Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! – ஒரு பெண் போராளியின் உண்மைக் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் காரணம் என்ரால்?

ஜேர்மனி அணு உலையை கட்ட தொடங்க முன்னம் அதனால் வரும் பின்விளைவுகளை தன்னால் சமாளிக்க முடியுமா அதை தாங்க கூடிய சக்தி மக்களிடம் இருக்க என்ற ஆரட்சி எல்லாம் தொடங்கி விட்டு அணு உலையை கட்டினான்.

இங்கை மக்களுக்காக போராட போறம் மக்களை காக்கிறம் நாளைக்கு எங்களை மக்கள் காப்பற்றும் மனநிலைக்கு மக்கள் இருக்கிறார்களா அல்லது அதை தாங்கும் சக்தி இந்த சின்ன இனத்துக்கு இருக்க என்ற ஒரு தூரநோக்கு சிந்தனையுமில்லை( மந்தைகள் தானே என்ற நினைப்பு) அதனால் தான் இந்த நிலை.

[size=4]நல்ல கல்லா? என்று பார்த்துதான் சாஜகான் .....................[/size][size=1]

[size=4]சீ.... தாஜ்மாகாலை கட்டினான்![/size][/size]

  • Replies 76
  • Views 11.3k
  • Created
  • Last Reply

உணர்ச்சி வசப்படுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை அரசியல் ரீதியாகத் தமிழகத்தில் ஏற்படுத்தும் வண்ணம் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.முதலில் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது உண்மையா அன்று நாம் ஆராய வேண்டும்.இது பற்றிப் பலரும் முக னூலில் எழுதிய விடயங்களை முதலில் உங்களுக்கு கிழே பிரதி இடுகிறேன். ##

முன்னாள் பெண் போராளியின் பேட்டி கவலை தருகின்றது!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்

[ வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012, 03:31.02 PM GMT ]

sritharan18.jpg

ஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை வாசித்து நாம் கவலை அடைந்துள்ளோம்.

விடுதலைப்புலிகளில் அனுபவம் மிக்க படையில் இருந்த ஒரு முதல்நிலையில் இருக்கக்கூடிய போராளி தன் துன்பங்களையோ கஸ்டங்களையோ இங்கு இருக்கக்கூடிய பா.உறுப்பினர்களிடமோ அல்லது உதவி வழங்கும் அமைப்புக்களிடமோ பகிர்ந்துகொள்ள முனையாது இருந்தது என்பது மிகவும் வேடிக்கை தருகின்றது.

விளம்பரம் இன்றி ஏராளம் முன்னாள் போராளிகளுக்கு நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம்.அவர்களின் குடும்ப நலனில் நாம் முதல்நிலை அக்கறை செலுத்தி வருகின்றோம்.போரில் தங்கள் குடும்பங்களில் இழப்புக்களை சந்தித்தவர்களின் விபரங்களை பதிவுசெய்யமாறு நாம் பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.

அதற்கு இணங்க ஏராளம் பேர் காணமல் போனவர்களின் விபரங்களையும் இறந்தவர்களின் விபரங்களையும் வந்து எம்முடன் தொடர்புகொண்டு பதிவுசெய்திருக்கின்றார்கள். இவர்களுக்கு புலம்பெயர் தமிழ்மக்கள் எங்கள் ஊடாகவும் தனியாகவும் பெருமளவு உதவிகளை செய்து வருகின்றார்கள்.

இந்த அனுபவம் மிக்க போராளி தன் பிள்ளைகளின் பசி தீர்க்க பாலியல் தொழிலாளியாக மாறியிருப்பதாய் பேட்டி அளித்திருப்பது ஒரு புறத்தில் வறுமையின் கொடிய பிடியிலும் தம் சொந்த முயற்சியால் உழைத்து பி;ள்ளைகளை கல்வி கற்பித்து முன்னேற்றியிருக்கிற முன்னாள் போராளிகளான சகோதரிகளை அவமானப்படுத்துவதாய் அமைகின்றது.

இன்னொரு புறத்தில் இங்கு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் மீது தவறான கருத்தை உருவாக்கவும் தமிழ்தேசியத்தை சிதைக்கவும் திட்டமிட்டு செய்யப்பட்ட பேட்டியாகவும் எண்ணவும் தோன்றுகின்றது.

நாம் அதிகம் போரில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களில் அக்கறை செலுத்திவருவதையும் அவர்களுக்கு செய்துவருகின்ற உதவிகளையும் அந்த குடும்பங்கள் அறியும்.

எனவே ஆற்றல் மிக்க ஒரு முன்னாள் போராளி எம்மோடு இதுவரையும் தொடர்பு கொண்டு தன் நிலையை தெரிவிக்காமல் இருந்திருப்பதும் வறுமை நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் துரதிஸ்டமானது.

எனவே இனிமேலாவது குறித்த அந்த பெண் போராளி எம்மோடு தொடர்புகொள்ளலாம். அவரின் உண்மை கதையை அறியவும் அவருக்கு உதவவும் நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

போராளிகளாக இருந்து பின்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் செம்மையாக வாழ்வதே உண்மை. இன்றைக்கும் காணாமல் போன தங்கள் கணவனை தேடி அலைகின்ற பெண்கள் எங்கள் கண்முன்னே இருக்கின்றார்கள்.

எனவே எமது பெண்களின் ஒழுக்கம் இப்படியான பேட்டிகள் மூலம் கேள்விக்குறியாக்கப்படுவது கவலை அழிப்பதுடன் இது திட்டமிட்ட தமிழ் தேசியத்துக்கு எதிரான விசமிகளின் செயலா என சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

வேலு நாச்சியார் என்றும் ஜான்சிராணி என்றும் புகழப்பட்ட ஒரு முன்னாள் போராளி ஒரு விபச்சாரியாக மாறியிருக்கமாட்டாள் என்பதே எம் ஆழமான நம்பிக்கை என பா.உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி'' எனும் தலைப்பினில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை மிகவும் கேவலமாக கற்பனையாகப்புனையப்பட்டதென்பதை கவலையுடன் பதிவு செய்யவிரும்புகின்றோம்;.ஆனந்த விகடன் எங்களது சிறு வயது முதல் யாழ்ப்பாணத்தினில் பலராலும் விரும்பப்பட்ட வார இதழாகும்.அதிலும் ஒரு பத்திரிகையாளனாக பரிணாமிக்க பலரையும் தூண்டியதும் விகடனே.இன்று வரை பிரமிப்பாக நாம் அதனை பார்த்தே வருகின்றோம்.ஆனால் குளிருட்டப்பட்ட அறைகளுள் இருந்து முகட்டு வளைகளை பார்த்தே அங்கு எல்லாம் பிறக்கின்றதென்ற நண்பர் சவுக்கு சங்கரது கருத்துக்களை நாம்; பெரிதும் கவனத்தினில் கொள்வதில்லை.விகடனில் ஈழததவர்களது விருப்பத்திற்குரியதாக நண்பர் திருமாவேலனினது பதிவுகளை பலரும் வாசிப்பதுண்டு.

ஆனால் ஈழப்பிரச்சினை பற்றி புரிதல் கொண்ட நண்பர் திருமாவேலன் எவ்வாறு இவ்வாறான கற்பனை கட்டுரையினை வெளிவர அனுமதித்தார் என்பதே எம் முன்னாலுள்ள கேள்வி.யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் பற்றியோ அது இப்போது எவ்வாறிருக்குமென்பது கூடப்புரியாது எழுதப்பட்ட கட்டுரை அது.பகிரங்கமாக சவால் விடுகின்றோம்; .இதே யாழ்ப்பாணத்தினில் கொலைகளும் காணாமல் போதல்களுடனும் அரங்கேறிய வேளைகளினில் எல்லாம் இரத்தமும் சதையுமாக வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருந்த கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர்கள் என்ற வகையினில் குறித்த பெண் போராளி பற்றி தகவல்களை வழங்க முடியுமாவென சவால் விடுகின்றோம்.(நிச்சயம் இரகசியம் பேணப்படும்).நிச்சயமாக குறித்த கட்டுரையாளர் இதழுக்கு செவ்வி வேண்டுமென பலரிடமும் இங்கு தொலைபேசியூடாக அலைந்து திரிந்த கதை பற்றி நாம் இங்கு பேசவிரும்பவில்லை.நிச்சயமாக திட்டமிட்டு தாயகத்தினில் சிலரையும் தமிழகத்தினில் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து சேறு பூசும் அவரது கற்பனைக்கதைக்கு தளம் அமைத்து கொடுத்த விகடனுக்கு வன்மையாக கண்டனத்தையும் பதிவு செய்யவிரும்புகின்றோம்.

இ.தயாபரன்

வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மறைந்த பத்திரிகையாளர் நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு

சாந்தி அக்கா இந்த முன்னாள் போராளி பற்றிய விடயங்களை உங்களால் நேசக்கரத்தின் தொடர்பாளர்கள் மூலமாக இனம் காண முடியுமா? எவருடனும் தொடர்பில்லாமல் ஒரு முக்கியமான போராளி இருப்பது என்பது சந்தேகத்திடமாக இருக்கிறது.இது உண்மை எனில் நேசக்கரத்தினூடாக பலர் இந்தப் போராளிக்கு உதவுவார்கள் என்று நான் நம்பிகிறேன்.

ஆனால் இது ஒரு உளவு அமைப்பினால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆனால் இது ஒரு உளவு அமைப்பினால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

கட்டுரை சந்தேகத்துக்கிடமானதாக புனைவாக இருக்கலாம். ஒருவேளை உண்மையாக இருந்தால் இவ்வாறு சந்தேகிப்பதே மாபெரும்தவறாகிவிடும். ஆனால் இவற்றைக் கடந்து இப்படி ஒரு புனைவை எழுதுவதால் உளவுத்துறைக்கு என்ன லாபம்? சிங்ளப்படைகளின் மிலேச்சத்தனத்தை இக்கட்டுரை வெளிப்படுத்தகின்றது. தமிழக அரசியல் வாதிகளின் பெறுப்பற்றதனத்தை வெளிப்படுத்துகின்றது. உளவுத்துறை இதனூடாக எதை சாதிக்க முற்படுகின்றது?

யாழில் முன்பை விட அதிகமான பாலியல் துஸ்பிரயோகங்கள் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் நடக்கின்றதை செய்திகளில் படிக்கின்றோம். பாலியல் தொழில் விடுதிகள் மறைமுகமாக இயங்குவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றது. பல சீர்கேடுகள் நடக்கின்றது என்பது உண்மையே. ஒரு போராளி இவ்வாறு அவலத்துக்கு உட்பட்டிருந்தால் அதை எம்மால் ஏற்கமுடியாதுள்ளதா? பெண்போராளிகள் குறித்து இருப்பில் எமக்குள் ஒரு கருத்தும் பிம்பமும் இருக்கின்றது ஆனால் யுத்த முடிவு அவர்களை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இது கற்பனையாக இருக்கலாம் இதைவிட மோசமான கண்ணீர்க்கதைகள் நடந்தேறியவண்ணம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை சந்தேகத்துக்கிடமானதாக புனைவாக இருக்கலாம். ஒருவேளை உண்மையாக இருந்தால் இவ்வாறு சந்தேகிப்பதே மாபெரும்தவறாகிவிடும். ஆனால் இவற்றைக் கடந்து இப்படி ஒரு புனைவை எழுதுவதால் உளவுத்துறைக்கு என்ன லாபம்? சிங்ளப்படைகளின் மிலேச்சத்தனத்தை இக்கட்டுரை வெளிப்படுத்தகின்றது. தமிழக அரசியல் வாதிகளின் பெறுப்பற்றதனத்தை வெளிப்படுத்துகின்றது. உளவுத்துறை இதனூடாக எதை சாதிக்க முற்படுகின்றது?

என்ன லாபம்?

அ ) புலம்பெயர் தமிழரின் மனவுறுதியை உடைப்பது.அவர்கள் மனதில் ஒரு குற்றவுணர்வை, எப்போதும் அழிந்து போகாமல் வைத்திருப்பது.

ஆ) புலிகளைக் பற்றி, ஒரு மிகவும் கீழ்த்தரமான அபிப்பிராயத்தை உருவாக்குவது.

