Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைச்சுவை நாடகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த யாழ்கள பரிசு போட்டியில் நீல மேகமும் யாழ் அன்புவும் நாடக வடிவில் கலக்கியிருந்தார்கள் நான் கடைசியில் வந்ததால் பெரிது பங்கெடுக்க முடிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் எழுதிய சிறிய நகைச்சுவை பகுதியை கொஞ்சம் விரிவாக்கி எழுதி மிகுதியை மற்றவர்களது கற்பனைக்கும் விட்டு சிறந்த கற்பனையை ஒரு நகைச்சுவை நாடகமாகவே தயாரிக்கலாமென நினைத்து இங்கு என்னுடைய இணைக்கிறேன். இங்கு எல்லாளனை அரசனாகவும் சாத்துவை மந்திரியாகவும் கற்பனை பண்ணவும்.

கொங்கு நாட்டு இளவரசிக்காக படையெடுக்கப் போகும் எல்லாளன். வாளை உருயபடி வெற்றி வேல் வீர வேல் என கத்துகிறார்.

சாத்து.யோ வாளை உருவியபடி எதுக்கய்யா வேல் வேல் எண்டு கத்துறாய்.

எல்லாளன். அப்ப வாள் வாள் எண்டா கத்த முடியும்.அப்பிடி கத்தினா கழுதை எண்டு நினைச்சிடுவாங்கப்பு

சாத்து. நீ வேல் வேல் எண்டு கத்துறதும் வாள் வாள் எண்டு கத்திற மாதிரித்தான இருக்கு இதுக்கை கொங்கு நாட்டு இளவரசி தேவையாம்.

எல்லாளன். அப்ப எப்பிடித்தான் கத்துறதாம்.

சாத்து. முதல்லை நீட்டிக்கொண்டிருக்கிற வாளை உள்ளை தள்ளு இப்பவெல்லாம் கையிலை பிடிச்சுக்கொண்டு கத்துறவங்களை விட வாளை சொன்னன். சத்தமே போடாமல் இருக்கிறவங்கள்தான் சைலெண்டா அலுவல் பாக்கிறாங்கள்.

எல்லாளன். அப்பிடியா யாரை சொல்லுறாய்.

சாத்து .அரண்மனையிலை குதிரைக்கு கொள்ளு வைக்கிறவன்தான்.

எல்லாளன். அவன் அப்படி என்ன செய்தான்.

சாத்து . அதை போய் உன்னோடை நாலாவது மகாராணியிட்டை கேட்டுப் பார்.

எல்லாளன். ஆகா மோசம் போய் விட்டேனா.

சாத்து. ஆகா மோசம் இல்லை ஓகோ மோசம் போயிட்டாய்.

எல்லாளன். என் தோள்கள் துடிக்கிறது. மீசை துடிக்கிறது. கால்கள் துடிக்கிறது ஆனாலும் அடக்கு அடக்கு என்கிறது

சாத்து. துடிக்கவேண்டியது எதுவுமே துடிக்கேல்லை. பேசாமல் எல்லாத்தையும் அடக்கி கொண்டிரு.

எல்லாளன். போர்.....போர்...போர்... எவன் எனது அந்தப் புரத்தில் புகுந்தது.

சாத்து. சும்மா போரடிக்காதை உன்னைத் தவிரை எல்லாருமே... வாசல் காவல் காரன் தொடக்கம். குதிரை காரன் வரை.

எல்லாளன். ஜக்கம்மா.......(கைகளை கூப்பி கும்பிடுகிறார்.)நான் கொங்கு நாட்டின் மீது படையெடுக்கப்போகிறேன். என்னை ஆசீர்வதிப்பாயாக.

சாத்து . உன் மூஞ்சிலை ஆசிற்ரை ஊத்த இப்ப எதுக்கு கொங்கு நாட்டுக்கு தாவுறாய்.

எல்லாளன். கொங்கு நாட்டு இளவரசியின் விழியை ஒரு தடைவை சந்தித்தேன். அவள் விழியும் என் வாளும் சந்தித்தால்.

