Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணங்கள் முடிவதில்லை :)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......நானும் சற்றும் எதிர்பார்க்காத விசயங்களை எல்லாம் தொடர் தொட்டு செல்கிறது....

  • Replies 187
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைசியில் முடித்த விடயம் ஆச்சரியத்தைத் தரவில்லை.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்கள் என்றாலே படிப்பதை குறைத்துக் கொண்டு வந்தாயிற்று...உங்கள் தொடருக்குள் என்னை இழுத்தது படங்கள்.பகிர்வுக்கு நன்றிகள் அக்கா..எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்..

கவனத்தில் கொல்கிறேன் :lol: ... கொள்கிறேன் யாயி

இன்று தான் உங்க "த்..த்..தொடர் ரீலை " (இப்ப தானே சுத்தத் தொடங்கியிருக்கின்றீர்கள்) வாசிக்க நேர்ந்தது... இது வரமா? சாபமா? :D

படங்களையும் அதற்கான குறிப்புகளையும் மறவாது போடுங்கள். உங்கள் பயணத்துடன் நாங்களும் ஒட்டவும் உதவும்.

வர வர நீங்களும் (பச்சை மதர்போர்ட்டில் கட்டிய ஈயக்குடுவைகள்போல்) எழுத்தாளர் சுஜாதா ரேஞ்சுக்கு டெக்னிகலா :lol: முன்னேறுறீங்க..

வாழ்த்துக்கள்..

மன்னா,

இது ரீல் தொடர் இல்லை ரியல்தொடர் நீங்கள் சுத்த ஆரம்பித்து நீண்டகாலம் என்பது தெரியும் நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம் ஆதலால் இதனை வாசிப்பது உங்களுக்கு வரமல்ல சாபம் :lol: .... கதையோடு கதையாக நீங்களும் ஆதியும் ஆடவிட்டு அழகு பார்த்த வேர் கட்டி ஆடும் பேழகிகளின் ஆட்டத்தையும் கண்ணுற்றோம் அதுமாத்திரமில்லை அவற்றை உங்கள் இருவருக்காகவும் படம்பிடித்தும் வந்துள்ளேன் தொடரில் அந்தக்கட்டம் வரும்போது அந்த ஆடலை நீங்களும் உங்கள் சகாக்களும் மெய்மறந்து இரசிக்கலாம்.... அநேகமாக அந்தப்பகுதி உங்களுக்கு சாபமாகத் தோன்றாது வரமாக இருக்கும். தொடர்ந்திருங்கள். :icon_mrgreen:

ம்ம்ம்......நானும் சற்றும் எதிர்பார்க்காத விசயங்களை எல்லாம் தொடர் தொட்டு செல்கிறது....

இந்தத் தொடரின் மூலம் உருப்படியாக இருக்கும் ஒருவர் குழப்பமடையப்போகிறார் என்று பட்சி சொல்கிறது உண்மையா யாயி :lol:

நீங்கள் கடைசியில் முடித்த விடயம் ஆச்சரியத்தைத் தரவில்லை.. :D

எனக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது நம்மட கு.சா அண்ணை, சாத்திரியார் , எல்லாள மகாராசன் மாதிரியான கிளுவை வேலி பாய்ந்த சனம்தான் இப்படி மினக்கெடுத்தி இருக்கும் என்று நினைச்சன் நினைப்புப் பிழைத்து விட்டது இசை :rolleyes: .(உதாரணத்திற்குக் காட்டிய மூவரும் :o என்னை மன்னிப்பார்களாக)

  • கருத்துக்கள உறவுகள்

சியர்ஸ் புக்காரா :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சியர்ஸ் புக்காரா :lol::D

too late dear

next time I'll joining with you naththai :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

too late dear

next time I'll joining with you naththai :lol::icon_mrgreen:

நான் உங்கட எழுத்துக்குச் சொன்னேன். :( நீங்க எப்பவும் அங்கதான் நிக்கிறீங்க :lol::D நிதானத்துக்கு வாங்க

Edited by நந்தன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கட எழுத்துக்குச் சொன்னேன். :( நீங்க எப்பவும் அங்கதான் நிக்கிறீங்க :lol::D நிதானத்துக்கு வாங்க

