்ட சம்சுகள்........தொடருங்கள் பலவன்

உண்மைதான் புத்தன். உங்கள் அனுபவமும் பேசுகிறது. நன்றி உங்கள் கருத்துக்கு.

  • Replies 93
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பயணம் 06

அன்று இரவு களைப்பு மிகுதியால் விரைவாகவே உறங்கிவிட்டேன் போலும்.

காலையில் மனைவி Gym இற்கு போக எழுப்பும்போது தான் இரவு தூங்கினதே எனக்கு தெரியும். இன்று அவளுக்கு ஷாப்பிங் போகும் நாள் என்று அவளின் முகத்திலேயே தெரிந்தது. காலையில் இருந்தே குழைந்து கொண்டே இருந்தாள். எல்லாமே ஓடி ஓடி செய்தாள்.

காலை சாப்பாட்டை போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். கொஞ்சி கொஞ்சி பேசினாள். இப்படியே நடப்பாள் என்றால் ஒவ்வொரு நாளும் ஷாப்பிங் போகலாம் போல இருந்தது.

அன்றைய நாளின் திட்டத்தின் படி Malta வின் ஒரு பெரிய ஷாப்பிங் கொம்ப்ளெக்ஸ் The Point இற்கு போவதாக முடிவு செய்தோம்.

img7223hh.jpg

வலாட்டாவுக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது அந்த அழகான The Point ஷாப்பிங் சென்டர். Malta நாட்டின் பணக்கார குடும்பங்கள் வாழும் இடத்தின் நடுவே அந்த வர்த்தக மையம் இருந்தது.

img0610cf.jpg

கட்டட அமைப்பு வீதிகள் எல்லாமே பணத்தின் வெளிப்பாடு அங்கே அப்பட்டமாக தெரிந்தது. நான்கு அடுக்குகளை கொண்ட அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இற்கு மூன்று அடுக்குகள் நிலத்தின் கீழே வாகன தரிப்பிடம்.

img0599tr.jpg

கடற்கரையை ஒட்டி அமைக்கபட்டிருந்த வர்த்தகமைய கட்டடம் ஒரு அழகாய் கொடுத்தது. இருந்தும் மனைவி உள்ளே போய் எனக்கு வைக்க போகும் பண வேட்டை நினைத்து அந்த அழகில் மனம் லயிக்கவில்லை என்பது என்னமோ உண்மைதான்.

img0608l.jpg

அந்த கட்டட தொகுதியின் மையத்தில் அமைக்கபட்டிருந்த சிறுவர் விளையாட்டு இடத்தில் மகனை விளையாட விட்டுவிட்டு, ஒரு கடை தொகுதிக்குள் நுழைந்தோம். மனசோ திக் திக் என்றது. எல்லாமே Branded Items . மனைவியின் கண்கள் எல்லா இடமுமே மேய்ந்தன. மாலை நேரம் Malta வின் இன்னொரு அழகிய தீவான கொசோ விற்கு போக வேண்டி இருப்பதால் மனைவியை கொஞ்சம் விரைவுபடுத்தினேன்.

அவளோ நீங்கள் போய் மகனுடன் இருங்கள் நான் ஆறுதலாக ஷாப்பிங் முடித்து விட்டு வாறன் என்றாள்.

அப்படா விட்டால் காணும் என்று நானும் புறப்பட

இஞ்சேரப்பா உங்கட கிரெடிட் காட்டை ஒருக்கால் தந்திட்டு போங்கள் என்றாள் கெஞ்சலாக.

என்ன செய்வது கொடுத்து தொலைத்தேன். (அதன் குறியீட்டு எண்ணை, நோர்வேயில் வாகனத்துக்கு எண்ணை விடும் பஞ்சியில் அவளிடம் கொடுத்து கொடுத்து அவள் மனபாடமாகவே வைச்சிருகிறாள்).

img0623a.jpg

மகன் விளையாடி கொண்டிருக்க அங்கே இருந்த free Wifi இல் யாழை மேய்ந்தேன். லண்டனில் மகிந்தவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் களைகட்டி இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.

இரண்டு பெரிய்ய்ய்யா பைகளை தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் மனைவி.

