Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ உதைக்கிறமாதிரி எனக்குப் படுகிது... :) எங்கையாவது உதைக்குதோ விசுகண்ணா...? :D

உதைக்குது என்றாலே அதில் உண்மை இருக்கு என்று தானே ராசா அர்த்தம்

உண்மை எப்பவும் உதைக்கும். :D :D :icon_idea:

  • Replies 69
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்.... நான், இந்தத் தலைப்பில்... கருத்து எழுதாமைக்கு காரணம்,

எனக்கும்.. மன அழுத்தம் உள்ளதோ... என்று.. சந்தேகம் உள்ளது.

அப்ப‌டி... ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ந்திருக்குமானால்....

ஈழ‌ப் போராட்ட‌த்தில், புலிக‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌... க‌ருதுவ‌தாலேயே....

அந்த‌, ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ந்திருக்கும், என்று ந‌ம்புகின்றேன்.

எனக்கு யாழில் பல நண்பர்கள் இருந்தாலும் சில உண்மையான சுயநலமற்ற தூய்மையான நண்பர்கள் உள்ளார்கள். இந்த யாழுக்கு வந்ததிலேயே எனக்கு கிடைத்த மிக பெரும் பாக்கியம் அது என்று தான் கூறுவேன். அவர்களை இனம்காண எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் யாழில் நான் விட்ட தவறுகள்.

அவர்கள் இந்த திரியை பார்த்தால் அவர்களுக்கு இந்நேரம் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். :)

யூ ஆ வெல்கம் மச்சி :lol:

உண்மையில்.... நான், இந்தத் தலைப்பில்... கருத்து எழுதாமைக்கு காரணம்,

எனக்கும்.. மன அழுத்தம் உள்ளதோ... என்று.. சந்தேகம் உள்ளது.

அப்ப‌டி... ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ந்திருக்குமானால்....

ஈழ‌ப் போராட்ட‌த்தில், புலிக‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌... க‌ருதுவ‌தாலேயே....

அந்த‌, ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ந்திருக்கும், என்று ந‌ம்புகின்றேன்.

தமிழ்சிறி, உங்களுக்கு மனஅழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உங்களின் கருத்தை எழுதினால் உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

Edited by தமிழச்சி

உண்மையில்.... நான், இந்தத் தலைப்பில்... கருத்து எழுதாமைக்கு காரணம்,

எனக்கும்.. மன அழுத்தம் உள்ளதோ... என்று.. சந்தேகம் உள்ளது.

அப்ப‌டி... ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ந்திருக்குமானால்....

ஈழ‌ப் போராட்ட‌த்தில், புலிக‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌... க‌ருதுவ‌தாலேயே....

அந்த‌, ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ந்திருக்கும், என்று ந‌ம்புகின்றேன்.

[size=5]நீலப்பறவையால் வந்ததல்லோ[/size] :lol:

[size=5]ம்......... எல்லாருக்கும் புலி தான் கிடைச்சுது சாட்ட!![/size]

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் உள்ள கருத்துக்களைப் பார்த்துப் பலதை அறியக் கூடியதாக இருக்கின்றது. விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்தாலும் stress (மன அழுத்தம்?) ஐயும் depression (மனச் சோர்வு?) ஐயும் முதலில் வித்தியாசப்படுத்தவேண்டும்.

ஒரு சவால் வரும்போது (வேலை, குடும்பம், சொந்தம், நட்பு சம்பந்தமாக அல்லது புதிதாகச் ஒருவரைச் சந்திக்கும்போது) மனதில் உருவாகும் உணர்வு மன அழுத்தமாக கொள்ளப்படும் என்று நினைத்தேன். இது யாருக்கும் வருவது இயல்புதானே. மன அழுத்தத்தில் இருந்து விடுபட நகைச்சுவை, நல்ல இசை அல்லது ஏகாந்தவெளி போன்றவை உதவும்.

