Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறவைகள் பறந்து செல்ல பள்ளம் மேடு வானில் இல்லை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற துன்பமான செய்தி என் காதுகளை எட்டியதில் இருந்து மனது பல நூற்றுக்கனக்கான எண்ண ஓட்டங்களால் நிறைது போயிருக்கிறது..கடுமையான உழைப்பாளி அவன்..இரண்டு வேலை அதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னொரு வேலை என பணத்திற்காக கடுமையாக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்த ஒருவன்..இதுவரைக்கும் ஒரு சுற்றுலாகூட தன் குடும்பத்துடன் அவன் போனதில்லை..எனக்கு தெரிந்து வேலையிடம்,வீடு இந்த இரண்டையும் தவிர அண்மைக்காலங்களில் அவன் போன இடங்கள் என்று எதுவும் இல்லை..மரணம் மிகவிரைவாக அவனை அழைத்து சென்று விட்டது..அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனைகளே இவை..

எம்மில் அநேகமானவர்களின் வாழ்க்கை ஏதாவது ஒன்றை நோக்கிய ஓட்டமாகவே ஒவ்வொரு நொடியும் கழிந்துபோகிறது..நின்று நிதானித்து நம்மைக்கடந்துபோகும் நாட்களை அனுபவிக்கும் பொறுமையும் அழகியல் உணர்வும் நம்மிடம் செத்துவிட்டது..பெரிய பணக்காரன் ஆவது,விலை உயர்ந்த கார்களை வாங்குவது,பெரிய பெரிய வீடுகளாய் வாங்கிகுவிப்பது என்று எல்லையற்று நீண்டு கிடக்கும் ஆசைகளின் ஆற்றில் கட்டுண்டு அடிபட்டுப்போகிறோம்... இழமைகளின் துடிப்பெல்லாம் ஓய்ந்து,உடலின் வேகங்கள் குறைந்து போகும் காலங்களில் விழித்துப்பார்க்கும்போதுதான் உணருவோம் எவ்வளவு விரைவாக, வாழ்க்கைமுடிந்துவிடும் மரணத்தின் கரைகளில் வந்து நிற்கிறோம் என்பதை...அப்பொழுது அழுது புரண்டாலும் நாம் இழந்த காலங்களை ஒருபோதும் மீளப் பெறமுடியாது...ஏதோ ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்..!

வாழ்வில் இதுவரை எதைஎதை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்று...?

தன் குறும்புப் புன்னகையால் இந்த உலகையே வசீகரிக்கும் உங்கள் அழகுக் குழந்தையிடம் அது ஆசையோடு ஓடி வரும்போது அள்ளி அணைக்காமல் எங்கோ நடந்த பிரச்சினைக்களுக்கு வீட்டில் முகத்தை உம்மென்று வைத்து ஓடவைக்கிறீர்கள்..வேலையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வீட்டுக்கும் காவி வந்து உங்கள் சந்தோசத்துடன் வீட்டில் உள்ள எத்தனை பேரின் சந்தோசத்தை தொலைத்துவிடுகிறீர்கள்..பிஸி பிஸி என்று எதிரே வரும் நண்பர்களுடன் கூட ஒரு நிமிடம் நின்று மனம் விட்டு பேசி அவர்களினது சுக துக்கம்களை விசாரித்து எமது அன்பைப் பகிர்ந்து கொள்ளக்கூட நேரமில்லாமல் ஒரு காருக்காக,ஒரு வீட்டுக்காக,ஏதோ ஒரு இலட்சியத்திற்காக எத்தனையை நாம் இழந்து போகிறோம்..? கண்ணெதிரே கொட்டிக்கிடக்கும் எத்தனையோ சந்தோசங்களை தொலைத்துவிடுகிறோம் கண்காணா தொலைவில் இருக்கும் ஏதோ ஒன்றுக்காக..

ஒவ்வொருநாளும் மிகத்தாமதமாக வேலைமுடித்து வீடு வருகிறோம்...வேலையிடத்தில் நல்ல ஒரு பணியாளராய் இருக்கிறோம்...ஆனால் மனைவிக்கு..?குழந்தைக்கு..?அலுவலகங்களுக்கு நாங்கள் இல்லை என்றால் இன்னொரு ஆள்...ஆனால் எம் மனைவிக்கு...?குழந்தைக்கு...?

உயிரற்ற ஒரு காருக்காக,வீட்டுக்காக,பணத்திற்காக உயிருடன் நம்மருகே இருக்கும் எத்தனையோ பேரின் சந்தோசம்களை நாம் சாகடித்துவிடுகிறோம்..கூடவே எமது சந்தோசம்களையும் குழிதோண்டிப் புதைத்துவிடுகிறோம்..

வேலையிடத்தில்,வீதியில்,வீட்டில் என நாம் சந்திக்கும் உறவினர்களை,நண்பர்களை நாம் பிஸி என்று விரட்டிவிட்டு எங்கோ அயல்நாட்டில் உள்ள மனிதர்களை நலம் விசாரிகிறோம்...செயற்கையாக வேலையிடங்களில்,வீதிகளில் புன்னகைக்கிறோம்..மனம் எதையும் அழகியலுடன் சிந்திப்பதையோ,கற்பனை செய்வதையோ,உறவுகளை அனுபவிப்பதையோ,வாழ்க்கையை ரசிப்பதையோ மறந்து உள்ளே எப்பொழுதும் காரையும்,பங்களாவையும்,பணத்தையும் பற்றியே சிந்தித்து சிந்தித்து வரண்டுபோய்க் கிடக்கிறது...மனதின் உயிர்ப்பு,ரசிப்பு முற்றிலும் நம்முள் செத்துவிட்டது..

குடும்பம், மகிழ்ச்சி, தூக்கம், அரட்டை, நண்பர்கள், பயணங்கள் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு நாற்பது ஜம்பது வருடங்கள் கடுமையாய் உழைத்து எங்கள் குறிக்கோளை அடைந்துவிடுகிறோம். இப்படி இருபது வயதில் ஓட ஆரம்பிது அறுபதாவது வயதில் சாதனையை இலட்சியத்தை அடைந்துவிட்டோம்!

ஆனால் நாம் தொலைத்த நம் வாழ்க்கை? பிறகு பிறகு என அனுபவிக்காமலே விட்டுவிட்டு வந்த சின்ன சின்ன சந்தோசம்கள்..அன்புச் சண்டைகள்..செல்லக் குழந்தையின் புன்னகைகள்..மனைவியின் குழையல் சோறு..குடும்பமாக அனுபவிக்கவேண்டிய மாலைப்பொழுதுகள்..மனைவியின் மடியில் குட்டிதூக்கம்..குழந்தையின் எச்சில் உணவு..துணையோடு கைபிடித்து காலாற நடந்திருக்கவேண்டிய கடற்கரைகள்..

இந்த ஒரே ஒரு லட்சியத்திற்காகவா உன் அறுபது ஆண்டுகாலம் வீணடிக்கப்பட்டது?

ஒருவேளை இலட்சியத்தை அடையமுடியவில்லை...! அல்லது உங்கள் வாழ்க்கை முன்னமே முடிந்துபோய்விடுகின்றது என்றால்...? மரணம் நாம் எமது இலட்சியத்தை முடிக்கட்டும் என்று காத்திருக்கவா போகிறது..?

