Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

K.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து

Featured Replies

சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!

ற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம்.

இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர்.

'பராக்’ சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக். மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா p67.jpgவருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந் தோம். மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்...'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

லேசான சாம்பல் நிற சஃபாரியில் சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார். தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர், ''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன், ''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த் தேன்'' என்றார் அந்த மாணவி. ''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. 'பாட்டுக்குப் பாட்டு’ இசை நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சூடுபிடித்தது. அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்.

தினமும் வானொலியில், வணக்கம் கூறி விடைபெற்று நழுவிவிடும் ராஜாவைப் பற்றிய முழு விவரம் தெரிய வேண்டாமா?

இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.

''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)

''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.

அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.

p67a.jpg

1970-ல் ராஜாவின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக் கேட்டபோது...

''சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்’ (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்’ நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

நான் அமைக்கும் 'திரை விருந்து’ நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்’ நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.

மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி’க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' என்றார்.

''புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமே... தங்களுக்கு?''

''இல்லாமலா என்ன... ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது!''

உரையாடல் கவிதை மீது தொற்றியது.

''இலங்கையில் கவியரசர் கண்ணதாசனுக்கு ஏராளமான ரசிகர்கள். கருணா ரத்தின அபய சேகரர் என்பவர் ஒரு சிங்களக் கவிஞர். அவர் கண்ணதாசனின் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத் தில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டு, அப்படியே அதனைக் கவியாக வடித்துவிடுவார்'' என்றார் ராஜா.

ராஜா, இலங்கை வானொலியைவிட்டு வெளியேறிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.

p67b.jpg''நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.

இயக்கங்கள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இணைய வேண்டும். சமீபத்திய வவுனத் தீவு சண்டை ஒரு ஆரோக்கியமான அறிகுறி'' என்கிறார்.

''இப்போதெல்லாம் ஈழ மக்கள் இலங்கை வானொலியை நம்புவது இல்லை. 'லங்கா புவத்’ - என்பதை 'லங்கா பொய்’ என்றே கேலியாக அழைக்கிறார்கள்.

இந்தியப் பத்திரிகைகள் மற்றும் இந்திய வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகளையே நம்புகிறார்கள்'' என்கிறார்.

''சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?''

- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!

- பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி

நன்றி: விகடன் பொக்கிசம்

  • கருத்துக்கள உறவுகள்

"விநோத வேளை" நிகழ்ச்சியில் கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலைக் கேட்க...

.smiley4193.gifஒரு நிமிடம், எழுபதுகள் காலத்திற்கே சென்ற உணர்வு..

[size=3]-யாழ் சுதாகர் இணையத்திலிருந்து[/size]

  • தொடங்கியவர்

"விநோத வேளை" நிகழ்ச்சியில் கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலைக் கேட்க...

.smiley4193.gifஒரு நிமிடம், எழுபதுகள் காலத்திற்கே சென்ற உணர்வு..

-யாழ் சுதாகர் இணையத்திலிருந்து

பகிர்வுக்கு நன்றி ராஜவன்னியன் !! இந்த நிகழ்ச்சியை நானும் சின்ன வயதில் கேட்டு இருக்கின்றேன். நான் 80 இன் ஆரம்பத்தில் குருணாகல் என்ற சிங்கள் ஊரில் வசிக்கும் போது இ.ஒ.கூ இன் அலைவரிசையில் கேட்டு கேட்டு உணர்வுக்குள் ஒன்றாகியிருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி நிழலி..

அவரின் "எதிரொலி" மற்றும் "எங்கள் தங்கராஜா" படத்திற்கான வானொலி விளம்பர யுக்தியிலும், குரல் வளத்திலும் தமிழகமே சொக்கியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது..

சில நாட்கள் சென்னை வர நேர்ந்தால், சிற்றலை ஒலிபரப்பை தேடிப்பார்த்து(சென்னையில், தமிழ் சேவையின் மத்திய அலைவரிசை கிட்டுவதில்லை) அவரின் குரலைக் கேட்க காத்திருப்பது வழக்கம்..

ஏறத்தாழ மத்திய, தென் தமிழகத்தின் அனைவரையும் சுத்தத் தமிழில் இனிமையான குரல்வளத்தால் தினமும் வசீகரித்தவ்ர்கள் மயில்வாகனன் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம். இவர்கள் யாவரும் அமரத்துவம் அடைந்துவிட்டனர்..ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவலைகள் இன்னமும் எம் மனதில் மிக ஆழமாய்...

சில நினைவு:

"நீயா?" திரைப்படத்தில் ஒரு காட்சியில் மனித உருவில் வந்த சிறீப்ரியா இறுதியில் இறக்கும் தறுவாயில் இப்படி கதறுவார்... “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” .. ஆனால், நம் கே.எஸ் ராஜா, உடனே இடையில் வந்து, "இல்லை நேயர்களே..! உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது..மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன்" என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெற்று அந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்...