என்னப்பா பார்த்து கொண்டிருகிறீங்கள் வந்து ஒரு கை பிடியுங்கவன். (அலுவல் முடிஞ்சு தானே சொல்லுவாள் )

img0625es.jpg

அந்த வர்த்தக மையத்தை ஒட்டி அழகான வடிமைப்புடன் கூடிய ஒரு Arc கடலை ஒட்டி அமைக்கபட்டிருந்தது. அதிலே ஒரு மேம்பாலம். அங்கிருந்து கடலை பார்ப்பதே ஒரு அழகு தான். அந்த மேம்பாலத்தின் முடிவில், நாங்கள் ஊரிலே கோயிலில் முடிச்சு கட்டி விடுவது போல பூட்டுகள் தொங்க விட்டிருந்தார்கள்.

img0633ya.jpg

வெள்ளைக்காரர் கூட மூட நம்பிக்கையில், தங்கள் எண்ணம் நிறைவேற பூடுகளை பூட்டிய படி அங்கே தொங்க விட்டிருந்தார்கள். நிறைய பூட்டுகள் துருபிடித்திருந்தன. அவர்களின் எண்ணங்கள் நிறைவேறவில்லை போல.

img0624gl.jpg

மதியம் ஒருமணியை தாண்டி இருந்தது. எனக்கு லேசாக பசித்தது. நல்ல உணவகத்துக்கு போக நீண்ட தூரம் போகவேண்டி இருந்தது. அருகிலே ஒரு Burger King .

மனைவி ஆரம்பத்திலேயே வர மறுத்தாள் (junk Food அவளுக்கு பிடிக்காது) இருந்தும் எனக்கு மகனுக்கும் ரொம்ப பிடிக்கும் அவளை கேட்காமலே ஆர்டர் பண்ணியும் விட்டோம்.

img0632tn.jpg

இரண்டு கிங் சைஸ் மீல்ஸ் வாங்கினால் ஒரு துவாய் இலவசமா என்று வேற போட்டிருந்தான். விடுமா மனசு இரண்டு கிங் மீல்ஸ் மகனுக்கு பேபி மீல்ஸ் வாங்கி கொண்டு வெளியில் வந்து வீதி ஓரமாக போடபடிருந்த இருக்கையில் அமர்ந்தோம். கொளுத்தும் வெயிலையும் மீறிய ஒரு வெக்கை.

திரும்பி பார்த்தேன். மனைவி தான் கொதிச்சு கொண்டிருந்தாள்.

Junk food உடம்புக்கு கூடாது, இதிலே கிங் மீல்ஸ் வேறையா. ஒரு துவாய்க்காக உடம்பை பழுதாக்க போறீங்களா என்று ஒரு இருபது நிமிட விரிவுரை.

அவள் பேசும் போது சாப்பிட வெளிகிட்ட என்னையும் கையை தட்டிவிட்டு ஒரே பரப்புரை.

நான் இங்கே ஒருத்திவாய் கிழிய கத்துறன் அவருக்கு சாப்பாடா என்று வேற. அவள் பேசி முடிய எனக்கு பசியும் போய்விட்டது.

மகனோ இதை ஒன்றுமே கணக்கில் எடுக்காமல் அவன் மேலை சாப்பிட்டு விட்டு தெரிந்து தான் கேட்டானோ தெரியாமல் கேட்டானோ .

எதுக்கப்பா அம்மா இப்படி பேசுறா என்றான்.

திரும்பவும் ஒரு இருபது நிமிட விரிவுரை, என்னை மாதிரியே மகனை கெடுக்கிறேனாம். ( யாழ் கள கணவன்மாரே எப்படி தான் நீங்கள் எல்லாம் சமாளிக்கிறீங்களோ)

திரும்ப கொண்டு போய் துவாயை கொடுத்து விட்டு வர சொன்னாள்.

img7282p.jpg

எங்காவது போய் கடலிலே விழ வேண்டும் போல இருந்தது (சாக இல்லை குளிக்க )

கொசோ தீவுக்கு போகும் வழியில் மேல்லிஹா கடற்கரை ஒரு அழகான ஆழம் குறைந்த ஒரு கடற்பரப்பு.

img73001.jpg

எண்ணற்ற வெள்ளை மங்கைகள் தங்கள் பொன்னிறமேனி காட்டி வெய்யிலில் படுத்திருந்தார்கள். என்ன தான் மனைவி பக்கத்திலே வந்தாலும் கண்கள் அவர்களை நோக்கி போவதை தடுக்கவும் முடியவில்லை. என் கோப மனைவி என் கையை கிள்ளியும் மனசு அலை பாய்ந்தது.

img7295g.jpg

ஒரு குடையும், படுக்கையும் வாங்கி மனைவியையும் மகனையும் உட்கார வைத்துவிட்டு, காற்சட்டையை மாற்றி கொண்டு ஓடிபோய் கடலில் விழுந்தேன். இனி அங்கிருந்து மனைவியை பார்க்கும் சாக்கில் எல்லாரையும் பார்க்கலாம்.