நிதானமாக இருந்தால் இந்தப்பயண அனுபவத்தை எழுதி முடிக்கமுடியாது அண்ணாச்சி :D

  • கருத்துக்கள உறவுகள்

சியர்ஸ் புக்காரா :lol::D

யோ நந்து மிராச்சையே அண்ணாந்து பாத்து அசராத நீங்கள் புக்காராவை பாத்து பயப்பிடலாமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோ நந்து மிராச்சையே அண்ணாந்து பாத்து அசராத நீங்கள் புக்காராவை பாத்து பயப்பிடலாமா? :lol:

ஒன்டத்தானே விழுத்தி இருக்கோம் :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்!!! உங்களுக்கு விமானம் வெற்றிகரமாக, வானத்தில் பரந்ததுக்கே, சம்பெயின் உடைக்கிறாங்கள்!

சிறி லங்கன், விமானம், மலேசியாவில் இருந்த வானத்தில் எழும்பியது தான், நினைவில் தேவையில்லாமல் வந்து போகின்றது!

ஒரு 'பிளேன் டீ' கூடத் தரவில்லை! படுவாக்கள்!

பி.கு: நான் சிறி லங்கன் விமானத்தில் பறப்பதில்லை!

மலேசியன் எயர் லைன்ஸ், தங்கள் பெயரில், இந்த விமானச் சீட்டை வித்துத் தலையைச் சுற்றி விட்டார்கள்!

நானும் மனுசிக்கு, வைன் உடம்புக்கு நல்லதாம் என்று வேறு சமூகப் பெரியவர்களை விட்டுச் சொல்லிப் பார்த்தேன்!

மனுசி அசையிற பாடாய் இல்லை!

மீண்டும், மீண்டும் முருக்க மரமேறும், விக்கிரமாதித்தனாய், இன்னும் அலைகிறேன்!!!

நீங்கள் தொடருங்கள், வல்வை!!!

கதை ,கவிதை ,இப்போ கட்டுரை என்ற மூன்றாம் உலகம் .

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தொடருங்கள்

மிகவும் சுவாரஸ்யமாய் போகிறது ...........இப்போதான் கொஞ்ச்சம் நேரம் கிடைத்து வாசித்தேன் .............நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் பிரமை .............தொடருங்கள் அக்கா ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோ நந்து மிராச்சையே அண்ணாந்து பாத்து அசராத நீங்கள் புக்காராவை பாத்து பயப்பிடலாமா? :lol:

ஒன்டத்தானே விழுத்தி இருக்கோம் :)

சத்தியமா இவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை யாராவது மொழிபெயர்ப்பு செய்யுங்கப்பா :lol: :lol:

ம்ம்!!! உங்களுக்கு விமானம் வெற்றிகரமாக, வானத்தில் பரந்ததுக்கே, சம்பெயின் உடைக்கிறாங்கள்!

சிறி லங்கன், விமானம், மலேசியாவில் இருந்த வானத்தில் எழும்பியது தான், நினைவில் தேவையில்லாமல் வந்து போகின்றது!

ஒரு 'பிளேன் டீ' கூடத் தரவில்லை! படுவாக்கள்!

பி.கு: நான் சிறி லங்கன் விமானத்தில் பறப்பதில்லை!

மலேசியன் எயர் லைன்ஸ், தங்கள் பெயரில், இந்த விமானச் சீட்டை வித்துத் தலையைச் சுற்றி விட்டார்கள்!

நானும் மனுசிக்கு, வைன் உடம்புக்கு நல்லதாம் என்று வேறு சமூகப் பெரியவர்களை விட்டுச் சொல்லிப் பார்த்தேன்!

மனுசி அசையிற பாடாய் இல்லை!

மீண்டும், மீண்டும் முருக்க மரமேறும், விக்கிரமாதித்தனாய், இன்னும் அலைகிறேன்!!!

நீங்கள் தொடருங்கள், வல்வை!!!

ஒன்று மட்டும் விளங்குது... நீங்கள் விக்கிரமாதித்தனாய் வேதாளத்தைத் தேடித்திரிகிறீர்கள் என்று :lol: முருங்கை மரம் ஏறுவதே வாழ்க்கையாகப் போகிறது...இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது என்று எண்ணியபடி இருக்கும் வாழ்க்கையை வேதாளத்தைத் தேடித் தொலைக்காமல் வாழ்ந்து பாருங்கள் ரோமியோ..