இதே போன்றே சிவாஜியின் "எதிரொலி" திரைப்படத்தில், ஒரு நீதிமன்ற காட்சியிலும் உட்புகுந்து தன் குரலால் கலக்குவார்...

யம்மாடியோவ்... !

மிக சொற்ப காலத்தில் வேகமான, கம்பீரமான தன் குரலில், தமிழை மிகத் தெளிவாக உச்சரித்து தமிழர்களை வசீகரப்படுத்தியவர்.

f-8-4.jpgf-7-5.jpg

இப்படங்களில் கே.எஸ்.ராஜா(?), ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் பி.எச். அப்துல் ஹமீத் ஆகியோரை அடையாளம் காண இயலுகிறது...

[size=3]படங்கள் உதவி: : ஈழவயல்[/size].

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவலைகளை மீட்டதில் இன்னும் சில இலங்கை வானொலி தமிழ்ச் சேவை அறிவிப்பாளர்கள் பெயர் ஞாபகதிற்கு வந்துள்ளது. அவர்களின் குரல்கள் சிறிது ஞாபகம் இருப்பினும் இணையத்தில் படங்கள் கிட்டவில்லை.

  • புவனலோசினி
  • சில்வஸ்டர் பாலசுப்ரமணியம்
  • பரராசசிங்கம்
  • மயில்வாகனன்
  • ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
  • ஜோக்கிம் பெர்னாண்டோ

sp+mailvaganan_radio+ceylon+announcer.jpg

மயில்வாகனன்

f-8-2.jpg

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

இவர்கள் இன்றும் உள்ளனரா...? என தெரியாது.. அறிந்தவர்கள் இங்கே விபரம் பதிந்தால் நன்று.

.

கே,எஸ் ராஜாக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி கீழே

http://www.youtube.com/watch?v=jQt3sXuTgOA

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் தமிழகத்தில் பலர் கே.எஸ்.ரசாபற்றி தமிழகத்தில் விசாரிக்கிறார்கள்.. கொலையுண்ட அந்த கலைஞ்சனுக்கு என் அஞ்ச்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ksrajah.2.jpg

[size=5]அமரர் கே.எஸ்.ராஜா பற்றிய [/size]

[size=5]ஒரு ரசிகனின்[/size]

[size=5]நினைவலைகள்.[/size]

- யாழ் சுதாகர்

'தூங்க வைப்பதல்ல வானொலி அறிவிப்பு

உற்சாகம் பொங்க வைப்பது தான்

உயிர்த்துடிப்பான அறிவிப்பு' என்று...

எழுபதுகளில் எழுந்து வந்த

மின்சாரத் தமிழே... வணக்கம் ! ...

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்

ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்

வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...

உங்களை

மறக்க முடியுமா அய்யா ?

சென்னைக்குச் சுற்றுலா சென்று திரும்பிய

எங்கள் ஊர் ரசிக முகங்களிடம்...

எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பார்த்தீர்களா ? என்று

என் விசில் வயதுகளில் நான் விசாரித்ததுண்டு.

பத்து வருடங்கள் கழித்து நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது...

இந்திய நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில்

எனக்கு இமய வியப்பைக் கொடுத்தது எது தெரியுமா ?

நீங்கள் கே.எஸ். ராஜாவைப் பார்த்திருக்கிறீர்களா ?

அவர் எப்படி இருப்பார் ?

------------------

மின்னல் வேகம்...

ஆனாலும் வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான

தெளிவான உச்சரிப்பு...

இந்த இரண்டும் இணைந்து ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்

உங்களைப்போல்... இனி பிறக்க முடியுமா?...

உங்கள் அருமையை சுருங்கச் சொல்லி...

விரிய விளங்க வைக்க இப்படியும் சொல்லலாம்.

ஒரு எம்.ஜி.ஆர்....

ஒரு கண்ணதாசன்...

ஒரு சிவாஜி...

ஒரு டி.எம். சௌந்தரராஜன்...

ஒரு கே.எஸ்.ராஜா...

தனித்துவமாக நடிக்கும் திறமை இருந்தாலும் புது முகங்கள்

சில காட்சிகளிலாவது...சிவாஜியின் பாதிப்பில் சிக்கிக் கொள்வதைப் போல

முதன் முதலாக ஒலிவாங்கிக்கு முன்னே நிற்கும் அறிவிப்பாளர் பலரை...

தொப்பி அணிந்து வரும் உங்கள் தோழமைக்குரல்

அப்பிப் பிடித்து ஆட்சி செய்வதை அவதானித்திருக்கிறன்.

பேசாதவர்களைப் பேச வைத்த..

பார்க்காதவர்களைப் பார்க்க வைத்த...

நடக்காதவர்களை நடக்க வைத்த...

சித்தர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால்... ஓடாததை எல்லாம் ஓடவைத்த சித்தரை

நேரில் பார்த்தேன்.

உங்களைத் தான் சொல்கிறேன் !

இந்தியாவில் ஓடாத படங்கள் இலங்கையில்

உங்கள் மந்திர உச்சாடனம் கேட்டதால்

100 நாள்.. வெள்ளி விழா... என வெற்றி நடை போட்டனவே...