வாழ்க்கை என்பது வெறும் ஒருசில லட்சியங்களில் முடிந்துபோய்விடுவதில்லை...வாழ்க்கை என்பது சின்ன சின்ன சந்தோஷங்களில் நிரம்பிருக்கிறது.

நம்மை சுற்றி இருக்கும் உலகம் இப்படி சின்னசின்ன சந்தோசம்களால் நிறைந்திருக்கிறது..

இயற்கை..அது தன் முகம் காட்டி சிரிக்கும் பசு மரங்கள்..அவற்றினை தழுவி வரும் இதமான தென்றல் காற்று..எதிரே வரும் குழந்தையின் புன்னகை..பக்கத்துவீட்டு அம்மாவின் பாசம் கலந்த நலம் விசாரிப்புக்கள்..மனதை கொள்ளையிடும் மழைப்பொழுதுகள்..நிலவொளியும் மெளனமும் பேசிக்கொள்ள கனவுகள் பொங்கும் இரவுகள்..

என நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷங்கள் நிரம்பியிருக்கின்றன. நம்மைச் சுற்றியே இருக்கின்றன. நாம்தான் அவற்றை எடுத்துக்கொள்வதில்லை.

இப்படி எதையும் அனுபவிக்காமல் நாளைய லட்சியங்களுக்காய் இன்றைய வாழ்க்கையை, மகிழ்ச்சியைப் பறிகொடுத்துவிட்டு வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறோம் – நுகத்தில் பூட்டப்பட்ட மாடுகளைப்போல...வீட்டுக்கு வருகிறோம்..சாப்பிடுகிறோம்...தூங்குகிறோம்..மீண்டும் விடிய எழும்பி ஓடத்தொடங்குகிறோம்...எந்தவித உணர்ச்சிகளும் அற்று கடிகாரத்தில் கடமைக்காக சுற்றிக்கொண்டிருக்கும் முட்களைப்போல...

லட்சியங்கள் நிச்சயம் தேவைதான்...! ஆனால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு அடையும் லட்சியங்களால் யாருக்கென்ன லாபம்..?ஆகையால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சந்தோசமாய் லட்சியங்களுக்காய்ப் போராடுவோம்.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உண்மைதான்

ஆனால் பச்சை போடமுடியவில்லை

காரணம் நானும் அதற்குள் தான் இருக்கின்றேன்.

நீங்களும் அதற்குள் தான் வந்துவிடுவீர்கள். வாழ்க்கை என்பது அதுதான்.

ஒருவருடைய தியாகத்தில்தான் இன்னொருவருடைய எழுச்சி அல்லது வளர்ச்சி இருக்கிறது.

நான் இவற்றை அனுபவக்க விரும்பியிருந்தால் குறைந்தது ஒரு பத்து குடும்பம் இன்று ஊரில் வீதியில் நின்றிருக்கும்.

தற்போது தன்னும் விரும்பினால் பலவும் படுத்துவிடும்.

இது ஒரு ஓட்டம். ஓடியே ஆகணும்

ஓடாதவன் கேலிக்குரியவனாகின்றான்.

எந்த சமூகமும் அவனது சொத்தின் அடிப்படையிலேயே தராதரங்களை வகுக்கிறது.

சொத்தால் பணத்தால் உருவான ஒரு சமூகக்கட்டமைப்பிலிருந்து எவரும் விலகிவிட முடியாது.

நல்லதொரு ஆக்கபூர்வமான ஆக்கத்திற்கு நன்றி சுபேஸ். உண்மையில் நாம் இவைபற்றி அதிகம் சிந்திப்பதில்லை......ஒரு இயந்திரம் போல வாழ்கின்றோம். நமது மரணம் இன்றும் வரலாம் நாளையும் வரலாம் ஆனால் வாழும் அந்த கொஞ்ச காலத்தில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக எம்மில் எத்தனை பேர் வாழ்கின்றோம்? நமது சமூகம் மாறவேண்டும்....இப்படியே சொத்து பணம் என்று வாழ்ந்து எதை சாதித்துவிட்டோம்? ஓடி ஓடி உழைத்து எதையும் அனுபவிக்காமல் அங்கு ஆமிக்கு கொடுத்துவிட்டு வந்தும் இன்னும் நாம் மாறுவதாயில்லை. இனி வரும் எமது பிள்ளைகளாவது வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில்................ நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மரணமாக இளைஞனின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்..

மரணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத இளைய வயதில் பல இலட்சியங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற பணம் அவசியமாக இருக்கின்றது. எனவே பெரிய சந்தோஷங்களைக் காணும்வரை சில சில்லறைச் சந்தோஷங்களைத் தவிர்த்திருக்கலாம்.

முன்னர் கோடையில் வேலை செய்த ஒரு இடத்தில் நண்பர் ஒருவரும் வேலை செய்தார், வாரம் 6 நாள், தினம் 12 மணி நேர வேலை. அவரோ வந்த நாளில் இருந்து அங்குதான் ஓய்வின்றி வேலை செய்தார். சனிக்கிழமைகள்கூட துணி துவைப்பதிலும், பொருட்கள் வாங்குவதிலும் போய்விடும். தொடர்ந்து கடுமையாக உழைத்து தன் நெருங்கிய சொந்தங்கள் ஒன்றொன்றாக வரவழைத்தார். பின்னர் நண்பர்கள், மேலும் உறவினர்கள் என்று இங்கு வருவதற்கு உதவிகள் செய்தார். ஒருமுறை ஏன் இப்படி ஒரு விடுமுறை, ஓய்வு என்று இல்லாமல் உழைத்த பணத்தை எல்லோருக்கும் செலவழிக்கின்றீர்கள் என்று கேட்டபோது, சொந்தங்கள் சந்தோசமாக இல்லாவிட்டால்தான் தனக்கு கவலை வரும் என்றும் வெளியில் வெய்யிலா, பனியா என்பது தனக்குத் தேவையற்றதும் என்று சொன்னார்.

எல்லோரும் ஒரு நிலைக்கு வந்த பின்னர் தானும் திருமணம் புரிந்து இப்போது பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நமது முதலாவது தலைமுறை செய்த தியாகம் அளப்பரியது..அவர்கள் இழந்தது கொஞ்சமல்ல..அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்த முடியாது..அவர்களின் தியாகங்களால் இன்று எமது இரண்டாவது மூன்றாவது தலை முறை நான் எழுதியது போல் வாழ்கிறது..அத்துடன் ஊரிலும் எத்தனையோ பேர் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள் இவர்களின் தியாகங்களால்..போற்றப்படவேண்டியவர்கள் இவர்கள்..ஆனாலும் எப்படியாவது தம்மையும் தமது குடும்பத்தையும் இவர்கள் கொஞ்சமாவது கிடைக்கும் நேரங்களில் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது எனது ஆதங்கம்..ஆனால் இங்கும் பணத்துக்கு மேலால் பணம் சேர்க்க வேண்டும் என்று அலைபவர்களை இவர்களுடன் சேர்த்து அனுதாபப் படமுடியாது...

கடின உழைப்பையும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் சமப்படுத்தி வாழக்கற்றுக்கொண்டால் போதும்..புலம்பெயர் நாட்டில் சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்..இரண்டையும் பலன்ஸ் பண்ணும் தந்திரத்தைக் கற்றுக்கொண்டால் புலம்பெயர் வாழ்க்கையில் நீங்களும் வெற்றியாளனே..