ஆமா யார் ரோமியோ அந்த சமூகப் பெரியவாள்? உடனடியாக முகவரியை உங்களிடம் கேட்டு வாங்கித்தரும்படி வாசக வட்டங்கள் தனிமடல்கள் போட்டிருக்கிறார்கள் ரோமியோ,

அந்தப் பெரிய சமூகசேவகர்களை கொஞ்சமாவது அறிமுகப்படுத்தக்கூடாதா?

கதை ,கவிதை ,இப்போ கட்டுரை என்ற மூன்றாம் உலகம் .

நன்றாக இருக்கின்றது தொடருங்கள் .

அர்யூன் நீங்கள் மூன்றாம் உலகம் என்று எழுதியவுடன் ஏதோ வேதாள உலகத்திற்குள் நுழைந்து விட்டேனா என்று பயந்து போனேன். :icon_mrgreen:

நல்லாயிருக்கு தொடருங்கள்

நன்றி உடையார்

மிகவும் சுவாரஸ்யமாய் போகிறது ...........இப்போதான் கொஞ்ச்சம் நேரம் கிடைத்து வாசித்தேன் .............நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் பிரமை .............தொடருங்கள் அக்கா ........

ஆகா நல்ல வேளை இனிமேல் கொஞ்சம் கவனமாக எழுதவேண்டும் :D:icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஒகோ இதெல்லோ கதை ச்சா கட்டுரை சரி ஏதோ ஒன்னு :lol: இங்கை முதலாவதாக ஒரு பெண்ணின் அனுபவம்(பயன)என்பதால் நிறைய எதிர் பாக்கிறோம் :D

ஆகா ஒகோ இதெல்லோ கதை ச்சா கட்டுரை சரி ஏதோ ஒன்னு :lol: இங்கை முதலாவதாக ஒரு பெண்ணின் அனுபவம்(பயன)என்பதால் நிறைய எதிர் பாக்கிறோம் :D

வல்வை இப்போ தான் பேன் எடுத்து... சா பென் எடுத்து சாணை தீட்டி காகிதத்தில் கிழி கிழி யெனக் கிழிக்க சா ..எழுத ஆயத்தமாகின்றார்.

இருந்தாலும் ..இவ்வளவிற்கு நீட்டி முழக்க கூடாது ... சோம்பேறியாய் இருந்து...பொறுமை ...றான் அவுட் ஆகிட்டுது... :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஒகோ இதெல்லோ கதை ச்சா கட்டுரை சரி ஏதோ ஒன்னு :lol: இங்கை முதலாவதாக ஒரு பெண்ணின் அனுபவம்(பயன)என்பதால் நிறைய எதிர் பாக்கிறோம் :D

இங்கு அறிந்து என்ன பயன் அடையப் போறீங்களோ?!!!

ஏதேனும் பயன் உண்டென்றால் நாங்கள் எழுதுகிறமாதிரி நீங்களும் எழுதவேணும் சரியோ. :lol:

வல்வை இப்போ தான் பேன் எடுத்து... சா பென் எடுத்து சாணை தீட்டி காகிதத்தில் கிழி கிழி யெனக் கிழிக்க சா ..எழுத ஆயத்தமாகின்றார்.

இருந்தாலும் ..இவ்வளவிற்கு நீட்டி முழக்க கூடாது ... சோம்பேறியாய் இருந்து...பொறுமை ...றான் அவுட் ஆகிட்டுது... :icon_mrgreen: :icon_mrgreen:

எல்லாளரே, நீங்கள் சரியான அவசரக்காரன்போல :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பயணங்கள் முடிவதில்லை - 4[/size]

