Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

சாத்திரி ஒரு பேப்பர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சாரத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து அங்கு வந்திருந்த தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணித்தலைவர் கஜதீபனுடன் தொர்பு கொண்டு கதைத்திருந்தேன். அவருடன் தொலைபேசியில் உரையாடியவற்றின் சுருக்கத்தினை செவ்வி வடிவில் இங்கு தருகிறேன்.

சாத்திரி. வணக்கம் கஜதீபன் நீங்கள் கிழக்கிற்கு வந்திருக்கும் நோக்கம் என்ன எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள்

கஜதீபன். வணக்கம் தமிழரசு கட்சியின் இளைஞரணி சார்பாகவும் யாழ் பல்கலைக்கழக ஒன்றியம் சார்பாக அதன் செயலாளர் தர்சானந் உட்பட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர் கிழக்கிற்கு வந்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக கிழக்கின் மட்டு அம்பாறை மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிற்கும் வீடு வீடாக சென்று வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதே எமது நோக்கமாகும்.

சாத்திரி . நல்லது நான் நினைக்கிறேன் கடந்தகால சில கசப்பான சம்பவங்களிற்கு பின்னர் வடக்கிலிருந்து இவ்வளவு தொகையாக மாணவர்கள் கிழக்கிற்கு வந்திருப்பது இதுதான் முதற் தடைவையென நினைக்கிறேன் உங்களிற்கு கிழக்கில் வரவேற்பு எப்படி இருந்தது

கஜதீபன். நாங்கள் வரும்பொழுது மனதில் சில சந்தேககங்கள் இருக்கத்தான் செய்தது ஆனாலும் எங்கள் மக்கள்தானே என்று தைரியமாக வந்து இறங்கிவிட்டிருந்தோம். ஆனால் இங்கு வந்து இறங்கி இங்கு மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்யத் தொடங்கியதும்தான் எங்கள் சந்தேகங்களே எவ்வளவு தவறானது என புரிந்தது. கிழக்கு மக்களின் வரவேற்பிலும் உபசரிப்பிலும் நெகிழ்ந்து போனோம். ஒவ்வொரு கிராமங்களிலும் தங்கள் வீடுகளில் தான் சாப்பிடவேண்டும் என அன்புத்தொல்லை அதே நேரம் பிரச்சாரங்களிற்காக அவர்களது வாகனங்களிலேயே அழைத்து செல்கிறார்கள். இவர்கள் எங்கள் மீது காட்டும் அன்பை பார்த்ததும் பிரச்சாரம் முடிந்ததும் யாழ்ப்பாணம் போகாமல் இங்கேயே இருந்து விடலாமா என்றும் தோன்றுகிறது.

சாத்திரி. பிரதேச வாதம் என்பதை நீங்கள் எங்குமே எதிர் கொள்ளவில்லையா

கஜதீபன். ஒரு விடயத்தை எல்லாரும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். பிரசேத வாதம் என்பது இங்கும் சரி வெளிநாடுகளிலும் சரி அதனை கையில் எடுப்பவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவும் தங்கள் சுய நலத்திற்காகவும் தங்களை வளர்த்துக்கொள்ளவுமே பிரதேச வாதத்தினை கையில் எடுத்திருக்கிறார்களே தவிர உண்மையான பொது நோக்கோடு அல்ல. அப்படி பிரதேச வாதத்தை கையில் எடுத்த அனைவருமே கிழக்கு மக்களால் புறக்கணிக்கப்பட்டு காணமால் போனதே வரலாறு அப்படித்தான் இந்தத் தேர்தலிலும் பிரதேச வாதத்தினை கையில் எடுத்தவர்களும் காணாமல் போவார்கள் என்பது உறுதி.

அடுத்ததாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தர்சானந் இவர்தான் அண்மையில் இலங்கை புலனாய்வு பிரிவினரால் மிக மோசமாக தாக்கப்பட்டு தப்பிப் பிழைத்தவர் அவரின் கைகளிற்கு தொலைபேசியை கை மாற்றச்சொல்லி அவருடன் நடந்த உரையாடல்.