இ) இப்படியான நிலைமையில், எமது மக்கள் மானத்துடன் வாழ்ந்தால் போதும். அவர்களுக்குச் சாப்பாடு கிடைத்தாலே போதும். வேறு எதுவும் வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கி, நிலம் பறிபோனால் பரவாயில்லை, மக்கள் மானத்துடன் வாழ்ந்தால் போதும், என்ற நிலையை உருவாகுவது!

ஈ) ஏற்கெனவே இராணுவத்தால் சீரழிக்கப் பட்டவர்கள் தானே இந்தப் பெண்போராளிகள் என்ற மனநிலையை, மேட்டுக்குடி மக்களிடம் வலியுறுத்துவது மூலம், மறக்கப் பட்டோ, மன்னிக்கப் பட்டோ விடப்பட்ட சம்பவங்களை, மீண்டும், மீண்டும் கொண்டு வருவது மூலம், போராளிகளுக்கும், மக்களுக்குமான இடைவெளியைக் குறையவிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம், முன்னாள் போராளிகளை, அநாதரவு நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது!

என்ன லாபம்?

அ ) புலம்பெயர் தமிழரின் மனவுறுதியை உடைப்பது.அவர்கள் மனதில் ஒரு குற்றவுணர்வை, எப்போதும் அழிந்து போகாமல் வைத்திருப்பது.

ஆ) புலிகளைக் பற்றி, ஒரு மிகவும் கீழ்த்தரமான அபிப்பிராயத்தை உருவாக்குவது.

இ) இப்படியான நிலைமையில், எமது மக்கள் மானத்துடன் வாழ்ந்தால் போதும். அவர்களுக்குச் சாப்பாடு கிடைத்தாலே போதும். வேறு எதுவும் வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கி, நிலம் பறிபோனால் பரவாயில்லை, மக்கள் மானத்துடன் வாழ்ந்தால் போதும், என்ற நிலையை உருவாகுவது!

ஈ) ஏற்கெனவே இராணுவத்தால் சீரழிக்கப் பட்டவர்கள் தானே இந்தப் பெண்போராளிகள் என்ற மனநிலையை, மேட்டுக்குடி மக்களிடம் வலியுறுத்துவது மூலம், மறக்கப் பட்டோ, மன்னிக்கப் பட்டோ விடப்பட்ட சம்பவங்களை, மீண்டும், மீண்டும் கொண்டு வருவது மூலம், போராளிகளுக்கும், மக்களுக்குமான இடைவெளியைக் குறையவிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம், முன்னாள் போராளிகளை, அநாதரவு நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது!

நான் நினைத்தேன் இதைப் படித்ததும் புலம்பெயர் தமிழ்மக்கள் இவ்வாறான நிலைக்கு முன்னாள் போராளிகள் தள்ளப்படுவதை தவிக்கும் பொருட்டு அவர்கள் மறுவாழ்வுக்கு உதவ முற்படுவார்கள்.

சிங்களவரின் கொடுரத்தை கண்டு மனம் கொதித்து எப்டியாவது சிங்களப் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச அரங்கில் நீதிகேட்பார்கள்.

இந்திய அரசியல் வாதிகள் ஈழத்தமிழரை வைத்துப் பிழைப்பு நடத்துவதை தவிர்த்து ஓரு ஆக்கபூர்வமான முயற்றிக்கு முன்வருவார்கள்.

ஈழத்து அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகள் மீது அக்கறைப்படுவார்கள் .

இவ்வாறான அம்சங்கள் இந்தப் போராளிபற்றிய செய்தியில் இருப்பதால் இதில் உளவுத்துறைக்கு என்ன லாபம் என்று தவறாக புரிந்துவிட்டேன் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் இதைப் படித்ததும் புலம்பெயர் தமிழ்மக்கள் இவ்வாறான நிலைக்கு முன்னாள் போராளிகள் தள்ளப்படுவதை தவிக்கும் பொருட்டு அவர்கள் மறுவாழ்வுக்கு உதவ முற்படுவார்கள்.

சிங்களவரின் கொடுரத்தை கண்டு மனம் கொதித்து எப்டியாவது சிங்களப் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச அரங்கில் நீதிகேட்பார்கள்.

இந்திய அரசியல் வாதிகள் ஈழத்தமிழரை வைத்துப் பிழைப்பு நடத்துவதை தவிர்த்து ஓரு ஆக்கபூர்வமான முயற்றிக்கு முன்வருவார்கள்.

ஈழத்து அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகள் மீது அக்கறைப்படுவார்கள் .

இவ்வாறான அம்சங்கள் இந்தப் போராளிபற்றிய செய்தியில் இருப்பதால் இதில் உளவுத்துறைக்கு என்ன லாபம் என்று தவறாக புரிந்துவிட்டேன் போலுள்ளது.

நீங்கள், நினைத்ததில் தவறில்லை, சண்டமாருதன்!

எனக்குத் தெரிந்த பலர், உதவிக்கொண்டிருக்கிறார்கள்! போராளிக் குடும்பங்களுடன், நேரடித் தொடர்புகளை, ஏற்படுத்துவதன் மூலம், இதைச் செய்ய முடிகின்றது. அவுசில் பலர் இப்படியான, குடும்பங்களுக்கு, உதவிக் கொண்டிருக்கின்றனர்!

இந்திய அரசியல் வாதிகள்? :wub:

ஈழத்து அரசியல் வாதிகள்? :icon_mrgreen:

நான் நினைத்தேன் இதைப் படித்ததும் புலம்பெயர் தமிழ்மக்கள் இவ்வாறான நிலைக்கு முன்னாள் போராளிகள் தள்ளப்படுவதை தவிக்கும் பொருட்டு அவர்கள் மறுவாழ்வுக்கு உதவ முற்படுவார்கள்.

புலத் தமிழர்கள் ஏற்கனவே உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.யாழ்க் களத்தில் இதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன.சாந்தியக்கா இவை பற்றி எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்.

சிங்களவரின் கொடுரத்தை கண்டு மனம் கொதித்து எப்டியாவது சிங்களப் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச அரங்கில் நீதிகேட்பார்கள்.

இதனையும் ஏற்கனவே னாம் அறிவோம், போர்க்குற்றம் சார்ந்து இயங்கியும் வருகிறோம்.

இந்திய அரசியல் வாதிகள் ஈழத்தமிழரை வைத்துப் பிழைப்பு நடத்துவதை தவிர்த்து ஓரு ஆக்கபூர்வமான முயற்றிக்கு முன்வருவார்கள்.

ஈழத்து அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகள் மீது அக்கறைப்படுவார்கள் .

இவ்வாறான அம்சங்கள் இந்தப் போராளிபற்றிய செய்தியில் இருப்பதால் இதில் உளவுத்துறைக்கு என்ன லாபம் என்று தவறாக புரிந்துவிட்டேன் போலுள்ளது.

இதனை சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள்.இந்தச் செய்தியின் உண்மையான நோக்கம் இது தான்.அதை மட்டும் சொல்லாமல் மற்றவற்றுடன் சேர்த்துசொல்வதன் மூலம் , இதன் உண்மைத் தன்மை உருமறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேட்டியை எடுத்தவர் தமிழ் நாட்டில் வசிப்பவர். இவர் யாழ் சென்றாரா? நேரடியாக பேட்டி கண்டவரைச் சந்தித்தாரா? இவர் யார் மூலம் இவர் ஓர் முன்னாள் போராளி என்று உறுதிப் படுத்தினார்?

முன்னார் போராளி என்று சொல்லிக் கொண்டு பலர் சிறிலங்கா உளவுப் பிரிவுக்காக தாயகத்திலும் புலத்திலும் வேலை செய்கிறார்கள்.அவர்களில் ஒருவராகக் கூட இவர் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைப் போராளிகள்.. மாவீரர் சார்ந்தது என்பதால்... இந்த இணைப்புடன்..

[size=4] ஈழத்துத் தமிழ் சுதந்திரப் பெண் போராளிகளின் பாலியல் பற்றிய விவாதங்கள்..![/size]

[size=4]

eelamwomen.jpg[/size]

[size=4]ஈழத்தில் பிரித்தானிய காலனித்துவம் விலக்கிக் கொள்ளப்பட்ட நாள் முதல் இருந்து வரும் முக்கிய பிரச்சனை சிங்களர் - தமிழர் இனப்பிரச்சனை. இதற்குத் தீர்வாக தமிழர்கள் கோருவதோ தமக்கான பூர்வீக நிலத்தில் தம்மைத் தாமே நிர்வகிக்கும் அரசியல் மற்றும் வாழ்வுரிமை. அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. உலகில் இயற்கையாக எல்லா உயிரினங்களும் உள்ள உரிமை தான் அது. ஆனால் ஈழத்தில் தமிழர்களுக்கு மட்டும் சிங்களவர்களால் அது தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறது.

இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்து விடுதலையான நாள் கொண்டு.. 30 வருட சாத்வீகப் போராட்ட வழியிலும் கிட்டத்தட்ட 35 வருட ஆயுதப் போராட்ட வழியிலும் தமது உரிமைக்காகப் போராடிய தமிழர்களுக்கு எந்த ஒரு உருப்படியான தீர்வையும்.. சிங்களவர்களும் சரி பிராந்திய வல்லரசான இந்தியாவும் சரி.. பிற பிராந்திய சர்வதேச சக்திகளும் உண்மையான கருசணை கொண்டு பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

மாறாக தமிழர்களின் உரிமைக் கோரிக்கையை அல்லது விருப்பை தமது பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ நலனுக்காகவே இப்போதும் போல எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தமிழர்களின் உரிமைப்போராட்ட வடிவங்கள் சிதைந்தும்.. உருமாறியும்.. பொருண்மிய ரீதியில் தமிழர்கள் பலவீனப்பட்டும்.. உள்ள நிலையில்.. அவர்களின் சமூகக் கட்டமைப்புக்கள் போரால் எதிரிகளால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ள நிலையில்.. ஒரு அடிமைப்பட்ட இனமாக இராணுவ மயமாக்களின் கீழ் திட்டமிட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் ஆக்கிரமிப்புக்களுக்குள் அவர்கள் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அடிமை வாழ்வுக்கான காரண காரியங்கள் வெறுமனவே தமிழர்களுக்கு வெளியில் மட்டும் உள்ள காரணிகள் இல்லை. அவை தமிழர்களுக்குள்ளும் உள்ளன. இதில் தமிழர்களை ஆட்டிப்படைக்கும் முக்கிய காரணி தமது அரசியல் சமூகத் தேவையின் பால் ஒன்றுபடாத தன்மையே..!

ஒரு காகம் கூட ஆபத்து என்றால் கரைந்து ஒரு காக்கா கூட்டத்தையே கூட்டி தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும். அதனிடம் உள்ள சமூக உணர்திறன் கூட அற்ற நிலையில் தான் இன்று ஈழத்தமிழினம்.. உலகம் பூராவும் பரம்பி உள்ள நிலையிலும் அகதி மற்றும் அடிமை வாழ்விலும் சுய திமிர் எடுத்து அலைகிறார்கள். தவிர.. தமது சமூத் தேவை உணர்பவர்களாக அவர்கள் இல்லை.

குறிப்பாக பெண்கள் விடயத்தில்..இன்றைய நாகரிக உலகிலும் மனித இனம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டே உள்ளது.

இஸ்லாமியர்கள் பெண்களை மத அடிப்படையில் அடக்குமுறைக்குள்ளாக்குவது போல.. அடக்குமுறையாளர்கள்.. ஆக்கிரமிப்பாளர்கள் பெண்களை இலக்காக்கி தமது அடக்குமுறைக் கொள்கைகளை மக்களிடம் திணித்து விடுகின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில்.. தமிழ் சமூகத்தின் மத்தியில் நிலவிய பெண் அடிமைத்தனத்தை இரண்டு பெரும் பிரிவுகள் தமக்கு சாதமாக்கிக் கொண்டன.

ஒன்று.. பெண்களுக்கு ஆசை காட்டி வாக்குச் சீட்டுப் பெறும் சனநாயகம் பேசிக் கழுத்தறுக்கும் கும்பல் அரசியல்வாதிகள்.

இரண்டாவது பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று புரட்சிகர உணர்ச்சியை கிளப்பி அவர்களை தங்கள் அடிமைகளாக்கிய முன்னாள் போராளிகளும் இன்னாள் ஒட்டுக்குழுக்களும்.

ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்ற பெயரில் உருவான புளொட் அமைப்பு சமூகத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த பெண் அடிமைத்தனத்தைக் கையில் எடுத்து உணர்ச்சி பொங்க துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு ஈழப் பெண்களிடம் சமூக விடுதலைக்கான தேவை உணர்தலைத் செய்யத் தூண்டி. ஆனால் பின்னர் அந்தப் பெண்களை அந்த அமைப்பின் சுய தேவைகளுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தும் விட்டனர். கொன்றும் புதைத்துள்ளனர். இதில் பாலியல் குற்றங்கள் உள்ளடங்க பல அடங்கி இருந்தன. விடுதலைப் போராட்டம் நடத்திறம் என்பதன் கீழ் அவை செய்யப்பட்டதால் இன்று வரை அந்த அநியாயங்கள் குறித்த நீதி விசாரணைகள் நடக்கவே இல்லை. உண்மைகளும் கேள்விக்கு பதிலுக்கு இடமின்றி குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன.

அதன் பின்னர் புளொட்டின் பாணியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபி ஆர் எல் எவ்) என்ற அமைப்பும் பெண்களை குறிவைத்து.. பெண்ணடிமைத் தனத்தை முதன்மைப்படுத்தி.. பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டி.. அவர்களையும் தமது சொந்த பாலியல் தேவைகள் உட்பட பலவற்றிற்கு இரையாக்கி மகிழ்ந்தனர். பின்னர் 1987 - 90 களில் இந்தியப் படைகளின் இச்சைக்கு அவர்களைக் கையளித்துவிட்டு ஓடி மறைந்து விட்டனர்.

இந்த நிலையில் இவர்களாலும் சமூகத்தாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண்களை நோக்கி அவர்களின் பாதுகாப்பை.. சமூக விடுதலையை அவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நற்துணிவோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசிய தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெண்கள் அமைப்புக்களை தனது போராட்ட அமைப்புக்குள் உருவாக்கி அவர்களை சமூக.. இராணுவ.. அரசியல்.. பொருண்மிய அறிவூட்டலுடன் வளர்த்தெடுத்தார். அதன் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஊட்டினார்.

நடுநிசியில் கூட தட்டந் தனியே விறகு கட்டி வியாபாரம் செய்யும் நிலையில் இருந்து நிர்வாகக் கட்டமைப்பு உயர் அதிகாரிகள் நிலை வரை ஈழத்தில் குறிப்பாக புலிகளின் நிர்வாகப் பகுதியில் பெண்கள் எந்த சமூக அச்சுறுத்தலும் இன்றி இயங்க அவர் வழி சமைத்திருந்ததோடு விடுதலைப்புலிகளின் நிர்வாக காலமாகிய 1990 - 95 வரையான காலப்பகுதியில் பெண்கள் மீதான சமூக வன்முறை என்பது 10% க்கும் கீழாக இருந்தது. இதற்கான ஆதாரங்களாக அன்றைய காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வந்த புரன்லைன்.. இந்தியா ரூடே.. பத்திரிகையாளர்களும் மற்றவர்களும் எழுதிய குறிப்புகளை மக்கள் இதற்கு உதாரணமாக நோக்கலாம்.

அதுமட்டுமன்றி பெண்களுக்கென்றே தனித்துவமான அமைப்புக்களை அவர் உருவாக்கி இருந்தார். சுதந்திரப்பறவைகள் என்ற செய்தி ஊடகமும் பெண்கள் சம்பந்தப்பட்ட சமூக ஆய்வுகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆக்கங்களை உள்ளடக்கி வெளி வந்து கொண்டிருந்தது. அதில் ஆச்சரியப்பட வைத்த அம்சம்.. விடுதலைப்புலிகளின் பெண் பிரிவினர் மேற்கொண்டிருந்த சமூக ஆய்வுகள் பற்றிய முடிவுகள் தான். சரியான சமூக அறிவியல் ஆய்வுப் பின்னணியோடு.. தரவு சேகரிப்போடு அவை வெளியிடப்பட்டிருந்தமை அன்றைய நெருக்கடியான காலக்கட்டத்திலும் அவர்கள் காட்டிய அந்த ஆய்வுத் திறன் இன்றும் வியக்க வைக்கிறது.

இப்படி சமூகத்திலும் சரி.. போர் முனையிலும் சரி பல்துறை திறமைசாலிகளாக.. தாமே தம் காலில் நின்று செயற்படக் கூடியதாக பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஊட்டி அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வளர்ந்தவர் பிரபாகரன்.

ஆனால்.. ஈழத்தில் 2009 இல் நடந்த ஈழப் பெருந்துயர்.. சிங்களம் கட்டவிழ்த்துவிட்ட தமிழின அழிப்புக்குப் பின்னர்.. மீண்டும் தமிழ் பெண்கள் மீது அடக்குமுறையாளர்களும்.. ஆக்கிரமிப்பாளர்களும் தமது பாசிசக் கரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இவர்களோடு தமிழ் பேசும் காடையர்களும்.. முன்னாள் போராளி அமைப்புக்களாகிய இன்னாள் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து கொண்டு முன்னாள் தமிழீழ் விடுதலைக்காக.. தமிழரின் விடிவுக்காக உழைத்த பெண் போராளிகளை அச்சுறுத்தி அவர்களை தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கி வருவதோடு.. பிரதேசவாதம் கிளப்பி தமிழ் மக்களிடையே பிரிவினையூடு அவர்களை இன அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற கருணா என்கின்ற முரளிதரன் போன்றவர்கள் தங்கள் தப்பிப்பிற்கும்.. சுயலாப அரசியலுக்காகவும் உருவாக்கிய போலி அமைப்புக்களைச் சார்ந்த ஆயுததாரிகளும் தமிழ் பெண்களை சிங்களவர்கள் மத்தியில்.. சிங்களப் படைகள் மத்தியில் பாலியல் வியாபாரத்தின் மூலப்பொருளாக்கி வருகின்றனர்.

இன்று.. இந்தக் கொடுமைகள் தாயக மண்ணில் உள்ளவர்களால் மட்டும் தான் நிகழ்த்தப்படுகிறது என்று கூற முடியாத அளவிற்கு.. இவற்றின் இன்னொரு பரிமானத்தை நாம் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களிடம் இருந்தும் காண நேரிடுகிறது. அது சற்று மாறுபாடானது.

துன்பத்தில் இருக்கும் அல்லது போரில் கணவரை.. குடும்பத்தை இழந்திருக்கும் பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளை நோக்கி உதவிக் கரம் நீட்டுகிறோம் என்ற போர்வையில் அவர்களை தமது நிதி வருவாயில் தங்க வைத்து.. தமது தேவைகளுக்கு ஏற்ப பாவிக்க முற்படுகின்றனர் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தனிநபர்களும்.

இவர்களின் செயற்பாடுகள் உள்ளூர் சுயலாப அரசியல் சக்திகளுடன் மற்றும் சிங்கள இராணுவத்தினுடன் கூட்டுச் சேர்ந்து ஒன்றிணைந்து இருப்பதையும் இங்கு காண முடிகிறது. இப்படி ஒரு நிலை இந்திய அமைதிப்படை என்று நுழைந்த இந்தியப் படைகளின் ஈழ ஆக்கிரமிப்பின் போதும் இருந்தது. தமிழ் பெண்கள் திட்டமிட்ட இராணுவ வன்முறைக்கும் இராணுவத்தினரின் தேவைக்கும் பாவிக்கப்படும் நிலை அன்றும் இருந்தது. இந்தியப் படைகளால் நேரடியாகவும் அவர்களோடு இயங்கிய முன்னாள் போராளி அமைப்புக்களான ஒட்டுக்குழுக்களாலும் இன்னும் இராணுவத்திடம் தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்க விரும்பியவர்களாலும் தமிழ் பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் 1987 - 90 இந்திய ஆக்கிரமிப்புப் காலப்பகுதி என்பது 2009 மேக்குப் பின்னரான நிலையில் இருந்தும் சிறிது மாறுபட்டது. அன்று விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மட்டுப்பட்டிருந்தனவே தவிர அதன் தலைமை பாதுகாக்கப்பட்டிருந்தது. அதனால் சமூக விரோதிகள் மத்தியிலும் ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறை இருந்தது. அது பின்னைய நாட்களில் உண்மையும் ஆனாது. விடுதலைப்புலிகள் மீளெழுச்சி அடைந்த போது இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்குள் சமூக விரோத மற்றும் குற்றச்செயல்களைச் செய்துவிட்டு.. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு ஒற்றுத் தகவல் வழங்கி அல்லது கொலைச் சேவகம் செய்து நீதியின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்களை புலிகள் தேடி அறிந்து தண்டனை வழங்கும் நிலை இருந்தது. அதனால் பெண்கள் மீதான குற்றச் செயல்களும் சரி.. இதர சமூக விரோதச் செயல்களும் சரி ஒரு எல்லைக்கு மேல் உயர்ந்து செல்ல முடியவில்லை.

ஆனால் 2009 க்குப் பின்னான நிலை அப்படியல்ல. தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவோ அங்கு நிகழும் ஆக்கிரமிப்புக்களை ஆக்கிரமிப்பாளனின் செயல்களை தட்டிக்கேட்கவோ.. நீதி மறுக்கப்பட்டு அவன் செய்து வரும் எல்லாம் நியாயம் என்று சொல்லப்படும் நிலையில்.. அவனுக்கு தண்டனை வழங்க யாருமற்ற நிலையில் தமிழ் சமூத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பது ஈழத்தீவில் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் தான்.. தமிழ் பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் வெறியாட்டங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. இப்போ அவை பாலியல் வியாபாரமாகப் பெருகும் நிலையை எதிரியும் அவனோடு சேர்ந்து இயங்குபவர்களும் செய்ய விளைகின்றனர். அவர்களின் இந்த செயல்களால் ஆதாயம் பெற புலம்பெயர் தமிழர்களும் சிலர் முனைகின்றனர். அதில் இரண்டு விதமான ஆதாயங்களை அவர்கள் ஈட்ட விளைகின்றனர்.

1. நேரடியாக போர் உருவாக்கிய அந்தப் அபலைப் பெண்களை தாமும் தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது.

2. அந்தப் பெண்களின் துயரை வைத்து தமது போராட்ட விரோத கருத்தியலை அல்லது தமிழ் இன இருப்பைச் சொல்லும் தமிழ் தேசிய கருத்துக்ளுக்கு எதிர்ப்பை வலுப்படுத்திக் கொள்வது.

இந்த இரண்டையும் ஆக்கிரமிப்பாளனும் தான் செய்கிறான். அவனுக்கும் இதே தேவைகள் தான் உள்ளன.

தமிழர்களுக்குள் உள்ள இந்த தீயசக்திகள்.. பாதிக்கப்படுவது தமது சொந்த உடன்பிறப்புக்கள் என்ற தற்துணிவின்றி.. எதிர்காளாலும் துரோகிகளாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களை.. மக்களை பாதுகாக்க எழும் சாதாரண அடிப்படை மனித உணர்வின்றிக் கூட செயற்பட்டு வருகின்றனர்.

இந்தப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இன்னொரு விசித்திரமானவர்களையும் காண முடிகிறது. அவர்கள் நேரடியாக எதிலும் பங்களிக்காமல் போராட்ட சுமையில் இருந்தும் தம்மை புத்திசாலித்தனமாக விடுவித்துக் கொண்டு வெளிநாடுகளில் தமது வாழ்க்கையை சீர்படுத்திக் கொண்டு.. சுய விளம்பரத்திற்கும்.. சுய புகழுக்கும்.. சுய முன்னிலைப்படுத்தலுக்கு இந்தப் பிரச்சனைகளை கையில் எடுப்பது.

இவர்களிடம் எந்த உருப்படியான செயற்திட்டங்களும் ஈழத்தில் பாதிக்கப்படும் அல்லது படப் போறவங்களை பாதுகாக்க இல்லை. இருந்தாலும் அப்படி இருப்பதாக ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொண்டு கருத்தியலை.. அறிக்கைகளை இணையத்திலும் ஊடகங்களிலும் அள்ளி வீசுவது. பின்னர் தமக்குள் தாமே அதை பாராட்டி மகிழ்ந்து கொள்வது அல்லது முன்னிலைப்படுத்திக் கொள்வது. இதனைத் தவிர இவர்கள் இதுவரை களத்தில் சாதித்தது எதுவும் இல்லை. இவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டமும் உள்ளது. அந்த வால்பிடிக்கும் கூட்டத்தினது நோக்குமும் இவர்களினதை ஒத்ததே.