GRAND-PARADISE-BAVARO_Primary_wide.jpg

வெளியே அந்தி சாய்ந்து அரையிருட்டில் வெம்மை சுமந்த காற்று உடலில் வியர்வையை துளிர்க்க வைத்துக் கொண்டிருந்த பொழுதில். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்திற்குள் குளிர் மிதமாக தவழ்ந்துகொண்டிருந்தது. வெப்பம் மிகுதியான வரண்டபகுதியை முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தால் உயர்ந்தெழுந்த புழுதி கூறிற்று. அதிக மின்விளக்குகள் இல்லாத ஒடுங்கிய பாதையினூடாக பயணித்துக் கொண்டிருந்தோம். அகன்ற ஒழுங்கமைக்கப்பட்ட நேர்த்தியான பாதையில் நீண்டகாலமாக பயணித்துக் கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு அந்தப் பாதை மிகக்குறுகியதாக இருப்பதில் வியப்பில்லை, இருந்தாலும் என் எண்ணச்சிறகுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நினைவு வலயங்களுக்குள் பறக்கத் தொடங்கின. எத்தனை குறுக்கலான பாதைகளிலும் எங்கள் பயணிப்புகள் எவ்வித அச்சமுமின்றி சாதுரியமாக மேற்கொள்ளப்பட்ட தருணங்கள் எல்லாம் கண்முன்னே வந்து நின்றன. அகதி வாழ்வின் ஓட்டத்தில் எரிபொருள் வாகனங்கள் உதவாத நேரத்தில் எத்தனை மைல்களை ஈருருளி மூலம் எவ்வளவு சுமைகளுடன் சீரற்றபாதையில் பயணித்திருக்கிறோம். அந்த இருட்டும் காற்றின் வெம்மையும் புழுதிபடர்வும் என்னை மீளமுடியாத கடந்த காலங்களுக்குள் வைத்து கும்மியடித்தன. சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அண்மித்தோம். எங்களுடன் வந்தவர்கள் சிலர் வெவ்வேறு விடுதிகளைத் தெரிவு செய்து முற்பதிவு இட்டிருந்தபடியால் அவர்களை முதலில் அவர்களுடைய விடுதியில் இறக்கிவிட்டுவிட்டு இறுதியாக எம்மை நாம் செல்ல இருந்த Grand Paradice விடுதியில் விடுவதாக வாகன ஓட்டுனரின் உதவியாளர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கூறினார். முக்கியமாக ஒவ்வொரு பயணிகளிடமும் அடுத்தநாட்காலை விடுதியின் அலுவலகப்பகுதியில் வந்து கூடுமாறும் அங்கு புன்ரக்கானாவிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கான பிரத்தியேக இடங்கள் பற்றியும் அவற்றிற்கு எவ்வாறு பதிவு செய்து செல்வது பற்றியும் விபரங்கள் தரப்படும் ஆதலால் தவறாது அதில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்..

எமது தரிப்பிடம் வந்தது எல்லோரும் ஆவலுடன் இறங்கி தமது உடமைகளை எடுத்துக் கொண்டார்கள். இறங்கிய இடத்தைப்பார்த்ததும் மனம் கொஞ்சம் அதிருப்தி கொண்டது. club-lobby-area.jpg