சாத்திரி. வணக்கம் தர்சானந்தன் உடல் நலம் இப்ப எப்பிடி ? அதே நேரம் இந்த மகாண சபை தேர்தல் என்பது எவ்வித அதிகாரங்களும் இல்லாத சாதாரண மாகாண சபை தேர்தல் இதில் வென்றால் மட்டக்கிளப்பு கறுத்தப் பாலத்திற்கு வெள்ளை சுண்ணாம்பு அடிக்கும் அதிகாரம் கூட இல்லை பிறகு இதற்காக ஏன்இவ்வளவு சிரமப்படுவான்.

தர்சானந். உடல்நலம் இப்ப பரவாயில்லை அண்ணை . அடுத்தது நீங்கள் சொன்னது மாதிரி மாகாண சபையிலை வென்றால் சுண்ணாம்பு கூட அடிக்க முடியாது என்பது எங்களிற்கும் இங்குள்ள எல்லாருக்குமே தெரியும் ஆனால் இன்றைக்கு நாங்கள் எந்தவித பேரம் பேசும் சக்திகளும் இன்றி கையறு நிலையில் நிற்கிறோம். இப்பொழுது எங்கள் எங்கள் நிலையை தக்கவைக்கவேண்டும் அதற்கு எங்கள் பிரதிதிநிதுத்துவத்தை பேணவேண்டும். பறிபோகும் எங்கள் நிலம் பாது காக்கப்படவேண்டும் எங்கள் நிலம் பாதுக்காக்கப்பட்டால்தான் எங்கள் காணிகளில் நின்றபடி நாங்கள் எங்கள் உரிமைகளிற்காக போராட முடியும். நிலமே இல்லாமல் பின்னர் எங்கு நின்று போராடுவது? எனவே இது கிழக்கு மாகாணத்தில் எங்கள் பிரதிநிதுத்துவத்தை தக்கவைப்பதற்கான எம்மாலான சிறிய முயற்சிதான் இது.

சாத்திரி. பெரும் பலத்துடன் அதே நேரம் பிரதேச வாதம் பேசும் பலரும் இந்த தேர்தலில் போட்டியில் இறங்கியுள்ள நிலையில் உங்கள் பிரச்சாரம் எப்படி போகின்றது அதே நேரம் மக்கள் யாரிற்கு வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கிறீர்கள்.

தர்சானந். இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லாம் எண்டு நினைக்கிறன் அம்பாறையில் நாங்கள் பிரச்சாரத்திற்கு போன பொழுது ஒரு வீட்டில் எங்களை சாப்பாட்டிற்காக அழைத்திருந்தார்கள் அங்கு சாப்பிட்டபடியே அக்கம் பக்கத்து வீட்டு காரர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது ஒரு அம்மாவிடம் நான் அம்மா யாருக்கு வோட்டு போடுவீங்கள் என்று கேட்டதற்கு அவர் வீட்டுக்குத்தான் என்றார். அப்ப மற்றாக்கள் வந்து வோட்டு பொடச்சொன்னால் அல்லது வெருட்டினால் என்ன செய்வீங்கள்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் விளக்குமாறு வாசல்லைதான் இருக்கு என்றார். இதற்கு மேல் உங்களுக்கு புரியும் எண்டு நினைக்றன்

சாத்திரி. சரி கிட்டடியிலைதான் அடிவாங்கி உயிர்தப்பியிருக்கிறீங்கள் திரும்பவும் பிரச்சாரம் எண்டு இறங்கியிருக்கிறீங்கள் பிரச்சனை வராதா

தர்சானந். அண்ணை எங்கடை மண்ணுக்காக எத்தனை ஆயிரம் பேர் உயிரை குடுத்திட்டாங்கள் நான் அடிதானே வாங்கியிருக்கிறன் வேணுமெண்டால் திரும்பவும் ஒருக்கா அடி வாங்கத் தயார்.

