Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சோந்தி'க் கல் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.
ஒரு வேலைக்காரன் அங்கே வந்தான்.

படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.
அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.
Thanks to Dkmalathi

 

மூலம்: http://tamil-kutti-kathaikal.blogspot.co.uk/2009/02/blog-post.html

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

கல் பயங்கர சுழியனா இருக்குது.....பேய்காய்....இணைப்புக்கு நன்றி சுண்டல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி புத்தன் அண்ணா வரவிற்கும் கருத்திற்கும்........

நல்ல கதை..

 

இந்தக் கதையில் வரும் கல்லைப் போல தமக்கு எது நடந்தாலும் அதில் இருந்து பாடம் படிக்காமல் பெருமை பேசும் மனிதர்கள் ஏளாளம் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கருத்தை நிழலி எழுதுவார் என தெரிந்திருந்தால் சுண்டல் இந்த கதையை இணைச்சிருக்க மாட்டார்

இப்படி ஒரு கருத்தை நிழலி எழுதுவார் என தெரிந்திருந்தால் சுண்டல் இந்த கதையை இணைச்சிருக்க மாட்டார்

 

ரதி,

 

இப்படி எவ்வளவு பேரை நாம் பார்த்திருப்போம்...!! வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இருப்பவர்களை. ஒரு விதத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஒவ்வொருவரும் இப்படி இருந்து இருப்போம் என நினைக்கின்றேன். காலப் போக்கில் பக்குவம் அடையும் போது எங்கள் தவறுகளை ஒத்துக் கொண்டு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கப் பழகியிருப்போம். அதே மாதிரி எக்காலத்திலும் பக்குவம் அடையாமல் இருப்பவர்களையும் பார்த்து இருக்கின்றோம் தானே. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது தானே நாங்கள் பாக்காத ஆக்களா ரதிக்கு வாழ்கையில அனுபவம் பத்தாது இன்னும் படிக்கணும்.....

எனக்கு நிழலி அண்ணாக்கு எல்லாம் நிறைய அனுபவங்கள் அதனை தான் கதையா கருத்தா கூறுகின்றோம் நீங்கள் தொடர்ந்தும் யாழுடன் இனைதிருங்கள் ரதி எங்கள் கருத்துகளை பாத்து வெகு விரைவில் நீங்களும் பாக்குவம் அடைவீர்கள் இதை போல நிறை கதை இருக்கு என்கிட்டே ஒவோண்டா போடுவன் மறக்காமல் வந்து வாசிக்கணும் என்ன அப்பிடியே கதை யாரோ எழுதினாலும் ஒரு பச்சை எனக்கும் போட்டிட்டு போங்க ஓகே :D

ரதி: எனக்கு சொல்லி தாறது இருக்கட்டும் முதல்ல நீ ஒழுங்கா போய் தமிழ படி சுண்டல்

Edited by SUNDHAL

இதுவும் ஒரு படிப்பினைகான கதைதான்.

திரும்பி வந்து கல்லு வீதியில் விழுந்ததால் தான் இந்த நிலைமை ஒரு விக்கிரத்தின் முடியில் வைத்திருந்தால் நிலை வேறு. கப்பிகல்லாய் இருப்பதைவிட நாலு உலகம் அறிந்து விட்டு உடைந்து போவது திறம்.

BUGS LIFE என்று ஒரு ஆங்கில கார்டூன் படம் வந்தது ,ஒன்றுக்கும் உதவாது என்று எல்லோராலும் ஓதிக்கிவைக்கப்பட்ட BUG தனித்து வெளிக்கிட்டு போய் நாலு இடம் பார்த்து பின்னர் திரும்பி வந்து முழு BUGS களையும் காப்பாற்றுகின்றது .எதுவும் தெரியாமல் கிணற்றுத்தவளைகளாக கூடியிருந்து கத்துவதை விட்டு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று வெளியில் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

எப்பொழுதும் உண்மை சுடக்கூடியது

இங்கு கருத்துக்களும் அப்படியே

தன் உறவுகளை

தன் இனத்தை வெறுப்பவனே

அல்லது

தான் அதில் இருந்து வேறு பட்ட பெரியவன் என்பவனே இறுதியில் ஒன்றுமில்லாது போகின்றான்.