எனக்கு சற்று தொலைவில் ஒரு லண்டனில் இருந்து வந்த தமிழ் குடும்பம், லண்டன் திங்கள் செவ்வாய் விடுமுறையை கொண்டாட அங்கு வந்திருந்தார்கள். மனைவிக்கு தண்ணியால் அள்ளி எத்தி நனைத்து கொண்டிருந்தார். இரண்டு மகன்களும் அம்மா மேல் தண்ணி எத்தி கொண்டிருந்தார்கள்.

அருகில் சென்று அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். முதன் முறையாக Malta வந்திருந்தார்கள் என்னை போலவே. வந்த இடத்திலும் ஒரு தமிழரை கண்ட சந்தோசம்.

img7224i.jpg

ஆசை தீர நீந்தி விட்டு Burger கிங் தந்த துவாயால் துவட்டினேன். (மனைவிக்கு செல்ல கோபம் ஏறட்டும் என்று)

ஓடி வந்து அவள் துவாயை பறிக்க எத்தனிக்கும்போது அவளை கட்டி அணைத்தேன்.

மணலில் விழுந்தேன், நாங்கள் விழுந்த போது எழுந்த மண் துணிக்கைகள், அருகில் மேலாடையை கூட கழற்றிவிட்டு படுத்திருந்த ஒரு வெண்ணிற மகியின் பொன்னிற மேனியில் பட்டு தெறித்தது.

img7303c.jpg

பயணம் தொடரும் ....

அழகான படங்களோடு சேர்ந்த தொடர் 6 இணைப்பிற்கு நன்றி பகலவன்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசியோட சண்டை பிடிச்சதை கதைகளை குறைத்து போட்டு மற்ற கதைகளை சொல்லுங்கோ பார்ப்பம்...சி என்ன பழக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசியோட சண்டை பிடிச்சதை கதைகளை குறைத்து போட்டு மற்ற கதைகளை சொல்லுங்கோ பார்ப்பம்...சி என்ன பழக்கம்

ச்..சா.....இன்னும் கிளுகிளுப்பான கட்டம் வருமெண்டு பார்த்துக்கொண்டிருக்கேக்கை.....குறுக்காலை வந்து குளப்புறான் பாவி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ச்..சா.....இன்னும் கிளுகிளுப்பான கட்டம் வருமெண்டு பார்த்துக்கொண்டிருக்கேக்கை.....குறுக்காலை வந்து குளப்புறான் பாவி :icon_mrgreen:

குமாரசாமி அண்ணே , மற்ற குடும்பத்தில என்ன நடக்குது என்று பார்க்கிறதுக்கே இருக்கின்றீர்கள் போல ..... :D

பகலவன் , இந்தபகுதி என்னும் படிக்கவில்லை படித்தது எனது பகிர்வு எழுதுவேன் . :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், பகலவன்!

வீட்டுக்கு, வீடு வாசற்படி என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்!

உங்கட, வாடகைக் கார்க்கண்ணாடி, Tint பண்ணியிருக்குப் போல! :D

வணக்கம் பகலவன்

இன்று தான் உங்கள் பதிவை முழுமையாக வாசிக்க முடிந்தது.நேரடியாகவே மோல்ட்டாவில்பயணம் செய்தது போன்ற உணர்வு.

எல்லாம் சரி உங்கள் மனைவி யாழ் வாசிப்பதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி உங்கள் மனைவி யாழ் வாசிப்பதில்லையா?

அப்படி வாசித்தாலும் இதிலபெரியகுற்றம் ஒன்றுமில்லைதானே....பிள்ளைகளுக்கு முன்னால் மனைவிக்கு முத்தம் கொடுக்கிறளவுக்கு நாம்முன்னேறியிருக்கிறாம் தானே...மணிவாசகன்......பகலவன் தொடருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வாசித்தேன்.அந்த மாதிரி இருக்கு உங்கள் பயனம்.அது சரி யாழில் எழுத வந்தாலே எல்லாருக்கும் நகைசுவை உணர்வு அருவியாய் கொட்டுது. :)

பகலவன் அண்ணா, நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுக்கு நல்ல நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் உள்ளது. உங்கள் பயணம் எழுதி முடிய அப்படியே கைவிடாமல் வேறு ஏதும் எழுதுங்கள். :)

