Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்த்துகளா வாழ்த்துக்களா சரியான சொல்லு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Quote by 

கந்தப்பு "

வாழ்த்து

(க்)

கள்" 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113007#entry836394

 

 

வாழ்த்துகளா வாழ்த்துக்களா சரியான சொல்லு?

 

விளக்கமா விளக்கமளிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வாழ்த்துகளா வாழ்த்துக்களா சரியான சொல்லு?

 

விளக்கமா விளக்கமளிக்கவும்

 

துரியோதனன் முத்துக்களை, எடுக்கவோ, கோர்க்கவோ என்று கேட்டான்!

 

துரியோதனன் முத்துகளை, எடுக்கவோ, கோர்க்கவோ என்று கேட்டான்!

 

 

மாதுளம் முத்துக்கள் போல உனது பற்கள்!

 

மாதுளம் முத்துகள் போல உனது பற்கள்!

 

 

வாத்துக்கள் நீந்துகின்றன!

 

வாத்துகள் நீந்துகின்றன!

 

 

மத்துக்களால் தயிர் கடையப் படுகின்றது!

 

மத்துகளால் தயிர் கடையப் படுகின்றது!

 

 

புத்துக்களில் பாம்புகள் வசிக்கும்!

 

புத்துகளில் பாம்புகள் வசிக்கும்

 

 

உடையார், மேலுள்ள ஐந்து வசனசங்களில், எவை சரியென நினைக்கின்றீர்கள்? :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமே சரியானவைதான். நாம் கூறும் வாக்கிய அமைப்புக்களுக்கு ஏற்றவாறு இரண்டும் மாறி மாறி வரும். இலக்கண முறைப்படி க்,த்,கின்று போன்ற இடை நிலைகள் பன்மைக்கே வரும் ஆனால் வாக்கிய அமைப்புக்களுக்கு ஏற்பவும் மாறுபடும்.
உதாரணம்: உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாக்கியத்தை அழகாக்கக் கூறலாம். தவறில்லை
நான் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன் என்று வரும்.வாழ்த்துக்கள் கூறினேன் என வராது.
நன்றி வணக்கம் போன்றவைகள் கடைசிவரை நன்றிகள் வணக்கங்கள் என வராது. ஆனால் பலர் தவறாகவே கூறுகின்றனர்.
எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரன் & சுமே பகிர்வுக்கு 

 

 

’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்து-க்களா?வாழ்த்து-களா??
 

மு.கு: 
இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்த "மிகைத் திருத்தம்"; வாழ்த்து-க்கள் தவறா?

தொல்காப்பியர் லூசா? (அ) சில பதிவர்கள்/ கீச்சர்கள் லூசா?:)
* சரியான ஒன்றைத் தவறென்று ஆக்கி...
* தமிழ் உணர்வாளர்களை இதற்காக "டுமீல்/ டுமீலன்" ன்னு இளக்காரம் பேசி...
* ஓ இது தவறோ?-ன்னு நம்மையே திகைக்க வைத்து... 

கவுண்டர் பாணியில்: "டேய்....ஒங்க சிகைத் திருத்தம் பண்ணுங்க! ஏன்டா மிகைத் திருத்தம் பண்றீங்க"?:)

ட்விட்டரில் இப்ப = Twitlonger/ பஞ்சாயத்து சீசன்!:) 
சீசன் சிறப்பு நிகழ்ச்சியாக, ஒரு கதை போல் பார்க்கும் முயற்சி! ஆர-அமரப் படிங்க!:)


* வாழ்த்து-க்களா? வாழ்த்து-களா??
* எழுத்து-க்களா? எழுத்து-களா??
= இந்தப் பஞ்சாயத்துக்கு....பாண்டியன் பறை அறிவிச்சி, தருமி வந்து, எந்த நக்கீரனின் தாடியைத் தடவப் போறானோ?:)

90 நாள் அஞ்ஞாதவாசம்! 
இப்போதைக்கு என் நெலமை = கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு:)
thinking_about_life____by_drevilknevel.j

தமிழின் பால் மாறா ஆர்வமுள்ள நண்பன் பலராமன் (@balaramanl)...எப்படியோ #365paa வில் என் அஞ்ஞாதவாசத்தை மோப்பம் பிடிச்சிட்டான்!:)
அவன் கேட்டுக் கொண்டதால், என் பல்வேறு யோசனைக்கு நடுவே.....Figure இல்லா ஆப்பிரிக்க விமானத்தில் இப் பதிவு:)

பொதுவா, இணையத்தில் எது ஒன்னும் பரவும்! அதுவும் ட்விட்டர் வேகம், சுனாமி வேகம்!

