Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணியை கொடுக்க மறுத்ததால் வீட்டைச்சுற்றி வீதி நிர்மாணம்

Featured Replies

[size=4]சீனாவின் பெய்ஜிங் மாகாண வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக கொடுக்க மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் நெடுஞ்சாலையை நிர்மாணித்துள்ளனர் அதிகாரிகள். இதனால் நெடுஞ்சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.

லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து காணி சுவீகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டுக் காணியைக் கொடுக்க மறுத்துள்ளார்.

சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீடு அமைந்துள்ள காணியை அந்நாட்டு அரசாங்கத்தால் கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட பிற பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்க முடிவானது.

அதன்படி நெடுஞ்சாலையும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான நெடுஞ்சாலையொன்று உள்ளது. ஆனால் லூவின் வீடு மட்டும் தனியாக காட்சியளிக்கின்றது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போன்று லூவின் வீடு வித்தியாசமாக காணப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

லூவைப் போன்று சீனாவில் அதிகளவானோர் உள்ளனராம். அரசு கொடுக்கும் இழப்பீட்டுத்தொகை போதவில்லை என்று கூறி தங்களது வீட்டுக் காணிகளை அரசுக்கு கொடுக்க மறுத்து தங்களது சொந்த இடங்களிலேயே தங்கியுள்ளனராம். [/size]

[size=4]C02(55).jpg

C03(33).jpg

C04(19).jpg

C05(16).jpg[/size]

http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/53324-2012-11-23-11-29-21.html

  • கருத்துக்கள உறவுகள்

சீனா... தனது, கொம்யூனிச போர்வையைக் கழட்டி, மக்கள் ச‌னநாயககத்துக்கு.. முதலிடம் கொடுக்க விரும்புவதாக... உலகை நம்பவைக்கும்.. நாடகமாகாவே.. தெரிகின்றது.

சில காலத்துக்கு முன், சீன மாணவர்களால்... போராட்டம் கிளர்ந்த போது...

ரோசாப்பூ கொடுக்க.. முன் வந்த மாணவன் ஒருவனை, சீன ராணுவம் தனது வாகனத்தால்... நசிச்துக் கொன்ற படம், உலகெங்கும் வந்தது.

நடு ரோட்டில்.... வீடு, வைத்திருந்த கிழவனைக் கிளப்ப வழி தெரியாமல்... சீனா ஜனநாயகம் பேசுதாம், அதை... உலகம் நம்புதாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நடு ரோட்டிலை... ஒரு பெற்றோல் லொறி வந்து, மோதினால்... கிழவன், பரலோகம் போக வேண்டியது தான் பாக்கி.

கிழவனுக்கு, சீனா அரசாங்கம் கொடுக்கிற காசையும்... எடுக்க முடியாமல் செத்துப் போகும்.

என்ன.... இருந்தாலும், சீனாவுக்கு இலாபம் தான்... :lol::D

  • தொடங்கியவர்

[size=4]சிங்கள நாட்டிற்கு அதிகம் கடன் கொடுக்கும் சீன நாடு நாளை சிங்களம் அதை மீண்டும் தர முடியாத நிலையில் தீவை சுற்றி தனது கப்பல்களை நிறுத்தி முற்றுகை இடலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிலும் இவ்வாறு நடந்தது. ஆனால் அந்தக் கட்டுமானம் இவ்வளவு மோசமில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
C01(64).jpg

கனடாவில் EXPROPRIATION ACT அமுலில் உள்ளதால் வீதி ,பூங்கா,பொலிஸ் ஸ்டேசன் போன்ற தேவைகளுக்கு மாநகரசபபையால் ஒரு தனிப்பட்ட நபரின் காணியை சுவீகாரம் செய்யமுடியும் .அதற்கு நஷ்டஈடாக வீடு,காணியின் பெறுமதி ,வேறு இடம் மாறும் செலவும் கொடுப்பார்கள் .அதைவிட எனக்கு அந்த வீடு ராசியானது ,சுற்றுசூழல் வசதி இவையெல்லாம் விட்டு வேறிடம் போனால் அதனால் ஏற்படும் மனதாங்கலுக்கு என்றும் கூடுதல் காசு கேட்கலாம் .

