Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசா' கன்

Featured Replies

[size=5]ஒரு பேப்பருக்காக கோமகன் .[/size]

_1569606_francs2_300.jpg

http://news.bbc.co.u...francs2_300.jpg

பாரிஸின் நெரிசலான கட்டிடத் தொகுதி ஒன்றின் நாலாம் மாடியில் இருந்தது அந்த அறை . வெறும் முப்பது சதுர மீற்றரில் ரொயிலட் குளிக்கும் அறை என்று சகலதையும் அடக்கியிருந்தது அந்த அறை . அந்த அறையின் மூலையில் குசினி இருந்தது . அறையின் கீழே கார்ப்பெற்றில் கிழங்கு அடுக்கியமாதிரி இருபது மனித உடல்கள் குறட்டைப் போட்டி நடத்திக் கொண்டிருந்தன . இரவு குடித்த வைன் போத்தில்களும் , ஜே பி போத்தில்களும் அவர்கள் அருகே சிதறிக்கிடந்தன . அறையின் இன்னொரு மூலையில் இருந்த ரீவியில் , நீலப்படமொன்று வெக்கமின்றி ஓடிக்கொண்டிருந்தது . அறையின் சுவர்களில் கரப்பான் பூச்சிகள் பரவலாக ஓடி அறைக்கும் சுகாதாரத்திற்கும் வெகுதூரம் என்பதை உறுதிப்படுத்தின .

அந்த அறையில் பெரும்பாலோர்கள் வேலையற்றவர்கள் . அரச உதவித்தொகையில் காலம் தள்ளுபவர்கள் . 90 களில் பிரான்சில் வேலை முயல்கொம்பாகவே அவர்களுக்கு இருந்தது . ஒருசிலரே அந்த அறையில் சிவப்பு பேப்பரில் , ரெஸ்ரோறண்டில் குறிப்பறிந்து கோப்பை கழுவி 5,000 பிராங்கில் சம்பளத்துடன் ஹீரோவானார்கள் . அறையில் அவர்களுக்கு விசேட கவனிப்பும் உண்டு . எல்லோரது காசுப் பிரைச்னைகளையும் இவர்கள் தீர்த்துவைப்பார்கள் . அந்த அறையில் சாதிவேறுபாடோ , பிரதேசவேறுபாடோ கிடையாது . புலத்து அவலங்கள் அவர்களை ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாக்கியது .

அந்த அறையின் ஹீரோக்களில் ஒருவன் தான் விசாகன் . எண்பத்து மூன்றுகளில் கிழக்கு பேர்ளினால் ஜேர்மனி வந்து , இறுதியில் போர்டர் செய்யிற ஆக்கள் மூலம் பிரான்ஸ்சில் தஞ்சமானான் . அவனுக்கு ஆரம்பத்தில் அகதி அந்தஸ்த்துக் கோரியதிற்கான பச்சை நிற பேப்பர் 6 மாதத்திற்கு . பின்பு வேலை செய்கின்ற அனுமதியுடன் சிவப்பு நிற பேப்பர் 3 மாதக் கால இடைவெளியில் உள்துறை அமைச்சு குடுத்துக்கொண்டிருந்தது . அவனது வாழ்க்கை இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாத ரெஸ்ரோறண்டில் கோப்பைகழுவும் வேலையில் ஓடியது .

விசாகன் ஒர் வறிய குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயதிலேயே புலமைப்பரிசில் கிடைத்து . உயர்தரத்தில் அதிஉயர் சித்திகள் கிடைத்தாலும் தந்தையின் அகால மரணம் அவனை நிலைகுலையச் செய்தது . சிறிது காலம் தந்தை செய்து வந்த தோட்டங்களை செய்து வந்தவனுக்கு , அவர்கள் குடும்ப நிலை அறிந்த யாழ்ப்பாணத்தில் ஹார்ட்வெயர்ஸ் கடை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தனது மகளை திருமணம் செய்து வைத்து வெளிநாட்டிற்கும் அனுப்புவதாகச் சொன்னார் . அவனது தாயின் வற்புறுத்தலுக்காகவும் அவனது தம்பி தங்கைகளின் வாழ்க்கைக்கும் அவன் அந்தக் கலியாணத்திற்கு சம்மதித்தான் . ஆரம்பத்தில் இனித்த திருமணபந்தத்தில் பெண்ணும் ஆணுமாக இரண்டு பிள்ளைகள் பிறந்தன . எல்லா சுமைகளையும் தனியொருவனாக இழுத்த விசாகனிற்கு , அவனது ஊரில் நடந்த சுற்றிவளைப்பில் அவனது தம்பி கைதுசெய்யப்பட்டு சென்றதன் பொழுது வாழ்வின் நம்பிக்கை கேள்விக்குறியாகியது . விசாகனின் அம்மாவினதும் மனைவியினது கண்ணீரும் அவனைக் கலங்க வைத்தன . இறுதியில் அவனது மாமனார் செய்த ஏற்பாட்டில் வெளிநாடு செல்லச் சம்மதித்தான் . சிறுவயதில் ஓடிவிளையாடிய ஒழுங்கைகளும் , பம்பல் அடித்த கேணியடிகளும் அவனிடமிருந்து வலுகட்டாயமாகப் பிய்த்து எடுக்கப்பட்டன .