* ஷைலு பிரிட்ஜூ நாத்தம் அடிக்குது என்ற சமுதாயச் சேதி ஆகட்டும்....
* சில்க் ஸ்மிதாவின் ஆவி, வித்யா பாலனை மன்னிக்குமா? என்ற அறிவியல் ஆகட்டும்....
* அன்னக் கிளியா? சின்னச் சின்ன ஆசையா? போன்ற Debate ஆகட்டும்....
140-இல் நடக்குறாப்பல, வேறெங்கும் நடத்த முடியாது!:)

தமிழும்......இதுக்கு விதிவிலக்கு அல்ல!
எழுத்துப் பிழைகளை... ஒரு பள்ளிக் கட்டுரையில் கண்டுபுடிக்கறதை விட, 140இல் கண்டுபுடிப்பது எளிது!
பளிச்-ன்னு பல் இளிப்பாள்:))
அவளை "Correct" செய்ய சில ட்வீட்டர்களும் ரொம்ப ஆர்வமா முனைவார்கள்!:)
tamil_typo.JPG

ஆனா.....ஆனா......

ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி ன்னு,
ஒட்டடையோடு சேர்த்து...
வீட்டின் உயர்ந்த பொருட்களையும் உடைத்து விடுகிறார்கள்!
அப்படி ஆனதே....வாழ்த்து-க்கள் "தவறு" என்ற பரவல்!

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியானதையும், தவறு-ன்னு அடிச்சித் "திருத்துவது"

பிரபலமானவர்கள் சொல்வதால், இது பரவியும் விடுகிறது!
இழப்பு = தமிழ் மொழியிலுக்கு :(

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! = இனி, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், தரவு (ஆதாரம்) கேளுங்க:)
பலரும் "அபிப்ராயம்" சொல்லுறாங்களே தவிர, தரவு காட்டுவதில்லை!

மொழி இயல் = ஒருவரின் நம்பிக்கையோ/ புராணக் கதையோ அல்ல, அப்படியே ஏத்துக்கிட்டு போவதற்கு!
என் ஆளுங்க நான் சொல்லுறதை ஏத்துக்கட்டும், உன் நண்பர்கள் நீ சொல்வதை ஏத்துக்கட்டும்-ன்னு தனிமனித ’ஜ’ல்லி அடிக்க முடியாது:)

அறிவியலைப் போலவே = மொழியியல்!
அதனால்.....சத்யராஜ் style இல்....தரவு தரவு!:))
tholkaapiyam.jpg
வாழ்த்து-க்கள் vs வாழ்த்து-கள்; Jollyஆ, கதை போலப் பார்க்கலாமா?

திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" ன்னு இருக்கும்! -"கள்/ க்கள்" இருக்காது! => கள்-ளுண்ணாமை! :))
= வாழ்த்து - ஒருமை!
= -கள் (அ) -க்கள் ன்னு விகுதி சேர்த்தால் வருவது = பன்மை!

சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்கு மட்டும் தான் பயன்படுத்துறது வழக்கம்
இன்னிக்கி...எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:)))

ஒருமையை -> பன்மை ஆக்க, தொல்காப்பியர் ஒரு formula சொல்றாரு! = "விகுதி சேர்க்கவும்"
* ஆட-வன் = ஆட-வர்
* பெண் = பெண்-டிர் 
* சான்-றோன் = சான்-றோர் 

அர், இர், ஓர் = எல்லாமே பன்மை விகுதி! ஆனா கவனிச்சிப் பாருங்க! எல்லாமே உயர் திணை தான்!
* யானை = யானை-யோர் ன்னு சொல்லுறதில்ல!:)
* யானை = யானை-கள்!

=> So... அஃறிணைப் பன்மை விகுதி = கள்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
கொள்வழி உடைய பல அறி சொற்கே (தொல் - சொல்லதிகாரம்)

கள்ளொடு சிவணும் = சிவன் கள்ளு குடிச்சாரு ன்னு, டைப் டைப்பா, அர்த்தம் பண்ணப்படாது:) பாவம் சிவபெருமான்! கருணையே உருவானவரு! விடம் தான் குடிச்சாரு! கள் அல்ல!
சிவ"ன்" = கண்ணு வேணும் ன்னா மூனா இருக்கலாம், ஆனா சுழி ரெண்டு தான்:)

இங்கே "சிவணும்" ன்னா சேரும்-ன்னு பொருள்!
கள்ளொடு சிவணும் = -"கள்" என்ற விகுதியோடு சேரும்!

இன்னொரு techniqueஉம் சொல்லிக் குடுக்குறாரு, தொல்சு!:)
கலந்தன கண்ணே! கழன்றன வளையே
கலந்தது ன்னு சொல்லாம, கலந்தன = பன்மை! இப்படி, வினை முற்றை வைத்தும், ஒருமையா, பன்மையா ன்னு தெரிஞ்சிக்கலாம்!