மனச்சோர்வு வந்தால் விரக்தி, வெறுப்பு, சலிப்பு, நம்பிக்கையீனம் போன்றவை ஒருவரின் நடத்தையிலும் பேச்சிலும் தெரியும். இதிலிருந்து மீள்வதற்கு உளவளத்துணை வேண்டும். இன்னுமொருவருடன் மனம்விட்டு உரையாடுவதன் மூலமே மனச்சோர்வில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.ஆனால் மனம்விட்டு உரையாட நம்பிக்கை முதலில் உருவாகவேண்டும்!

எனக்கு மனச்சோர்வு வந்ததில்லை என்றே நினைக்கின்றேன்.. என்றாலும் சவால்களை அதிகம் விரும்புவதால் மன அழுத்தம் (stress) அடிக்கடி வந்திருக்கும்! சவால்கள் வரும்போது அவற்றை எதிர்கொண்டு நிறைவேற்றுவது எந்த நேரமும் சரிவராது. சவால் ஒன்றை நினைத்த மாதிரி நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல என்று மனதிற்குள்ளேயே விவாதங்கள் புரிந்து நான் பொறுப்பில்லை என்று என்னை நானே நம்பச் செய்து வெளிவந்துவிடுவேன்!

எனினும் எனது நல்லதுக்கும் கெட்டதுக்கும் நான்தான் காரணம் என்பதில் தெளிவாகவே உள்ளேன்.. :)

தமிழச்சி நன்றாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.

சிலவற்றில் முரண்பாடு இருந்தாலும், மிகவும் இயல்பான தற்கால நடைமுறைச் சாத்தியமான கருத்து.

புலம் பெயர் வாழ்க்கையும் மன அழுத்தமும்...

நான் தாயகத்தில் நீண்டகாலமாக வாழவில்லை, அங்கு வாழ்ந்தாலே அதையும் இதையும் ஒப்பீடு செய்து சுய அனுபவத்தை எழுதலாம். நான் அனுபவித்த அளவில் தாயகத்தில் வாழ்ந்ததை விட பல மடங்குகள் மன அழுத்தம் இல்லாமலும் (குறைவாகவும்?) மகிழ்ச்சியாகவுமே இங்கு வாழ்கின்றேன். மற்றும்படி புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பொதுவான அழுத்தங்கள் நாம் உயிருடன் உள்ளவரை தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி, உங்களுக்கு மனஅழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உங்களின் கருத்தை எழுதினால் உங்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

அப்ப எனக்கு....எனக்கு...இருக்கோ இல்லையோ? :D

தப்பிலி, எல்லா முறையும் எல்லோருக்கும் வேலை செய்யாது. அவரவருக்குரிய முறைகளை அவர்கள்தான் தெரிவு செய்ய வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது. நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. வாற கிழமை முடிந்தால் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

அப்ப எனக்கு....எனக்கு...இருக்கோ இல்லையோ? :D

கு.சா. உங்களோடு இருப்பவர்களைக் கூட மனஅழுத்தம் ஒன்றும் செய்யாது. உங்களுடைய மனம் தேக்கு மரத்தைவிட வலிமையானது.

...

நன்றி குட்டி உங்கள் பதிவிற்கும்,வருகைக்கும் என்ன இன்னும் நீங்கள் இத் திரியில் வந்து எழுதவில்லை என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் வந்து எழுதி விட்டீர்கள்...நான் இப்ப எல்லாம் நண்பர்களைப் எதிர் பார்த்து திட்டத்தை பின் போடுவதில்லை நான் தனியே என்டாலும் செய்கிறது,செய்கிறது தான்...தனியத் தானே பிறந்தோம்,சாக்கும் போதும் தனியத் தானே சாகப் போறோம்.

ஒத்த கருத்து உள்ளவர்கர்களே சேர்ந்து பழகினால் அவர்களுக்குள் நல்லது,கெட்டதை யார் சொல்வது?...அவர்கள் சிந்திப்பது எல்லாம் ஒரே மாதிரியாக அல்லவா இருக்கும் :unsure:

இப்போதெல்லாம் யாழில் நல்ல தலைப்புக்களை விட, செய்திக்குப் பஞ்சப்பட்ட நிலைபோல சில தலைப்புகளோடு உள்ள திரிகள் முன்னுக்கு வந்து நிற்கும்.. அதால நான் அடுத்த பக்கத்துக்கே போறது குறைவு ரதி.. (உங்கள் நல்லதொரு பதிவுள்ள திரியைக் கவனிக்காமைக்குத் தயவு செய்து குறை நினைக்க வேண்டாம்)