அதைத் தான் சொல்கிறேன்...

இந்தியாவிலும் கூட பின்னணியில் இருந்த பல படங்கள்...

திரை விருந்து நிகழ்ச்சிகளில்

உங்கள் 'தங்கக் குரல் 'கட்டி விட்ட 'தாயத்து' மகிமையால்

சிங்க நடை போட்டு

விநியோகஸ்தர்களை வசூல் மழையில் நனைத்ததைப் பற்றிய

வியப்புச் செய்திகளையும்

பத்திரிகைச் செய்திகளில் படித்திருக்கிறேன்.

உங்கள் உற்சாக குரலுக்காக மட்டுமன்றி அந்த வார நிகழ்ச்சியில்

புதிதாக நீங்கள் செய்யப்போகும் ஒட்டு வேலைகளையும்,

விளம்பர சாதுர்யங்களையும் தவறாது ரசிப்பதற்காக

சலிக்காத ரசிக வேட்கையுடன்

வானொலிப் பெட்டிக்கு அருகில் காத்துக் கிடந்தேன் என்பதை

அறிவீர்களா ராஜா ?

நடிகர் திலகத்தின் 'எங்கள தங்க ராஜா' படத்துக்கு

நீங்கள் விளம்பரம் வாசித்தபோது

எங்கள் என்று குதூகலமாக ஆரம்பித்து...

தங்க என்ற இடத்துக்கு வரும்போது

குரலில் குழைவு கூட்டி அவசரமாக நெகிழ்ந்து..

ராஜா என்று கம்பீரமாக முடிப்பீர்களே...

அன்று கேட்ட அந்த 'தங்க'

இன்றும் என் செவியோரங்களில் மங்காமல் தங்கி விட்டது.

'நான் ஏன் பிறந்தேன்' படத்தில்

கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்

'அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க

வைக்கறதும் தான் என்னோட லட்சியம்...'

என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே உங்கள் இலட்சியம் என்ன ?

என்று நீங்கள் பேசிவிட்டு

அந்த இடத்தில் கொண்டு வந்து

லிங்க் கொடுப்பீர்களே... அடடா !

நீயா, குரு, நிறம் மாறாத பூக்கள். பட்டாக்கத்தி பைரவன், மீனவநண்பன், என்று பல படங்களுக்கு... நீங்கள் செய்து காட்டிய

இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்

இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.

ஈர்ப்புத் தமிழே... எனக்கு மட்டும்

இந்த ரகசியம் சொல்வீர்களா ?

'சந்திர வதனன் 'எம்.ஜி.ஆரின்

காந்தச் சிரிப்பைக் கண்டதும் வந்திடும் உற்சாகம்...

உங்கள் சுந்தரக் குரலால்

எம்.ஜி.ஆர் என்று சொன்னதைக் கேட்டதும் வந்ததே எப்படி ?

ஈர்ப்புத் தமிழே எனக்கு மட்டும்..

இந்த ரகசியம் சொல்வீர்களா ?

கவியரசர் கண்ணதாசன் காலமானார் என்ற சேதி அறிந்தவுடன்

மூச்சிரைக்க ஓடி வந்து...

இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்துக்குள் பார்வை பதித்து...

உங்களுக்கே இயல்பான தேர்ந்த அவசரத்துடன்

கண்ணதாசன் எழுதிய முதல் இசைத் தட்டைத் தேடிப்பிடித்து...

இன்னும்... இன்னும்... அவர் கவிப்புலமைக்கு

மகுடம் சூட்டிய இசைத் தட்டுக்களை எல்லாம் அள்ளிக்கொண்டு

அவசர அவசரமாக அன்றைய திரை விருந்து நிகழ்ச்சியை

அரசவைக் கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலியாக்கி...

அயல்நாட்டு வானொலிகளையும் முந்தி நின்றீர்களே...!

அறிவிப்பு பாணியில் மட்டுமன்றி

உழைப்பிலும்...

கடமையிலும்...

தமிழன் என்ற துடிப்பிலும்...

உங்களுக்கு இருந்த வேகத்தை

அன்றைய நிகழ்ச்சியில் உணர்ந்து நெகிழ்ந்தேன்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்

யாழ்தேவிக்காக காத்திருந்த பயணிகள் மத்தியில்

எதிர்பாராதவிதமாக உங்களை இனங்கண்டு...

இன்ப அதிர்ச்சிக்குத் திரைபோடத் தெரியாத பாமரன் போல்

உங்கள் பக்கம் பாய்ந்து வந்து...

ரசிகன் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.

புன்னகையுடன் அங்கீகாரம் தருகிறீர்கள்.

அந்த அங்கீகாரமும், உங்கள் எளிமையும் தந்த தைரியத்தில்

அதிக உரிமை எடுத்துக் கொண்டு அளவளாவுகிறேன்.