அன்று அதிகாலை வேலையை முடித்து வந்த விசாகனின் உடலும் உள்ளமும் ஒரே சேரக் களைத்துக்கிடந்தன . அறையினுள் உள்ளே வர முயற்சித்த விசாகனுக்கு அறையின் அலங்கோலம் கோபத்தைக் கிளறியது . அறைவாசலில் இருபது சோடி சப்பாத்துகளும் இறைந்து கிடந்து , செத்த எலி நாத்தம் அடித்தன . ஓரமாகத் தனது சப்பாத்தை களட்டிய விசாகனக்கு அவனது சப்பாத்து மணம் குடலைப்பிரட்டியது. முதல்வேலையாக தொலைக்காட்சிப் பெட்டியை நிப்பாட்டி விட்டு , இறைந்து கிடந்த போத்தல்களை குப்பை பையில் போட்டு கீழே வீதியில் கொண்டு போய் வைத்தான் . குசினியில் காய்ந்துபோன இறைச்சி , பருப்புச் சட்டிகளையும் , சோத்துப்பானையையும் கழுவுவதற்கு தண்ணி ஊற்றி வைத்தான் .

அவன் களைத்து வந்தாலும் உடனடியாகப் படுக்க விசானுக்கு இடம் இல்லை . விடிய ஆறுமணிக்கு துப்பரவு வேலைக்கப் போக எழும்ப இருக்கும் ரகு , உதயன் , வசந்தன் ஆகியோருக்காக காத்துக்கொண்டிருந்த விசாகன் , வந்த நித்திரையை போக்க ஒரு தேத்தண்ணியை போட்டுக் கொண்டு வந்து அறைவாசலில் குந்தியிருந்து கொண்டு அன்று வந்த கடிதங்களை உடைக்கத் தொடங்கினான் . அதில் மனைவியின் கடிதமும் , உள்துறை அமைச்சுக் கடிதமும் முதலாக எட்டிப்பார்த்தன . மனைவியின் கடிதத்தை கலங்கும் கண்களுடன் விரித்துப்படித்தான் . மனைவியின் அழுகையும் பிரிவு ஆற்றாமையும் அக்கடித்தத்தில் எழுத்துக்களாய் விரிந்து கிடந்தன . பிள்ளகளினது அப்பா பற்றிய ஏக்கத்தையும் , எப்போது தாங்கள் ஒன்றாகச் சேரப்போகின்றோம் ? என்ற அவர்களது கேள்வியும் தன்னை வாட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தாள் . விசாகனுக்கு அவனையறியாமலே அழுகை கேவலுடன் வெடித்தது . அறையில் மற்றவர்கள் எழும்பி விடுவார்களே என்று வந்த கேவலை அடக்கிக் கொண்டான் . அடுத்த உள்துறை அமைச்சுக் கடிதம் அவனுள் பேரிடியாக இறங்கியது . அந்தக் கடித்ததில் , அவனது தஞ்சக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கபட்டு நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது . விசாகன் நிலைகுலைந்து போனான் . அவனுக்கு வந்த நித்திரை போய்விட்டது . நேரத்தைப் பார்த்தான் விடியக்காலை ஐந்தரையைத் தொட்டுக்கொண்டிருந்தது .

விசாகனுக்கு சோர்போர்ண் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் படித்துக்கொண்டிருக்கும் அவனது பள்ளி நண்பன் ஆதி நினைவுக்கு வந்தான் . ஆதி இவனைப்போல பொறுப்புகள் இல்லாதபடியால் வந்துடனேயே பிரெஞ்சு மொழியை முறைப்படி படித்து , இப்பொழுது சோர்பேர்ண் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான் . ஆதி அவனது ஆருயிர் நண்பன் . தனது மனப்பாரங்களை எல்லாம் ஆதியிடமே கொட்டுவான் . தத்துவம் படிப்பதால் எதையும் நிதானமாக அறிவுபூர்வமாகவே ஆதி விசாகனுடன் கதைப்பான் .