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (தொல் - சொல்லதிகாரம்)
pulikesi_bush.jpg
ஆனா, ஒரு பெரிய பிரச்சனை வந்துருச்சி!
= படிச்ச மனுசன், ரொம்ப மரியாதை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டான்!:)

சில ஆதீனங்கள்..."யாம் அறிவோம்!" ன்னு சொல்றாங்களே... அது போல வச்சிக்குங்களேன்:)
அதென்னடா....யாம் அறிவோம்? "நான் அறிவேன்"-ன்னா என்னவாம்?
ஒருமை = ஒரு மாதிரியா இருக்காம்! பன்மை தான் = மரியாதையா இருக்காம்:)

* புலவன் = மரியாதைக் குறைச்சல்!
* புலவர் = மரியாதையா இருக்கு!:)

ஆனா, அர் = பன்மை விகுதி ஆச்சே? ஆட-வன் = ஆட-வர்;
இப்போ, பன்மையைக் கொண்டு போய், மரியாதைக்கு வச்சிட்டோம்-ன்னா.... பன்மைக்கு என்னா பண்ணுறதாம்?
விகுதியோடு-விகுதி சேர் => அரசு + (அர் + கள்)

-கள் விகுதியை, அஃறிணைக்கு மட்டும் வைக்காம, மரியாதைப் பன்மைக்கும் வைக்கலாம் ன்னு, மாற்று ஏற்பாட்டைச் செஞ்சாரு!
* மன்னன் - மன்னர் = ஒருமை
* மன்னர் - மன்னர்கள் = பன்மை

அரசு-அர்-கள் = This is like double plural! :))
In English, King - Kings!
King, Kinger, Kings கிடையாது:) மருவாதை தெரியாத பயலுவ!:)

திராவிட மொழிகளில் தான் "மரியாதைப் பன்மை" ன்னு நினைக்கிறேன்!
தெலுங்கில்:
* ஒருமை: கிருஷ்ண தேவ ராஜு, கிருஷ்ண தேவ ராஜூலு!
* பன்மை: ஆந்திர தேச ராஜுலு

நாய் = குக்க; நாய்கள் = குக்கலு!
Hence, ட்வீட்டர் = ட்வீட்டர்லு :)) மரியாதை குடுக்குறா மாதிரிக் குடுத்து, அஃறிணை ஆக்கீறலாம் போல இருக்கே:)
qbq5.jpg

Matter க்கு வருவோம்! -"கள்" எப்படி -"க்கள்" ஆச்சு???

தொல்காப்பியத்துல சொன்னதே தான்!.. "கள்/ க்கள்" = ஒற்று இரண்டாகும்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
அளபிற் குற்றுயிர் இரண்டு ஒற்றாகும்

இப்படி இரண்டு ஒற்று... க்கள் ன்னு மிகுவதை, பல இடங்களில் காணலாம்!
* ஆ = ஆ-க்கள்
* மா = மா-க்கள்
ஊர்க் குறு மா-க்கள் வெண் கோடு கழாஅலின் (புறநானூறு)

இலக்கண ஆசிரியர்கள், இதைச் சரளமாகப் பயன்படுத்துவர்;
Ex: "ல, ள -க்கள் திரிந்த ன ண -க்களுக்கு முன்னின்ற மகரம் குறுகும்"

அதே கதை தான்!
= முதலில் அஃறிணை மட்டுமே...
= ஆனா, மரியாதைப் பன்மைத் தாக்கத்தால், ரெண்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
= பூ= பூக்கள் & குரு = குருக்கள்

ஓக்கேடா இரவி...புரிஞ்சிருச்சி! -கள், -க்கள் = ரெண்டுமே பலவின்பால் விகுதி தான்!
ஆனா.. என் கேள்வி என்ன-ன்னா: எதை, எங்கே பயன்படுத்தறது? அதைச் சொல்லலீயே? குரு=குருக்கள் போல, வீடு=வீடுக்கள் ன்னு எழுதலாமா?:))
tholkaapiyar.jpg
இங்க தான் "டண்-டணக்கா" இருக்கு!:)

குரு = குருக்கள்! ஆனா...வீடு = வீடுக்கள் அல்ல!
Fan = Fans! ஆனா Man = Mans ன்னு கேட்போமா?:) Man = Men!

பலா + பழம் = பலாப் பழம்
மா + பழம் = மாப் பழம் ன்னு சொல்லலாமே? ஏன் மாம்பழம்?:)
இதுக்குப் பேரு தான் = மரபியல்! (சொல்லதிகார - விளி மரபு)

புழுக்கள், பசுக்கள், குருக்கள், உடுக்கள், எழுத்துக்கள்...
புழுகள், பசுகள், குருகள்-ன்னு சொல்லிப் பாருங்க! எப்படி இருக்கு? :)

= புழுகள் சரியா? புழுக்கள் சரியா??
= புழு-க்-கள் = புழுவின் கள் = Chinese Soup-ன்னு... சில குசும்பு புடிச்ச நாத்தனார்கள் அர்த்தம் பண்ணிக்கலாம்:)
= எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து ன்னு, double double meaningல்ல கெக்கலிப்பாய்ங்க!!

ஆனா...."எழுத்து-க்கள்" ன்னு எழுதற "முட்டாப் பசங்க" யாரு யாரு?
= தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
= இளம்பூரணர்
= மணக்குடவர்
= ஈழத்தின் சைவத் தமிழறிஞர், ஆறுமுக நாவலர்
= All of the Above 'முட்டாள்-ஸ்":((

நானா அடிச்சி விடல... இங்கிட்டு போய் முழு உரையும் படிச்சிக்கோங்க! கீழே படமும் குடுத்திருக்கேன்
http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ன்னு சொல்லுவாய்ங்க! அவரின் தமிழ் அறிவு, எந்த Tweeter க்கும் இளைச்சது கிடையாது!