தகரம் வேய்ந்த திரைஅரங்குகளின் பெயர்களையும்

ஸ்டைலோடு சொல்லி அவற்றிற்கு

சிகரகம்பீரம் கொடுக்கும் உங்கள் சிறப்புக் குரல் பற்றி -

(இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்புடன்) பட்டியல் போட்டுப் பாராட்டுகிறேன்.

நீங்கள்... நெகிழ்வது தெரிகிறது...

அதற்குப் பிறகு நிறையவே பேசினீர்கள்.

எண் ஜோதிடம் பற்றியும் பேசினோம்.

உங்கள் பிறந்த தேதி கேட்டேன்

சொன்னீர்கள்.

(அடடா நீங்களும் எட்டா? இந்த விஷயத்தில் உங்களை ஒத்திருப்பதை உள்ளுக்குள் உரத்து மகிழ்கிறேன்.)

புகையிரத நிலைய பூபால சிங்கம் புத்தகக் கடை...

சிவராசா எழுதிய எண் ஜோதிட நூலை

என்னிடம் வாங்கிய நீங்கள்...

முகவரி தந்து கடிதம் போடச் சொல்கிறீர்கள்..

யாழ்தேவி புறப்படுகிறது...

அன்றைக்கு மட்டும் யாழ்தேவியின் கம்பீரம்

சற்று கூடியிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது.

உள்ளே... நீங்கள் அல்லவா ?

அதற்குப் பிறகு... ஓரிரு வருடங்கள் கழித்து...

ஈச்சமோட்டை சனசமூக நிலையம் நடத்தப்போகும்

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நீங்கள்

தொகுத்து வழங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

இதற்கு முன்பு ஒரு முறை வீர சிங்கம் மண்டபத்தில்

உங்கள் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள முயன்று

முடியாமல் போனது நினைவுக்கு வந்தது.

இருந்தாலும் நம்பிக்கையுடன்

நடுவர்களிடம் பெயர் கொடுத்தேன்.

போட்டியில் பங்கேற்கும் நூற்றுக்கணக்கான

நேயர்களில் என்னையும் ஒருவனாக தேர்ந்தெடுத்தார்கள்.

மேடையில் எனது முறை வருகிறது...

போட்டியின் ஆரம்பத்தில் என்னைப் பற்றிய மேடை அறிமுகத்துக்காக

என்னிடம் சில கேள்விகள் கேட்கிறீர்கள்.

ராஜாவுடன் ஒலிவாங்கி பிடித்துப் பேசுகிறோம் என்ற

உயர மிதப்பில் உற்சாகமாக பதில்களை சொல்லுகிறேன்...

சுதாகர்... உங்கள் பொழுது போக்கு என்ன ? என்று கேட்கிறீர்கள்.

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிப்பது என்கிறேன்.

கரகோஷத்தில் ஈச்சமோட்டை அதிர்கிறது.

கரகோஷத்திற்காகத் தானே எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னீர்கள் சுதாகர் ?

மறுபடியும் என்னைப் பேச வைக்க விரும்புகிறீர்கள்.

கரகோஷத்திற்காக நான் அவர் பெயரைச் சொல்லவில்லை. வானொலி உலகில் எப்படி ஒரே ஒரு கே.எஸ்.ராஜா இருக்க முடியுமோ அது போல மக்கள் திலகமாக திரை உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்... என்று துவங்கிய என் எம்.ஜி.ஆர் புராணத்தில் சாமர்த்தியமாக உங்கள் பெயரையும் நுழைத்த பெருமிதத்துடன் பேச்சை முடிக்கிறேன்.

இரண்டு மடங்கானது கரகோஷம்!.

நெல்லியடி மகாத்மா திரையரங்கில்...

'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிவருவதற்கு சில தினங்கள் முன்பு...

அப்படம் நகரங்களில் ஓடும்போது நீங்கள் வழங்கிய வானொலி விளம்பரத்தை ஒலிநாடாவில் பிடித்து வைத்திருந்து,

வேறொரு படத்தின் இடைவேளை சமயத்தில் அதை ஒலிக்கச் செய்ததை எதிர்பாராதவிதமாக கேட்டபோது உங்கள் ரசிகனாக துள்ளி குதித்ததையும்,

சுமார் 15 ஆண்டுகள் கழித்து சென்னை கமலா திரையரங்கில் ஏதோ ஒரு படத்தின் இடைவேளையில்... ஆடியோ விளம்பரங்களின் நடுவில் எதிர்பாராதவிதமாக உங்கள் மின்னல் தமிழைக் கேட்டு அந்த 20 நொடிகளும் எங்கள் கந்தர் மடம் வீட்டுக்குள் நான் கால் பதித்ததையும் -

சீனி மாமாவிடம் வாங்கிய அவர் உயரத்தில் பாதி நீளம் கொண்ட பழங்காலத்து ரேடியோ பெட்டியின் பேசும் முகத்தை முத்தமிட்டதையும் -

உங்கள் குரல் நின்றுபோனதும் மீண்டும் வெறுமைக்குள் வந்து விழுந்ததையும் இங்கு சொல்லாவிட்டால்....

வேறு எங்கு சொல்வது ஐயா ?

அதற்குப் பிறகு....

