Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

seemaaan.jpg

[size=4]video123.gif40,000 மேற்பட்ட மாவீரர்களையும், 200,000 மேற்பட்ட எம்சொந்தங்களையும் இழந்த வலி இன்னும் தீரவில்லை.நீதியும் கிடைக்கவில்லை. வாழவழிதெரியாமல் வாடும் 98,000 மேற்பட்ட எம்தாய்மார்க்கு இன்னும் விடிவுகிடைக்கவில்லை.

மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் திட்டமிட்டு இசைநிகழ்ச்சி நடத்தி மாவீரரின் மகிமையையும் மக்களின் உணர்வுகளையும் சிதைக்க நினைக்கும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு செந்தமிழன் சீமான் அரைகூவல் விடுத்துள்ளார்.

எமக்காக எம் தொப்பூழ்கொடி உறவு செந்தமிழன் சீமான் குரல்கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட நாம் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.ஒருசிலரின் சுயநலத்திற்காக, அவர்களின் பணப்பெட்டியை நிரப்ப நாம் உடந்தையாக இருக்கலாமா?சிந்தித்துப்பாருங்கள் எம் உறவுகளே.[/size]

http://youtu.be/WM1Sb8Mxzgs

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • Replies 139
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழரசு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு செலவழித்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். என் அவர்களின் வயித்தில் அடித்து நிரந்தர எதிரிகளை தேடுவான்?

அவர்கள் மாவீரர் வாரத்தில் நிகழ்வை நடத்தவில்லையே?

அவர்கள் ஆயிரக்கணக்கான மாவீரர்களை ஈன்ற பெற்றோரை அவமதிக்கலாமா ? :(

சீமானின் கருத்தில் என்ன தவறு இருக்கு ஏன் இவர்கள் ஐப்பசி மாதத்திலையோ மார்கழி மாசத்திலையோ நடத்தலாம்தானே ஏன் அவர்கள் அதை செய்யவில்லை அப்படியாயின் அவர்களும் வேணுமென்று தானே செய்கின்றார்கள்.

[size=5]இசைஞானி இளையராஜா அவர்களின் மாபெரும் இசை நிகழ்ச்சி டொரண்டோ நகரில் நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவிருப்பதும், அதற்கான செய்தியாளர் சந்திப்பு இம்மாதம் 4ஆம் நடந்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தினரும் இன்னும் ஒரு சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து தமிழர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து சீமான் அவர்களின் விளக்கவுரையை பார்ப்போம்.[/size]

[size=5]செந்தமிழன் சீமான் அவர்கள் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து கொண்டு ஒரு மிகப்பெரிய இயக்கத்தை நடத்தி ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் மனதை கவர்ந்தவர். அவருடைய அயராத உழைப்பிற்கும், அர்ப்பணிப்பு கொள்கைக்கும் உலகத்தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள. அப்படிப்பட்ட மதிப்பிற்குரிய சீமான் அவர்கள், இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு குறித்து உலகத்தமிழர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது. அந்த நியாயமான கேள்விகளுக்கு செந்தமிழன் சீமானின் பதில் என்ன?

1. டொரண்டோவின் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுகூடி, ஐந்து மாதங்களுக்கு முன்பே முடிவு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

2. யூதர்களின் ஒற்றுமையை குறிப்பிட்ட செந்தமிழன் சீமான் அவர்கள் 30,000 தமிழர்கள் ஒன்றுகூடி நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் ஒற்றுமையை குலைப்பது போல் ஆகாதா?

3. நவம்பர் 3ஆம் நிகழ்ச்சியை தொடர்ந்து நவம்பர் 10,17,26,27 ஆகிய தேதிகளிலும் அடுத்து வரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்தலாம் என்ற கற்பனை குற்றச்சாட்டு தேவையா?

4. ஒட்டுமொத்த கனடிய தமிழர்களின் உணர்வுகளை எதிர்க்கும் சீமானுக்கு, எதிர்காலத்தில் கனடிய தமிழர்களின் ஆதரவு மனப்பூர்வமாக கிடைக்குமா?

5. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்துவதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து வெற்றி காண நினைக்கும்் எதிரிகளுக்கு துணை போவது போல் ஆகாதா?

6. லட்சக்கணக்கான தமிழர்கள் facebook,twitter மூலம் ஆதரிக்கும் ஒரு இசைநிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் இல்லையா?

7. நவம்பர் கடைசி வாரத்தில் மாவீரர் தினத்தை அனுசரித்துவிட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினால் மட்டும் மாவீரர் தினத்தின் மகிமை குறையாதா?

8. தமிழர்களின் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு இசையால் மருந்து போட வரும் இளையராஜாவின் மனதையே காயப்படுத்தும் ஒரு எதிர்ப்பு தேவைதானா?

9. மாவீரர்் மாதத்தில் நடக்கவிருக்கும் விஸ்வரூபம் பாடல் வெளியீடு, தீபாவளி பண்டிகை முதலிய நிகழ்ச்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பாரா?

10. 30,000 தமிழர்கள் ஒன்று கூடி நடத்தும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் சீமானும் கலந்து கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு நிருபிக்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை அவர் இழக்கலாமா?

உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் எழுந்துள்ள இந்த கேள்விகளுக்கான பதிலை சீமான் அவர்கள் தனது மனசாட்சிப்படி கூடிய விரைவில் அளிப்பார் என நாம் நம்புவோம். மேலும் இதுகுறித்த நடுநிலையான கருத்துக்களை வாசகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கிறோம்.[/size]

[size=5]இந்த செய்தியின் வீடியோ மற்றும் படம் பார்க்க....[/size]

http://www.thedipaar.com/news/news.php?id=53455

[size=5]ஏற்பாட்டாளர்களின் விதண்டாவாதக் கேள்விகள் மேலும் நிலைமைகளை சிக்கலாக்கும்! [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொப்புள்கொடி உறவுக்கு இருக்கும் அக்கறை பொறுப்பும் ஏன் ஏற்பாட்டாளர்களிற்கு இல்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்கு மரியாதை செலுத்துவதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழி எப்போதும் தனி வழிதான்.

ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகள் லஷ்மி மஞ்சு தற்போது மறந்தேன் மன்னித்தேன் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்துக்கான் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் சென்னையில் நடைபெறுகிறது. இளையராஜா மேற்பார்வையில் இந்த இசை சேர்ப்பு நடந்து வருவதும், அதைப் பார்க்க மோகன் பாபு வந்துள்ளதும் ரஜினிகாந்துக்கு தெரிய வந்தது.

அடுத்த நிமிடம் தனது தனது காரை எடுத்துக் கொண்டு யாருக்கும் முன்னறிவிப்பு கொடுக்காமல் கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த்.

ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்தை பார்த்த உடன் இளையராஜா, மோகன் பாபு உள்ளிட்டோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு தனது நண்பர் மோகன் பாபுவுடனும், இளையராஜாவுடனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த ரஜினி, படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இளையராஜா மிகவும் சிறந்த இசையமைப்பாளர்தான் ஒத்துக்குறோம். கனடா நாட்டில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் இலங்கைத்தீவினைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் வாழ்கிரார்கள். அதில் வெறும் முப்பதினாயிரம் தமிழர்கள் மட்டுமே பங்குகொள்கிறார்கள். சிலவேளை இதில் எங்கட, யாழ் இந்துக் கல்லூரிப் புலமைசேர் அர்சுணும் அடக்கமாக இருக்கலாம். இளையராஜவும் அவரது மகன்களும் வந்து நின்று ராஜா கைய வைச்சா காலை வைச்சா எண்டு பாடுவினம். வேற யாருடைய பாடல்களையும் பாடமாட்டம் எனத் திமிர் பிடித்துக் கூறுவினம் தவிர அவரது மருமக்களில ஒருத்தியும் வந்து பாடுவா. சென்னையில் நடந்த ஒரு நிகழ்சியில் சிம்புடன் சேர்ந்து தாய்லாந்து புகட்டே போய் பொம்பிளை பொறுக்கின விதத்தில பிரச்சனையாகி கல்யானக் கட்டை அவித்து விட்டு போனாளே அந்த லண்டன் பெண் பாடியது அனைவர்க்கும் நினைவிருக்கும். இளையராஜ இசைபாது மகனது உளறல் பாதி இதைகேட்க ஒரு கூட்டம்.

