Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தோல்வியை புலம்பெயர் தமிழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தோல்வியை புலம்பெயர் தமிழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

index24.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையை சில புலம்பெயர் தமிழர்களினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அந்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட முடியும் எனவும், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினர் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும் நாட்டில் 8.2 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கில் 22 வீத பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நடு நிலையான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கை வைத்துவிடுவார் என்ற பயத்தில் எதோ உளறுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மண்ணில்.. சிங்கள இராணுவத்தின் தோல்வியை சிங்களவன் தாங்கிக்குவானா..???! அதேபோல் தான் தமிழர் நிலத்தில் புலிகளின் தோல்வியை மானமுள்ள எந்த தமிழனும் தாக்கிக் கொள்ள மாட்டான். புலம்பெயர் தமிழர்களுக்கு மானத்தை வெளிப்படையாகக் காட்டிற அந்த கொஞ்ச சுதந்திரமாவது உள்ளது. தாயக தமிழ் மக்களுக்கு அது கூட மறுக்கப்பட்டு.. தோல்வியின் வலியை மனதுக்குள் பூட்டி வைத்து ஒரு போலி வாழ்க்கையை நடைப்பிணங்களாக நடத்த வேண்டிய கொடூரத்தை சிங்கள பெளத்த பேரினவாதமும் தமிழ் கூலிகளும் திணித்துள்ளனர்..! இந்த உண்மையை சிங்களம் உணர்ந்தும் உணராமல் இருக்கவே விரும்புகிறது. தமிழர் நிலங்களில் தேர்தல் தோல்விகளை சொல்லும் பாடமும் அதுவே....! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிருபிக்கின்றனர் புலிகள் இன்றி எவராலும் அரசியல் சிறிலங்காவில் செய்ய முடியாது என்பதை...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மண்ணில்.. சிங்கள இராணுவத்தின் தோல்வியை சிங்களவன் தாங்கிக்குவானா..???! அதேபோல் தான் தமிழர் நிலத்தில் புலிகளின் தோல்வியை மானமுள்ள எந்த தமிழனும் தாக்கிக் கொள்ள மாட்டான். புலம்பெயர் தமிழர்களுக்கு மானத்தை வெளிப்படையாகக் காட்டிற அந்த கொஞ்ச சுதந்திரமாவது உள்ளது. தாயக தமிழ் மக்களுக்கு அது கூட மறுக்கப்பட்டு.. தோல்வியின் வலியை மனதுக்குள் பூட்டி வைத்து ஒரு போலி வாழ்க்கையை நடைப்பிணங்களாக நடத்த வேண்டிய கொடூரத்தை சிங்கள பெளத்த பேரினவாதமும் தமிழ் கூலிகளும் திணித்துள்ளனர்..! இந்த உண்மையை சிங்களம் உணர்ந்தும் உணராமல் இருக்கவே விரும்புகிறது. தமிழர் நிலங்களில் தேர்தல் தோல்விகளை சொல்லும் பாடமும் அதுவே....! :icon_idea:

:)

புலம்பெயர் தமிழன் இல்லை மானம் உள்ள உண்மையான எந்த தமிழனும் தாங்கமாட்டான் பிரிஸ் பக்ஸ அவர்களே

[size=4]எல்லாம் பிரதமராக வரும் ஆசை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்! தாங்க முடிடவில்லை!

தோல்வியைத் தாங்கும் பலம் புலத்துத்தமிழனிடம் நிரம்ப உண்டு!

இல்லாவிட்டால், இரண்டாவது விமானத்திலேயே திரும்ப ஓடி வந்திருப்பான்!

ஆனால், தோற்கடிக்கப் பட்ட விதத்தைத் தான் தாங்க முடியவில்லை!

நரிகளிடம், தோற்றதைத் தான் ஏற்க முடியவில்லை!

