Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

‘நேசம் கல்வித்திட்டம் 2012′ புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 12.11.2012 அன்று இந்து கலாசார மண்டபம் , நாவற்குடா , மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

திரு. ஆ. ஜனனன் (அமைப்பாளர் – Bright Future – Nesakkaram) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவஸ்ரீ உ. ஜெகதீஸ்வர குருக்கள் (J.P) , அருட்தந்தை ஓ.ஐ. ரஜீவன் அடிகளார் , திரு.கிரிதரன் (பிரதேச செயலாளர் மண்முணை வடக்கு மட்டக்களப்பு) திரு .மு. கமலராஜா (சமுக சேவை உத்தியோகத்தர் மண்முணை வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சிறப்புரைகளை வழங்கினர்.

DSCF3351.jpg

‘நேசம் கல்வித்திட்டம்’ சிறப்பபுச்சித்தியடைந்த 125மாணவர்களில் :-

நாவற்காடு – 2மாணவர்கள்

விழாவெட்டுவான் – 1மாணவர்

சுவிஸ்கிராமம் – 4மாணவர்கள்

கல்லடிவேலூர் – 3மாணவர்கள்

திருச்செந்தூர் – - 2மாணவர்கள்

நாவற்குடா – 8மாணவர்கள்

ஆரையம்பதி – 2மாணவர்கள்

செட்டிப்பாளையம் – 5மாணவர்கள்

மாங்காடு – 1மாணவர்

தேட்டாதீவு – 5மாணவர்கள்

ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33மாணவர்களுக்கும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபா சேமிப்பு வைப்பிலிட்ட சேமிப்பும் நேசக்கரம் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. மீதி 92 மாணவர்களு

DSCF3324.jpg

இம்மாணவர்களின் கௌரவிப்புக்கான உதவிகளை வழங்கிய பிரித்தானியா திரு.இளையதம்பி தெய்வேந்திரன் (குட்டியண்ணா) பிரித்தானியா கந்தையா ஜெபநேசன் Johnas (யேர்மனி) அம்பலத்தார் (யேர்மனி) ஆகியோருக்கு நேசக்கரமும் பயனடைந்த மாணவர்களும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

கல்வித்தரத்தில் நலிந்து போன மாணவர்களை அறிஞர்களாக உருவாக்க உங்கள் ஆதரவுகளை வழங்குமாறு இந்நேரத்தில் வேண்டுகிறோம்.

DSCF3315.jpg

நிகழ்வுச் செலவறிக்கை :-

மண்டபம்: – 5000,00ரூபா

பனர் :- 1640,00ரூபா

சிற்றூண்டி: – 7200,00ரூபா

நினைவுப்பரிசு :- 10550,00ரூபா

சேமிப்புவைப்பு :- 16500,00ரூபா

மொத்தச்செலவு :- 40890,00ரூபா.

இதர மாணவர்களுக்குமான கௌரவிப்பு முடிவுற்றதும் முழுமையான கணக்கறிக்கை வெளியிடப்படும்.

DSCF3342.jpg

DSCF3333.jpg

DSCF3343.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியக்கா பகிர்வுக்கு

வாழ்த்துகள் எல்லா மாணவர்களுக்கும்

உங்கள் அயராத & தன்னலமற்ற உழைப்பு உங்களின் மீதுள்ள மதிப்பை கூட்டிக்கொண்டே போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், நேசக்கரத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், நேசக்கரத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் [/size][size=1]

[size=4]தன்னலம் கருதா சேவையாளர்களுக்கு தலைவணங்குகிறேன் [/size][/size]

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221

சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை ஒண்டையுமே எதிர்பாக்காமல்.வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை இதை சிலபேர் இந்த்க் காலத்தில செய்யினம் ஆனால் காணாது.

நேசக்கரத்தின் அடிவேராக இருக்கும் அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தன்னலம் பாரா சேவைக்கு வாழ்த்துக்கள் சாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..! நேசக்கரத்தின் சீரிய பணிகளுக்கும், உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்..!

[size=4]எமக்கு முன் ப[/size]ந்து நிற்கும் செயல்பாடுகளுக்குள் மிக முக்கியமான ஒன்று.

[size=1][size=4]சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். [/size][/size]

[size=1][size=4]தொடரட்டும். [/size][/size]

Edited by akootha

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். உதவியவர்களுக்கு மிக மிக நன்றி.

பல இடர்களுக்கு மத்தியிலும் அயராது உழைக்கும் நேசக்கரத்திற்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும்.