நாமும்.. இதனை எழுதுவதன் மூலம் அதையே செய்கிறோம் என்ற நிலை வரலாம்.. ஆனால் இந்தப் பிரச்சனையில் இருந்தும் தாயகப் பெண்களை குறிப்பாக ஈழ விடுதலைக்காகப் போராடிய முன்னாள் பெண்களை.. போராளிகளை.. ஒட்டுமொத்த தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு தெளிவான திட்டமிடலுக்கு உண்மையில் அவர்கள் மீது அக்கறை உள்ள அனைவரையும் அழைக்க விரும்புகிறோம்.

தனிநபர்களாக.. அல்லது சிறு குழுக்களாக நாம் பெரும் ஆக்கிரமிப்பாளனையும்.. அவனுக்கு அடிவருடி நிற்கும் கூலிகளையும் சமாளிக்க முடியாது. குறிப்பாக ஈழ மண்ணில் விடுதலைப்புலிகளின்... நீதியான செயற்பாட்டுக்கான நிகழ்தகவு அற்ற ஒரு நிலையில் அதற்கான சாத்தியம் குறைவு.

அந்த வகையில் இந்தப் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தலினூடு தான் அணுக வேண்டும். அப்படி அணுகி தீர்வு கிட்டுவதற்கிடையில் பாதி தமிழ் பெண்களின் வாழ்வும் போராளிகள் வாழ்வும் சீரழிக்கப்பட்டிருக்கும்.

எனவே இதற்கு உள்ளூர்.. வெளியூர் விழிப்புணர்வுடன் அமைந்த சமூக அக்கறையுள்ள மக்களின் குறிப்பாக மாணவ சமூகத்தின் பங்களிப்போடு ஒரு மீட்சித்திட்டம் அமுல்படுத்தப்படுவதோடு.. அவல நிலைக்கு உள்ளாகி உள்ள பெண்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சரியான சமூக மற்று உள வள ஆலோசனைகளும் உறுதிகளும் வழங்கி சாதாரண சமூக வாழ்வில் இணைய விடுதல் அவசியம் அல்லது பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு அவர்களை நகர்த்தி வந்து அவர்களே அவர்களின் பாதுகாப்பையும் வாழ்வையும் உறுதி செய்யத்தக்க பிரதேசங்களில் சரியான பாதுக்காப்பு ஒழுங்குகளின் கீழ் சுய மீட்சிக்கு உதவக் கூடிய நல்ல பொருண்மிய திட்டங்களை கொண்டு சென்று.. அல்லது பெண்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ள நாடுகளுக்கு அவர்களை நகர்த்தி.. வாழ வைக்க உதவ வேண்டும்.

இதில் பெண் உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் பெண்கள் அமைப்புக்களும் பெண்களும் இணைந்து கொள்வதோடு சர்வதேசப் பெண்கள் அமைப்புக்களுக்கும் இந்த நடவடிக்கையில் பங்கெடுக்க அழைப்பு விடுக்க வேண்டும். இதனை துரிதமாக ஒரு கட்டுமைப்புப்படுத்தி செயற்படுத்த புலம்பெயர் பெண்களும்.. தமிழக மற்றும் ஈழத்தமிழ் பெண்கள் அமைப்புக்களும் தாமே முன் வருதல் அவசியம். செய்வார்களா..???????????!

இதில் துரிதமாகச் செயற்பட்டால் மட்டுமே பல தமிழ்ப் பெண்களை சிங்கள ஆக்கிரமிப்பாளரிடம் இருந்தும் அவனுக்கு அடிவருடுபவர்களிடம் இருந்தும் காப்பாற்ற முடியும். இன்றேல்.. முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்களை சீரழித்துக் கொன்று ரசித்த கூட்டம்.. உயிரோட அவர்களை நிர்வாணப்படுத்தி சீரழித்து அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களை அணுவணுவாகக் கொல்லும் நிலையையே பார்க்க நேரிடும். அதுமட்டுமன்றி பாலியல் வக்கிரம் பிடித்த சில தனிநபர்களின் ஆபாச எழுத்துக்களும் நடவடிக்கைகளுக்கும் அந்தப் பெண்கள் இலக்காக நேரிடலாம். அது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையே பாதிக்கும். அதன் பின்னர் வெட்டிக்கு ஆளையாள் திட்டி கட்டுரை.. கவிதை.. மற்றும் மாநாடு போட்டு எந்தப் பிரயோசனமும் இல்லை.[/size]

http://kundumani.blogspot.co.uk/

Edited by nedukkalapoovan

எம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்

orwell-300x220.jpgஉலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை இன்று அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல.

தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க அடிவருடி எவ்வாறு நச்சுக்கருத்துக்களை விதைத்தாரோ உலக கம்யூனிச முகாம்ற்கு எதிரான எழுத்துக்களின் அரிச்சுவடியை ஆரம்பித்தவர் ஜோர்ஜ் ஓர்வல்.

ஜோர்ஜ் ஓர்வல் குறித்து பிரித்தானிய பொலிசாருக்கும் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 இற்கும் இடையே ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. ஓர்வல் அதீ தீவிர புரட்சிகர கம்யூனிஸ்டாக தன்னைக் உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டதே இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. பிரித்தானிய போலிஸ் இவர் கம்யூனிஸ்ட் என்று பிந்தொடர்ந்தது.பிரித்தானிய உளவு நிறுவனம் இவரைப் பாதுகாத்தது.

பிரித்தானியா அதிகாரத்திற்கு சேவை செய்வதற்காக தன்னைப் போலிஸ்படையில் இணைத்துக்கொண்ட ஓர்வெல், பர்மாவிற்கு அனுப்பப்படுகிறார். அங்கே போலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார்.

1927 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்குத் திரும்பிய ஓர்வெல், அங்கு எழுத்தாளராகும் முடிவிற்கு வருகிறார். அங்கு வேறு தொழிகள் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார். தனது வறுமை எவ்வாறு தன்னை தின்றது என்று தனது நூலில் அவரே பின்னதாகக் குறிப்பிடுகிறார்.

முன்னதாக மார்க்சியக் குழு ஒன்றுடன் இணைந்து இஸ்பானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜோர்ஜ் ஓவல் கலந்துகொண்டு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றிருந்தார். இதனால் எம்.ஐ 5 இவரைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. இவரது வறுமையைப் பயன்படுத்திகொண்ட பிரித்தானிய உளவு நிறுவனம் இவரை உள்வாங்கிக்கொண்டது.

1942 ஆம் ஆண்டு ஓர்வல் பிபிசி இன் இந்திய சேவையில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பிரித்தானியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஈவிங் என்ற உயர் அதிகாரி ஒர்வெலின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்கிறார். ஓர்வெல் இந்திய கம்யூனிஸ்டுக்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் பார்வையை கொண்டிருப்பதாகவும் ஒரு அறிக்கையை எம் ஐ 5 இற்குச் சமர்பிக்கிறார்.

அந்த அறிக்கை குறித்து ஓர்வெல் மீது எம்.ஐ 5 எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எம்.ஐ 5 உளவு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான ஒகில்வி என்பவர் அந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் பொலீஸ் அதிகாரிக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு பிரித்தானிய ஆவணக் காப்பகத்தின் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்ட வேளையில் தான் ஓர்வல் யார் என்பது தெரியவருகிறது.

1949 ஆம் ஆண்டு ஓர்வெல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று தான் கருதுபவர்களின் பட்டியல் ஒன்றை பிரித்தானிய உளவுத்துறையான எம் ஐ 5 இற்கு வழங்கியது வெளியான ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களில் ஒன்று. அந்த வேளையில் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஸ்டாலின்ஸ்டுக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டர்கள்.

இதற்கு ஒருவருடம் முன்னதாக ஓர்வெலின் மனைவிற்கு பிரித்தானிய உணவுத்துறை அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்ப்பட்டது.

ஜோர்ஜ் ஓர்வெலின் நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகம் குறித்த தவறான அபிப்பிராயங்களை திட்டமிட்டுப் பரப்பி சமூகத்தை எவ்வாறு நச்சூட்டியது என கைலாசபதி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

ஜோர்ஜ் ஓர்வல் தொடர்ந்தும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவும் இடதுசாரியாகவுமே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதெ வேளை காட்டிக்கொடுப்பாளனாக உளவு நிறுவனத்திற்கு வேலைபார்த்திருக்கிறர். கம்யூனிசத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் உளவு நிறுவனத்தின் அடியாளாகத் தொழிற்பட்டிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது,

http://inioru.com/?p=31280

அங்கே உள்ள மக்களின் கதைகளை கேட்டு அதன் படி புனையப்பட்டு ஒரு பேட்டியாகவே எனக்கும் இது படுகிறது.

ஆயினும் இப்படியான ஒரு நிலை அங்கே இல்லை என்று யாரும் வாதிடவும் முடியாது.

அங்கே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் பத்திரிகையாளரும் இவருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்.

இது உண்மைத் தகவல் என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

அப்படியாயின் சிறிதரனும், ஊடகவியலாளரும் பொய் சொல்கின்றனரா?

அந்த அறையினுள் வெறும் நிசப்தமே எஞ்சியிருந்தது. அவள் அழுதுமுடியட்டுமெனக் காத்திருந்தோம். தற்கொலை முயற்சியொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட அவள் மீண்டும் அவ்வாறான முயற்சியொன்றினில் ஈடுபடலாமென்ற அச்சம் வைத்திய நிபுணரிடமிருந்தது. முன்னாள் போராளியான அவளது எதிர்காலம் பற்றிப்பேச ஊடகவியலாளனான என்னையும் அவர் அழைத்திருந்தார். முன்னாள் போராளியான அவள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாள். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட அவள் சாதாரண கடைநிலை சிப்பாய் முதல் அதிகாரிகள் ஈறாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். அத்தகைய சித்திரவதை கூடமொன்றினில் தற்கொலை செய்யும் நோக்கினில், பிளேடுகளை அவள் நொருக்கி விழுங்கியிருந்தாள். தம்மீதான பழிகளிலிருந்து தப்பிக்க வைத்திய சாலையினில் அவள் அதே படையினராலேயே அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

மூடப்பட்ட அறையினுள் அவள் கூறிய அவலங்கள் எந்தவொரு பெண்ணும் உலகினில்; எங்குமே சந்தித்திராதவை. யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான பெண்களுள் அவளுமொருத்தி. மீண்டுமொருமுறை தற்கொலைக்கு முற்படலாமென்ற அச்சத்தினில் அவளை ஆறுதல் படுத்த முற்பட்டோம். இத்தகைய துன்பங்களை பொருட்படுத்த வேண்டாம். வீதியால் பயணிக்கும் போது காலில் பட்டுவிடும் மாட்டுச் சாணமாக இதனைக் கருதி கால்களைக் கழுவிவிட்டு பயணிப்போமென்றேன் நான்;. அவள் சிரித்தவாறு சொன்னாள், 'இல்லை அண்ணா, இப்போதைக்கு நான் சாகமாட்டேன். அங்கிருந்து தப்பிக்கவே பிளேடை உடைத்து விழுங்கினேன். ஆதை விட வேறு வழியிருக்கவில்லை.எனக்கு செய்வதற்கு நிரம்பவுமே கடமைகள் இப்போதைக்கு எஞ்சியிருக்கின்றதென கூறுகையினில் அவளது முகம் விகாரமடைந்திருந்தது.