பிறந்ததும், தனியாகத் தான் போறதும் தனியாகத் தான் இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் இருக்கும் போது எப்படி இருக்கிறேன்? என்னத்தை அடுத்த தலைமுறைக்குச் செய்து வைத்துவிட்டுப் போகிறேன்? என்பது தான் என்னை நானே என்னைக் மனதில் கேட்டுக் கொள்வது... வாழ்கையின் பிடிப்பும் அதில் அடங்கியே இருக்கும்..

கருத்துக்கள் ஒத்துப் போனாலே பாதிப் பிரச்னை குறையுதே.. இல்லையா?

தப்பிலி, எல்லா முறையும் எல்லோருக்கும் வேலை செய்யாது. அவரவருக்குரிய முறைகளை அவர்கள்தான் தெரிவு செய்ய வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது. நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. வாற கிழமை முடிந்தால் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

தெரிந்தவற்றை எழுதுங்கள் தமிழச்சி. சில விடயங்கள் மன அழுத்தத்திற்குச் தேவையோ இல்லையோ புலம் பெயர் வாழ்விற்குத் தேவையானவையாக உள்ளன. பலருக்கு உதவும். சிலவற்றில் அனுபவத்தில் அடிபட்டுத்தான் திருந்தினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையில் ஆர்வமுள்ளவர்கள் மன அழுத்தம் ஏற்பட்டால் பாடல்கள் கேட்கலாம். :)

ஏனையோர் வேறு பொழுது போக்குகளில் புலனை செலுத்தலாம்.

எந்த பொழுதுபோக்கும் இல்லாதவர்களை தான் மன அழுத்தம் அதிகளவில் பாதிக்கும்.

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் துளசி மனதில் பிரச்சனை இருக்கும் போது புலன்களை சந்தோசமாக வைத்திருப்பது,மனதை ஒரு நிலைப் படுத்துவது கஸ்டம் என்பது என் கருத்து...நான் சொல்வது பெரிய பிரச்சனைகளை யாழில் எழுதுவதால் வாற சிறு பிரச்சனைகளை இல்லை :( ...நன்றி

ஒருவர் மன அழுத்தத்திற்குட்பட்டால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல

அவரைச் சுற்றி இருக்கும் குடும்பமும் பிள்ளைகளும் உறவுகளும் தான்.

பக்கத்துவீட்டுக்காரனுடைய சமையலறை படுக்கையறை போன்றவற்றை

எட்டிப்பார்ப்பதைத் தவிர்த்தாலே மன அழுத்தத்தில் இருந்து தப்பிவிடலாம் :)

நன்றி உங்கள் கருத்திற்கு வாத்தியார்...பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்காமல் என்ட பாட்டிட இருந்தாலும் பிரச்சனைகள் என்னைத் தேடி வந்து கொண்டு தான் இருக்குது :)

அக்கா என்ன இப்பிடிச்சொல்லீட்டீங்கள்...

உண்மை தானே சுபேஸ் இந்த உலகில் நம்பிக்கையான ஆட்கள் இருக்கினமா? ஒரு வீதம் கூட இல்லை.

90% உண்மை. ஒரு 10% முதலாளித்துவ வாழ்கையில் சந்தர்ப சூழ்நிலையால் ஏவப்பட்டு சறுக்கி விழும் அப்பாவிகள் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் கடனோடு வெளி வந்து கடமையை மனத்தில் வரித்துகொண்ட நல்ல மனங்கள் தோல்வியை மட்டும் தொடர்ந்து சந்திக்கும் போது........

தேடி முடிந்தால் அன்ரன் செக்கோவ் எழுதிய "சலிப்பு" என்ற கதையை இணைத்துவிடுகிறேன்.