எனக்கு மட்டுமல்ல அனைவருக்குந்தான். எனது துணைவர் நீண்ட நேரமாக புகைக்காமல் இருந்ததால் அவசரமாக எல்லோருக்கும் முன்பாக இறங்கி என்னுடைய வெள்ளைச்சகலியை தன்னுடைய உதட்டோடு ஒட்டிக்கொண்டார். சகலி தந்த உற்சாகத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளரை அணுகி எங்களை இறக்கிவிட்ட தரிப்பிடத்தைப்பற்றி தகவல் அறிய முற்பட்டார். நாங்கள் நிற்கும் இடம் Grand Paradiceன் வரவேற்புப் பகுதியைக் கொண்ட முன்பக்கப்பகுதி அல்ல என்றும் இது பின்வழி என்றும் தகவல் கிடைத்தது. மேற்கொண்டு எங்கள் முற்பதிவுகளை உறுதி செய்து கொண்டு எமக்கான அறைகளின் சாவியைப் பெற்றுக் கொண்டோம். கிட்டத்தட்ட பதினைந்திற்கு மேற்பட்ட உயரம் குறைவான தொடர் கட்டிடங்களைக் கொண்ட ஒரு சுற்றுலாத்தளமாகும். ஒவ்வொரு கட்ட்டத் தொகுதியும் அண்ணளவாக 100 முதல்150 வரையான அறைகளைக் கொண்டிருந்தன. எமக்குத் தரப்பட்ட அறை நாம் நின்றிருந்த இடத்திற்கு அண்மையாகவே இருந்ததால் அங்கு நின்ற உதவியாளர்களைத் தவிர்த்து நாமே எமது உடமைகளுடன் அவ்விடத்தை அடைந்தோம். எமக்கான அறை விசாலமாக இருந்தது. ஆனால் நீண்ட நாட்களாக பாவனையில் இல்லாமல் ஈரப்பதனுடன் காற்றின் சுத்திகரிப்பு இல்லாமல் பூட்டிவைக்கப்பட்ட அறையாக இருந்த்து. பூஞ்சனமணம் நாசிக்குள் புகுந்து கொள்ள எனது முகம் சுழித்துக் கொண்டது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டிவேறு கறள் கட்டியிருந்தது. அதனைக் கண்ணுற்றதும் உடனடியாக அவ்விடத்தை மாற்றவேண்டும் என்று கூறி நாங்கள் சாவியைப் பெற்றுக் கொண்ட அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு எமக்கு முன்பாகவே மூன்று குடும்பங்கள் அதிருப்தியுடன் நின்று கொண்டிருந்தார்கள். உடனடியாக அறைகளை மாற்ற முடியாது நாளை மாலை 3 மணிக்குத்தான் அவற்றை மாற்றலாம் என்று வந்த பயணிகளிடம் அங்கு வேலைக்கு அமர்ந்திருந்த உதவியாளர்கள் கூறி எங்களையும் மீண்டும் பழைய அறைக்கே அனுப்பி வைத்தார்கள். சே….. ஒரு நாள் பாழாய் போய்விட்டதே என்று அலுத்தபடி வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டோம். பிள்ளைகள் பசிக்கிறது என்று சொல்லும்போதுதான் அட அங்கு வபே 10 மணியுடன் மூடிவிடுவார்களே… முதலில் போய் ஏதாவது ஆகாரம் உண்போம் என்று இரண்டு கட்டிடத் தொகுதிக்கு அப்பால் உள்ள உணவுச்சாலைக்குச் சென்றோம் அங்கு உணவுகள் தீர்ந்தும் இருக்க்க்கூடிய உணவுகள் எமக்குப் பிடிக்காதவையாகவும் இருந்தன. என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த உதவியாளர் ஒருவர் Grand Paradice ன் முதன்மை தளத்திற்கு அருகாமையில் 24 மணிநேரச் சேவையுடன் உணவு விடுதி இருக்கிறது அங்கு செல்லுங்கள் என்றார். சொல்ல மறந்துவிட்டேன் அங்கு உணவுக்கு நாம் பிரத்தியேகமாக பணம் செலவிடத்தேவையில்லை. எல்லாமே எமது விமானப்பதிவினுள் அடக்கம்.

சரி அங்கு போவதற்கு முன்பு கடற்கரை எங்கிருக்கிறது என்று பார்ப்போம் என்று எமக்கு தரப்பட்ட கட்டிடத்திற்கு சுற்று முற்றும் தேடிப் பார்த்தோம் ஊகூம் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எந்தப்பக்கம் கடல் இருக்கிறது என்று யாரைப் போய் கேட்பது? பிள்ளைகளுடன் ஒரு கொட்டிலில் உட்கார்ந்து கொண்டோம். அப்போது அங்கு வந்தது சின்ன தொடர்வண்டி.

சரி அதில் ஏறி Grand Paradiceன் முகப்புக்குச் செல்வோம் என்று ஏறிக் கொண்டோம் கட்டிடங்கள் கடந்து சின்ன கானகம் போன்ற இருண்ட பாதையினூடாக சுமார் 5 நிமிட ஓட்டத்தின் பின் விடுதியின் முகப்பிற்கு வந்து சேர்நதோம்