அந்தப் பெண்மணிக்கு முப்பத்தைந்து முதல் நாற்பது வயதினுள் இருக்கும். வெறிச்சோடிய கண்கள் பல கதைகளைச் சொல்லின. போராளியான கணவன் உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட தெரியாது. தற்போது அவள் ஆறு மாத கர்ப்பிணி. வருடம் முழுவதும் ஊரிலுள்ள பாடசாலை மூடப்பட்டிருக்காதா என கடவுளிடம் கேட்பேன். பாடசாலை திறக்கும் நேரம் எனது பிள்ளைகள் வீட்டை விட்டு அங்கு போய்விடுவார்கள். அதுதான் சாக்கென வீட்டின் முன்னாலுள்ள காவலரணிலுள்ள சிங்கள சிப்பாய்கள் உள்ளே வந்து விடுகின்றார்கள். பிறக்கப் போகும் குழந்தைக்கு எவன் அப்பனென எனக்குத் தெரியாது. அந்த இராணுவ உடையில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருப்பதாகக் கூறும் அத்தாயும் தற்கொலை முயற்சியிலிருந்து மீட்கப்பட்டவரே.தனது பிள்ளைகளை என்ன முகத்துடன் சந்திக்கப்போகின்றேனென அழும் அத்தாய் தற்போது காப்பகமொன்றிற்கு அனுப்பப்பட்டுவிட்டார்.இப்போது தாயுமற்றுப்போயுள்ள அந்த பிள்ளைகள் விடுதியொன்றினில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போரின் பின்னரான, தமிழ்பெண்களது அவலங்கள் பற்றிப் பேசவும், எழுதவும் எங்களிடம் ஆயிரக் கணக்கான கதைகள் இருக்கின்றன. இவர்களுக்கு முறைதவறிப் பிறக்கப்போகும் குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களை விபச்சாரிகளாக்க உங்களால் முடியும். ஏனெனில் எங்களை முடக்கி விட உங்களில் பலர் பணம் வாங்கிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றீர்கள். ஏழ எழ முதுகினில் குத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குப் பின்னாலுள்ள இயக்குபவர்கள் பற்றியும் நாம் புரிந்தேயுள்ளோம். எனினும் நாம் இப்போதும் மௌனமாகவே இருப்போம்.ஏனெனில் நாம் இப்போது பலவீனமானவர்களாகியிருக்கின்றோம்.

வன்னியில் இறுதிக்கணம் வரை எழுதிக் கொண்டிருந்த, குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளன் அவன். இப்போது உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட எவருக்கும் தெரியாது. அவனது குடும்பத்திற்கும் அதே கதைதான். மாதாந்தம் கிடைக்கும் பத்தாயிரம் ரூபா (இந்திய ரூபா வெறும் 3,500) வருமானத்தில் தோளுக்கு மேல் வளர்ந்துவிட் மூன்று பிள்ளைகள், கணவனது வயோதிபத் தாய், யுத்தத்தின் போது விமானக் குண்டு வீச்சினில் உயிரிழந்த கணவரது தம்பியின் குடும்பம் அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்கிறாள். அவள் எவரிடமும் கையேந்தத் தயாராக இல்லை. புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவரது உதவியின் கீழ், பிள்ளைகளது படிப்பிற்கென உதவி வழங்க தேடிச் சென்ற போது கூட தீர்க்கமாக ஆராய்ந்தே உதவியை ஏற்றுக்கொண்டாள். அண்ணா யாரிடமும் கை நீட்டுவது அவருக்கு பிடிக்காதென்றாள் எட்டிப்பார்க்கும் கண்ணீர் துளிகளினூடே. அவளது அந்த வீம்பிற்கு நான் தலை வணங்கினேன்.

வன்னியில் செல்வச் செழிப்போடும், வசதிகளோடும் வாழ்ந்த அவர்களது தேவைகளை முழுமையாக தீர்த்து வைப்பதென்பது கடினமானதொன்றே. தசாப்பதங்களாக உழைத்து சேமித்து வைத்தவற்றை பிடிங்கியெறிந்து விட்டு, நடுத் தெருவில் விடப்பட்ட அவர்களை மீட்பது கடினமானதே. ஆனாலும் புலம்பெயர் தேசத்திலும், தாயகத்திலும், சிலவேளை தமிழகத்திலிருந்தும் கூட சாதாரணமானவர்களிடமிருந்தும், உணர்வாளர்களிடமிருந்தும் உதவி கிடைக்கின்றன. கிடைக்கின்ற உதவிகள் மேடை போட்டு சொல்லப்பட வேண்டியதில்லை. மேடை போட்டு சொல்லுபவர்கள் எங்குமே உதவ முன்வரவில்லை. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போதும் விழ விழ மீண்டெழுந்ததே எம்வரலாறு.அதுவே ஈழத்தமிழர்களுக்கான குணவியல்பும் கூட. முகத்திற்கு நேரே பிரச்சினைகள் வரும்போதும் பதகளிக்கும் அவர்கள், சிறிது காலத்தினுள்ளாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடுவது அவர்களது சிறப்பியல்பு. முள்ளிவாய்க்காலின் பின்னரும் வன்னியின் எழுச்சி ஒன்றும் இலங்கை அரசோ, சர்வதேசமோ கொண்டுவந்ததல்ல. சாதாரண புலம்பெயர் தமிழ் குடும்பங்களது உதவியும், தமது காலில் நிற்க முனைப்பு காட்டி நிற்கும் மக்களதும் கூட்டிணைவே அது.

முன்னாள் பெண் போராளிகள் மற்றும் தளபதிகளது மனைவியரது பாலியல் தொழில் என்னும் கட்டுக்கதை திட்டமிட்டு, இந்திய உளவு அமைப்பான 'றோ' வினால் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட ஒன்றே. அவர்களது நிழலாக செயற்படும் இந்திய செய்தி முகவர் மையமூடாக இக்கதைகள் முதலினில் அவிழ்த்து விடப்பட்டன. அதை இலங்கை அரசும் அதனது எடுபிடிகளும் பரவலாக உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். திட்டமிட்ட வகையினில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும், ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து அவர்களது உளவரணை சிதைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியே அது.

இத்தகைய பாரம்பரியத்தினில் இப்போது ஆனந்த விகடனும் தனது பங்கிற்கு கதையொன்றை அரங்கேற்றியுள்ளது. தமிழ் இணையங்கள் சிலவற்றில் யாழ் புகையிரத கட்டடப் பகுதியினில் விபச்சாரம் நடப்பதாக வெளிவந்த கதைகளை நம்பியும் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் கூட்டமைப்பினரையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையினில் தானே கேள்வி பதிலெனும் கட்டுக் கதையை அரங்கேற்றியிருக்கின்றார் அருளினியன் எனும் நபர். ஒரு மூத்த பெண் போராளி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை பேர் சொல்லி அழைக்கமாட்டாரென்பது அனைவருக்கும் தெரியும். பலவேளைகளில் அண்ணையாகவோ, அப்பாவாகவோ தான் அவர் இருந்து வந்துள்ளார்.

எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்து, உடைந்தழுகின்ற போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்கவே அவர்கள் பாடுபடுகின்றார்கள். அவர்களை உங்கள் எழுத்துக்களால் விபச்சாரிகளாக்காதீர்களென கெஞ்சிக் கேட்கின்றோம். தடுப்பு முகாம்களிலும், முள்ளிவாய்க்காளிலும் நடந்து முடிந்தவற்றை மறந்து புது வாழ்வொன்றை வாழ அவர்கள் முற்பட்டுள்ளார்கள். அதேவேளை காணாமல் போன தமது கணவரை. பிள்ளைகளை தேடியலையும் அவலமும் அவர்கள் வசமிருக்கின்றது..

கட்டுரையாளனான எனது தனிப்பட்ட கருத்து இதுவென உங்களினில் சிலர் சாயம் பூச முன்னுக்கு வருவீர்களென தெரிந்தேயுள்ளேன். அதானாலேயே யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை தொடர்பான விமர்சனங்களையும் இணைத்தேயிருக்கின்றேன்.

ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப்போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.

இ.தயாபரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

தலைவர் - நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு

'நாங்;கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையினில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது.எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டேயிருக்கின்றது.

ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர்

உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்

'எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.

ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்

நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.

எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி

'தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம்;. அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும்.அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல.

Ratnam Thayaparanabout an hour ago · முகனூலில் இருந்து

அங்கே உள்ள மக்களின் கதைகளை கேட்டு அதன் படி புனையப்பட்டு ஒரு பேட்டியாகவே எனக்கும் இது படுகிறது.

ஆயினும் இப்படியான ஒரு நிலை அங்கே இல்லை என்று யாரும் வாதிடவும் முடியாது.

[size=4]அப்படி ஒரு நிலை அங்கிருந்தால் அதற்கான மூல காரணங்கள் என்ன?[/size]

[size=4]எவ்வாறு அவற்றை முறியடிக்கலாம் எனவும் பார்க்கவேண்டும்.[/size]

[size=4]ஆனந்த விகடனுக்கு மறுப்பு - எமக்குத் தேவை மீன் துண்டுகளல்ல, மீன்பிடிக்கும் உரிமை!![/size]

ஆனந்த விகடனில் வெளியாகி இருக்கும் பேட்டியை, ஏற்கனவே டெசோ மாநாட்டில் மையப்படுத்தப்பட்ட மறுவாழ்வு, மறு சீரமைப்பு என்பதன் தொடர்ச்சியாக‌வே எங்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடிகிற‌து.

விடுதலை கோரிக்கை என்பது எவ்வகையிலும் உயிர்ப்போடு இருக்கக் கூடாது என்பதற்காக நடைபெறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியை விகடன் செய்திருப்பதுதான் வேதனை.

இன்று உலக நாடுகள் 'தமிழீழ விடுதலை' என்கிற கோரிக்கையை எப்படி புதைப்பது என்று திணறுகிறார்கள்... புலம்பெயர் அமைப்புகளை மனித உரிமை என்று குழப்பினார்கள்.. தமிழக அரசியல் களத்தில் அப்படியான ஒரு தொண்டு நிறுவன வேலையை செய்ய இந்திய-இலங்கை-அமெரிக்க அரசுகள் முயன்றன.

1. முதல் கட்டமாக 2010 ஜூன் மாதம் 30ம் தேதியில் நடிகை அசினை வைத்து கண்சிகிச்சை முகாம் மற்றும் தொண்டு நிறுவன உதவிகள் என்றார்கள். நடிகர் சல்மான் கானை, விவேக் ஓபராயை வைத்து அவ்வாறே பேசினார்கள். (அசின் பங்கு பெற்ற தொண்டு நிறுவனம் ராஜபக்சே மனைவியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் யாழ்பாணம் சென்று இறங்கினார் அசின்). அசினை வைத்து தமிழக திரைப்படத் துறையை சேர்ந்தவர்களை மறுவாழ்வு தொண்டு நிறுவன வேலைகளில் இழுத்து, தமிழீழ கோரிக்கையை நீர்த்துப் போக வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதை முன்னின்று நகர்த்தியவர் நடிகர் சரத்குமார். பின்பு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தோம். அசினின் கண் சிகிச்சை முகாமில் நடந்த அவலத்தினை மே 17 இயக்கம் அம்பலப்படுத்த, இந்தத் திட்டம் உடைந்தது.

asin_rajapaksa_wife.jpg

2. பாடகர் ஹரிஹரனை கொழும்பு நகரின் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாட்டுக் கச்சேரி நடத்த வைத்து, அதன் மூலமாக இலங்கையில் சிங்கள அரசின் ஆட்சியில் தமிழர்களும் நிறைவான வாழ்க்கை வாழ்வதாக இலங்கை அரசு நிறுவ முயன்றது. இதனாலேயே மே பதினேழு இயக்கம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் முயற்சியை மேற்கொண்டது. அதனை தோழர் தாமரையின் முயற்சியும், இயக்குனர் அமீரின் கடிதமும் வெற்றியாக மாற்றின‌. இவ்வாறு தொடர்ச்சியாக தமிழகத்தின் தமிழீழ ஆதரவு தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை முறியடித்து வருவதைத்தான், இந்தப் பேட்டி மூலம் கொச்சைப்படுத்த முயற்சி செய்வதாகக் காண்கிறேன்.

3. பிறகு ஐ. நா அறிக்கையின் மூலமாக இனப்படுகொலையைம், விடுதலைக் கோரிக்கையும் சர்வதேச விவாதங்களில் மறைக்கச் செய்யப்பட்டது. உடனடியாக இலங்கை LLRC அமைத்தது. இதற்கு மேற்குலகமும், இந்தியாவும் பெரும் உதவியை செய்தன‌. அந்த அறிக்கை-விசாரணையில் மறுசீரமைப்பு மையப்படுத்தப்பட்ட்து. மறுசீரமைப்பிற்கு சர்வதேசம் உதவி செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை இலங்கை முன்வைத்தது. சீனா ஆதரித்தது. இந்தியா முன்மொழிந்தது. மேற்குலகம் மெளனமாக ஆதரித்தது.

