Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சிறைக்கு சென்றேன்.............

Featured Replies

உயர்ந்து பரந்து விரிந்து காட்சியளித்த அந்த பிரமாண்டமான கட்டிடத்தை எனது கார் நெருங்கியது. நெருங்க நெருங்க என் மனமும் நொறுங்க ஆரம்பித்தது.வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு 200 மீற்றர் தூரத்தில் காட்சியளித்த அந்த வெள்ளைக்கட்டிடத்தின் நுழை வாயிலை அண்மித்தேன்...உள்ளே கடமையில் இருந்தவர்கள் கதவினைத்திறப்பதற்காக பொத்தானை அழுத்தியதும் அந்தக்கண்ணாடி கதவு மெதுவாக திறந்து கொண்டது.மெதுவாக எனது கால்களை உள்ளே வைத்து பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.கடமையில் உள்ளவர்கள் விபரத்தை கேட்டார்கள்.கூறினேன். அவர்கள் கையில் வைத்திருந்த பத்திரத்தில் பெயரைத்தேடி குறிப்பிட்டபின் எனது கடவுச்சீட்டை வாங்கினர். அதன் பின் என்னிடம் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சிறிய அலுமாரியை[closet ] காட்டினார்கள். நான் கொண்டு சென்ற பொருட்களை அதனுள் வைத்துவிட்டு உள்ளே செல்லும் பொது இருபக்கத்திலும் உள்ள சோதனை சிறிய சிவப்பி விளக்குடன் கீக் கீக் என்ற ஒலி என் அனுமதியை தடுத்தது.பின் எனது காற்சட்டை பெல்ட் ஐ கழற்றி சோதனைக்கான ஓடுபொறியில் வைக்க சொன்னார்கள்.அதன் பின்னும் அந்த கருவி என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை பின் எனது காலணிகளையும் கழற்றி வைக்க சொன்னார்கள். இப்பொழுது என்னை அது அனுமதித்தது. ஓடுபொறியில் உள்ள எனது காலணியையும்,பெல்டையும் மீள பெற்றபின் படிக்கட்டுக்கள் வழயாக மேலே சென்றேன்.அங்கும் சில கேள்விகளின் பின் ஒரு சுமாரான மண்டபத்தை காட்டினார்கள்.அங்கே எனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்,ஆயிரமாயிரம் கேள்விகளுடனும்,ஏக்கத்துடனும் ,உட்கார்ந்திருந்தேன்...............

தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

இதை ஏன் இங்கை போட்டியள் ?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஐந்து இடங்களுக்குச் சென்றிருக்கின்றேன்! ஒவ்வொருமுறையும் உள்ளே போய் வெளியே வரும்போது சுதந்திரம் என்றால் என்னவென்பதற்கு அர்த்தம் புரிந்திருந்தது.

