Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளைத் தொலைத்த தந்தை புலிகள் இருந்தால் நடக்குமா இப்படி? குமுறல்!! படங்கள்

Featured Replies

yall_gilr01.jpg

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு,

எனது சொந்த இடம் வன்னி ஜெயபுரம். எனக்கு 4 பிள்ளைகள். மனைவியும் ஒரு மகளும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் எனது வறுமை நிலை காரணமாக நிறுவனம் ஒன்றின் மூலம் எனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன் சர்மினியை தெல்லிப்பளை துர்கை அம்மன் கோவில் நடாத்திவரும் சிறுவர் இல்லத்தில் சேர்த்து படிப்பித்து வந்தேன்.

இறுதி யுத்தம் காரணமாக ஒரு வருடம் படிக்காததால் மருதனார்மடம் இராமநாதன் மகளீர் கல்லூரியில் க.பொ.த (சா.த)தில் கல்வி கற்று வந்தாள்.

கடந்த வருட இறுதியில் க.பொ.த. (சா.த) பரீட்சை எடுத்த பின் எனது வீட்டிற்கு வந்தாள். கடந்த 3ம் மாதம் க.பொ.த. பெறுபேறுகள் வந்த செய்தி அறிந்து எனது மகள் 18.03.2012 அன்று காலை ஜெயபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டாள்.

பரீட்சைப் பெறுபேறுகளை பார்ப்பதற்காகச் சென்ற மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. எனது மகளிடம் அவள் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவளது மாமனார் கொடுத்த கைத் தொலைபேசி இருந்தது. இருந்தும் அத் தொலைபேசியில் பணம் இல்லாத காரணத்தால் அவள் அதனை உள்வரும் அழைப்புகளுக்கு பாவிப்பாள்.

எனது மகள் யாழ்ப்பாணம் போய் சேர்ந்து விட்டாளா என அறிவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி செயல் இழந்து காணப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்பில் எனது மகள் அழுதவண்ணம் பதில் தந்தாள்.

‘நான் யாழ்ப்பாணம் வந்தபோது எனக்குத் தெரிந்த ஐயா என்னை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு போய் விடுதியில் விடுவதாகக் கூறியபோது தான் அவருடன் ஏறியதாகவும் ஆனால் தற்போது என்னை அவரும் அவருடன் சேர்ந்தவர்களும் ஒரு இருட்டறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை எனவும் அவர்கள் என்னை சித்திரவதை செய்து விட்டு சென்றுவிட்டார்கள், மீண்டும் வருவார்கள்’ எனவும் கதறி அழுதாள்.

நான் உடனடியாக அன்று மாலையே யாழ்ப்பாணம் வந்து இரவு 8 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டு இரவு 12 மணிக்கு வெளியே வந்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை பொலிசார் எத்தனையோ தடவைகள் என்னைக் கூப்பிட்டு மாறி மாறி விசாரித்தார்களே தவிர எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. மகளுக்குக் கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்த அவளது சாவகச்சேரி மாமனை மாத்திரம் அடித்து உதைத்துவிட்டு விட்டுள்ளார்கள். மூன்று மாதங்கள் கடந்த பின்னர்தான் நான் இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

நான் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தவன். அத்துடன் எனது ஒரு மகளையும் எனது மனைவியையும் இறுதி யுத்தத்தில் பறி கொடுத்தவன். இருந்தும் நான் தற்போது கவலைப்படுவது என்னவெனில் விடுதலைப் புலிகள் இல்லாது போய் விட்டார்களே என்றுதான்.

இவ்வாறு வன்னியில் விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் யாராவது கடத்தப்பட்டோ அல்லது காணாமல் போனாலே 24 மணித்தியாலத்திற்குள் அவர்கள் விசாரணை செய்து அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள்.

ஆனால் தற்போது மூன்று மாதங்களாகியும் எனது மகளைக் கண்டு பிடிக்க முடியாது பொலிசார் திணறுகின்றார்கள் . அத்துடன் உனது மகள் கலியாணம் கட்டி எங்காவது இருப்பாள் என்று சாதாரணமாக கூறுகின்றார்கள்.

yall_gilr01.jpg

இவ்வாறு மிகவும் விரக்தியுடனும் வேதனையுடனும் தெரிவித்தார் அந்தத் தந்தை.

http://panntamil.blogspot.co.uk/2012/06/blog-post_5234.html?spref=fb

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(
  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில். கூறப்படும் 'நரகங்களும், சாத்தான்களும்' எங்கே இருக்கின்றதோ தெரியாது!