நீங்களே மொத்த உரையும் வாசிச்சிப் பாருங்க...
எத்தனை முறை..."எழுத்து-க்கள், "எழுத்து-க்கள்" ன்னு... பயன்படுத்தறாரு-ன்னு தெரிஞ்சிப்பிங்க!
ezhuthukkal.JPG

பாத்தீங்கல்ல? ஆனானப்பட்ட தொல்காப்பிய ஆசிரியர் இலக்கணப் பிழை பண்ணிட்டாரா??? :))
“மொழி மரபியலை” நம் Ego வுக்கு அணுகாமல்....தமிழைத் தமிழாக அணுகிப் பார்த்தா, அப்போ தானுங்க இது புலப்படும்!


சரிப்பா... சாதாரண ஒரு சொல்லு; இதுல ஏன் இம்புட்டு உறுதி காட்டுறேன்?

= ஏன்னா, இதை வச்சியே, #TNFisherman இல், தமிழ் உணர்வாளர்களை, "டுமீல், டுமீலன்ஸ்" ன்னு இளக்காரம் பேசியதால்..
= அந்தப் "பண்டிதாள்", இப்போ எங்கே போய் மூஞ்சியை வச்சிப்பாங்க? நச்சினார்க்கினியருக்கு எதிர்ப்பேச்சு பேசுங்களேன் பார்ப்போம்!

நான் புடிச்ச முசலுக்கு ஆறே கால், என் முருகனுக்கு ஆறே தலை என்பதற்காக அல்ல!:)
மொழிவளம் = அதுக்காகத் தான்! 
தமிழ் மொழி, எக்காரணம் கொண்டும், தன்னிடம் உள்ள நல்ல சொற்களை இழந்து விடக் கூடாது!!

இது தொல்காப்பியர் தொட்டு வந்த மரபியல்!
.... அதை over night இல் tweet போட்டு, வீசி எறிந்து விட முடியாது! = இதுவே மொழியியலார் ஆதங்கம்!

மத்தபடி, கற்றது கை மண்ணளவு! = திருத்திக் கொள்ள வெட்கப்படவே மாட்டேன்;
தமிழ்க் கடலைப், பூனை போல் நக்கி நக்கிக், காலியாக்கப் பாக்குறேன்-ன்னு கம்பனே சொல்லுறான்!

அப்படித் தான் அன்னிக்கு, @naanraman என்பவர் செய்வினை/ செயப்பாட்டு வினை ன்னு கேட்ட கேள்விக்கு, நானும் @nchokkan சாரும் ஆடிப்போனோம்:)
அவர் யாரு-ன்னே தெரியாது! ஆயினும் அவர் சுட்டிக் காட்டியதை, உடனே திருத்தி, மன்னிப்பும் கேட்டு, தன்வினை - பிறவினை ன்னு மாற்றி இட்டேன்!
------------

இன்னோன்னும் சொல்லணும்!
மொதல்ல, எழுத்து-க்கள் இலக்கணப்படியே தவறு ன்னு பேசிக்கிட்டு இருந்தவங்க.....
இப்போ Tune ஐ மாத்தி....., "அனர்த்தம்" வந்துறப்படாதே ன்னு கவலைப் படுறாங்களாம்:)

எழுத்து-க்-கள் = "போதை" தரும் எழுத்து!
அப்போ Fruits = பழங்-கள்?
= ரொம்ப நாள் புளிச்சுப் போன கள்ளா?:)
இனி பழங்கள் ன்னு யாரும் எழுதாதேள்; "பழம்ஸ்" ன்னு எழுதுங்கோ! ஆசீர்வாதம்!:)

* வாழ்த்து + க் + கள் = 'குவார்ட்டரோடு' கூடிய வாழ்த்து-ன்னா...
* அப்போ, வாழ்த் + துகள்? = வாழ்க்கையே தூள் தூளாப் போவட்டும்??
= இப்படி நாக்கால தமிழ்ச் சொற்களை வெட்டி வெட்டிக் கெக்கலிப்பது = மட்டமான மனப்பான்மை!:(

"காய் தொங்குது" = பலான அர்த்தமெல்லாம் சொல்ல முடியும்:)
அதுக்காக, "காய்" என்பதை மொழியில் இருந்தே துரத்திடுவோமா?

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சங்கேத மொழி இருக்கும்!
* கல்லூரி மாணவர்கள் ’பாஷை’
* டீக்கடை”பாஷை’
* அவாள் ’பாஷை’
* சென்னைத் தமிழ் ன்னு நிறைய...

கல்லூரிப் பசங்க - "காய்" ன்னா... நமுட்டுச் சிரிப்பு, சிரிக்கத் தான் செய்வாங்க:)
எடக்கு பண்ணுறாங்கன்னு, மொழியை விட்டே துரத்தீற முடியாது!
------------ 

சிறு, நீர்த் துளி உன் மேல் பட்டது
= இந்தக் காலத்தில் இப்படிச் சேர்த்துச் சொன்னா, எல்லாருக்குமே நெருடும்:)) ஏன்னா சிறு-நீர் universalஆக ஒன்றைக் குறிக்கத் துவங்கி விட்டது!