4. மறுசீரமைப்பு என்பது எதற்காக ?... விடுதலைக் கோரிக்கையை கைவிடச்செய்தல் என்பதே மறுசீரமைப்பின் முதல் படி. சர்வதேச புவிசார் அரசியல், புவிசார் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு கடற்கரையை வர்த்தக, பொருளாதார, ராணுவ கேந்திரமாக அமெரிக்காவும், இந்தியாவும் மாற்றுவது என்பது நடக்க வேண்டுமானால் மறுசீரமைப்பு நடைபெறுதலும், விடுதலை என்கிற கோரிக்கை கைவிடப்படுதலும் இலங்கை மைய நீரோட்டத்தில் தமிழர்கள் இணைவதும் அவசியம்.

5. இதை செய்வதற்குத் தேவையானது- வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்புகள். வேலைவாய்ப்பு அங்கு இல்லை என்பதன் மூலமாக பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவது. அதாவது ராம்கோ, டிவிஎஸ், அசோக் லேலண்ட் நிறுவனங்களுக்காக‌ தமிழர்களின் நிலங்களைப் பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது. அதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக‌ அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் சாலை-ரயில்- நீர் வசதிகளை செய்தன. காங்கேசன் துறைமுகம், ரயில் வசதித் திட்டங்களை இந்தியாவும் சீனாவும் பகிர்ந்தன.

6. அமெரிக்காவின் தொண்டு நிறுவனம் யு.எஸ்.எய்ட் மூலமாக அங்கே பின்னலாடை நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டன. 2012 ஜூலையில் இரண்டாவது பின்னலாடை நிறுவனத்தினை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் மூலம் கிழக்குப் பகுதியில் திறந்தது. இது 4-6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதில் தமிழர்கள் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். இத‌ற்கிடையே, திரிகோண‌ம‌லையில் ரூ.20000 கோடி செல‌வில் பெட்ரோலிய‌ சுத்திக‌ரிப்பு ஆலையை அமைக்க‌வுள்ள‌தாக‌ இந்திய‌ன் ஆயில் கார்ப்ப‌ரேஷ‌ன் க‌ட‌ந்த‌ ஜூலை மாத‌ம் அறிவித்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

7. போரில் சின்னாபின்னமாக்கப்பட்ட தமிழர்களின் திறமைகளை கூர்மையாக்குவது, அவர்களை மனரீதியாக தயார் செய்வதுமான வேலைகளை யு.எஸ்.எய்ட் (USAID) செய்து கொண்டிருக்கிறது. இதைத் தான் மறுசீரமைப்பிற்கான அடிப்படை வேலைகள் என்கிறார்கள். இந்தப் பயிற்சியின்போது அம்மக்கள் அரசியல் கோரிக்கையிலிருந்து விடுவிக்கப்படுதல் நடைபெறும். மேலும் அவர்களை பிழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்த வைப்பது, அவர்களது பாரம்பரியத் தொழில்களில் இருந்து வெளியேற்றி நகரமயமான வேலைவாய்ப்பிற்குள் தள்ளுவது என பல்வேறு திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஒரு தென்கொரியாவினைப் போலவும், பிலிப்பைன்ஸ் போலவும் அமெரிக்காவின் ராணுவ கேந்திரமாக மாற்றி, அமெரிக்க-இந்திய-சீன சந்தையை நிறுவி உலகமயமாக்கலின் மையத்திற்கு இழுப்பதும், விடுதலைக் கோரிக்கையை சுத்தமாக துடைப்பதும் இந்த திட்டத்தின் அடிப்படையாகும்.

8. rajapaksa_450.jpgகடந்த 2012, ஜூன் ஜூலை மாதத்தில் மறுசீரமைப்பினைப் பற்றிய தீவிரமான விவாதங்களை மேற்குலகமும், ஐ.நா.வும் பேசியது. மறுசீரமைப்பிற்கான ஐ.நா.வின் சர்வதேசத் தலைவர் ஜான், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் மறுசீரமைப்பு உலகின் மற்ற பகுதிகளை விட மிகச் சிறப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதாகச் சொன்னார்.

9. ஆனால் சர்வதேசம்-இந்தியா-இலங்கையின் மிகப்பெரும் பிரச்சனை தமிழகத்தில் இருந்து எழும் நெருக்கடி. 2009க்குப் பிறகு, தமிழீழப் போராட்டத்திற்கு தமிழகம் நேரடி பங்களிப்பினை வழங்கமுடியாது எனினும், அரசியல் கோரிக்கையினை மிகவும் உயிர்ப்புடன் வைக்க பெரிதும் துணை நின்றது; நிற்கிறது. ஓர் இனம் இரண்டு நாடுகளில் இருக்கும்போது ஒடுக்கப்படும் தனது சகோதரர்களுக்காக அதன் அரசியல் கோரிக்கையை மற்றொரு நாட்டில் இருப்பவர்கள் உயர்த்திப் பிடித்தல் என்பதே ஒரு பெரும் வரலாற்று பங்களிப்பாகும். மறுசீரமைப்பில் தமிழகத்தின் தமிழீழ ஆதரவு தலைவர்களோ, இயக்கங்களோ பங்களிப்பது தடுக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் இருந்து உதவி பெற முனைந்தவர்கள் கடத்தப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் இருந்ததை கடந்த காலத்தில் பார்த்து இருக்கிறோம். இந்திய அரசின் மறுசீரமைப்புப் பணிகளில் தமிழகத்தின் பரிசீலனை இல்லாமலேயே நடக்கிறது. ஏன் தமிழகத்தின் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல், குஜராத் போன்ற வடமாநில நிறுவனங்களுக்கே அனுமதி அளிக்கபட்டன.

10. மேலும், இலங்கை விவசாய உற்பத்தியின் தொட்டிலாக இருக்கும் வன்னிப்பகுதியில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தவும், மீதமிருக்கும் பெண்கள்-குழந்தைகளை விவசாயக் கூலிகளாக மாற்றி, பெரும் விளைச்சலைப் பெறுவதற்கான உதுறு-வசந்தியா( வடக்கின் வசந்தம்) திட்டம் இந்தியாவின் அழிவு விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனால் நடத்தப்பட்டது. 2010-2011இல் இலங்கை உணவு உற்பத்தியில் சுயசார்பு நிலையை அடையும் வகையில் இவர் தமிழீழ மக்களைப் பயன்படுத்தி செயல்படுத்திக் காட்டினார். மூன்று மடங்கிற்கு நெருக்கமாக விளைச்சல் தமிழர்கள் பகுதியில் அதிகரித்தது என 2011 அக்டோபர்- நவம்பரில் அறிவித்தார். மறு சீரமைக்க இயலாத வறுமைக் குடும்பங்கள் விவசாய பண்ணைக் கூலிகளாக மாற்றப்பட்டார்கள். நிலம் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டது. பின் இது இந்திய பெரு நிறுவனங்கள்- வணிகர்கள், சிங்கள வணிகர்-விவசாயிகளுக்கு மாற்றிக் கொடுக்கப்படுகிறது அல்லது விற்கப்படுகிறது. ஆக தமிழர்களின் அரசியல் கோரிக்கை மையப்படுத்திய நிலம் இப்போது கூலிகளால் நிரப்பப்படுகிறது.

11. இந்த இடத்தில்தான் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இறப்பும், அதைச் சுற்றிய மாயையை உடைத்தல் என்கிற பாணியில் விடுதலைக் கோரிக்கையை பின்னுக்குத் தள்ளுதல் என்பது நடக்கிறது. இன்றும் அன்றும் பிரபாகரன் என்பது விடுதலை அரசியலை முன்னிலைப்படுத்தும் அடையாளமாகவும், குறியீடாகவும் நிற்பதை உடைக்கவேண்டும் என்பது இவர்களது ஆகப்பெரும் சவால். அதாவது பிரபாகரன் என்கிற பூதம் இவர்களை(சர்வதேசம்-இந்திய-இலங்கை அரசு வர்க்கம்) விரட்டுவதை நிறுத்த வேண்டும். இதைத் தான் தன்னாலான பாணியில் காலச்சுவடும், அ.மார்க்ஸும் செய்து வருகிறார்கள்.

12. மாவீரர் கல்லறையை அழித்தல், புலிகளது அடையாளத்தினை அழித்தல், தமிழர்கள் மிகக் குறுகிய காலமென்றாலும் மிக மகிழ்ச்சியுடனும், சுயசார்புடனும் வாழ்ந்த ஆட்சியை மறக்கடித்தல் மூலமாக விடுதலையை நினைவுபடுத்தலை அழிக்கும் அரசியல் நடைபெறுகிறது. இன்றைய நிதர்சனமாக வந்திறங்கி இருக்கிற இந்திய-அமெரிக்க நிறுவன‌ங்களுக்கு வேலை செய்து பிழைத்தல் என்பதை முன்னிலைப்படுத்தவே இந்த முயற்சிகள் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

13. மறுசீரமைப்பு முன்னிலைப்படுத்தலை தமிழகத் தமிழர்களிடத்தே குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது இலங்கை ஆதரவு சக்திகளுக்கு அவசியம். அதை மிக அழகாக நிதானமாக கொண்டு வருகிறார்கள். அதன்படியே டெசோ மாநாட்டு கோரிக்கையானது தமிழீழ வாழ்வுரிமை மாநாடாக மாற்றப்பட்டது. அதுவும் குறிப்பாக இந்தியாவின் வர்த்தகக் கண்காட்சி இலங்கையில் ஆகஸ்டு 5ம் தேதி நடப்பதை கணக்கில் கொண்டு கோரிக்கை கைவிடப்பட்டது மட்டுமல்ல, மாநாடே முன்னர் திட்டமிடப்பட்டிருந்த ஆகஸ்ட்5, 2012இல் இருந்து தள்ளி ஆகஸ்ட்12ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மறுசீரமைப்பினைப் பேசிய அந்த மாநாடு, விடுதலைக் கோரிக்கையை கவனமாகத் தவிர்த்தது என்பதை நாம் மறக்க முடியாது.

14. டெசோ மாநாட்டினை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை ’செபா’ (சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்- இந்திய நிறுவனத்திற்கு இலங்கையை திறந்து விடுதல்) வர்த்தக ஒப்பந்தத்தினைக் காட்டியது. டெசோ மாநாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராமேஸ்வரத்தில் இந்திய கப்பற்படையின் தளத்தினை அமைத்தல் என்கிற தீர்மானம் விசமாமனது மட்டுமல்ல, இந்திய உளவுத்துறை என்ன விரும்புகிறதோ அதையே இந்தத் தீர்மானம் முன்வைக்கிறது. மன்னார்-பாக் கடற்பகுதியை மீனவர்கள் அற்றதாக மாற்றி ராணுவ மையமாக மாற்றுவதும், கார்ப்பரேட் நிறுவனத்தின் மீன்பிடித்தல் தொழிலை கொண்டுவருவதற்கும் இது உதவி செய்யும். அதுமட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் செயற்பாட்டாளார்கள் ஒருவேளை தமிழகம் நோக்கி தப்பி வரும் பட்சத்தில் வரும்காலத்தில் அதையும் கடற்படை மூலம் தடுத்திடமுடியும். ஆக விடுதலைப் போராட்டம் நடப்பதை எப்படியாகினும் தடுத்தல் என்பது இந்த முற்றுகை மூலம் சாத்தியமாகும்.

teso_meeting_640.jpg

15. இந்தப் பேட்டியில் குறிப்பிடப்படும் செய்தியானது தமிழர்கள் வேலைவாய்ப்பின்றி வாழ்கிறார்கள் என்பதை தமிழீழ ஆதரவு மனநிலையிலிருந்து பேசுகிறார்கள். அதாவது பிரபாகரனை உயர்த்திப் பிடித்தவாறே பேசுகிறார்கள். முன்னர் புலிகளை விமர்சித்து இதே வாசகத்தினைப் பேசியது தோற்கவே தற்போது யுக்தி மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பேட்டிகளில் எங்குமே தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்த உரிமை மீறல்கள் அரசியல் ரீதியாக கேள்விகள் கேட்கப்படவில்லை; கேட்கப்படப் போவதும் இல்லை. அங்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தால் அங்கு விடுதலை கோரிக்கைக்கான அவசியம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே அர்த்தம். அதை கவனமாகத் தவிர்த்து தமிழீழ மக்களை பிச்சை எடுக்க வைக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பிச்சைகளல்ல. பசிக்கு ஒரு துண்டு மீன் அல்ல, மாறாக அவர்களது சொந்த குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை. அது பிச்சையின் மூலம் சாத்தியப்பட முடியாது.

