Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரை கொலைகாரன் என ஆள்வைத்து பேசவைத்த கருணாநிதியின் துரோகத்தை கண்டிப்போம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவரை கொலைகாரன் என ஆள்வைத்து பேசவைத்த கருணாநிதியின் துரோகத்தை கண்டிப்போம்! உலகத்தை ஏமாற்ற மாநாடு!! உள்ளக்குமுறலை வெளிப்படுத்த தி.மு.க. செயலாளர்!!!

ஊர் உலகத்தை ஏமாற்றுவதற்கு மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதுள்ள வெறுப்பை உள்ளக்குமுறலை வெளிப்படுத்துவதற்கு தி,மு.க. செயலாளரை களமிறக்கிவிட்டுள்ளார்.

தி.மு.க. செயலாளரும் முன்னால் அமைச்சருமான என்.கே.பி.ராஜா என்ற தற்குறியை பேசவைத்து தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ள கருணாநிதியின் துரோகத்தை உலகத்தமிழர்கள் உணர்ந்து கொள்வதோடு முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

கருணாநிதி என்று பெயர் வைத்துள்ள மான ரோசமுள்ள தமிழர்கள் உடனடியாக உங்கள் பெயர்களை மாற்றி நல்ல தமிழ்ப்பெயர்களை சூட்டிக் கொள்ளுமாறும் இனிமேல் மறந்தும் கருணாநிதி என்ற பெயரை யாரும் சூட்டிக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் எனவும் ஈழதேசம் இணையம் அன்போடும் உரிமையோடும் மான உணர்வோடும் வேண்டிக் கொள்கினள்றது.

இந்தளவு கடுமையான நிலைப்பாட்டிற்கு காரணமான தி.மு.க. செயலாளரின் பேச்சை படியுங்கள். தமிழக வாரம் இருமுறை இதழான ஜுனியர் விகடன் கடைசி இதழில் வெளிவந்த இந்தப் பேச்சைப் படித்த தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்துவருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசிய என்.கே.பி.ராஜா பங்கேற்கும் கூட்டங்களில் அவரிற்கு சரியான பாடம் புகட்ட தமிழ் மான உணர்வுள்ள தமிழர்கள் உறுதியெடுத்துள்ளார்கள். நிலமை விபரீதமடைவதால் தமிழினத் துரோகி கருணாநிதி மறுப்பறிக்கை விடலாம். இல்லை குறிப்பிட்டவரை கட்சியில் இருந்து நீக்க்லாம். எதுவாக இருந்தாலும் நாடகத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும்.

இதனைப் படித்து உள்ளம் கொதிப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்புகொண்டு அர்ச்சிக்கவும். தொடர்ந்து வந்த அர்ச்சனைகள் காரணமாக ஒரு கைபேசியை அணைத்துவிட்டார். மற்றதில் வரும் அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்துவருகின்றார். முயன்றுபார்க்கவும்.

0091-944-258-8888

0091-984-236-8700

பிரபாகரன்! கொலைகாரன்! திடுக்கிட வைக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜாவின் பேச்சு

வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நிலத்தை ஆக்கிரமித்தார், ஆளைக் கட்டிவைத்து அடித்தார், கோஷ்டிச் சண்டையை வளர்க்கிறார் என்று நிறையவே குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர் இந்த முன்னாள் திமுக அமைச்சர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்கவும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமியின் பவள விழாக் கொண்டாட்டமும் இணைந்த தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது.

முதலில் பேசிய பொறுப்பாளர்கள் அனைவரும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற ஈழ ஆதரவுத் தலைவர்களை வறுத்து எடுத்தனர்.

அடுத்துப் பேசிய மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சு, கூட்டத்தினரைத் திகில் அடையவைத்தது.

உலக அளவில் டெசோ மாநாடு இன்று பேசப்படுகிறது. இதை நடத்த கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். கலைஞரின் அனுபவ வயதுகூட அவர்களுக்கு இருக்காது. ஈழத் தமிழருக்காக எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தவர் கலைஞர். பாலசிங்கம், சந்திரஹாசன் போன்றவர்களை நாடு கடத்திய போது அதனைத் தடுத்தவர் கலைஞர்.

ஆனால், ராஜீவ் காந்தியைக் கொடூரமாகக் கொன்றார்கள் விடுதலைப் புலிகள். இளம் தலைவர் ராஜீவ் காந்தியை நாம் இழந்தோம். பல குழுக்களாக இருந்த போராளி அமைப்புகளை ஒன்றாக இருக்கச் சொன்னார் கலைஞர். ஆனால், பிரபாகரன் அதைக் கேட்கவில்லை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஆட்சியை மட்டும் நாம் இழக்கவில்லை. எத்தனையோ தி.மு.க-வினர் வீடு எரிக்கப்பட்டது. ஈழத்துக்காகப் போராடிய மற்ற அமைப்புகளின் தலைவர்களை பிரபாகரன் கொன்றார். ஈழத்தை, தான் மட்டும் ஆள வேண்டும் என்ற சுயநலம் பிரபாகரனுக்கு.

தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வந்த பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பினோம் என்கின்றனர். அவர் வருவதை கலைஞரிடம் ஒரு வார்த்தை முன்கூட்டியே கூறி இருந்தால், அவரே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பார்.

மாநில அரசு ஒரு வரைமுறைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். விடுதலைப் புலிகளை அழைத்து வந்து நாங்கள் போர்ப் பயிற்சி கொடுத்தோம். ஒரு அ.தி.மு.க-காரன் செய்ததாகச் சொல்ல முடியுமா?

பழ.நெடுமாறன் எதற்கெடுத்தாலும் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஈழத்துக்குப் போவேன் என்று கூறுவார். ஆனால் போக மாட்டார். தைரியம் இருந்தால் ஈழத்துக்குப் போய் பிரபாகரனோடு சேர்ந்து போராட வேண்டியதுதானே?

இறுதியாகப் பேசிய ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைமை பேச்சாளருமான ராஜன், 85-ல் மதுரையில் டெசோ மாநாடு நடந்தது. ஆனால் அதில் பிரபாகரன் கலந்து கொள்ளவில்லை. திலகர் என்பவரை அனுப்பினார். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்’ என்று தலைவர் கோரிக்கை வைத்தார்.

ஆனால், மாநாடு முடிந்த சில நாட்களிலேயே மற்ற போராளி இயக்கத்தினரைக் கொன்றுவிட்டார் பிரபாகரன். கொத்துப் புரோட்டாவைப் போல ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள். அதைக் கலைஞர்தான் செய்தார் என்று எத்தனை தி.மு.க-காரன் வெட்டப்பட்டான். இனத்துக்காக பழியை ஏற்றுக்கொண்டோம். இப்போது மிச்சம் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற கலைஞர்தான் இருக்கிறார் என்றார்.

நீங்கள் பேசியதில் உறுதியாக இருக்கிறீர்களா?'' என்று கூட்டம் முடிந்த பிறகு என்.கே.கே.பி. ராஜாவிடம் கேட்டோம்.

நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் எங்கள் தலைவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்கள். அதற்குப் பதிலடி தரவேண்டியது எங்கள் கடமை. கலைஞர் பணம் தந்தபோது வேண்டாம் என்று மறுத்தவர் பிரபாகரன். மற்ற தலைவர்களையும் அங்கு வாழவிடவில்லை அவர். அதனால்தான் இத்தகைய பேரழிவு நடந்தது. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

ராஜாவின் பேச்சு குறித்து ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம்.

ஈரோடு ராஜாவுக்கு கொள்ளை அடிக்கத் தெரியுமே தவிர கடந்த கால வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. ஏதோ ஸ்டாலின் தயவால் அமைச்சராகி அதனையும் தக்கவைத்துக்கொள்ளத் தெரியாமல் இழந்துவிட்ட தற்குறி. அறிவார்ந்தவர்கள் இருந்த தி.மு.க.இ இவரைப் போன்றவர்களைத் தூண்டிவிட்டு கணக்குத் தீர்க்கப்பார்க்கிறது.

ஓர் அப்பாவியைக் கட்டிவைத்து அடித்த கோழைக்கு, ஏழு நாட்டு இராணுவத்தை எதிர்கொண்ட பிரபாகரனைப் பற்றிப் பேசத் தகுதி கிடையாது.

லோக்கல் ஏட்டையாவுக்குப் பயந்துபோய் வெளிமாநிலங்களில் தலைமறைவான மகா கோழைதானே இந்த ராஜா?

தான் சொல்ல முடியாததை ராஜா போன்ற கூஜாக்களின் மூலமாக கருணாநிதி சொல்கிறாரோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

ராஜாவின் பேச்சை கருணாநிதி ஆதரிக்கிறாரா இல்லையா என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார் சம்பத்.

சூட்டைக் கிளப்பி இருக்கிறது ராஜா பேச்சு. கருணாநிதி என்ன சொல்லப்போகிறார்?

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப்பிரிவு.

நன்றி : ஜுனியர் விகடன்.