1986 என்று நினைக் கிறேன்.

நீங்கள் சென்னை விவித்பாரதியில் இசை மலர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

சென்னையில் திரைப்படப் பத்திரிகையாளனாக நான் பணியாற்றி கொண்டிருக்கின்றேன்.

டி.எம். சௌந்தரராஜன், சிவகுமார், கமல்ஹாசன் என்று கலையுலக சாதனையாளர்களை செவ்வி கண்டு எழுதிய நான்...

அந்த வரிசையில் எங்கள் மண்ணைச் சேர்ந்த உங்களைப் பற்றியும் எழுதிக் குளிர ஆசைப்பட்டு -

எங்கெல்லாமோ தேடி அலைந்து...

கடைசியில் தங்கக் குரலின் தங்குமிடம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ளமாடி வீடு என்கின்ற தகவல் அறிந்து

உங்களை நாடி வந்து செவ்வி கண்டேன்.

இசை மலர் நிகழ்ச்சியில்

உங்கள் ஊஞ்சல் தமிழை ரசித்தவர்கள் இதயம் கனிந்து அனுப்பிய ஆயிரக்கணக்கான பாராட்டு மடல்களையெல்லாம்

உங்கள் இல்லத்தில் ஆசையோடு அடுக்கி வைத்திருந்தீர்கள்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் ஒலித்த உங்கள் வர்த்தக விளம்பரங்களையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்த வைத்திருந்து...

நீங்கள் இந்தியாவில் இருப்பதை அறிந்ததும் அந்த ஒலிநாடாவை உங்களுக்கு அனுப்பி வைத்த தமிழ்நாட்டு ரசிகர் ஒருவரைப் பற்றி என்னிடம் பெருமிதத்தோடு சொல்லி நெகிழ்ந்தீர்கள்.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அந்த ஒலிநாடாவை எனக்காக ஒலிக்கச் செய்து என்னையும் பத்து வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்று பரவசப்படுத்தினீர்கள்.

1987, ஜூலை 27ம் தேதி, மாலை 6.30 மணி.

சென்னை மியூசிக் அகாடமியில் என் இசைத் தோழன் உதயா வழங்கும் இன்னிசை மழை நிகழ்ச்சி.

அரங்கு வழிந்த கூட்டம்.

வணக்கம் என்று சொல்லி உங்கள் பாணியில் கரங்களை உயர அசைத்தவாறே மேடையில் தோன்றுகின்றீர்கள்.

நீங்கள் மேடைக்கு வந்ததும் சொல்லி வைத்தது போல அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து உங்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.

நீங்கள் உணர்ச்சிப் பெருக்குடன் உங்கள் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி... 'எனக்கு போடப்பட்ட மாலை.... உங்களுக்கு போடப்படவேண்டிய மாலை'... என்று சொல்லி ஆடியன்ஸ் மத்தியில் தூக்கிப் போடுகிறீர்கள்...

அந்த நிகழ்ச்சியின் இடைவேளையில் - மேடையின் பின்புற வாயிலில் நின்று கொண்டிருந்த உதயாவை ஒரு ரசிகர் நெருங்குகிறார்.

நீங்கள் தானே இந்த இசை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ?

ஆமாம்.... உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறார் உதயா.

கலைந்து போய் வாரப்படாத தலையுடனும், கசங்கிப் போன ஆடையுடனும், கலையாத ஆர்வத்துடனும் காணப்பட்ட அந்த ரசிகர் உடனே உதயாவின் கரங்களைப் பற்றுகிறார்.

'கே.எஸ் . ராஜாவை நேரில் பார்க்கணும்னு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரோட சில நிமிஷங்களாவது பேச ஆசைப்படும்றேன். தயவு செய்து ராஜாகிட்டே என்னை கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்திவைங்க...' என்று கக்கத்தில் இருக்கும் மஞ்சள் பை நழுவுவது தெரியாமல் உதயாவை கெஞ்சுகிறார் அந்த ரசிகர்.

உடனே அந்த ரசிகரை கே.எஸ். ராஜா இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார் உதயா.

திரை நட்சத்திரங்களின் நடுவில் நின்று கொண்டிருந்த ராஜாவை நெருங்கி அந்த ரசிகரைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்துகிறார் உதயா.

உடனே... ராஜா அந்த ரசிகரை சேர்த்து அணைத்துக் கொள்கிறார்.

' நம் இருவரையும் ஒரு போட்டோ எடுங்கள்' என்று அருகில் நின்ற புகைப்படக் கலைஞரிடம் கட்டளையிடுகிறார்.

தோழமையுடன் அந்த ரசிகருடன் அளவளாவுகிறார்.

அறிவிப்பு தீபத்தை தரிசித்த திருப்தியுடன் திருவண்ணாமலை திரும்புகிறது.

இந்த செய்திகளையெல்லாம் பின்பு உதயா என்னிடம் சொன்ன போது இலங்கைத் தமிழனாக என்னுள் பெருமிதம் பெருக்கெடுத்தது.

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்

ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்

வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...