அண்ணை இதை எல்லாம் இப்ப கண்டு கொள்ளாமல் இருபதே நல்லது...

[size=5]8. தமிழர்களின் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு இசையால் மருந்து போட வரும் இளையராஜாவின் மனதையே காயப்படுத்தும் ஒரு எதிர்ப்பு தேவைதானா?[/size]

[size=3]சும்மா போடுகிற கும்மாளாம் எல்லாவற்றுக்கும் இந்த காயம் அகற்றும் பீடிகை தேவைதான. யார் காயபட்டது?. யாருக்கு மருந்து?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]8. தமிழர்களின் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு இசையால் மருந்து போட வரும் இளையராஜாவின் மனதையே காயப்படுத்தும் ஒரு எதிர்ப்பு தேவைதானா?[/size]

[size=6][size=5]அண்ணாத்தை கனடாவில இசையால் மருந்து போட யாரையா உங்களை இளையராஜாவை வரச்சொன்னது? வன்னி இறுதி யுத்ததில் அகப்பட்ட அனைவரும் கனடாவுக்கு வந்து சேர்ந்திட்டினமோ? [/size][/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109821

அப்ப இதையும் ஒருக்காப் பாருங்கோவன் அதுக்கு யார். வன்னியில மருந்து தடவப்போகினம் அமுதும் தேனும் எதுக்கு எனப் பாடி இசையால்.பொறிக்கிப் பயல்களே தமிழ் நாட்டில் வாழும் அப்பிராணித் தமிழனிடம் வாசுதேவன் நாயரது படம்மூலம் காசுபுடுங்கினது காணாது எண்டு இங்கையும் வந்திட்டியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராசா மிகப்பெரிய இசைமேதை என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.ஆனால் தமிழர்களின் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போட இளையராசா தேவையில்லை.

தமிழ்த்திரையுலகம் திரண்டு வந்து நடாத்திய இலங்கைக்கு எதிரான போராட்டகளங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இளையரசவோ அல்லது அவரின் வாரிசுகளோ கலந்து கொண்டு உள்ளார்களா?அதைவிட கனடாவில் உள்ள 450000 தமிழர்களில் எத்தனை ஆயிரம் பேர் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டிர்கள்.

இரத்தமும் சதையுமாய் சிதறிப்போன எம் பிள்ளைகளின் சகோதரங்களின் உறவுகளின் நினைவுகளை மனதில் கொள்ளும் மாதத்தில் கனடாவில் வாழும் 30000 பேரின் மனநோய்க்கு மருந்திடுவது முக்கியமா?அல்லது இது எங்கள் உணர்வு பூர்வமான மாதம் குனிந்திருந்த தமிழர்களின் தலைகள் நிமிர உலகமே எங்களைத்திரும்பிப்பார்க்கவைத்தவீரபுதல்வர்களின் நினைவுகளை எம் மனதில் நெருப்பாய் சுமக்கும் மாதம் என உணர்த்துவது முக்கியமா?

இளையராசா தமிழ் இசை உலகின் அசைக்க முடியாத சக்தி. ஆனால் சீமான் வைக்கோ நெடுமாறன் ஐயா போன்றவர்கள் உலகத்தமிழர்களின் சொத்து.தயவு செய்து எங்களுக்காய் என்சியிருக்கும் தமிழக உறவுகளையும் அரிதாரம் பூசுவூர்க்காய் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப் படம் பார்க்கவிடல்லை என்று பிரபாகரனையே கேள்வி கேட்டவர்கள்.. சீமானைக் கேட்க அதிக நேரமா எடுக்கும்..???!