= ஆனா,காய் என்பதோ, எழுத்துக்கள் என்பதோ, universalஆக ஒன்றைக் குறிக்கவில்லை!  
காய் / எழுத்துக்கள், இன்னிக்கும் பொதுப் புழக்கத்தில் இருக்கு!

இப்படிப் பரவலாக இருக்கும் ஒன்றை, "எழுத்து-க்-கள்".. நாக்கால வெட்டி வெட்டி, அச்சொல்லே காணாமப் போவ..நாமே வழி செய்யலாமா?:((
------------

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியாக இருக்கும் ஒன்றை... தவறு ன்னு "திருத்துவது":)

யாதும் ஊரே, யாவரும் கே"ளீ"ர் ன்னு எழுதினா.... அப்போ....கே"ளி"ர் = உறவினர் ன்னு திருத்துங்க! ஆனா, வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் என்பதை அல்ல!

* தொல்காப்பியர் - நச்சினார்க்கினியர் பலுக்கல்,
* ஈழத்து அறிஞர் பலுக்கல்
* இன்றைய இராம.கி ஐயா வரை பயன்படுத்துவது...
* அதை "மிகைத் திருத்தம்" பண்ணித் துரத்திடாதீங்க....

= இதுவே தமிழுக்காக, உங்களிடம் என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!


Okay... எழுத்து-க்கள் சரியே = தொல்காப்பிய ஆசிரியர்கள் மூலம் பார்த்து விட்டோம்!
ஆனா, எங்கே -கள் போடுறது? எங்கே -க்கள் போடுறது? = சுருக்கமாப் படம் போட்டுச் சொல்லட்டுமா?

விரிவா நூலகத்தில் பாத்துக்கிடலாம்! Here = http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84

இன்னோன்னும் சொல்லிடறேன்:
வாழ்த்து-க்கள் கட்சிக்காரவுங்க, -"க்கள்" என்பதற்கு, குற்றியலுகர விதியை ஆதாரமாக் காட்டுவாங்க! ஆனா அதுவும் தவறே:)
நாம தான் எந்தக் கட்சியிலும் நின்னு பேசுற சுபாவம் இல்லீயே!:) தமிழைத் தமிழாக அணுகவே பிடிக்கும்!

குற்றியலுகரப் புணர்ச்சி:
பிடித்து + கொள் = பிடித்துக் கொள்! =>ஒற்று மிகும்!
இதே போல வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் ன்னு எடுத்துக்கக் கூடாது!

ஏன்னா இவ்விதி, ரெண்டு "சொற்களுக்கு" இடையே தான்!
* "-கள்" = சொல்லு அல்ல! அதுக்குத் தனியாப் பொருளும் இல்ல!
* "-கள்" = விகுதி! அது வரு"மொழி" அன்று!
So, முன்பே சொன்ன விகுதியின் விதியைத் தான் எடுத்துக்கணும்! குற்றியலுகர விதியை அல்ல!

Ok, Now....Let us come to the "Egg-jamples" :)) 

1) "க்" மிகலாம்...

வல்-ஒற்றோடு வருங்கால், மூவெழுத்து, அதற்கும் அதிகமான  "உ"கரச் சொற்கள்...
* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள்
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள்

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

வாழ்த்து -ல, த் வல்லின ஒற்று => மிகலாம் = வாழ்த்துக்கள்!
கொலுசு -ல, ஒற்றே இல்ல => So, கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்...குறிலா வந்தா = மிகணும்!
=> பசுக்கள், அணுக்கள், தெருக்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்..நெடிலா வந்தா = மிகாது!
=> வீடுகள், மாடுகள், ஓடுகள்

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்! (ஐ-ஒளகாரக் குறுக்கம் அற்றவை)
=> பூக்கள், மாக்கள், ஈக்கள்

3) "க்" மிகவே கூடாது

ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
------------ 

அவ்ளோ தானுங்க! இதுக்கா Twitter-இல் வாய்க்கா வரப்புத் தகராறு?:) muruga! me the appeatu:)
Lemme put this as a ready reckoner for the benefit of all...(save this img) 
<added above;="" after="" already="" but="" explanation="" in="" it's="" line="" post:="" see="" the="" there!="" this="" ஒற&#3021;ற&#3009;="" மட&#3021;ட&#3009;ம&#3015;="" ம&#3007;கல&#3006;ம&#3021;="" வந&#3021;த&#3006;ல&#3021;="" வல&#3021;ல&#3007;ன="" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; ">
vaazthukkal.JPG

வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க....
என்னமோ ஏதோ ன்னு பயந்து போயி, 
நடுவால மதம் மாத்திக்கிட்டவங்க....
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்! எழுதுங்க!

பாவ மன்னிப்பு கேக்க வேணாம்!:) ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)
 

sex%2Bhash%2Btag.jpg
முடிப்பாக... ட்விட்டர் மக்களுக்குச் சிறிய வேண்டுகோள்:

1) Tamizh has a Written Constitution! That too with a version history of 2000 years!
= Never “banish” rightful words from “heritage”!
------------------------------------------------

2) அப்போ தவறான சொற்களை எப்படித் தான்யா அடையாளம் காண்பது?