ஆகையால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சந்தோசமாய் லட்சியங்களுக்காய்ப் போராடுவோம்.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நம் வாசகர்கள் எல்லோரும் வசித்து உணர வைக்கும் பதிவு ..ஆனால் சிலருக்கு அதிலும் ஒரு சந்தோசம். என் மனைவியின் மகிழ் சசி என்பிள்ளையின் உயர் கல்வி என் குடும்பத்தை காக்கிறேன் என்ற மன நிறைவும் அவ்ர்களுக்கு வ்ருகிறது. தேட வேண்டும் எனும் ஆவல் கண்ணை மறைகிறது . சிலருக்கு தன்னை கொடுதது வாழ்வதில் ஒரு இன்பம். பகிவுக்கு நன்றி . பாராட்டுக்கள் அருமையான் எழுத்து நடை .பெரும்பாலான புலம்பெயர் வாழ்வு இப்படிதான் என்று எழுதி வைக்க பட்டு இருக்கிறது. [/size]

சுபேஸ் உண்மையில் இந்த இளவயதில் இப்படியொரு ஆக்கபூர்வமான சிந்தனை உங்களிடம் பார்த்ததில் பெருமையும் ,மகிழ்ச்சியும் அடைகிறேன் ............உண்மையில் புலம் பெயர் வாழ உறவுகள் அனைவரும் குடும்பச்சுமை ,பொறுப்புக்கள் என்று பெரும் சுமைகளுடன் பல

யதார்த்தமான உண்மையான வாழ்க்கையை மறந்து போகிறோம் .....இதனால் உளவியில் ரீதியாகவும் ,மனது ரீதியாகவும் பாதிக்கப்பட்டு

விரைவில் வருத்தக்காரர் ஆகிறோம் ..................உங்கள் கருத்துக்கள் இப்படி வாழும் எம் உறவுகளை தட்டிக்கொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அழகாய் கூறி நிற்கிறது ............நிச்சயம் இப்படியான கருத்துக்களில் அசைக்க முடியாத உண்மைகள் உண்டு .

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் ...............................[மீண்டும் வருவேன் பச்சையுடன் ]

நல்ல பதிவு. இவ்வாறான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.

இரண்டுவேலை மூன்று வேலை செய்து பாதிக்காலத்தில் ஆயுளை முடித்துக்கொள்ளும் எமது இளைஞர்கள் தியாகம் பல சமயம் அற்தமற்றதாகவே இருக்கின்றது. அடுத்தவனை பார்த்து விலை உயர்ந்த வீடு வாங்குவது கார்வாங்குவது நகை தாலி வாங்குவது என்னும் போக்கு அபத்தமானது. பலர் இவற்றிலேயே சமூக அந்தஸ்த்தை தக்கவைக்க முற்படுகின்றனர்.

என்னைப் பொறுதவரை வேலை செய்யும் உடல் ஆரோக்கியம் உள்ள ஒவ்வொருவரும் வேலை செய்யவேண்டும். அவரவர் அடிப்படைத்|தேவைகளை அவரவரே பூர்த்திசெய்ய உழைக்கும் பழக்கம் வரவேணும். குடும்பத்துக்காக உழைக்கின்றோம் என்று ஊருக்கு காசனுப்பும் பலரின் குடும்பங்கள் எந்த உடல் உழைப்பிலும் ஈடுபடாமல் வாழும் நிலை இருக்கின்றது. இதில் என்னுமொரு துன்பம் என்னவெனில் புலம்பெயர் நாட்டில் உணவகத்தில் மிகக் கஸ்ரப்பட்டு வேலைசெய்து காசனுப்பும் சிலரின் குடும்பம் நாட்டிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி அங்கு தங்கள் வீட்டில் சமயலுக்கும் பாத்திரம் கழுவுவதற்கும் கூட வேலையாட்கள் வைத்திருக்கின்றனர். (எனக்குத் தெரிந்து சில குடும்பங்கள் இருக்கின்றது)

சீதணம், நகைகள் வாங்குவது என்று சமூகப் பிற்போக்குத்தனங்கள் கற்பிதங்கள் எத்தனையோ இளைஞர்களின் வாழ்வை கரையான்போல் அரித்துக்கொண்டிருக்கின்றது.மனைவியை உட்காரவைத்து சோறுபோடுவது ஆம்பிளைக்கு அழகென்று அதுக்கு உழைத்து பின் மனைவி உருளைக்கிழங்குமாதிரி பெருத்தவுடன் ஜிம்முக்கு உழைத்து அங்க எல்லோரும் ஒரு மாதிரிப்பார்க்கினம் என்று ஜிம் மிசின்களை வீட்டுக்கு வாங்க உழைத்து என்று எத்தனையோ பயித்தியக்காரத்தனங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது.

ஒருவன் உழைப்பை ஒருவன் உறிஞ்சும் பழக்கம் வீட்டுக்குள்ளாகவே இருக்கின்றது. பாச பந்தம் கலாச்சரம் சமூகப் பழக்கம் என்னும் பலதால் இது பூசி மொழுகப்பட்டுள்ளது. இவற்றுள் நடக்கும் எதுவும் தியாகமாகாது.

போரின் பாதிப்பால் முடங்கிப்போன மக்களின் மறுவாழ்வுக்காக அது குடும்பமானாலும் வெளியோயானாலும் ஒருவன் உழைப்பு பயன்படும்போது அது தியாகமாகின்றது. ஆனால் அவ்வாறன நியாயபூர்வமான காரணங்களுக்காக உழைப்பு பயன்படுவது என்பது வெறும் பத்துவீதத்தக்குள்ளாகவேதான்.

  • கருத்துக்கள உறவுகள்
:) :)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு.

என்னைப் பொருத்தமட்டில் ENJOY EVERY MOMENT OF YOUR LIFE இதுதான்.

[size=5]அன்பின் தம்பி சுபேஸ் இன்றைய உலகமயமாதல் சூழலில் மனிதர்களான நாங்கள் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறேம்.விட்டில் பூச்சிகள் ஒளியை தேடிச் செல்வதாக நினைத்து தாமே நெருப்பில் விழுந்து மடிவதைப் போல நாமும் இந்த நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதைகுழியில் சிக்கி மீளமுடியாமல் தொலைந்து போகிறோம்.[/size]

[size=5]இரத்தம் குடிக்கும் அட்டை மனிதனது உடம்பிலுள்ள இரத்தத்தை உறிஞ்சக்குடிப்பது போல இந்த நுகர்பொருள் கலாச்சாரமும் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு நம்மை பொருளாதார அடிமைகளான நடைப்பிணங்களாக மாற்றிவிடுகிறது.[/size]

[size=5]இதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்லை.சுயமான தேடலும் உலகப்பற்றிய புரிதலும் அதனுடாக தனது சுயம் அழிந்து போகால் காப்பாற்றிக் கொள்ளும் பக்குவமும் உடையவர்களால் தான் இதை தாக்குப் பிடித்து எதிர் நீச்சல் போட்டு தனித்தன்iயோடு நிலைத்து நிற்க முடியும்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையத்தை எடுத்து வந்தமைக்கு சுபேசிற்கு மிக்க நன்றி....அன்றாட வாழ்வுக்கு பணம் ஒரு தேவையாக இருக்கிறது ஆனால் பணமே வாழ்க்கை அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை....அப்பா,அம்மா சகோதரம் என்ற பாசத்தை விட பணத்தின் மீது தான் சிலருக்கு அதிக பற்று...பெற்றோர் என்பவர்கள் இருக்கிறார்களா,இல்லையா என்பது கூட சில பிள்ளைகளுக்கு தெரியாது.என்னவென்று கேட்டால் 2 வேலை,3வேலை.

