Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெனோபாஸ் என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர்.

"மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும்.

பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன்று உண்டு. அதுதான் இந்த மெனோபாஸ் பருவம் சிலருக்கு பெரிய போராட்டமாகி விடுகிறது.

இந்த மெனோபாஸ், இயற்கையாக வருவது உண்டு (சூயவரசயட ஆநnடியீயரளந) இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவதாகும். இந்த வயதில், கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹார்மோனாகிய "ஈஸ்ட்ரோஜன்" இயற்கையாகவே, குறைந்த அளவில் சுரக்க ஆரம்பிக்கிறது. இதனால் மாதவிலக்கு முன் போல வருவதில்லை. முதலில் குறைந்த அளவு மாதவிலக்கு ஏற்பட்டு பிறகு விட்டு விட்டு மாதவிலக்கு ஏற்படும். பின் அதிக அளவு மாதவிலக்கு ஏற்பட்டு சுத்தமாக மறைந்து விடும்.

இப்படி படிப்படியாக ஒரு நிலையை அடைவது தான் இயற்கையான மெனோபாஸ் என்பது. இதில் எல்லோருக்குமே எல்லா நிலைகளும் கண்டிப்பாக காணப்படும் என்ற கட்டாய நிலையும் இல்லை. சிலருக்கு சில நிலைகள் மட்டுமே அதிகமாக தோன்றும். எதுவுமே தாங்கக்கூடிய அளவில் இருக்கும் போது இயற்கையான மெனோபாஸில் மருந்து உண்ணும் நிலை ஏற்படாது. மாறாக சில கட்டங்களில் தாங்க முடியாத மாதவிலக்கு ஏற்பட்டால், உடனடியாக நிறுத்தக் கூடிய மருந்துகளை உட்கொள்வது நல்லது.

செயற்கையான மெனோபாஸ் (ருnயேவரசயட ஆநnடியீயரளந) என்பது மற்றொன்று. இது அறுவை சிகிச்சைக்கு பின்னோ அல்லது அதிக அளவு கதிர்வீச்சுக்குப் பின்னோ ஏற்படும் மெனோபாஸ் ஆகும். ஆகவே, இந்த மெனோபாஸில், மேற்கூறியது போல பல கட்டங்கள் தோன்றாமல் திடீரென மாதவிலக்கின்மை காணப்படுதல் மட்டுமே வெளியே தோன்றும் அறிகுறியாகும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளே போதுமானதாகும்.

மூன்றாவது, தவறுதலான மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும், எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் மாத விலக்கு வருவது முற்றிலும் நின்று விடுகிறது.

மெனோபாஸின் போது ஏற்படும் பொதுவான, அதிகப்படியான கோளாறு,

1. அதிக அளவு வெள்ளை படுதல்

2. அதிக அளவு இரத்தப்போக்கு

இவை இரண்டுமே, வயதான நேரங்களில் மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் காணக்கூடிய கோளாறுகளாகும். வெள்ளை படுதல், தண்ணீர் போல ஒழுகி வருவது உண்டு. சிலருக்கு பால் போல , சளி போல இருக்கும். பாதி வேக வைத்த முட்டையின் வெள்ளை கரு போலவும் இருக்கும். நிறத்தை பார்க்கும் போது முதலில் வெள்ளை என்பது வெள்ளை நிறமாக இருந்தாலும், அது நாள்பட, நாள்பட சற்று மஞ்சள் நிறமாகவும், பிறகு மஞ்சள் கலந்து பச்சை நிறமாகவும் காணப்படுவதுண்டு. "மணத்தை" நோக்கும் போது புளித்த மணம், பாலாடை போன்ற மணம், மீன் நாற்றம் போன்று, இன்னும் சில தாங்க முடியாத மணங்களும் உண்டு.