= யார் தவறு-ன்னு சொல்றாரோ...
= நானே சொன்னாலும், சொக்கன் சொன்னாலும், வேறெவர் சொன்னாலும்.....தரவு கேளுங்கள்= தரவு தரவு :))

You yourself can search = வாழ்த்துக்கள் site:tamilvu.org/library
A simple google on library, inside original texts (thol-kaapiam or nan-nool), will show an usage pattern! No need to read big big poems for this:)
------------------------------------------------

3) தொல்காப்பியரை அவ்ளோ லேசுல எடை போட்டுறாதீக
தமிழ் சார்ந்த ஐயம் எதுவாயினும், நீங்களா முடிவு கட்டி.... ட்வீட்டைப் போட்டுறாதீக:) தொல்காப்பியம் = தட்டுங்கள்! திறக்கப்படும்:))

ஐயா -> அய்யா
= தந்தை பெரியார் தான் ஐ->அய் ன்னு தேவையில்லாம மாத்தினாரு-ன்னு சில தமிழ்ப் "பண்டிதாள்" பெரியாரைக் கேலி பேசினாங்க-பேசுவாய்ங்க!
= தமிழ்ப் போர்வையில் இருக்கும் சம்ஸ்கிருத-பாசமிகு பண்டிதாள்!

ஆனா, பெரியாரைத் திட்டும் இவர்கள், தொல்காப்பியர் மேலே கை வைக்க முடியுமோ?:)
2000 ஆண்டுக்கு முன்பே, தொல்சு, எழுத்துச் சீர்திருத்தம் குறிச்சி வச்சிட்டுத் தான் போய் இருக்காரு - வியப்பா இல்ல?
"அ"-கரத்து இம்பர் ,"ய"-கரப் புள்ளியும்
"ஐ" என நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும் (தொல்-எழுத்ததிகாரம்)

பெரியாருக்கும் முன்னமே,இப்பிடிச் சிந்திச்சவரு தான் இந்தாளு = தொல்காப்பியர்!:)
ஆதித் தமிழ்த் தந்தை = அவரை விட, உங்க அரைகுறை tweet பெருசில்ல-ன்னு உணரவும்!

twitter-facebook-joke-490x3571%2B%25281%

4) இணையத்தில் "பிக்காலி" ன்னு திட்டுறவன் கூட ஓக்கே, ராசி ஆயீருவாங்க!:) ஆனா எதிர்ப்பாய் ஒன்னுமே பேசாம... தரவோட மட்டும் பேசிட்டா அம்புட்டு தான்= ஆதாரமாடா குடுக்குற? நீயே என் எதிரி!:)

= கருத்து வேற, மனிதம் வேற!

என் நண்பர்கள்-ன்னா.....
= என் கருத்துக்கு உடன்பட்டே இருக்கணும்;
= என் உணர்ச்சிகளையே பிரதிபலிக்கணும் ன்னு மனசைக் கல்லு ஆக்கிக்க வேணாமே! Plz..
------------------------------------------------

5) கருத்து எதிரா இருந்தாலும், மனம் என்றுமே ஒன்றான குணம்!
= தாமே பெற வேலவன் தந்தது!

"டேய் முருகா"-ன்னு டேய் தான் போடுறேன்…கோச்சிக்கவே மாட்டான்:)

உடனே, "டேய் பெருமாள்"-ன்னு சொல்லேன் பார்ப்போம் -ன்னு, சமயக் கணக்கா வம்பிழுத்தா?..
சொல்ல மாட்டேன்! ஏன்னா = அப்பா!:)
காதலன்/ காதலி/ ஆருயிரைத் தான் டேய் போட முடியும்:) டேய் முருகா!:)
------------------------------------------------ 

6) Finally.....
#TNFisherman, #EelamTamils, #MullaiPeriyar போன்ற ட்விட்டர் முயற்சிகளில், எழுத்துப் பிழை வரலாம்! அது ஒன்னும் "பஞ்சமா பாதகம்" இல்லை!
= இரங்கல் வீட்டிலே சந்திப் பிழை காண்போமா? :(

ஆனா....
மொதல்ல தமிழை ஒழுங்கா எழுதுங்கடா டூமீல் - டுமீலன்ஸ்; அப்பறம் #TNFisherman கோஷம் போடப் போவலாம்- போன்ற "மட்டமான இளக்காரங்கள்" வேண்டாமே!