  • தொடங்கியவர்

சிறிது நேரத்தில் அவன் என்னை நோக்கி வந்தான் .......டே மச்சான் என்று கட்டியணைத்தான்.நான் நானாக இருக்கவில்லை.கவலையாலும் ஆழ்ந்த சோகத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்ட என் இதயம்...................கண்களில் நீரை வரவழைத்தது.இரண்டு மணித்தியாலம் அவனுடன் பேசினேன்.எமது கல்லூரி வாழ்க்கையில் இருந்து ஆருயிர் நண்பனாக இருக்கும் எமக்கு பேசுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருந்தன.....ஆனால் அவன் பேச முற்பட்டதெல்லாம் இன்றைய எம் தாயப்பிரச்சனை,செய்திகள் எமது அரசியல்,இப்போ புலம் பெயர் நாடுகளிலே நடப்பது என்ன,எம் விடிவிற்காய் புலம்பெயர் மக்களின்,போராட்டங்கள் ,செயற்பாடுகள்..தாயகமக்களின் நிலைப்பாடுகள்.அவனது தற்போதைய சூழ்நிலையிலும் இன்னும் அவன் மாறாமல் ,மனம் தளராமல்,உறுதியாக இருந்ததை பார்க்கும்போது வியப்படைந்தேன்,சிலிர்த்துப்போனேன்.ஒரு விடயத்தையும் புரிந்துகொண்டேன் .............பக்கத்திலே இன்னும் பலர் இருந்து அளாவளாவினர்.ஒரு சிலரை அவன் காட்டி இவன் கொலை செய்து வந்தவன்,கொள்ளயடித்துவந்தவன்,கஞ்சா கடத்திவந்தவன் என்று சிரித்து சிரித்து கூறினான்.அந்த நேரத்தில் என்மனம் அடக்கமுடியாத ஆத்திரத்துடன் சில கேள்விகளை கேட்கத்தொடங்கியது.கள்ளன்,காவாலி.பொய்யன்,புளுகன்,கஞ்சா கடத்தியவன்,சப்பை,சுப்பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இவனுக்கென்ன அருகதை , இவனுக்கென்ன தகுதி,.....அவன் அங்கே இருப்பது நாம் மனித சுதந்திரத்தை மதிப்பவர் என்று போலிவேடம் போடும் இந்த நாடுகளின் சுய ரூபத்தை அங்கே பார்த்தேன்.உண்மை ,நீதி,தர்மம் எல்லாம் செத்துவிட்டது என்று காதால் கேட்டிருக்கிறேன்,படித்திருக்கிறேன்.இன்றுதான் அதன் உண்மை வடிவத்தை நேரில் பார்த்தேன். இந்த இடத்திலே அவன் செய்த குற்றங்கள இங்கே நான் கூறாவிட்டால் நான் இந்த அனுபவத்தை இந்ததிரியில் இணைத்ததற்கான நோக்கம்,காரணம் புலப்படாமல் போய் விடும்.................

தொடரும்.

:unsure: :unsure: எழுதுங்கோ நானும் வாசிக்கிறன்... :)

Edited by காதல்

  • தொடங்கியவர்

தன் மக்கள் ,தேசம் இவற்றின் மீது உள்ள பற்றினால் விடுதலை உணர்வு இவன் மனதில் தோன்றியது குற்றமா...????

*விடுதலை உணர்வு தோன்றியதால் தானும் எதோ தன் இனத்திற்கு செய்யவேண்டும் என நினைத்தது குற்றமா.....?????

*செய்ய வேணும் என நினைத்து மனித நேய செயற்பாட்டாளர்களுடன் இணைந்தது குற்றமா..?????

*இணைந்த்ததால் இரவு,பகல்,குளிர்,மழை,இவற்றினூடாக தனது பொன்னான நேரத்தை இழந்து புலம்பெயர் உறவுகளின் வீடுவீடாக சென்று தாயக விடுதலையின் தேவையை பரப்புரை செய்து அதற்கு தேவையான உதவிகளை உறவுகளிடம் இருந்து பெற்றுக்கொடுத்தது குற்றமா ....??????

*இவையெல்லாம் குற்றம் என்றால் ஒட்டுமொத்தத்தில் தமிழனாய் பிறந்தது குற்றமா....??????

ஈன எம்மை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை ....இவர்களுக்கு புரியவைக்காமை விட்டது எம் ஒவ்வொருவரினதும் குற்றமா.....????? அல்லது உங்களை நாம் புரிந்து கொள்ள இஸ்டம் இல்லை என்று அடம்பிடிப்பது அவர்கள் குற்றமா ....??????

குற்றம்,குற்றம் ,குற்றம், பல்லாயிரம் கேள்விக்கணைகள் என் உள்மனதில் ஓடிக்கொண்டிருக்க வெறும் வாயால் மட்டும் அவனுடன் பேசிக்கொண்டிருக்க .உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கடமையில் உள்ளவர் கூற கொதிப்பும்,ஆத்திரத்தின் வடிவமாய் என்கண்கள் அந்த கடமையலனை பார்க்க வேறு வழியின்றி இனிய தோழனிடம் இருந்து பிரிந்தேன்.......கடவுச்சீட்டையும்,பொருட்களையும் பெற்றுக்கொண்டு மனக்குமுறலுடனும்.ஆழ்ந்த சோகத்துடனும் எனது கால்கள் காரை நோக்கி நடக்கத்தொடங்கியது.கைகள் சிகரட் ஒன்றை எடுத்து வாயில் வைத்தது.