சாத்திரி. கடைசியாக ஒரு கேள்வி இலண்டனிலை இருந்து பழைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்னர் ஜெயானந்த மூர்த்தி கிழக்கு தேர்தலை புறக்கணிக்க சொல்லி அறிக்கை விட்டிருக்கிறாரே அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்.

தர்சானந். தயவு செய்து கோமாளியளை பற்றி கதைக்காதேங்கோ வேறை ஏதாவது கதையுங்கோ ..

சாத்திரி. உங்கள் பிரச்சாரமும் அதன் பலாபலன்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், செவ்விக்கு நன்றி. தேர்த்தல் முடிவுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி

பேட்டிக்கும் நேரத்திற்கும்......

சரியான தேவையான காலத்திற்கேற்ற கேள்விகள். பதில்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற கேள்வி பதில்கள்..மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி இருக்கின்றது நம்பிக்கை தருவதாக இருக்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி இருக்கின்றது நம்பிக்கை தருவதாக இருக்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கின்றது

நல்ல செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

[size=3][size=1]வாக்கெண்ணும் நிலையம் 12 (செங்கலடி / ஏறாவூர்)[/size][/size]

[/size]

[size=3]

TNA: 3,527

[/size]

[size=3]

PA: 1,730

[/size]

[size=3]

SLMC: 1,305

[/size]

[size=3]

UNP: 08

[/size]

[size=3]

Ind Grp 08 (PMGG): 02

[/size]

[size=3]

[size=1][size=4]வாக்கெண்ணும் நிலையம் 34 – பட்டிருப்பு[/size][/size]

[/size]

[size=3]

TNA: 3,740

[/size]

[size=3]

PA: 1,717

[/size]

[size=3]

UNP: 88

[/size]

[size=3]

SLMC: 40

[/size]

[size=3]

[size=1][size=4]வாக்கெண்ணும் நிலையம் – 38 (மட்டக்களப்பு)[/size][/size]

[/size]

[size=3]

TNA: 3,832

[/size]

[size=3]

PA: 929

[/size]

[size=3]

UNP: 18

[/size]

[size=3]

SLMC: 12

[/size]

[size=3]

தபால்மூல வாக்களிப்பு

[/size]

[size=3]

[size=1][size=4]வடமத்திய மாகாணம் - பொலன்னறுவை மாவட்டம்[/size][/size]

[/size]

[size=3]

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4532 வாக்குகள்

[/size]

[size=3]

ஐக்கிய தேசியக் கட்சி 2835 வாக்குகள்

[/size]

[size=3]

ஜே.வி.பி. 254 வாக்குகள்

[/size]

[size=3]

[size=1][size=4]இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்குகள்[/size][/size][/size]

[size=3]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6, 549[/size]

[size=3]

ஐக்கிய தேசியக்கட்சி 2, 549[/size]

[size=3]

மக்கள் விடுதலை முன்னணி 298[/size]

[size=3]

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 103[/size]

[size=3]

சுயேட்சைக்குழு 11 [/size]

[size=3]

புதிய சிஹல உறுமய 08[/size][size=3]

[size=1]00000000000000000000000[/size][/size][size=3]

மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது - 2ஆவது வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள் -[/size]

[size=3]

மட்டக்களப்பு மாவட்டம் 2ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள்[/size][size=3]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 727[/size][size=3]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 340[/size][size=3]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 139[/size][size=3]

ஐக்கிய தேசிய கட்சி- 14[/size][size=3]

சுயேட்சைக் குழு 8- 70[/size]

[size=3]

[size=3] மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள்[/size][/size]

[size=3]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 935[/size][size=3]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 305[/size][size=3]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 74[/size][size=3]

ஐக்கிய தேசிய கட்சி- 16[/size][size=3]

சுயேட்சைக் குழு 8- 11[/size]

[size=3]

நன்றி G.T.N[/size]

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்குத் தேவையான ஒரு செவ்வி..! பல எதார்த்தங்களைச் சொல்லியிருக்கின்றது..!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத் அண்ணா

மிக மிக ஆரோக்கியமான ஒரு பேட்டி.

