Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோம்ஸ் அண்ணா. நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இணைத்திருக்கும் படங்களும் அருமை.

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply

[size="3"]வணக்கம் கோப்பாய் கோமகன், [/size]

[size="3"]பயணகட்டுரை நன்றாக போகின்றது. நான் 20 வருடங்களுக்கு முன் மொனோக்கோவில் ஒருமாதம் தங்கியிருந்தேன் அப்பொழுது நீஸ்நகரை சுற்றி பார்த்திருந்தேன், ஆனாலும் இப்பொழுது உங்கள் கட்டுரையை வாசிக்கும் பொழுது மீண்டும் நீஸில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. [/size]

[size="3"]தொடருங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோமகன் வாசிப்பதற்கு ஆவலாக உள்ளோம்

மிக்க நன்றிகள் தர்மறாஜ் உங்களுக்கு நேரம் பிரச்சனை இல்லையென்றால் ரயில் பயணமே சிறந்தது இந்த லிங்கில் http://www.eurail.com/ நீங்கள் நுளைந்தால் நீங்கள் விரும்பிய இடங்களுக்கு முற்பதிவு செய்யலாம் .

தகவலுக்கு நன்றி :rolleyes:

  • தொடங்கியவர்

வணக்கம் கோம்ஸ் அண்ணா. நன்றாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இணைத்திருக்கும் படங்களும் அருமை.

தும்ஸ்சின் நேரத்திற்கு மிக்க நன்றிகள் .

வணக்கம் கோப்பாய் கோமகன்,

பயணகட்டுரை நன்றாக போகின்றது. நான் 20 வருடங்களுக்கு முன் மொனோக்கோவில் ஒருமாதம் தங்கியிருந்தேன் அப்பொழுது நீஸ்நகரை சுற்றி பார்த்திருந்தேன், ஆனாலும் இப்பொழுது உங்கள் கட்டுரையை வாசிக்கும் பொழுது மீண்டும் நீஸில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

தொடருங்கள்

மிக்க நன்றிகள் சுந்தரம் தொடர்ந்து இருங்கள் மொனாக்கோவும் வரும் .

தொடருங்கள் கோமகன் வாசிப்பதற்கு ஆவலாக உள்ளோம்

உங்கள் நேரத்திற்கு நன்றி வாத்தியார் தொடரில் தொடர்ந்து இருங்கோ .

[size=5]கோ, நன்றிகளைப் பிறகு சொல்லலாம் கெதியாய் எழுதுங்கோ![/size]

வாழ்த்துகள் கோ அண்ணா, எனக்கு உங்கள் கவிதையை விட கதை அல்லது பயணக்கட்டுரை ரொம்ப பிடிக்கும். :) தொடர்ந்து எழுதுங்கள். நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.... :) மற்றவர்கள் கேட்பதற்காக அவசரப்பட்டு எழுதாமல் நிதானமாக சுவாரஸ்யமாக எழுதுங்கள்.

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுறன்.... :)

நான் யாழ் இணையத்தில் இணைந்து வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானதே " நெருடிய நெருஞ்சியினால் " தான் .

http://www.yarl.com/...showtopic=86211

நெருடிய நெருஞ்சி நல்ல கதை என்று பலர் வேறு திரிகளில் உங்களை பாராட்டியிருப்பதையும் பார்த்தேன். நான் இன்னும் வாசிக்கவில்லை.. பின்னர் வாசிக்கிறேன். :) இந்த திரியில் இணைப்பை தந்திருந்தமைக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் கல கலப்பாக்கும் கோ மகனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . வரிகள் மிகவும் அழகாய் இருக்கிறது .[/size]

nicevisit2012297.jpg

[size=5]இந்தப் பூனை சாத்திவின் பூனையா அல்லது சாத்துவின் முன் வீட்டுக்காரி பூனையா??[/size]

[size=5]மன்னிக்கவும்[/size]!

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்தப் பூனை சாத்திவின் பூனையா அல்லது சாத்துவின் முன் வீட்டுக்காரி பூனையா??[/size]

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், பயணதொடர் சுவாரசியமாக போகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய்//

கவனிப்பை பூனையோடு மட்டும் நிறுத்திக்கணு <_< ம்..

Edited by sayanthan

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

.

கவனம் சாத்திரியார் உங்களது கவனிப்பு பிடித்துபோய் முன் வீட்டுகாரியும் உங்கள் வீட்டில் தங்கபோறாள். ^_^

கோ அண்ணா இன்றுதான் இந்த பக்கத்தை பார்த்தேன் ..........அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள் .............உங்கள் கதைகளின் எழுத்துக்களை ரசிக்கும் வாசகன் நான்..................கருத்துக்களத்தில் சில கருத்து வேறுபாடுகள் எமக்குள் இருக்கலாம் .அதனால் உங்கள் திறமையை பார்த்து என்னால் சும்மாய் இருக்க முடியாது ...என்றும் நான் உங்கள் வாசகன் தான் ............தொடருங்கள் இடைவெளியை குறைத்து.................. காத்திருக்கிறேன்

  • தொடங்கியவர்

[size=5]கோ, நன்றிகளைப் பிறகு சொல்லலாம் கெதியாய் எழுதுங்கோ![/size]

அமைதி......... அமைதி........... வேலையள் நடந்து கொண்டுதான் இருக்கு .