பிறகு வீட்டுக்காரரும் மாநகரசபையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நியாயமான ஒரு தொகையுடன் தீர்விற்கு வரவேண்டும் .வீட்டுக்காரர் தரமுடியாது என சொல்லமுடியாது .

சீனா தன்னை ஜனநாயக நாடு என்று காட்ட எடுக்கும் முயற்சி.

இங்கிலாந்தில் Transport work Act மூலம் போக்குவரத்திற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தலாம். அந்தத் திட்டம் நாட்டின் போக்குவரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று விசாரணைக் குழுவிற்குக் காட்ட வேண்டும். அதிகமாக எந்தத் திட்டத்திற்கும் எதிராக சுற்றுப் புறச் சூழல் அமைப்பு, English Heritage, உள்ளூராட்சி (Local Council) வாதிடும். அரசின் திட்டத்திற்கு எதிராக அரச நிறுவனங்களே வாதிடும். அங்கு வாழும் மக்களும் சரியான காரணம் காட்டினால் அந்தத் திட்டம் கைவிடப்படும். அதிகமான மக்கள் பல காரணம் காட்டி கூடிய பணம் பெற்றுக் கொண்டு திட்டத்திற்கு ஒத்துழைப்புத் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியினர் ஒரு நாள் வீட்டோட தரை மட்டம் ஆகப் போயினம் :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரிலும் இவ்வாறு நடந்தது. ஆனால் அந்தக் கட்டுமானம் இவ்வளவு மோசமில்லை என நினைக்கிறேன்.

நீங்க டிசைன் செய்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க டிசைன் செய்ததா?

எங்கள் நிறுவனம் அதில் Expansion Joint மட்டும் செய்தது. வடிவமைப்பு, முதன்மைக் கட்டுமானம் எல்லாம் இன்னொரு நிறுவனம் செய்தது.. :D

நல்ல காலம் உங்களிடம் முழு வடிவமைப்பையும் தரவில்லை, யாழே இந்த ஆட்டமாடுது உங்களால், வீதியின் நிலைமை?

உங்கள் குணம் தெரிந்துதான் ஆட்டத்திற்கு ஏற்ப வடிமைக்க சொல்லியுள்ளார்கள் :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சீனாவில் நடுரோட்டில் இருந்த வீடு இடிக்கப்பட்டது: கண்ணீருடன் காலி செய்தார் உரிமையாளர்[/size]

[size=3]

[size=4]வென்லிங்: சீனாவின் வென்லிங் நகரில் நடுரோட்டில் இருந்த வீட்டை காலி செய்ய உரிமையாளர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.[/size][/size][size=3]

[size=4]கடந்த மாதம் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அதிகம் இடம் பெற்ற வீடு எதுவெனில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் நகரில் நடுரோட்டில் இருந்த வீடுதான் என்று கூறவேண்டும். இதற்குக் காரணம் ஒரே ஒரு வீடு மட்டும் தனியாக இருக்க அதனைச் சுற்றிலும் சாலைகள் இருந்ததே பரபரப்பிற்கு காரணமாக அமைந்தது.[/size][/size][size=3]

[size=4]வென்லிங் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வாகனங்களில் வந்து சேருவதற்காக விரைவு நெடுஞ்சாலை அமைக்க சீன அரசு திட்டமிட்டது. இதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அரசு தரப்பில் உரிய இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வசித்து வந்த வாத்துப்பண்ணை உரிமையாளரான லூ என்பவர் தன் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டார்.[/size][/size][size=3]

[size=4]6 லட்சம் யுவான் செலவழித்து, தன் வீட்டை கட்டியுள்ளதாகவும், அரசு தரும் 2 லட்சத்து 20 ஆயிரம் யுவான் இழப்பீட்டை பெற்றுக் கொண்டு, நான் எங்கே போய் இடம் வாங்கி, வீடு கட்டி வாழ முடியும் என்று வாதாடிய அவர் இறுதிவரை அந்த வீட்டை காலி செய்யவில்லை. மூன்று வருடமாக சர்ச்சை நீடித்தது.[/size][/size][size=3]

[size=4]இந்நிலையில் அந்த வீட்டை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டு இருபுறமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அச்சாலையின் நடுப்பகுதியில் இவரது வீடு மட்டும் தனியாக இருந்த காட்சி, பல ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் வெளியாகின.[/size][/size][size=3]