அதை நாம் எப்படிக் கத்தி சொல்லியும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.வரும் வருமானத்துக்குள்ளையோ அல்லது அதையும் மிஞ்சிய இன்னும் ஒரு வேலை செய்து வரும் வருமானத்துடனுமோ ஓரளவுக்கு சுய தேவைகளைப் பூர்த்தி செய்து சந்தோசமாக வாழலாம்...மனிதர்களுக்கு அவற்றையும் மிஞ்சிய ஆசைகள் தான் மேலும்,மேலும் பணம்,பணம் என்று அங்கலாய்க்க வைக்கிறது..சிலருக்கு எப்படித் தான் உழைத்தாலும் திருப்தி வராது..புதுசு புதுசா என்ன எல்லாம் வருகிறதோ அது எல்லாம் இப்போ உள்ள ஆண்,பெண் இருபாலருக்கும் தேபை;படுகிறது..பங்களா வீடு வேணும்,கார் வேணும்,வான் வேணும்...இப்படியானவர்களுக்கு பிள்ளைகள் எத்தனை மணிக்கு எழும்புகிறார்கள்,எத்தனை மணிக்கு பள்ளிக்கு போகிறார்கள்,எங்கு எல்லாம் சுற்றுகிறார்கள் என்பதே தெரியாது...காரணம் பிள்ளைகள் கண்விழிக்கும் முன் பெற்றோர் வேலைக்கு செல்வது,இரவில் பிள்ளைகள் தூங்கிய பின் வீட்டுக்கு வருவது..இப்படி இங்கு எத்னையோ வீடுகளில் நடக்கிறது.என்னோடு ஒரு பெண் எடுத்து அடிக்கடி கதைப்பார் சில விடையங்களை சொல்லும் போது ரொம்ப பாவமாக இருக்கும்..

வீடு வாங்கும் போது தங்கள் வசதிக்குள்,தேகை;குள் பார்ப்பதில்லை....திருமணம் செய்யுபோதே இவ்வளவு தான் என்ன உழைக்க முடியும் இவ்வளவுக்குள் தான் சீவிக்க வேண்டும் என்ற ஒரு வரையறை இருக்குமானால் யாரும் அதிகம் ஆசைப்படமாட்டார்கள்..திருமணம் செய்வதற்கு முன் இருந்தே சில ஆண்கள் என்ன செய்வது என்றால் லோண் எடுத்தோ இல்லை கிறடிட் காட்டில் அடிச்சோ அதிக பட்சமாக சோ காட்டுவது.....அந்த சோவில் மயங்கியிறவே தான் எப்போதும் நிறைவற்ற ஒரு வாழ்வை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள்...ஆகவே தான் இளம் வயதுகளிலயே எதிர்பார்க்க முடியாத வருத்தங்களையும்,பிரச்சனைகளையும் அன்றாடம் சந்திக்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பதிவு, சுபேஸ்!

'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்"

'காலம் கனகம், நேரம் பொன்'

இது எமது இளமையின், ஒவ்வொரு கணமும்,பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், ஆகியோர் மூலம் எமக்கு நினைவு படுத்தப் படுகின்றது!

இதைச் சுற்றித் தான் எமது வாழ்வு துடித்துக் கொண்டிருக்கின்றது!

இதுவே எமது. பலமாகும்'.

இதனால் தான், எம்மைக் கண்டு எல்லோரும் பயப்பிடுகின்றார்கள்!

கிழக்குத் தீமோரில், சோமாலியாவில் அல்லது கொசோவோவில் யாரும், தனிநாடு கேட்டால், உடனே தூக்கிக் கொடுப்பதில் பலருக்கு ஆட்சேபனை கிடையாது.

ஆனால், தமிழன் கேட்டால் தான் பிரச்சனையாகின்றது!

ஏனெனில் தமிழன் வித்தியாசமானவன்!

சொல்லப்போனால், தமிழ் நாடு தான், மகாத்மா காந்திக்குப் அதிக பணம் சேர்த்துக் கொடுத்து, இந்திய சுதந்திரத்துக்கு வழி சமைத்தது.

சேர் பொன் ராமனாதனால், தான் இலங்கையின் சுதந்திர முன்னெடுப்புக்களை, எடுக்க முடிந்தது!

யாழ்ப்பாணத்தில் கிடைத்த தங்க நகைகளைப் பார்த்துக் மாகாத்மா காந்தியே ஆச்சரியப் பட்டாராம்!

சிங்கப்பூர் தமிழர்கள் தான், ஜாப்னா என்ர பெயரில், பிரித்தானியா சாம்ராச்சியத்துக்கே விமானம் வாங்கிக் கொடுத்தார்கள்.

நான் வெறும் புகழ் பாட வரவில்லை. இது எமது தனித்துவம்!

இது எமது இரத்தத்தில் இருக்கிறது.

இன்றும் கூட சிங்களவன், தமிழனைக் காட்டியே பிச்சையெடுக்கிறான்!

தமிழனின் பணத்திலேயே அவனது, 'பொருளாதாரம் (?) தங்கியிருக்கின்றது!.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாட்டு உங்களுக்கானது இல்லை சாத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மனிதர்களில் அநேகரின்.. அடிப்படைப் பிரச்சனை.. எது மகிழ்ச்சியானது எது செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதும்.. எது வாழ்க்கை என்பதும்... மற்றவர்களால் சொல்லப்படும் அல்லது.. தீர்மானிக்கப்படும் விடயமாக இன்றைய உலக ஒழுங்கில் இருப்பதே..!

பறவைகளுக்கு யாரும் கோட்டல் கட்டி ரூம் வாடைக்கு விட்டு.. கார் ஓடவிட்டு அதில் அவை மகிழ்ச்சி அடைகின்றன என்று சொல்வதில்லை..! இயற்கைக்கு அமைய அவை தம் உயிர்ப்பிரு வரை எப்படி வாழ விரும்புகின்றனவோ அப்படி வாழ்வதே அவைக்கு மகிழ்ச்சி..!

நாலு இடத்துக்கு பயணம் போனால் தான் மகிழ்ச்சி என்று நினைக்க வைக்கிற வியாபார உலகில்.. சிலருக்கு மகிழ்ச்சி இருக்கலாம்.

ஆனால் தனது மனதிற்கு பிடித்ததை செய்து வாழும் வாழ்வில் திருப்தி கண்டு வாழும் போது அதில் கூடிய மகிழ்ச்சி இருக்கலாம்.

அந்த இளைஞன் மற்றவர்களின் பார்வைக்கு அல்லது அளவு கோலுக்கு ஏற்ப வாழாதது போல இருக்கலாம். அவனளவில் வாழ்வை வாழ்ந்தே இருப்பான். அவன் தான் திருப்திப்பட மகிழ்ந்திருந்த தருணங்களும் அவனுக்குள் இருந்தே இருக்கும். மற்றவர்களுக்கு அதில் குறை தெரியலாம்.

இன்றைய உலகில் மற்றவர்களுக்காக வாழுபவர்களே அதிகம். தமக்காக தாம் விரும்பிய ஒழுங்கில் வாழ்பவர்கள் குறைவு..! அந்த வகையில்... இதுதான் வாழ்க்கை என்று ஒன்றை நாம் வரையறுக்க முடியாது.