சரித்திர கதைகள் வாசிப்பீர்களா? மனைவியுடனான காதல் காட்சிகள் அந்தமாதிரி இருக்கு அதுதான். :D (அதையும் விஞ்சி விடும் போலிருக்கு :icon_mrgreen:) கதையின் ஒவ்வொரு பாகத்திலும் அதிகரிச்சுக்கொண்டு வேற வருது. :D கடைசியில குமாரசாமி அண்ணாவை திருப்தி படுத்தி விட்டு தான் போவியள் போலிருக்கு. :lol::icon_idea:

நானும் தமிழரசு அண்ணா, மணிவாசகன் அண்ணா கேட்ட கேள்வியை கேட்க இருந்தனான். :lol: :lol: அதற்கு பதில் ஏற்கனவே எழுதியிருப்பதால் கேட்கவில்லை. :rolleyes:

Edited by துளசி

.

துளசிப்பையா.. துளசிப்பையா...

பகலவன் சாண்டில்யனின் சிஷ்யப்பிள்ளை...

துளசிப்பையா... :)

.

துளசிப்பையா.. துளசிப்பையா...

பகலவன் சாண்டில்யனின் சிஷ்யப்பிள்ளை...

துளசிப்பையா... :)

அண்ணா, நான் பெண் என்று வேறொரு திரியிலும் உங்களுக்கு சொன்னனான். திரும்ப ஞாபகப்படுத்திறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

:D :D :D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அழகான படங்களோடு சேர்ந்த தொடர் 6 இணைப்பிற்கு நன்றி பகலவன்!

நன்றி குட்டி உங்கள் தொடர்ச்சியான கருத்து பகிர்வுக்கு.

மனிசியோட சண்டை பிடிச்சதை கதைகளை குறைத்து போட்டு மற்ற கதைகளை சொல்லுங்கோ பார்ப்பம்...சி என்ன பழக்கம்

கூடுமானவரைக்கும் முயற்சி செய்கிறேன் அண்ணா. கொஞ்சம் மசாலா சேர்த்தால் தான் கறிக்கு வாசம். :D

ச்..சா.....இன்னும் கிளுகிளுப்பான கட்டம் வருமெண்டு பார்த்துக்கொண்டிருக்கேக்கை.....குறுக்காலை வந்து குளப்புறான் பாவி

உங்களை நிச்சயமாக ஏமாற்றும் எண்ணம் எனக்கு இதுவரைக்கும் இல்லை :lol:

குமாரசாமி அண்ணே , மற்ற குடும்பத்தில என்ன நடக்குது என்று பார்க்கிறதுக்கே இருக்கின்றீர்கள் போல .....

பகலவன் , இந்தபகுதி என்னும் படிக்கவில்லை படித்தது எனது பகிர்வு எழுதுவேன் .

சந்தைக்கு வந்தாப்பிறகு பிரத்தியேகம் என்று எதுவுமே இல்லை. நன்றி தமிழரசு உங்கள் அக்கறைக்கும் பகிர்வுக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள், பகலவன்!

வீட்டுக்கு, வீடு வாசற்படி என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்!

உங்கட, வாடகைக் கார்க்கண்ணாடி, Tint பண்ணியிருக்குப் போல!

உள்ளே நடப்பவற்றை வெளியிலே தெரியாமல் இருக்கவும், கொளுத்தும் வெய்யிலில் இருந்து கண்ணை பாதுகாத்து கொள்ளாவும் தான்.

நன்றி உங்கள் பதிவுக்கு

வணக்கம் பகலவன்

இன்று தான் உங்கள் பதிவை முழுமையாக வாசிக்க முடிந்தது.நேரடியாகவே மோல்ட்டாவில்பயணம் செய்தது போன்ற உணர்வு.

எல்லாம் சரி உங்கள் மனைவி யாழ் வாசிப்பதில்லையா?

நன்றி மணிவாசகன் உங்கள் கருத்து பகிர்வுக்கு.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல மனைவி யாழ் பார்ப்பதில்லை. இருந்தாலும் எல்லாம் எழுதி முடிந்ததும் ஒருமுறை படித்து காட்டலாம் என்று இருக்கிறேன். :lol:

அப்படி வாசித்தாலும் இதிலபெரியகுற்றம் ஒன்றுமில்லைதானே....பிள்ளைகளுக்கு முன்னால் மனைவிக்கு முத்தம் கொடுக்கிறளவுக்கு நாம்முன்னேறியிருக்கிறாம் தானே...மணிவாசகன்......பகலவன் தொடருங்கோ

நன்றி புத்தன். உங்களின் கருத்துகள் எனக்கு மேலும் துணிவை தருகின்றன. இருக்கிற வீரத்தை கொண்டு மனைவிக்கு வாசித்து காட்டலாம் என்று இருக்கிறேன். நோர்வேயில் வீடுகளில் கை விளக்குமாறு, சுளகு, அம்மி குழவி, உலக்கை போன்றவை இல்லை என்ற மனதைரியம் தான் :lol:

இன்று தான் வாசித்தேன்.அந்த மாதிரி இருக்கு உங்கள் பயனம்.அது சரி யாழில் எழுத வந்தாலே எல்லாருக்கும் நகைசுவை உணர்வு அருவியாய் கொட்டுது.