நன்றி ......இது எனக்கேற்பட்ட மனக்குமுறல் உறவுகளாகிய உங்களிடம் கொட்டித்தீர்க்க நினைத்தேன் அதனாலேய இணைத்தேன் .இனி இன்றிரவு நிம்மதியாக தூங்க முயகுகிறேன்......நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு கனக்கிறது அண்ணா....இப்படி எத்தனை கண்ணீர்க்கதைகளால் கட்டப்பட்டிருக்கிறது எங்கள் போராட்டம்...

Edited by சுபேஸ்

நன்றி ......இது எனக்கேற்பட்ட மனக்குமுறல் உறவுகளாகிய உங்களிடம் கொட்டித்தீர்க்க நினைத்தேன் அதனாலேய இணைத்தேன் .இனி இன்றிரவு நிம்மதியாக தூங்க முயகுகிறேன்......நன்றி

உங்கள் மனக்குமுறல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. :( :( உங்கள், உங்கள் நண்பரின் துன்ப நிலையில் நானும் பங்குகொள்கிறேன். முடிந்தவரை அவரை கைவிட்டு விடாமல் அடிக்கடி சந்திக்க செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் இருப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல.

வெளியே இருப்பவர்கள் எல்லோரும் சுற்றவாளிகளும் அல்ல.

ஒரு இனத்திற்காக அதன் விடியலுக்காகச் சிறை சென்ற

உங்கள் நண்பருக்கு எங்கள் சார்பில் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிவிடுங்கள்

தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கல்லெறி வீழ்வதும் இவர்களுக்குத்தான்.. :( உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்சூரியன்..

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், தமிழ்ச்ச்சூரியன்!

நன்றாக இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூரியன், வாத்தியார் குறிப்பிட்டது போல்....

உங்கள் நண்பரை, அடிக்கடி சந்தித்து ஆறுதல் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சூரியன்

தொடர்ந்து தொடர்பிலிருங்கள்

பிரான்சில் எம்மவர்களை கைது செய்த நேரம்.

என்னையும் அது நெருங்கும் என்பது தெரியும்.

ஒரு அளவுக்கு என்னையும் அதற்கு தயார் படுத்திக்கொண்டிருந்தேன்.

ஒரு பகுதிக்கும் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கும் பொறுப்பாக இருந்தவருடன் தான் நான் எனது பங்களிப்பு இருந்தது.

அவர் அந்த நேரம் வெளியில் போயிருந்தார். அதனால் அவரது மனைவி பிள்ளைகளை தூக்கிவிட்டார்கள்.

3 குழந்தைகள்

எல்லாமே 4 வயதுக்குள்.

மூத்தவனுக்கு தலையில் பிள்ளை பிறக்கும்போது இருக்குமே சிறி ஓட்டை ஒன்று. அது பிறக்கும்போது இல்லை.

அதனால் பெரிய ஒபரேசன் செய்து சில நாட்கள்தான்.

அவர் போய்ச்சரணடைய முன் எனக்கு சில அறிவுறுத்தல்களை வேறு வழிகளுடாக அனுப்பியிருந்தார்.

சில நாட்களில் அவரை சிலர் சந்தித்தபோது

கு.அண்ணனை முற்று முழுவதுமாக தள்ளியிருக்கச்சொல்லுங்கள்.

இதுவரை செய்ததற்கான முழு ஆதாரங்களும் படங்களுடன் அவர்களிடம் இருக்கு எதையும் மறுக்கமுடியாது.

எல்லாவற்றையும் என் தலையில் போட்டுவிட்டேன். ஆனால் இனி ஏதாவது செய்ததால் அவரும் உள்ளே வரவேண்டிவரும்.

ஏற்கனவே நான் அனுப்பிய தகவல் அவருக்கு கிடைத்திருக்கும். அதன்படியே இருக்கச்சொல்லுங்கள் என்ற தகவல் என்னை வந்தடைந்தது.

சரி என்னைக்காத்து தன்னை மேலும் வதைத்த அவரது குடும்பத்துக்கு ஏதாவது செய்யணுமே.

முடியாது. நெருங்க முடியாது.

வீடு முழுவதும் ஒட்டுக்கேட்டல்.

தொலைபேசியிலும் வேறு ஆட்களை விட்டு மட்டுமே சுகம் மட்டுமே விசாரிக்க முடிந்தது.

நான்தான் கேட்கின்றேன் என்று கூட சொல்லமுடியவில்லை.

