Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரியைவிட விஷமுடைய போலி தமிழுணர்ச்சியாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத் திரியில் யாரவது மாவீரர்களை அவமானப்படுத்துகின்ற மாதிரி எழுதினார்களா?...கேட்ட கேள்விக்கு பதில் இல்லா விட்டால் உடனே மாவீரர்,ஒற்றுமை என ஓடி வந்து விடுவார்கள்...மாவீரர்களை நினைவு கூறும் அதே நேரம் உயிரோடு ஊரில் இருக்கும் போராளிகளையும் நினைவு கூறுங்கள்

  • Replies 83
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரதி, வண்டுமுருகன் மற்றும் இன்னோரன்ன உறவுகளுக்கும் நான் சொல்லவருவது பின்வருவனவற்றைத்தான். :rolleyes:

நீங்கள் ரெஸ்கோவில் அல்லது வோல் மார்ட்டில் போய் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதன்வழி நீங்கள் நுகர்வோர் ஆகிறீர்கள். பொருளின் தரத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அதைத் திரும்பக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. :huh:

உங்க‌ள் வீட்டில் ஜ‌ன்ன‌ல் ஓர‌ங்க‌ளூடாக‌ காற்று உள்நுழையும் பிர‌ச்சினை இருக்கிற‌து. இத‌ற்காக‌ நீங்க‌ள் ஒரு ஒப்ப‌ன்த‌தார‌ரை அழைத்து புது ஜ‌ன்ன‌ல்களை வாங்கி அவரைக் கொண்டு பொருத்துகிறீர்கள்ள். அவ்வாறு போட்ட‌ பின்ன‌ரும் காற்று உள்நுழைகிற‌து. ஒரு சேவையைப் பெற்றுக்கொண்ட‌ நீங்க‌ள் அதில் திருப்தி இல்லாவிட்டால் அவ‌ரை மீள‌ ச‌ரிசெய்ய‌ச் சொல்லும் உரிமை உங்க‌ளுக்கு உள்ள‌து. அல்ல‌து குறித்த‌ சேவைக்கான‌ ப‌ண‌த்தின் பெரும்ப‌குதியைப் பெற்றுக்கொள்ளும் வ‌ழி இருக்கிற‌து. :unsure:

மூன்றாவதாக, செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நீங்கள் பணம் தானமாக வழங்குகிறீர்கள். அவர்கள் அதில் ப்தினைந்து வீதமான பணத்தைமட்டும் நிவாரணங்களுக்குச் செலவிட்டுவிட்டு, மீதியை தங்கள் ஏனைய செலவுகளுக்காக எடுத்துக் கொள்ளுகின்றன. அவர்களது பிராந்திய மேலாளர் பீமரிலும், மெர்சிடீஸ் இலும் உலா போகிறார். :D

இதனைக் கண்ட நீங்கள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இவர் எப்படி பென்ஸில் போகலாம். அந்தப் பணத்தை ஆபிரிக்காவில் பசித்த குழந்தைகளுக்கு உணவுக்காக நீங்கள் கொடுக்க வேண்டும் என வாதிடுகிறீர்கள். அவர்களின் பதில் என்னவாக இருக்கும்? :rolleyes:

பணத்தைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அது போனதுதான். கொடுக்க முன்னர் யோசிக்க வேண்டும். ஏதாவது ஒரு நல்ல வழியில் பிரியோசனப் படும் என்று மனதைத் தேற்ற வேண்டியதுதான். :huh:

இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டதின் நோக்கம் ஆமி வன்முறைகளால் இளம் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதை மூடி மறைக்கவே. இதில் குய்யோ முறையோ போட்டு அழும் பலர், அரசிடமிருந்து அந்த சேவைக்கான பணத்தை பெற்றவர்கள். இவர்களின் நோக்கம் புலியை காட்டி போராட்டத்தை பின் தள்ளுவதே. இவர்களில் ஒருவர் தன்னும் ஒரு நாட்டிலும் புலிகளின் பணத்தை சுருட்டி வைத்திருப்பார் மீது ஒரு வழக்கு எடுக்க முயற்சி செய்தவர்கள் அல்ல. இது வரையில் எந்த நாட்டிலும் இப்படியான சிவில் வழக்கு தாக்கல் செய்யபட்டதை நான் அறியவில்லை. தனிய நாட்டு அரசுகளின், வன்முறையில் பணம் சேர்த்த குற்றவியல் வழக்குகள் மட்டும்தான் இருக்கின்றன. இவர்களின் நோக்கம் தொடர்ந்து விவாத்தித்து, இராணுவத்தின் தமிழ் பெண்கள் மீதான வன்முறைகளை திசை திருப்புவதே. இந்த காட்டுரையின் நோக்கம் யாரிடமிருந்தும் எந்த தமிழ் பெண்களுக்கும் உதவி பெற்றுக்கொடுப்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தும் இதுவே

களை எடுப்பதாக நினைத்துக்கொண்டு பயிர்த்தோட்டத்தையே முழுமையாக அழிக்க துணைபோகின்றோம்.

மேலும் மேலும் பாதிக்கப்படப்போவது அதை நம்பி வாழும் மக்களே.

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை உங்களுக்கு தெரிந்திருந்தால்

அவர்கள் சொகுசு வாகனங்களில் திரிவது தங்களுக்கு தெரிந்திருந்தால்

இங்கு வந்து வீரம்காட்ட மாட்டீர்கள்.

மக்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால்.

அத்துடன் இந்த நாட்டு சட்டங்களும் உங்களுக்கு சார்பாகவே உள்ளன.

அதை செய்யுங்கள்.