எம்மவர்களுக்கு உரிமை.. விடுதலை.. தாயகம் எல்லாம் இரண்டாம் பட்சம். வெளிநாட்டு அகதி அந்தஸ்தும்..பிரஜா உரிமையும்.. ஒரு வேலையும்.. சினிமாவும்.. சோறு கறியும் .. நகை நட்டும்.. கலியாணமும் பிள்ளை குட்டியும் தான்.. முதன்மையானது..!

அந்த வகையில்.. செவிடன் காதில் ஊதுற சங்குகளிற்கு கேள்வித்திறன் குறைவாகவே இருக்கும்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழ் நாட்டில தலைக்கு மேல பிரச்சனை கிடக்கு அதை பார்க்க வழியில்லை புலம் பெயர்ந்த தமிழரை பற்றி கதைக்க இவர் யார் ?

நவம்பர் பத்து சுவிசில் ஒரு நிகழ்சி நடக்குது கனடாவில் ஒரு நிகழ்ச்சி நடக்குது அவை ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை இதுதான் சிலர் கண்ணை குத்துது போல .

பெயர் எப்ப பத்திரிகையில் வரும் என அலையும் கோஸ்டிகள் இவர்கள் .இஞ்சவேறு சிலர் தமிழ் நாட்டில் போனால் தங்குவதற்கு இவருக்கு கொடி பிடிக்கின்றார்கள்.

[size=1]நியானி: பண்பற்ற சொல்லாடல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. [/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் நீங்கள் சீமானின் கருத்தை எதிர்ப்பதற்குரிய நியாயத்தை முன் வையுங்கள். அதைத் தவிர்த்து கொடி பிடிக்கிறவனை மற்றவனை.. இதற்குள் இழுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் பல தடவைகள் எல்லை மீறி எழுதுகின்ற எல்லா சந்தர்ப்பத்திலும் மென்போக்கு கடைப்பிடிக்கப்படுவதை நீங்கள் நல்ல அட்வான்ரேஜா எடுத்துக்கிட்டு உங்க இஸ்டத்திற்கு ஆட்களை வார்த்தைகளால் பந்தாடுகிறீர்கள்.

இதே காரணங்களால் தான் ஒட்டுக்குழுக்களை விட்டு மக்கள் இதயபூர்வமாக விலக வேண்டியும் வந்தது..! உங்கள் பக்க நியாயத்தை சொல்வது வேறு.. அடுத்தவனின் செயலில் குறைபிடிச்சு அவனை உங்களவில் நீங்கள் செய்வதை நியாயமாக்கி திட்டித் தீர்ப்பது வேறு..! நீங்கள் யாழின் தவறான அணுகுமுறையிலான அரசியல் கருத்தாளனாகவும் அரசியல் கருத்துக்களில் உணர்ச்சி வசப்படுதலுக்கு முன்னுரிமை கொடுப்பவராகவும் விளங்கி வருகின்றீர்கள். இது ஆரோக்கியமான ஒன்றல்ல..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா சொன்னதில் ஒரு பிழையும் இல்லை சீமான் தேவையில்லாமல் இதில் உள் நுழைந்து அவருக்கு இருக்கிற கொஞ்ச‌,நஞ்ச‌ மரியாதையும் கெடுத்துக் கொள்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா சொன்னதில் எதில் பிழை இல்லை ஏன் பிழை இல்லை அதற்கு என்னென்ன காரணங்களை தாங்கள் ஆதாரமாக முன் வைக்கிறீர்கள். அவற்றை நீங்கள் எடுத்துச் சொன்னால் சிலவேளை சீமான் உங்கள் அறிவுரைகளில் நியாயம் கண்டு தன் நிலைப்பாட்டை மாற்றி நவம்பர் 3 க்கு முதல் இன்னொரு காணொளி வேண்டுகோளை வெளியிட வைக்கலாம்.

அதைச் செய்யாமல்.. எதுவுமே உருப்படியாகச் சொல்லாத.. அர்ஜீனின் கருத்தில்.. சொன்னது எல்லாம் சரி என்று வக்காளத்து வாங்குவதும் ஒரு கருத்தா..???!