நல்லது செய்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவதாகவும் அதற்கு அடுத்த படமும் தெளிவில்லை அல்லது அது எடுத்த கோணம் சரியில்லை .. படம் எடுப்பதற்காகவும் யாரையாவது பிடித்து பயிற்சி கொடுக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசக்கரம் மேன்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், நேசக்கரத்திற்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட உடையார் , புங்கையூரன் ,விசுகு ,லியோ ,கோமகன் ,நந்தன் ,இசைக்கலைஞன் ,அகூதா ,தப்பிலி ,தமிழ்சூரியன் ,சாத்திரி ,குமாரசாமி, புத்தன் அனைவருக்கும் நன்றிகள்.

நான்காவதாகவும் அதற்கு அடுத்த படமும் தெளிவில்லை அல்லது அது எடுத்த கோணம் சரியில்லை .. படம் எடுப்பதற்காகவும் யாரையாவது பிடித்து பயிற்சி கொடுக்கவும்

நல்ல கமரா ஒன்று தானம் செய்தீங்களெண்டா உங்கள் கோணப்படி வீடியோவும் எடுத்துத் தருவோம். ஒரு கமறா எடுத்துத்தாறீங்களோ ? :wub: வாழ்க உங்கள் போராட்டம். :mellow:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தாண்டி வந்தாறுமூலை 21 மாணவர்கள் கௌரவிப்பு

நேசக்கரம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை , குமாரவேலியர்கிராமம் , பூலாக்காடு , கிரான், மாவடிவேம்பு , கதிரவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 21மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 22.11.2012 அன்று சித்தாண்டி வந்தாறுமூலை மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பாடசாலை அதிபர் திரு.எஸ்.பஞ்சலிங்கம் , பிரதி அதிபர் திருநாவுக்கரசு , கிராமியசங்கச்செயலாளர் யோகநாயகி , நேசக்கரம் வந்தாறுமூலை இணைப்பாளர் வினாயகமூர்த்தி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து மாணவர்களுக்கான நினைவுப்பரிசினை வழங்கிக் கௌரவித்தனர்.

012.jpg

DSCF3385.jpg

DSCF3435.jpg

DSCF3437.jpg

DSCF3420.jpg

அம்பாறையில் 33 மாணவர்கள் கௌரவிப்பு.

24.11.2012அன்று அம்பாறை மாவட்டத்தில் நேசம் கல்விதிட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கபட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 33 மாணவர்களுக்கான கௌரவிப்பு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட பதில் கல்வி இணைப்பாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக பிரதி கோட்டகல்விப்பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் , பாடசாலை அதிபர்கள் , பிரதேச சபை தவிசாளர் திரு V. புவிதராஜன் கிராமசேவகர் திரு S.பார்த்தீபன் உட்பட brightfuture nesakkaram இணைப்பாளர் திரு.ஜெனனன், கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் வாமன் , மகளீர் மேம்பாட்டு இணைப்பாளர் செல்வராணி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்களுக்கான நினைவுப்பரிசுகளும் சேமிப்புக்கணக்குப் புத்தகமும் வழங்கப்பட்டது. சிறப்புச்சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் நிகழ்வின் நிறைவில் கலந்துரையாடப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

DSCF3452.jpg

DSCF3536.jpg

DSCF3537a.jpg

DSCF3493.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லாறு பகுதியில் நேசக்கரம் புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

Brightfuture Nesakkaram கழுவாஞ்சிக்குடி , பெரியகல்லாறு , பாண்டிருப்பு , கல்முனை , எருவில் , குறுமன்வெளி , வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் நேசம் இலவச கல்வித்திட்டத்தில் பயனடைந்து புலமைப்பரிசில் சித்தியடைந்த 36மாணவர்களுக்கான கௌரவிப்பு கல்லாறு மெதடிஸ்த தமிழ்பெண்கள் பாடசாலை மண்டபத்தில் 02.12.2012 அன்று நடைபெற்றது.
DSCF3658.jpg
Brightfuture Nesakkaram உபதலைவர் உதயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன், கௌரவ அதிதிகளாக கல்லாறு மெதடிஸ் த மிஷன் தமிழ்பெண்கள் பாடசாலை அதிபர் திரு.எம்.சந்திரசேகரன் , கிராம உத்தியோகத்தர் ஞானசிறி , பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளரும் துறைநீலாவணை பாடசாலை அதிபர் திரு.விஜயநாதன் , பட்டிருப்பு Brightfuture Nesakkaram ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் மற்றும் Brightfuture Nesakkaram விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜோன்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

DSCF36511.jpg

DSCF3638.jpg

DSCF3627.jpg

DSCF3612.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.