நன்றி மல்லையூரான் உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும்...நான் இன்னும் வாசிக்கவில்லை ஆறுதலாய் வாசித்துப் பார்க்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனஅழுத்தம் வராமல் இருப்பதற்கு உங்களை நீங்களே ஒருமுறை அலசி ஆராய்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது தேவை என்று படுகிறதோ அதை மட்டும் முதலில் அடைய முயற்சியுங்கள். அதற்குப் போதிய அவகாசங்கள் கொடுங்கள். உதாரணமாக, ஒரு புதிய கார் வாங்க உத்தேசித்தால், அதற்கு உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப ஒரு வருடமோ இரு வருடமோ அவகாசம் கொடுங்கள்.

எதனையும் மற்றவர்களிடம் தங்கியிராது நீங்களே செய்து கொள்ளப் பழகுங்கள். நண்பர்களை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒருவரிடமும் தங்கியிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் உண்மையான நட்பு என்பதும் ஒரு மாயையே. ஆகவே, உண்மையான நட்பு என்றோ நெருங்கிய நண்பன் என்றோ ஒருவரிடம் மட்டும் தங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், மற்ற இனத்தவர்களோடும் நட்புப் பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள். குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்களுக்கு இது மிகவும் தேவையானதொன்று.

நீங்கள் குடும்பச் சுமையோடு தனியாக இருப்பவர்களாயின் உங்களுக்கான நேரத்தையும் பொழுதுபோக்கையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். இது முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நாளடைவில் பழகிவிடும். ஏனெனில் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆகவே, உங்களை நீங்களே பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். உங்களின் சின்னச் சின்ன ஆசைகளை கட்டாயம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சியுங்கள்.

நேரம் கிடைக்கும் போது, பார்க், பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று நடவுங்கள். அங்கு சென்று உட்கார்ந்திருப்பதைவிட நடப்பது அதிக பலனைத் தரும். இதனை வேலையை விட்டு வரும்போதோ அல்லது இடைவேளையின்போதோகூடச் செய்யலாம். ஆறு, குளத்தோடு சேர்ந்திருக்கும் பூங்கா மனஅமைதியைக் குறுகிய காலத்திலேயே தந்துவிடும். பஸ்சிலோ ரெயினிலோ நீண்ட தூரம் பயணம் செய்வதும் சிலருக்குப் பலனைத் தரும். குளிர்காலங்களில், இந்த முறையைப் பின்பற்றலாம். நிச்சயம் பலன் கிடைக்கும். பக்கத்தில் இருக்கும் ஊருக்கு ஓரிரண்டு நாட்கள் சுற்றுலா சென்று வருவதும் பலனைத் தரும். அல்லது காலை போய் மாலை வருவதும்கூட பலனைத் தரும்.

கோயிலுக்குச் செல்பவர்கள் மக்கள் குறைவாக வரும் நேரம் செல்லுங்கள். அங்கு சென்றால், ஒரு அரை மணி நேரமாவது ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்து தியானித்து விட்டு வாருங்கள். தியானம் செய்கிறீர்களோ இல்லையோ அரை மணிநேரம் கண்மூடி அமர்ந்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும். நாளடைவில் பழகிவிடும். கோயில் தியானம் செய்யும் இடமாகத்தான் எம் முன்னோரால் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது வேடிக்கை பார்க்கும் இடமாகப் போய்விட்டது.

பாடல்கள், இசைகள் கேட்பவர்களாயின் கட்டாயம் தத்துவ, சோகப் பாடல்களை முற்றாகத் தவிருங்கள். தொழில்நுட்பம் கூடிய இந்தக் காலத்தில் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது கடினம் இல்லை. ஆகவே துள்ளல் இசையுள்ள, மகிழ்வான பாடல்களை மட்டும் சேகரித்து அவற்றைக் கேளுங்கள்.