ஆனால், தமிழனாகப் பிறந்தவனுக்கு, 'அவை' யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன! :wub:

[size=4]ஒரு தந்தையின் மட்டுமல்ல ஒரு இனத்தின் கூற்றாக பார்க்கலாம். [/size]

[size=4]

நான் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தவன். அத்துடன் எனது ஒரு மகளையும் எனது மனைவியையும் இறுதி யுத்தத்தில் பறி கொடுத்தவன். இருந்தும் நான் /தற்போது கவலைப்படுவது என்னவெனில் விடுதலைப் புலிகள் இல்லாது போய் விட்டார்களே என்றுதான்.
[/size]
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனும், விடிவெள்ளியும் ஓடி ஒழிக்காமல் வந்து பதில் அளியுங்கள் பார்ப்போம்.(துணிவு ஒன்று இருந்தால்)

இப்ப நாட்டில் இருக்கும் சம்பந்தன் தான் இதற்கு பதில் அழிக்க வேண்டும் .

இது எல்லாம் உசுப்பெத்தும் இணையங்களின் தொழில் .உலககமேங்கும் வியாபித்திருக்கு இந்த வியாதி .கனடாவிலும் தான் பிள்ளகைகள் காணாமல் போகின்றார்கள்.

புலி இல்லாதவிடத்து தான் இவை எல்லாம் என்பதுமாதிரி புலம் பெயர்ந்தபுண்ணாக்குகள் மட்டும் தான் படம் போடுகின்றார்கள் .

ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து இலங்கைக்கு போகும் தமிழர்களின் எண்ணிக்கையை பார்த்தால் நீங்கள் வாயை மூட வேண்டியதுதான்.

பூசி மெழுகாமல் சம்பவம் உண்மை என்பதை ஒத்துக்கொள்ள பழகுங்கோ முதல்.

சிங்கள ஊடகத்தில் இருந்து....

http://www.adaderana.lk/news.php?mode=head&nid=1266

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நாட்டில் இருக்கும் சம்பந்தன் தான் இதற்கு பதில் அழிக்க வேண்டும் .

இது எல்லாம் உசுப்பெத்தும் இணையங்களின் தொழில் .உலககமேங்கும் வியாபித்திருக்கு இந்த வியாதி .கனடாவிலும் தான் பிள்ளகைகள் காணாமல் போகின்றார்கள்.

புலி இல்லாதவிடத்து தான் இவை எல்லாம் என்பதுமாதிரி புலம் பெயர்ந்தபுண்ணாக்குகள் மட்டும் தான் படம் போடுகின்றார்கள் .

ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து இலங்கைக்கு போகும் தமிழர்களின் எண்ணிக்கையை பார்த்தால் நீங்கள் வாயை மூட வேண்டியதுதான்.

அண்ணைக்கு தமிழ் விளங்குவதில் கஷ்டம் இருப்பது ஏற்கனவே எங்களுக்கு தெரிந்ததுதான்.

கேள்வி உலகம் புறாக நடக்கிறதா அதையும் தாண்டி வேற்று கிரகங்களிலும் நடக்கிறதா என்பதல்ல.

புலிகள் இருந்தபோது இது நடந்ததா? என்பதாகும்.

உங்களின் வதிவிடம் கனடா என்று போட்டிருக்கு...........

உள்ளூர் செய்திகளை வேறு படிக்க வேண்டுமா?

  • தொடங்கியவர்

இப்ப நாட்டில் இருக்கும் சம்பந்தன் தான் இதற்கு பதில் அழிக்க வேண்டும் .

இது எல்லாம் உசுப்பெத்தும் இணையங்களின் தொழில் .உலககமேங்கும் வியாபித்திருக்கு இந்த வியாதி .கனடாவிலும் தான் பிள்ளகைகள் காணாமல் போகின்றார்கள்.