இதுல @nchokkan அணுகுமுறை பிடிக்கும்! மாற்றுக் கருத்தே இருப்பினும், பிழைகளுக்காக, இளக்காரம் செய்யாத குணம்!
(Note: நான் எழுதுன இந்தப் பதிவுலயே கிரந்தம் அங்கும் இங்கும் இருக்கும்:) ஆனாலும் முடிஞ்ச வரை தவிர் = முயற்சியே முக்கியம்:) 

"எழுத்துப் பிழைக்காக, தமிழ் சார்ந்த முயற்சிகளை இளக்காரம் செய்யேன்" ன்னு உறுதி கொள்வோம்!
------------------------------------------------ 

@iamkarki கிட்ட, கடன் பாக்கி இருக்கு; எலே...எத்தியோப்பா-வுல ஆப்பிரிக்க குழந்தைங்க முகாமில், விஜய் பாட்டா பாடுதுங்க = என் உச்சி மண்டைல சுர்ருங்குது = I had the shock of my life: )

அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! வர்ட்டா?:)

vaazthukkal.JPG
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதில் பெருங்குழப்பம் உடையார்..என்னால் க் சேர்த்தே எல்லா இடத்திலும் எழுத வருது..இதனால் வல்வை அக்காவிடமும் பலதடவை யாழில் பேச்சு வாங்கி இருக்கிறன்..ஆனால் அது எப்படியோ வேகமாக எழுதும்போது வந்துவிடுகிறது..இப்ப எதுதான் சரின்னு இறுதி முடிவை சொல்லுங்கப்பா யாராவது..எனக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கு... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் இதில் பெருங்குழப்பம் உடையார்..என்னால் க் சேர்த்தே எல்லா இடத்திலும் எழுத வருது..இதனால் வல்வை அக்காவிடமும் பலதடவை யாழில் பேச்சு வாங்கி இருக்கிறன்..ஆனால் அது எப்படியோ வேகமாக எழுதும்போது வந்துவிடுகிறது..இப்ப எதுதான் சரின்னு இறுதி முடிவை சொல்லுங்கப்பா யாராவது..எனக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கு... :(

 

சுபேஸ் எனக்கும் இந்த பிரச்சனையிருக்கு, யாராவது சொல்லுங்கள் ஏது சரியென

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மணிகட்டிய மாடுகள் கூறுவதைத்தான் ஏற்பீர்களோ ??? :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு... உடையார். காளமேகப் புலவர் புங்கையூரானும், கந்தனுக்கே... சுட்ட பழம், வேணுமா... சுடாத பழம் வேணுமா என்று.. நாவல் பழத்தை வைத்து, வித்தை காட்டிய ஔவையார் சுமோவும்.. விவாதித்து, நல்ல முடிவை... சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
சுபேசுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தான் எழுத வேண்டும் அதை விடுத்து சுபேசுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் என்பது ஏனோ,தானோ என எழுதுகின்ற மாதிரி உள்ளது :lol:
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் என்பதே சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ தமிழ் சிறி அவ்வையார் வித்தை காட்டவில்லை முருகன்தான் அவ்வைக்குக் காட்டினார். :D

வீடுகள், வீடுக்கள், வீட்டுக்கள் - இதில் 'வீடுகள்' சொல்ல இலகுவாக உள்ளது. வாழ்த்துக்கள், வாழ்துகள் - இதில் வாழ்த்துக்கள் சொல்ல இலகுவாக, நாவிற்கு நயமாக உள்ளது. தமிழ் இலக்கணம் படித்தவர்களிடம் இதற்கு சரியான விளக்கம் கிடைக்கும். 'சுபெசிற்கு எனது பிறந்தநாள் வாள்துகளை (Saw Dust) தெரிவித்துக் கொள்கிறேன்' என எழுதினால் எப்படியிருக்கும்.

Edited by தப்பிலி


சீமான் படம் ஒன்றின் தலைப்பை கலைஞர் வாழ்த்துகள் என மாற்ற சொன்னபோது இதே விவாதங்கள் எழுந்தது. வாழ்த்துகள் என்பதே சரியானது என்றும் வாழ்த்து என்பதன் பன்மை வடிவமே வாழ்த்துகள் என்றும் கூறியிருந்தார்.

ஆடு ->ஆடுகள்
மாடு -> மாடுகள்
கண் -> கண்கள்


இந்த சலசலப்பை ஒட்டியே ஆனந்த விகடனிலோ /குமுதத்திலோ வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி? என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் புலவர் எழுதியிருந்தார். அதில் அவர் 

 

கள் என்பது ஒரு தனிச் சொல் இல்லை, பன்மை குறிக்கும் பின்னொட்டு என்று சொல்வர் சிலர் (வாழ்த்துகள்) .

உகரத்தில் முடிவதால் ககர ஒற்று (க்) சேர்க்கவேண்டும் என்பர் சிலர்(வாழ்த்துக்கள்).

இரண்டுமே தவறில்லை இரண்டு வழக்கும் ஏற்று கொள்ளக்கூடியதே என்று கூறியிருந்தார்.

 

நான் வாழ்த்துகள் என்று எழுதுவதே வழக்கம்.
 