.4280335-Grand_Paradise_Bavaro_Punta_Cana.jpg

முகப்பு பிரமாண்டமாகவும், கேளிக்கைக்கூடமாகவும் இருந்தது. நாங்கள் வந்த நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. கேளிக்கைக் கூடத்தில் துள்ளிசையும், மதுரசமும் போட்டிபோட்டு அங்கிருந்தவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.. நம்முடைய வயிற்றையோ பசி வதஞ்செய்துகொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கேளிக்கைக்கூடத்தைத் தாண்டி வெளியே வந்தோம் நீண்ட நீச்சல் தடாகம் மௌனமாய் விளக்கு வெளிச்சத்தில் பளபளத்த அழகைப்பருகியபடி உணவுச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். கம்பேக்கர், ப்ரைட் சிக்கன், சலாட் போன்ற உணவுகளும் மென்பானங்களும் இருந்தன. கம்பேக்கரையும் சிக்கனையும் பிள்ளைகள் எடுத்துக் கொண்டார்கள். துணைவர் தனக்கு பசியில்லை நீங்கள் சாப்பிடுங்கள் என்று விட்டார். நான் இரண்டு பாண் துண்டுகளை எடுத்து பட்டரைப் பூசி படாதபாடுபடுத்தும் பசிக்கு தண்டனை கொடுத்தேன்.

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் விடுதியின் முகப்பு வழிக்கு வரும்போது கசினோ கண்ணில் பட்டது. அப்படியே பக்கத்தில் வந்தவரை அந்தப்பக்கமாக கால்கள் சாய்த்துச் சென்றன. ஒரு நிமிடம் நில் உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்த்து வருகிறேன் என்றவரை அடுத்த கணம் காணவில்லை. எதிரே தண்ணீர் தளதளக்க நீச்சல் தடாகம் அதற்குள் விண் தெரிந்தது முகில் அலைந்தது, மதி சிரித்தது. சத்தியமா நான் மெய் மறந்து போனேன்

.335929.jpg

பிள்ளைகள் வந்த முதல்நாள் குதூகலத்தில் நாலாபக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அட இப்படியான ஒரு பொழுதை இரசித்துக் கொண்டிருந்தால் கற்பனைகள் கரை புரண்டு எல்லை கடக்கும். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

[size=5]வளரும்[/size] :D

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

வளரட்டும்..என் கண்களிலும் ஆவல்ரசம்... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

முடியலை... :rolleyes::lol:

[size=3](கடுப்பேத்துறதுக்குனே கொஞ்சபேர் கிளம்பிடாங்கப்பா.. :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3])[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளரட்டும்..என் கண்களிலும் ஆவல்ரசம்... :)

மேற்கொண்டு டெமோ எல்லாம் வராது சுப்பு உங்கள் ஆவல்ரசம் அவல்ரசமானால் நான் பொறுப்பல்ல :lol::D

முடியலை... :rolleyes::lol:

[size=3](கடுப்பேத்துறதுக்குனே கொஞ்சபேர் கிளம்பிடாங்கப்பா.. :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3])[/size]

இதற்குப் பதில் எழுதி பிரியாவிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள நான் தயாரில்லை. :D

Edited by வல்வை சகாறா

நல்லாய் இருக்கு சகாரா தொடருங்கள்!! சகாரா தம்பதியினருக்கு trip போனால் தான் [size=4]Romantic Mood[/size] வரும் போலை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணக் கலலை

சேர்ந்த வானும்,

பௌர்ணமி நிலவும்

மனதை கொள்ளை

அடிக்கிறது...

துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

எனக்கு அடிக்கடி யாழுக்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை.

கிட்டடியில் தான் நினைத்தேன் சகாரா அக்காவின் பதிவுகள் ஒன்றையும் கிட்ட்டடியில் காணவில்லையே என்று. இதோ - போட்டுவிட்டீர்கள்.

சரி - சிவாஜி, கே.ஆர். விஜயா ஸ்டைலில் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாட்டுப் பாடுங்கள். :lol:

நானும் மனுசிக்கு, வைன் உடம்புக்கு நல்லதாம் என்று வேறு சமூகப் பெரியவர்களை விட்டுச் சொல்லிப் பார்த்தேன்!

மனுசி அசையிற பாடாய் இல்லை!

மீண்டும், மீண்டும் முருக்க மரமேறும், விக்கிரமாதித்தனாய், இன்னும் அலைகிறேன்!!!

sangria என்னும் ஸ்பானிஷ் குடிபானம், வைன், மற்றும் பழரசங்கள், ஐஸ்கட்டி எல்லாம் சேர்த்து, நன்றாக இருக்கும். இந்த கோடைகாலத்தில் ஒருவிதமாக முயற்சி பண்ணிப்பாருங்கள். :lol:

கொஞ்சம் தான் வாசித்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் வாசிப்பேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.