இடையில்  வருவன எதுவும் அவனுக்கு ஒட்டாதவை.

இதுவே கதையின் கரு.

 

நன்றி

 

சுண்டல்

தொடரட்டும்தங்கள் பணி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர் அர்ஜுன் அண்ணா வித்தியாசமான பார்வை.......

நன்றிகள் வருகைக்கு

கதையின் கருத்தை நீங்கள் தான் சரியா பிடிசிருக்கிரிங்க விசு அண்ணா பாராட்டுக்கள் நன்றிகள் வருகைக்கு

சுண்டல் நம்ப தலைவிர் பாசையில் சொல்வதானால்

கூட்டமாக பன்னிகளாக இருந்து உயிர் வாழ்வதைவிட சிங்கிளாக சிங்கமாக செத்து போயிடலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்த கப்பிக் கல் துண்டு துண்டு சிதறும்போது கலங்கவில்லை. அப்படியான  மனம் அமைந்துவிட்டால் வாழ்வில் துன்பம் ஏது?

 

Spoiler
கூட்டமாக இருந்து மலத்தைச் சுவைத்து உண்டு சேற்றுக்குள் உருளும் பன்றிகளுக்கும் கவலைகள் கிடையாது.

 
 

எல்லாம் நன்மைக்கே என்று எல்லாத்தையும் ப்ளஸாக எடுத்துக்கொண்ட கல் உயர்ந்தது.வாழ்க்கையை பொசிற்றிவாக எடுத்துக்கொண்டு முன்னேபோகக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே நாங்கள் பாக்காத ஆக்களா ரதிக்கு வாழ்கையில அனுபவம் பத்தாது இன்னும் படிக்கணும்.....

எனக்கு நிழலி அண்ணாக்கு எல்லாம் நிறைய அனுபவங்கள் அதனை தான் கதையா கருத்தா கூறுகின்றோம் நீங்கள் தொடர்ந்தும் யாழுடன் இனைதிருங்கள் ரதி எங்கள் கருத்துகளை பாத்து வெகு விரைவில் நீங்களும் பாக்குவம் அடைவீர்கள் இதை போல நிறை கதை இருக்கு என்கிட்டே ஒவோண்டா போடுவன் மறக்காமல் வந்து வாசிக்கணும் என்ன அப்பிடியே கதை யாரோ எழுதினாலும் ஒரு பச்சை எனக்கும் போட்டிட்டு போங்க ஓகே :D

ரதி: எனக்கு சொல்லி தாறது இருக்கட்டும் முதல்ல நீ ஒழுங்கா போய் தமிழ படி சுண்டல்

 

சுண்டல் நான் தமிழ் படிக்கிறது இருக்கட்டும்...முதலில் மரியாதையாக எழுதப் பழகுங்கள் அது தான் நீங்கள் நேசிக்கும் புலிக்கும் அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ அத நீங்கள் எனக்கு சொல்லுற மாதிரி தான் எழுதி இருக்கான்

அதாவது முதல சுண்டல் நீ ஒழுங்கா தமிழ் எழுதி பழகு எண்டு நீங்க சொல்லுற மாதிரி இதில என்னங்க மரியாதை குறைவு? டெல் மீ டெல் மீ?

சும்மா வீட்டில இருக்கிற stressa என்மேல காட்டக்கூடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை..

 

இந்தக் கதையில் வரும் கல்லைப் போல தமக்கு எது நடந்தாலும் அதில் இருந்து பாடம் படிக்காமல் பெருமை பேசும் மனிதர்கள் ஏளாளம் இருக்கின்றனர்.

 

இந்தக்கருத்து நிழலி அண்ணாவின் எழுத்தில் வந்ததனால் வீரியம் இல்லாமல் போய் விட்டது போல..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

 

இப்படி எவ்வளவு பேரை நாம் பார்த்திருப்போம்...!! வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இருப்பவர்களை. ஒரு விதத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஒவ்வொருவரும் இப்படி இருந்து இருப்போம் என நினைக்கின்றேன். காலப் போக்கில் பக்குவம் அடையும் போது எங்கள் தவறுகளை ஒத்துக் கொண்டு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கப் பழகியிருப்போம். அதே மாதிரி எக்காலத்திலும் பக்குவம் அடையாமல் இருப்பவர்களையும் பார்த்து இருக்கின்றோம் தானே. :)