[size=4]மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் கல கலப்பாக்கும் கோ மகனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . வரிகள் மிகவும் அழகாய் இருக்கிறது .[/size]

என்னை தனிப்பட்டமுறையில் பாராட்டி சரி பிழைகளை உரிமையுடன் எடுத்துக்கூறும் உங்களை என்றுமே நான் மறவேன் . வருகைக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

எனக்கு இது நல்லதாப் பாடலே பூனை மட்டும்தானே :(

பூனை முன்வீட்டுக்காரியின்ரைதான் அதுக்கு என்ரை கவனிப்பு பிடித்துப்போய் இங்கையே தங்கிட்டுது முன் வீட்டுக்காறியும் தன்ரை பூனை என்னட்டை பத்திரமாய் இருக்கும் எண்ட நம்பிக்கையிலை விட்டிட்டாள் :lol:

இந்த பூனை தானே உங்கள் motorbike இல் படுத்திருந்து விட்டு காலையில் நீங்கள் வேலைக்கு போக வெளிக்கிடேக்க குறுக்காலை ஓடுறது.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூனை தானே உங்கள் motorbike இல் படுத்திருந்து விட்டு காலையில் நீங்கள் வேலைக்கு போக வெளிக்கிடேக்க குறுக்காலை ஓடுறது.... :lol:

அது நல்ல சகுனப்பூனை

இந்த பூனை தானே உங்கள் motorbike இல் படுத்திருந்து விட்டு காலையில் நீங்கள் வேலைக்கு போக வெளிக்கிடேக்க குறுக்காலை ஓடுறது.... :lol:

ஓம் துளசி, அதே தான்!! :lol:

எங்களுக்குக் கண் மங்கலில்லை! :lol:

ஓம் துளசி, அதே தான்!! :lol:

எங்களுக்குக் கண் மங்கலில்லை! :lol:

:D :D மங்கல் விளக்கை பற்றி வாசித்ததிலிருந்து மச்சிக்கு கண் மங்கலோ என்று டவுட் வந்திடிச்சு..... எங்களுக்கு கண் மங்கலில்லை மச்சி... don't worry... :D

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஆங்கிலேயர்கள் தங்கள் குளிர்காலத்தை அனுபவிக்க நீஸ் நகரிற்கு படையெடுத்தனர் . நீஸ் கடற்கரையின் அழகில் சொக்கிப்போய் தாங்கள் நடந்து காற்று வாங்குவதற்காக 18ம் நூற்றாண்டளவில் மாபெரும் வீதியைக் கட்டினார்கள் . இந்த வீதி வேய் டேய்ஸ் ஏன்ஜ் (Baie des Anges ) வளை குடாவை உள்வாங்கி பழைய துறைமுகம் வரை நீண்டு செல்கின்றது .

பழய பொறமனாட் ஆங்கிலேஸ்

nicevisit2012190.jpg

இந்த வீதி ஆரம்ப காலத்தில் ச்சிமின் து பொறமனாட் ( Chemin De Promenade ) என்றும் , அதற்கு முன்னைய காலத்தில் நீசுவாஸ் நாட்டினரின் தாய்மொழியாம் நீசுவா மொழியில் கமின் டெய்ஸ் ஆங்கிலேய்ஸ் ( Camin Dais Anglés , The English Way ) என்றும் அழைக்கப்பட்டது . பின்பு 1860 அளவில் பிரான்ஸ் ஓர் மொழிமாற்றுத் திருத்தச்சட்டம் மூலம் லா பொறமனாட் டேஸ் ஆங்கிலேஸ் (La Promenade Des L’Anglais ( The Walk way of the English ) என்று தனி பிரென்ஜ் மொழியில் மாற்றம் பெற்றது .

இரவில் பொறமனாட் டெய்ஸ ஆங்கிலேஸ்

800px-Nice-night-view-with-blurred-cars_1200x900.jpg

நாங்கள் மூவரும் பொறமனாட் ஆங்கிலேய்ஸ் வழியாக நீஸ்சின் துறைமுகம் நோக்கி நடந்து கொண்டிருந்தோம் . எனது கண்களோ சுண்டல் கூறிய மச்ச கன்னிகைகளை தேடி அலைந்தது . நானும் சாத்திரியும் வெய்யிலுக்கு சூரியக்கண்ணாடி அணிந்திருந்தோம் .