முன்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012 09:44 )

நன்றி - ஈழதேசம்

http://www.eeladhesam.com/index.php?option

அரசியல் லாபத்திற்காகவே கருணாநிதி இந்த மகாநாட்டை கூட்டினார். அவரகள் தாங்கள் ஈழத்தமிழருக்காக ஈழத்தை அமைக்க முயன்ற போது பிரபாகரன் அதை தடுத்துவிட்டார் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கனிமொழி தீர்மானங்கள் விவாதிக்கப்பட்ட போது கொட்டலில் நடந்துகொண்டவிதம் அதை மிகவும் தெளிவாக காட்டியிருந்தது.

தான் சட்டசபை தேர்தலில் தோற்க போவது தெரிந்தவுடன் கருணாநிதி பேராசியர் சிவதம்பி வரையும் எல்லோரையும் அழைத்து தமிழ் மகாநாடு கூட்டினார் ஆனால் தமிழக தமிழர் கருணாநிதியை மண் கவ்வ வைத்தார்கள். இந்த குறுக்கு பாதை எடுபடப்போவதில்லை.

Edited by மல்லையூரான்

திமுகவுக்கு உடன்பாடில்லை...:

இந் நிலையில் இன்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவன பேச வைச்சிட்டு இப்ப உடன் பாடு இல்லைன்னா என்ன மாதிரி? பதவில இருந்து ராஜாவ விலக்க தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அவன பேச வைச்சிட்டு இப்ப உடன் பாடு இல்லைன்னா என்ன மாதிரி? பதவில இருந்து ராஜாவ விலக்க தயாரா?

விலக்கிப்போட்டு சேர்க்கத்தயரா ?

  • கருத்துக்கள உறவுகள்

சேர்த்து போட்டு அடுத்த ஆட்சில மந்திரி பதவி கொடுக்க தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுக்கு உடன்பாடில்லை...:

இந் நிலையில் இன்று திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும் - தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும், ஈரோடு நகரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பேசியதாக, ஜூனியர் விகடனில் வெளியான கருத்துக்களுக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. இது பற்றி அவர்கள் இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

உங்களின் சொந்தக்கருத்தினைத்தவிர வேறு ஊடகங்களில் பெறப்பட்ட செய்தி என்றால் செய்தி மூலத்தினை யாழில் இணைப்பது யாழ்கள விதி

  • கருத்துக்கள உறவுகள்

ராசா இப்படிக்கதைத்து காங்கிரசுக்காரர்களின் மனதில் இடம்பிடிக்கிற ஆசைதான். இதனால் ஸ்பெக்ரம் ஊழலில் நிரந்தரமாக விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கை

பெயர் என்.கே.கே.பி.ராஜாவாம். ராஜா எல்லாம் ஒன்றுமில்லாததுதானே.

இது இத்தனை காலமாக நடைபெறமால் இருந்ததுதான் ஆச்சரியமானது. இதை நான் முன்னமேயே எதிர்பார்த்தேன்.

நாங்கள் திமுகவின் தலைவர் பற்றிச் செய்கின்ற வசைபாடல்களுக்கு திமுகவின் தொண்டர்கள் எதிர்வினை செய்யாது கண்ணியமாக நடந்து கொண்டார்கள். இதை உணர்ந்து கொள்வதற்கு நாம் தவறி விட்டோம்.

இதோ! அவர்களும் ஆரம்பித்து விட்டார்கள். இனி நாங்கள் கருணாநிதியையும் அவர்கள் பிரபாகரனையும் தூற்றிக் கொண்டு திரியலாம். தூற்றுதல்களுக்கு காரணங்கள் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவாகவே இருக்கும்.

இதில் மேலும் பலவீனப்படப் போவது ஈழத் தமிழினமே.

ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். திமுக என்றாலும் மறுப்பு அறிக்கை வெளியிடுகிறது. பேசியவர்களிடம் அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்று சொல்கிறது.

இதே கருத்தை அதிமுகவில் சொல்லியிருந்தால் சொன்னவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை விட ராஜீவ் காந்தி.. மகாத்மா காந்தி பெரும் கொலைகாரர்கள்..! இந்திய விடுதலை என்று காந்தி கொலைக்களத்துக்கு அனுப்பிக் கொன்ற அப்பாவி இந்தியர்களின் எண்ணிக்கை பிரபாகரன் நடத்திய ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட உயிர் பலிகளிலும் அதிகம்...! அதை விட அதிகம் அமைதிப்படை என்று இந்திய இராணுவத்தை அனுப்பி ராஜீவ் என்ற இந்தியர்களின் இளவல் கொன்ற ஈழத்தமிழர்களின் உயிர்கள்..!