சாத்து. பாவம் குருடாயிடுவாள். கண்ணை குத்திடாதை

எல்லாளன். கொங்கு நாட்டின் மீது படையெடுக்க என் சேனைகள் தயாராகி விட்டது

சாத்து . உன்னோடை சேனையா.?? அது எங்கை இருக்கு.

எல்லாளன். வெளியே தயாரக இருக்கிறார்கள் எட்டிப்பார்.

சாத்து. (அரண்மனை ஜன்னல் வளியாக பார்த்துவிட்டு) சேனையா? காத்தாலை நீ கஞ்சி குடிச்ச பானைததான் முத்தத்திலை கிடக்கு.

எல்லாளன். பயந்தாங் கொள்ளிகள் உயிரிற்கு பயந்தவர்கள் பாய்ந்தோடிவிட்டார்கள்.

சாத்து. நீ இப்பிடி அந்தப் புரத்தை நிறைக்கிறதுக்காகவே படையெடுத்துக் கொண்டிருந்தா இப்பிடித்தான்

எல்லாளன். நான் தனியாகவே போய் கவர்ந்து வரப்போகிறேன். விடை கொடு

சாத்து. கொங்கு நாட்டு காரங்கள் இப்ப றெம்பவே முன்னேறிட்டாங்கள். நீ வாறதை ராடரிலை கண்டு பிடிச்சு பத்து கிலோ மீற்றருக்கு அங்காலையே உன்ரை கதையை முடிச்சிடுவாங்கள். அனாதை பிணமா அழுகப் போறாய். விடை குடுத்தாலும் வடை உனக்கு இல்லை.

எல்லாளன். அப்போ என்ன செய்ய சொல்கிறாய்.

சாத்து. கொங்கு நாட்டு இளவரசி யாழ்ப்பாணத்து ஆரிய குளத்திலை தானாம் குளிக்க வாறவள். அங்கை போய் ஆளை கவிக்கிற வழியை பார்.

எல்லாளன். வெட்கம். அவமானம்.

சாத்து. எது ? இளவரசி குளிக்கிறதா?.

எல்லாளன். இல்லை திராவிட இளவரசி ஆரியர் குளத்தில் நீராடுவது திராவிடத்திற்கே அவமானம்.

சாத்து . அப்ப இளவரசி குளிக்கவே வேண்டாம் எண்டிறாயா?

எல்லாளன். அப்படியில்லை. வேண்டுமானால் முத்தவெளி மூத்திரக் குளத்திற்கு வரச்சொல்லி தூது அனுப்புவோமா?

சாத்து. தூ தூ தூ..... நாறப்போகுது

எல்லாளன். நீதான் ஏதாவது யோசனை சொல்வாய்.

சாத்து. இந்த பைஜாமா. தோள்ளை இருக்கிற சால்லை. தலைப்பா எல்லாத்தையும் பாத்தா கோமாளி மாதிரி இருக்கு இதுக்கை உனக்கு கொங்கு நாட்டு இளவரசி கேக்கிதா??முதல்லை போய் பேசாமல் இதுகளை கழட்டி வைச்சிட்டு `ஜுன்சும் ரி சேட்டும் பேட்டுக்கொண்டு வா.

உடை மாற்றியபடி வந்த எல்லாளன். வாளை கையில் தூக்குகிறார்.

சாத்து. பிறகு எதுக்கு வாளை திரும்ப கையிலை தூக்கிறாய்.

எல்லாளன். ஆயுதம் கையில் இல்லாமல் நான் நகர் வலம் வந்ததே கிடையாதே

சாத்து. நீ போறது நகர் வலம் இல்லை நாக்கை தொங்கபோடுற வலம். இந்தா இதை பிடி

எல்லாளன். இது என்ன ஆயுதம். ??

சாத்து .இதுதான் samsung galaxyஇப்ப எல்லருக்குமே ,இதுதான் ஆயுதம். இது கையிலை இருந்தா தான் பெண்ணுகளே நம்மளை திரும்பி பாப்பாங்கள்.

