Jump to content

சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்


Recommended Posts

இந்திய சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் தனது 92ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை மாலை இவர் காலமானார்.

 

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்திய இசையை மேற்கத்தேய உலகிற்கு கொண்டுசென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இவர் தனது இறுதிக்காலம்வரை இசையுலகில் ஆர்வமாக இருந்துவந்தார்.

 

ஏற்கெனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் தற்போது மீண்டும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இவரின் மகள் அனோஷ்கா சங்கரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. (தட்ஸ் தமிழ்)

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/54603-2012-12-12-05-01-53.html



The legendary Indian sitar player Ravi Shankar, a major influence on Western musicians including The Beatles and the Rolling Stones, has died at the age of 92, Indian television said.

 

Shankar, who was the father of the American singer-songwriter Norah Jones, died in a hospital in San Diego where he had travelled to undergo surgery, the CNN-IBN network reported on Wednesday.


The prime minister's office confirmed his death and called him a "national treasure."

 

Shankar helped millions of classical, jazz and rock lovers in the West discover the centuries-old traditions of Indian music over an eight-decade career.


He was a hippie musical icon of the 1960s. He played Woodstock and hobnobbed with The Beatles.

Beatle George Harrison labeled him "the godfather of world music."


He also pioneered the concept of the rock benefit with the 1971 Concert For Bangladesh. To later generations, he was known as the estranged father of popular American singer Norah Jones.

 

Shankar collaborated with Harrison, violinist Yehudi Menuhin and jazz saxophonist John Coltrane as he worked to bridge the musical gap between the West and East.



http://www.aljazeera.com/news/asia/2012/12/2012121243149162559.html



2012121243525387580_20.jpg



Renown Indian Sitar maestro, Pandit Ravi shankar performed in

what is said to be his last concert in the city of Bangalore.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரது இசையைப் பல தடவைகள், நேரில் கேட்டுள்ளேன்!

ஒரு மகா மேதை!

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

சென்னை: சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்;அவருக்கு வயது  92.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அமெரிக்காவின் சாண்டியோகாவில் உள்ள ஸ்கிர்ப்ஸ்  நினைவு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.மூச்சுத்திணறல்  கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர்,  நேற்று காலமானார்.

1920 ம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி வாரணாசியில் பிறந்தவர் ரவி சங்கர். ரபீந்த்ரோ  ஷங்கர் சௌதுரி என்ற பெயர் கொண்டவர்.பின்னாளில் பண்டிட் என சிறப்புப் பட்டம்  பெற்றார்.

இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்த பண்டிட் ரவி சங்கர்,இந்திய இசையின்  தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர். கிழக்கிந்திய, மேற்கத்திய இசைகளுக்கு பாலமாகவும்  விளங்கினார்.

இந்திய இசைக் கலையை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் முக்கியமான  பங்கை வகித்த அவர், தனது இறுதிக் காலம் வரை தொய்வில்லாத இசையை வழங்கி  வந்திருக்கிறார்.

 

http://youtu.be/ugIbmTKrcHc



http://news.vikatan.com/?nid=11593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ravi Shankar, Indian sitar maestro, dies

http://www.bbc.co.uk/news/world-asia-india-20690632

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

உண்மையில் உலகப்புகழ் பெற்ற ஓர் கலைஞர் .................இங்கு பல நேர்தேர்லாந்து கலைஞர்களுடன் கிட்டார் சம்பந்தமாக சில தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தேன் இவர்கள் அனைவருமே இந்த மாபெரும் கலைஞனின் திறைமையைப்பற்றி பேசுவார்கள் ....நான் பல இவரது சித்தார் சோலோ நிகழ்சிகளை கேட்டிருக்கிறேன் உண்மையில் சித்தாரின் நரம்புகளை அவர் விரல்கள் அழுத்தும்போது எனது நாடி நரம்புகள் ஒருகணம் புத்துயிர் பெற்று இதையம் தூயையடையும் ................உண்மையில் இசை உலகிற்கு கிடைத்த அற்புதமான உன்னதமான கலைஞர் ..................இவரது இழப்பை எவரும் ஈடுசெய்ய முடியாது ..............அன்னாரது ஆன்மா இறைவனில் இளைப்பாறக்கடவதாக.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.


 

Link to comment
Share on other sites

பல இந்திய இசைத்துறை வல்லுனர்களுடன் ஒப்பிடும்பொழுது இவர்  மேலைத்தேய இசையுடன் கீழைத்தேய இசையை வெற்றிகரமாக இணைத்ததுடன் பல உலகத்தர நிதி சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு தனது நேரத்தை திறமையை தந்து உதவியர்.

நன்றிகள் Robindro Shaunkor Chowdhury aka Ravi Shankar . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

நான் பெரிதும் வியந்து மதிக்கும் இசைக்கலைஞர் பாரத ரத்தினா பண்டிட் ரவிசங்கர் அவர்கள் இயற்கை எய்திய தினம் இன்று. எனது சுயவாழ்வில் மறக்கமுடியாத பல்வேறு காலகட்டங்களில் அவரது இசை என்னுடன் பயணித்திருக்கிறது.

ரவிசங்கர் அவர்களின் திறமையை பறைசாற்ற இந்த ஒரு காணொளி போதும். 1967 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில், கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவரை தமது இசையால் பரவச நிலைக்குக் கொண்டுசெல்கிறார். நிகழ்ச்சியின் முடிவில், அனைவரும் எழுந்து நின்று ஐந்து நிமிடங்களுக்கு மேல் கரவொலி எழுப்பினர். காணொளியின் இறுதியில் உள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் பாப் உலகின் ஜாம்பவான்களான பீட்டில்ஸ் இசைக்குழுவினர் (ஜார்ஜ் ஹாரிசன்) இவரிடம் சித்தார் பயின்றுள்ளனர். இந்திய கலாசாரம், இந்து மதம், ஆன்மிகம் என நம் நாட்டின் சிறப்பியல்பியல்புகளை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்ற கலாசாரத் தூதுவர்.
...

92 ஆண்டுகள் வாழ்ந்து அவர் செய்துள்ள கலை சேவைக்குத் தலைவணங்குகிறேன்.
 
 

 

நன்றி முக புத்தகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளையாக இவர் தமிழர்களின் ஒழுங்கில் கச்சேரி நடத்த கனடா வரவில்லை.....வந்திருந்தால்.... :(:rolleyes::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.