ஓம். சஜீவன் என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ தெரியவில்லை தானா வருகுது. :icon_idea:

பகலவன் அண்ணா, நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுக்கு நல்ல நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் உள்ளது. உங்கள் பயணம் எழுதி முடிய அப்படியே கைவிடாமல் வேறு ஏதும் எழுதுங்கள்.

சரித்திர கதைகள் வாசிப்பீர்களா? மனைவியுடனான காதல் காட்சிகள் அந்தமாதிரி இருக்கு அதுதான். (அதையும் விஞ்சி விடும் போலிருக்கு ) கதையின் ஒவ்வொரு பாகத்திலும் அதிகரிச்சுக்கொண்டு வேற வருது. கடைசியில குமாரசாமி அண்ணாவை திருப்தி படுத்தி விட்டு தான் போவியள் போலிருக்கு.

நானும் தமிழரசு அண்ணா, மணிவாசகன் அண்ணா கேட்ட கேள்வியை கேட்க இருந்தனான். அதற்கு பதில் ஏற்கனவே எழுதியிருப்பதால் கேட்கவில்லை.

சிறுவயதில் அம்மா, ஒவ்வொரு கதைபுத்தகம் படிக்கவும் காசு தந்தா, எனது வாசிப்பு பழக்கத்தை கூட்ட. ஒரு கட்டத்தில் அது எல்லை மீறி, சாப்பிடும்போது, தூங்கும்போது, படிக்கும் போது எல்லாம் கதை புத்தகத்தோட இருக்க, ஒரு நாளைக்கு கதை புத்தகம் படிக்காமல் இருந்தால் என்று காசு தர தொடங்கிட்டா. அந்த அளவுக்கு நான் கதை புத்தக பைத்தியம் சிறுவயதில்.

எங்கள் ஊரில் இருந்த நூலகசாலையின் அனைத்து புத்தகமும் படித்து முடித்தவன் என்று நூலகர் என்னை காணும்போது எல்லாம் சொல்லுவா. அந்த காலத்தில் பிடித்த கதைகளில் ஆயிரத்தில் ஓர் இரவுகளும், கோவூர் கிழாரின் பேய்க்கதை விளக்கங்களும் இன்றைக்கும் நினைவில் அழியாதவை.

நன்றி உங்கள் கருத்துக்கு.

.

துளசிப்பையா.. துளசிப்பையா...

பகலவன் சாண்டில்யனின் சிஷ்யப்பிள்ளை...

துளசிப்பையா...

உண்மைதான் ஈசன். சாண்டில்யன் என்றால் எந்த கதையும் நான் படிக்காமல் விட்டதில்லை. எனக்கு மிகவும் பிடித்தவை கடல் புறா, யவனராணி , மூங்கில் கோட்டை மறக்க முடியாதவை. சிலவேளைகளில் தூய தமிழில் பேசுவதற்கு அந்த புத்தகங்கள் தான் கைகொடுத்தன.

அதேநேரம் அந்த கதைகளில் வரும் சில பாத்திரங்கள் சாண்டில்யனே கற்பனைகள் என்று சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கும்.

ம்ம்ம்

நன்றி அண்ணா. உங்கள் ம்ம்ம்ம் கூட எனக்கு ஊக்க சக்தி தான் அண்ணா. தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களை நிச்சயமாக விரைவில் நேரில் சந்திப்பேன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

[size=4]பயணம் 07

நீண்ட நாட்களுக்கு பின்னர் தொடர்வதற்கு முதற்கண் மன்னியுங்கள். நீண்ட வேலை ரீதியான வெளிநாட்டு பயணங்கள், என்னால் தொடரை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன். [/size]

[size=4]

img7305r.jpg[/size]