 

 

இது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஏன் எங்கள் அரசியலுக்கு கூடப் பொருந்தும்...முள்ளி வாய்க்காலில் நாம் ஏன் தோற்றோம்?...நாம் செய்த பிழைகள் என்ன?...எதனால் எமக்கு சர்வதேசமோ,இந்தியாவோ ஆதரவளிக்கவில்லை என காரணங்களை தேடாமல்,அதிலிருந்து பாடம் படிக்காமல் மீண்டும்,மீண்டும் செய்ததை திரும்ப செய்தால் எப்படி எமக்கு ஒரு வழி பிறக்கும்?
 
புலிகள் போன பாதையில் போராட்டம் இடை நடுவில் நின்று விட்டது.போராட்டம் தொடர்ந்து செல்ல வேண்டுமானால் புதிய வழிகளைத் தான் கடைப் பிடிக்க வேண்டும்...புலிகளது போராட்டம் இன்றைய கால கட்டத்திற்கு ஒத்து வராததால் தான் இடையில் நின்று விட்டது...ஆனால் புலிகளது கனவு,இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் அதற்கு திரும்ப,திரும்ப சேம் சைட் கோல் போட்டுக் கொண்டு இருந்தால் சரிவராது.
 
ஈழத்தில் பிறந்த எல்லோர‌து கனவும் எமக்கு என ஒரு நாடு வேண்டும் என்பது தான்...அது புலிகளை நேசிப்பவர்களாக இருந்தாலும் சரி,மாற்றுக் கருத்தாளாராக இருந்தாலும் சரி...என்னை பொறுத்த வரை புலிகளது வீழ்ச்சிக்கு மாற்றுக் கருத்த‌ளார்கள் அல்லது எதிர்களை விட‌ தீவிர‌ புலி நேசிப்பாள்ர்கள் தான் முக்கிய கார‌ணம்...எப்படி மாற்றுக் கருத்தாளாரின் புலி வெறுப்பு ஆபத்தோ அதை விட‌ இரு மட‌ங்கு ஆபத்து தீவிர‌ புலி நேசிப்பாளர்களால் புலிக்கு அல்லது மக்களுக்கு இருந்தது/இருக்கிறது/இருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழத்தில் பிறந்த எல்லோர‌து கனவும் எமக்கு என ஒரு நாடு வேண்டும் என்பது தான்...அது புலிகளை நேசிப்பவர்களாக இருந்தாலும் சரி,மாற்றுக் கருத்தாளாராக இருந்தாலும் சரி...என்னை பொறுத்த வரை புலிகளது வீழ்ச்சிக்கு மாற்றுக் கருத்த‌ளார்கள் அல்லது எதிர்களை விட‌ தீவிர‌ புலி நேசிப்பாள்ர்கள் தான் முக்கிய கார‌ணம்...எப்படி மாற்றுக் கருத்தாளாரின் புலி வெறுப்பு ஆபத்தோ அதை விட‌ இரு மட‌ங்கு ஆபத்து தீவிர‌ புலி நேசிப்பாளர்களால் புலிக்கு அல்லது மக்களுக்கு இருந்தது/இருக்கிறது/இருக்கும்.
 

 

இப்ப இப்படி வசனம் எழுதிறதே சிலருக்கு பிழைப்பாப் போச்சுது.

 

சரி எனி வசனத்தை விட்டு விசயத்துக்கு வருவம்..

 

புலிகளின் வீழ்ச்சிக்கு.. மாற்றுக்கருத்தாளர்கள் (இவர்களில் அநேகர்..துரோகிகள்.) செய்த பங்களிப்பு என்ன..

 

தீவிர புலி நேசிப்பாளர்கள் செய்த பங்களிப்பென்ன..

 

உங்கள் பார்வையில் உள்ளதை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்..

 

எந்த வகையில் அவை இரட்டிப்பு மடங்கு என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

 

சும்மா சும்மா... மடங்கு.. வீதம்.. சொல்லக் கூடாது. எதற்கும் ஒரு ஆதாரம் வேண்டும். தமிழர்களிடம் உள்ள பெரிய குறைப்பாடு எதற்கும் ஆதாரமில்லாமல்... கற்பனையில் கதையளப்பது. இதுவும் புலிகளின் மக்களின் தியாகங்கள் மலினப்பட்டு நிற்க ஒரு காரணமாக இருக்கிறது..!

