Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18-auto-driver-vijayraj.jpg

[size=3][size=4]சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[/size][/size]

[size=3][size=4]சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்ராஜ், மகிந்த ராஜபக்சேவை தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.[/size][/size]

[size=3][size=4]உயிரிழந்த விஜய்ராஜின் சகோதரர் தேவராஜ், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். ஆனால் விஜய்ராஜ் தாம் எந்த அமைப்பிலு உறுப்பினர் இல்லை என்றும் தாம் அனைத்த் தமிழின உணர்வு கொண்ட அமைப்பினருக்கும் ஆதரவாளன் என்றும் தமது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]http://tamil.oneindi...ead-161671.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

விலை மதிப்பில்லாத உயிர்கள்,

வீணே களப் பலியாகின்றன!

வேண்டாம், எம் சொந்தங்களே,

வீணாக ஒரு உயிரிழப்பு!!!

ஆழ்ந்த அஞ்சலிகள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்தமாதிரியான முடிவுகள் எடுக்காதீர்கள் சகோதரர்களே ..... உங்களின் உயிர்கள் விலை மதிப்பற்றது உங்களைப்போன்ற உணர்வாளர்கள் வேண்டும் தமிழையும் மக்களையும் காக்க !

ஆழ்ந்த அஞ்சலிகள் ... !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆழ்ந்த இரங்கல்கள் , தயவு செய்து விலை மதிப்பற்ற உயிர்களை அழித்துகொள்ள வேண்டாம் , அதுக்குரிய காலம் வரும்வரை .

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இப்படியான முடிவுகளை எடுக்க வேண்டாம்.தொடர்ந்து போராடுங்கள்.ஆனால் உடலை அழித்துப் போராட வேண்டாம். முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியது போலவே கொடுங்கோலர்கள் இதனையும் கொச்சைப்படுத்தப்பார்ப்பார்கள்!!!

வீர வணக்கம்!!!!

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

விடுதலைத் தீயை மற்றவர்களின் உள்ளத்தில் கொழுத்துங்கள்.

தயவு செய்து யாரும் உடலில் கொழுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழுத்த வேண்டிய பலதை விட்டுவிட்டு உம்மை கொழுத்துவதேனோ தம்பிமார்????

உமது வெற்றிடம் எம்மை மீண்டும் மீண்டும் அநாதையாக்கிவிடும்

ஆழ்ந்த இரங்கல்கள்

இதுவே இறுதியானதாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

[size=4]

[size=4]ஆழ்ந்த அஞ்சலிகள் !!![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வாளர்களே.. இனிமேலும் வேண்டாம்.. மக்களை வேறு வழியில் எம்பக்கம் திருப்புவோம்..!! மக்கள் எம்பக்கமென்றால் ஆட்சியாளர்களும் எம்பக்கம்தான்..!!

விஜய்ராஜின் ஆன்மா அமைதிபெறட்டும்..! அவரை இழந்து தவிக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள், இன உணர்வாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தியாகங்கள் மூலம்.. இந்திய.. சிங்கள ஆளும்வர்க்கங்களின் கொட்டத்தை வெல்வது கடினம். இப்படியான அநியாய உயிர் இழப்புக்களை மக்கள் தவிர்த்து தமிழ் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த உரிமைக் குரலை தமிழகம் எங்கும் ஓங்கி ஒலிக்கப் பாடுபடுவது சிறப்பு.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதே முறை. வீரவணக்கங்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.....

[size=3][size=4]விஜய்ராஜுக்கு [/size][/size]அஞ்சலிகள்!!!

தீக்குளிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்!

இந்த உயிரிழப்பின் மூலம் மீண்டும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது என்பதை மறுபதற்கில்லை!

ஆனால் விஜய்ராஜ் போன்ற உணர்வுள்ள தமிழர் உயிருடன் இருந்து இன்னமும் நிறையச் செய்யமுடியும்! தமிழினப் படுகொலைகாரர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடிந்திருந்தால், அதன்பொருட்டு மரணமடைந்திருந்தால் இதன் பயன் இன்னும் பல்லாயிரம் மடங்கு பெருகியிருக்கும்!

.

[size=5]உயிரின் வலியை உணர்த்த உயிர் பலி என்றால் உளம் மகிழ்ந்து தான் போவானே ஒழிய ராஜபக்சே உளம் நொந்து போக மாட்டான்.

சாவும் நீ அவனையும் அல்லவா அரவனைத்துக் கொல்ல வேண்டும். அதுவல்லவா ஈகை. உயிர் பலி கொடுப்பதில் போட்டி போடாதே உன் இனத்தை அழித்தவனை உயிர் பலி எடுப்பதில் காட்டு .[/size]

[size=5]சாவ துணிந்தவன் வீரணாக தான் சாக வேண்டும்.

மனதில் கொள் : வலியது தான் வெல்லும். மற்றது தன்னை தானே கொல்லும். இனியும் இறந்து தமிழனை அசிங்கப்படுத்தாதே சகோதரா..[/size]

539378_353632141387896_598003463_n.jpg

301494_488687051149550_1160877759_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மன்மோகன்சிங், சோனியா, ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் : விஜய் உடலை வாங்க மறுத்து கதறல் - ஆர்ப்பாட்டம்[/size]

[size=3]

v-vijayarajsadalam%20%281%29.jpg

photo.gif[size=4]ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நேற்று தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[/size]

[size=4]அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.

v-vijayarajsadalam%20%283%29.jpg

‘’எப்.ஐ.ஆர் காப்பியை பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,

அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை போஸ்ட்மார்டம் செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.

விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவர்கள் மற்றும் போலீசார் சமாதானம் பேசிவருகின்றனர்.v-vijayarajsadalam%20%282%29.jpgv-vijayarajsadalam%20%284%29.jpgv-vijayarajsadalam%20%285%29.jpgv-vijayarajsadalam%20%286%29.jpg[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=6]சகோதரனுக்கு வீரவணக்கம் [/size]

[size=1]

[size=6]போதும் போதும் தீக்குளிப்புக்கள் [/size][/size]

ஆழ்ந்த இரங்கல்கள்........! :( :(

போதும் போதும் தீக்குளிப்புக்கள். வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறது உள்ளம் எங்களுக்காக போராடுங்கள் உயிரை கொடுக்காதீர்கள் இதுவரை கொடுத்தது போதும்.

ஆழ்ந்த இரங்கல்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.