எனது உதவி என்றும் உண்டு என்பதே எனது வேண்டுகோள்.

அதைவிடுத்து

காலத்தின் தேவையறிந்து தம்மாலான அனைத்தையும் கொடுத்து எமக்காக உழைத்தோரைத்தூற்றும்

எதுவுமே செய்யாத 80 வீதமானோரின் இன்றைய நாடகங்களுக்கு பலம்சேர்க்காதீர்கள் என்பதே எனது கருத்து.

(நேற்றுக்கூட இங்கு இரண்டாவது நிலையிலிருந்த ஒருவர் எனது தோழில் சாய்ந்து அழுதார். அண்ணா ஒரு வழியிலும் நன்மை இல்லையண்ணா. வீட்டில சோத்துக்கே வழியில்லை. இதில் கள்ளப்பட்டம் வேறு. தற்கொலை செய்வோம் என்றாலும் அது எமக்கு நிரந்தரப்பழியைத்தந்துவிடுமே என்று அஞ்சுவதாக. சில நிமிடங்கள் என்னுடன் கதைத்தபின் ஆறுதலடைந்து நன்றியண்ணா உங்களைக்கண்டது பெரும் ஆறுதலாக இருக்கு என்று விடைபெற மனமின்றி கையை விட்டு சென்றார்.)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரர்களே

இந்த இடத்தில் எனக்கு நடந்த அனுபவமொன்று ஞாபகம் வருகிறது .

அப்போது நான் O/L படித்து கொண்டிருந்த காலம். எங்கள் பக்கம் கருணா தீவிரமாக இயக்கத்திற்கு ஆட்கள் பிடித்து

கொண்டிருந்தார். ஒரு குடும்பத்தில் 3 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் ஒருவர் நிச்சயமாக போராட்டத்திற்கு கொடுக்க வேண்டும்

இல்லா விட்டால் குடும்ப நிலைக்கு ஏற்றவாறு 3 laks----9 laks வரை கொடுக்க வேண்டும். நான் அம்மாவிற்கு ஒரு பிள்ளை

கொஞ்சம் வசதியான குடும்பம் வேறு. So 7L அம்மாவிடம் கேட்கப்பட்டது அதுவும் நான் class போகும் இடமெல்லாம் அம்மாவிடம்

சொல்லிக்காட்டி பிள்ளை வேணுமெண்டா pay பண்ணு எண்டு முடித்தார்கள். பாவம் அந்த மனுசி 3 மாதத்தில் 7L

சரியாக்கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி கொடுத்திச்சு என்ன பெத்த பாவத்திற்காக.

வாங்கிட்டுபோனவர் ஒரு பெரிய புலி தாதா

இப்படி எல்லாரிட்டையும் சேர்த்த பணத்த கொண்டுபோய் எங்க ஊரில இருந்த ஒரு கள்ளச்சாராய காரனிடம் பதுக்கி வைத்துஇருந்தார் நேரம் வரும்போது தலைமையிடம் அனுப்ப .

ஆனா அவருக்கே நேரம் வந்திட்டு ஆளைப்பற்றி கேள்விப்பட்ட STF ஆளை வசமாப் பிடிச்சு மண்டையில சுட்டு

வயித்தில கம்பியால குத்தி காவடி போல பிணத்தை ரோட்டெல்லாம் இழுத்து திரின்ச்சினம்.

கள்ளசாரயகாரனிட்ட பணம் இருந்த விடயம் தாதாவத்தவிர வேற எந்த இயக்க காரனிட்கும் தெரியாது

அமத்திய பணத்தில் சாராயக்காரன் ஒரு stationary கடை ஆரம்பித்தார் .காலம் கொஞ்சம் ஓடியது அப்புறம் கடை கொஞ்ச்சம் கொஞ்சமாக develop ஆகியது

அப்புறம் பெட்ரோல் செட் வைத்தார் .......leyland பஸ் வாங்கி விட்டார்

ரெண்டு மகளுக்கும் doctor மாபிள்ளைகள் ...மூத்தவருக்கு Premio ரெண்டாமவருக்கு Allion இதோட வீடும் சீதனம்

மகள் மார் ரெண்டுபேருக்கும் ரெண்டு toyota rush ஊருக்கே தெரியும் இது சொந்த காசில்லை எண்டு

அப்ப ஒருநாள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கைக்க கேட்டேன் அம்மா உங்களுக்கு கவலையாயில்லையா

அந்த 7 L பிரட்ட எவ்வளவு கஷ்டப்பட்டீங்க. நம்ம காசில எவனோ ஒருத்தன் வாழுறானே எண்டு....?

அப்ப அந்த மனுசி சொல்லிச்சு ....அடேய் அந்த காசு உனக்கு மட்டும் பிரட்டினது இல்ல அவனுகளுக்காகவும் தான் பிரட்டினது

நாம குடுக்காம வேறயாரு கொடுகிறது. கொடுத்ததோட எண்ட கடமை முடிஞ்சிது. அத ஒழுங்கா பயன்படுத்தாதது அவனுகளிட

பிழை எண்டு....அதோட இன்னொரு வசனமும் சொல்லிச்சு பொறுத்திருந்து பார் இப்படியான பிழைகளால் அவனுகள் என்ன ஆகப்போரானுகள் எண்டு (இங்க அவனுகள் எண்டது புலிகள )......மனுசி சொன்ன மாதிரி கடைசியாக நடந்திட்டு

கஷ்ட்டப்பட்டு சேர்த்த காசு அவ்வளவும் ராஜபக்ஷவும் அவன்ட கொம்பனியும் ராணுவ தளபதிகளும் என்ஜாய் பண்ண

ஒரு வேளை சோற்றுக்கு கையேந்தும் எம்மக்கள்...! இதற்கு நாமும் ஒரு காரணம்

இவ்வாறான ஆக்கங்களால் எதனை நீங்கள் சாதிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள்?