பல புலம்பெயர்ந்தவர்களுக்கான பதிலாக இருக்கின்றது அவர்கள் மறுமொழியும் செய்கைகளும் நடவடிக்கைகளும் .புலம் பெயர்ந்தவர்களும் விரும்பினால் துணிவிருந்தால் அங்கு போய் அரசியல் செய்யலாம் போலிருக்கு .

நன்றி இதில் பங்குபற்றிய அனைவருக்கும் விசேடமாக சாத்திரியாருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்குத் தேவையான ஒரு செவ்வி..! பல எதார்த்தங்களைச் சொல்லியிருக்கின்றது..!!

கிழக்கு மாகாண மக்கள் எப்பொழுதும் தெளிவான முடிபுகளையே எடுப்பவர்கள். சுயநலமுடிவுகளை எடுக்க மாட்டார்கள் அந்த வகையில் அவர்களிற்கு எங்கள் நன்றிகள். வாக்களிப்பு விகிதம் குறைவுதான் அம்பாறை கள்ள வாக்குளோடு ஒப்பிடுகையில் ஆனாலும் தங்கள் விருப்பை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி இணைப்புக்கு நன்றிகள், சாத்திரியார்!

[size=4]பேட்டியின் சாராம்சம் இதுதான்: [/size]

[size=1]

[size=4]தர்சானந். அண்ணை எங்கடை மண்ணுக்காக எத்தனை ஆயிரம் பேர் உயிரை குடுத்திட்டாங்கள் நான் அடிதானே வாங்கியிருக்கிறன் வேணுமெண்டால் திரும்பவும் ஒருக்கா அடி வாங்கத் தயார்.[/size][/size]

[size=4]தமிழ் மக்கள் உரிமைக்காக, வாழ்வுக்காக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். அந்த உண்மையை புலம்பெயர் மக்கள் தமது ஒற்றுமையால் பலத்தால் சர்வதேச அழுத்தம் ஊடாக அரசியல் தீர்வை விரைவில் பெற உதவவேண்டும். [/size]

[size="2"]லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பேப்பரில் , மூக்கு சாத்திரம் பார்த்து எழுதும் நபர் ஒருவர் யார் என்று கேட்டால், சின்னப்பிள்ளை கூடச் சொல்லிவிடும் அது சாஸ்த்திரி என்று ! இவர் நாடுகடந்த அரசின் ஒரு அபிமானி. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊதுகுழல், தாமே தலைமைச் செயலகம் என்று சொல்லி அலைந்து திரியும் சங்கீதனின் அனுதாபி ! இந்த 3 விடையங்கள் குறித்து யாராவது எழுதினாலோ இல்லையேல் விமர்சித்தாலோ மூக்குச் சாஸ்திரி உடனே கெம்புவார் ! அவருக்கு உடனே களம் அமைத்துக்கொடுக்கும் 'ஒரு பேப்பர்' !

இதேபோலத்தான் சமீபத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள், நடைபெறும் மாகாணசபைத் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கவேண்டும் என்று ஒரு அறிவித்தலை விட்டுவிட்டார் ! இது அவரது சொந்தக் கருத்து ! கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத மூக்குச் சாஸ்திரி 'இரகசிய கடிதம்' , இல்லை லெட்டர்,... இல்லை இல்லை மடல் என்று வைச்சுக்கொள்ளுவோமே ,, அப்படி ஒன்றை ஒரு பேப்பரில் எழுதி இருக்கார் ! அதில் முன்நாள் எம்பியான ஜெயானந்தமூர்த்தி அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார். கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தவேளை, ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தேசிய தலைவரின் படத்தை எரித்தார் என்றும், கொழும்பில் விடுதலைப் புலிகளால் வாங்கிக்கொடுத்த வீட்டை மீட்க அவர் மகிந்தருடன் டீல் போட்டார் என்றும், கருணா கிழக்கில் இருந்தவேளை வன்னிக்குச் செல்லாமல் ஜெயானந்தமூர்த்தி இருந்தார் என்றும் பல குற்றச்சாட்டுகளை மூக்குச் சாஸ்திரி முன்வைத்துள்ளார்.