இந்த நேரங்களில் நல்ல சுவையுள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். இதற்கு நல்ல சுவையுள்ள உணவகங்களுக்குச் சென்று சாப்பிட்டால் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துப் பழங்கள் போன்ற சத்தான உணவுகளைச் சாப்பிடப் பழகிக் கொள்ளலாம். இதற்கும் வேறுநாட்டு உணவகங்களுக்குச் செல்வது அதிக பலனைத் தரும். நீங்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவுகளுக்காக மட்டும் தமிழ் உணவகங்களுக்குச் செல்லுங்கள். மனஅழுத்தம் உள்ள நேரங்களில் உணவை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். உணவகத்திலேயே தனியாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்தவரை வாசிப்பு நாளடைவில் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிரக் குறைக்காது. ஆகவே, வாசிப்புப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல், கடைகளுக்குச் செல்வதும் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். கடைகளுக்குச் செல்வதாயின் செலவு செய்யக்கூடியளவு பணத்தோடு சென்றால் ஒருவேளை மனஅழுத்தம் குறையலாம். ஆனால், பணப்பற்றாக்குறையில் இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களோடு செல்வதையும் முற்றாகத் தவிர்க்கவும்.

மனம் இறுக்கமாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் மேலே கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். ஆனால் ஒவ்வொரு நாளுமோ அல்லது தொடர்ந்தோ ஒரு விதத்தைப் பயன்படுத்தாதீர்கள். அப்படிப் பயன்படுத்தும்போது, அதுவே மனஅழுத்தத்தைத் தந்துவிடும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள், கஷ்டங்கள் வரத்தான் செய்யும். பிரச்சனை இருக்கிறது என்பதற்காக எம்மை நாமே கவனிக்காவிடில் அவற்றை மேலும் கடினமாக்குவதாகவே முடியும். எமது பிரச்சனைகளை நாம்தான் தீர்க்க முடியும். மற்றவர்களால் நிச்சயம் முடியாது. ஏனெனில் அவர்களின் பார்வை வேறாக இருக்கும். ஆகவே, எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படிதான் நான் மேலே குறிப்பிட்டிருப்பவை. அத்திவாரமின்றிக் கட்டிடம் எழுப்ப முடியாது. ஆகவே, எம்மை நாமே முதலில் கவனித்துக் கொள்வோம். உங்களுக்கிருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்க முயற்சியுங்கள். அதற்கான காலஅவகாசத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், உங்களது ஆசைகளையும் ஒவ்வொன்றாக காலஅவகாசம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்ளப் பழகுங்கள். உங்களின் யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுங்கள். அதேபோல் உங்களை நீங்களே அலசி ஆராய்ந்து கொள்ளவும் பழகிக் கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் போதிய அவகாசமும் முயற்சியும் இருந்தால் எதுவுமே சாத்தியம். ஆகவே, நீங்கள் விரும்பியவற்றை அடைந்து கொள்ளத் திட்டமிட்டு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நிறைவேறும்.

மிக்க நன்றி தமிழிச்சி நீங்கள் மன நலம் படித்தவரோ எனக்குத் தெரியாது :unsure: ...நீங்கள் இதில் எழுதினதை நான் லண்டனுக்கு வந்த புதிசில் வாசித்து இருந்தேன் என்டால் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம் :) ...இப்பவும் எதுவும் கெட்டுப் போகல்லை.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான எழுத்த‌ளார்களுடைய புத்தகங்களை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்...அத்தோடு மன அழுத்தம் ஏற்பட்டால் சும்மா கடைகளுக்கு பொழுது போக்குக்கு விடுப்பு பார்க்க போகலாம் ஆனால் கண்ட‌தை எல்லாம் பார்த்து வேண்ட‌ விருப்பபடுகின்ற மனம் இருக்க கூடாது :D ...மற்றப் படி இதில் நீங்கள் எழுதின எல்லாத்தோடையும் என்னால் ஒத்துப் போக முடிகிறது

மேலும் மன அழுத்தம் சம்மந்தமாக உங்களுக்கு தெரிந்ததை இங்கு நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள்...நன்றி

இந்தத் திரியில் உள்ள கருத்துக்களைப் பார்த்துப் பலதை அறியக் கூடியதாக இருக்கின்றது. விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்தாலும் stress (மன அழுத்தம்?) ஐயும் depression (மனச் சோர்வு?) ஐயும் முதலில் வித்தியாசப்படுத்தவேண்டும்.