நரிகளின் ஆட்சியைத் தான் தாங்க முடியவில்லை! :wub:

இந்த நரிகளை துரதுஷ்டவசமாக நாம் தான் அரியணையில் ஏற்றினோம் .மகிந்த சிந்தனைக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று சராசரி கூட்டணி அரசியல் செய்தோம் .

சந்திரிகா ,ரணில் ,மகிந்தா வரை இப்படியான பல விடயங்கள் நடந்ததன.என்ன நடக்குது? ஏன் நடக்குது என ஒரு கேள்வியும் கேட்காமல் தானே எல்லோரும் இருந்தீர்கள் .

எல்லாம் நடந்து முடிந்த பின் சிந்திப்பது மாதிரி அப்போது ஏன் சிந்திக்க பலரால் முடியவில்லை?

அக்காசி, இந்திய மும்மூர்த்திகள், பிளெக், சொல்யும் போன்றவர்கள்தான் ரணிலை சிங்கள சிறிலங்காவில் பதவியில் இருத்த துடித்தார்கள்.அந்த விடயத்தில் இராமன் ஆண்டால் என்ன இராவணந் ஆண்டால் என்ன என்பது நமது கொள்கை. தாம் விரும்பிய நரியை பதவியில் ஏற்ற முடியவில்லை என்றவுடன் மகிந்தா என்ற அரசனை நம்பி வீர புருசனை கைவிட்டவர்கள் இந்த தொழில் தெரியாத ராச தந்திரிகள். அக்காசி இன்னும் அரசன் ராசபக்சா கையால் சரியாக படவில்லை. சொலெயும் பதவியில் இல்லை. உதவிக் காரியதரிசி வெறும் தூதுவராகிறார். இந்திய மும்மூர்த்திகள் மூவரும் வேறு இடங்களில் இப்போ. மும்மூர்த்திகளை வைத்திருந்த கருணாநிதியும் காங்கிரசும் தமிழ்நாட்டில் இல்லை. நீங்கள் எமக்கு சொல்வது போலவே இந்த இராச தந்திரிகளூக்கும் இப்படித்தான் எல்லாம் போய் முடியும் என்று ஆரம்ப காலத்திலேயே ஆலோசனை கூறியிருந்தீர்களானால் இன்று அவர்களும் ராசபக்சாவுக்கு உதவி விட்டு இப்படி ஏமாற்றத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரிகளை துரதுஷ்டவசமாக நாம் தான் அரியணையில் ஏற்றினோம் .மகிந்த சிந்தனைக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று சராசரி கூட்டணி அரசியல் செய்தோம் .

சந்திரிகா ,ரணில் ,மகிந்தா வரை இப்படியான பல விடயங்கள் நடந்ததன.என்ன நடக்குது? ஏன் நடக்குது என ஒரு கேள்வியும் கேட்காமல் தானே எல்லோரும் இருந்தீர்கள் .

எல்லாம் நடந்து முடிந்த பின் சிந்திப்பது மாதிரி அப்போது ஏன் சிந்திக்க பலரால் முடியவில்லை?

உண்மை தான், அர்ஜுன்!

நரிகள், புலிகளின் தோலைப் போர்த்தியிருந்ததை, அப்போது இனம் காண முடியவில்லை!

அவற்றை, இனம் கண்டபோது, எல்லாமே கையை விட்டு வெகு தூரம், போய் விட்டது!

ஏண்டா புலிகளைத் தோற்கடித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படிப் புலம்பத்தேவையில்லை. புலிகள் இருந்தபோது கிடைத்த வரவேற்புகளும் ஒத்துழைப்புகளும் இப்போ கைவிட்டுப் போய்விட்டது இந்த அரசியற்காரர்களுக்கு.

புலிகள் இன்னுமிருக்கிறது என்ற பிரமையை உண்டாக்கிப் பார்க்கிறார்கள் அதுவும் முடியவில்லை.