மேற்கூறியவைகள், கர்ப்பப்பையில் சிறிது (அ) அதிக அளவு வேக்காடு இருந்தாலும், பல கிருமி தொற்று இருந்தாலும், கர்ப்பப்பையில் அரிப்பு இருந்தாலும், கர்ப்பப்பையில் கட்டி இருந்தாலும், தண்ணீர் பை போல் இருந்தாலும் காணக்கூடிய கோளாறுகள். இவற்றிற்கு தகுந்த நேரத்தில், தகுந்த மருத்துவரை அணுகி, மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

மேற்கூறியவைகள் பொதுவாக மெனாபாஸ், நேரத்தின் போது காணப்பட்டாலும், முட்டி வலி, பாலுணர்வு மாற்றம் போன்றவைகளும் ஏற்படுவது உண்டு. உலர்ந்த பெண் உறுப்பு பாலுணர்வு குறைந்து விடுதல் அல்லது அதிக அளவு பாலுணர்வு ஆசை ஏற்படுதல் மார்பகங்களில் வலி, மூத்திர பையில் அழற்சி சிறிதளவு உயர்ந்த ரத்த அழுத்தம் நடு முதுகெலும்பு வலி, இடுப்பெலும்பு வலி போன்றவைகள் எல்லாமே இந்த மெனாபாஸில் அடங்கும். அதனால் தான் மெனோபாஸ் என்பது பல அறிகுறிகளை ஒன்று சேர்த்து கூறப்படும் ஒரு வார்த்தையாகும்.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/1211/02/1121102039_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

மெனோபாசுக்கு,

மாதவிடாய், தீட்டு, வீட்டுக்கு விலக்கு, சுகமில்லை... என்று எத்தனையோ... நல்ல தமிழ்ச் சொல் இருக்க, ஆங்கிலச் சொற்களை தவிர்ப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

நீங்கள் சொல்லும் தமிழ் [size=5]சொற்க[/size]ள் சாதாரண மாதாந்த நிகழ்வுக்கான (Period) தமிழ் சொற்கள்.

இது வேறு. (Menopause)

இவை தான் 'அங்கில - தமிழ்' அகராதியில் உள்ளன: 'மாதவிடாயொழிவு', 'இறுதி மாதவிடாய்' . 'மாதவிடாய் அற்ற'

மிகச் சரியான சொல்: மாதவிடாய் முடிவுறும் காலப்பகுதி.

சரியான சொல்லாக நான் கருதுவது: 'கருவுரல் நிறுத்தம்'.

எனினும் 64 வயதில் குழந்தை பிரசவித்த பெண்களும் உண்டு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நாதமுனி.

என்ன... இருந்தாலும், அவர்கள் சாமத்தியப் படும் போது... ஊரே கூடிக் கொண்டாடுது.

இறுதி மாதவிடாய் வரும் போது... ஊர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, என நினைக்க கவலையாயிருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நாதமுனி.

என்ன... இருந்தாலும், அவர்கள் சாமத்தியப் படும் போது... ஊரே கூடிக் கொண்டாடுது.

இறுதி மாதவிடாய் வரும் போது... ஊர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, என நினைக்க கவலையாயிருக்குது.

இப்ப என்ன அதுக்கும் மண்டபம் எடுத்து செய்யோணுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன அதுக்கும் மண்டபம் எடுத்து செய்யோணுமா? :D

சாமத்தியப்படும் போது... மண்டபம் எடுத்து, ஊரை... விருந்துக்கு கூப்பிட்டு செய்பவர்கள்....

அது, நின்றவுடன்... அதே ஊருக்குச் சொன்னால் தப்பில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியப்படும் போது... மண்டபம் எடுத்து, ஊரை... விருந்துக்கு கூப்பிட்டு செய்பவர்கள்....

அது, நின்றவுடன்... அதே ஊருக்குச் சொன்னால் தப்பில்லை. :lol:

கண்ணீர் வரும் வரையில் சிரித்தேன்..! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

உங்களுக்கு விழா எடுக்கும் போது எனக்கும், இசையிற்க்கும் சொல்ல மறவாதீர்கள்.

இப்பவே மொய் சேர்க்க தொடங்கிறோம். :icon_mrgreen::icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில் எட்டு ஆண்கள் கருத்து எழுதியும்... ஒரு பெண்களும் கருத்து எழுதாதை... வைத்துப் பார்க்கும் போது...

அவர்களை... குற்ற உணர்வு, வாட்டுகின்றது, என்று... அப்பட்டமாகத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில் எட்டு ஆண்கள் கருத்து எழுதியும்... ஒரு பெண்களும் கருத்து எழுதாதை... வைத்துப் பார்க்கும் போது...

அவர்களை... குற்ற உணர்வு, வாட்டுகின்றது, என்று... அப்பட்டமாகத் தெரிகின்றது.