ஒரு சவால் வரும்போது (வேலை, குடும்பம், சொந்தம், நட்பு சம்பந்தமாக அல்லது புதிதாகச் ஒருவரைச் சந்திக்கும்போது) மனதில் உருவாகும் உணர்வு மன அழுத்தமாக கொள்ளப்படும் என்று நினைத்தேன். இது யாருக்கும் வருவது இயல்புதானே. மன அழுத்தத்தில் இருந்து விடுபட நகைச்சுவை, நல்ல இசை அல்லது ஏகாந்தவெளி போன்றவை உதவும்.

மனச்சோர்வு வந்தால் விரக்தி, வெறுப்பு, சலிப்பு, நம்பிக்கையீனம் போன்றவை ஒருவரின் நடத்தையிலும் பேச்சிலும் தெரியும். இதிலிருந்து மீள்வதற்கு உளவளத்துணை வேண்டும். இன்னுமொருவருடன் மனம்விட்டு உரையாடுவதன் மூலமே மனச்சோர்வில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.ஆனால் மனம்விட்டு உரையாட நம்பிக்கை முதலில் உருவாகவேண்டும்!

எனக்கு மனச்சோர்வு வந்ததில்லை என்றே நினைக்கின்றேன்.. என்றாலும் சவால்களை அதிகம் விரும்புவதால் மன அழுத்தம் (stress) அடிக்கடி வந்திருக்கும்! சவால்கள் வரும்போது அவற்றை எதிர்கொண்டு நிறைவேற்றுவது எந்த நேரமும் சரிவராது. சவால் ஒன்றை நினைத்த மாதிரி நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல என்று மனதிற்குள்ளேயே விவாதங்கள் புரிந்து நான் பொறுப்பில்லை என்று என்னை நானே நம்பச் செய்து வெளிவந்துவிடுவேன்!

எனினும் எனது நல்லதுக்கும் கெட்டதுக்கும் நான்தான் காரணம் என்பதில் தெளிவாகவே உள்ளேன்.. :)

கிருபன் நீங்கள் எழுதினது ஒரு விதத்தில் சரி தான் மன அழுத்தம் வந்தால் அதை ஒரு விதத்தில் போராடி நாங்கள் வெல்லலாம்...அதற்கு முழுக் கார‌ணமும் நாங்களாகவே இருக்க கூடும்.அதைப் பெரும்பாலும் எங்களால் வெற்றி கொள்ள முடியும் ஆனால் மனச்சோர்வு என்பது இன்னொருவரால் வருவது அவர்கள் எங்கள் மனம் பாதிக்கும் படி நட‌ந்தால் அதன் அழுத்தம் இன்னும் அதிகமாகும்...அதிலிருந்து விடுபடுவது கஸ்ட‌ம் என்பது என் கருத்து...உதார‌ணத்திற்கு நான் எனது நண்பி மீது அதீத பாச‌ம் வைத்திருக்கும் போது அவரும் முதலில் என் மீது பாச‌ம் வைத்திருந்து விட்டு பிறகு இன்னொருத்தரை கண்ட‌தும் என்னைத் தூக்கி எறிந்து விட்டுப் போகும் போது வரும் அழுத்தம் இது; 1)நான் எனக்கு இன்னொரு முழு நம்பிக்கை உரியவரை தேர்ந்தெடுக்கும் வரை 2)இல்லை அந்த நண்பியே திரும்பி வரும் வரை தொட‌ரும் என்றே நினைக்கிறேன்...இதிலிருந்து மீள்வது தான் என்னைப் பொறுத்த வரை கஸ்ட‌ம்...தமிழிச்சி சொன்னது மாதிரி கணக்க நண்பர்கள் வைத்திருக்க வேண்டும் அத்தோடு எல்லோருட‌னும் அளவோடு பழக வேண்டும்...மிக்க நன்றி கிருபன் உங்கள் பகிர்வுக்கு

புலம் பெயர் வாழ்க்கையும் மன அழுத்தமும்...