[size=4]இந்த வீட்டை படம்பிடிக்கவும், உரிமையாளரை பேட்டி காணவும் பத்திரிக்கையாளர்கள் அந்த வீட்டை முற்றுகையிடவே லூ வேதனை அடைந்தார்.[/size][/size][size=3]

[size=4]அப்பகுதியில் முன்னர் குடியிருந்த வீட்டு உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கவே லூ-வின் வீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க சீன அரசு சம்மதித்தது. இதனை ஏற்றுக்கொண்டு லூ கண்ணீருடன் வீட்டை காலி செய்தார். இதையடுத்து, மாகாண அதிகாரிகள் இன்று அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார்கள். சாலையின் நடுவே நடுநாயகமாக அமைந்திருந்த வீட்டினை இடித்து தரைமட்டமாக்கிய காட்சியை பலரும் வேடிக்கை பார்த்தனர்.[/size][/size][size=3]

[size=4]http://tamil.oneindia.in/news/2012/12/01/world-china-struggle-house-is-demolished-165556.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

image-432289-galleryV9-nifx.jpg

மற்ற வீட்டுக்காரனை... எழுப்பும் போது, இந்த வீட்டுக்காரனையும்... எழுப்பியிருக்க வேணும்.

ரோட்டுப் போடும் போது... கல்லு நெரிக்கிற மிசின், தார் ஊத்துற மிசின்ரை சத்தம், நாத்தம் எல்லாம் கேட்டு.... தனக்கு வீடு மிஞ்சிவிட்டது என்று சந்தோசமாய்... இருந்த கிழவனின் மனதைக் காயப்படுத்தி விட்டான்...சீனாக்காரன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

நான் வந்து எழுதணும் என்று நினைத்த மனுசன்

நான் வரும் முன்பே காலியாக்கிட்டார்களே..............??? :(

என்ன இருந்தாலும்ஒன்றை எமது விருப்பமின்றி பறிக்கும் அதன் வலி.................................

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பாவம் ஹார்ட் அட்டாக் வரப் போகுது ....[/size]

[size=4]..என்றலும் மூன்றுவருடம் உறுதி குலையாத மனுஷன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

-------

என்ன இருந்தாலும்ஒன்றை எமது விருப்பமின்றி பறிக்கும் அதன் வலி.................................

[size=4]C02(55).jpg[/size]

[size=4]கிழவன் தான்... நாண்டு கொண்டு, வீட்டை விட்டு எழும்ப மாட்டேன் என்று நின்றிருந்தால்...

ரோட்டுப் போட்டு, நடுவில் வெள்ளைக் கோடும் அடித்த பின்... அந்த வீட்டை ஏன்? இடிக்க வேணும்.

முதல்லேயே... அதைச் செய்திருக்கலாமே.... விசுகு.[/size]

"eminent domain" வழக்கத்தின் கீழ் நியூயோர்க்கில், தனியார் shopping mall போன்றவை கட்டவே மாநகர சபை வீட்டு காரர்களை எழுப்ப அனுமதி கொடுத்துவிடும்.  இலகு அல்ல. ஆனால் முன்னேற்றங்களை முடக்க மாநகரசபை ஏற்றுகொள்ளாது. இப்போது பல ஆண்டுகளாக வால் மாட் ஒருகடையை மாநகர எல்லைக்குள் திறக்க முயல்கிறது. காணி நிலங்கள் கிடைத்தும் மற்றய எதிர்ப்புகளால் வால் மாட் அவஸ்த்தைப் படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது போக்குவரத்து சிரமம் காரணமாக வீடை முற்றாக இடித்து விட்டார்களாம்

image-432289-galleryV9-nifx.jpg

மற்ற வீட்டுக்காரனை... எழுப்பும் போது, இந்த வீட்டுக்காரனையும்... எழுப்பியிருக்க வேணும்.

ரோட்டுப் போடும் போது... கல்லு நெரிக்கிற மிசின், தார் ஊத்துற மிசின்ரை சத்தம், நாத்தம் எல்லாம் கேட்டு.... தனக்கு வீடு மிஞ்சிவிட்டது என்று சந்தோசமாய்... இருந்த கிழவனின் மனதைக் காயப்படுத்தி விட்டான்...சீனாக்காரன்.

 

கிழவன் உங்களைமாதிரி ரோசக்காறனாய் இருந்திருந்தால் பொலிடோல் குடிசிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.