[size=4]கோசோ தீவிற்கான பயணம் மிகவும் அழகானது. Malta அதனருகே கொமினோ தீவையும், கொசோ தீவையும் கொண்டிருகிறது. கொமினோ தீவில் மக்கள் வசிப்பதில்லை மாறாக அலைபேசி கட்டுப்பாட்டு கோபுரத்தையும், உல்லாச விடுதிகளையும் மட்டுமே கொண்டிருக்கிறது.[/size]

[size=4]

img0673f.jpg[/size]

[size=4]அங்கே Blue Lagoon என்னும் அழாகான கடற்கரை உல்லாச பயணிகளை சுண்டி இழுக்கிறது. எங்களது பயணத்தின் போது கொமினோ தீவிற்கு போக முடியவில்லை. அடுத்தமுறை பயணத்துக்காக அதை விட்டு வைத்துள்ளேன்.[/size]

[size=4]

img0677w.jpg[/size]

[size=4]கொசோ தீவிற்கு ஒவ்வொரு அரை மணித்தியாலமும் கப்பல் சேவை இருக்கிறது. காருடன் அப்படியே கப்பலுக்குள் சென்று ஒரு பதினைந்து நிமிட ஓட்டத்தில் அக்கரையை அடையலாம்.அதுவரை ஒரு நீண்ட வரிசைகளில் எங்கள் கார்களை வரிசைபடுத்தி நிற்கவேண்டும். [/size]

[size=4]

img0685vt.jpg[/size]

[size=4]இரண்டு பெரிய கப்பல்கள் சேவையில் இருந்தன. கப்பல் புறப்பட பத்து நிமிடங்களுக்கு முன்னர் எங்களின் கார்களை உள்ளே விடுவார்கள். அதில் நின்ற காவலரிடம் எவ்வளவு பணம் என்று கேட்டேன் அதற்கு அவர் இலவசம் என்று சொன்னார் அதன் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை. இந்த பெரிய இரண்டு கப்பல்களை எப்படி இலவசமாக ஓட விடுவார்கள் என்ற எண்ணம் என் மனசை குடைய தான் செய்தது.[/size]

[size=4]

img0683ec.jpg[/size]

[size=4]அந்த Malta - கொசோ துறைமுகத்தை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் காருடன் கப்பலின் உள்ளே செல்லும் போது நேரம் ஐந்து முப்பதை தாண்டி இருந்தது. [/size]

[size=4]

img0684xy.jpg[/size]

[size=4]காரை அடித்தளத்தில் இருந்த தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு முதலாவது தளத்தில் இருந்த சிறுண்டி சாலையில் எனக்கும் மனைவிக்கு இரண்டு espresso வும் மகனுக்கு கோலாவும் வாங்கி கொண்டு கப்பலின் முன்தளத்தில் கடல் காற்றையும் மாலை மஞ்சள் வெயிலையும் வாங்கி கொண்டு அந்த தீவுகளின் அழகை பார்த்த காட்சிகளை இன்னும் என் கண்கள் மறக்கவில்லை.

இல்லாவிட்டால் இவ்வளவு நாள் கழித்தும் அந்த நினைவுகள் இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் வரை எப்படி என்னக்குள்ளே நிழலாட முடியும்.[/size]

[size=4]

img0722ym.jpg[/size]

[size=4]கப்பல் புறபட்டு பாத்தாவது நிமிடத்தில் கொமினோ தீவிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அதன் கரையை கப்பல் கடக்கும். அந்த வேளையில் எல்லா தீவுகளும் ஒரே நேரத்தில் தெரியும். கப்பலின் அணியத்தில் நானும் என் மனைவியும் கை கோர்த்து ஒரு டைடானிக் காட்சியை நினைவு படுத்தும் படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்று இருப்பேன். அவளின் பின் கழுத்துக்கு கொஞ்சம் கீழே எனது உதடுகளை பத்தித்து முத்தமிட்டவாறே I Love You என்று சொல்லாம் என்று என் வாயை கிட்ட கொண்டு போன நேரம் பார்த்து திடீர் என்று எதிர் பாராமல் மனைவி என்னை நோக்கி திரும்பிவிட்டாள்.[/size]

[size=4]

img0724vw.jpg[/size]

[size=4]பிறகு நடந்திருக்க கூடியவை தான் உங்களுக்கும் தெரியுமே. சில வசனங்களை மட்டும் சொல்லுகிறேன்.

உங்களுக்கு எப்போ பார்த்தாலும் இதே எண்ணந்தான்

பிள்ளை முன்னாலே நிற்கிறது என்று கூட பார்க்காமல் இப்படியா நடக்கிறது

உங்களுக்கு கொஞ்ச வேற இடம் கிடைக்கலையா ..