உங்களை

மறக்க முடியுமா அய்யா ?

-யாழ் சுதாகர்

yazhsudhakar@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்குப் பெருமை சேர்த்த மதுரக் குரலோன்

பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தவர்.

நீண்ட வசனத்தை இடை நிறுத்தாது பிழைவிடாது மிக விரைவில் பேசி

முடிக்க அவர் ஒருவரால் தான் முடியும்.

இப்போ இரண்டு நிமிடங்களுக்கு முதல் ஓசி பத்திரிகை எடுக்க போன இடத்தில் கமலா தம்பிராஜாவை சந்தித்தேன்.சுற்றுலா ஏஜென்சி வைத்திருப்பதாக சொன்னார்கள்.கே.எஸ் ராஜாவை பற்றிக் கேட்டேன்.தான் வானொலியில் பகுதி நேரம் தான் வேலை செய்ததாக சொன்னா.இருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்பமாக சந்தோசமாக பழகிய காலமது என்றார் ,அநியாயமாக கொலை செய்துவிட்டார்கள் என்றா ,யார் என்று கேட்டேன் ,கையை போட்டு வாறன் என்று காட்டிவிட்டு போய்விட்டார்

இவர்கள் இன்றும் உள்ளனரா...? என தெரியாது.. அறிந்தவர்கள் இங்கே விபரம் பதிந்தால் நன்று..

மயில்வாகனன் இறந்துவிட்டார்.

மறக்க முடியாத மதுரக் குரலோன். ஒவ்வொரு துளியும் உற்சாகமாகத்தான் கழியும். பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியையும் முதன் முதலில் கே எஸ் ராஜாதான் ஆரம்பித்து வைத்தவர் என நினைக்கிறேன்.

'மீனவ நண்பன்' பட விளம்பரத்தில் வரும் நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் எனும் வசனத்தை அவரின் மைத்துனருடன் பிரச்சனை வந்த பொழுது, மைத்துனரிர்காக ஒலிபரப்பினார் என அந்த நேரத்தில் அவருடன் பழகிய நண்பர் கூறினார்.

"விநோத வேளை" நிகழ்ச்சியில் கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலைக் கேட்க...

.smiley4193.gifஒரு நிமிடம், எழுபதுகள் காலத்திற்கே சென்ற உணர்வு..

[size=3]-யாழ் சுதாகர் இணையத்திலிருந்து[/size]

... 84ம் ஆண்டு, பப்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் நாள் கே.எஸ்.ராஜா குழுவினர் "செனித்துடன் ஒரு நிமிடம்" எனும் நிகழ்ச்சியை ... மேலிணைக்கப்பட்ட நிகழ்ச்சியை போன்றதே, செனித் பாதணிகள் தயாரிக்கும் நிறுவனம் நடாத்திய இந்நிகழ்ச்சியை முன் வேறொரு நிறுவனம் பிரதான அனுசரணையாளர்களாக இருந்தார்கள் என நினைக்கிறேன் ... பாடசாலை நேரம் அங்கு வந்து பிரதான மண்டபத்தில் ஒலிப்பதிவு செய்தார்கள். அந்நிகழ்ச்சியில் பங்கு பற்றியதே ஓர் மறக்க முடியாத அனுபவம்!

... இங்கு கழக கண்மணி அர்ஜுனின் கேள்விக்கு ........ அக்காலகட்டத்தில் கொழும்பில் என்னுடன் படித்த ஓர் நண்பனின் தாயாரும், வளர்த்த தந்தையாரும் அக்கால கட்டத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளார்களாக இருந்தவர்கள். அவர்களுடன் நன்கு பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர்கள் கே.எஸ்.ராஜாவை பற்றி கூறியவைகள், கே.எஸ்.ராஜாவின் இன்னொரு பக்கம். ......... பதிலளிக்க தேவையில்லை. ஏனெனில் அதற்கான பதிலை எதிர்பார்த்தல்ல இத்திரி!

தனித்துவமான திறமைசாலியைப் பற்றி தெரிந்த மற்றும் தெரியாத பல விடயங்களை பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி. அவரது குரலை மீண்டும் கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

அதேவேளை நெஞ்சில் ஒரு இனம் புரியாத வலியும் கூடவே!

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

கே எஸ் ராஜா நல்ல திறைமை சாலி.. போராட்ட ஆரம்ப காலத்திர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் தொடர்புகளை பேணியவர். அதற்கு முக்கிய காரணம் டேவிற்சன்.ஆரம்பத்தில் இயக்க ஒற்றுமைக்காக பாடுபட்டிருந்தார். இந்திய படை வருகையின் பின்னர் புலிகளிற்கெதிரான பிரச்சாரங்களில் ஈடு பட்டிருந்தார். முக்கியமாக புலிகளை நையாண்டி பண்ணும் எமதர்ம ராஜா என்கிற நாடகத் தொடர். அதனால் அவர் கடற்கரையில் மிதந்தார்.