 

களத்தில் புலிகள் போராட அந்தப் போராட்ட நியாயங்களை ஆதாரங்களை உலக அரங்கில் முன்னிறுத்தி இருந்தால் நாம் பயங்கரவாதமாக உள்ளிளுக்கப்பட்டு.. அழிக்கப்பட்டிருக்கமாட்டோம்..!! :rolleyes:

Edited by nedukkalapoovan

நல்ல கதை..

 

இந்தக் கதையில் வரும் கல்லைப் போல தமக்கு எது நடந்தாலும் அதில் இருந்து பாடம் படிக்காமல் பெருமை பேசும் மனிதர்கள் ஏளாளம் இருக்கின்றனர்.

 

 பெருமை பேசி அழிந்தவர்கள் பலர்

  • கருத்துக்கள உறவுகள்

அதான் உங்க சிங்கம் வெள்ளவத்தைல அனாதையா கிடந்தது

 

தேசிய தலைவர் ஒருபோதும் மற்றவர்களின் மரணத்தை வைத்து கிட்டலடிப்பதில்லை. மாறாக எதிரியாக இருந்தாலும் மக்கள் அவர்களின் மரணங்கள் தொடர்பில் மதிக்கச் சொன்னவர் சொல்பவர். அப்படியான தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றும் மக்கள்.. வீரத்தை.. தியாகத்தை உணர மறுக்கும்.. ஒட்டுக்குழுக்களின் நிலைக்கு தரமிறங்கி கருத்து சொல்வது அழகல்ல..!

சுப்பர் அப்பு கதை ரொம்ப அருமை. இன்னும் எழுதுங்கள் இணையுங்கள் வாழ்த்துக்கள்-

வழக்கம் போல புலிவாந்திக்கு கல்லும் தப்பவில்லை.

தேசிய தலைவர் ஒருபோதும் மற்றவர்களின் மரணத்தை வைத்து கிட்டலடிப்பதில்லை. மாறாக எதிரியாக இருந்தாலும் மக்கள் அவர்களின் மரணங்கள் தொடர்பில் மதிக்கச் சொன்னவர் சொல்பவர். அப்படியான தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றும் மக்கள்.. வீரத்தை.. தியாகத்தை உணர மறுக்கும்.. ஒட்டுக்குழுக்களின் நிலைக்கு தரமிறங்கி கருத்து சொல்வது அழகல்ல..!

மன்னிக்கவும் நெடுக்ஸ் எனக்கும் விருப்பம் இல்லை. ஆனால் பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டி இருக்கேஇல்லை என்றால் தணல் பதிலே புத்திசாலித் தனமானது என்று சிலர் நம்பி விடுவார்கள்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் அப்பு கதை ரொம்ப அருமை. இன்னும் எழுதுங்கள் இணையுங்கள் வாழ்த்துக்கள்-

வழக்கம் போல புலிவாந்திக்கு கல்லும் தப்பவில்லை.மன்னிக்கவும் நெடுக்ஸ் எனக்கும் விருப்பம் இல்லை. ஆனால் பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டி இருக்கேஇல்லை என்றால் தணல் பதிலே புத்திசாலித் தனமானது என்று சிலர் நம்பி விடுவார்கள்

 

புரிந்து கொள்கிறேன். நாங்களும் அவர்கள் அளவிற்கு இறங்கிப் போகனுமா என்று எண்ணிப் பார்த்தேன் அதுதான் எழுதனுன்னு தோணிச்சு சுட்டிக்காட்டினேன். மற்றும்படி.. மன்னிப்பு எல்லாம் பெரிய விசயம். அது ஏன் நல்ல கள உறவுகளாய் உள்ள எமக்குள் நல்ல புரிந்துணர்வு உள்ள நிலையில்..! :)

ஒரு கல்லில் இவ்வளவு உண்மையா ..............இவ்வளவு பிரச்சனையா சும்மா கிடந்த கல்ல தூக்கி எறிஞ்சு சாதனை நாட்டிய சுண்டலயுக்கு வாழ்த்துக்கள் ......