கர்ப்பத்தில் கலைக்கப்படும் ஒரு உயிரிக்கு அந்த செயற்கை மரணம் வரை உள்ள வாழ்வு மகிழ்ச்சி.

ஏழையாக பிறந்துவிட்ட சிசுவிற்கு.. தாய் மார்பிருந்து பாலுண்ணுதலே மகிழ்ச்சி..!

ஒரு ஆய்வாளனிற்கு அவனில் முயற்சியில் அடையும் வெற்றி மகிழ்ச்சி..!

ஒரு மாணவனுக்கு நல்ல சித்தி மகிழ்ச்சி..!

ஒரு நோயாளிக்கு அவன் அதில் இருந்து விடுபடுதல் மகிழ்ச்சி..!

கரும்புலிகள் தியாகிகள்.. போர் வீரர்கள் தவிர மரணத்தில் மகிழ்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

அடிப்படையில் மரணம் எம் பிறப்பின் நொடியில் இருந்து எம்மோடு வருகிறது என்ற அறிதலை மறைத்து அல்லது மறந்து வாழும் வாழ்க்கையில்.. இதுதான் வாழ்க்கை என்ற நிர்ணயிப்புக் கூட போலியானதே..!

வாழும் வரை வாழ்ந்ததற்கான தடம் பதித்துச் செல்வதை விட.. பூமிப்பந்தில் எதுவும் நிரந்தரமல்ல.

இறந்த பின் எதுக்கு மகிழ்ந்தோம்.. எதுக்கு வருந்தினோம் என்பதைக் கூட நாம் உணரப் போவதில்லை..! அந்த வகையில்.. உயிருள்ள வரை மனதிற்கு எது மகிழ்ச்சி அதன் படி வாழுதலே சிறப்பு. இப்படி வாழுதல் தான் மகிழ்ச்சி என்று வரையறுப்பது தவறு. அது வியாபாரம். இந்த ஆக்கம் அப்படியான ஒன்றைச் சொல்ல விளைவது நல்ல அணுகுமுறையாக எனக்குத் தெரியல்ல.மற்றும்படி பேசப்பட எடுக்கப்பட்ட விடயம் நல்லது..!

இயன்றவரை தன் மனத்திருப்திக்கு மன மகிழ்ச்சிக்கு எது சந்தோசமோ.. அதை அதிகம் பெற்று வாழ்ந்துவிட்டு மரணம் என்ற நிஜத்தை ஏற்றுக் கொள்வதே யதார்த்த வாழ்வு. அந்த இளைஞனுக்காக.. உண்மையில் வருந்துவதிலும் விடை கொடுப்பதே செய்ய வேண்டியது. ஏனெனில் அவனின் பின்னால் அதே விடை கொடுப்புக்கான காலம் எம்மை நோக்கியும் வந்து கொண்டிருக்கிறது.

மேலும்... மற்றவரின் மரணத்திற்காக வருந்த நாம் ஒன்றும் சிரஞ்சீவிகள் கிடையாது..! நாம் சிரஞ்சீவின்னு ஒரு கணக்கைப் போட்டுக் கொண்டு வாழ்கிறோம். அது வெறும் போலிக் கணக்கு..!

மரணத்திற்கு சிசு.. குழந்தை.. இளைஞன்.. கிழவன் என்பது கிடையாது. பிறப்பின் நொடியில் இருந்து அது எம்மைத் தொடர்கிறது. அது எம்மை காலத்தோடு அணைக்கும் போது அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதும் கூட வாழ்வின் ஒரு அம்சமே..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுபேஷ் என்னை பதிவு செய்ததற்கு.

இன்றுவரை நான் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் காசு சம்பாதிப்பதற்காய்.வசதியான வாழ்வுக்கா?சொகுசுவாகனம் வாங்கவா?அல்லது வாழ்வின் முடிவு காலத்தில் நிம்மதியாக தூங்கவா?இல்லை

மறு வேளை சாப்பாட்டுக்கு வழியற்ற மனிதர்களுக்குள் இருந்துதான் நானும் வந்தேன்.என் ஒவ்வொரு துளி வியர்வையும்

ஒவ்வொரு மனித்துளுயும் என் தேசத்தில் பெரும் மாற்றத்தை தரும் என்ற எதிர்பார்ப்பில்.ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள புலம் பெயர்ந்த மனிதர்களின் கரங்கள் இணைந்து கொண்டால் எங்களின்கனவுகள் பொய்த்துப்போகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு சுபேஷ்.

நீண்ட நாட்களாக மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் கருப் பொருட்களில் இதுவும் ஒன்று. இலகுவாக எழுதிமுடிக்கமுடியவில்லை காரணம் இந்த இயந்திரத்தனமான ஓட்டத்திற்குள் சிக்குப்பட்டு விடுபடமுடியாமல் திணறிக் கொண்டிருக்கும் உயிரால் விட்டு விடுதலையாகிவிடமுடியாத கட்டுக்களைத் தேக்கி வைத்திருக்கிறது சூழல். இந்தக்கடின ஓட்டத்திலிருந்து விலகி இருந்து பார்த்தால் தெரிகிறது வாழ்க்கை என்பது எவ்வளவு அழகானது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌தொரு ப‌திவு, சுபேஷ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வாழுதல் தான் மகிழ்ச்சி என்று வரையறுப்பது தவறு. அது வியாபாரம். இந்த ஆக்கம் அப்படியான ஒன்றைச் சொல்ல விளைவது நல்ல அணுகுமுறையாக எனக்குத் தெரியல்ல.மற்றும்படி பேசப்பட எடுக்கப்பட்ட விடயம் நல்லது..!

யாரையும் இப்படி வாழுதல் தான் மகிழ்ச்சி என்று சொல்லி நாங்கள் அனுபவிப்பவற்றை காட்டி வரையறுத்துவிடமுடியாது..அப்படி வரையறுப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமும் அல்ல..நான் சொல்லவந்த விடயத்தின் சுருக்கம் இதுதான் - வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சந்தோசமாய் லட்சியங்களுக்காய்ப் போராடுவோம்...

எருமைகளைப் பாருங்கள்.....பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிமாணத்தில் அவை எப்போதாவது,இப்போது புசிக்கும் புல்லைத்தவிர வேறு எதையாவது புசித்திருக்குமா...?ஒரு எருமை புத்தராக முடியாது....இந்தக் காரணத்தினால்தான் விலங்குகள் மனிதனைவிடத் தாழ்ந்து இருக்கன்றன....ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உண்மைதான்

ஆனால் பச்சை போடமுடியவில்லை

காரணம் நானும் அதற்குள் தான் இருக்கின்றேன்.

நீங்களும் அதற்குள் தான் வந்துவிடுவீர்கள். வாழ்க்கை என்பது அதுதான்.

ஒருவருடைய தியாகத்தில்தான் இன்னொருவருடைய எழுச்சி அல்லது வளர்ச்சி இருக்கிறது.

நான் இவற்றை அனுபவக்க விரும்பியிருந்தால் குறைந்தது ஒரு பத்து குடும்பம் இன்று ஊரில் வீதியில் நின்றிருக்கும்.

தற்போது தன்னும் விரும்பினால் பலவும் படுத்துவிடும்.

இது ஒரு ஓட்டம். ஓடியே ஆகணும்

ஓடாதவன் கேலிக்குரியவனாகின்றான்.

எந்த சமூகமும் அவனது சொத்தின் அடிப்படையிலேயே தராதரங்களை வகுக்கிறது.