ஊருக்க ஆயிரம் பிரச்சனை இருக்க புளொட் மாலைதீவைப் பிடிச்சது மட்டும்... புத்திசாலித்தனமோ..???! இப்படின்னு சீமான் கேட்டால்.. அதற்கும் தாங்கள் வக்காளத்து வாங்குவீர்களோ..???! :lol::icon_idea:

[size=5]8. தமிழர்களின் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு இசையால் மருந்து போட வரும் இளையராஜாவின் மனதையே காயப்படுத்தும் ஒரு எதிர்ப்பு தேவைதானா?[/size]

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தேவை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், தமிழர்களின் மனதில் ஏற்பட்ட காயத்துக்கு இசையால் மருந்துபோட இளையராஜா வந்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்பதோடு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவும் உள்ளது. இசைநிகழ்ச்சியை இலவசமாக நடாத்தினால் இந்தக்கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இது இலவசமாக நடைபெறும் ஓர் நிகழ்ச்சி அல்லவே. சரி காயத்துக்கு மருந்துபோடுபவருக்கு கூலி கொடுக்கத்தானே வேண்டும் என்று நீங்கள் கூறலாம். பணம் செலுத்தி நாங்கள் எமது காயத்துக்கு மருந்துபோடுவதற்கு இளையராஜாவை மட்டும் நாடவேண்டும் என்றோ அல்லது இளையராஜாவினால் மட்டுமே காயத்துக்கு மருந்துபோடமுடியும் என்றோ இல்லையே.

எதிர்ப்பு தேவையில்லை என்பது ஒருபுறம் இருக்க, வியாபார ரீதியாக, வியாபாரத்தை மையப்படுத்தி நடைபெறும் நிகழ்ச்சி இது என்பதையும் நாங்கள் மறக்கக்கூடாது.

Edited by கரும்பு

சீமான் தனிய வெளிக்கிட்டு கருணாநிதியை விழுத்தியதால் மட்டும் இன்று யாழில், அரசியல் தலைப்புகளில் அரசியல் கருத்துகள் எழுததக்க நிலை இருக்கிறது.

.

எகிப்து,லிபிய புரட்சி எல்லாம் சீமான் தான் செய்தது அதை விட்டுவிட்டிர்கள்.

எகிப்து,லிபிய புரட்சி எல்லாம் சீமான் தான் செய்தது அதை விட்டுவிட்டிர்கள்.

முழந்தாளுக்கும் மொட்டந்தலையிற்கும் முடிசு போடுவது கூடஒரு தனமான கோமாளித்தனமான விவாதமாக இருக்கலாம்.

ஆனால் இதை அர்சுன் தான் கேட்கிறாராக இருந்தால் கட்டாயம் இன்றிரவே வைத்திய சாலைக்கு சென்று ஒருக்கால் தலையை காட்டுவது நல்லது. :lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

1.

சீமான் அண்ணை புலம்பெயர்க் கோஷ்டிகளின் வீணான வியாபரப் போட்டிக்குள் தலையிடாமல் இருப்பது தான் அவர் மீதான மதிப்பை காக்கும். போன வருடம் இதே நாள் பிரமாண்டமாக நடந்த ஜேசுதாசின் இசை நிகழ்ச்சியை நடத்தியது ரொரன்டோவில் இருக்கும் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனம் தான். அவர்களின் பின் புலத்தில் பல புலிகளின் கனடா முன்னால் முக்கியஸ்தர்களும் இருந்தனர் என்பதால் எவருக்கும் அது நடந்தது நவம்பர் முதல் வாரம் என்பதைக் கவனிக்க தோன்றவில்லை. இன்று புதிய நிறுவனம் ஒன்று முதல் முறையாக இப்படி பிரமாண்டமாக நடத்த முற்படும் போதுதான் பிரச்சனையாகிப் போய் விட்டது. இதில் சீமானை இழுத்துவிடுவது உண்மையில் இவர்கள் சீமானுக்கு செய்யும் தீங்காகவே முடியும்.

2.