உங்கள் செய்திகள் அவர்களை செய்றடையாது. அவர்கள் உண்மையாகவே தேசியபற்றுள்ளவற்களாக இருந்த்திருந்தால் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கமாட்டார்கள். யாழ் போன்ற தளங்களுக்கு வருபவர்கள் இரண்டு ரகம். மக்களுக்கு நீதி வேண்டுபவர்கள் மற்றும் மக்களை குழப்பவரும் கைக்கூலிகள். கொள்ளையடித்தவர்கள் யாழ் போன்ற தளங்களுக்கு வரும் தேவை இருக்கா? அவர்கள் வந்து உங்களுக்கான பதில் தான் தருவார்களா? என்ன அவசியம் அவர்களுக்கு?

இவ்வாறன செய்திகளும் கட்டுரைகளும் சாதிக்க முடிவது ஒன்றே ஒன்றுதான். தொடர்ந்தும் மன உறுதியோடு சொந்த செலவிலும் நேரத்திலும் செயற்ப்படுவோரையும் விலக வைப்பது. மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள ஒருசிறு நம்பிக்கையையும் கெடுப்பது. மக்கள் ஒற்றுமையை சிதைப்பது.

நன்றே செய்கிறீர்கள்!

வெளிநாட்டுக் கிளைகள் போர் முடிந்தவுடன் மக்கள் முன் வந்திருக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்க வேண்டும். தாங்கள் சேர்த்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கூறியிருக்க வேண்டும்.

தங்களை நம்பி பணம் கொடுத்தவர்களை பொருளாதாரச் சிக்கலில் இருந்து காப்பாற்றுவதற்கான திட்டங்கள் பற்றி பேசியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? தலைவர் வருவார் என்றார்கள். போர் தொடரும் என்றார்கள். சேர்த்த பணம் பற்றி மௌனம் சாதித்தார்கள்.

இப்படியானவர்களை மிகவும் அருவருப்புடனேயே நான் பார்க்கிறேன்.

பணம் தொலைந்து போயிருந்தால் கூட பரவாயில்லை. என்ன நடந்தது என்பதை பொதுவில் வையுங்கள். பணம் கொடுத்து விட்டு ரோட்டில் நிற்கும் மக்களை காப்பாற்றுங்கள். அதற்கான திட்டங்களை இனியாவது பேசத் தொடங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் கிளைகள் போர் முடிந்தவுடன் மக்கள் முன் வந்திருக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்க வேண்டும். தாங்கள் சேர்த்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கூறியிருக்க வேண்டும்.

தங்களை நம்பி பணம் கொடுத்தவர்களை பொருளாதாரச் சிக்கலில் இருந்து காப்பாற்றுவதற்கான திட்டங்கள் பற்றி பேசியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? தலைவர் வருவார் என்றார்கள். போர் தொடரும் என்றார்கள். சேர்த்த பணம் பற்றி மௌனம் சாதித்தார்கள்.

இப்படியானவர்களை மிகவும் அருவருப்புடனேயே நான் பார்க்கிறேன்.

பணம் தொலைந்து போயிருந்தால் கூட பரவாயில்லை. என்ன நடந்தது என்பதை பொதுவில் வையுங்கள். பணம் கொடுத்து விட்டு ரோட்டில் நிற்கும் மக்களை காப்பாற்றுங்கள். அதற்கான திட்டங்களை இனியாவது பேசத் தொடங்குங்கள்.

சபேசனின் கருத்தே எனதும். தலைவருக்கு என்ன நடந்தது.. தளபதிகளுக்கு என்ன நடந்தது; பணத்துக்கு என்ன நடந்தது என்று மக்கள் மன்றத்தின்மூலம் முன்வைக்க வேண்டும். :huh:

இந்தத் தரவுகளைக் கொண்டு மறைந்தவரைப் பின் தொடரலாம். பணம் சேர்த்தவர்கள் மேல் வழக்குத் தொடுக்க சிலர் முன் வரலாம். பணம் கொடுத்தவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு பணம் கொடுத்த குற்றத்திற்காக உள்ளே செல்லலாம். :blink:

இப்படி பல அனுகூலங்கள் உள்ளன. :D

"மறைந்தவரைப் பின் தொடரலாம்".

எதோ பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதுமாதிரி இருக்கு .பகிடிக்கும் ஒரு அளவு இருக்கு .

வெளிநாட்டுக் கிளைகள் போர் முடிந்தவுடன் மக்கள் முன் வந்திருக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்க வேண்டும். தாங்கள் சேர்த்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கூறியிருக்க வேண்டும்.

தங்களை நம்பி பணம் கொடுத்தவர்களை பொருளாதாரச் சிக்கலில் இருந்து காப்பாற்றுவதற்கான திட்டங்கள் பற்றி பேசியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? தலைவர் வருவார் என்றார்கள். போர் தொடரும் என்றார்கள். சேர்த்த பணம் பற்றி மௌனம் சாதித்தார்கள்.

இப்படியானவர்களை மிகவும் அருவருப்புடனேயே நான் பார்க்கிறேன்.

பணம் தொலைந்து போயிருந்தால் கூட பரவாயில்லை. என்ன நடந்தது என்பதை பொதுவில் வையுங்கள். பணம் கொடுத்து விட்டு ரோட்டில் நிற்கும் மக்களை காப்பாற்றுங்கள். அதற்கான திட்டங்களை இனியாவது பேசத் தொடங்குங்கள்.