சொத்தால் பணத்தால் உருவான ஒரு சமூகக்கட்டமைப்பிலிருந்து எவரும் விலகிவிட முடியாது.

நன்றி விசுகண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்....

நல்லதொரு ஆக்கபூர்வமான ஆக்கத்திற்கு நன்றி சுபேஸ். உண்மையில் நாம் இவைபற்றி அதிகம் சிந்திப்பதில்லை......ஒரு இயந்திரம் போல வாழ்கின்றோம். நமது மரணம் இன்றும் வரலாம் நாளையும் வரலாம் ஆனால் வாழும் அந்த கொஞ்ச காலத்தில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக எம்மில் எத்தனை பேர் வாழ்கின்றோம்? நமது சமூகம் மாறவேண்டும்....இப்படியே சொத்து பணம் என்று வாழ்ந்து எதை சாதித்துவிட்டோம்? ஓடி ஓடி உழைத்து எதையும் அனுபவிக்காமல் அங்கு ஆமிக்கு கொடுத்துவிட்டு வந்தும் இன்னும் நாம் மாறுவதாயில்லை. இனி வரும் எமது பிள்ளைகளாவது வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில்................ நாம்.

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்திற்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஒரு பச்சை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணமாக இளைஞனின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்..

மரணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத இளைய வயதில் பல இலட்சியங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற பணம் அவசியமாக இருக்கின்றது. எனவே பெரிய சந்தோஷங்களைக் காணும்வரை சில சில்லறைச் சந்தோஷங்களைத் தவிர்த்திருக்கலாம்.

முன்னர் கோடையில் வேலை செய்த ஒரு இடத்தில் நண்பர் ஒருவரும் வேலை செய்தார், வாரம் 6 நாள், தினம் 12 மணி நேர வேலை. அவரோ வந்த நாளில் இருந்து அங்குதான் ஓய்வின்றி வேலை செய்தார். சனிக்கிழமைகள்கூட துணி துவைப்பதிலும், பொருட்கள் வாங்குவதிலும் போய்விடும். தொடர்ந்து கடுமையாக உழைத்து தன் நெருங்கிய சொந்தங்கள் ஒன்றொன்றாக வரவழைத்தார். பின்னர் நண்பர்கள், மேலும் உறவினர்கள் என்று இங்கு வருவதற்கு உதவிகள் செய்தார். ஒருமுறை ஏன் இப்படி ஒரு விடுமுறை, ஓய்வு என்று இல்லாமல் உழைத்த பணத்தை எல்லோருக்கும் செலவழிக்கின்றீர்கள் என்று கேட்டபோது, சொந்தங்கள் சந்தோசமாக இல்லாவிட்டால்தான் தனக்கு கவலை வரும் என்றும் வெளியில் வெய்யிலா, பனியா என்பது தனக்குத் தேவையற்றதும் என்று சொன்னார்.

எல்லோரும் ஒரு நிலைக்கு வந்த பின்னர் தானும் திருமணம் புரிந்து இப்போது பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கின்றார்.

நன்றி கிருபன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்.....உண்மையில் இது தான் ஒரே வழி, இது தான் ஒரே தீர்வு என்று எதையும் ஆணித்தரமாகச் சொல்ல முடியாது. ஒரே பிரச்சினைக்கு பல தரப்பட்ட தீர்வுகள் இருக்கலாம். இருக்க முடியும். அந்த வழிகளில் தங்களுக்கு அதிகமாகப் பொருந்துகிற ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையையும் அனுபவித்துக்கொண்டு பயணிக்கும் மனிதன் கண்டிப்பாக தன் லட்சியத்தை சிரமமில்லாமல் அடைகிறான்.

[size=5]நம் வாசகர்கள் எல்லோரும் வசித்து உணர வைக்கும் பதிவு ..ஆனால் சிலருக்கு அதிலும் ஒரு சந்தோசம். என் மனைவியின் மகிழ் சசி என்பிள்ளையின் உயர் கல்வி என் குடும்பத்தை காக்கிறேன் என்ற மன நிறைவும் அவ்ர்களுக்கு வ்ருகிறது. தேட வேண்டும் எனும் ஆவல் கண்ணை மறைகிறது . சிலருக்கு தன்னை கொடுதது வாழ்வதில் ஒரு இன்பம். பகிவுக்கு நன்றி . பாராட்டுக்கள் அருமையான் எழுத்து நடை .பெரும்பாலான புலம்பெயர் வாழ்வு இப்படிதான் என்று எழுதி வைக்க பட்டு இருக்கிறது. [/size]

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்திற்கும்..... உண்மை அக்கா..

சுபேஸ் உண்மையில் இந்த இளவயதில் இப்படியொரு ஆக்கபூர்வமான சிந்தனை உங்களிடம் பார்த்ததில் பெருமையும் ,மகிழ்ச்சியும் அடைகிறேன் ............உண்மையில் புலம் பெயர் வாழ உறவுகள் அனைவரும் குடும்பச்சுமை ,பொறுப்புக்கள் என்று பெரும் சுமைகளுடன் பல

யதார்த்தமான உண்மையான வாழ்க்கையை மறந்து போகிறோம் .....இதனால் உளவியில் ரீதியாகவும் ,மனது ரீதியாகவும் பாதிக்கப்பட்டு

விரைவில் வருத்தக்காரர் ஆகிறோம் ..................உங்கள் கருத்துக்கள் இப்படி வாழும் எம் உறவுகளை தட்டிக்கொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அழகாய் கூறி நிற்கிறது ............நிச்சயம் இப்படியான கருத்துக்களில் அசைக்க முடியாத உண்மைகள் உண்டு .

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் ...............................[மீண்டும் வருவேன் பச்சையுடன் ]

நன்றி தமிழ்சுரியன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்....

நல்ல பதிவு. இவ்வாறான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.

இரண்டுவேலை மூன்று வேலை செய்து பாதிக்காலத்தில் ஆயுளை முடித்துக்கொள்ளும் எமது இளைஞர்கள் தியாகம் பல சமயம் அற்தமற்றதாகவே இருக்கின்றது. அடுத்தவனை பார்த்து விலை உயர்ந்த வீடு வாங்குவது கார்வாங்குவது நகை தாலி வாங்குவது என்னும் போக்கு அபத்தமானது. பலர் இவற்றிலேயே சமூக அந்தஸ்த்தை தக்கவைக்க முற்படுகின்றனர்.

என்னைப் பொறுதவரை வேலை செய்யும் உடல் ஆரோக்கியம் உள்ள ஒவ்வொருவரும் வேலை செய்யவேண்டும். அவரவர் அடிப்படைத்|தேவைகளை அவரவரே பூர்த்திசெய்ய உழைக்கும் பழக்கம் வரவேணும். குடும்பத்துக்காக உழைக்கின்றோம் என்று ஊருக்கு காசனுப்பும் பலரின் குடும்பங்கள் எந்த உடல் உழைப்பிலும் ஈடுபடாமல் வாழும் நிலை இருக்கின்றது. இதில் என்னுமொரு துன்பம் என்னவெனில் புலம்பெயர் நாட்டில் உணவகத்தில் மிகக் கஸ்ரப்பட்டு வேலைசெய்து காசனுப்பும் சிலரின் குடும்பம் நாட்டிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி அங்கு தங்கள் வீட்டில் சமயலுக்கும் பாத்திரம் கழுவுவதற்கும் கூட வேலையாட்கள் வைத்திருக்கின்றனர். (எனக்குத் தெரிந்து சில குடும்பங்கள் இருக்கின்றது)

சீதணம், நகைகள் வாங்குவது என்று சமூகப் பிற்போக்குத்தனங்கள் கற்பிதங்கள் எத்தனையோ இளைஞர்களின் வாழ்வை கரையான்போல் அரித்துக்கொண்டிருக்கின்றது.மனைவியை உட்காரவைத்து சோறுபோடுவது ஆம்பிளைக்கு அழகென்று அதுக்கு உழைத்து பின் மனைவி உருளைக்கிழங்குமாதிரி பெருத்தவுடன் ஜிம்முக்கு உழைத்து அங்க எல்லோரும் ஒரு மாதிரிப்பார்க்கினம் என்று ஜிம் மிசின்களை வீட்டுக்கு வாங்க உழைத்து என்று எத்தனையோ பயித்தியக்காரத்தனங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது.