அல்லது விழா கொண்டாடவில்லையே என்கிற வருத்தமா? :huh: எதுக்கும் யாழ்களத்து சம்சாரிகள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்களத்தில் எங்கே பெண்கள் எழுதுகிறார்கள் ரதியையும், தமிழச்சியையும் தவிர மற்றவர்கள் எல்லாம் அநேகமாக ஆண்கள் எழுதுவதற்கு ஆமாம் போடும் பொறுமையின் சிகரங்கள் அல்லவா... :mellow:

ஆமாம் இதற்குள் அவர்கள் வந்து எழுத என்ன இருக்கிறது. இங்கு இந்தப் பருவத்தைத் தாண்டிய பெண்கள் இருந்தால் இதனைப்பற்றிய விடயங்கள் அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும் இதில் எழுதியிருப்பார்கள். அநேகமாக சில வருடங்கள் கழித்து இந்தத் திரியில் நான்தான் கருத்தெழுதக்கூடியதாக இருக்கும் அதுவரைக்கும் நான் யாழில் பயணித்தால் பதிவிடுகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியப்படும் போது... மண்டபம் எடுத்து, ஊரை... விருந்துக்கு கூப்பிட்டு செய்பவர்கள்....

அது, நின்றவுடன்... அதே ஊருக்குச் சொன்னால் தப்பில்லை. :lol:

[size=4]பெண்கள் இல்லாதவைகளை தம்மிடம் இருப்பதாக பாவனை காட்டி பழகியவர்கள். உதாரனத்திட்கு அழகு. இல்லாதவைகளை பற்றி மூடி மறைக்கத்தான் பார்ப்பார்கள்.[/size]

[size=4]நாங்கள்தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்![/size]

என்னைப் பொறுத்தவரைக்கும் இது பற்றி மாதவிடாய் பற்றியும் உங்கள் ஆண் குழந்தைகள் பதின்ம வயதில் இருக்கும் போதே கதைத்து விளங்கப்படுத்துவது முக்கியம். எம் வாழ்வில் எம்முடன் பயணிக்கும் சக பயணி பெண் என்பதால் கண்டிப்பாக ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் இது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் Mood swinging (தமிழில் சரியான வடிவம் என்ன?), மாதவிடாய் காலம் முடிவடைந்த 50 வயதின் பின்னான காலம் பற்றிய ஆணின் புரிதல் அவசியம். பெண் உடல் என்பது ஆண் உடலில் இருந்து பல விடயங்களில் வேறு பாடானது என்பதை சொல்லிக் கொடுக்கும் போதுதான் உடலை மீறிய நேசம் கொள்வது ஆணுக்கும் சாத்தியமாகும். எனக்கு என் அப்பா என் பதின்ம வயதுகளில் கற்றுத் தந்த ஒரு அறிவு இது.

இது வருவதற்கு பல காலங்களிற்கு முன்பாகவே Primrose எண்ணெய் குளிசைகளை எடுக்க வேண்டும். உரிய மாத்திரைகள் எடுக்காததால் தெரிந்த ஒரு பெண்மணிக்கு இது வந்த நேரம், குடும்பத்தில் பெரிய பிரச்சனை வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

த... த,... தமிழ்சிறி,

போனகிழமை அமெரிக்கா, நியூயோர்க் பக்கம் போக வில்லை தானே.

சரியான காத்து, ச.. புயல் வந்து பெரிய அழிவுகலாம்...

[size=4]இந்த உடல் ஹோமோன் மாற்றம் ஆண்களிலும் கூட வருவதுண்டு. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் இது பற்றி மாதவிடாய் பற்றியும் உங்கள் ஆண் குழந்தைகள் பதின்ம வயதில் இருக்கும் போதே கதைத்து விளங்கப்படுத்துவது முக்கியம். எம் வாழ்வில் எம்முடன் பயணிக்கும் சக பயணி பெண் என்பதால் கண்டிப்பாக ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் இது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் Mood swinging (தமிழில் சரியான வடிவம் என்ன?), மாதவிடாய் காலம் முடிவடைந்த 50 வயதின் பின்னான காலம் பற்றிய ஆணின் புரிதல் அவசியம். பெண் உடல் என்பது ஆண் உடலில் இருந்து பல விடயங்களில் வேறு பாடானது என்பதை சொல்லிக் கொடுக்கும் போதுதான் உடலை மீறிய நேசம் கொள்வது ஆணுக்கும் சாத்தியமாகும். எனக்கு என் அப்பா என் பதின்ம வயதுகளில் கற்றுத் தந்த ஒரு அறிவு இது.