மூக்குச் சாஸ்திரி யோசியம் பார்த்து எழுதியது 3 விடையம் தான் ! அதுவும் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விடையமாம். கொஞ்சம் ரீவைன் பண்ணி பின்நோக்கி நகரவேண்டும். அப்ப கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த காலகட்டம். அப்போது ...

*தேசிய தலைவரின் படத்தை ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பில் எரித்துவிட்டாரம் !

*புலிகள் ஜெயானந்தமூர்த்திக்கு கொழும்பில் வாங்கிக்கொடுத்த வீட்டை தக்கவைக்க அவர் மகிந்தரோடு டீல் போட்டாராம்.

*நாடு கடந்த அரசை பிரித்துவிட்டாராம்.

sangeethan-london.jpgஇதில் எக்ஸ்ரா பிட்டிங் ஒன்றும் இருக்கு, மக்களே இதையும் ஒருக்கா கவனிக்கவேண்டும். அதாவது வன்னி சென்ற ஜெயானந்தமூர்த்தியை புதுக்குடியிருப்புக்கு கூட்டிக்கொண்டுபோனது சங்கீதனாம் ! மூக்குச் சாஸ்திரி கூறும் புதுக்குடியிருப்பு என்ன என்று விளங்குதா ? தலைவர் இருக்கும் இடமாம் ! அப்ப சங்கீதன் தலைவரின் ஆள்... அவரை எல்லாரும் ஆதரிக்கவேண்டும் என்ற விடையத்தையும் அவர் நாசூக்காகப் போடுகிறார் ஒரு பேப்பரில். ஒருபேப்பரில் இருக்கும் ஆசிரியருள் ஒருவரான கோபி அவர்கள் சங்கீதனையும் அவர் இயக்கும் தலைமைச் செயலகத்தையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இல்லை என்பதனை சாஸ்த்திரி அறிவாரா ? சங்கீதன் 2009ம் ஆண்டு லண்டன் வந்து 2011ல் மாவீரர் தினத்தை 2 டாக உடைத்தது, எல்லோருக்கும் நினைவிருக்கும். தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் இரண்டாக உடைத்ததும் அனைவரும் அறிவார்கள்.

மேலும் சொல்லப்போனால், சங்கீதன் என்னும் பெயரை வைத்துக்கொண்டு அலையும் சங்கீதன் என்பது அவரது பெயரே இல்லை. உண்மையான சங்கீதன் வீரச்சாவடைந்துவிட்டார். லண்டனில் இருப்பது போலிச் சங்கீதன். இதுகூடத் தெரியாத மூக்குச் சாஸ்திரி, மூக்கு சாஸ்த்திரம் போட்டு சில கண்டுபிடிப்புகளை நடத்தி இருக்கிறார் என்றால் நாம் அதனை நம்ப முடியுமா.

தேசிய தலைவரது படத்தை நான் எரித்தேனே ? அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறார் ஜெயானந்த மூர்த்தி. ஆதாரங்கள் உள்ளதா காட்டுங்கள் எனச் சவால் விடுகிறார். மற்றைய விடையம் கொழும்பில் உள்ள வீடு. சாஸ்திரி அவர்களே நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் அது புலிகளால் ஜெயானந்தமூர்த்திக்கு வாங்கிக்கொடுக்கப்பட்ட வீடு என்று. புலிகள் ஜெயனந்தமூர்த்தியை மதித்துத் தானே அந்த வீட்டை வாங்கிக்கொடுத்துள்ளார்கள். புலிகளின் சொத்தான அதனைக் காப்பாற்ற அவர் எதுவேண்டும் என்றாலும் செய்யலாம். ஏன் எத்தனை தடவை புலிகள் இலங்கை அரசுடன் பேரம்பேசி, சிறைக்கைதிகளை விடுவித்தார்கள். ஆப்பரேஷன் செக் மேட் நடவடிக்கையில் இந்திய இராணுவம் ஈடுபட்டு, தேசிய தலைவரை காட்டில் சுற்றிவளைத்தவேளை புலிகள் போட்ட டீலில் தான் பிரேமதாச இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து , இந்திய இராணுவத்தை நாட்டைவிட்டு வெளியேற்றினார். !

இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், மூக்குச் சாஸ்திரி அவர்களே, உங்களுக்கு ஒரு வீடு கொழும்பில் இருந்து அதனை சிங்கள அரசு எடுத்துக்கொண்டால் நீங்கள் என்ன அப்படியே பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா ? அதனை எப்படி திருப்பிப் பெறலாம் என்று தானே முயற்சி செய்வீர்கள் ? என்ன இது கேணைத்தனமா எழுதுறீங்கள் ? அடுத்த விடையம் நாடு கடந்த அரசை இரண்டாகப் பிளக்க தான் ஜெயானந்தமூர்த்தி அதற்குள் போனாரா ? ஆஹா இதுமதிரி ஒருஜோக்கை நான் வாழ்க்கையில் கேள்விப்பட்டதே இல்லை. நீங்கள் 100 சந்தானத்துக்கு சமன் ! காமெடி பீசாக மாறி உங்களுக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச மதிப்பையும் குப்பையில் கொட்டிவிட்டீர்கள். ஏன் நாடு கடந்த அரசு பிரிந்தது ! அதனை ஒற்றுமைப் படுத்த சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எவ்வாறு பாடுபட்டது ! அதில் முக்கிய இடத்தை வகித்ததே திரு.கோபிரட்ணம்(ஒரு பேப்பரின் நிர்வாகி மற்றும் ஆசிரியர்) என்பது போன்ற விடையங்கள் உங்கள் மூக்கு சாஸ்திரத்துக்கு எட்டவில்லையா சாஸ்திரி அவர்களே ? அரசியலும் தெரியாது ! ஆக்கபூர்வமாக எழுதவும் தெரியாது ! ஊர் ஞானமும் இல்லை !

சொல்புத்தியில், பிறர் சொல்லும் கதைகளை, இரவு தண்ணியடிக்கும்போது கேட்டுவிட்டு, காலையில் எழுந்து கட்டுரை எழுதினால் எப்படி இருக்கும் என்று உங்களைப் பார்த்து தான் நான் புரிந்துகொண்டேன் !

sastri-blog1.jpgபிறரைப் பற்றி பந்தி பந்தியாக கட்டுரை எழுதும் சாஸ்திரி அவர்களே, உங்களுடைய பிளாக்ஸ் பாட்டில்(blogspot.co.uk) வியாபாரிகளால் வீழ்ந்த தலைவா என்று ஒரு கட்டுரை எழுதினீர்களே மறந்துவிட்டீர்களா ? தேசிய தலைவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வீழ்ந்தார் என்று கேவலமாக எழுதியது நீங்கள் தானே. தேசிய தலைவருக்கு விளக்குக் கொழுத்தியதும் நீங்கள் தானே ! அது சரி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த நீங்கள் ஏன் அவ்வியக்கத்தை விட்டு விலகினீர்கள் என்று சற்று சொல்லமுடியுமா ? பிறரை இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள் இந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லவேண்டும் அல்லவா ? சொல்லமுடியுமா உங்களால் ? கருணா கிழக்கு மாகாணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை அங்கே ஏன் ஜெயானந்தமூர்த்தி இருந்தார் ? அவர் ஏன் வன்னிக்குச் செல்லவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களே, அவர் அங்கே சில காலம் இருந்ததால் தான் வன்னித் தலைமைக்கு சில தகவல்களாவது கிட்டியது என்பதனை நீங்கள் அறியவில்லையா ?