எங்களுக்கான அரசியலையும் தேவையையும் தீர்வையும் மற்றவன் தீர்மானிக்க முடியாது .அது அகாசி என்றாலும் சொல்கேயும் என்றாலும் இந்திய உளவு துறை என்றாலும் ,ஆனால் அவனுக்கு அவனை திருப்தி படுத்த ஒன்றை தலையாட்டி விட்டு எமது அரசியலை நாம் செய்ய முடியாது.

எல்லாத்திற்கும் ஓகே ஓகே என்று விட்டு அவங்கள் கிடக்கட்டும் நாங்கள் அடிப்பம் என்று அரசியல் செய்ய முடியாது .

அது எதிரியாயினும் நம்பகத்தன்மை ஒன்றை உருவாக்கவேண்டும் .

புலிகளின் பலமே நம்ப வைத்து கழுத்தறுப்பது .அதை அவர்கள் தமது கெட்டித்தனம் என்று நினைத்தார்கள் .இது ஈஎன் எல் எப் என்று நாலு தலைவர்களை கை கொடுத்த போது கூட பலர் சொன்னது தம்பி தான் இவர்களை போடப்போகிறார் என்று அதுதான் நடந்தது .இப்படி பல சம்பவங்கள் .

சந்திரிகா பதவிக்கு வந்து சீரியசாக பேச்சுவார்த்தை தொடங்க றோ சொன்னது அம்மையாருக்கு புலிகளை பற்றி உங்களுக்கு விளங்கவில்லை என்று ,கடைசியில் அதுதான் நடந்தது .அது றோ ஆக இருக்கலாம் எரிக் சொகேயும் ஆக இருக்கலாம் பொப் ரே ஆக இருக்கலாம் அவர்கள் சொல்வதை கேட்டு தலையாட்டி விட்டு அடுத்த நாளே தாம் நினைத்ததைதான் செய்வது .

வன்னி மன்னராட்சி அசைக்க முடியாதது என்று கனவு கண்டு விட்டார்கள் .இதை நம்பி புலம் பெயர்ந்த வெங்காயங்கள் பலர் போய் விருந்து வேறு உண்டார்கள் .உலகம் பென்னாம் பெரிசு என்பதை இன்னமும் எங்களில் பலர் விளங்குகின்றார்கள் இல்லை .

  • தொடங்கியவர்

இப்போ சம்பந்தர் செய்யும் அரசியல் போல செய்ய வேண்டும் என்கிறீர்கள். றோவுக்கு ஒரு ஆமா போட வேண்டும்.பிறகு மகிந்தவுக்கு ஒரு ஆமா.பிறகு அமெரிக்கா கூப்பிட ஒரு ஆமா.இதல்லவோ நீங்கள் சொல்லும் அரசியல் சாணக்கியம்.

இல்லாவிடில் உமாமகேஸ்வரனுக்கு றோ செய்த அரசியலை செய்ய வேண்டும்.சொல்ல மாட்டேன் அழுதுடுவேன். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.இதை நம்பி புலம் பெயர்ந்த வெங்காயங்கள் பலர் போய் விருந்து வேறு உண்டார்கள் .உலகம் பென்னாம் பெரிசு என்பதை இன்னமும் எங்களில் பலர் விளங்குகின்றார்கள் இல்லை .

பெருசு என்று தெரிஞ்ச நீங்கள் ஏன் இஞ்ச யாழில் குப்பை கொட்டுறீங்கள்?

போய் உலகத்தை ஒரு சுத்து சுத்தீட்டு வாரது?

அரசியல் என்பதை தளத்தில் இருந்து செய்தால்தான் தெரியும் எத்தனை எதிரி எத்தனை துரோகி என்பது.

எல்லாம் முடிய தட்டச்சு செய்வது இதை தமிழில் சுருக்கமாக சொன்னால் வாந்தி எடுப்பது என்றுதான் சொல்லமுடியும்.

இதுதான் முடிவு .....

இப்படித்தான் நடக்கபோகிறது

இதை மக்கள்தான் நிறுத்தமுடியும். என்று வரிக்கு வரி சொன்னது உங்கள் காதுகளுக்கு எட்டியிராது.