போர் தொடரவேண்டும். தலைவர் இறந்தார் என்பவர்களை அதை செய்ய விட்டு விட்டு போர் தொடரவேண்டும். சிங்கள இராணுவம் முகமூடி போட்டு தமிழ் பெண்களின் வாழ்வை சிதைக்கும் போது அதை ஓடிவந்து மூடிமறைப்போர் ாதை செய்யட்டும்.

இவற்றை பெருது படுத்தாமல் போர் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் இன்று பன்-கி-மூன் தான் தலதா மாளிகையில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்.

பழைய தோல்விகள், பழைய தவறுகள் எதிரியின் ஆயுதம். அவற்றை விடாப்பிடியாக எதிரி தூக்குவான்.

Edited by மல்லையூரான்

சபேசனின் கருத்தே எனதும். தலைவருக்கு என்ன நடந்தது.. தளபதிகளுக்கு என்ன நடந்தது; பணத்துக்கு என்ன நடந்தது என்று மக்கள் மன்றத்தின்மூலம் முன்வைக்க வேண்டும். :huh:

இந்தத் தரவுகளைக் கொண்டு மறைந்தவரைப் பின் தொடரலாம். பணம் சேர்த்தவர்கள் மேல் வழக்குத் தொடுக்க சிலர் முன் வரலாம். பணம் கொடுத்தவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு பணம் கொடுத்த குற்றத்திற்காக உள்ளே செல்லலாம். :blink:

இப்படி பல அனுகூலங்கள் உள்ளன. :D

முந்திவிட்டிங்க அண்ணா..

எவ்வளவு நன்மைகள்.. அவங்கட தொல்லை இருக்காது.. சிங்களத்தின் வேலை இலவசமா முடிஞ்சிடும்.

மாவீரர் வாரமென்ன.. நாளே இருக்காது. ஈழத்தமிழனின் வாழ்வில் வசந்தம் தான்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"மறைந்தவரைப் பின் தொடரலாம்".

எதோ பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதுமாதிரி இருக்கு .பகிடிக்கும் ஒரு அளவு இருக்கு .

யார் முதலில் பகிடி விட்டது? :lol:

இசை,

பணம் சேர்த்தவர்கள் பற்றிய தரவுகள் எமக்கு தேவையாக இருக்காது. ஆனால் எவ்வளவு பணம் சேர்த்தோம், அவைக்கு என்ன நடந்தது, எவ்வளவு பணம் மீதியாக இருக்கின்றன என்பதை தமிழ் சமூகத்துக்குள் ஆவது பேச வேண்டும்.

பணத்தை தவறானவர்களிடம் கொடுத்து ஏமாந்த அனுபவம் இயக்கத்திற்கு பலமுறை உண்டு. மீண்டும் ஏமாந்து போய் விட்டோம், அனைத்து பணமும் வீணாகி விட்டது என்று சொன்னால் கூட பரவாயில்லை. இதையாவது அவர்கள் மக்களிடம் போய் சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து விட்டு நடு ரோட்டில் நிற்கும் மக்களை மீட்கின்ற வழிவகைகள் பற்றி திறந்த மனதோடு பேசுவதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

ஆனால் இவர்கள் எதற்கும் தயாராக இல்லாது இருப்பதும், சட்டத்தைக் காட்டி தப்ப நினைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

25 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் நாடுகளின் சட்டமுறைகளுக்கு உட்படாதவாறு

பணம் சேகரித்தல்

பணம் அனுப்புதல்

ஆயுதம் வாங்குதல்

நாடுகளின் எல்லைகளை தாண்டுதல்

ஆட்களை மிரட்டுதல்

ஆட்களை தாக்குதல்

என்று நிறையச் செய்தவர்களுக்கு இன்றைக்கு மட்டும் சட்டத்தின் முன் பயம் வந்து விட்டதா? அன்றைக்கு எப்படி மக்களுக்காக அதை எல்லாம் செய்தார்களோ, அப்படியே இன்றைக்கும் மக்களுக்காக இதை செய்தே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

பணம் சேர்த்தவர்கள் பற்றிய தரவுகள் எமக்கு தேவையாக இருக்காது. ஆனால் எவ்வளவு பணம் சேர்த்தோம், அவைக்கு என்ன நடந்தது, எவ்வளவு பணம் மீதியாக இருக்கின்றன என்பதை தமிழ் சமூகத்துக்குள் ஆவது பேச வேண்டும்.

பணத்தை தவறானவர்களிடம் கொடுத்து ஏமாந்த அனுபவம் இயக்கத்திற்கு பலமுறை உண்டு. மீண்டும் ஏமாந்து போய் விட்டோம், அனைத்து பணமும் வீணாகி விட்டது என்று சொன்னால் கூட பரவாயில்லை. இதையாவது அவர்கள் மக்களிடம் போய் சொல்ல வேண்டும்.