நான் தாயகத்தில் நீண்டகாலமாக வாழவில்லை, அங்கு வாழ்ந்தாலே அதையும் இதையும் ஒப்பீடு செய்து சுய அனுபவத்தை எழுதலாம். நான் அனுபவித்த அளவில் தாயகத்தில் வாழ்ந்ததை விட பல மடங்குகள் மன அழுத்தம் இல்லாமலும் (குறைவாகவும்?) மகிழ்ச்சியாகவுமே இங்கு வாழ்கின்றேன். மற்றும்படி புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பொதுவான அழுத்தங்கள் நாம் உயிருடன் உள்ளவரை தொடரும்.

நன்றி கலைஞன் உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொல்வது போல் மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கை,பிரியம் வைப்பதும் மன அழுத்தத்தைக் கொண்டு வரும் காரணிகளில் ஒன்று....நட்புக்கள் சரி யாரு சரி ஒன்றுமே இல்லாத விடையங்களுக்கு எல்லாம் கோவித்துக் கொள்வது இல்லை..இது எல்லாம் எவ்வளவுக்கு மற்றவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்கள்...நீர் என்ன கண்டிக்கிறது இல்லை நீர் என்ன எனக்கு சரி,பிழை சொல்வது இப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள்...இன்னும் ஒருவரை கண்டதும் ஏற்கனவே பழகியவரை விட்டு நழுவிக் கொள்வது..இவ்வாறன விடையங்களினால் நானும் பெரிதும் பாதிக்கபட்டு இருக்கிறன்....எங்கள் நட்பே வேணாம் என்று ஒதுங்கி கொள்கிறீர்களா,நம்மை ஒதுக்கிக் கொள்கிறீர்களா சரி இருங்கோ என்றுட்டு எங்கட பாட்டுக்கு போவதே சிறந்தது......அதுவும் முழு மனதோடு செய்ய முடியாது..எங்களால் அவர்களின் முன்னேற்றங்கள் தடைப்படுகிறது என்ற உணர்வு பேச்சாக வெளி வருகிறதை உணர்ந்து கொண்டால் விட்டுக் கொடுத்துட்டு போவதே சிறந்தது...நம்மை வேணாம் என்று போகும் நண்பியோ,நண்பரோ இல்லை யாராக இருந்தாலும் மீண்டும் திரும்பிப் பார்ப்பார்கள் என்று கூட தற்காலத்தில் எதிர் பார்க்க முடியா ஒன்று தான்..நாங்கள் வாழும் நாடுகள் அப்படி..தினமும் மனிதர்கள் தம்மை பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள கூடியதாகவே இருக்கிறது...அவர்கள் மாறுவதை தப்பு என்று நாங்கள் சொல்லவும் முடியாது...என்ன யாயினி இப்படி எல்லாம் சொல்கிறது என்று நினைக்க கூடாது..நன்றாக அனுபவிச்சுட்டு தான் எழுதிறன்....நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.ஏராளம் பக்கங்கள் இருக்கலாம் எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியாமலும் இருக்கலாம்..

[size=3]அருமையான திரியும் எண்ணப்பகிர்வுகளும்... :)

இவ்வாறான சந்தர்ப்பங்களிலிருந்து மீள நான் கையாளும் முறை - கீழைத்தேச பாரம்பரிய இசை (eastern classical music), முக்கியமாக கர்நாடக சங்கீதம் கேட்பது. இங்கு எதனை பேருக்கு இந்த இசை பிடிக்குமோ தெரியவில்லை. இந்த அற்புதமான இசையால் நன் பெறும் அமைதியும், இன்பமும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. :)

எனினும், நம்பிக்கைகுரியவர்களோடு எமது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டு பிரச்சினையின் மூல காரணங்களையும் தீர்வுகளையும் அறிந்து கொண்டு அதன் படி எமது பழக்க வழக்கங்கள், அணுகுமுறைகள் இவற்றை மாற்றி அமைப்பது தான் நிரந்தர தீர்வு தரும். :)

இன்னுமொன்று, எப்போதுமே நாம், நமது நலன் என்று மட்டும் பார்க்காமல், பிறருக்கு நம்மாலான சிறு உதவிகளைச் செய்வதனால் நாம் பெறும் திருப்தி கூட மன அழுத்தத்தைக் குறைக்கும். இல்லையா? :)[/size]