எல்லாம் முடிய போராட்டம் மக்கள் மயபடுத்தவில்லை என்று வாந்தியெடுத்து விட்டு உட்காந்திருங்கள். நீங்கள் அதுக்குதான் லாயக் என்பதற்கு உங்கள் எழுத்துக்கள் ஆதாரம்.

மக்கள் மயபடுத்துவதேன்றால்..... அவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டுவந்து அவர்களைத்தான். மயபடுத்தியிருக்க முடியும்.

ஐரோப்பிய யூனியனின் சிதறல்களும் யூரோவின் சரிவுகளையும்.

உண்மையான அரசியல் தெரிந்தவன் என்றால் எழுதி காட்டுங்கள். இந்த புலிவாந்திஎடுப்பதை கடந்து ஏதும் தெரியும் என்றால் எழுதி காட்டுங்கள்.

பின்பு படிக்காதவர்கள் செய்த அரசியல் பாகாம் என்ன நடந்தது என்று நாங்கள் காட்டுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இன்று பலர் சிலாகிப்பதுபோல் புலிகளின் போர் (ஆயுதபோராட்டம்) முடிவுக்கு வந்து, ஒரு அரசியல் வெறுமையொன்று ஏற்பட்டிருக்கிறது. சிங்களமும் இந்தியாவும் மேற்குலகும் இதையே எதிர்பார்த்தது.யுத்த வெற்றியை முதலீடாக்கி பொருண்மிய வளத்தைப் பெருக்கிச் சிங்களவருக்கு வசதி வாய்ப்புகளை விரிவாக்கி ஒரு முடிசூடா மன்னனாக வலம் வருவதோடு வடகிழக்கிலும் மாகாண சபைகளைக் கைப்பற்றி, தமிழருக்கும் தாமே தலைமை புலத்திலிருப்பவர்கள் கூறுவது பொய் என்று சொல்லி முழுத்தமிழரின் இருப்பையும் இல்லாமல் செய்யும் திட்டத்தோடு சிங்களம் நகர்கின்ற சூழலில் சிறு தடையாக இருப்பது புலம்பெயர் தமிழரின் இருப்பாகும்.அதனால்தான் இன்று புலம்பெயர் புல்லுருவிகளை வைத்து தமிழரிடையே சிதைவு நிலையை ஏற்படுத்தி தான் நினைத்ததைமிகப் புத்திசாதுரியத்தோடு நகர்த்துகிறது.

இதிலே வேடிக்கையான விடயம் யாதெனில், சீனாவின் உள்நுளைவானது மேற்கிற்குப் பெரும் கடுப்பை ஏற்படுத்துகிறது.அதனால் மேற்கு மனிதஉரிமை அம்பை அப்பப்போ நீட்டுகிறது. அதேவேளை மேற்கிற்குச் சார்பானதொரு நிலையை இலங்கை எடுக்குமாயின் புலத்தமிழரின் சனனாயகக் குரல்கள் எடுபடாமல் போகும் நிலையேற்படும்.

இங்கே புலம்பெயர் தமிழரின் இருப்பும் அரசியலும் சிங்களத்துக்கு தான் நினைத்ததை வேகமாகச் செய்ய இடையூறாக இருக்கிறது. மேற்கிலிருக்கும் சனனாயக முறைமை தமிழரது கருத்தை வெளியிட வாய்ப்பாக இருக்கிறது. அது சிறிலங்கா இனவாத அரசுக்கு இடையூறு விளைவிக்கிறது.அதனைப் புலிகளின் குரலாக்கிவிடுவதன் மூலம் மேற்கின் அனுதாபத்தைத் தேடவிளையும் இன்னொரு இராஜதந்திரமாகும்.

புலிகளின் தோல்வியல்ல. இது தமிழரின் தோல்வி. அதாவது மானமுள்ள தமிழர் அப்படித்தான் பார்கிறார்கள்.