நல்ல கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

மாத விடாய் வரும் போது உள்ளதை விட நிற்கும் போது தான் பெண்கள் மன ரீதியான பாதிப்பிற்கு உள்ளாவார்களாம் எனக் கேள்விப்பட்டு உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

மாத விடாய் வரும் போது உள்ளதை விட நிற்கும் போது தான் பெண்கள் மன ரீதியான பாதிப்பிற்கு உள்ளாவார்களாம் எனக் கேள்விப்பட்டு உள்ளேன்

உண்மையிலேயே மனரீதியான பாதிப்பு என்பது ஒரு பெண் பூப்படையும் காலத்தில் அல்ல. எப்போது அவளுடைய உடல் இந்த மாதவிடாய் நிற்கும் தருணத்தை எட்டுகிறதோ அப்போதே அதிக மனஉளைச்சல்களால் அவதியுறுகிறாள். வெளியே சொல்ல முடியாமல் அவளுடைய உணர்வுகளின் பாதிப்பை மற்றவர்கள் குறிப்பாக கணவர் புரிந்து கொள்ளாத வேளையில் அவளுக்கு ஏற்படும் மனஉளைச்சல் காரணமாக அவள் சோர்வடைந்து போவது பெரிதாக வெளியே தெரிவதில்லை. அதன் காரணத்தால் அவளுடைய செயற்பாடுகளில் மந்தம், அதீத கோப உணர்வு, உடற்சோர்வு, மறதி, மனத்தளர்ச்சி அவளை மிகையாக ஆட்கொள்ளும். இந்தக்காலங்களே அவளுக்கு அரவணைப்பாக இருக்கவேண்டும். வேண்டாப் பண்டம் குப்பையிலே என்ற மாதிரியான மனநிலையில் துணையை ஒதுக்கி வைக்காமல் ஆண்கள் வாழவேண்டும். எப்போது அவளே தனக்கு எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கும் துணைவர் இந்தக்காலங்களில் அவளுக்கு அரவணைப்பையும், அன்பையும் மிகையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நம்முடைய சமூகத்தில் இவ்விதமான தன்மைகள் குறைவு. எல்லாவற்றையும் மூடிமறைத்தே வளர்க்கப்பட்விதம் அதற்குக் காரணமாக இருக்கலாம். அடிப்படை மனிதாபிமானம் கூட சில வீடுகளில் காணமுடிவதில்லை. பெண் என்றால் சம்பளம் அற்ற வேலைக்காரி என்பது போல் பல வீடுகளில் இருக்கிறது. வேலைக்காரிக்கு வருத்தம் என்றால் என்ன செய்வார்கள் அன்பாக ஆதரவாக அணைப்பார்களா? அதுபோலத்தான் அன்பற்ற பார்வைகள் இன்னும் அவர்களை விசனப்படுத்தும் காரணம் உடலில் ஏற்படும் மாற்றத்தால் தோன்றும் இயலாமை. நீண்டகால மாதவிடாய் பிரச்சனையால் துணைவருக்கு கிடைக்காமல்போகும் தாம்பத்திய உறவினால் ஏற்படும் எரிச்சல் அதனால் ஏற்படும் சினத்தை வார்த்தைகளில் போட்டு துணைவி மீது காட்டும் வெறுப்பு. அந்த சமயங்களை அவ்விதமான உணர்வின் வெளிக்காட்டல்கள் என்பது ஆயிரம் ஆணுகுண்டுகளைத் தலையில் கொட்டுவதற்கு ஒப்பானது. இந்தக்காலங்களை குறிப்பாக ஆண்கள் மிகவும் அன்பான வார்த்தைகளாலும் அரவணைப்பு மிக்க செயல்களாலும் துணைவியின் மனதில் இடம்பிடிக்கவேண்டும். அதுதான் அவர்கள் அதுவரை காலமும் தத்தம் துணைவியுடன் வாழ்ந்து பெற்ற தாம்பத்திய சுகத்திற்கு செய்யும் கைமாறு. :rolleyes:

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மெனோபாஸ்
டாக்டர் ஜி.ஜான்சன்

 

மெனோபாஸ் என்பது என்ன?

மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.

மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?

இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் எய்துகின்றனர்., ஆனால் பெரும்பாலானவர்கள் ( சுமார் 30 முதல் 60 சதவிகித்தனர் )பல்வேறு அறிகுறிகளை எதிர் நோக்குகின்றனர். உடல் ரீதியுடன், மன அளவிலும் மாற்றங்கள் உண்டாகலாம்.அதிக களைப்பு, குறைவான தூக்கம், ஞாபகக்குறைவு , உடல் உறவில் நாட்டமின்மை போன்றவை அவற்றில் சில.

மெனோபாஸின் அறிகுறிகள் என்ன?

* வெப்ப தாக்கம் ( hot flushes ) -

திடீரென நெஞ்சின் மேல்பகுதியில் கடும் வெப்பம் உண்டாகி முகம், கழுத்து பகுதிகளில் பரவும் . இவ்வாறு 2 முதல் 4 நிமிடங்கள் நிலைத்திருக்கும். இந்த வேளையில் அதிகம் வியர்க்கும். இந்த வெப்பம் குறையும்போது குளிரும் நடுக்கமும் உண்டாகும். நெஞ்சு படபடப்பும், மனதில் பரபரப்பும் ஏற்படும் . இது ஒரு நாளில் இரண்டு தடவை அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் உண்டாகலாம்.இது சுமார் 4 வருடங்கள் இவ்வாறு தொடரலாம்.

* இரவு வியர்வை ( night sweats )

வெப்பத் தாக்கம் இரவில் உண்டாகும்போது இரவு வியர்வை ஏற்படும்.இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உண்டானால் தூக்கம் கெடும். இதனால் காலையிலேயே களைப்பு, எரிச்சல், வேளையில் கவனமின்மை, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம் .

* தூக்கமின்மை ( insomnia )

மாதவிலக்கு நின்றுபோகும் வேளையில் தூக்கமின்மை பெரும் பிரச்னையைத் தரும். வெப்ப தாக்கம் அல்லது இரவு வியர்வை இல்லாவிட்டாலும் இது உண்டாகலாம்.

* உலர்ந்த பெண் உறுப்பு ( vaginal dryness ).

பெண் உறுப்பின் உட்சுவர் பகுதி மெல்லியதாகி உலர்ந்து போவதால், உடல் உறவின்போது எரிச்சலும் வலியும் ஏற்படும். இது ஈஸ்ட்ரொஜென் ஹார்மோன் குறைவினால் ஏற்படுகிறது.

* மனச்சோர்வு ( depression ).

கவலை, அன்றாட காரியங்களில் ஆர்வமின்மை , வேலையில் கவனமின்மை, போன்றவற்றால் புதிய பிரச்னைகளை எதிநோக்குவர்.

மறு ஹார்மோன் சிகிச்சை ( hormone replacement therapy – HRT ) என்பது என்ன ?

மெனோபாஸ் அறிகுறிகள் முழுக்க முழுக்க ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படுவதால் அதை மறுபடியும் தரவதே இந்த சிகிச்சை முறை. இதில் ஈஸ்ட்ரோஜென் ( estrogen ) ,புரோஜெஸ்டின் ( progestin ) எனும் இரண்டு விதமான ஹார்மோன்கள் அடங்குகின்றன.இவற்றில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மேனோபாசின் அறிகுறிகளை குணமாக்குகிறது.புரோஜெஸ்டின் என்பது புரோஜெஸ்ட்டெரான் ( progesteron ) மாதிரியான ஹார்மோன். இது கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் கருப்பையின் உட்சுவரை அளவுக்கு அதிகமாக வளரச் செய்துவிடுமாதலால் அதனால் புற்றுநோயாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

இணைவாக்கிய ஈஸ்ட்ரோஜன் மாத்திரை ( conjugated estrogen pill ) 0.625 மில்லிகிராம் அல்லது 0.3 மில்லிகிராம் உட்கொண்டால் மெனோபாஸின் அறிகுறிகளை தீர்க்கும். ஆனால் இதனுடன் புரோஜெஸ்டின் மாத்திரையும் உட்கொள்ள வேண்டும். மெட்ரொக்ஸ்சிப்ரோஜெஸ்ட்டெரான் அசிட்டேட் ( medroxyprogesterone acetate ) , நாரதின்ட்ரோன் ( norethindrone ) ,நோர்ஜெஸ்ட்ரெல் ( norgestrel ) போன்றவை சில உதாரணங்கள்.