இல்லை நான் அந்த பிள்ளைகளைப்பார்க்கணும். வீட்டுக்கு போகணும். ( அநேகமாக போன அலுவல் முடிய எனது வீட்டில்தான் இருவரும் வந்து சாப்பிடுவோம். அவர் வீட்டுக்கு வந்ததும் எனது மக்கள் பாய்ந்து அவரது தோளில் ஏறி விடுவார்கள். எல்லோரையும் தோளில் வைத்து வளர்த்தவர் அவர்.)

அவரது மனைவியின் சகோதரனுடன் நேரே கதைக்கப்போனபோது கையை விடுத்து பேசாது சென்று விட்டார். இத்தனைக்கு அவர் எனக்கு உறவுக்காறர். நிலமை மோசம் என்பது புரிந்தது. அவரிடம் என்ன உதவி என்றாலும் என்னிடம் கேட்க மறந்துவிடாதீர்கள் என சொல்லிவிட்டேன்.

ஆனால் இப்படி நடுறோட்டில் அந்தக்குடும்பத்தை விட முடியாது. எனக்குத்தெரியும் அவர் தனிப்பட்ட முறையில் கடனாளியாக இருந்தார். எனவே உதவணும்.

சரியாக மார்கழியில் நத்தாரும் வந்தது.

என்ன நடந்தாலும் இந்தமுறை வீட்டில் எதுவும் கிடையாது.

அவரது பிளள்ளைகளுடன் தான் இந்த முறை நத்தார் கொண்டாடுவது என எல்லோரும் முடிவெடுத்து சென்றோம்.

ஒன்றுமே தெரியாத அந்து குஞ்சுகளைக்கண்டதும் அழுதுவிட்டேன்.

அவரது மனைவி சொன்னார் இங்கு எது நடந்தாலும் வெளியில் தெரியும் என்று. அடக்கிக்கொண்டேன்.

எனது மனைவி பிள்ளைகள் ஆளாளுக்கு ஆசையாக பார்த்து பார்த்து விளையாட்டுப்பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அதை அவர்களிடம் கொடுத்து அவர்களுடன் சிறு பிள்ளைகள் போல் இவர்களும் விளையாடியது பெரும் சந்தோசமாக இருந்தது.

வேண்டாம் வேண்டாம் என அவரது மனைவி மறுக்க

அவரது மாமியாரிடம் ஒரு தொகைப்பணத்தை கைக்குள் வைத்துவிட்டு வந்தபோது தான் கொஞ்சம் நித்திரை வந்தது.

அடுத்து

வருடப்பிறப்புக்கும் போய் அவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு வந்தோம்

  • தொடங்கியவர்

நன்றி வி அண்ணா ....உங்களின் செயல் என்னை பெருமிதம் அடையச்செய்கிறது. உங்களைப்போல் ஒவ்வொரு தமிழனும்

இன்றைய சூழ்நிலையை உணர்ந்து செயல்ப்படுவார்களாயின், எம் மாவீரர் கனவு நனவாகும், எம் ஒவ்வொருவர் துன்பமும் விரைவில்

நீங்கி நாம் எம் தேசியத்தலைவரின் சிந்தனையின்படி வளர்ச்சியுள்ள , பலமுள்ள, ஆரோக்கியமுள்ள சமூக அமைப்பாக எம் தாயக தமிழீழத்தை விரைவில் கட்டி எழுப்பலாம். [ இந்தத் திரியிநூடாக உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் ,நன்றி ] நான் எப்பொழுதுமே என் நண்பனுடன் தொடர்பிலிருக்கிறேன்.....இன்னும் இரு கிழமையில் அவனைப்பற்றி ஒரு மகிழ்வான செய்தியை சொல்ல இருக்கிறேன் ஆண்டவனின் சித்தமானால் ............................................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் மனது கணக்கிறது இப்படி எத்தனையோ பேர் நாட்டிற்காய் உள்ளே இருக்கிறார்கள் எனது நன்றி அவருக்கு தெரிவித்து விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ டமிழ்சூரியன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்சூரியன் ,விசகு

நல்லவர்களுக்குத்தான் சோதனை வரும்

ஈற்றில் வெல்லும்

முள்ளில் வரும் ரோஜா போல

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வி அண்ணா ....உங்களின் செயல் என்னை பெருமிதம் அடையச்செய்கிறது.