தலைவரின் பிறந்த தினத்தை அரங்கு எடுத்து கேக் வெட்டிக் கொண்டாடி விட்டுத் தான் அடுத்த நாள் உணர்வு பூர்வமாக மாவிரர் தினத்தையும் அனுட்டித்து அஞ்சலி செலுத்துகின்றோம். ஊரில் தலைவரின் பிறந்த தினத்துகு பொங்கல் பானை வைத்து பொங்கி பரிமாறியும், இனிப்பு வகைகளை கொடுத்து மகிழ்ந்தும் கொண்டாடிய பின் தான் அடுத்த நாள் விளக்கேற்றி இருக்கின்றோம். 2009 இல் இடம்பெற்ற பெரும் அவலத்தின் பின்பு வந்த தலைவரின் பிறந்த தினத்தைக் கூட விமரிசையாக கனடாவிலும் கூட மண்டபம் எடுத்து கேக் வெட்டி மகிழ்ந்து இருக்கின்றோம். இந்த நிகழ்வும் கூட கனடாவின் புலிகளின் முக்கிய ஆதரவாளர்களால் தான் நடத்தப்பட்டது.

தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடி விட்டு அடுத்த நாள் உணர்வு பூர்வமாக மாவீரருக்கு விளக்கேத்துவது எப்படி தவறில்லை என்று எனக்குள் உணர்கின்றேனோ அப்படித் தான் நவம்பர் முதல் வாரத்தில் ஒரு சந்தோசமான நிகழ்வை நடப்பது தொடர்பாகவும் உணருகின்றேன். இது இளையராஜாவின் நிகழ்ச்சி என்பதற்காக அல்ல. எவரது நிகழ்ச்சி என்றாலும் நடப்பதில் தவறில்லை.

3. உண்மையில் சீமான் இவ்வாறு நிகழ்வு நடத்துவது தவறென்று உளமாற சொல்வாராயின், எவரது வேண்டு கோளுக்காகவும் குரல் கொடுக்காமல் சுயமாக செய்கின்றார் எனில் அதனை முதலில் அவர் தமிழகத்தில் நிகழ்த்த முற்பட வேண்டும். புலிகள் ஒட்டு மொத்த தமிழர்களுக்காகத் தான் ஈழ மண்ணில் போராடினார்கள் என்று உணர்வு பூர்வமாக நினைப்பாராயின், மாவீரர் தினம் அன்று புலம் பெயர் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு தம் வர்த்தக நிறுவனங்களை பூட்டி அனுட்டிக்கின்றனரோ அவ்வாறே தமிழத்திலும் அதே நாளில் அனுட்டிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து, அதற்காக அவர் சார்ந்து இருக்கும் தமிழக சினிமாத் துறையினரது ஆதரவினைப் பெற்று புறக்கணிப்பை நிகழ்த்த முன்வர வேண்டும். இவ்வாறான கோரிக்கையின் வெற்றி தோல்விக்கு அப்பால், அதனை நிகழ்த்தவாவது முன் வரவேண்டும்.

4. நான் இளையராஜா நிகழ்ச்சிக்கு போகப் போவதில்லை. 400 டொலரை ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே அடியாக கொடுக்க விரும்பவில்லை. அத்துடன் எப்படியும் சீடியில் வரும் அப்பொழுது வீட்டில் இருந்து கொண்டு, மனிசி செய்து தரும் பொரியல்களை கொறித்துக் கொண்டு பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் இதுவரை வராத காத்திரமான கருத்து நிழலி பச்சை முடிந்துவிட்டது.

மொழிகளைக்கடந்தது இசை

அதிகமாக மக்களோடு அவர்களின் நாடிபிடித்துப்பார்த்தே பழகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓகஸ்ட் மாதம் விளம்பரம் வருது.. எல்லாரும் சிலீப்பிங்கு.. :rolleyes:

செப்டம்பர் மாசம் டிக்கற் விக்குது.. எல்லாரும் சிலீப்பிங்கு.. :D

ஒக்டோபர் மாசம் இளையராஜா வாறார்.. எல்லாரும் வேக்கப்.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழிகளைக் கடந்தது இசை என்பதற்காக

சிங்கள பைலாவை கேட்டு ரசிப்பிர்களா?

இசையும் பாடல்களும் கலையும் மக்களுக்கானதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.