இடையிடையே எனது கெஞ்சல்களையும் விளக்கங்களையும் போட்டு வாசியுங்கள்.[/size]

[size=4]

img0727r.jpg[/size]

[size=4]கப்பல் கரையை சேரும் வரைக்கும் முன்னர் வீசிய தென்றல் காற்று எல்லாம் புயலாகவும், அடித்த மஞ்சள் வெய்யில் எல்லாம் நெருப்பாவும் அடித்தது. உண்மைதான் தென்றலும் வெய்யிலும் மனசில் இருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் பொறுத்தது என்பதை நீங்கள் அனுபவத்தில் மட்டும் தான் காண முடியும்.[/size]

[size=4]

img0736ht.jpg[/size]

[size=4]கொசோ துறைமுகம் மிகவும் அழகானது. சிறிய படகுகளை கொண்டு வந்து நிறுத்தி இருந்தார்கள். மிக அழகாக நாங்கள் வந்த கப்பலை கரையுடன் அனைத்து இருந்தார்கள். நாங்கள் காரை எடுத்து கொண்டு அந்த அழகான தீவில் இறங்கினோம். அபோதும் என் மனைவியின் கோப கண்கள் காதாலாக மாறவில்லை.[/size]

[size=4]

img0738mfw.jpg[/size]

[size=4]எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி அந்த தீவில் காத்திருந்தது. ஆமாம் நாங்கள் கொண்டுவந்த GPS கருவி அந்த தீவிற்கான வரைபடத்தை காட்டவில்லை. நல்ல காலத்துக்கு மனைவியிடம் இருந்த நோக்கியா தொலைபேசியும் அதனுடன் வந்த ovi map உம் தான் அந்த நேரத்தில் கை கொடுத்தது.[/size]

[size=4]

img0743fo.jpg[/size]

[size=4]நாங்கள் அந்த தீவின் மத்தியை நோக்கி நகர தொடங்கினோம். வழி நெடுகிலும் அவர்களின் கட்டடகலையை கட்டியம் கூறும் கட்டடங்கள்.[/size]

[size=4]

img0774v.jpg[/size]

[size=4]

img0775hi.jpg[/size]

[size=4]ஒரு இடத்தில் மிகவும் அழகாக கட்டப்பட்ட ஒரு தேவாலயம். 1852 இல் கட்டி இருந்தார்கள். அந்த உயரமான அழகிய தேவாலயத்தை அந்த காலத்திலேயே கட்டி இருந்தமை ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்தன. இப்போது என் மனைவியின் கண்களில் கோபம் மறைந்து காதல் தெரிந்தது. அவள் அப்படி தான் உடனே கோபம் உடனே காதல். ஒரு ஆறாம் இலக்கத்தில் பிறந்த பெண் என்று அடிக்கடி ஞாபகபடுத்துவாள்.[/size]

[size=4]

img0750j.jpg[/size]

[size=4]

img0751se.jpg[/size]

[size=4]அதை விட அதிர்ச்சி அந்த தேவாலயத்தை ஒட்டி இருந்த ஒரு கட்டடத்தில் புலிக்கொடி பறந்தது தான். என் மகன் தான் கண்டு எங்களுக்கு காட்டினான்.

அப்பா அங்கே பாருங்க புலிக்கொடி

தொடரும் [/size]

Edited by பகலவன்

:D :D :D

நீண்ட இடைவெளியின் பின் பகலவன் அண்ணா எழுதுவது மகிழ்ச்சி.... :)

உங்கள் பயணத்தொடரை தொடர்ந்து படித்து வருவேன் . ஒரு பயணக்கட்டுரை எழுதி வெற்றியைக் குவிப்பது அவ்வளவு சுலபமான விடையமல்ல . இனிப்புக்குள் மருந்து கொடுக்கின்ற வேலை . பல இடங்களில் அருமையாக நகர்த்தி இருக்கின்றீர்கள் . தொடருங்கள் உங்கள் பாணியை பகலவன் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பகலவன் .இந்தமுறையாவது இடையில் ஓடாமல் எழுதிமுடியுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப்பார்க்கும்போது

போகத்தூண்டுகிறது

அந்தளவுக்கு அருமையான படப்பிடிப்பு.

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் பகல் அண்ணா

என்ன விசு அண்ணா ஐரோப் ல தானே இருக்கிங்க போகவேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பயணம் 07

-----[/size]

[size=4]இடையிடையே எனது கெஞ்சல்களையும் விளக்கங்களையும் போட்டு வாசியுங்கள்.[/size]

[size=4]-----[/size]

எங்களது கற்பனைக்கு... உங்கள‌து கெஞ்சல்களை போட்டு... வாசித்த போது...