புலி இல்லாதவிடத்து தான் இவை எல்லாம் என்பதுமாதிரி புலம் பெயர்ந்தபுண்ணாக்குகள் மட்டும் தான் படம் போடுகின்றார்கள் .

ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து இலங்கைக்கு போகும் தமிழர்களின் எண்ணிக்கையை பார்த்தால் நீங்கள் வாயை மூட வேண்டியதுதான்.

... 84 என நினைக்கிறேன், நெடுக சோத்துப்பாசல்களே அனுப்பட்டதற்கு பதிலாக, சிங்கப்பூரிலிருந்து ஒரு கொன்ரெயினரில் சில பிஸ்டல்கள், கிரனேட்டுகள் சென்னைக்கு போயிருக்கிறது, அப்போ தமிழக காவல்துறைக்கு பொறுப்பாக இருந்தவர்(பெயர் வரமாட்டுங்குது), அந்த கொன்ரெயினரை தடுத்து வைத்து விட்டார். விளைவு என்ன? நம்ம அர்ஜுன் சார்ந்த மகா அறிவாளிகள், அந்த காவல்துறை பொறுப்பாளரின் மகளை கடத்தி விட்டு ... அதுவும் தமிழகத்தில் இருந்து கொண்டு ... கொன்ரெயிரை தா? இல்லையேல் உன் மகள்???????????!!!!!!!!!!!!! .... வாவ் ... அப்படித்தான் பல வீரப்பிரதாபங்களைப் புரிந்து தம்மை தாமே அழித்த வீர புருஷர்களின் வழி வந்த அர்ஜுனுக்கு உச்செய்தி எல்லாம் ...??????? ம்ம்..

ஆமா, அர்ஜுன், சிலவேளை நீர் அங்கிருந்து, உம் மனைவியோ, சகோதரியோ, மகளோ இப்படி காணாமல் போய், நீர் இவ்வாறே புலம்பிக் கொண்டிருக்க ... யாராவது உம்மைப்போல் கூறினால் ....?????????

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்பதன் முன்னர்

மனித உரிமை மையங்களுக்கு அறிவிப்பதே சிறந்ததும் பயனுள்ளதும்.

ஒட்டுக்குழுக்கள் மற்றும் இலங்கை ராணுவம் வடபகுதியில் நடமாடும் வரை இப்படியான

நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை.

உண்மைதான் வாத்தியார்

ஆனால் ஒரு பெண் பிள்ளையைத்துலைத்துவிட்டு 3 மாதங்கள் பொறுமையாக இருப்பது என்பது பெரும் கொடுமையானது. மற்றும் பத்திரிகைகளில் முதலில் வருவதே அவருக்கு பாதுகாப்பானது. இப்பொழுதெல்லாம் மக்கள் ஐ.நா. வைக்கூட நம்பி எதையும் ஒப்படைக்கமுமுடிடியாத நிலையிலேயே உளளனர்.

இனி அவருக்கு எதுவும் எவரும் செய்யமுடியாது.

அதையும் மீறி செய்வார்களாக இருந்தால் அதுவும் ஒருரு சாட்சியாக மாறும் என்பதை அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் சிங்கள பயங்கரவாத அரசுடன் இணைந்து அவர்களுக்கு சேவகம் செய்யும் மானம்கெட்ட டமிலங்கள் என்ன சொல்ல போகின்றார்கள் ?

என்னமும் எதற்கெடுத்தாலும் புலிகள்மேல் குறைகூறும் சிலர் இந்த தந்தைக்கு என்ன ஆறுதல் கூறப்போகின்றனர் ?

புலிகள் இருக்கும் போது ஒவ்வொருநாளும் பத்து பதினைந்து சிறுவர்கள் பலி கொள்ளபட்டுக்கொண்டிருந்தார்கள்.அது உங்கள் ஊன கண்ணுக்கு தெரியவில்லை .முள்ளிவாய்களில் அத்தனை குழந்தகளைகளையும் பலியிட்டதம் உங்களுக்கு தெரியபோவதில்லை.

இன்று கனேடிய நசனில் போஸ்டில் வந்த படங்களை பார்க்க நீங்கள் எல்லாம் மனித பிறப்புகள் தானா என்ற கேள்விதான் எஞ்சி நிற்கின்றது .