பணம் கொடுத்து விட்டு நடு ரோட்டில் நிற்கும் மக்களை மீட்கின்ற வழிவகைகள் பற்றி திறந்த மனதோடு பேசுவதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

ஆனால் இவர்கள் எதற்கும் தயாராக இல்லாது இருப்பதும், சட்டத்தைக் காட்டி தப்ப நினைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

இது பற்றிய பெரியதொரு அனுபவம் எனக்கு இருக்கிறது.. :blink:

அப்போது சிங்கையில் பணம் சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.. என்னிடமும் கேட்டார்கள். திடீரென்று ஒன்றையும் காணவில்லை.. :huh:

கடைசியில் பார்த்தால் பணம் சேர்த்த ஒருவரை சிங்கை காவல்துறை மோப்பம் பிடித்து கைது செய்துவிட்டது. அவரிடம் இருந்த கையேட்டில் பணம் வழங்கியவர்கள் விவரம் எல்லாம் இருந்திருக்கிறது. :blink:

பணம் வழங்கியவர்கள் பலரின் வீடுகளுக்குள் அதிகாலையில் நுழைந்து அவர்களை கடுமையாக விசாரித்தார்கள். விசாரிக்கப்பட்டவர்கள் தொழில்சார் நிபுணர்களாக வேலைசெய்து கொண்டிருந்தவர்கள். அவர்களது நிரந்தர வதிவிட உரிமைக்கும் ஆபத்து வந்து சேர்ந்தது. கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினார்கள். :(

நீங்கள் யாரோ சிலர் காசு கொள்ளையடித்துவிட்டார்கள் என்று அவர்கள் பின்னால் போனால் சிக்கலில் மாட்டப்போவது அவர்கள் மட்டுமல்ல. பல்லாயிரக்கணக்கில் கொடுத்த மருத்துவர்கள், வீடுவிற்பனை முகவர்கள் என்று இருக்கிறார்கள். அவ்வாறு கொடுத்தவர்களே வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். கார‌ண‌ம், இதைக் கிளறினால் பாதிக்க‌ப்ப‌ட‌ப்போவ‌து அவ‌ர்க‌ள‌து தொழிலும்தான். :blink:

இவ்வாறான ஆக்கங்களால் எதனை நீங்கள் சாதிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள்?

உங்கள் செய்திகள் அவர்களை செய்றடையாது. அவர்கள் உண்மையாகவே தேசியபற்றுள்ளவற்களாக இருந்த்திருந்தால் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கமாட்டார்கள். யாழ் போன்ற தளங்களுக்கு வருபவர்கள் இரண்டு ரகம். மக்களுக்கு நீதி வேண்டுபவர்கள் மற்றும் மக்களை குழப்பவரும் கைக்கூலிகள். கொள்ளையடித்தவர்கள் யாழ் போன்ற தளங்களுக்கு வரும் தேவை இருக்கா? அவர்கள் வந்து உங்களுக்கான பதில் தான் தருவார்களா? என்ன அவசியம் அவர்களுக்கு?

பதில் தருவதற்கான அவசியம் இல்லை ஆனால் இத் தளத்திற்கு வரும் தேவை இருக்கின்றது. இது ஒன்றும் காசை அடித்துவிட்டு ஓடி மறைந்து விடும் நிலமை மட்டுமில்லை. நேரடியாகப் பணம் வாங்கியது என்பது மட்டுமல்ல தொடர்ச்சியான வியாபாரம். கடைகள் கோயில்கள் வதிவிடங்கள் நிகழ்வுகளை நடத்துதல் இப்படியான பல்வேறு வழிகளில் போராட்டத்திற்கான நிதி சேகரிக்கப்பட்டது. இவைகளின் தொடர்ச்சியான வருமானம் என்பதற்கு தேசீய முகமூடி அவசியம். தொடர்ச்சியான வருமானத்தில் புதியதொரு போட்டி வரும்போது இக்களம் அப்போட்டியை சமாளிக்கும் விதமாக பயன்படுத்தப்படும். உதாரணம் அண்மையில் இளையராஜா இசைநிகழ்ச்சயை கனடாவில் புதியவர்கள் ஏற்பாடு செய்ததை குழப்ப முற்பட்டது. பல்வேறு அமைப்புக்களின் உறுப்பினர்கள் இங்கே அனாமதேயர்களாக இருக்கின்றார்கள். அமைப்புகள் சார் கருத்துக்களை மக்களில் ஒருவராக முன்வைக்கின்றார்கள். அமைப்பை நேரடியாக சம்மந்தப்படுத்துவதை தவிர்த்து தந்திரமாக தமது கருத்தினூடாக அமைப்பை தக்கவைக்கின்றனர். மேற்சொன்ன கதைகள் 0.01 வீதமென்றாலும் ஒருவனின் மனட்சாட்சியை தொடும் சந்தர்ப்பமாக அமையும். மக்கள் தெளிவாகக் குழம்பிப்போயுள்ளனர் அவர்களை இக்கதைகள் ஒன்று குழப்ப வாய்பே இல்லை.

என்னப்பா இந்த திரிக்கு உண்மையை எழுதினவுடன தணிக்கை செய்து எழுதினதையே தூக்கிட்டாங்க,

இதில காசு எங்கே எண்டு எழுதிறவை 30 வருசமா எங்க போனீங்க? எல்லாரும் சும்மா இருக்க விடுதலை வரும் என்டு படுத்திருந்தனீங்க இப்ப கிளம்பீட்டிங்க,

சிரங்கு புண்ணை நோண்டி நோண்டி பெருப்பித்ததுதான் தமிழ் அரச வியாபாரிகள் அரசுக்கு இதுவரையில் செய்தது. அதாவது பலநாடுகள் அப்பாவிகளை, அவர்களுக்கு அகதி நிலை தேவை இல்லை என்று வெளியேற்றும் பொது, மேலும் மேலும் புலிகள் என்று தாங்கள் தீர்ப்பளித்தவர்களை வெளியேற்றாமல் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

புலிகளுக்கு காசு சேர்த்த ஒரு நாடாக வர்ணிக்கப்படும் கனடாதான் முதல் நாடாக ஐ.நா தன் மீது குற்றம் சாட்டி வெளிவிட்ட அறிக்கையை வரவேற்றது. பொது நலவாயத்தின் தந்தையான பிருத்தானியா இதுதான் முதல் முறையாக பொது நலவாயத்திற்கு போகமல் விடும் சந்தர்ப்பமாக வரப்போகிறது. பொதுநலவாயத்தில் இலங்கையை தொடந்து காப்பாற்றி வந்த கமலேஸ் சர்மாவே இலனகையை எதிர்த்து அறிக்கை விட்டுவிட்டார் .