அறையில் அறைக்காறன் ரெலிபோனை வைத்தால் பில்லை ஏத்திவிடுவார்கள் என்று ரெலிபோனை வைக்காதபடியால் , விசாகன் மாற்றாத உடுப்புடன் கீழே வீதியில் உள்ள பொதுத் தொலைபேசி கூண்டிற்கு வந்தான் . அதிகாலை ஆதியை நித்திரையால் எழுப்பும் குற்ற உணர்வுடன் ஆதியின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினான் . சிறிது நேர இடைவெளியின் பின்பு ஆதி லைனுக்கு வந்தான் .

என்ன மச்சான் இந்த நேரத்தில ? ஆதியின் நித்திரைக் கலக்கம் அப்படியே தெரிந்தது .

மச்சான் எனக்கு ஒருபிரச்சனை உன்னோடை கதைக்கவேணும் .

சரி விசாகன் நான் இண்டைக்கு 2 மணிக்குப் பிறகு யுனிலை லீவா இருப்பன் . வேலை முடிய அங்கை வாவன் « என்றான் ஆதி .

விசாகன் மீண்டும் அறைக்குள் நுளைந்தபொழுது ரகு , வசந்தன் , உதயன் வேலைக்குப் போக ஆயத்தமாகி தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்தார்கள் . அவர்கள் படுத்த படுக்கை போர்வையுடன் அப்படியே கிடந்தது . குசினியை நோட்டமிட்ட விசாகனுக்கு அவர்கள் பாத்திரம் எல்லாம் கழுவி வைத்திருப்பது தெரிந்தது . களையுடன் களையாக ரைஸ்குக்கறில் சுறிநாம் அரிசயைக் கழுவி அளவாகத் தண்ணியை விட்டு பட்டனைத் தட்டிவிட்டான் . உடுப்பை மாற்றிப் படுத்த விசாகனுக்கு மனைவியைப் பற்றி நினைக்கவே விடாமல் நித்திரை இறுக்கி இழுத்தது . விசாகனுக்கு கிடைத்த சிறிய நின்மதியையும் சந்தோசத்தையும் காலம் என்ற நேரம் ஆலாரம் வாயிலாகப் பிய்த்தது எடுத்தது. அவனது அறையில் இருந்த மணிக்கூட்டில் நேரம் 9 மணி என்று பல்லிளித்தது . அசதியுடன் எழும்பியவனுக்கு அறை சமையல் நெடியால் கமகமத்தது . குசினியில் சமையலில் இருந்த நண்பன் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வந்தான் . விசாகன் தேத்தண்ணியைக் குடித்து விட்டு அவசரமாகக் குளித்து வெளிக்கிட்டான் . கீழே இருந்த ரெலிபோன் கூட்டினுள் புகுந்து ரெலிக்காட்டைத் தள்ளி விட்டு மனைவியின் இலக்கத்தை அழுத்தியவன் . மனைவியிடம் சிறுது நேரம் கதைத்து விட்டு வேலைக்கு இரயில் எடுத்தான் . அவன் றெஸ்ரோறண்டில் இயந்திரமாக இருந்து விட்டு ஆதியைச் சந்திக்க யுனிக்கு போயிருந்தான் .

விரிந்து பரந்திருந்த சோர்பேர்ண் பல்கலைக்கழகத்தை அவன் ஏக்கத்துடன் பார்த்தான் . தனக்கும் சுமைகள் இல்லாவிட்டால் இப்படித்தானே படிப்பேன் என்று அவனது மனம் அழுதது . அவனை தூரத்தில் கண்ட ஆதி தனது நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு இவனிடம் வந்தான் . இருவரும் கம்பஸ் கன்ரீனுக்குள் நுளைந்தனர் . ஆதி இருவருக்கும் கபேயை எடுத்துக் கொண்டு வந்தான் .