தேசிய தலைமைக்கு விளக்கு கொழுத்திய நீங்கள் தேசிய தலைவர் படத்தை ஜெயானந்தமூர்த்தி எரித்தார் என்று பொய்யுரைப்பது வேடிக்கையான விடையம். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், நீங்கள் குறிப்பிடுவதுபோல அங்கே பல ஊடகவியலாளர்கள் இருந்தால் ஒருவர் கைகளிலுமா கமரா இல்லை ? குறைந்த பட்சம் மோபைல் போன்கள் கூடவா இல்லை ? இதற்கான புகைப்பட ஆதாரம் உங்கள் கைகளில் உள்ளதா ? ஆதாரம் இல்லாமல் அனுமானங்களில் குற்றம் சொல்லும் உங்கள் சாஸ்திரங்களை எவரும் நம்பத் தயார் இல்லை ! தமிழர்கள் போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் தமது கைகளில் போராட்டங்களை எடுத்து நடத்திவரும் நிலையில், இதனைக் குழப்பும் வகையில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் அமைந்துள்ளது. இனியாவது ஆக்கபூர்வமாக கருத்துக்களை எழுதுவீர்கள் என நாம் நம்புகிறோம். கிழக்கு மாணாக சபை தேர்தலுக்காக இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய பெருந்தொகைப் பணத்தில் ஒரு பங்கு பிரான்சுக்கும் வந்துவிட்டதா ?

தர்க்கங்களால் வெல்ல முடியாமல் தோற்றுப்போகிறவன், அவதூறுகளை ஆயுதமாகக் கையில் எடுக்கின்றான்.

-மாமேதை சோக்கிரடீஸ்[/size]

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3523

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்துக்கு வந்த, பல்கலைக்கழக மாணவருடன் எடுத்த பேட்டிக்கு, நன்றி சாத்திரியார்.

இது, தேவையான நேரத்தில்... எடுக்கப் பட்ட, ஆக்க பூர்வமான பேட்டி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மகாண சபை தேர்தல் என்பது எவ்வித அதிகாரங்களும் இல்லாத சாதாரண மாகாண சபை தேர்தல் இதில் வென்றால் மட்டக்கிளப்பு கறுத்தப் பாலத்திற்கு வெள்ளை சுண்ணாம்பு அடிக்கும் அதிகாரம் கூட இல்லை

நல்ல பேட்டி. வாழ்த்துக்கள்

பொதுவாகவே தமிழ் மக்கள் எவ்வளவு அச்சுறுத்தல் இருந்தாலும், நேரம் வரும் போது தக்க பதில் தருவார்கள். அதையே இந்த தேர்தலிலும் சொல்லியுள்ளார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது ஜெயானந்த மூர்த்திக்கும் அவரிற்கு ஆதரவாக என்னை திட்டி கட்டுரை எழுதிய அதிர்வு கண்னனும். அதிர்வு செய்திகளை யாழ் இணையத்தில் இணைக்க கூடாது என்று விதி இருந்தும் அதை யாழில் இணைந்த சின்னவனிற்கும். நன்றிகள். போய் வேலையை பாருங்கப்பா எங்கை எதை செய்யவேணும் எண்டு அங்கை வாழுகிற சனத்திற்கு தெரியும். :lol:

Edited by sathiri

நல்லதொரு தேவையான பேட்டி சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது ஜெயானந்த மூர்த்திக்கும் அவரிற்கு ஆதரவாக என்னை திட்டி கட்டுரை எழுதிய அதிர்வு கண்னனும். அதிர்வு செய்திகளை யாழ் இணையத்தில் இணைக்க கூடாது என்று விதி இருந்தும் அதை யாழில் இணைந்த சின்னவனிற்கும். நன்றிகள். போய் வேலையை பாருங்கப்பா எங்கை எதை செய்யவேணும் எண்டு அங்கை வாழுகிற சனத்திற்கு தெரியும். :lol:

நீங்களும் அதிர்வு கண்ணனும் அந்த மாதிரி ஒற்றுமையாய் இருந்தீங்களே என்ன ஆச்சு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.