இதை அந்த தி மு க உறுப்பினர் உள்வாங்கிக் கொண்டு கருத்துச் சொல்ல முன்வருவது அவசியம்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலேயே கருணா பிள்ளையான் டக்லஸ் ஆனந்த சங்கரி சித்தாத்தன் போன்றோரே யதார்த்தத்தை புரிந்தும் பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர் அப்படி இருக்கும் போது இந்த ராசாவை முன்பு கேள்வி பட்டதே இல்லை இவரை வைத்து பேச சொன்னது கலைஞர்ராகதான் இருக்கமுடியும் கலைஞரின் நாடக அரசியலில் இதுவும் ஒன்று இதற்கெல்லாம் தீர்வு கலைஞரின் மரணம் மட்டும்தான்.

சுய இன்பமும் ,சுய தம்பட்டமும் எம்மவர் வாழ்க்கை என்றாகிப் ஆகிப்போச்சு .யாரும் உள்ளதை சொன்னால் ஒன்றில் தூக்கிவிடுவார்கள் அல்லது துள்ளி குதிப்பார்கள் .

பேஸ்புக்கை விட்டு கருணாநிதி ஓட்டம் ,காற்று புக முடியாத இடத்தில் புகுந்தோம் என்று காலத்தை ஓட்ட வேண்டியதுதான் .

நாட்டில் சம்பந்தர் முஸ்லிம் காங்கிரஸ் அல்லது யூ .என்.பி ஓட கூட்டு வைக்க நிற்கின்றார் .

ஐயோ? ஐயோ ?

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ என்னடா இவளவு நேரம் ஆச்சே ஆளையே காணோம்னு பாத்திட்டு இருந்தன் அப்புறம் வேற என்ன எல்லாம் நடக்குது?

நோர்வே போன்ற நாடுகள் சமாதனம் செய்து வைக்க முயற்சித்தும், மந்திரிப்பதவிக்காக சமாதானமாகத் தயாரில்லாமல் தமிழர் மீது இல்லாதபொலாத வசைபாடல்களை மட்டும் பாடிவிட்டு, அதே பழக்க தோசத்தால் "பௌத்த பிக்குகளால் முஸ்லீம் பெண்கள் வீட்டில் கூட தொழமுடியாமல் இருக்கிறது" என்று வசை பாடி, அதனால் கொழும்பில் வைத்து அரசால் மிரட்டப்பட வேறு வழியில்லாமல் அரசின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டவர்களின் வக்காலாத்துகள், இந்த மந்திரிகளின் ததிகிட தொம்முகள் இதுவரையும் பத்திரிகை பத்திரிகையாக வெளி வந்த போது மானமிலாமல் கறையான் புத்துகளில் ஒழித்திருந்தவர்கள், நெடும்செழியனிடம் இருந்து பதவியை பறித்த காலத்திலிருந்து தமிழகத்தை அழித்து தமிழ் மக்காளால் பலமுறை கழிக்கப்பட்ட பிறகும் திரும்பத் திரும்ப பொய்களை கூறி பதவிக்கு வரும் கருணாநிதிக்காக வக்காலாத்து வாங்க வந்து தங்களை சமாதானம் விரும்பிகளாக காட்ட எடுக்கும் இந்த புதிய காவடி இத்தனை காலமாக நடைபெறமால் இருந்ததுதான் ஆச்சரியமானது. இதை நான் முன்னமேயே எதிர்பார்த்தேன்.

இது பலவீனப்பட்டிருக்கும் தமிழினத்தின் வெந்த புண்ணில் வேல்பாச்சி வேடிக்கை பார்க்க முயலும் முயற்சியே. அதிலிருக்கும் அங்கத்தவர்கள் சிலருக்காக, புலிகளையே கட்டி எழுப்பி வைத்த அ.தி.மு.கவையே வசை பாடி ஈழத்தமிழரிடமிருந்து பிரித்து எடுத்து எதிரிகட்ட வைக்கும் இந்த சமாதான விரும்பிகளின் முயற்சி, தேவானந்தா தான் நிமலரூபனின் போன்றோரின் கொலைகள் சரியானதே என்று நிரூபிக்க குட்டிமணி காலத்தில் இருந்து தமிழர்கள் சிறைகளில் சரியாக நடப்பதில்லை என்று குற்றம் சாட்டி அதனாலேயே அவர்களை சிறையில் வைத்து கொலை செய்ய வேண்டி இருக்கிறது என்று சொல்லும் விளக்கத்தை விட மட்டரகமானது.

எந்த ஈழத் தமிழ் தலைவரின் ஆலோசனையும் டெசோ கூட்டத்திற்கு பெறப்படவில்லை. மகாநாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்குபற்றிய ஈழத்தமிழர்கள் கனி மொழியால் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். புலிகளை எப்போதுமே எதிர்த்த ஜெயலலித, முதலமைச்சர் என்ற முறையில் அழைத்த பின்னரும் வரமறுக்கும் ராசபக்சாவிடம் தானாக வலிய வந்து அவருக்கு பரில் வழங்கி சென்றவர்தான் இந்த கனிமொழிதான். இவர்களுக்கும் அ.தி.மு.க விற்கும் இருக்கும் நிஜமான இடைவெளிதான் அது.