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் தமிழிச்சி,

ஒவ்வொரு வருடம் விடுமுறையில் உள்ளூருக்குள்ளேயே சுற்றுவம், அத்துடன் பிள்ளைகளுடன் விளையாடும் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியே, பிள்ளைகள் வளர வளர நண்பர்களா பழகினால் எமக்கும் வயது போனது தெரியா, அத்துடன் பிள்ளைகளும் மனம்விட்டு கதைப்பார்கள், அப்போ அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், இங்கு அவர்களுக்கு நாங்கள்தான் நல்ல நண்பர்கள்

பிள்ளைகள் கேட்கும் பலதிற்கு விடை சொல்லத்தெரியாமல் விழி பிதுங்கிய நாட்கள் பல, அத்துடன் அவர்களிடமிருந்து கற்றதும் பல

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இன்றுதான் படித்தேன் ...நன்றாகவுள்ளது .மன அழுத்தம் இது வரை வரவில்லை இனிமேல் வருகுதோ தெரியவில்லை.... :D

மன அழுத்தம் வார்றதுக்கு முக்கியமான ரீசன் சம்பந்தப்பட்டவங்க தங்கள தாங்களே தாழ்த்தி கொள்ளுறது தாங்க ரதி அக்கா . மத்தவங்கள ஒப்பீடு செஞ்சும் பாக்கக்கூடாதுங்க . யாரும் யாரை விடவும் தாழ்ந்தவங்க கெடயாது . ஏதோ ஒருவிதத்தில ஒவ்வொருத்தரும் ஸ்பெசலாயிட்டியா இருப்பாங்க . ரெம்ப முக்கியம் வருசத்தில ஒருவாட்டியாவது வெளிஊருங்களுக்கு கொலிடே போகணும் . அப்போ மைண்டு ரிலாக்ஸ்சாகி நோர்மலா வருங்க . உங்க பதிவை ரெம்பவே லைக் பண்றேங்க ரதி அக்கா :) :) .

ரதி, எல்லோருக்கும் அதே நிலைமைதான். எனக்கும் இந்த விடயங்கள் 15 - 20 வருடங்களுக்கு முன்னர் தெரிந்திருந்தால் நானும் எங்கேயோ தான் இருந்திருப்பேன். இவை எல்லாம் முதிர்ச்சி மூலமும் அனுபவங்கள் மூலமும் கிடைத்த பாடம். அதற்காக இப்போது வருத்தப்பட்டு எந்தப் பிரியோசனமும் இல்லை. இவ்வாறான நிலையில், படிக்கச் செல்வதும் ஒருவிதத்தில் உதவும். இலகுவான, உங்களுக்குப் பிடித்த பாடங்களைப் படிப்பதும் உங்கள் மனநிலையை மாற்ற உதவும்.

அநேகமாக எல்லோரும் ஏதோவொரு காலகட்டத்தில் நண்பர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். நீங்கள் முன்னைவிடச் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலே அது அந்த நண்பருக்குக் கொடுக்கும் அடியாக இருக்கும். அதோடு, அந்த நண்பர் விரைவிலேயே உங்களிடம் திரும்பி வருவார். ஆரம்பத்தில் புது நண்பர்கள் பழகுவதற்கு இனிமையாகத்தான் இருப்பார்கள். போகப் போகத்தான் அவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆகவே, ஒருவேளை, அவர் உங்களிடம் திரும்பி வந்தாலும் வரலாம். அதோடு, அவர் ஊரிலிருந்து வந்தவர் என்பதால் உங்கள் நண்பரால் அவருடன் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். எது எப்படியிருப்பினும், உங்களின் வாழ்க்கைதான் உங்களுக்கு முக்கியம். மற்றவர்களுக்காக அதனைப் பாழாக்காதீர்கள். உங்களாலான முழுமுயற்சிகளையும் செய்து உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வாருங்கள்.

உடையார், உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிக நேரம் செலவழிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவர்களின் முன்னேற்றம் இருக்கும். இந்நேரங்களில் அவர்களோடு அனைத்து விடயங்களைப் பற்றியும் பேசுவது நல்லது. பிள்ளைகள் எதனையும் பெற்றோர் மூலம் அறிந்து கொள்வதே சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.