மாலை வெய்யில் மேகம் செம்மையாக ஆழ்கடலில் படரத்தொடங்கியிருந்தது . ஒரு இடத்தில் சாத்திரி நின்றார் . அங்கே நான் பார்வையைத் திருப்பியபொழுது பல வண்ணங்களில் அளவுகளில் மச்சகன்னிகள் அந்த மாலைநேரத்திலும் சூரியக்குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

நான் கண்ட மச்சகன்னிகை

nicevisit2012192.jpg

மாலைச்சூரியன் அவர்கள் உடலில் வர்ணஜாலம் காட்டியது . நான் அவர்கள் அசந்த வேளையில் எனது கமறாவால் சுட்டுக்கொண்டேன் . நாங்கள் துறைமுகத்தை அண்மித்தபொழுது மலையின் கீழ் ஓர் நினைவு தூண் ஒன்று காணப்பட்டது . நான் சாத்திரியை என்ன இது என்பது போலப் பார்த்தேன் என்னை அருகில் போய் பார்கும்படி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார் . நான் அருகே சென்ற பொழுது அந்த நினைனைவுத் தூண் முதலாம் இரண்டாம் உலகப்போரில் மாண்ட நீஸ் இரணுவப் படைகளின் பெயர்களை நினைவு கூர்ந்து நின்றது .

nicevisit2012213.jpg

நாங்கள் துறைமுகப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தோம் . நீஸ் துறைமுகம் பழையது புதியது என்று இரண்டு இறங்கு துறைகளைக் கொண்டிருந்து . என் முன்னே அகண்டு நீண்டு பரந்திருந்தது . இந்த துறைமுகமே பிரான்ஸ்சின் முதலாவது சீமெந்தினால் அமைக்கப்பட்ட துறைமுகமாகும் . 16ம் நூற்றாண்டில் நீசியா நாட்டில் துறைமுகம் அபிவிருத்தி அடையாது இருந்தது . அது லிம்பியா துறைமுகம் ( port Lympia ) என்ற பெயருடனேயே காணப்பட்டது . நீசியா நாட்டின் துறைமுகத்தை ரோமப் பேர் அரசின் சர்க்கரவர்த்தி ஜூலியஸ் சீசார் கட்டிவித்தார் . இதன் பின்பு பல கட்ட வடிவமைப்புகளின்பின்னர் பதினாறாம் லூயி மன்னர் இந்த இறங்கு துறைமுகத்தை பூரணமாகக் கட்டுவித்தார்.

பழைய லிம்பியா துறைமுகம்

551px-Vue_du_port_de_Nice.jpg

இன்றய துறைமுகம்

800px-Nice_-_Le_port_Lympia.jpg

நான் துறைமுகத்தைப் பார்த்தபொழுது தனியார்கப்பல்களை நிறுத்துவதற்கு ஒரு இறங்கு துறையும் பொதுப்பாவனைக்கு என்று ஒரு இறங்கு துறையும் அங்கே காணப்பட்டது . இங்கு இருந்தே பிரான்சின் தென் கிழக்குக் கோடியில் இருக்கும் பாஸ்ரியா கோஸ்ற் தீவுகளுக்கு கோஸ்ற்றா குவாசியர் ( costa croisiere ) என்ற பயணிகள் கப்பல் தனது சேவையைச் செய்கின்றது . தனியார் இறங்குதுறையில் பலநாட்டுச் செல்வந்தர்களது விதம் விதமான உல்லாச ஆடம்பரக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நாங்கள் நினைவுக்காக அவைகள் அருகே நின்று கமறாவால் சுட்டுக்கொண்டோம். இங்கும் சதாம்கூசேய்ன்னின் சொந்த ஆடம்பரக்கப்பல் நிறுத்தப்பட்டு பட்டு இருந்ததாகவும் பின்னர் போர் முடிவடைந்தபின் அந்தகப்பலை நீஸ் மாநகரசபை கையகப்படுத்தி ஏலத்தில் விட்டதாக சாத்திரி கூறினார் . நாங்கள் துறைமுகத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு புராதன நீஸ் நகரைப் பார்க்கப் போனோம் அப்போது இருட்டி இரவு எட்டுமணியாகி இருந்தது.

பாஸ்ரியாவுக்கு புறப்படத் தயாராகும் கோஸ்ரா குவாசியர்

640px-Gare_Maritime_de_Nice.jpg

Edited by கோமகன்

சொறி :icon_mrgreen:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

மச்சக்கன்னிகையில் இன்னும் எதிர்பார்த்தோம் :icon_mrgreen: வாழ்த்துக்கள் கோ

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் மச்ச கன்னிகளோடு நிற்கும் படம் ஒண்டு நானும் எடுத்தனான் போட்டு விடவோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.