  • தொடங்கியவர்

முக்கியமாக புலிகளை நையாண்டி பண்ணும் எமதர்ம ராஜா என்கிற நாடகத் தொடர். அதனால் அவர் கடற்கரையில் மிதந்தார்.

அந்த நாடகத்தை எழுதித் தயாரித்த ஈபிடிபி அற்புதன் (தினமுரசு ஆசிரியர்) டக்ளசாலேயே வெள்ளவத்தை கடற்கரை வீதியில் போட்டுத் தள்ளப்பட்டார்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சேவையை பலாலியில் இருந்து பலாலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் இயக்கினார்கள் என்று நினைக்கிறேன்.

இதையே பின்னர் இலங்கை இராணுவமும் பின்பற்றியது, வானம்பாடி, மக்களின் குரல் என்ற பெயர்களில்.

பகிர்விற்கு நன்றி நிழலி..

அவரின் "எதிரொலி" மற்றும் "எங்கள் தங்கராஜா" படத்திற்கான வானொலி விளம்பர யுக்தியிலும், குரல் வளத்திலும் தமிழகமே சொக்கியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது..

சில நாட்கள் சென்னை வர நேர்ந்தால், சிற்றலை ஒலிபரப்பை தேடிப்பார்த்து(சென்னையில், தமிழ் சேவையின் மத்திய அலைவரிசை கிட்டுவதில்லை) அவரின் குரலைக் கேட்க காத்திருப்பது வழக்கம்..

ஏறத்தாழ மத்திய, தென் தமிழகத்தின் அனைவரையும் சுத்தத் தமிழில் இனிமையான குரல்வளத்தால் தினமும் வசீகரித்தவ்ர்கள் மயில்வாகனன் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா மற்றும் ராஜேஸ்வரி சண்முகம். இவர்கள் யாவரும் அமரத்துவம் அடைந்துவிட்டனர்..ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவலைகள் இன்னமும் எம் மனதில் மிக ஆழமாய்...

சில நினைவு:

"நீயா?" திரைப்படத்தில் ஒரு காட்சியில் மனித உருவில் வந்த சிறீப்ரியா இறுதியில் இறக்கும் தறுவாயில் இப்படி கதறுவார்... “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” .. ஆனால், நம் கே.எஸ் ராஜா, உடனே இடையில் வந்து, "இல்லை நேயர்களே..! உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது..மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன்" என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெற்று அந்த விளம்பரதாரர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்...

இதே போன்றே சிவாஜியின் "எதிரொலி" திரைப்படத்தில், ஒரு நீதிமன்ற காட்சியிலும் உட்புகுந்து தன் குரலால் கலக்குவார்...

யம்மாடியோவ்... !

மிக சொற்ப காலத்தில் வேகமான, கம்பீரமான தன் குரலில், தமிழை மிகத் தெளிவாக உச்சரித்து தமிழர்களை வசீகரப்படுத்தியவர்.

f-8-4.jpgf-7-5.jpg

இப்படங்களில் கே.எஸ்.ராஜா(?), ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் பி.எச். அப்துல் ஹமீத் ஆகியோரை அடையாளம் காண இயலுகிறது...

[size=3]படங்கள் உதவி: : ஈழவயல்[/size].

.

அன்புக்குரிய நண்பரே,

நீங்கள் இணத்துள்ள படங்கள் பழைய நினைவுகளை மனதில் அலைமோத வைத்திருக்கின்றன.இணைப்புக்கு நன்றி..

துரதிஷ்டவசமாக இந்தப்படங்களில் கே.எஸ்.ராஜா இல்லை.முதலாவது படத்தில் இருப்பவர்களில் என் நினைவுக்கு வரும் பெயர்களை குறிப்பிடுகிறேன். இரண்டாவது படத்தில் இருப்பவர்கள் முஸ்லீம் சேவையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் பரிச்சியமில்லை.

முதலாவது படத்தில் (இடமிருந்து வலமாக)

நிற்பவர்கள் : எஸ்.ராமச்சந்திரன் (தயாரிப்பு உதவியாளர்), அடுத்தவர் (தெரியாது), மூன்றாமவர் ஜோசப் ராசேந்திரன்,(வாடைக்காற்று,வீசுகின்ற காலத்திலே போன்ற சிறந்த திரைப்படபாடல்களை பாடியவர்), அடுத்தவர் அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா, மஹதி ஹசன் இப்றாஹிம், அறிவிப்பாளை ஜோக்கிம் பெர்னாண்டோ, அடுத்தவர் (தெரியாது), கடைசியில் ராசேஸ்வரி சண்முகத்தின் கணவர், நாடக எழுத்தாளர் சி.சண்முகம்.