தமிழருக்காகப் போராடிய தமிழரின் மொத்த அலகு என்ன?

சிங்களவருக்காகப் போராடிய, போராடும் தமிழரின் மொத்த அலகு என்ன? இவற்றை மதிப்பீடு செய்தாலே ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்பது புரியுமல்லவா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரிகளை துரதுஷ்டவசமாக நாம் தான் அரியணையில் ஏற்றினோம் .மகிந்த சிந்தனைக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று சராசரி கூட்டணி அரசியல் செய்தோம் .

சந்திரிகா ,ரணில் ,மகிந்தா வரை இப்படியான பல விடயங்கள் நடந்ததன.என்ன நடக்குது? ஏன் நடக்குது என ஒரு கேள்வியும் கேட்காமல் தானே எல்லோரும் இருந்தீர்கள் .

எல்லாம் நடந்து முடிந்த பின் சிந்திப்பது மாதிரி அப்போது ஏன் சிந்திக்க பலரால் முடியவில்லை?

மகிந்தா ஆட்சிக்கு வந்தால் ரணிலை மாதிரி இழுத்தடிக்காமல் எங்கள் போராட்டத்திற்கு சீக்கிரம் ஒரு முடிவு வரும் என புலிகள் நினைத்திருக்க கூடும் ஆனால்........

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நாங்க ஒரு பாம்ப அடிக்கிறம் அத சரியா அடிக்கலைனா அதுக்கு அடிச்சா அந்த வலியோட அது கொத்த தான் செய்யும்.... இது ரெண்டு பாம்பு அரைகுறையா விட்டாங்க அது திரும்ப வந்து கொத்திடிச்சு அம்புட்டு தா.....

[size=5]மஹிந்த அண்ட் கோ ஐரோப்பா சுற்றுலா வருவதற்கு பெரிய இடைஞ்சலாய் இருக்கினம் என்பதை அந்தாள் உப்பிடி சொல்லியுள்ளார். இதற்குப் போய் நீங்கள் பெரிய பெரிய கருத்தெல்லாம் போட்டுள்ளிர்களே...[/size]

சந்திரிகா பதவிக்கு வந்து சீரியசாக பேச்சுவார்த்தை தொடங்க றோ சொன்னது அம்மையாருக்கு புலிகளை பற்றி உங்களுக்கு விளங்கவில்லை என்று ,கடைசியில் அதுதான் நடந்தது .அது றோ ஆக இருக்கலாம் எரிக் சொகேயும் ஆக இருக்கலாம் பொப் ரே ஆக இருக்கலாம் அவர்கள் சொல்வதை கேட்டு தலையாட்டி விட்டு அடுத்த நாளே தாம் நினைத்ததைதான் செய்வது .

எதிரியை சரியானவன் என்று கணக்கு போடும் மனம் துரோகியினுடையதே. உலத்தில் ஒருநாள் கடசியாக நீதிவரும் ஒன்றாக இருந்தால் அது கிந்திய ரோவிடனிருந்தேயாகத்தன் முடியும். இந்த ரோ தந்திர சந்திரிக்காவுக்கு போதனை செய்ததென்றால் அதை எப்படி வருணிக்கலாம். "சாத்தான்- மூத்தக்காள் மந்திராலோசனை"?