« ஏன்மச்சான் காத்தால எழுப்பின்னி ? வீட்டிலை ஏதாவது பிரைச்சனையோ ? »

« இல்லையடாப்பா எல்லாரும் நல்லாய்த்தான் இருக்கினம் . இங்கை தான் எனக்கு பெரிய பிரச்சனையாப் போட்டுது . நீ தான்ராப்பா எனக்கு வழிசொல்லு . »

என்வாறே அவன் தனக்கு வந்திருந்த கடிதத்தை ஆதியிடம் குடுத்தான்

கோப்பியை உறிஞ்சியவாறே கடிதத்தை புருவம் நெரியப் படித்தான் .

« உதுக்கே பயப்பிட்டனி . இதெல்லாம் சிம்பிள் வேலை . உந்த நசலுக்கையும் கடவுள் உனகொரு நல்ல வழியை விட்டிருக்கிறார் « .

« குழப்பாமல் விளப்பமாய் சொல்லடாப்பா « .

« உன்ரை வழக்கில நீ கலியாணம் கட்டேலை எண்டெல்லோ போட்டுக்கிடக்கு « ?

« ஓமடாப்பா ».

« பேந்தேன் குழம்பிறாய் . நீ ஓமெண்டு சொல்லு என்னோடை படிக்கிற பெட்டை சண்டிறின் ஓடை உன்ரை விசயமாய் கதைக்கிறன் . மேரியில நீங்கள் ரெண்டுபேரும் ஒண்டாயிருக்கிறதாயும் கலியாணம் செய்யப்போறதாய் சொல்லுங்கோ « .

« என்ன………. எனக்கு கலியாணமோ ? என்ன விழையாடுறியே ? என்ரை மனுசிக்கு என்னால துரோகம் செய்யேலாது « .

ஆதி விசாகனை நிதானமாக ஊடுருவிப் பார்த்தான் .

« சொல்லிறன் எண்டு குறை இனைக்காதை . எப்பவும் நாங்கள் யதார்த்தமாய் யோசிக்கவேணும் . உணர்ச்சிக்கு இடம் குடுக்க கூடாது . இப்ப உனக்கு முன்னாலை இருக்கிறது விசா பிரச்சனை . இதை உடைக்கவேணும் . சண்டிறின் உன்னோடை குடும்பம் நடத்தப்போற பெட்டை இல்லை . எங்கடை ஆக்களிலை அவளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடக்கு . அவளோடை ஒண்டா வாழுற மாதிரி பக்கத்திலை நிண்டு கொஞ்ச படங்கள் அவளின்ரை அறையிலை நீ தங்கியிருக்கிறமாதிரி கொஞ்ச ஏற்பாடு அவ்வளவுதான். அவள் உன்னோடை கோட்டுக்கு வந்து கையெழுத்து போடுவள் . அவள் படிப்பை பாப்பள் . நீ உன்ரை பாட்டில இரு . ஒரு வருசம்தான் விசா உன்ரை கையிலை …. நான் சொல்லுறதைக் கேள் . உன்ரை நல்லதுக்குத்தான் எதையும் உனக்குச் சொல்லுவன் . இதை ஆருக்கும் சொல்லிப் போடாதை . »

விசாகனிற்கு ஆதி சொன்னது ஆரம்பத்தில் குழப்பமாகவே இருந்தாலும் , ஆதி கலியாணத்தைப் பற்றி விபரிக்க விபரிக்க ஆதி சொல்வது சரியாகவே பட்டது . விசாகன் இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக , மறுநாள் சண்டிறினை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி ஆதியிடம் சொல்லிவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்பினான் . அவனால் வேலையில் ஒன்றிணையமுடிவில்லை . அவன் மனதில் அடிக்கடி அவனது மனைவியின் சாந்தமான முகம் வந்து போய்க்கொண்டிருந்தது . மறுநாள் காலை ஆதி அவனுக்கு போன்பண்ணி வேலைமுடிய சண்டிறினுடனான சந்திப்பை உறுதி செய்தான் .

சண்டிறின் பிரானஸின் வடபகுதியான நோர்மண்டியைச் சேர்ந்தவள் . தந்தையை பிரிந்து வாழும் தாயாருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.. சண்டிறினுக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்திருந்தும் தாய்தகப்பனின் பிரிவால் அன்பு என்பது அவளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது . எல்லோருடனும் கலகலப்பாக இயல்பாகவே பழகுவாள் . 23 வயதே எட்டிப் பிடிக்கும் சண்டிறினுக்கு இயற்கை அளவுக்கு அதிகமான அழகை அள்ளிச் சொரிந்து இருந்தது . அவளது நீலநிறக் கண்கள் எப்பொழுதும் படபடத்துக் கதைபேசியபடியே இருக்கும் .