இருப்பவர்கள்: விசாலாட்சி ஹமீட் (அப்துல் ஹமீட்டின் உறவினரல்ல) , ராசேஸ்வரி சண்முகம், வி.பி.தியாகராஜ, ராஜகுரு சேனாதிபத் கனகரட்னம், அப்துல் ஹமீட்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது படத்தில் (இடமிருந்து வலமாக)

நிற்பவர்கள் : எஸ்.ராமச்சந்திரன் (தயாரிப்பு உதவியாளர்), அடுத்தவர் (தெரியாது), மூன்றாமவர் ஜோசப் ராசேந்திரன்,(வாடைக்காற்று,வீசுகின்ற காலத்திலே போன்ற சிறந்த திரைப்படபாடல்களை பாடியவர்), அடுத்தவர் அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா, மஹதி ஹசன் இப்றாஹிம், அறிவிப்பாளை ஜோக்கிம் பெர்னாண்டோ, அடுத்தவர் (தெரியாது), கடைசியில் ராசேஸ்வரி சண்முகத்தின் கணவர், நாடக எழுத்தாளர் சி.சண்முகம்.

இருப்பவர்கள்: விசாலாட்சி ஹமீட் (அப்துல் ஹமீட்டின் உறவினரல்ல) , ராசேஸ்வரி சண்முகம், வி.பி.தியாகராஜ, ராஜகுரு சேனாதிபத் கனகரட்னம், அப்துல் ஹமீட்.

பழைய நினைவுகளை மீட்டி தகவல்களையளித்ததற்கு,

மிக்க நன்றி, பொன்னியின் செல்வன். smiley6949.gif

இன்னும் சில அறிவிப்பாளர்களின் பெயர்களை பின்னர் அறியத்தருகிறேன்... பல வருடங்கள் ஓடிவிட்டனவே..!

இதில் மயில்வாகனம் சர்வானந்தா மற்றும் மயில்வாகனன் என இருவர் உள்ளனரே...! இருவரும் வெவ்வேறு நபர்களோ?

smiley3144.gif'நடராஜா சிவம்' என்றொரு அறிவிப்பாளர் இருந்ததாக ஞாபகம்.

இவர் பெரும்பாலும் தமிழ்ச் சேவையின் அன்றைய வர்த்தக ஒலிபரப்பை முடித்துவைக்கும் சமயத்தில்(மாலை 5.58 மணி) பல முறை வந்ததாக நினைவு!

ஆமாம். ராஜவன்னியன்..இனிமையான நினைவுகள் அவை.

எஸ்.மயில்வாகனன் (இலங்கைவ் வானொலி வர்த்தக சேவையின் முன்னோடி அறிவிப்பாளர்) மயில்வகனம் சர்வானந்தா (வயதில் இளையவர்).

ஆமாம். நடராஜசிவம் வர்த்தக சேவை அறிவிப்பாளர்தான். திரைப்படங்களில் நடித்த நடிகரும் கூட.

முன்பு யாழ்களத்தில் நான் இணைத்த கே.ஏஸ்.ராஜா - ஜேசுதாஸ், சுஜாதா சம்பந்தப்பட்ட யாழ்ப்பாணம் திறந்தவெளியரங்கில் நடந்த நிகழ்ச்சியக் கேட்டுப்பாருங்கள்.

http://www.esnips.com/displayimage.php?pid=5084164

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியனுக்கு எல்லாம் நல்லாய் தெரியுது.

எங்கள் வீட்டில், வானொலிப் பெட்டி இருந்தாலும்....

காலைச்செய்தி, மாலைச்செய்தி கேட்க மட்டுமே... அனுமதி.

மிச்சத்தை... கேட்டால், நாங்கள் கெட்டுப் போடுவமாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். ராஜவன்னியன்..இனிமையான நினைவுகள் அவை.

எஸ்.மயில்வாகனன் (இலங்கைவ் வானொலி வர்த்தக சேவையின் முன்னோடி அறிவிப்பாளர்) மயில்வகனம் சர்வானந்தா (வயதில் இளையவர்).

ஆமாம். நடராஜசிவம் வர்த்தக சேவை அறிவிப்பாளர்தான். திரைப்படங்களில் நடித்த நடிகரும் கூட.

முன்பு யாழ்களத்தில் நான் இணைத்த கே.ஏஸ்.ராஜா - ஜேசுதாஸ், சுஜாதா சம்பந்தப்பட்ட யாழ்ப்பாணம் திறந்தவெளியரங்கில் நடந்த நிகழ்ச்சியக் கேட்டுப்பாருங்கள்.

http://www.esnips.co...php?pid=5084164

பொன்னியின் செல்வன், உங்கள் இணைப்பில் ஒன்றுமே இல்லையே..எதோ பிழை செய்தி வருகிறது. வேறு இணைய முகவரி ஏதும் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியனுக்கு எல்லாம் நல்லாய் தெரியுது.

எங்கள் வீட்டில், வானொலிப் பெட்டி இருந்தாலும்....

காலைச்செய்தி, மாலைச்செய்தி கேட்க மட்டுமே... அனுமதி.

மிச்சத்தை... கேட்டால், நாங்கள் கெட்டுப் போடுவமாம். :rolleyes:

இப்பவே இந்த 'ஏ' போடு போடுகிறீர்களே சிறி...? smiley1674.gif

அந்நாளில் உங்களை கவனிக்காமல் விட்டிருந்தால்...? smiley4642.gif

உங்கள் பெற்றோர்கள், நல்லதே செய்துள்ளார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.