ஒருவன் உழைப்பை ஒருவன் உறிஞ்சும் பழக்கம் வீட்டுக்குள்ளாகவே இருக்கின்றது. பாச பந்தம் கலாச்சரம் சமூகப் பழக்கம் என்னும் பலதால் இது பூசி மொழுகப்பட்டுள்ளது. இவற்றுள் நடக்கும் எதுவும் தியாகமாகாது.

போரின் பாதிப்பால் முடங்கிப்போன மக்களின் மறுவாழ்வுக்காக அது குடும்பமானாலும் வெளியோயானாலும் ஒருவன் உழைப்பு பயன்படும்போது அது தியாகமாகின்றது. ஆனால் அவ்வாறன நியாயபூர்வமான காரணங்களுக்காக உழைப்பு பயன்படுவது என்பது வெறும் பத்துவீதத்தக்குள்ளாகவேதான்.

நன்றி சுகன் அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்.....மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்..இதற்கு மேல் இதற்கு நான் என்ன எழுதமுடியும்..

நல்லதொரு பதிவு.

என்னைப் பொருத்தமட்டில் ENJOY EVERY MOMENT OF YOUR LIFE இதுதான்.

நன்றி கறுப்பி வாசிப்பிற்கும் கருத்திற்கும்....

[size=5]அன்பின் தம்பி சுபேஸ் இன்றைய உலகமயமாதல் சூழலில் மனிதர்களான நாங்கள் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறேம்.விட்டில் பூச்சிகள் ஒளியை தேடிச் செல்வதாக நினைத்து தாமே நெருப்பில் விழுந்து மடிவதைப் போல நாமும் இந்த நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதைகுழியில் சிக்கி மீளமுடியாமல் தொலைந்து போகிறோம்.[/size]

[size=5]இரத்தம் குடிக்கும் அட்டை மனிதனது உடம்பிலுள்ள இரத்தத்தை உறிஞ்சக்குடிப்பது போல இந்த நுகர்பொருள் கலாச்சாரமும் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு நம்மை பொருளாதார அடிமைகளான நடைப்பிணங்களாக மாற்றிவிடுகிறது.[/size]

[size=5]இதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்லை.சுயமான தேடலும் உலகப்பற்றிய புரிதலும் அதனுடாக தனது சுயம் அழிந்து போகால் காப்பாற்றிக் கொள்ளும் பக்குவமும் உடையவர்களால் தான் இதை தாக்குப் பிடித்து எதிர் நீச்சல் போட்டு தனித்தன்iயோடு நிலைத்து நிற்க முடியும்[/size]

நன்றி அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்.....அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

இந்த விடையத்தை எடுத்து வந்தமைக்கு சுபேசிற்கு மிக்க நன்றி....அன்றாட வாழ்வுக்கு பணம் ஒரு தேவையாக இருக்கிறது ஆனால் பணமே வாழ்க்கை அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை....அப்பா,அம்மா சகோதரம் என்ற பாசத்தை விட பணத்தின் மீது தான் சிலருக்கு அதிக பற்று...பெற்றோர் என்பவர்கள் இருக்கிறார்களா,இல்லையா என்பது கூட சில பிள்ளைகளுக்கு தெரியாது.என்னவென்று கேட்டால் 2 வேலை,3வேலை.

அதை நாம் எப்படிக் கத்தி சொல்லியும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.வரும் வருமானத்துக்குள்ளையோ அல்லது அதையும் மிஞ்சிய இன்னும் ஒரு வேலை செய்து வரும் வருமானத்துடனுமோ ஓரளவுக்கு சுய தேவைகளைப் பூர்த்தி செய்து சந்தோசமாக வாழலாம்...மனிதர்களுக்கு அவற்றையும் மிஞ்சிய ஆசைகள் தான் மேலும்,மேலும் பணம்,பணம் என்று அங்கலாய்க்க வைக்கிறது..சிலருக்கு எப்படித் தான் உழைத்தாலும் திருப்தி வராது..புதுசு புதுசா என்ன எல்லாம் வருகிறதோ அது எல்லாம் இப்போ உள்ள ஆண்,பெண் இருபாலருக்கும் தேபை;படுகிறது..பங்களா வீடு வேணும்,கார் வேணும்,வான் வேணும்...இப்படியானவர்களுக்கு பிள்ளைகள் எத்தனை மணிக்கு எழும்புகிறார்கள்,எத்தனை மணிக்கு பள்ளிக்கு போகிறார்கள்,எங்கு எல்லாம் சுற்றுகிறார்கள் என்பதே தெரியாது...காரணம் பிள்ளைகள் கண்விழிக்கும் முன் பெற்றோர் வேலைக்கு செல்வது,இரவில் பிள்ளைகள் தூங்கிய பின் வீட்டுக்கு வருவது..இப்படி இங்கு எத்னையோ வீடுகளில் நடக்கிறது.என்னோடு ஒரு பெண் எடுத்து அடிக்கடி கதைப்பார் சில விடையங்களை சொல்லும் போது ரொம்ப பாவமாக இருக்கும்..

வீடு வாங்கும் போது தங்கள் வசதிக்குள்,தேகை;குள் பார்ப்பதில்லை....திருமணம் செய்யுபோதே இவ்வளவு தான் என்ன உழைக்க முடியும் இவ்வளவுக்குள் தான் சீவிக்க வேண்டும் என்ற ஒரு வரையறை இருக்குமானால் யாரும் அதிகம் ஆசைப்படமாட்டார்கள்..திருமணம் செய்வதற்கு முன் இருந்தே சில ஆண்கள் என்ன செய்வது என்றால் லோண் எடுத்தோ இல்லை கிறடிட் காட்டில் அடிச்சோ அதிக பட்சமாக சோ காட்டுவது.....அந்த சோவில் மயங்கியிறவே தான் எப்போதும் நிறைவற்ற ஒரு வாழ்வை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள்...ஆகவே தான் இளம் வயதுகளிலயே எதிர்பார்க்க முடியாத வருத்தங்களையும்,பிரச்சனைகளையும் அன்றாடம் சந்திக்கிறார்கள்..

நன்றி யாயினி வாசிப்பிற்கும் கருத்திற்கும்.....அடடா இவ்வளவு தெளிவாக எழுதும் நீங்கள் ஏன் தான் அதிகம் எழுதுவதில்லை..? அழகாக எழுதி இருக்கிறீர்கள்..

நல்ல ஒரு பதிவு, சுபேஸ்!