தமிழ் அரச வியாபாரிகள் இந்த விடயங்களை சட்டை செய்ய வில்லை. இவற்றை பற்றி ஒரு கருத்து எழுதுவதில்லை. எந்த காலத்திலும் தமிழ் பெற்றார் தங்களிடம் பணம் இல்லை என்று தங்கள் பெண்பிள்ளைகளை ஆமிக்கு விற்றதில்லை. குடிக்கிறது பச்சை தண்ணி என்றாலும் அவர்களை தங்கள் சிறகுக்குள் பொத்திவைத்துதான் வளர்த்தார்கள். ஜனநாயக நாடாக வர்ணிக்கும் இலங்கை இதை செய்யும் பொது அந்த திரி கருத்தெழுதுவார் இல்லாமல் காய்கிறது.

Edited by மல்லையூரான்

பணம் சேர்த்ததோ கொடுத்ததோ பிழையில்லை. அது மாவீரர் குடும்பங்களிற்கும், நலிந்து வாழும் போராளிகளுக்கும் போய்ச் சேர வேண்டும்.

Edited by தப்பிலி

இதில காசு எங்கே எண்டு எழுதிறவை 30 வருசமா எங்க போனீங்க? எல்லாரும் சும்மா இருக்க விடுதலை வரும் என்டு படுத்திருந்தனீங்க இப்ப கிளம்பீட்டிங்க,

முப்பது வருசமாய் எங்கை போனம் என்பதை பற்றி ஒரு தனித்திரி தொடங்குங்க அங்கை வந்து பேசுவம்.இது காசை சுறுட்டிய கள்ளர்களை பற்றி பேசும் திரி.முப்பது வருடமாக இருப்பதற்கும் கள்ளர்கள் களவெடுத்த காசை திருப்பி கேட்பதற்கும் என்ன சம்பந்தம்? அதை மட்டும் எழுதுங்கள் மீதியை தொடர்ந்து விவாதிப்பம்.

போராட்ட ஆரம்ப காலம் முதல் எமது போராட்ட வரலாற்றில் உறுதியுடன் துணையாக இருந்த

TCC ஐ பலவீனப்படுத்த எதிரி முனைந்திருக்கின்றான் அவன் எம்முள்ளேயே இருந்து

பிரிவினைகளைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றான் தமிழர் நலன் மீது அக்கறை கொண்டதாக தெரிவிக்கும்.நாடுகடந்த அரசும் ஏனைய அமைப்புக்களும் எதிரிக்கு செருப்படி கொடுக்கும் வகையில்

நல்லெண்ண நடவடிக்கையாக TCC முன்னெடுக்கும் மாவீரர் தின நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் . TCC இக்கு போட்டியாக ஒழுங்கு செய்யப்பட்ட அணைத்து நிகழ்வுகளும் நல்லெண்ண நடவடிக்கையாக உடனடியாக ரத்துச் செய்யப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம், மாவீரர் மாதமானதுக்கு நீங்கள் ஏதாவது காசு கொடுத்தீர்களோ அவர்களுக்கு? மாவீரர் மாதமாக மாற்றப்பட்டதில் உங்களுக்கு ஒரு பண நட்டமும் இல்லை தானே?

இது சமூக அக்கறையான கருத்தாகத் தெரியவில்லை. மற்றவர்களின் கொடுக்கல் வாங்கலுக்குள் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள் என்று சொல்லுவது மாவீரர் வாரத்தை மாதமாக மாற்ற முனைவது வெறும் வியாபார நோக்கில்தான் என்ற மாதிரியான அர்த்தத்தைத் தந்துவிடும் அபாயம் இருக்கின்றது!

ஒரு இனத்தின் பேரால் நடந்த போராட்டத்தைப் பற்றி அந்த இனத்தில் பிறந்தவருக்கு கேள்வி கேட்க எல்லா உரிமைகளும் இருக்கின்றது. காசு கொடுத்தவர்தான் கேள்வி கேட்கலாம் என்பது போராளிகளைக் கூலிக்கு அமர்த்தியமாதிரியான அர்த்தத்தைத் தரும்.

எனவே வியாபாரிகளுக்கு முண்டு கொடுக்க முனைந்து போராளிகளைக் கேவலப்படுத்தக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அது போனதுதான். கொடுக்க முன்னர் யோசிக்க வேண்டும். ஏதாவது ஒரு நல்ல வழியில் பிரியோசனப் படும் என்று மனதைத் தேற்ற வேண்டியதுதான். :huh:

நான் ஒரு கோயில் வைத்திருக்கின்றேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்டியலில் போடும் பணமும்தான் முக்கியம். பக்தர்களின் நம்பிக்கையை வைத்துப் பணம் சம்பாதிக்க முனையும்போது அவர்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்க சில வழிமுறைகளுக்குப் பணம் செலவழிக்கவேண்டும், என்றாலும் அவர்களுக்கு சமய வழிகாட்டல் செய்யவேண்டியது அவசியமில்லை.