தமிழ்நாட்டு மத்திய வகுப்பில் பிறந்த கருணாநிதி குடும்பம் ஏழைத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை அடித்து தங்கள் உலையில் போட்டு இன்று உலகத்தின் கைவிட்டு எண்ணத்தக்க கோடீஸ்வர்களில் ஒருவராக கணிக்கப்படுகிறார்கள். இந்த களவுகளுக்கான மன்னிப்புக்கு இன்னொரு திருடர் குடும்ப காங்கிரசிடம் கையேந்துகிரார்கள். இதனால் இவர்கள் இன்று தமிழகத்தில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு, தி.மு.க கட்சியையே இனி தமிழக தமிழ்மக்கள் தலையெடுக்க விடுவார்களா எனபது கேள்விக்குறியாகிவிட்டர்கள்.

திமுக இதுவரையில் எந்த நடவடிக்கையும் ராசா மீது எடுக்காமலிருக்க தமிழரின் எதிரிகளை காப்பாற்றும் இந்த வக்காலாத்துகள் கருணாநிதியை காப்பாற்ற "பேசியவர்களிடம் அது பற்றி விளக்கம் கேட்கப்படும்" என்று சொல்கிறார்கள்.

அதேநேரம் அ.தி.மு.கவை ஈழத்தமிழருக்கு எதிராகத்திருப்ப "இதே கருத்தை அதிமுகவில் சொல்லியிருந்தால் சொன்னவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும்" என்று இதுவரையில் எங்கும் நடக்காத, உண்மையில்லாத சம்பவம் ஒன்றை உருவகப்படுத்தி, தமிழகத்தில் தமிழரால் தெரியப்பட்டு ஆட்சியில் இருக்கும் கட்சி மீது கோள்மூட்டி பிரித்து வைக்கிறார்கள் இந்த சாதானம் விரும்பிகள்.

Edited by மல்லையூரான்

Posted Today, 06:28 AM

[size=3]FACE BOOK - ஐ விட்டே தூக்கி எறியப்பட்ட மு.கருணாநிதி..! டாட்.காம் - ல் இருந்து தூக்கி எறியப்படுவது எப்போது..? ஈழதேசம் செய்தி..![/size]

[size=3]தி.மு.க., தலைவர் மு.கருணாநிதி அவர்கள் நேற்று முன்தினம் கலைஞர் கருணாநிதி என்ற பெயரில் FACE BOOK கணக்கை துவங்கினார். பெரிய பெரிய பீடிகைகளுடன் இந்த முக நூலில் நுழைந்தார். எப்போ எப்போ என்று காத்துக் கிடந்த புலம் பெயர் இளைஞர்கள், தமிழர்கள், உலகத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்தனர். கணக்கு துவக்கிய அன்றே சுமார் 2700 பேர் தங்களை பதிவு செய்து உள்ளே புகுந்து கேள்விக் கணைகளை என்று சொல்ல முடியாத அளவிற்கு கருத்துக்களை அள்ளி வீசினார்கள். தி.மு.க.வின் இணையதள அடிமைகளும், அடிவருடிகளும் எவ்வளவோ முயன்றும் பதில் சொல்ல முடியவில்லை. பிடித்தார்கள் ஓட்டத்தை. முக நூல் என்ற கணக்கை விட்டே தூக்கி எறியப்பட்டார்கள். [/size]

[size=3]நேற்று மாலை வரை சுமார் 5000 பேர் கருணாநிதியின் முக நூல் பக்கத்தில் இணைந்தார்கள். மு.க.வின் முக நூல் பக்கத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானம் மற்றும் அவரது பேச்சுக்கள், மாநாட்டு தீர்மானங்கள், அறிக்கைகளை போட்டு இருந்தார்கள். மு.க.வின் அடிமைகள் என்ன நினைத்தார்கள் என்றால், இணையதளத்தில் புகுவதன் மூலம் உலகத் தமிழர்களையும் புலம் பெயர் தமிழர்களையும் மாங்காய் மடையர்களாக மாற்ற முடியும் என்று நம்பினார்கள். முக நூல் பக்கம் என்ன சன் டி.வி. கும்பல் நடத்தும் நிறுவனம்..? என்று நினைத்து விட்டார்கள் போலும். [/size]