எல்லாளன். samsung galaxy யாஅப்படியென்றால் என்ன?

சாத்து. அதாவது இதுதான் பிரபஞ்சம். அண்ட சராசரமும் இப்ப உன் கையிலை இப்பதான் நீ உண்மையான மவாராசா. கொங்கா சங்கா எண்டிறது இனி உன்ரை கையிலைதான்.

எல்லாளன். ஜக்கம்மா. வெற்றிவேல் வீரவேல்.

அடுத்த பகுதியை தொடர விரும்பவர்கள் தொடரலாம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொங்கு நாட்டு இளவரசி இன்னும் காண வில்லைபோலும். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D :D

காமடி அந்தமாதிரி கலக்கிட்டிங்கள்... இடைக்கிடை ஊமைக்குசும்புகளும் கொஞ்சம் கொழுத்திப்போட்டிருக்கிறிங்கள் போலை.. :rolleyes:

சொல்லி வேலையில்லை.. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொங்கு நாட்டு இளவரசி இன்னும் காண வில்லைபோலும். [/size]

கொஞ்கு நாட்டு இளவரசி மாங்காய் தேடித் திரிவதாக தகவல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

நாங்களும்தான் கலக்சி வச்சிருக்கிறம்.. பிரியோசனமா தெரியேல்லையே.. :lol:

சாம்சுங் கலக்ஸ்சிக்கு கொங்கு நாட்டு இளவரசி மயங்குவா எண்டு நினைக்கிறியளோ :lol: :lol: :D :D ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

நாங்களும்தான் கலக்சி வச்சிருக்கிறம்.. பிரியோசனமா தெரியேல்லையே.. :lol:

கலக்சியை வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளையெ இருந்தால் எப்பிடியாம். ஏதாவது நீச்சல் குள பக்கம் போய் பார்க்கவும். மற்றபடி நீங்கள் கலக்கல் பாட்டி எண்டு ஏற்கனவே தெரியுமே :lol: . அதுதான் எதிர் பாராத புதிய வரவுகளை குறிப்பிட்டிருந்தன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாடகத்துக்கு

ஆனால் சாத்திரியின் நாடகமென்றதும் ஓடி வந்து பார்த்தேன்

ஏதோ குறையுது :(

இன்னும் அதிகம் எதிர்பார்த்து விட்டேனோ?

ஆனால் உங்களால் முடியும்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D :D

நாங்களும்தான் கலக்சி வச்சிருக்கிறம்.. பிரியோசனமா தெரியேல்லையே.. :lol:

மாம்ஸ் .. அதை எங்கை வச்சிருக்கிறிங்கள் எண்டு சொல்லுங்கோ?

சும்மா பொக்கற்றுக்குள்ளை எல்லாம் வைக்க கூடாது.. ஸ்டைலா கையிலை பிடிச்சு அப்பப்ப பொண்டாட்டிய தடவுறதா நினைச்சு தடவணும், :D அப்புறம்

நாலு பிகருகள் சுத்தி நிக்கும் போது

மசேஜ் வரவில்லை என்றாலும் ஏதும் பார்க்கிறது போல சீன் போடணும், :rolleyes:

காதிலை ஹெட்போனை மாட்டி லூசு போல கையை,காலை உதறணும், இதையெல்லாம் செய்யாமல் உதுகளை என்னத்துக்கு வச்சிருக்கிறிங்கள்???? :lol::icon_idea:

(மேலதிக விளக்கங்களுக்கு தனிமடலில் தொடர்புகொள்ளவும். :rolleyes: )

  • கருத்துக்கள உறவுகள்
:D super

சாத்தின் எழுத்துக்கு நாடகம் பத்தாது!!