சிரிப்புக்குறி போடமுடியல ...........

Edited by தமிழ்சூரியன்

கதை நன்றாக இருக்கிறது.

ஏறக்குறைய நாங்கள் எல்லோருமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். எங்களின் தோல்விகளை நாங்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வது இல்லை.

நானும் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் வீழ்;ச்சியில் நடந்த சாதகங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது உண்டு. அது என்னுடைய மீழ் எழுச்சிக்கு நிறையவே உதவியிருக்கிறது. பாதகங்களை சாதகமாக்குவது ஒரு சிறந்த கலை.

கல்லின் குணவியல்பு நல்லதே!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்படி வசனம் எழுதிறதே சிலருக்கு பிழைப்பாப் போச்சுது.

 

சரி எனி வசனத்தை விட்டு விசயத்துக்கு வருவம்..

 

புலிகளின் வீழ்ச்சிக்கு.. மாற்றுக்கருத்தாளர்கள் (இவர்களில் அநேகர்..துரோகிகள்.) செய்த பங்களிப்பு என்ன..

 

தீவிர புலி நேசிப்பாளர்கள் செய்த பங்களிப்பென்ன..

 

உங்கள் பார்வையில் உள்ளதை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்..

 

எந்த வகையில் அவை இரட்டிப்பு மடங்கு என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

 

சும்மா சும்மா... மடங்கு.. வீதம்.. சொல்லக் கூடாது. எதற்கும் ஒரு ஆதாரம் வேண்டும். தமிழர்களிடம் உள்ள பெரிய குறைப்பாடு எதற்கும் ஆதாரமில்லாமல்... கற்பனையில் கதையளப்பது. இதுவும் புலிகளின் மக்களின் தியாகங்கள் மலினப்பட்டு நிற்க ஒரு காரணமாக இருக்கிறது..!

 

களத்தில் புலிகள் போராட அந்தப் போராட்ட நியாயங்களை ஆதாரங்களை உலக அரங்கில் முன்னிறுத்தி இருந்தால் நாம் பயங்கரவாதமாக உள்ளிளுக்கப்பட்டு.. அழிக்கப்பட்டிருக்கமாட்டோம்..!! :rolleyes:

 

 

மாற்றுக் கருத்த‌ளார்களில் பெரும்பானோர் புலிகளால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் அவர்கள் நட‌ந்து முடிந்த கடைசி யுத்தத்தில் புலிகள் தோற்கவென்றும் என விரும்பினார்களே தவிர‌ முற்றாக அழிய வேண்டும் என்று நினைக்கவில்லை...அவர்கள் புலிகள் தோற்க வேண்டும் என நினைத்ததற்கு கார‌ணம் ஏதோ ஒரு வகையில் தனிப்பட‌ புலிகளால் பாதிக்கப்பட்டது மற்றது தங்களால் முடியாமல் போன போராட்ட‌த்தை புலிகள் முன்னெடுத்து முள்ளி வாய்க்கால் வரைக்கும் வந்ததே பெரிய விட‌யமாக அவர்கள் நினைத்தது...கடைசி யுத்தத்தில் புலிகள் வென்றிருந்தால் புலிகள் பிடிக்க முடியாத  ஒரு இட‌த்துக்கு போய் விடுவார்கள் என நினைத்திருக்கலாம்.
 
புலிகள் முற்றாக அழிய வேண்டும் என அவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை...முள்ளி வாய்க்கால் யுத்தத்திற்கு முன்னர் டக்லஸ் புலிகள் முற்றாக அழியக் கூடாது அவ்வாறு அழிந்தால் அதன் பின்னர் தாங்கள் ஊரில் இருந்து அர‌சியல் செய்வது கஸ்ட‌ம் என தினமுர‌சில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்...அவர்களுக்குத் தெரியும் புலிகள் முற்றாக அழிந்தால் தங்கட‌ நிலை என்ன என்பதை அதனால் அவர்கள் விரும்பியோ/விரும்பாமலோ புலிகளை முற்றாக அழிக்க விரும்பவில்லை...முள்ளி வாய்க்கால் யுத்தத்தின் போது புலிகள் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள பின் வாங்கி காட்டுக்குள் போய் விடுவார்கள் என்று தான் பெரும்பான்மையானோர் நினைத்தார்கள் ஆனால் புலிகள் ஏதோ ஒரு கார‌ணத்திற்காக செய்தது வேறு.
 