'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்"

'காலம் கனகம், நேரம் பொன்'

இது எமது இளமையின், ஒவ்வொரு கணமும்,பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், ஆகியோர் மூலம் எமக்கு நினைவு படுத்தப் படுகின்றது!

இதைச் சுற்றித் தான் எமது வாழ்வு துடித்துக் கொண்டிருக்கின்றது!

இதுவே எமது. பலமாகும்'.

இதனால் தான், எம்மைக் கண்டு எல்லோரும் பயப்பிடுகின்றார்கள்!

கிழக்குத் தீமோரில், சோமாலியாவில் அல்லது கொசோவோவில் யாரும், தனிநாடு கேட்டால், உடனே தூக்கிக் கொடுப்பதில் பலருக்கு ஆட்சேபனை கிடையாது.

ஆனால், தமிழன் கேட்டால் தான் பிரச்சனையாகின்றது!

ஏனெனில் தமிழன் வித்தியாசமானவன்!

சொல்லப்போனால், தமிழ் நாடு தான், மகாத்மா காந்திக்குப் அதிக பணம் சேர்த்துக் கொடுத்து, இந்திய சுதந்திரத்துக்கு வழி சமைத்தது.

சேர் பொன் ராமனாதனால், தான் இலங்கையின் சுதந்திர முன்னெடுப்புக்களை, எடுக்க முடிந்தது!

யாழ்ப்பாணத்தில் கிடைத்த தங்க நகைகளைப் பார்த்துக் மாகாத்மா காந்தியே ஆச்சரியப் பட்டாராம்!

சிங்கப்பூர் தமிழர்கள் தான், ஜாப்னா என்ர பெயரில், பிரித்தானியா சாம்ராச்சியத்துக்கே விமானம் வாங்கிக் கொடுத்தார்கள்.

நான் வெறும் புகழ் பாட வரவில்லை. இது எமது தனித்துவம்!

இது எமது இரத்தத்தில் இருக்கிறது.

இன்றும் கூட சிங்களவன், தமிழனைக் காட்டியே பிச்சையெடுக்கிறான்!

தமிழனின் பணத்திலேயே அவனது, 'பொருளாதாரம் (?) தங்கியிருக்கின்றது!.

நன்றி புங்கை அண்ணா வாசிப்பிற்கும் கருத்திற்கும்.....அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..

நன்றி சிறி அண்ணா வாசிப்பிற்கும் பாடல்பகிர்விற்கும்.....

நன்றி சுபேஷ் என்னை பதிவு செய்ததற்கு.

இன்றுவரை நான் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் காசு சம்பாதிப்பதற்காய்.வசதியான வாழ்வுக்கா?சொகுசுவாகனம் வாங்கவா?அல்லது வாழ்வின் முடிவு காலத்தில் நிம்மதியாக தூங்கவா?இல்லை

மறு வேளை சாப்பாட்டுக்கு வழியற்ற மனிதர்களுக்குள் இருந்துதான் நானும் வந்தேன்.என் ஒவ்வொரு துளி வியர்வையும்

ஒவ்வொரு மனித்துளுயும் என் தேசத்தில் பெரும் மாற்றத்தை தரும் என்ற எதிர்பார்ப்பில்.ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள புலம் பெயர்ந்த மனிதர்களின் கரங்கள் இணைந்து கொண்டால் எங்களின்கனவுகள் பொய்த்துப்போகுமா?

நன்றி அன்னிலிங்கம் அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்....

நல்லதோர் பதிவு [size="4"]சுபேஸ்[/size]

நீண்ட நாட்களாக மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் கருப் பொருட்களில் இதுவும் ஒன்று. இலகுவாக எழுதிமுடிக்கமுடியவில்லை காரணம் இந்த இயந்திரத்தனமான ஓட்டத்திற்குள் சிக்குப்பட்டு விடுபடமுடியாமல் திணறிக் கொண்டிருக்கும் உயிரால் விட்டு விடுதலையாகிவிடமுடியாத கட்டுக்களைத் தேக்கி வைத்திருக்கிறது சூழல். இந்தக்கடின ஓட்டத்திலிருந்து விலகி இருந்து பார்த்தால் தெரிகிறது வாழ்க்கை என்பது எவ்வளவு அழகானது.

நன்றி அக்கா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்...

ந‌ல்ல‌தொரு ப‌திவு, சுபேஷ்.

நன்றி தமிழ்சிறி அண்ணா வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்....

சூப்பர் ஒரு பச்சை

நன்றி சுண்டல் வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்...

நன்றி நெடுக்ஸ் வாசிப்பிற்கும் கருத்துபகிர்விற்கும்.....

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தை போலவே வாழ்வின் ஒவ்வொரு விடயங்களையும் புரிந்து கொள்வதில் தான் எல்லா வித்தியாசங்களும்..!

ஒவ்வொருவர் வாழ்க்கையையும் வித்தியாசப்படுத்துவது அவரவர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் விதங்களே..... புரிந்து கொள்ளும் விதம் சிறிது மாறினாலும் வாழ்க்கையில் அது பெரிய மாறுதலுக்கு வழி வகுக்கிறது....

எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.... ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம்.... ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடிவதும், மேலும் சிக்கலாக்குவதும் அதைப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது.... முன்னதாகவே ஒரு முடிவெடுத்து விட்டு குறுகிய பார்வையில் எதையும் பார்ப்பவன் தவறாகவே புரிந்து கொள்கிறான். தவறாகவே எதையும் ஆக்கியும் விடுகிறான்.... அப்படிப்பட்டவன் தானாக துளியும் மாறாமல் நின்று தன் விருப்பப்படி அனைத்தையும் மாற்ற முனைகிறான்.... அனைத்துடனும் பிணக்கம் கொள்கிறான். காலச் சூழலை எதிர்க்கும் அவன் பின்னுக்குத் தள்ளப்படுவதோடு அல்லாமல் நிம்மதியும் இன்றி தவிக்கிறான்....

சரியாகப் புரிந்து கொள்ளும் விதமோ சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு அமைதியாக திறந்த மனதுடன் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிவதில் தான் ஆரம்பிக்கிறது.... அப்படிப் பார்க்க முடிபவன் தேவைப்படும் போது சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. உலகத்தோடு அவன் யுத்தம் செய்வதில்லை. அதனுடன் சேர்ந்து கூட்டாக இயங்குகிறான்.... அனைத்தையும் துணையாக்கிக் கொண்டு அழகாக வாழ்ந்து முன்னேறுகிறான்....

வாழ்க்கையை ஒரு பிரச்சினையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறவன் அப்படியே தன் அனுபவங்களைக் காண்கிறான்.... சந்திக்கின்ற மனிதர்கள், சூழ்நிலைகள், எல்லாமே பிரச்சினைகளாக உருவெடுக்க, அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை துக்கமயமாகவே அமைந்து விடுகிறது.... வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொண்டு அதைக் கச்சிதமாக சந்திக்கும் விதத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்கிறான்.... ஒவ்வொரு பிரச்சினையும் அவனை உயர்த்தும் படிக்கட்டாக அமைந்து அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்தி விடுகிறது.... எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது....

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வளிமண்டலத்தில் Air pockets இருக்கு... :unsure: அதனூடு விமானங்கள் பயணிக்கும்போது விமானம் கீழேபோய் மேலேவரும்.. :D ஆகவே வானில் மேடுபள்ளம் இருக்கு யுவர் ஆனர்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.