சும்மா பொக்கற்றுக்குள்ளை எல்லாம் வைக்க கூடாது.. ஸ்டைலா கையிலை பிடிச்சு அப்பப்ப பொண்டாட்டிய தடவுறதா நினைச்சு தடவணும், :D அப்புறம்

நாலு பிகருகள் சுத்தி நிக்கும் போது

மசேஜ் வரவில்லை என்றாலும் ஏதும் பார்க்கிறது போல சீன் போடணும், :rolleyes:

காதிலை ஹெட்போனை மாட்டி லூசு போல கையை,காலை உதறணும், இதையெல்லாம் செய்யாமல் உதுகளை என்னத்துக்கு வச்சிருக்கிறிங்கள்???? :lol::icon_idea:

இதுக்கு மேலையும் செய்து பார்த்தாச்சு. ஒண்ணும் படியல்ல. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு மேலையும் செய்து பார்த்தாச்சு. ஒண்ணும் படியல்ல. :D

உண்மையச் சொல்லுங்கோ ஆன்டிங்களுக்கு முன்னாலை பண்ணேல்லை தானே???? :rolleyes:

சாத்து. கொங்கு நாட்டு இளவரசி யாழ்ப்பாணத்து ஆரிய குளத்திலை தானாம் குளிக்க வாறவள். அங்கை போய் ஆளை கவிக்கிற வழியை பார்.

எல்லாளன். வெட்கம். அவமானம்.

சாத்து. எது ? இளவரசி குளிக்கிறதா?.

எல்லாளன். இல்லை திராவிட இளவரசி ஆரியர் குளத்தில் நீராடுவது திராவிடத்திற்கே அவமானம்.

சாத்து . அப்ப இளவரசி குளிக்கவே வேண்டாம் எண்டிறாயா?

எல்லாளன். அப்படியில்லை. வேண்டுமானால் முத்தவெளி மூத்திரக் குளத்திற்கு வரச்சொல்லி தூது அனுப்புவோமா?

சாத்து. தூ தூ தூ..... நாறப்போகுது

இந்த இடம் தான் நாடகத்தின்ரை மெயின் நகைச்சுவை அதோடை சீரியஸ் . வடிவாய் பாத்தால் விளங்கும் :lol: :lol: :D:icon_idea: .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்கு நாட்டு இளவரசி மாங்காய் தேடித் திரிவதாக தகவல் :lol:

எல்லாள மஹாராஜா, எள்ளென்றால்... எண்ணையாக... நிற்பார்போலை... :D:lol:

அண்ணனுங்களா !! அக்களுங்களா !!! இது என்னோட முதல் காமடி டிறாமா . என்னய கேனடாவுக்கல்லாம் இன்வைற் செஞ்சு அசத்துனீங்க . நான் இதில யாரோட மனசையும் நோகடிக்கல . ஏதாச்சும் நான் சைல்டிஷ் ஆ செஞ்சா மன்னிச்சுக்கோங்க . ஓக்கேயா.....

கொங்கு நாட்டு இளவரசி சொப்னா அரன்மனை மாடத்தில் தன்னந்தனியே தனது பஞ்சவர்ணக்கிளியுடன் நின்றிருந்தாள் . அன்றய இரவும் வானத்தில் தோன்றிய முழுமதியும் அவளைப்பாடாய்படுத்தின . பஞ்சவர்ணக்கிளி அடிக்கடி "எல்லாளன் எல்லாளன்" என்று வேறு அழைத்து அவளைக் கடுப்பேத்தியது . கையில் இருந்த திராட்சை ரசத்தை மெதுவாக சிப்பினாள் . அவளது அந்தரங்க தோழி கஜவல்லியின் பதட்டமான வருகையும் குரலும் சொப்னாவை கலைத்தது.

கஜவல்லி : இளவரசி .....இளவரசி ........எல்லாள மகாராசா எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வருகின்றாராம் . தளபதி உங்களை காண வருகின்றார் .

சொப்னா : என்னடி சொல்றே.......... ஐயோ நான் என்னடி பண்ணுவேன் ? எங்க டாடி ராகவன் IPS கூட குண்டஸை என்கவுண்டர்ல போட ரெய்டு போய்ட்டாரே . நான் சும்மாச்சும் பீலா விட்டேன்டி . அத்தை அவன் நம்பீண்டானாடி . இப்போ என்னடி செய்றது ?