யுனியை அடைந்த விசாகன் அங்கு ஆதியுடன் சண்டிறனைக் கண்டான் . அவன் கண்களால் அவனை நம்ப முடியவில்லை . சண்டிறனது இயல்பான பேச்சும் அழகும் அவனை சுண்டியிழுத்தன . ஆதியின் பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு மூவரும் மனந்திறந்து கதைத்தனர் . இறுதியில் சண்டிறின் தனது மேற்படிப்புக்காக இந்தக்கலியாணம் மூலம் 20 000 பிராங்குகளை , விசானுக்கு நிரந்தரவதிவிட உரிமை கிடைக்கும்பொழுது எதிர்பார்பதாகச் சொன்னாள் . அவனும் அதற்குச் சம்மதம் கொடுக்கவே ஒரு கிழமை கழித்து கோட்டில் கலியாணத்திற்கு ஆதி ஏற்பாடு செய்து விட்டான். கிராமசபையில் ஆதியின் நண்பர்கள் முன்னிலையில் விசாகன் சண்டிறின் இணைந்து வாழும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அத்தாட்சிப்பத்திரங்களையும் கொடுத்தார் . பின்பு சண்டிறினும் அவனும் அவரவர் பாதையில் போய்க்கொண்டிருந்தனர் . விசாகனும் தனது வழக்கை மறுபரிசீலனை செய்யக்கோரி புதிய ஆவணங்களுடன் சேர்த்து அனுப்பிவிட்டு காத்திருந்தான் . அடுத்தடுத்து விசாரணைகள் இருவரும் கணவன் மனைவி போலவே போய் பதிலளித்துவிட்டு வருவார்கள்.

நாட்கள் மாதங்களை கடந்தது அது கோடைகாலமாகையால் எங்கும் வசந்தமாகவே இருந்தது . விசாகனது வாழ்க்கையிலும் வசந்தத்திற்கான பூக்கள் மொட்விழ்க்கத் தொடங்கின . , ஒரு வருடத்தையும் தாண்டிய நாள் ஒன்றில் விசாகனையும் சண்டிரினையும் அழைத்து விசாரணைகளின் முடிவில் உள்துறை அமைச்சு விசாகன் சண்டிறின் தம்பதிகளுடைய கோரிக்கையை பரிசீலித்து விசாகனை பிரான்ஸ்சில் இருப்பதற்கு அங்கீகரித்து கடிதம் அனுப்பியிருந்தது . அவன் மகிழ்சியின் உச்சாணிக்கொம்பிற்கே போயிருந்தான் . ஒரு நாள் மாலை ஆதி இந்த சந்தோசத்தைக் கொண்டாட விசாகனை சண்டிறினது அறைக்கு அழைத்திருந்தான் . விசாகன் அங்கு சென்றிருந்தபொழுது ஆதியும் வந்திருந்தான் . மேசையில் போர்தோ அதிஉயர் சிவப்பு வைன் போத்தல்கள் இரண்டு கம்பீரமாக வீற்றிருந்தன . மூவரும் பலவிடையங்களையும் கலகலப்புடன் வைனை அருந்தியவாறே கதைத்துக் கொண்டிருந்தனர் . ஏற்கனவே தான் சண்டிறினுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின்படி தான் சீட்டு போட்டு சேர்த்து கொண்டுவந்திருந்த இருபதினாயிரம் பிராங்குகளை ஒரு என்வலப்போடு பத்திரமாக இருக்கிறதா என பொக்கற்றில் தொட்டுப்பார்த்துச் சரிசெய்து கொண்டான் . விருந்தின் இடையில் ஆதிக்குவந்த அவசர தொலைபேசி அழைப்பால் , ஆதி இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டான் . வைனை துளித்துளியாய் இருவருமே சுவைக்கத் தொடங்கினார்கள் .