[size=3]எப்போ எப்போ என்று காத்திருந்த ஈழத் தமிழர்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்கள். முக நூலில் கருத்துக்களை சொல்லி தப்பிபதற்கு இதென்ன ஜெ அம்மையாரிடம் நடத்தும் அரசியலா..? என்றார்கள் இணையதள எழுத்தாளர்கள். தி.மு.க.வின் அடிமைகளும், ரவுடிகளும் எவ்வளவோ பதில் சொன்னார்கள்.மிரட்டினார்கள்,திட்டினார்கள்.ஒரு கட்டத்திற்கு மேல் மு.க.வின் சொந்த வாழ்க்கை, ஊழல், அரசியல் மோசடித் தனம், அளவுக்கு மீறிய சொத்துக்குவிப்பு என்று போட்டு தாக்கியதில் மு.க.வின் கொள்ளைக் கூட்டமும் அடிமைகளும் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நேற்று மாலை ஆறு மணிக்கு இணையதளத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டார் மு.கருணாநிதியும் அவரது கும்பலும். [/size]

[size=3]இன்றைய செய்திகளில் இவ்வாறு கூறினார்கள் மு.க.வின் அடிமைகள். மு.கருணாநிதி FACE BOOK - ல் இணைந்ததின் மூலம் அதாவது முக நூல் கணக்கு தொடங்கியதின் மூலம் இன்றைய இளைஞர்களுடன் நவீன இணைய தள ஊடகங்களின் வழியாகவும் தனது கொள்கைகளை விளககி, உலக தமிழ் இளைஞர்களை கவர ஆரம்பித்து விட்டார் என்று உரக்க கூச்சலிட்டார்கள். [/size]

[size=3]ஒரு கட்டத்தில் கருணாநிதியின் அடிவருடிகள் பதில் சொல்ல முடியாமல் மூச்சு திணறி ஓட்டம் பிடித்தார்கள். இனிமேலும் நாம் இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கருதி, முக நூல் அக்கவுன்ட் - டை க்ளோஸ் பண்ணி விட்டு தலைமறைவானார்கள். இந்த மேற்கண்ட காரணங்களால் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு தலை தெறிக்க ஓடிய மு.க.,வும் அவரது கும்பலும், ரொம்ப நேரம் யோசித்து தான் வாங்கிய அடிகளை மறந்து கருணாநிதி .காம் என்ற பெயரில் புதிதாக ஒரு கணக்கை துவங்கியுள்ளது. முக நூல் கணக்கை விட்டே துரத்தியடிக்கப்பட்ட மு.க.வை டாட்.காம் - ஐ விட்டே துரத்துவதற்கு தயாராகுங்கள் புலம் பெயர் இளைஞர்களே..உலகத் தமிழர்களே என்று அறைகூவல் விடுக்கின்றன ஈழதேசம் இணையம். [/size]

[size=3]மாயாண்டிக்கருப்பு[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106565&#entry789165

Edited by மல்லையூரான்

என்ன அரிசுன் சொல்ல வருகிறீர்கள்? ஐயோ ஐயோ இந்த சம்பந்தர் செய்யும் திருகுதாளத்தால் இனி முஸ்லீம்-தமிழர் ஒற்றுமை பற்றி வெளுத்து விளாசி வலையில் காலத்தை போக்க முடியாமல் போவிட்டதே என்று கருணாநிதி - தமிழர் ஒற்றுமையை கையில் எடுத்தால் அவரையும் வலையை விட்டு கலைத்துவிட்டார்களே ஐயோ? ஐயோ என்கிறீர்களா?

இருந்தாலும் ஐயோ ஐயோ என்று மார்பிலடித்து கவலப்படவேண்டியதேவை இல்லை. ஏன் எனில் நீங்கள் வலையைவிட்டு ஒடவேண்டிய தேவை வராது. எவ்வளவு களவு செய்தாலும் கருணநிதிக்கு ஒரு சின்ன சுறணையும் இருந்திருக்கு போலிருக்கு. அதனால்த்தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதிலை.

Edited by மல்லையூரான்

சுய இன்பமும் ,சுய தம்பட்டமும் எம்மவர் வாழ்க்கை என்றாகிப் ஆகிப்போச்சு .யாரும் உள்ளதை சொன்னால் ஒன்றில் தூக்கிவிடுவார்கள் அல்லது துள்ளி குதிப்பார்கள் .

[size=3] [/size]கருணாநிதியை [size=1]பத்தித்தான் [/size]சொல்றிங்களா!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அல்லகை ஸ்பீச்சுக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது எனது தனிபட்ட கருத்து... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அல்லகை ஸ்பீச்சுக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது எனது தனிபட்ட கருத்து... :) :)

உங்கள் கருத்துத்தான் எனதும்.

ஆனால் அல்லகை தானாக எழுதி வாசித்த வசனம்போல் தெரியவில்லை.

