Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூளி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

woman-crying-family+died+n+mudslide.jpg

நாள்.. நட்சத்திரம்

சொல்லி ஒரு கல்யாணம்

அடுத்து வந்த

ஆண் பெண்

உடல் கலவி கூட

அடுத்தவன் சொல்லி வைத்த

சுப முகூர்த்தத்தில்..

தென்னிந்திய சினிமா பார்த்து

வளைகாப்பு

அது கூட

சுப நேரத்தில்..!

"இது அதிஸ்டக் குழந்தை"

ஊராரின்

வாழ்த்தொலிகளோ

கரு முதல்

தொட்டில் வரை..!

முதல் பிறந்த தினம்

வெகு கொண்டாட்டம்..

குடும்பக் "குண்டுமணிக்கு"

குதூகலத் திருவிழா..!

பட்டென்ன

பள பளக்கும் நகையென்ன..!

அழகு கொஞ்சும்

என் மேனி

முத்தமிடா

இதழ்களில்லை

பதியாத கரங்களில்லை

ஜொலிக்கும் நட்சத்திரமாய்

அன்று நான்..!

அடுத்து வந்த ஆண்டுகளும்

அளவில்லா மகிழ்ச்சி தான்.

பள்ளிப் பருவத்தில்

சுட்டிக் குழந்தை

புளுகாத ஆசிரியர் இல்லை

புகழாத ஊரார் இல்லை..!

பூவாய் நான்

பூத்து நின்ற வேளை..

அதுவும் அதிஸ்ட நாளாம்.

பூ நான்

புனித நீராடி நின்ற வேளை

அட... அது கூட

நல்ல நேரமாம்..!

பருவக் கிளத்தியாய்

பார் போற்றும்

பதிவிரதையாய்

கணவனே கண்கண்ட தெய்வம்

என்று நின்றவள்

இவள்..!

கார்மேகக் கண்ணன் வேண்டாம்

கருங்கோல இராமன்

வேண்டும் என்ற

அழகுப் பதுமை நான்..!

பெரியோர் விருப்பறிந்து

புரோகிதர் நேரம் கணிக்க

மந்திரங்கள் முழங்க

பார் போற்றும்

மங்கையாய்

நளங்கு கலியாணம் காண

நாணிக் கோணி

அழகு பொம்மையாய்

அண்ணல் திருவுருவம்

கடைக்கண் நோக்கி

மேடையேறி

கரம் பிடித்த

அதிஸ்ட தேவதை நான்..!

வாழ்த்துக்கும் குறைச்சலில்லை

பரிசிற்கும் குறைச்சலில்லை..!

ஆண்டு ஒன்று போய்

வாரிசிற்கும்

குறைச்சலில்லை..!

"சுமங்கலி"

என்ற பதச் சூடலுக்கும்

நிகழ்ச்சி முதன்மைக்கும்

என் பெயர்

முன்னணியில்..!

ஊரில் நானொரு

படிதாண்டாப்

பத்தினி..

திருமகளின்

அவதாரமாம்..!

விதி மாறும்

நேரம்..

முள்ளிவாய்க்கால் தனில்

என்னவன்

சரீரம்

தேசத்துக்காய்

தொலைந்து போனது..!

அன்று முதல்

ஆனால் இவள்

மூளி..!

புன்னகை கண்டு

ஆண்டு மூன்று ஆச்சுது

புலம்பெயர்ந்து

தூர தேசம் வந்தும்

எனக்கு விடியலில்லை..!

முகாமதில்

சிங்களக் காடைகளின்

கோரச் செயலில்

கெடுக்கப்பட்டிருப்பனோ

சந்தேகம் கொட்டும்

பார்வைகள்...

"வன்னியில் இருந்து

வந்தவள்.."

அடைமொழி வார்த்தைகள்...

தேளிலும் கொடிய

கொடுக்குகளாய்

கொட்டும் விசங்கள்

என் செவி ஏறும்

தருணங்கள்

செத்துப் பிழைக்கிறேன்..!

செய்த தவறு தான்

ஏதுமில்லை..!

எதிரியின்

கோரக் குண்டு வீச்சில்

தப்பி..

அவன் கோரப்பிடியிலின்றும்

தவறி..

வீரம் விதைத்த

மண்ணின்று வந்த

எனக்கு

இன்று

வீண் பழி சுமக்கும்

நிலை...!

வீரன் ஒருவன்

குழந்தை

இன்று

மூளிக் குழந்தையாய்

என் மடியில்..!

வரலாறாய்

கற்பினைப் போற்ற

ஒரு சீதை...

கணவனைப் போற்ற

ஒரு கண்ணகி..

இரண்டும்

ஒன்றாய்க் கொண்டவள் நான்.