உண்டியலில் போட்டவர்கள் திருப்பிப் பணத்தைக் கேட்பதில்லை. ஆனாலும் கோயில் மூடப்படும்போது மனநிம்மதி போய்விடுவதால் உண்டியலில் போட்ட பணம் அவர்களுக்கு நினைவில் வந்து சஞ்சலத்தைக் கொடுக்கும்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியலில் போட்டவர்கள் திருப்பிப் பணத்தைக் கேட்பதில்லை. ஆனாலும் கோயில் மூடப்படும்போது மனநிம்மதி போய்விடுவதால் உண்டியலில் போட்ட பணம் அவர்களுக்கு நினைவில் வந்து சஞ்சலத்தைக் கொடுக்கும்தானே!

சஞ்சலத்தைக் கொடுக்கும்தான்..!

[size=4]இந்தப்பதிவை எழுதியவருக்கும் இன்று வந்த வதந்[/size][size=4]திகளுக்கும் தொடர்பு உள்ளது போல உள்ளது :D[/size]

எதிரியைவிட விஷமுடைய போலி தமிழுணர்ச்சியாளர்கள்

[size=2]Published on November 19, 2012-3:13 pm · No Comments[/size][size=3]

black_money-150x150.jpg“களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது”[/size][size=3]

வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம். எந்த வரலாறு…? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு…? ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் முடியாமல் பூட்டிய இரகசிய நிலஅறைக்குள் சக்குப் பிடித்து யூரோக்களாகக் கிடக்கும் மக்களின் இரத்தமும் வியர்வையுமான உழைப்பையும் வரலாறு கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது.[/size][size=3]

மண்மீட்புப் போராட்டத்துக்கென மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியில் பினாமி பெயர்களில் தொடங்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனங்களை யார் யார் பங்கு பிரித்துக் கொள்வதென நடக்கும் பங்காளிச் சண்டைகளையும், வரி கட்டாத ஸ்தபனமென கூட இருந்தவனையே நோர்வேச் சட்டத்துக்குக் காட்டிக் கொடுத்து நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த நிகழ்வுகளையும் இதே வரலாறுதான் கவனித்துக் கொண்டே இருக்கின்றது.[/size][size=3]

2009இல் எதிரி புலிகளை வீழ்த்தியதற்குப் பின் வெளி நாடுகளிலிருந்து எதிரியின் வாசலுக்கு ஓடிச் சென்று உல்லாச விடுதிக்கும், சாராயக் கடைக்கும் சொகுசு பேரூந்துக்கும், தேயிலைத் தோட்டத்துக்கும், கொழும்பு13இல் தொடர்மாடிக் கட்டிடங்கள் வாங்கவும் அனுமதிப் பத்திரத்துக்கு கியூ வரிசையில் யார் யார், புலம்பெயர் எந்தெந்த புரட்சி முக்கியஸ்தர்கள் நின்றார்கள் என்பதையும் வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

இப்படி ஏகப்பட்டதை வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது, எதிரியால் கொல்லப்பட்ட தலைவனுக்கே இன்னமும் அஞ்சலி செலுத்த முடியாத தந்திர அரசியலையும்கூட இதே வரலாறுதான் கவனித்துக்கொண்டிருக்கிறது.[/size][size=3]

“வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது” என்று சொல்வதிலுள்ள (காசு தராதவர்களை நோக்கி “நாட்டுக்கு வருவியள்தானே…?” என்பது போன்ற மிரட்டலில் ஏகாதிகாரத் தொனி பொதிந்து கிடப்பதையும் இதே வரலாறுதான் கவனித்துக் கொண்டிருக்கிறது.[/size][size=3]

LTTE12.jpgஒரு சமூகத்தையோ, அல்லதொரு அமைப்பையோ, அல்லது ஒரு குழுவையோ…., ஏன், ஒரு தனி மனிதனையோ “நீ இன்னதுதான் செய்யவேண்டும், இன்னது செய்யக்கூடாது” என்று சொல்வதற்கும், கட்டளையிடுவதற்கும், மிரட்டுவதற்கும், சண்டித்தனம் பண்ணுவதற்கும் எந்தக் கொம்பாதி கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதைத் தைரியமாகச் சொல்ல முடியாத புலம்பெயர் தமிழனத்தையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

தேச விடுதலையின் பெயரால் நடக்கும் போராட்டத்தின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், மக்கள் விரோதச் செயல்கள்கூட இங்கே புனிதப் படுத்தப் படுகின்றன. அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்படி சனங்கள் வலு கட்டாயமாக வலியுறுத்தப் படுகிறார்கள். மாவீரர்களின் பெயரால் நடக்கும் நிகழ்வுகளிலும், விளையாட்டுக்களிலும் கொத்துரொட்டிக்கடை போட்டு வியாபாரம் செய்வதுகூட மண்ணின் பெயரால் புனிதமாக்கப் படுகின்றது. இவற்றையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டேதான் இருக்கிறது.[/size][size=3]

விடுதலைப் போராளிகளாயிருந்து இன்று அங்கவீனர்களாக்கப்பட்டும் வாழ வழியேதுமற்றும், சமூகத்தாலும் புறக்கணிக்கப் பட்டு நடுத்தெருக்களில் அநாதரவாக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளின் எதிர்காலத்துக்கு நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் புலிச் சொத்தில் ஒரு சிறங்கை கிள்ளிப் போட்டாலே அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்குமே என்ற ஏக்கத்தோடும், ஆத்திரத்தோடும் இந்த வரலாறு உங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