சீ... இப்படியெல்லாம், கெஞ்சுவார்களா... என்று நினைக்கத் தோன்றியது. :D:lol:

அடுத்த பகுதியை... வாசிக்க ஆவலாக உள்ளோம், விரைவில் எழுதுங்கள் பகலவன். :)

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டது மகிழ்ச்சி, பகலவன்!

அருமையான படங்களுடன், அழகாகப் போகின்றது, உங்கள் பயணம்!

'டைட்டானிக்' உதாரணம், அழகு!

  • தொடங்கியவர்

:D :D :D

நீண்ட இடைவெளியின் பின் பகலவன் அண்ணா எழுதுவது மகிழ்ச்சி.... :)

நன்றி துளசி, இப்போ தான் இதை தொடரக்கூடிய மகிழ்வான மன நிலைக்கு வந்த்துள்ளேன்.

உங்கள் பயணத்தொடரை தொடர்ந்து படித்து வருவேன் . ஒரு பயணக்கட்டுரை எழுதி வெற்றியைக் குவிப்பது அவ்வளவு சுலபமான விடையமல்ல . இனிப்புக்குள் மருந்து கொடுக்கின்ற வேலை . பல இடங்களில் அருமையாக நகர்த்தி இருக்கின்றீர்கள் . தொடருங்கள் உங்கள் பாணியை பகலவன் .

உங்களின் நெருடிய நெருஞ்சியை விடவா கோமகன்..? நான் உங்களின் அந்த தொடருக்கு பரம ரசிகன். நன்றி கோமகன் உங்களின் பகிர்வுக்கு.

வாழ்த்துக்கள் பகலவன் .இந்தமுறையாவது இடையில் ஓடாமல் எழுதிமுடியுங்கள் .

நிச்சயமாக நந்து. வாழ்த்துகளுக்கு நன்றி. எனக்கு தெரிந்தவரை உங்களுக்கும் நிறைய அனுபவங்கள் இருக்குமே, அதை ஒரு தொடராக பதிந்தால் என்ன..?

படங்களைப்பார்க்கும்போது

போகத்தூண்டுகிறது

அந்தளவுக்கு அருமையான படப்பிடிப்பு.

தொடருங்கள்

நன்றி விசுகு அண்ணா, நிறைய படங்கள் மனைவியின் நோக்கியாவில் சுட்டவை.அவள் மிகவும் கலை ரசனைமிக்கவள் காரிலி ஓடும்போதே எடுத்தமையால் ஒரு சாய்வுத்தன்மை இருக்கும்.

எதற்கும் உங்கள் பாராட்டை சொல்லிவிடுகிறேன்.

சூப்பர் பகல் அண்ணா

என்ன விசு அண்ணா ஐரோப் ல தானே இருக்கிங்க போகவேண்டியது தானே?

நன்றி சுண்டல், ஐரோப்பாவில் இருக்கும் அநேகம் பேருக்கு நேரம் ஒதுக்குவது தான் பிரச்சனையாக இருக்கும். ஒதுக்கி வைக்கும் நேரத்தையும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு போய்விடும்.

எங்களது கற்பனைக்கு... உங்கள‌து கெஞ்சல்களை போட்டு... வாசித்த போது...

சீ... இப்படியெல்லாம், கெஞ்சுவார்களா... என்று நினைக்கத் தோன்றியது. :D:lol:

அடுத்த பகுதியை... வாசிக்க ஆவலாக உள்ளோம், விரைவில் எழுதுங்கள் பகலவன். :)

நன்றி தமிழ்சிறி அண்ணா, எனது கெஞ்சலுக்கு பதிலாக நீங்கள் வழக்கமாக கெஞ்சும் வசனங்களை போட்டு விட்டீர்களோ தெரியவில்லை :lol: :lol:. நான் நினைக்கிறேன் எனக்கு சரியாக கெஞ்ச தெரியாது என்று. இல்லாவிட்டால் அவளது கோபம் அப்பவே போயிருக்குமே.

மீண்டும் கண்டது மகிழ்ச்சி, பகலவன்!

அருமையான படங்களுடன், அழகாகப் போகின்றது, உங்கள் பயணம்!

'டைட்டானிக்' உதாரணம், அழகு!

நன்றி புன்கையூரான். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் எனக்கு கண் தெரியவில்லையோ தெரியாது உங்கள் மகன் காட்டிய புலிக் கொடி எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.