 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்


கள்  விகுதி பன்மைக்கே வரும் என்றாலும் மரியாதைப் பன்மைக்கும் கள் சேர்ப்பர். ஒருவருக்கு வாழ்த்துச் சொல்லும்போது அவரைமரியாதை செய்கிறோம். அதனால் கள் விகுதி சேர்ப்பது சொல்லுக்கு அழகையும் கேட்பவர்க்கு மகிழ்வையும் தரும். ஆனால் நான் முன்பு கூறியது போல் வாக்கிய அமைப்புக்கு ஏற்ப மாறியும் வரும். அதனால் இரண்டும் சரி.அர்ஜுனும் உடையாரும் வாழ்த்துக்கள் என்று பயமின்றி எழுதலாம். இது நேற்று தொல்காப்பியருடன் கதைத்தபோது அவர் சொல்லியது. :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

நான் ஆரம்பித்த ஒரு பதிவில் தும்பளையான் வழங்கிய கருத்தைக் கீழே தருகின்றேன் . என்னைப் பொறுத்தவரையில் "வாழ்த்துக்களே " சரியானது .ஏனெனில் உச்சரிக்கும்பொழுது அல்லது எழுதும் பொழுது அழுத்திச் சொல்லவும் , ஒலி அலங்காரத்திற்கும் வல்லின , மெல்லின , இடையினங்கள் பயன்படுத்தப் படுகின்றன . இவைகள் இல்லாத சொற்களில் ஒருவித வறட்சி நிலமை காணப்படும் என எண்ணுகின்றேன் :)  :)  .

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93543

 

அண்ணா இதற்கு பதில் உங்களின் நெருஞ்சி தொடரிலே இணைத்திருக்கிறேன். இது தான் அது.

இதற்கான விளக்கம் இது என நினைக்கிறேன். தமிழிலே பதினெட்டு உயிர் எழுத்துக்களையும் வல்லினம் - ஆறு, மெல்லினம் - ஆறு, இடையினம் - ஆறு என மூன்று வகையாக பிரிக்கலாம்.,

  • வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ல்
  • இடையினம் - ஞ் ங் ண் ந் ம் ன்

இதிலே வல்லினத்தின் அருகில் மெல்லின மெய்கள் விகாரமடைந்து வருவது இலக்கணத் தவறு.

உதாரணம்
மாற்றி - ம் + ற் + (ற் + இ) - சரியானது
மாற்ரி - ம் + ற் + (ர் + இ) - பிழையானது காரணம் ர் மெல்லினம்


போற்றி - ப் + ஓ + ற் + (ற் + இ) - சரியானது
போற்ரி - ப் + ஓ + ற் + (ர் + இ) - பிழையானது காரணம் ர் மெல்லினம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் படித்த O/L ஞாபகத்தில் எழுதுகிறேன், தவறாயின் தயவுசெய்து யாரும் திருத்தவும்.     

  • கருத்துக்கள உறவுகள்

வாழ் த் து வன்றொடர்க் குற்றியலுகரம். வன்றொடர் குற்றியலுகரத்திற்குப் பின் எந்தச் சொல் வரினும் வல்லொற்று மிகும்.

எ.கா. பாட்டு பாட்டுக்கள்
வாழ்த்து வாழ்த்துக்கள்
கோப்பு கோப்புக்கள்

ஒருசாரார் இந்த இலக்கண விதியைப் பின்பற்றுகின்றனர்.

ஆனால் வாழ்த்து கள் என்பது பலவின்பால் விகுதி. சொல்லுக்குள்ளேயே இருப்பது. அதாவது கள் என்பது தனிச் சொல் அல்ல. எனவே வல்லொற்று மிகும் என்ற இலக்கண விதி இங்கு தேவையில்லை என்பது மற்றொருசாராரின் கருத்து. இரண்டுக்கும் இலக்கணத்தில் இடம் உண்டு.

எனவே விதி உங்கள் கையில். அதாவது இலக்கண விதி உங்கள் கையில். எது விருப்பமோ அதில் ஒன்றைப் பின்பற்றுவது நல்லது.

http://www.orkut.com/Main#Main$CommMsgs?tid=2553222656522863465&cmm=37920879&hl=ta

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

 

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.


குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்)


எ.கா:

நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

 

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.


மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.


குற்றியலுகரத்தின் வகைகள்

 

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை

1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
5. மென்றொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்


1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்:

இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு:-
'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு

மா | டு +அல்ல = மாடல்ல
ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)

'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.

 

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

அ·து + இல்லை = அ·தில்லை

இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

 

3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:

இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.

அரசு + ஆட்சி = அரசாட்சி

நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

 

4. வன் தொடர்க் குற்றியலுகரம் :

இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

பட்டு + ஆடை = பட்டாடை

இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

 

5. மென் தொடர்க் குற்றியலுகரம்:

இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்

இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.


6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:

இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.

இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.

 

http://www.santhan.com/index.php?option=com_content&view=article&id=18&Itemid=51

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணப் புத்தகம் வாங்கி திருப்ப படிக்க வேணும்.. :D பாதி மறந்தே போச்சு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் வாழ்த்துக்கள் திரைப்படமும் கலைஞரின் கெடுபிடியால் வாழ்த்துகள் ஆக மாறியது. :unsure:

தமிழ் இலக்கணப் புத்தகம் வாங்கி திருப்ப படிக்க வேணும்.. :D பாதி மறந்தே போச்சு..

 

 எனக்கும்தான் :D

 

அப்பவே தமிழ் ஆசிரியைக்கு நூல்விடாமல் படித்திருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட & வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இருக்கட்டும் உடையார் எப்பிடி எழுதுறது எண்டு முடிவேடுத்திட்டியளோ?? அல்லது இன்னும் இல்லையோ?? அத முதல் சொல்லுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.