நன்றி தமிழ்சூரியன்

மற்றும் கருத்தெழுதிய உறவுகளுக்கும்

இது நடந்த பலவருடங்கள் ஆகிவிட்டன.

அவர்கள் எல்லோரும் வெளியில் தற்போது வந்துவிட்டார்கள்.

இங்கு சிலர்

வெளிநாடுகளில் தாயகத்துக்காய் உழைத்தவர்களை தூற்றும் போது ஒரு போதும் அதற்கு

நான் அனுமதிப்பதில்லை.

அவர்களது உழைப்பும் போராளிகளுக்கு சமமானது. எந்த நேரமும் மக்கள் மக்கள் மக்கள் என உழைக்கும் சிந்திக்கும் அவர்களை கண்ணால் கண்டவன். அவர்களோடு இருந்தவன்.

நேரத்துக்கு சாப்பிடாது நேரத்துக்கு நித்திரை கொள்ளாது அலைந்து அலைந்து திரிந்து தலைவர் கொடுக்கும் இலக்குக்காக அவர்கள் படும் பாட்டை பார்த்தவன். இதனால் உலகிலுள்ள அத்தனை வருத்தங்களும் அவர்களது உடலில். ( திலகரண்ணா, மனோ அண்ணா, கிருபாகரன் அண்ணா , பாலகணசன், திரு,,,,,.......... இன்று நீலன் என்று பட்டியல் மிக நீண்டது.)

(இதிலிருந்து விதிவிலக்கானவர்கள் இல்லை என்று இல்லை. அவர்கள் தாயகத்திலும் உள்ளனர்)

தமிழ் சூரியன், உங்கள் பகிர்வுக்கு நன்றி. இப்படி இன்னும் எத்தனயோ உறவுகள் தியாகம் செய்துள்ளார்கள்.

விசுகு அண்ணா, உங்கள்மேலுள்ள மரியாதை மேலும் மேலும் கூடுகிறது.

  • 1 month later...
  • தொடங்கியவர்

அன்பான உறவுகளே நான் இந்த திரியில் குறிப்பிட்ட எனது நண்பன் அண்மையில் வார இறுதியில் (விடுமுறை) வெளியில் வந்தார் .....

இந்த திரியை பார்த்து மகிழ்ச்சியும் ,தென்பும் கொண்டான். உங்கள் எல்லோருக்கும் தன் நன்றிகளை கூறிச்சென்றான். அவன் மீண்டும் உள்ளே சென்று

ஒரு இன்றைய சமகாலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதி எனக்கு தபால் மூலம் அனுப்பியிருந்தான் ....முடிந்தால் இந்த தளத்தில்

பிரசுரிக்கும்படி கேட்டான் ...............தற்சமயம் நான் வேறு இடத்தில் நிற்பதால் வெகு விரைவில் அவனின் ஆக்கத்தை இங்கே இணைக்க இருக்கிறேன்.................

நன்றி

  • 2 months later...
  • தொடங்கியவர்

வணக்கம் உறவுகளே மீண்டும் இந்த திரியை திறந்து ஒரு சில மகிழ்ச்சியான் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் அளித்த அந்த இறைவனுக்கு

நன்றி

இந்த திரியில் குறிப்பிட்ட என் இனிய நண்பர் சில நாட்கள் விடுமுறையில் தற்சமயம் வெளி வந்துள்ளார் ....இப்போ இந்த நேரத்தில் என் பக்கத்தில் அவர் இருக்க இந்த கருத்தை எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ...................நன்றி .....................

நானும் அந்த உறவின் பக்கத்தில் நிற்பது போல் உள்ளது. அவருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழீழத்துக்கான அவர் தியாகங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

அவரது ஆய்வுக்கட்டுரையை பின்னர் இணையுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளோம். (ஆனால் சில நாட்களின் பின்பு தான் நான் வாசிப்பேன்.)

அவர் விரைவில் விடுதலை பெற வேண்டும்..

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ சற்று முன்னர் தான் இந்தப் பகுதியை கண்டேன்...என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்வதாக இருந்தால் அந்த உறவு நிரந்தர விடுதலை பெற்று சுதந்திரமாக,சந்தோசமாக வாழ வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.