16. தமிழீழப் பகுதியை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட தெற்கு சூடானுக்கு கொடுக்கப்பட்ட ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பு ஈழத்தில் ஏன் நடத்தப்படவில்லை என பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பவில்லை. பேட்டியாளரும் ஒவ்வொருமுறையும் நிதர்சனத்தினை அம்பலப்படுத்தும் கேள்விகளை வைக்காமல் பச்சாதாபத்தினை வெளிப்படுத்தும் கேள்விகளை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார். எனவே தான் இந்தப் பேட்டியை நேர்மையானதாக பார்க்க முடியவில்லை. கட்டுரையின் நோக்கமே தமிழக ஆதரவாளர்களை நோக்கி வைக்கப்படும் பச்சாதாப சிந்தனையோட்டமே… தமிழகத்தில் தமிழீழ அரசியல் கோரிக்கையை கைவிட்டு மறுசீரமைப்பிற்கும், வாழ்வாதாரத்திற்கும் பேசுங்கள், விடுதலைக் கோரிக்கையை கைவிடுங்கள் என்பதே. மறுசீரமைப்பிற்கு ஐ.நாவே அனுமதிக்கப்படாதபோது, நாம் எங்கே அனுமதிக்கப்படப் போகிறோம்?

17. மே மாதம் 2009க்குப் பிறகு 15,000 தமிழர்களைக் காணவில்லை என செஞ்சிலுவைச் சங்கமே அச்சம் தரும் அறிக்கை அளித்துள்ளது. அதைப்பற்றி எப்போது பேசப் போகிறோம்? எப்போது பத்திரிக்கை தோழர்கள் இந்த நெருக்கடிக் கேள்விகளை கேட்கப் போகிறார்கள் என்பதே நம‌து கவலை

18. நவம்பர் 01, 2012, ஐ.நா.வின் மனித உரிமை கமிசனில் வந்த மனித உரிமைக்கான பரீசீலனை விவாதத்தின்போது இலங்கை கேள்வி கேட்கப்படும் நேரத்தில் இந்தியாவில் இலங்கைக்கு ஆதரவாக கடுமையான பிரச்சாரங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

அ. இந்துப் பத்திரிக்கை கடந்த வாரம் முன்பக்கத்தில் தயாமாஸ்டரிடம் பேட்டி என்று புலிகளை எதிர்த்து, விடுதலைக் கோரிக்கையை கைவிடுதலின் அவசியத்திற்கான பேட்டியை வெளியிட்டது. இந்து நாளிதழை ஆதரித்து அ.மார்க்ஸ் கட்டுரைகள் எழுதுவது மறுபுறம்.

ஆ. ரீடிஃப்.காம் (rediff.com) இணையத்தில் இலங்கை சுற்றுலாவிற்காக சிறப்பு புகைப்படத் தொகுப்பும், பயணக்கட்டுரையும் வெளியிடப்பட்டன.

இ. இதே போன்றதொரு தொனியில் தான் சில மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறையில் ‘உண்மையைத் தேடி’ என்கிற ஆவணப்படம் வெளியாகியது. இலங்கை அரசினை இது எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. மாறாக புலிகள் மனித உரிமை மீறல்களைச் செய்தார்கள் என்று கட்டமைக்க முயன்றது.

ஈ. இது போலவே விகடனிலும் இப்படியான தமிழீழ மக்களின் அவலத்தினை மையப்படுத்தி, இலங்கை அரசினை நோக்கிய கேள்விகளை கவனமாக தவிர்த்து, தமிழக அரசியல் செயற்பாட்டாளர்களைக் கேள்வி கேட்டு கட்டுரை வெளியிடப்படுகிறது.

19. ஆக இது போன்ற கட்டுரைகளும், பிரச்சாரங்களும் மிகக் கவனமாக, நுணுக்கமாக நமது தளத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்கள் எவரும் சர்வதேச விசாரணையைப் பற்றி பேசுவதில்லை. சர்வதேச ராணுவம் தமிழீழப்பகுதியில் காவல் காக்க வேண்டும் எனக் கேட்பதில்லை. துன்புறும் தமிழர்களைப் பற்றி பேசும் இவர்கள் சட்ட ஒழுங்கையும், வாழ்வுரிமைப் பாதுகாப்பையும், அரசியல் கோரிக்கையையும் பாதுகாக்க ஐ.நா.வின் தலையீட்டினைக் கேட்பதில்லை. அல்லது குறைந்தபட்சம் சர்வதேச இடதுசாரி சிந்தனையாளர்களை நோக்கி கேள்விகள் வைப்பதோ, கோரிக்கைகள் வைப்பதோ இல்லை. தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாக செயற்பாட்டாளர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர்கள், இந்த அவலங்களை விளக்கி அரசியல் விடுதலை பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது இல்லை. ஆனால் இவர்கள் தங்களை தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவர்கள் என்று பேசுகிறார்கள்; ஒருபோதும் இலங்கை அரசினை-இந்திய அரசினை- அமெரிக்காவினை நோக்கிய ஆழமான‌ கேள்விகளை, எட்வர்ட் செயித் பாலஸ்தீனத்திற்காக பேசியதைப் போல பேசுவதோ எழுதுவதோ கிடையாது.

20. தோழர்களே நம்மை குழப்புவதே இந்த கட்டுரைகளின் நோக்கம். தமிழீழத்தில் அவலங்கள் நிகழ்வதை நாமும் பேசுகிறோம். அதற்கான தீர்வாக நாம் சர்வதேசப் படைகள் அனுப்பப்படவேண்டும் என்கிறோம். ஒட்டுக்குழுக்களும், ஆக்கிரமிப்புப் படைகளும் வெளியேற்றப்படுதலும் அவசியம் என்கிறோம். இந்தியாவின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பகவதி அவர்கள் தலைமை தாங்கிய சர்வதே நீதிபதிகள் குழு 'இலங்கையில் நீதித் துறை மரித்து விட்டது' என்று கூறியதை நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

21. இலங்கையில் நீதி கிடைக்காது. எனவே தான் நாம் சர்வதேச விசாரணையின் மூலம் குற்றவாளி விசாரிக்கப்படுதலும் தண்டிக்கப்படுதலும் அவசியம் என்கிறோம். பாதிக்கப்பட்ட‌வர்களுக்கான நீதியாக ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிறோம். குற்றவாளிக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவனுக்கு அவன் கோரிய அரசியல் விடுதலையான தமிழீழ விடுதலை. இதுவே அரசியல் நீதி, இதுவே சர்வதேச நீதி, இதுவே மனித நீதி. இதைத் தவிர்த்து எதுவும் 'ஓநாய்கள் ஆட்டிற்கு வழங்கும் நீதியே'

22. நம்முடைய தேவை நமது சொந்த குளத்தில் மீன் பிடி உரிமை, பிச்சைகளாக கிடைக்கவேண்டிய மீன் துண்டுகள் அல்ல. சுதந்திரத் தமிழீழத்தினை சர்வதேச தமிழ்ச் சமூகம் தூக்கி நிறுத்தும். அங்கு சென்று தமது உழைப்பின் மூலம் உன்னதமான ஆட்சியையும், நாட்டினையும் தமிழர்கள் உருவாக்குவார்கள். அதை புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், மலேசிய-பர்மா-சிங்கப்பூர்-பிஜி-கரீபிய-தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமிழீழத் தமிழர்களுடன் கைகோர்த்து செய்து காட்டுவார்கள். நாம் பெற இருப்பது நாடு. அதில் சமரசமில்லை.

நாம் வெல்வோம்!!

- திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம் ( thiruja@yahoo.com)

http://www.keetru.co...cles&Itemid=264

Edited by பூச்சாண்டி

[size=4]இதுவரை காலமும் விகடன் மீது இருந்த நம்பிக்கை சற்று உடைந்துவிட்டது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் ஆனந்தவிகடனும்,அருள் எழியனும் எழுதின உசுப்பேத்தின கட்டுரையை படித்த ஆட்கள் இப்ப தங்களுக்கு கட்டுரை பாதகமாய் வந்தவுடன் கட்டுரை பொய்யாம்...இளையராஜாவை எதிர்த்து முடிந்திட்டுது இனி மேல் விகடனை எதிர்ப்போம் :(

[size=4]அந்த அறையினுள் வெறும் நிசப்தமே எஞ்சியிருந்தது. அவள் அழுதுமுடியட்டுமெனக் காத்திருந்தோம். தற்கொலை முயற்சியொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட அவள் மீண்டும் அவ்வாறான முயற்சியொன்றினில் ஈடுபடலாமென்ற அச்சம் வைத்திய நிபுணரிடமிருந்தது. முன்னாள் போராளியான அவளது எதிர்காலம் பற்றிப்பேச ஊடகவியலாளனான என்னையும் அவர் அழைத்திருந்தார். முன்னாள் போராளியான அவள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாள். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட அவள் சாதாரண கடைநிலை சிப்பாய் முதல் அதிகாரிகள் ஈறாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். அத்தகைய சித்திரவதை கூடமொன்றினில் தற்கொலை செய்யும் நோக்கினில், பிளேடுகளை அவள் நொருக்கி விழுங்கியிருந்தாள். தம்மீதான பழிகளிலிருந்து தப்பிக்க வைத்திய சாலையினில் அவள் அதே படையினராலேயே அனுமதிக்கப்பட்டிருந்தாள்.[/size]

[size=4]மூடப்பட்ட அறையினுள் அவள் கூறிய அவலங்கள் எந்தவொரு பெண்ணும் உலகில்; எங்குமே சந்தித்திராதவை. யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான பெண்களுள் அவளுமொருத்தி. மீண்டுமொருமுறை தற்கொலைக்கு முற்படலாமென்ற அச்சத்தில் அவளை ஆறுதல் படுத்த முற்பட்டோம். இத்தகைய துன்பங்களை பொருட்படுத்த வேண்டாம். வீதியால் பயணிக்கும் போது காலில் பட்டுவிடும் மாட்டுச் சாணமாக இதனைக் கருதி கால்களைக் கழுவிவிட்டு பயணிப்போமென்றேன் நான்;. அவள் சிரித்தவாறு சொன்னாள், 'இல்லை அண்ணா, இப்போதைக்கு நான் சாகமாட்டேன். அங்கிருந்து தப்பிக்கவே பிளேடை உடைத்து விழுங்கினேன். அதை விட வேறு வழியிருக்கவில்லை. எனக்கு செய்வதற்கு நிரம்பவுமே கடமைகள் இப்போதைக்கு எஞ்சியிருக்கின்றதென கூறுகையில் அவளது முகம் விகாரமடைந்திருந்தது.[/size]

[size=4]அந்தப் பெண்மணிக்கு முப்பத்தைந்து முதல் நாற்பது வயதினுள் இருக்கும். வெறிச்சோடிய கண்கள் பல கதைகளைச் சொல்லின. போராளியான கணவன் உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட தெரியாது. தற்போது அவள் ஆறு மாத கர்ப்பிணி. வருடம் முழுவதும் ஊரிலுள்ள பாடசாலை மூடப்பட்டிருக்காதா என கடவுளிடம் கேட்பேன். பாடசாலை திறக்கும் நேரம் எனது பிள்ளைகள் வீட்டை விட்டு அங்கு போய்விடுவார்கள். அதுதான் சாக்கென வீட்டின் முன்னாலுள்ள காவலரணிலுள்ள சிங்கள சிப்பாய்கள் உள்ளே வந்து விடுகின்றார்கள். பிறக்கப் போகும் குழந்தைக்கு எவன் அப்பனென எனக்குத் தெரியாது. அந்த இராணுவ உடையில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருப்பதாகக் கூறும் அத்தாயும் தற்கொலை முயற்சியிலிருந்து மீட்கப்பட்டவரே. தனது பிள்ளைகளை என்ன முகத்துடன் சந்திக்கப் போகின்றேனென அழும் அத்தாய் தற்போது காப்பகமொன்றிற்கு அனுப்பப்பட்டுவிட்டார். இப்போது தாயுமற்றுப்போயுள்ள அந்த பிள்ளைகள் விடுதியொன்றினில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[/size]