கஜவல்லி : அட சீ ….. நிப்பாட்டுங்க . இளவரசி உள்ளத சொல்லுங்க உங்களுக்கும் அவருக்கும் ஒரு இது தானே ??

சொப்னா : எது ??

கஜவல்லி : ஆசை தோசை.......... கிளி வேற அவுங்க பேர கூப்பிடுதே ??

சொப்னா : அட போடி அவரோட ஃபோட்டோவை நீ வரைஞ்சப்புறம் என்னோட மனசு என்கிட்ட இல்லடி.

கொங்குநாட்டு இளவரசியின் தளபதி வந்து அவளை வணங்கி நின்றான் .

சொப்னா : ஹாய் தளபதியாரே என்னா மாற்றர் ?

தளபதி : எல்லாளன் படையெடுத்துவருவதாக தகவல் வந்துள்ளது இளவரசி .

சொப்னா : ஓ ........... அந்த ஓல்டு கிங்க் இங்க வர்றானா ? இருடி என்கையாலதான் அவனுக்கு கைமா . ஆமா.... எப்பிடி போர்ஸ்சுங்களை மூவ் பண்ணப்போறிங்க ??

தளபதி : " பத்ம வியூகம் " போடலாம் என்று இருக்கின்றேன் இளவரசியாரே .

சொப்னா : நோ........... நோ அதல்லாம் ஓல்டு ஸ்ரைலுப்பா . " கருந்தேள் வியூகத்த " போடு . அவன் கடலால இறங்குறப்போ ஒன்னும் செய்யாத . கொங்கு நாடு வரை தற்காப்பு அற்றாக் மட்டும் இருந்தா போறும் . என்னோட சற்றலைற் ரெலிபோனை எடுத்திட்டுபோ . கொங்கு நாட்டு செய்மதிய அவன் பக்கம் திருப்பு . அவன் சாம்சுங் கலக்ஸி கூட வர்றதா ஒற்றன் தகவல் அனுப்பியிருக்கான் . ஆள ஊடறுத்து பாயிற படையணிங்கள அவனோட சேனைங்களில கலக்கவிடு . அப்பப்போ ஐ பாட்ல இருக்கிற ஸ்கைப்பால என்கூட தொர்பில இரு . இதோட கோர்ட் வேர்டு " ஒப்பரேஷன் சொப்எல்லா " .

தளபதி : உத்தரவு இளவரசி .

சொப்னா : ஏன்டி கஜவல்லி ஏதாச்சும் உளறீட்டேனா ??

கஜவல்லி : அதென்னங்க " ஒப்பறஷன் சொப் எல்லா " ??

சொப்னா : போடி கள்ளி...........

கொங்கு நாட்டு போர்களத்தில் எல்லாளன் " கருந்தேள் வியூகத்தால் " சின்னாபின்னமாகி தன்னியனாக வெறிப்பிடித்தவனாக நிலத்தில் நிற்க , கொங்குநாட்டு இளவரசி சொப்னா பட்டத்து யானைமேல் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தாள் .

சொப்னா : அனுராதபுரத்து அறிவுகெட்ட எல்லாளனே !!!!! மற்போருக்கு றெடியா ??

எல்லாளன் : ஏன் இப்பிடி அடம்பிடிக்கிறாய் ?? சொல்வளி கேள் பிள்ளை .

சொப்னா : என்னா மப்படிச்சியா உளர்றே மேன் ??

கமோன் யா வந்து ஃபைற்று பண்ணு அப்புறம் ஜாலிதானே .

எல்லாளன்: எனக்கு நீதான் வேணுமடி ராசாத்தி சண்டையெல்லாம் வேண்டாம் .

சொப்னா : என்ன நீ டோன்ற் பீ ஸில்லி கமோன் .நான் இப்போ ஃபைற்றுக்கு விசில் அடிக்கிறேன் .

கஜவல்லி ஓடிவந்து எல்லாளனிடம் ஒரு எஸ் எம் எஸ் காட்டுகிறாள் .

எல்லாளன்: வாடி .......... சொப்னா உனக்கு என்னாலைதான் சாவு ( எக்கோ சவுண்ட் ) .