அந்த குழந்தை பிள்ளைகளை வெளியில் எடுத்து ஒரு நல்வாழ்விற்கு உதவுவதை விட்டு ஒன்றிரண்டு சம்பவங்களை தூக்கிபிடித்து இன்னமும் புலிகள் வரவேண்டும் என்று இங்கிருந்து புசத்த வேண்டாம்.உங்கடை பிள்ளைகளை வேணுமென்றால் புலிகள் ஆக்கி துவக்கை கொடுங்கள் .

நீங்கள் போலிசாமிகள் போல திருந்தவே இடமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுக்கு உங்களைப்போன்றோரின் உதவியாலும் நாள் ஒன்றுக்கு பத்து பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் என்று பெருமையாக சொல்லலாமே ....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் போது ஒவ்வொருநாளும் பத்து பதினைந்து சிறுவர்கள் பலி கொள்ளபட்டுக்கொண்டிருந்தார்கள்.அது உங்கள் ஊன கண்ணுக்கு தெரியவில்லை .முள்ளிவாய்களில் அத்தனை குழந்தகளைகளையும் பலியிட்டதம் உங்களுக்கு தெரியபோவதில்லை.

இன்று கனேடிய நசனில் போஸ்டில் வந்த படங்களை பார்க்க நீங்கள் எல்லாம் மனித பிறப்புகள் தானா என்ற கேள்விதான் எஞ்சி நிற்கின்றது .

அந்த குழந்தை பிள்ளைகளை வெளியில் எடுத்து ஒரு நல்வாழ்விற்கு உதவுவதை விட்டு ஒன்றிரண்டு சம்பவங்களை தூக்கிபிடித்து இன்னமும் புலிகள் வரவேண்டும் என்று இங்கிருந்து புசத்த வேண்டாம்.உங்கடை பிள்ளைகளை வேணுமென்றால் புலிகள் ஆக்கி துவக்கை கொடுங்கள் .

நீங்கள் போலிசாமிகள் போல திருந்தவே இடமில்லை .

பிறகும் தலைப்பை திசை திருப்ப முயல வேண்டாம். புலிகள் உள்ள போது உணவு தடையை போட்டும் மக்கள் மீது குண்டுகளை பொழிந்தும் கொன்றது இனவாத சிறிலங்கா அரசு.அவ்வேளையில் தான் குழந்தைகள் வயோதிபர்கள் என கொல்லப்பட்டார்கள்.இவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவுக்கும் போது புளட் காடையர்கள் மக்களை கடத்தி கப்பம் கேட்டல், கொடுக்காவிட்டால் அவர்களை கொன்று விடுவது இதனையே தொழிலாக கொண்டவர்கள் (வவுனியாவின் எந்த குடிமகனை கேட்டாலும் சொல்வார்கள்) இன்று புலிகளின் மேல் பழியை போடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

90 செக்கனுக்கு ஒரு பாலியல் வல்லுறவு/பலாத்தாகார முயற்சி இன்றும் நடக்கும் ஒரு நாடு ஓரிரு சம்பவங்களாக உங்களுக்கு எப்படி தெரிகிறது என விளங்கவில்லை.அன்றாட செய்திகளாக இவை தமிழ் , சிங்கள,ஆங்கில ஊடகங்களில் வரும் போது புலிகளின் ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன என்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது.

இப்போ யாருக்கு ஊன கண் என சொல்லுங்கள்??

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் போது ஒவ்வொருநாளும் பத்து பதினைந்து சிறுவர்கள் பலி கொள்ளபட்டுக்கொண்டிருந்தார்கள்.அது உங்கள் ஊன கண்ணுக்கு தெரியவில்லை .முள்ளிவாய்களில் அத்தனை குழந்தகளைகளையும் பலியிட்டதம் உங்களுக்கு தெரியபோவதில்லை.

இன்று கனேடிய நசனில் போஸ்டில் வந்த படங்களை பார்க்க நீங்கள் எல்லாம் மனித பிறப்புகள் தானா என்ற கேள்விதான் எஞ்சி நிற்கின்றது .