இனி தீவிர‌ நேசிப்பாளார்கள் எந்த வகையில் கார‌ணம் என்டால் புலிகள்,தலைமை வன்னியில் இருந்தது... இங்குள்ள பெரும்பான்மையானோருக்கு சர்வதேச பிர‌ச்ச‌னைகள்,புலிகளை ஏன் சர்வதேச‌ம் தடை செய்தது? அந்த தடையை எதிர்த்து இங்குள்ள மக்கள் ஏன் தடை செய்யப்படும் போது வீதியில் இறங்கவில்லை? தங்களையும் பிடித்து உள்ளுக்குள் போட்டு விடுவார்கள் என்பதால் தானே! அப்போதே வீதியில் இறங்கி புலியின் தடையை நீக்க சொல்லி போராடி இருந்தால் ஒருவேளை கடைசி யுத்தத்திற்கு முன்னரே தடை நீங்கி இருக்கும்...யுத்தத்தின் போது எமக்கு சர்வதேச‌ ஆதர‌வு கிடைத்திருக்கும்...இந்த உண்மை எல்லாம் இங்குள்ளவர்களுக்கு தெரியும்...கடைசி வரை சண்டை பிடி என உசுப்பேத்தி,உசுப்பேத்தி முள்ளி வாய்க்கால் அழிவுக்கு கொண்டு வந்து விட்டவர்கள் இவர்கள்...அங்குள்ள போராளிகளை ர‌த்தமும்,சதையும் உள்ள மனிசராய் மதிக்காமல் போராடும் இயந்திர‌மாய் தான் மதித்தார்கள்...தீபன் அண்ணாவோடு சேர்ந்து அவ்வளவு தளபதிகள் இறந்த பின்னர் தானே வீதிக்கு இறங்கினீங்கள் அது வரைக்கும் புலிகள் அழிப்பார்கள்,அடிச்சு பிடிப்பார்கள் என்டு தானே நினைத்தீங்கள்...இதே வேளை மாற்றுக் கருத்துக்களை கொண்டோருக்கு புலிகள் எப்படியும் இந்த யுத்தத்தில் அழிக்கப்பட்டு விடுவார்கள் என ஏதோ ஒரு வகையில் தெரிந்தே இருந்தது அதனால் அவர்கள் யுத்தத்தை நிப்பாட்ட சொல்லித் தான் சொன்னார்கள் ஆனால் நாங்கள் அவர்கள் எதுக்காக இதை சொல்கிறார்கள்? அதன் பின்னனி என்பதைக் கூட‌ ஆராயமல் அவர்கள் புலிகளில் உள்ள பொறாமையில் சொல்கிறார்கள் என்று போட்டு முள்ளி வாய்க்காலில் உள்ள பொதுமக்களையும்,புலிகளையும் அழித்து முடித்தோம்.
 
சுருக்கமாக சொல்வதானால் சர்வதேச‌ அர‌சியலை,இராஜ தந்திர‌த்தை,புலிகளுக்கு சர்வதேச‌த்தில் இருந்த மதிப்பை எல்லாம் நன்கும் தெரிந்திருந்தும் எமது போராட்டத்தை முள்ளி வாய்க்காலில் அழித்ததில் முக்கிய பங்கு தீவிர‌ புலி நேசிப்பாளர்கள் கார‌ணம் என்பது எனது கருத்து...இவர்கள் புலிகள் அழிய வேண்டும் என விரும்பவில்லை ஆனால் புலிகள் எப்படி அடித்தாவது தங்களுக்கு ஒரு வெற்றி செய்தியை தருவார்கள் என எதிர்பாத்தார்கள்...வெற்றி மட்டுமே இவர்களது நோக்கமாக இருந்தது...இப்ப கூட‌ இவ்வளவு அழிவுக்கு பின்னரும் கூட‌ இப்படியான வெற்றிச் செய்திகளையே இன்னும் எதிர் பார்க்கிறார்கள் அதைப் பற்றி எழுதினால் பதிவு நீண்டு விடும்.அது பற்றி தேவையானால் அடுத்த பதிவில் எழுதுகிறேன் 
 
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.