மனோகரா வீரவசன நாயகனின் சாயல் தெரியுதே.....??? :D :D :D

ஈழதேசம் இணையத்திற்கு கலைஞரை தாக்கி ஒரு கட்டுரை தினமும் எழுத வேண்டும் என்று வேண்டுதல் போலும்.

அவரை தூற்றிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? பதிலுக்கு திமுக தலைவர்களும் இப்படித்தான் பிரபாகரனின் புகழை மழுங்கடிப்பார்கள்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! ஈழத்திற்காக யார் கூட்டம், ஊர்வலம் நடத்தினாலும், அதில் ஓடிப்போய் பல திமுக தொண்டர்கள் நிற்பார்கள். கலைஞரை தொடர்ந்து அவமானப்படுத்துவதன் ஊடாக பெரிய ஆதரவுத் தளத்தை இழக்கின்றோம்.

ஜெயலலிதா ஈழத் தமிழர்களின்பால் சற்று அனுதாபத்தோடு நடப்பதாகக் காட்டிக் கொண்டாலும், விடுதலைப் புலிகள் பற்றி அவர் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.

பிரபாகரனின் மரணம் பற்றிக் கலைஞரிடம் கேட்ட பொழுது அவர் "மாவீரர்களுக்கு மரணம் இல்லை" என்று உயர்வாகத்தான் பதிலை சொன்னார். இன்றைக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பற்றி தவறாக கட்சியில் ஒருவர் பேசியதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டவுடன், அந்த கருத்தை திமுக ஏற்கவில்லை என்று மறுப்பு அறிக்கை வருகின்றது.

எங்களுக்கு தமிழ் நாட்டில் எல்லோரும் வேண்டும். நாங்கள் அனைத்தையும் இழந்து போய் நிற்கின்றோம். இதில் எமக்கு ஆதரவாக இருக்கின்ற கட்சிகளை சீண்டுவது எம்மை மேலும் பலவீனப்படுத்தும்.

கலைஞர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று எமக்கு தெரியும். அதற்குள்ளால ஓடி எமக்கு சாதகமான நிலையை எப்படி உருவாக்குவது என்று பாருங்கள்.

தடவித்தடவி குத்துவதிலும், திருடித்திருடி கோட்டை கட்டுவதிலும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே. மத்திய அரசிடம் "தமிழ் நாட்டில் தன்னும் அரசியல் செய்ய முடியாத என்று" கெஞ்சி மன்றாடி அனுமதி வாங்கி தமிழ் பேசும் கருணாநிதியின் சுதந்திரத்தை விட ஈழத்தவர்கள் அதிக சுதந்திரம் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளைப்பற்றி பேசுவதை அரசாங்கம் எப்படி எதிர்த்தாலும் மெலிந்த கூட்டமைப்பே வெளிநாடுகளுடன் தொடர்ந்து பேசுகிறது. மத்திய அரசுடன் நிமிர்ந்து நின்று ஒரு சொல் பேசமுடியாத இந்த கருணாநிதி ஈழத்தவருக்கு மத்திய அரசிடம் கேட்டு வாங்கத்தக்க உதவி எதுவும் இல்லை. இந்த மத்திய அரசு ஈழத்தமிழருக்குச் செய்யப்போகிற நன்மையும் எதுவும் இல்லை. இந்த புதிய ஈழத்தமிழர் மீதான நடிப்பெல்லாம் இலங்கையை தீர்வொன்றுக்காக வற்புறுத்தும் மேற்கு நாடுகளை தமிழ் ஈழம் பிரிப்பதாக நடித்து ஓட்டிக் கலைக்கவே.

வெளிநாடுகள் கூட்டமைப்பை நேர்மையான பேச்சுவார்தை ஒன்றை அரசுடன் செய்துபார்க்கும் படி அறிவுறுத்தியிருக்கும்போது தான் ஈழம் பிரிக்க போவததாக நடித்து மேற்குநாடுகளைக் குழப்பி, கெடுத்து தான் தமிழ்நாட்டில் இழந்து போயிருக்கும் செல்வாக்கை திரும்ப கட்டியெழுப்ப முயலும் கருணாநிதி, தமிழகத்தில் கீழே போயாக வேண்டும். திரும்பத்திரும்ப அடிமைப் புத்தி மாறாமல் மத்திய அரசுக்கு அடிமை சாதனம் எழுங்க்கொடுக்கும் இவர் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் முள்ளிவாய்க்காலில் நடந்தது போல மட்டுமல்ல அதைவிட பெரிதாக நடந்தாலும் தான் மத்திய அரசை தட்டிக் கேட்கமாட்டேன் என்று தான் நடந்து கொள்கிறார்.