இரவு பத்து மணியைத் தாண்டியவேளையில் வைன் இருவருக்குமே உடலில் சூட்டை ஏற்றியிருந்தது . சண்டிறனது கண்களும் கன்னங்களும் வைன் நிறத்திற்கே மாறியிருந்தன . மெதுவாக போய்க்கொண்டிருந்த பாடலின் சத்தத்தை அதிகரித்தவள் . கேய்......... உனக்கு எந்தரக நடனம் தெரியும் ? என்றாள். நடனமா ? அதேல்லாம் எனக்குத் தெரியாது என்று நெளிந்தான். உனக்கு சம்பா நடனம் தெரியுமா?? சம்பாவா அப்படியொரு அரிசி இருக்கு அது மட்டும்தான் எனக்கு தெரியும் என்றான். சரி வா உனக்கு கற்றுக்கொடுக்கிறேன் என்று கையை நீட்டினாள். எழுந்து வந்த விசாகனின் வலக்கையை தனது இடையில் பொருத்தியவள் இடக்கையை தனது இடக்கையால் இழுத்து நிமித்தினாள் . ஒன்று இரண்டு சொன்னவள் கால்களை இப்படி ஒரு அடி முன்னிற்கு பின்றிற்கு என்று மெதுவாக நடனத்தை தொடங்கியவர்கள் அவர்களிற்கிடையிலான இடைவெளி குறைந்து மது போதையும் ஏற ஒருகட்டத்தில் விசாகன் நிதானமிழந்து சண்டிறினை நெருங்கி அவளது உதட்டில் தனது உதட்டை பதித்துவிட . சண்டிறினும் எதுவித எதிர்ப்பையும் காட்டவில்லை .

அவன் அதிகாலை கண்ணை விழித்து பார்த்தான் . போர்வைக்குள் அவனை அணைத்தபடி படுத்திருவளின் கைகளை மெதுவாக விடுவித்து எழுந்தவன் ஆடைகளை அணிந்து கொண்டு பொக்கற்றை தடவிப்பார்த்தான் .அவன் அவளிற்காக கொடுக்க கொண்டுவந்த பணம் பத்திரமாக இருந்தது. அதனை எடுத்து அங்கு மேசையில் வைக்கப்போனவன் சே...கஸ்ரப்பட்டு வேலைசெய்து சீட்டு போட்டு சேத்த காசு என்று நினைத்தவன் மீண்டும் சட்டைப்பையில் வைத்துவிட்டு மெதுவாக சண்டிரினை எட்டிப்பார்த்தான் அவள் அசையவில்லை. தனது விசாவும் சரியாக இருக்கிறதா என்று சட்டைப்பையில் சரிபார்த்தவன் அங்கிருந்து வெளியேறி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தான்.

********* பி கு :

நான் முன்பு தலப்பைக் 'கள்ளப் பூனை ' என்றும் மதன் என்ற பாத்திரத்தையே நினைத்தும் எழுதினேன் . பின்பு விசாவையே மையமாக கதை சுழண்டதால் 'விசாகன் ' என்று தலைப்பையும் பெயரையும் மாத்தினேன் . சில இடங்களில் பெயர் குளப்பம் வந்துள்ளது . திருத்தியுள்ளேன் . தவறுக்கு மனம் வருந்துகின்றேன் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை இதுவும் கடந்து போகும்.....

நன்றி

அனுபவக்கதைக்கு கோ.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தங்கள் முன்னேற்றதுக்கு என் பாராட்டுக்கள் . தொடருங்கள் படிக்கும் ஆவலுடன் உள்ளோம் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வழைமை போல் எழுத்து பிழைகளை திருத்துங்கள் :lol:மதன் விசாகன் இரட்டை வேடமோ? :icon_mrgreen:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

யார் மதன்? யார் விசாகன்?

மதுவால் மயங்கிவிட்டார் என்பது சாதாரணமான விடயம் (one-night stand). அதையும் தாண்டி விசாகனுக்கு சட்டரீதியாகத் திருமணம் செய்ததால் உரிமையோடு நடக்கமுற்பட்டார் என்பது அதிர்வாக இருந்திருக்கும்!

தேவைக்காக கள்ள பூனைகள் ஆனவர்கள் எங்கள் சமூகத்தில் பலர் .குறிப்பாக லண்டனில் எக்கசக்கம் .நண்பர்களாக இருந்து தாயையும் மகளையும் கட்டி மாமா மருமகன் என்று ஆளை ஆள் கூப்பிட்டவர்களே இருக்கின்றார்கள் .

விசா கிடைத்ததும் நாட்டிற்கு போய் பிரிட்டிஷ் சிட்டிசன் என்று சீதனத்தில் ஒரு லட்சத்தை ஏத்திவிடுவார்கள்.ஐரிஷ்காரியிடம் கொடுத்ததை எங்கட ஆட்களிடம் அறவிட்டுவிடுவார்கள்.

காசு கொடுக்கின்றம் ஏன் வீணாகவிடுவான் என்று ஐரிஷ் பெண்களிடம் அப்பப்போ கணக்கில் கழித்தவர்வர்களும் இருக்கின்றார்கள் .