மற்போர் உக்கிரமாக நடந்தது எல்லாளன் வெற்றிவாகை சூடி இளவரசி சொப்னாவை திருமணம் செய்தான் . கொங்கு நாடு எல்லாளன் ஆட்சியில் பூரித்தது .

பி கு :

எஸ் எம் எஸ் ல் வந்த செய்தி , " எல்லாளரே மற்போரில் நான் நடிக்கின்றேன் எனக்கு நீங்கள் வேண்டும் " .

யாவும் கற்பனையே

Edited by சொப்னா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதுக்குள்ளே முடிச்சாச்சு கல்யனதிக்கு அப்புறம் சொப்னாவ விட்டிட்டு எல்லாளன் கஜவல்லிய சைட் அடிச்சா கதையையும் எழுதுங்க சொப்ஸ் :D

:lol: :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்
:D :D

சூப்பர் சோப்.............. :D :D :D

அது சரி இன்னும் எல்லாளனை காணவில்லை ................பாஸ்வோர்ட் ஐ மறந்துட்டாரோ...............அல்லது மாறி அடிச்சு

தடை

பண்ணிட்டாங்களோ............. :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" கருந்தேள் வியூகத்த "

ம்... அது.. அங்கை நிக்குறிங்கள்.. :rolleyes::icon_idea:

சொப்னா : நோ........... நோ அதல்லாம் ஓல்டு ஸ்ரைலுப்பா . " கருந்தேள் வியூகத்த " போடு . அவன் கடலால இறங்குறப்போ ஒன்னும் செய்யாத . கொங்கு நாடு வரை தற்காப்பு அற்றாக் மட்டும் இருந்தா போறும் . என்னோட சற்றலைற் ரெலிபோனை எடுத்திட்டுபோ . கொங்கு நாட்டு செய்மதிய அவன் பக்கம் திருப்பு . அவன் சாம்சுங் கலக்ஸி கூட வர்றதா ஒற்றன் தகவல் அனுப்பியிருக்கான் . ஆள ஊடறுத்து பாயிற படையணிங்கள அவனோட சேனைங்களில கலக்கவிடு . அப்பப்போ ஐ பாட்ல இருக்கிற ஸ்கைப்பால என்கூட தொர்பில இரு . இதோட கோர்ட் வேர்டு " ஒப்பரேஷன் சொப்எல்லா " .

டவுட் கிளியர்::

  • கருத்துக்கள உறவுகள்

டவுட் கிளியர்::

ம்ம்ம்.. நீலகிரி மாவட்டம்தான்.. நம்புறம். :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]இளவரசி ஆரியகுளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறார்.

தோழி:இளவரசி இளவரசி

இளவரசி:எதற்க்காக இடி விழுந்ததுபோல் கத்துகிறாய்.

தோழி:மரத்தின் பின்னால் இருந்து ஒருவன் எட்டி எட்டிப் பார்க்கிறான்.என்னசெய்ய?

இளவரசி:கல் ஒன்றை எடுத்து கண் பார்த்து வீசிவிடு.

பொறுபொறு. எனக்கும் பொழுது போகவில்லை. கூப்பிடு அவனை இங்கே.

தோழி: மரத்தின் பின் ஒளித்திருக்கும் மாங்கா, வாடா இங்கே

எல்லாளன் :நான் மன்னன்.என்னை வாடா போடா என்கிறாய்.

இளவரசி: எந்த நாட்டுக்கடா மன்னன் நீ.ஏதடா உன் நாடு.

எல்லாளன் : வன்னிக்கும் அங்கால வடிவான ஒருநாடு.

இளவரசி: உன்னாடே உனக்கு தெரியவில்லை.எப்படி நீ மன்னனாவாய்.

எல்லாளன்: அதுவந்து......

இளவரசி: எதுவந்து. சரி அதுதான் போகட்டும்.உன் பெயர் என்ன.

எல்லாளன்: எல்லாள மகாராஜா.