இவரை அரசியல் கோமாளி என்று இலங்கை அரசு அழைத்தபோது இவரால் மத்திய அரசை வைத்து இலங்கைக்கெதிராக எதுவும் செய்ய முடியவில்லை. இவர் சொல்வது போல் இலங்கை இவரின் உண்ணாவிரத நேரம் மத்திய அரசை ஏமாற்றிவிட்டு 146,000 தமிழர்களை ஒரேஅடியில் கொன்று குவித்ததென்றால், தன்னை ஏமாற்றிவிட்டு அந்த பெரிய கொடூரத்தை செய்த இலங்கையை தட்டிகேட்க விருப்பமில்லாதிருக்கும் அல்லது முடியாமலிருக்கும் மத்திய அரசு ஈழத்தமிழருக்கு செய்ய இருப்பது எதுடுவும் இல்லை.

இதுவரையும் தமிழர்தான் முஸ்லீம்களை தள்ளிவைக்கிறார்கள் என்றும் தமிழர் முஸ்லீம்களிடன் சென்று பணிவாக நடக்கவேண்டும் என்று கதைகள் பரப்பபட்டது. ஆனால் நோர்வே இடையில் வந்ததும் கக்கீம் அதன் பின்னரும் அரசை விட்டு பிரிய மறுத்ததும் வெளிவந்த பின்னர் இந்தக் கதைகளின் கருத்துக்களின் உண்மைகள் ஒழிவுமறைவின்றி வெளியே தெரிய வந்தது. இறுதிவரை கக்கீம் அரசைவிட்டு பிரிய மறுத்தாலும், நோர் இந்தமுறை தலையிட முயன்றது, வெளிநாடுகள் எவ்வளவு தூரம் தீர்வொன்றை விரும்புகிறார்கள் எனபதையும் எடுத்துக்காட்டி விட்டது. கருணாநிதியின் டெசோவை வைத்து மட்டும்தான் மேற்கு நாடுகள் ஒரு தீர்வை அடைய முன்னெடுத்துவரும் முயற்சிகளை தோற்கடிக்கலாம் என்பது இலங்கை அரசுக்கு நன்றாகத்தெரிகிறது. இந்த கருணாநிதி மீது புதிய பாசம் ஒன்றை பரப்ப முயல்வது இலங்கை அரசிலிருந்து வரும் சதி மட்டுமே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மரணம் பற்றிக் கலைஞரிடம் கேட்ட பொழுது அவர் "மாவீரர்களுக்கு மரணம் இல்லை" என்று உயர்வாகத்தான் பதிலை சொன்னார்.

கலைஞர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று எமக்கு தெரியும்

இந்த தலைவர் அந்த தலைவரை உயர்வாக சொன்னபடியால் ...இந்த தலைவரின் திருகுதாளங்களை நாங்கள் விமர்சனம் செய்யகூடாதா என்ன?கலைஞர் தேர்ந்த அரசியல்வாதியாக இருக்கலாம் அதே நேரம் அவர் ஒரு தேர்ந்த அரசியல் நடிகர் என்பதையும் நாம் மறக்ககூடாது......

கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை தமிழ்நாட்டில் ஆரம்பித்துள்ள நிலையில், அவரையும் ஈழத்தமிழர்களையும் பிரிப்பது போன்றும், இரு தரப்புக்கும் வெறுப்பை வளர்ப்பது போன்றும் வருகின்ற ஆக்கங்களையே நான் சிறிலங்கா அரசிடம் இருந்து வருவதாக நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை தமிழ்நாட்டில் ஆரம்பித்துள்ள நிலையில், அவரையும் ஈழத்தமிழர்களையும் பிரிப்பது போன்றும், இரு தரப்புக்கும் வெறுப்பை வளர்ப்பது போன்றும் வருகின்ற ஆக்கங்களையே நான் சிறிலங்கா அரசிடம் இருந்து வருவதாக நம்புகிறேன்.

கலைஞர் மட்டும் ஈழத்தமிழருக்கான பரப்புரையை செய்யவில்லை இன்று தமிழகத்தில் பலர் செய்கின்றார்கள்.முதலமைச்சர் பதவியில் இருக்கும்பொழுதே நேரடியாக சிறிலங்கா அரசுக்கு ஆதரவு அளித்த ஐயாகலைஞர் எதிர்கட்சி என்ற தகுதி கூட தற்பொழுது இல்லாமல் (தமிழக மக்களால் ஒதுக்கப்பட்ட தலைவர்)இருக்கும் இவரால் சிறிலன்கா அரசுக்கும் பலனில்லை ஈழத்தவருக்கும் பலனில்லை....கதை திரைக்கதை ,வசனம்,உசுப்பேத்தல் தவிர......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.