திபோலோன் ( Tibolone ) எனும் செயற்கை ஸ்டீராய்ட் மருந்தும் சில நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.

இத்தகைய மருந்துகளை மருத்துவரின் மேற்பார்வையில்தான் உட்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறு ஹார்மோன் சிகிச்சையின் பின்விளைவுகள் என்ன?

ஈஸ்ட்ரோஜென் – புரோஜெஸ்டின் சிகிச்சையில் மாரடைப்பு ( heart attack மார்பக புற்றுநோய் ( breast cancer ), உறைகுருதி ( blood clots ). மூளை தாக்கம் ( stroke ) போன்ற ஆபத்தான பின்விளைவுகள் ( 63 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 5 வருட சிகிச்சைப் பெற்றிருந்தால் ) ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆராய்ச்சியின் ( women’s Health Initiative ) முடிவுகள் கூறுகின்றன.

ஈஸ்ட்ரொஜென் மட்டும் உட்கொண்ட பெண்களுக்கு மாரடைப்பும்,மார்பகப் புற்றுநோயும் உண்டாகும் அபாயம் குறைவாகவே இருந்தது.

மறு ஹார்மோன் சிகிச்சையின் நன்மைகள் என்ன?

* வெப்ப தாக்கம் , இரவு வியர்வை போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

* மெனோபாஸ் எய்தியபின் கால்சியம் குறைவினால் எலும்பு நலிவு ( osteoporosis ) ஏற்படுகிறது. இதனால் முதுகு வளையும்: எலும்பு நலியும்: சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படும். இவர்கள் விழ நேர்ந்தால் பெரும்பாலும் தொடை எலும்பு, இடுப்பு எலும்பு.முதுகுத் தண்டு எலும்பு எளிதில் முறியும் . ஹார்மோன் சிகிச்சை இதிலிருந்து பாதுகாப்பு தருகிறது.

* ஹார்மோன் சிகிச்சை மன அழுத்தத்தைக் குறைக்கிறது..

* ஹார்மோன் சிகிச்சை தூக்கமின்மையை ஓரளவு குறைக்கிறது..

ஹோர்மோன் சிகிச்சை பெற விரும்புவோர், குறுகிய கால சிகிச்சை மேற்கொண்டால் போதுமானது. 5 வருடத்துக்குக் குறைவாக சிகிச்சைப் பெற்றால், மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் குறைவே.மெனோபாஸின் அறிகுறிகள் மறைந்ததும் ஹார்மோன் சிகிச்சையையும் நிறுத்திவிடலாம்.இதை திடீர் என்று நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது நல்லது.

யார் யார் ஹார்மோன் சிகிச்சை பெறக் கூடாது?

* முன்போ தற்போதோ மார்பகப் புற்றுநோய் உ,ள்ளவர்கள்.

* இருதய நோய் உள்ளவர்கள்.

* முன்பு மாரடைப்பு , மூளை தாக்கம், உறைகுருதி போன்றவை உள்ளவர்கள்.

மெனோபாஸ் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. ஒரு சிலருக்கு உடல் உள்ள பாதிப்பு இல்லாமல் இது உண்டாகலாம். வேறு சிலருக்கு மேற்கூறிய மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றி அவஸ்தைக்கு உள்ளாகலாம்.

அவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மறு ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டு

பரிகாரம் காணலாம்.

60 வயதுக்குள் அல்லது மெனோபாஸ் எய்திய 10வருடத்துக்குள் மறு ஹார்மோன் சிகிச்சை

மேற்கொண்டால் பக்கவிளைவுகளால் உண்டாகும் தீமைகளைவிட நன்மையே அதிகம் என்று

தற்போதைய ஆய்வுகள் ( Report in April 2013 ,Climacteric ) கூறுகின்றன.


http://puthu.thinnai.com/?p=20935

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்தியப்படும் போது... மண்டபம் எடுத்து, ஊரை... விருந்துக்கு கூப்பிட்டு செய்பவர்கள்....

அது, நின்றவுடன்... அதே ஊருக்குச் சொன்னால் தப்பில்லை. :lol:

 

எதுக்கும் ஒரு ஹெலி ஒன்றை வாங்கி விட்டால் உழைக்கும் போலத்தான் கிடக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.