நல்லதும் எழுத வேண்டியதுமான கதை MR.KO.

  • தொடங்கியவர்

தமிழனை இதுவும் கடந்து போகும்.....

நன்றி

அனுபவக்கதைக்கு கோ.

எனது படைப்புகளுக்கு எப்பொழுதும் ஊக்கம் தருபவர்கள் நீங்கள் . நீங்கள் கூறியதும் உண்மைதான் . அதையெல்லாம் கடந்து வந்த எங்களது விளைச்சல்களை இப்போதுள்ளவர்கள் அனுபவிக்கிறார்கள் . ஆனால் அவர்கள் பார்வையில் நாங்கள் 'ஈனப்பிறப்பான ' அகதிகள் . அந்த வலிகளின் எரிவுதான் நான் அப்போதைய புல வாழ்வுகளை படம் பிடிக்கக் காரணம் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எமது சமூகத்தில் நட‌க்கும் பல கதைகளை நானும் கேட்டுள்ளேன்...இப்படியான யதார்த்தமான கதைகளைத் தரும் கோமகனுக்கு எனது பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

தங்கள் முன்னேற்றதுக்கு என் பாராட்டுக்கள் . தொடருங்கள் படிக்கும் ஆவலுடன் உள்ளோம்

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா .

  • தொடங்கியவர்

வழைமை போல் எழுத்து பிழைகளை திருத்துங்கள் :lol:மதன் விசாகன் இரட்டை வேடமோ? :icon_mrgreen:

ஆள் சிங்கிள்தான் , என்ரை எலி கொஞ்சம் சறுக்கீட்டுது :lol::D . வருகைக்கு நன்றி சாத்திரி .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் கதைக்கு பாராட்டுக்கள் . இங்கயும் ஒருத்தர் விசாவுக்காக கருப்பு ஒண்டைக் கொழுவிப்போட்டு கழட்டக் கஸ்ரப்படுறார் :(

  • தொடங்கியவர்

உண்மைக் கதைக்கு பாராட்டுக்கள் . இங்கயும் ஒருத்தர் விசாவுக்காக கருப்பு ஒண்டைக் கொழுவிப்போட்டு கழட்டக் கஸ்ரப்படுறார் :(

பெரிய ஆமைப்பூட்டோ :lol: :lol: :D :D :icon_idea: ??????????வருகைக்கு நன்றிகள் நந்தன் .

  • கருத்துக்கள உறவுகள்

சாண்ட்றினுக்கு காசு குடுக்கேல்லையா? :unsure: என்ன இருந்தாலும் இது அநியாயம்.. :rolleyes: நல்ல கதைக்கு நன்றிகள் கோம்ஸ்..!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கோமகன்!

விசாகன், விசாவுக்காக்கத் திருமணம் செய்ததை, ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு!

ஆனால், சாண்டரினின் உதட்டில் முத்தமிட்ட பின்பும், பேசிய காசைக் கொடுக்காமல் நடந்தது, கோழைத் தனம்!

இது எனது தனிப் பட்ட கருத்து மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கோமகன்!

விசாகன், விசாவுக்காக்கத் திருமணம் செய்ததை, ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு!

ஆனால், சாண்டரினின் உதட்டில் முத்தமிட்ட பின்பும், பேசிய காசைக் கொடுக்காமல் நடந்தது, கோழைத் தனம்!

இது எனது தனிப் பட்ட கருத்து மட்டுமே!

முத்தம் மட்டுமா? ஏன்னென்னவோ எல்லாம் நடந்திருக்கு.. :D முறைக்கு நிறைய டிப்ஸ் குடுத்திருக்க வேணும்..!! :icon_idea:

நல்ல கதை கோ, வெளிநாட்டு வாழ்க்கையில் நடக்கும் பல விடையத்தை தொட்டு சென்று இருக்குறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அகதிவாழ்வின் அவலங்கள் [/size]

[size=4]தொடருங்கள், கோமகன்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் சிங்கிள்தான் , என்ரை எலி கொஞ்சம் சறுக்கீட்டுது :lol::D . வருகைக்கு நன்றி சாத்திரி .