[size=4]போரின் பின்னரான, தமிழ்பெண்களது அவலங்கள் பற்றிப் பேசவும், எழுதவும் எங்களிடம் ஆயிரக் கணக்கான கதைகள் இருக்கின்றன. இவர்களுக்கு முறைதவறிப் பிறக்கப்போகும் குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களை விபச்சாரிகளாக்க உங்களால் முடியும். ஏனெனில் எங்களை முடக்கி விட உங்களில் பலர் பணம் வாங்கிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றீர்கள். எழ எழ முதுகினில் குத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குப் பின்னாலுள்ள இயக்குபவர்கள் பற்றியும் நாம் புரிந்தேயுள்ளோம். எனினும் நாம் இப்போதும் மௌனமாகவே இருப்போம். ஏனெனில் நாம் இப்போது பலவீனமானவர்களாகி இருக்கின்றோம்.[/size]

[size=4]வன்னியில் இறுதிக்கணம் வரை எழுதிக் கொண்டிருந்த, குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளன் அவன். இப்போது உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட எவருக்கும் தெரியாது. அவனது குடும்பத்திற்கும் அதே கதைதான். மாதாந்தம் கிடைக்கும் பத்தாயிரம் ரூபா (இந்திய ரூபா வெறும் 3,500) வருமானத்தில் தோளுக்கு மேல் வளர்ந்துவிட் மூன்று பிள்ளைகள், கணவனது வயோதிபத் தாய், யுத்தத்தின் போது விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த கணவரது தம்பியின் குடும்பம் அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்கிறாள். அவள் எவரிடமும் கையேந்தத் தயாராக இல்லை. புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவரது உதவியின் கீழ், பிள்ளைகளது படிப்பிற்கென உதவி வழங்க தேடிச் சென்ற போது கூட தீர்க்கமாக ஆராய்ந்தே உதவியை ஏற்றுக்கொண்டாள். அண்ணா யாரிடமும் கை நீட்டுவது அவருக்கு பிடிக்காதென்றாள் எட்டிப்பார்க்கும் கண்ணீர் துளிகளினூடே. அவளது அந்த வீம்பிற்கு நான் தலை வணங்கினேன்.[/size]

[size=4]வன்னியில் செல்வச் செழிப்போடும், வசதிகளோடும் வாழ்ந்த அவர்களது தேவைகளை முழுமையாக தீர்த்து வைப்பதென்பது கடினமானதொன்றே. தசாப்பதங்களாக உழைத்து சேமித்து வைத்தவற்றை பிடிங்கியெறிந்து விட்டு, நடுத் தெருவில் விடப்பட்ட அவர்களை மீட்பது கடினமானதே. ஆனாலும் புலம்பெயர் தேசத்திலும், தாயகத்திலும், சிலவேளை தமிழகத்திலிருந்தும் கூட சாதாரணமான வர்களிடமிருந்தும், உணர்வாளர்களிட மிருந்தும் உதவி கிடைக்கின்றன. கிடைக்கின்ற உதவிகள் மேடை போட்டு சொல்லப்பட வேண்டியதில்லை. மேடை போட்டு சொல்லுபவர்கள் எங்குமே உதவ முன்வரவில்லை. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போதும் விழ விழ மீண்டெழுந்ததே எம்வரலாறு. அதுவே ஈழத்தமிழர்களுக்கான குணவியல்பும் கூட. முகத்திற்கு நேரே பிரச்சினைகள் வரும்போதும் பதகளிக்கும் அவர்கள், சிறிது காலத்தினுள்ளாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடுவது அவர்களது சிறப்பியல்பு. முள்ளிவாய்க்காலின் பின்னரும் வன்னியின் எழுச்சி ஒன்றும் இலங்கை அரசோ, சர்வதேசமோ கொண்டுவந்ததல்ல. சாதாரண புலம்பெயர் தமிழ் குடும்பங்களது உதவியும், தமது காலில் நிற்க முனைப்பு காட்டி நிற்கும் மக்களதும் கூட்டிணைவே அது.[/size]

[size=4]முன்னாள் பெண் போராளிகள் மற்றும் தளபதிகளது மனைவியரது பாலியல் தொழில் என்னும் கட்டுக்கதை திட்டமிட்டு, ஒரு தரப்பினரால் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட ஒன்றே. அவர்களது நிழலாக செயற்படும் செய்தி முகவர் மையமூடாக இக்கதைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. அதை இலங்கை அரசும் அதனது எடுபிடிகளும் பரவலாக உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். திட்டமிட்ட வகையில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும், ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து அவர்களது உளவரணை சிதைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியே அது.[/size]

[size=4]இத்தகைய பாரம்பரியத்தில் இப்போது இந்திய இதழ் ஒன்றும் தனது பங்கிற்கு கதையொன்றை அரங்கேற்றியுள்ளது. தமிழ் இணையங்கள் சிலவற்றில் யாழ் புகையிரத கட்டடப் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக வெளிவந்த கதைகளை நம்பியும் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் கூட்டமைப்பினரையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையில் தானே கேள்வி பதிலெனும் கட்டுக் கதையை அரங்கேற்றியிருக்கின்றார் ஒரு நபர். ஒரு மூத்த பெண் போராளி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை பேர் சொல்லி அழைக்கமாட்டாரென்பது அனைவருக்கும் தெரியும். பலவேளைகளில் அண்ணையாகவோ, அப்பாவாகவோ தான் அவர் இருந்து வந்துள்ளார்.[/size]

[size=4]எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்து, உடைந்தழுகின்ற போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்கவே அவர்கள் பாடுபடுகின்றார்கள். அவர்களை உங்கள் எழுத்துக்களால் விபச்சாரிகள் ஆக்காதீர்களென கெஞ்சிக் கேட்கின்றோம். தடுப்பு முகாம்களிலும், முள்ளிவாய்க்காளிலும் நடந்து முடிந்தவற்றை மறந்து புது வாழ்வொன்றை வாழ அவர்கள் முற்பட்டுள்ளார்கள். அதேவேளை காணாமல் போன தமது கணவரை, பிள்ளைகளை தேடியலையும் அவலமும் அவர்கள் வசமிருக்கின்றது..[/size]

[size=4]கட்டுரையாளனான எனது தனிப்பட்ட கருத்து இதுவென உங்களில் சிலர் சாயம் பூச முன்னுக்கு வருவீர்களென தெரிந்தேயுள்ளேன். அதானாலேயே யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை தொடர்பான விமர்சனங்களையும் இணைத்தேயிருக்கின்றேன்.[/size]

[size=4]ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்[/size]

[size=4]ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப் போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.[/size]

[size=4]இ.தயாபரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்[/size]

[size=4]தலைவர் - நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு[/size]

[size=4]'நாங்;கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது. எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றது.[/size]

[size=4]ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர் - உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்[/size]

[size=4]'எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களை எல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.[/size]

[size=4]ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்[/size]

[size=4]நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.[/size]

[size=4]எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி[/size]

[size=4]'தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம்;. அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும்.அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.[/size]

[size=4]ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல. [/size]

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85012/language/ta-IN/article.aspx

இவ்வளவு நாளும் ஆனந்தவிகடனும்,அருள் எழியனும் எழுதின உசுப்பேத்தின கட்டுரையை படித்த ஆட்கள் இப்ப தங்களுக்கு கட்டுரை பாதகமாய் வந்தவுடன் கட்டுரை பொய்யாம்...இளையராஜாவை எதிர்த்து முடிந்திட்டுது இனி மேல் விகடனை எதிர்ப்போம் :(

இதை எழுதியவர் விகடனில் வழமையாக கட்டுரைகள் எழுதும் அருள் எழிலன் இல்லை அருளினியன் புதியவர் இலங்கையை சேர்ந்தவர் இப்பிடியான சம்பவங்கள் நடக்கவில்லை என சொல்லவில்லை அருளினியனின் கட்டுரை என்பதால் கற்பனை கொஞ்சம் அதிகமாக இருக்க சாத்தியம் உண்டு :wub:

[size=4]இதுவரை காலமும் விகடன் மீது இருந்த நம்பிக்கை சற்று உடைந்துவிட்டது. [/size]

[size=4]எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி[/size]

[size=4]'தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம்;. அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும்.அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.[/size]

[size=4]ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல. [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110631

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவர் விகடனில் வழமையாக கட்டுரைகள் எழுதும் அருள் எழிலன் இல்லை அருளினியன் புதியவர் இலங்கையை சேர்ந்தவர் இப்பிடியான சம்பவங்கள் நடக்கவில்லை என சொல்லவில்லை அருளினியனின் கட்டுரை என்பதால் கற்பனை கொஞ்சம் அதிகமாக இருக்க சாத்தியம் உண்டு :wub:

ஓ அப்படியா தகவலுக்கு நன்றி

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்# ஒரு வாக்கு மூலம்

by ஆதி ஆதித்யன் on Friday, 2 November 2012 at 14:49 ·

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது.

சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது.

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்

உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன்.

முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.

தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார்.

"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.

ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??

அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள்.

தவிர..

சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது.

அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும்.

போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!!

பேட்டி உண்மையென்றால்!!

தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள்.

வெறும் பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்...

உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.

ஆதி

02-11-2012

from facebook.

[size=4]நியானி: மூலம்: http://aathithyank.b...log-post_2.html[/size]

[size=3]ஆதியால் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஆதாரமற்ற தகவல் பதிவில் இருந்து நீக்கப்படுகின்றது.[/size]

Edited by நியானி

இவ்வளவு நாளும் ஆனந்தவிகடனும்,அருள் எழியனும் எழுதின உசுப்பேத்தின கட்டுரையை படித்த ஆட்கள் இப்ப தங்களுக்கு கட்டுரை பாதகமாய் வந்தவுடன் கட்டுரை பொய்யாம்...இளையராஜாவை எதிர்த்து முடிந்திட்டுது இனி மேல் விகடனை எதிர்ப்போம் :(

இது இளையராஜா எதிர்ப்பின் நீட்சியாகவும் இருக்கலாம். இளையராஜாவும் நாங்களும் ஆனந்தவிகடனும் வீரகேசரியும் கூட தமிழர்களுடையதுதான். எங்களுக்குள் நாங்கள் முரண்பட்டு விரோதத்தை வளர்த்தக்கொள்ன்றோம். வெறுப்புணர்வு கசப்புணர்வுகளை விதைக்கின்றோம் நாமே இதையும் அறுவடைசெய்வோம். தமிழகம் ஈழம் இரண்டும் நுட்பமாக கையாளப்படுகின்றது. ஊடகம் இசை மாவீரர் விபச்சாரம் எல்லாமே உணர்சிகரமான விசயம். எமது மரபில் இவற்றை நிதானமாக கையாளும் பழக்கமில்லை. விதி வலியது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற விடுதலைபுலிகளின் கொள்கையில் இருந்து இவர் மாறியதே இன்றைய நிலைக்கு காரணம்.

இரண்டாவது உள்ளூரில் உள்ள அரசியல்வாதிகளிடம் உதவியை கோரியவர் ஏன் வெளிநாடுகளில் இருக்கும் நேசக்கரம் போன்ற அமைப்புகளிடம் உதவி கோரவில்லை ?

இவர் எடுத்த முடிவு ஏனையோருக்கு முன்னுதாரணமாக அமையக்கூடாது என்பதே எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற விடுதலைபுலிகளின் கொள்கையில் இருந்து இவர் மாறியதே இன்றைய நிலைக்கு காரணம்.

இரண்டாவது உள்ளூரில் உள்ள அரசியல்வாதிகளிடம் உதவியை கோரியவர் ஏன் வெளிநாடுகளில் இருக்கும் நேசக்கரம் போன்ற அமைப்புகளிடம் உதவி கோரவில்லை ?

இவர் எடுத்த முடிவு ஏனையோருக்கு முன்னுதாரணமாக அமையக்கூடாது என்பதே எனது கருத்து.

இப்படியான கதைகள் உண்மையில்லை என்று நிறுவுதல் ஒரு புறம் இருக்க (யாழ் களத்தில் முன்னாள் பெண்போராளிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற செய்தி முன்னரும் வந்துள்ளது)...

முதலாவது கருத்து போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் உள்ளது மிகவும் வேதனையான நிலை.

இரண்டாவதற்கு சரியான தொடர்புகளை யாரும் கொடுக்காதது காரணமாக இருக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.