அந்த குழந்தை பிள்ளைகளை வெளியில் எடுத்து ஒரு நல்வாழ்விற்கு உதவுவதை விட்டு ஒன்றிரண்டு சம்பவங்களை தூக்கிபிடித்து இன்னமும் புலிகள் வரவேண்டும் என்று இங்கிருந்து புசத்த வேண்டாம்.உங்கடை பிள்ளைகளை வேணுமென்றால் புலிகள் ஆக்கி துவக்கை கொடுங்கள் .

நீங்கள் போலிசாமிகள் போல திருந்தவே இடமில்லை .

ஆயுதம் தாங்கிய புளட் இயக்கத்திற்கு நீங்கள் ஏன் போனீர்கள்?

ஆயுதங்களால் வானவேடிக்கை காட்டி தமிழ் சிறுவர்களை மகிழ்விக்கவா?

அப்பாவிகளை புலிகள் ஆக்கி.........

சும்மா இருந்த தமிழனை உசுப்பேத்தி கைகளில் ஆயுதங்களை திணித்து....

எமக்கு சாவை கொடுத்து விட்டு.

நல்ல வேடம் பூண்டு புலிவாந்தி எடுக்க மனிதர்களால் முடியாது.......

சிறையில் இருப்பவன் அன்றாடம் உணவருந்தி ......... சுதந்திரமாக இறக்கிறான் என்று கண்டுபிடித்த மேதை நீங்கள்தான்.

உங்கள் கல்லறையில் இதை பொறிக்க சொல்லி உரியவர்களோடு பேசுங்கள்.

இதற்குமுன் யாரும் இப்படி சொன்னதில்லை.

[size=2][size=5]தந்தையும் ,சேயும் மிக விரைவில் இணையவேண்டும் என இறைவனைப்பிரார்த்திக்கிறேன்[/size]...............[size=4] மீண்டும்,மீண்டும் இப்படியான சம்பவங்கள் நடைபெற்றுகொண்டிருப்பதை தடுப்பதற்கு , பலமான ,உண்மையான, பற்றுள்ள ஓர் அமைப்பு தமிழர்களுக்கு அமைய வேண்டும் ..........அந்த அமைப்பு யாரைப்போல் இருக்க வேணும் என்பதற்கு உதாரணம் கேட்டால்,ஒரு சிறு பிள்ளையும் சரியாக பதில் சொல்லும். [/size][/size]

[size=2][size=4]டிஸ்கி '; [/size][size=4]குழந்தை கூர்ப்படைந்ததால் சரியான பதில் சொல்லும். இங்கே கூற்படயாதவர் யார் என்று நான் நிர்வாகத்தின் விதிகளுக்கமைய பெயரை குறிப்பிட வில்லை [/size]....... :D :D [/size]

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கடனுக்கு பெத்தது எல்லாம் இப்புடித்தான் திரியும் .. அதுங்களுங்கு இனப்பற்று அது இது என்று... வெளிய எஸ்கேப்பு ஆவதற்கு ஒரு சாக்கு இங்கிட்டு புலிகள் அடிக்கிறார்கள் அங்கிட்டு ஆமி அடிக்கிறான்... இவுங்க ரெலண்டா வெளிநாட்டுக்கு எஸ்கேப்பு ஆகி போட்டார்கள் .. அவுங்க பசங்க எல்லாம் கேம்பிரிட்ஸ் காலேஜில் படிக்குதுகள்...

டிஸ்கி:

ஒற்றுமையாக இருக்கணும் என்று சொல்வாரக்ள் .. ஆனால் அதற்கான இலக்கணம் அவர்களுக்கே தெரியாது.. புலிகள் புலிகள் என்று சொல்வார்கள். இப்பத்தான் புலிகளே இல்லையே என்ன இதுவரைக்கும் புடுங்கீணீர்கள் .. பேற் பேச்சு ஏனும் ராலேது.. இப்படியும் சில ஜன்மங்கள் நடமாடிட்டு இருக்கு ..அவுங்க வருவாய்க்கு அவுங்க ஆயிரம் செய்வார்கள் .. அதெல்லாம் மலைய பார்த்து .... உங்கட வழிய நீங்கள் பார்த்து போய்ட்டே இருக்கணும்...

  • கருத்துக்கள உறவுகள்

விரக்தி, வேதனை, இதுதான் இனி தமிழர்களின் நிலமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.