2009ம் ஆண்டு புலிகளின் அழித்தொழிப்புக்குப்பின் புலம்பெயர் புலிகள் (அதிலும் விசேடமாக நோர்வேப் புலிகள்) யார் யார் எதிரியின் பின் கதவைத் தட்டி நிலவொளியில் விருந்துண்டார்கள் என்ற கதைகளையும் இந்த வரலாறு முச்சந்தியில் கொண்டுவந்து வைக்கத்தான் போகிறது.[/size][size=3]

தேசவிடுதலைப் போராட்டத்துக்காக புலம்பெயர் மக்களிடம் சேகரித்த பணத்தில் எந்தெந்த நோர்வேப் புலிகள் கோடம்பாக்கத்திற்குப் போய் சினிமா எடுக்கிறார்கள் என்பதையும், அதையே இங்கு மீண்டும் மண்ணின் பெயராலும், மக்களின் இரத்தத்தின், சிதறிப்போன சதைகளின் பெயராலும் விளம்பரம் செய்து காசு பார்க்கிறார்கள் என்பதையும் இந்த மொக்கு வரலாறு மவுனமாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

புலம்பெயர் நாடுகளில் 80களிலிருந்து இயங்கிவந்த தமிழ்ச் சங்கங்கள், தமிழ்மொழிக் கல்வி நிலையங்கள், கோயில்கள், சிறு பத்திரிகைகள் என தனித்துவத்தோடு எதையும் இயங்க விடாமல் அதற்குள்ளும் வருவாய் காணும்பொருட்டு மிரட்டிக் கையகப் படுத்தியதையும் இந்த வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

வெளி நாடுகளில் வாழும் மக்களிடம் மண்விடுதலையின் பெயரால், புலிகளின் பிரதிநிதிகளாய் சென்று கதவைத் தட்டிக் காசு வாங்கியவர்கள் தங்களது சுய வருமானம் என்ன என்பதையும், அவர்களிடம் இப்போ இருக்கும் சொத்து விபரங்களையும் பொதுவெளியில் முன்வைக்க துணிவு உண்டா என்பதையும் இதே வரலாறுதான் கேட்டு நிற்கிறது. (இவர்கள் இப்படியே தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்ட முடியாது, அம்பலத்துக்கு மிக மிக விரைவில் வரத்தான் போகிறார்கள் என்பது வேறு விடையம். ஏனென்றால் இங்கு உங்கள் வருட வருமானம் என்ன என்பதையும், உங்களுக்கு எங்கெங்கே சொத்துக்கள் இருக்கின்றன என்பதையும் சும்மா சாதாரண மனிதராலேயே சட்டரீதியாகவே விபரங்கள் திரட்ட முடியும்)[/size][size=3]

களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை தம் கையகப்படுத்தும் நபர்களுடையது என்பதையும் இந்த கையாலாகா வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

ஸ்ரீ லங்கா இனவாத, ஏகாதிபத்திய அரசின் அடாவடித் தனங்களையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடவும், இல்லாதொழிக்கவும், அனைத்து இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை ஒன்றைக் கண்டடையவும் இன்று முதல் முக்கியமாக உள்ள பணி இலங்கைவாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையேயான புரிந்துணர்வும், ஒற்றுமையும். இந்த இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை ஸ்ரீ லங்கா அரசு காலகாலமாக எப்படித் தந்திரமாகக் கையாள்கிறதோ அதே வழியைத்தான் தங்களைத் தமிழ் உணர்ச்சியாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் விபச்சாரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாசமாய்ப்போன வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.[/size][size=3]

(பிறத்தியாள் இணையத்தில் வெளிவந்த இந்த ஆக்கம் நன்றியுடன் பிரசுரிக்கின்றோம்)black_money.jpg[/size]

இது சமூக அக்கறையான கருத்தாகத் தெரியவில்லை. மற்றவர்களின் கொடுக்கல் வாங்கலுக்குள் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள் என்று சொல்லுவது மாவீரர் வாரத்தை மாதமாக மாற்ற முனைவது வெறும் வியாபார நோக்கில்தான் என்ற மாதிரியான அர்த்தத்தைத் தந்துவிடும் அபாயம் இருக்கின்றது!

ஒரு இனத்தின் பேரால் நடந்த போராட்டத்தைப் பற்றி அந்த இனத்தில் பிறந்தவருக்கு கேள்வி கேட்க எல்லா உரிமைகளும் இருக்கின்றது. காசு கொடுத்தவர்தான் கேள்வி கேட்கலாம் என்பது போராளிகளைக் கூலிக்கு அமர்த்தியமாதிரியான அர்த்தத்தைத் தரும்.

எனவே வியாபாரிகளுக்கு முண்டு கொடுக்க முனைந்து போராளிகளைக் கேவலப்படுத்தக்கூடாது.

அப்படி ஒரு அர்த்தத்திலும் நான் சொல்லவில்லை.

மாவீரர் வாரத்தை மாவீரர் மாதமாக மாற்றியது பணத்துக்காக தான் என்று அவர் எப்படி உறுதியாக சொல்கிறார்?

மாவீரர் மாதமாக மாற்றப்பட்டதால் உரியவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது? மாவீரர் மாதமாக மாற்றப்பட்டதால் இவர் அல்லது வேறு நபர்கள் யாராவது பணம் கொடுத்து எமாற்றப்பட்டனரா? எவ்வாறு? என்பது தான் என் கேள்வி.

இங்கு நான் ஒரு வியாபாரிகளுக்கும் முண்டு கொடுக்கவில்லை, ஒரு போராளிகளையும் கேவலப்படுத்தவில்லை. ஆனால் அவ்வாறு நான் நடப்பது போல் நீங்கள் காட்ட முயற்சிக்க வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.