இருந்தும்

என் இருப்பு

கண்ணெதிரே

அமைந்தும்

காண யாருமற்ற

பாவியாய்..

மாதவியிலும் கேடாய்

என் மேல்

குரோதங்கள்...!!

நேற்றைய

குண்டுமணி

குடும்பக் குத்துவிளக்கு

இன்று

குப்பைக்குள் வீசப்பட்ட

கொடுமை...!

ஓசியாய் போற்றியோர்

இன்று

ஈசியாய் திட்டுகிறார்..!

இருந்தும்

இழக்கவில்லை நம்பிக்கை..!

என் தேசம்

விடியும்

உதய சூரியனாய்

என் கண்ணாளன்

வருகை

தேசத்துக்கு மட்டுமல்ல

எனக்கும்

விடியலாய்

அமையும்..!

அதுவரை

பத்தினி இவள்

சாபம்

எதிரியை

சபிக்கும்..!

துரோகிகளை

அழிக்கும்..!

வீரரை

நினைக்கும்..!

வீரத்தை

ஊட்டும்..!

விடுதலையை

நேசிக்கும்..!

பழிப்புக்கு

நான்

சாகப் போவதில்லை..!

தமிழீழ

தேசத்தை

சாகடிக்கப் போவதில்லை..!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பாராட்டு(க்)கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓசியாய் போற்றியோர்

இன்று

ஈசியாய் திட்டுகிறார்..!

யாழ்களத்திலும் இதை நாம் செய்கின்றோம்....

கவிதைக்கு நன்றிகள்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்திற்கு கருத்துரைத்த கந்தப்பு மற்றும் புத்துக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆக்கத்துக்கும் நேரத்திற்கும் நெடுக்கு

நேரத்துக்கேற்ற கவிதை.

நல்ல ஆக்கம் நெடுக்ஸ்.

ஆனால் மூளி என்கிற பதம் - இப்போது வழக்கில் அழிந்து வருகிறது. மீளவும் அதை ஏன் கொண்டுவருகிறீர்கள். சில வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கவிதையில் உள்ள பெண்ணின் வலிகளை காட்ட எடுக்கும் யுக்தியாக இருக்கலாம் என்றாலும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் நெடுக்ஸ்.

ஆனால் மூளி என்கிற பதம் - இப்போது வழக்கில் அழிந்து வருகிறது. மீளவும் அதை ஏன் கொண்டுவருகிறீர்கள். சில வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கவிதையில் உள்ள பெண்ணின் வலிகளை காட்ட எடுக்கும் யுக்தியாக இருக்கலாம் என்றாலும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன?

உண்மை தான். நான் இந்தப் பதத்தை சமீபத்தில் யாரும் அதிகம் வெளிப்படையாகப் பாவித்துக் கேட்கவில்லை. ஆனால் கருதக் கண்டுள்ளேன்.

ஒரு பாடலாசிரியர் சமீபத்திய ஆண்டுகளில் வெளியான ஒரு பாடலில் கூட இதனை பாவித்திருக்கிறார்..!

மூளி என்பது நிறைவற்றவள் என்று பொருள்படும்..! சமூகத்திற்கு எப்போதுமே நிறைவாகத் தெரிந்தவள்.. முள்ளிவாய்க்கால் போனதும்.. கணவனைத் தொலைத்ததும்.. திடீர் என நிறைவற்றுப் போனதன் பின்னணி..???! அது தான் ஆக்கத்தின் கருப்பொருளாய் நிற்கிறது. அதனால்.. அந்தச் சொல்லாடல் இங்கு அவசியமாக்கப்பட்டுள்ளது..! :icon_idea:

உண்மை தான். நான் இந்தப் பதத்தை சமீபத்தில் யாரும் அதிகம் வெளிப்படையாகப் பாவித்துக் கேட்கவில்லை. ஆனால் கருதக் கண்டுள்ளேன்.

ஒரு பாடலாசிரியர் சமீபத்திய ஆண்டுகளில் வெளியான ஒரு பாடலில் கூட இதனை பாவித்திருக்கிறார்..!

மூளி என்பது நிறைவற்றவள் என்று பொருள்படும்..! சமூகத்திற்கு எப்போதுமே நிறைவாகத் தெரிந்தவள்.. முள்ளிவாய்க்கால் போனதும்.. கணவனைத் தொலைத்ததும்.. திடீர் என நிறைவற்றுப் போனதன் பின்னணி..???! அது தான் ஆக்கத்தின் கருப்பொருளாய் நிற்கிறது. அதனால்.. அந்தச் சொல்லாடல் இங்கு அவசியமாக்கப்பட்டுள்ளது..! :icon_idea:

இன்னொருவர் பாவித்தார் என்பதால் மட்டும் இது ஏற்புடையதாகிவிடாது.