இளவரசி :எல்லாள மகாராஜாவா அந்த அனுராத புரத்தை ஆண்ட அந்த மன்னனா நீங்கள்.

எல்லாளன்: இல்லை இல்லை.என் அப்பாவுக்கு அவரைப் பிடிக்கும் அதனால் எனக்கும் அந்தப் பெயர்.

இளவரசி: தூத்தேறி, அந்த மாபெரும் வீரனின் பெயரை வைத்துக்கொண்டு மொள்ளமாரி வேலை செய்கின்றாய்.

உண்மையைச் சொல்.நாடகத்துக்குத்தானே உந்த வேடம்.

எல்லாளன்:சத்தியமாய் இளவரசி நான் மன்னன்.உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு உங்கள்மேல் மையல் கொண்டு ஓடி வந்துள்ளேன்.

இளவரசி: உனக்கு என்மேல் காதலா. உனக்கே இது அதிகமாகப் படவில்லையா.

அரைவாசிப் பல்லைக் காணவில்லை, அரைக் கிறுக்கன் போல் இருக்கிறாய்.உன்னைப் பார்த்தால்..........

அது என்ன இடுப்பிலிருந்து எடுப்பதும் வைப்பதுமாய்.கத்தி ஏதும் காட்டி எனைப் பயமுறுத்தப் பார்க்கிறாயா.

எல்லாளன்:இல்லை இல்லை.உங்களுக்காய் ஒன்று கொண்டுவந்தேன்.

இளவரசி: என்ன காதல்க் கடிதமா.

எல்லாளன் :சாம்சுங் கலக்சி.புத்தம் புதியது.

இளவரசி: என்னிடம் இதுபோல் நிறைய இருக்கிறது.

தோழி:இளவரசி காதைக் கொடுங்கள்.

இளவரசி:நீவேறு என்னடி.

தோழி:அந்த போனை வாங்கி என்னிடம் கொடுங்கள்.

அந்த மடையன் இப்ப நீங்கள் என்ன கேட்டாலும் தருவான்.

இளவரசி:சரி சரி தோழி! அந்த போனை வாங்கி நாம் பேசுவதை ரெக்கோட் பண்ணுகிறானா என்று பாரடி.

தோழி போனை வாங்கித் தன இடுப்பிழ்ச் செருகுகிறாள்.

எல்லாளன்: தேவி.அந்தக் கல்லில் இருந்து கதைப்போமா.

இளவரசி: வாயைத் திறக்காதே.. தேவியாம் மூதேவி. இருக்கும் நாலு பல்லும் இல்லாமல் போய்விடும்.

ஆரிய குளத்தில் ஆண்கள் வந்தால் என்ன தண்டனை தெரியுமா உனக்கு.

எல்லாளன் :தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன்.உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன் கண்ணே.

இளவரசி :சுரணை கெட்டவனே.உனக்கு கொங்கு நாட்டின் குலவிளக்கு வேண்டுமோ? .

யாரங்கே.வந்து இவனைப் பிடியுங்கள்.

இளவரசி கைகளைத் தட்ட காவலர்கள் ஓடி வருகின்றனர்.

காவலர்:கூப்பிட்டீர்களா இளவரசி.

இளவரசி:இவனைக் கைது செய்து.

காவலர் :கொப்பரையில் போடுவதா.

இளவரசி: அந்தத் தண்டனை இவனுக்குப் பத்தாது.முத்தவெளியின்

மூத்திரக் குளத்தில் கொண்டுபோய் மூச்சு நிக்கும் வரை முக்கி எடுங்கள்.

எல்லாளன்: தேவி தேவி எனக்கு வேறு என்ன தண்டனை எதுவென்றாலும் கொடு.அந்தக் குளம் மட்டும் வேண்டாம்.

காவலர்: எங்கள் இளவரசியை தேவி என்கிறாயா.

காவலன் கன்னத்தில் அடித்த அடியில் இருந்த நாலு பல்லும் விழ அவர்கள் எல்லாளனை இழுத்துக்கொண்டு போகின்றனர்.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D :D
:lol: :lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.