உங்கடை எலி அடிக்கடி சறுக்கிது கவனம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கடவுளே 90 களிலே 5000 பிரான்க் ஆ மாசம்? அதுவும் restaurant ல வொர்க் பண்ணா? அப்ப இப்ப? :D

தொடர்ந்து சமூகத்திலே நடக்கும் அவங்களையே கதையாக தருவதால் ஒரு பச்சை இங்க இப்பவும் இங்க இந்தியன் பஞ்சாபி பெடியங்கள் இந்த விளையாட்டு தான் citizen எடுக்க விலை 20000 வரைக்கும் போகுது ஒரு வெள்ளை பொண்ண கட்ட :D

  • தொடங்கியவர்

யார் மதன்? யார் விசாகன்?

மதுவால் மயங்கிவிட்டார் என்பது சாதாரணமான விடயம் (one-night stand). அதையும் தாண்டி விசாகனுக்கு சட்டரீதியாகத் திருமணம் செய்ததால் உரிமையோடு நடக்கமுற்பட்டார் என்பது அதிர்வாக இருந்திருக்கும்!

பிழைகளைத் திருத்தியிருக்கிறன் . பூனை பால் குடிச்சது பறவாயில்லை . ஆனால் கள்ளத்தனமாய் , மொள்ளமாரித்தனமாய் பாலைக்குடிச்சுப்போட்டுது நேரத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசாப் பிரச்சனை பிரான்சில் தமிழ் மக்களை பாடாய்ப் படுத்தியது.

88 ம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் நாட்டின் வதிவுரிமை எனக்கு இருக்கின்றது.

ஏன் மனைவி பிள்ளைகுட்டிகள் கூட இருக்கின்றது. :lol:

அதை எழுத வெளிக்கிட்டால் ஒரு நாவலே உருவாகும்.

அந்தக் காலத்தில் பிரான்ஸ் வந்தால் ஒழித்துத் திரிய வேண்டிய நிலைமை. :D

உங்கள் ஆக்கத்திற்குப் பாராட்டுகள் கோமகன்

  • தொடங்கியவர்

தேவைக்காக கள்ள பூனைகள் ஆனவர்கள் எங்கள் சமூகத்தில் பலர் .குறிப்பாக லண்டனில் எக்கசக்கம் .நண்பர்களாக இருந்து தாயையும் மகளையும் கட்டி மாமா மருமகன் என்று ஆளை ஆள் கூப்பிட்டவர்களே இருக்கின்றார்கள் .

விசா கிடைத்ததும் நாட்டிற்கு போய் பிரிட்டிஷ் சிட்டிசன் என்று சீதனத்தில் ஒரு லட்சத்தை ஏத்திவிடுவார்கள்.ஐரிஷ்காரியிடம் கொடுத்ததை எங்கட ஆட்களிடம் அறவிட்டுவிடுவார்கள்.

காசு கொடுக்கின்றம் ஏன் வீணாகவிடுவான் என்று ஐரிஷ் பெண்களிடம் அப்பப்போ கணக்கில் கழித்தவர்வர்களும் இருக்கின்றார்கள் .

நல்லதும் எழுத வேண்டியதுமான கதை MR.KO.

முன்பு புலத்தில் பல கறுத்த கள்ளப்பூனைகள் எம்மிடத்தே இருந்தன . ஆனால் இன்று அவை வெள்ளைப் பூனைகளாக மாறிவிட்டன . முன்பு இருந்த கறுப்பு நிறத்தையும் நினைவுபடுத்துவதும் முக்கியம் அல்லவா ?? உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் அர்ஜுன் . மேலும் எனது வேண்டுகோள் ஒன்று நிலுவையில் உள்ளது , அதையும் கவனத்தில் எடுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்த கதையை தந்ததிர்ற்கு நன்றி சொல்லி....

எனக்கு சில நேரங்களில் இந்தமாதிரி விடயங்களை "தூக்கி" பிடிக்கிறோமோ என்று தோன்றும்.....அது சரியோ தெரியவில்லை...அதனால் அதுபற்றி கதைக்காமல் விடுகிறேன்

  • தொடங்கியவர்

இப்படி எமது சமூகத்தில் நட‌க்கும் பல கதைகளை நானும் கேட்டுள்ளேன்...இப்படியான யதார்த்தமான கதைகளைத் தரும் கோமகனுக்கு எனது பாராட்டுக்கள்

மிக்க நன்றி அக்கை உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சாண்ட்றினுக்கு காசு குடுக்கேல்லையா? :unsure: என்ன இருந்தாலும் இது அநியாயம்.. :rolleyes: நல்ல கதைக்கு நன்றிகள் கோம்ஸ்..!

அங்கைதானே எங்கடை ஏழாம் அறிவு வேலை செய்தது :lol::( . நன்றிகள் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் இசைக்கலைஜன் :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.