( இன்னமும் ஒரு சில இந்திய தமிழ் சஞ்சிகைகளில் கறுப்பினத்தவரை உலகம் தடை செய்த சொற்களை வைத்து அழைக்கிறார்கள்)

என்றாலும், உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் பாவித்தார் என்பதற்காகப் பாவிக்கப்படவில்லை. பாவிக்கப்பட்டதற்கு உதாரணமாகவே சொல்லப்பட்டுள்ளது.

மற்றும்படி தேவையோடு தான் அது இங்கு பாவிக்கப்பட்டுள்ளது... என்பதை தாங்கள் புரிந்து கொண்டமைக்கு நன்றி. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அதுவரை

பத்தினி இவள்

சாபம்

எதிரியை

சபிக்கும்..!

துரோகிகளை

அழிக்கும்..!

வழமை போல அருமையான கவிதை, நெடுக்கர்!

ஆனால், முன்னுக்குப் பின் முரணாவது போல, கருத்தைத் தருகின்றது!

பெரியோர் விருப்பறிந்து

புரோகிதர் நேரம் கணிக்க

மந்திரங்கள் முழங்க

பார் போற்றும்

மங்கையாய்

நலங்கு கலியாணம் காண

நாணிக் கோணி

அழகு பொம்மையாய்

அண்ணல் திருவுருவம்

கடைக்கண் நோக்கி

மேடையேறி

கரம் பிடித்த

அதிஸ்ட தேவதை நான்..

ஆரம்பத்தில், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் சாடுகின்றது போல், போகும் கவிதை, இறுதியில் சாபங்கள் எதிரியை அழிக்கும் என்று மீண்டும், மூட நம்பிக்கைகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போல உள்ளது!

நல்ல கவிதை .

அவருக்கு வருசத்திற்கு ஒரு முறை விழா எடுக்கின்றோம் அது காணும் தானே .வேறென்ன வேண்டும் இதைத் தவிர .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல அருமையான கவிதை, நெடுக்கர்!

ஆனால், முன்னுக்குப் பின் முரணாவது போல, கருத்தைத் தருகின்றது!

பெரியோர் விருப்பறிந்து

புரோகிதர் நேரம் கணிக்க

மந்திரங்கள் முழங்க

பார் போற்றும்

மங்கையாய்

நலங்கு கலியாணம் காண

நாணிக் கோணி

அழகு பொம்மையாய்

அண்ணல் திருவுருவம்

கடைக்கண் நோக்கி

மேடையேறி

கரம் பிடித்த

அதிஸ்ட தேவதை நான்..

ஆரம்பத்தில், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் சாடுகின்றது போல், போகும் கவிதை, இறுதியில் சாபங்கள் எதிரியை அழிக்கும் என்று மீண்டும், மூட நம்பிக்கைகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போல உள்ளது!

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி.

அது முரணுக்காக எழுதப்படல்லையண்ணா. எந்தச் சமூகம் அவளை முள்ளிவாய்க்காலின் முன் பத்தினி என்றதோ அந்தச் சமூகத்தின் முன் அவள் இன்றும் அதே சமூத்தின் அளவுகோளின் படி பத்தினிப் பெண் தான். அவளில் மாற்றமில்லை... என்பதைச் சொல்கிறாள். மீண்டும் சொல்கிறாள்.. நான் எதனையும் மறக்கமாட்டேன்.. தமிழீழத்தை சாகடிக்கவும் மாட்டேன் என்று. சாபத்தை நம்பும் சமூகத்திற்கும் பதில் வைக்கிறாள்.. தனது சபதத்தையும் சொல்லி வைக்கிறாள்..! அப்படியாகத்தான் முடித்துள்ளேன்.

காரணம்.. நாங்க தத்துவம் பேசலாம்.. ஆனால் சமூகம்.. அதை ஏற்கப்பண்ணுறது அவ்வளவு இலகு அல்ல. அதற்கு அது புரியும் பாசையில் சாடவும் உணர்த்தவும் வேண்டி இருக்கிறது அல்லவா..! :icon_idea::)

பழிப்புக்கு

நான்

சாகப் போவதில்லை..!

தமிழீழ

தேசத்தை

சாகடிக்கப் போவதில்லை..!!!

நல்ல கவிதை .

அவருக்கு வருசத்திற்கு ஒரு முறை விழா எடுக்கின்றோம் அது காணும் தானே .வேறென்ன வேண்டும் இதைத் தவிர .

கருத்துக்கு நன்றி.