சந்திரிக்கா காலம் BJP தலையிடா கொள்கைகளை கடைப்பிடித்த காலம். சீனா காலியில் ஆயுதகிடங்கொன்றை கட்டியது. ஆனால் BJP தலையிடவில்லை. சீனா - இந்திய தலையீட்டு அரசியல் 2007-2008 ல் வந்தது.(சீனாவின் பிடியில் இருக்கும் நாடொன்றுக்கு யப்பான் அவசரமாக உதவப் போகாது) அநுசரணை நாடுகள் என்று யப்பான் 2.5 பில்லியனும், நோர்வே 1.0 பில்லியனும் மற்றவர்கள் 1.0 பில்லியனும் பொதுவாக கொடுக்க வந்தார்கள். இதை நேர்மையான கதிர்காமருக்கும், சந்திரிக்காவுக்கு இலங்கைக்கு மட்டும் திருப்பி எடுக்க வேண்டும். சுனாமி வந்தது. இதையெல்லாம் இலங்கைக்கு திருப்பி எடுக்க வேண்டும். சந்திரிகா ராசகுமாரியாக வேண்டும். இன்று செல்லாக்காசாக ராசபக்சாவால் மற்றப்பட்டிருக்கும் JVP கடுமையாக உழைத்து இரண்டு வழக்குகளையும் வென்றது. பிளேக் வந்தார். JVP யினரின் இடங்கள் தேடிசென்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தார். நியூயோர்க்கில் வைத்து புலிகள் -அரசு பேச்சு வார்த்தைகளை உடைத்தார்.(விடையம் இந்த பக்கம் திரும்பும் என்று எதிர்பார்த்திருந்தால் வியாபாரத்துக்கு மட்டும் சினேகிதம் வைக்கும் யப்பான் ஒரு போதும் 2.5 பில்லியன் டொலரை இலங்கையில் எறிய வாகுறுதி கொடுத்திருக்காது. (அக்காசி இன்றும் புலிகளை பற்றி சொல்லும் கருத்து இதுதான். "நன்றி வீரர்களே நம்மை அறியாமல் நாமும் ராசபக்சாகளிடம் மாட்டியிருப்போம்" என்பதே.) பிளேக்கின் செயல் திற்மையை அவரின் தலைமை அதிகாரியாக இருந்த உதவிக் காரியதரிசி அமிர்தாஜ் சொல்லியிருக்கிறார். பிளேக்கின் இந்த மாபெரிய சாதனை சர்வதேச முயற்சி என்ற விமானத்தை மூக்கு கீழ் நோக்கிய சுழற்சியில் இறக்கியது. விசையம் முழுவதையும் தனது கைப்பிடியிற்குள் எடுக்க பிளேக் செய்த இந்த தவறால் தமிழர் மட்டுமல்ல இதில் சம்பந்தபட்ட சகல நாடுகளும் தோல்வியை தழுவின.(பலருக்கு இந்த தோல்வியால் எதுவும் நட்டமில்லை. சிலர் தோல்விவை ஒத்துகொள்ளாமல் புலிகளை சாட்டுகிறார்கள்.) இந்திய நீதியரசர் பகவதி பதவி விலகினார். பிளேக் தொடந்து EU வில் கல்லுக்குத்தி சுவீடனின் தளபதி புறுகொடவையும் உதவிகளையும் நாடு திருபினார்.

போராட்டமாயின் அழுதழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும். நாம் மட்டும் தான் போராடியிருக்க வேண்டும். இதில் நாம் அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டோம். சர்வதேச தலையீடு தேவை. அவர்களும், மூடி மறைத்தாலும் தங்கள் தோல்விகளை சுதாகரிக்க விரும்புவார்கள். தீர்வு அக்காசியிடமிருந்தல்ல, சொலெயிடமிருந்தல்ல, பிலேக்கிடமிருந்தல்ல, ரோவிடமிருந்தல்ல சர்வதேசத்திடமிருந்து வர வேண்டும். அதற்காகத்தான் நாம் உழைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி முடியும் நீங்கள் ஒவ்வொருவருடமும் வெற்றி விழ கொண்டாடுவீர்கள் அதைப்பார்த்து ரசித்து கொண்டு இருக்கவேண்டுமாக்கும்

உறவுகளை கொன்று அளித்த நாளை வெற்றி நாளாக சிங்களம் கொண்டாடினால் நாங்கள் புலத்தில் பொத்திக்கொண்டு இருக்கவேண்டுமா ?

ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு என்பதினை சிங்களவன் ஏன் உணரவில்லை ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.