அதையும் ஒரு நாளுக்குள் அடக்கிவிடத் துடிக்கிறது எம் நன்றி கெட்ட சமூகம். எத்தனையோ உறவுகளின் ஆயுட் கால துக்கமுணராத எம் சமூகம்.. அவர்களின் துன்பத்தில் தம் குடும்பச் செழிப்பெடுத்து இன்று அந்த நன்றி மறந்து ஆடும் நிலை காண்கிறோமே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

காலத்தின் தேவைக்கு உகந்த கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைக்கு உகந்த கவிதை

தங்கள் வரவு நல்வரவாகட்டும். கருத்துக்கு நன்றி கரவை பரணி..! :)

வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா, உண்மையில் இன்று பலரின் நிலை இது தான். எம் சமூகம் என்று திருந்துமோ தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு திருந்தும் என்று தோணவில்லை.

ஆனால் இவர்களின் வேதனையை புரிந்து கொள்ளக்கூடிய சிலரும் இருப்பது ஒரு ஆறுதல்...

  • கருத்துக்கள உறவுகள்

|||ஓசியாய் போற்றியோர்

இன்று

ஈசியாய் திட்டுகிறார்..!|||

சந்தர்ப்பவாதிகளை சாடிய விதம் அருமை. கவிதைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி துளசி மற்றும் நுணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

அன்று மடந்தை -அரிவை

தெரிவை-பேரிளம் பெண்

வீர மங்கை எனப்,

பெயர் பெயர் சூட்டி

மகிழ்ந்தோர்..

இன்று இலகுவாய்

மூளி எனப் பெயர்

சூட்டி மகிழ்கின்றனர்.

Edited by யாயினி

வரலாறாய்

கற்பினைப் போற்ற

ஒரு சீதை...

கணவனைப் போற்ற

ஒரு கண்ணகி..

இரண்டும்

ஒன்றாய்க் கொண்டவள் நான்.

இருந்தும்

என் இருப்பு

கண்ணெதிரே

அமைந்தும்

காண யாருமற்ற

பாவியாய்..

மாதவியிலும் கேடாய்

என் மேல்

குரோதங்கள்...!!

நேற்றைய

குண்டுமணி

குடும்பக் குத்துவிளக்கு

இன்று

குப்பைக்குள் வீசப்பட்ட

கொடுமை...!

ஓசியாய் போற்றியோர்

இன்று

ஈசியாய் திட்டுகிறார்..!

காலத்தின் தேவைக்கு உகந்த கவிதை சந்தர்ப்பவாதிகளை சாடிய விதம் அருமை. நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி மற்றும் செம்பகன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Status update

By Somee Tharan

முன்னாள் போராளிப் பெண் ஒருவர் புனர்வாழ்வு முகாமில் இருந்து பேசுவதைக் கேட்டேன் : அவள் சொல்கிறாள் ' எனக்கு இப்போது இருக்கு பயமெல்லாம் ஊருக்கு போனவுடன் என்னை புனர்வாழ்வு முகாமில் இருந்து வந்தவள் என்று யாரும் தனியாக பார்த்துவிடக் கூடாது என்பதே..என்னையும் மற்றப் பிள்ளையளைப் போல பாப்பீனமோ தெரியாது' : இந்த போராளிப் பெண்ணின் ஆதங்கத்தில் ஒரு வலி நிறைந்த உண்மை இருக்கிறது. சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்து திரும்பும் பெண்கள் குறித்த சமுகத்தின் பார்வை மிக மலினமாக இருக்கிறது. போருக்கு பின்னான வாழ்வின் ரணங்கள் இவை. களத்துக்கு ஒரு போதும் சென்றிராத இணைய உலகப் போராளிகள் நீங்கள் இன்றளவும் பெருமை பீத்திக் கொள்ளும் போரை நடத்திய போரில் நிலைகுலைந்த போராளிகளை ஒருகணம் நினைத்துக் கொள்ளுங்கள்..என்ன செய்யப் போகிறோம். புரட்சி வாக்கியங்களில் இல்லை.. வாழ்க்கையில் இருக்கிறது.

FB இல் இருந்து..............

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எனக்கு இந்த "மூளி" என்ற சொற்பிரயோகம் பிடிக்கவில்லை. மற்றப்படி யதார்த்தமான கருத்துகளை கவிதை சுமந்து நிற்கிறது. பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் என்று அலங்கார வார்த்தைகளை வீசி இந்தக்கவிதையின் கனதியைக் குறைக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை. வாழ்த்துகள்.

ஆனாலும் மூளி என்று தலைப்பிட்டது சுத்தமாய் பிடிக்கல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வை அக்கா மற்றும் கறுப்பி. :)

இந்தத் தலைப்புக்கான காரணத்தை முன்னரே ஈஸுக்கு சொல்லி இருக்கிறன். எமக்கு பிடிக்காட்டிலும் சமூகத்தில இருக்கிற அதுவும் பலர் மனங்களுக்குள் புதைக்கப்பட்டுள்ள அசிங்கங்களை.. வெளிக்காட்டுறதிற்கு ஒரே வழி.. இது தான்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.