Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கலோ பொங்கல் சிறப்பு பதிவு!

Featured Replies

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


           நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை  கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள்  ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய  இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறும் சிறப்பு நாள்தான் பொங்கல் திருநாள்.  வீட்டிற்கு கொண்டுவந்த முதல் தானியத்தை சக்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் முதலில் படைத்து நன்றிகூறும் சிறப்பான நாள்தான் நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள்.
gr0304.jpg


இந்த பொங்கல் திருநாளை ஒரே நாட்களில் கொண்டாடாமல், மொத்தம் நான்கு நாட்களாக முதல்நாள் போகிப்பண்டிகை, இரண்டாம்நாள் இயற்கையின் பொங்கல் அதாவது சூரிய பொங்கல், மூன்றாம்நாள் மாட்டுப்பொங்கல் அதாவது கனுமாட்டுப் பொங்கல், நான்காம் நாள் உழவர் திருநாள் என்றும் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளாக பிரித்து கொண்டாடினார்கள்.

முதல்நாள் போகிப்பண்டிகை:-

      "பழையன கழித்து புதியன புக" அக்காலத்தில் தமிழ் மாதத்தின் கடைசி நாளாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை கருதினர். இந்த மாதத்தில்தான் காலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு பஜனைகள் பாடி பல பூஜைகள் செய்து விரதம் இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் அதிகாலை முதல் பாடல்கள் ஒலிக்க தொடங்கிவிடும்." பழையன கழித்து " என்பதற்கு பொருள்படும் வகையில் வீட்டில தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு தேவையானவற்றை சுத்தம் செய்தும், வீடுகளுக்கு புது வர்ணங்கள் பூசி "பூலாப்பூ, வேப்பிலை தோரணங்கள் கட்டி அழகு பார்த்தனர்.குழைந்தைகளும் பெரியோர்களும் புத்தாடைகள் அணிந்து புதுப்பிக்கப்பட்ட அனைத்திற்கும்,

 

TN_120114155227000000.jpg


புதியவற்றிற்கும் பொட்டு வைத்து, வெள்ளை நூலில் மஞ்சள் தடவி, தங்களுக்கும், வீட்டிற்கும், கால்நடைகளுக்கும் காப்பு கட்டி  போகிப் பண்டிகையை வரவேற்பார்கள். வயல்களில் பூலாப்பூ, வேப்பிலை,ஆவாரம்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவார்கள். இப்படி செய்வதை நிலத்திற்கும் தங்களுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக உணர்ந்தார்கள்.

 இரண்டாம்நாள் தைப்பொங்கல்:- 
      
         அந்த காலத்தில் சிலர் இந்த நாளை வருடத்தின் முதல் நாளாகவும், சிலர் தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாளாகவும் கருதி சிறப்பாக கொண்டாடினார்கள். சில இடங்களில் வெடிகள் வெடித்து பொங்கலை வரவேற்பார்கள். அதிகாலையில் எழுத்து முற்றத்தில் கோலமிட்டு, பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்தையும் கொண்டுவந்து வைத்து அதுக்கு மஞ்சள்நூல் காப்பு கட்டுவார்கள், புதுப்பானையில் அரிசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு பிடியாக அள்ளி போடுவார்கள்.

 

KasangaduPongal2012-2.jpg


கூடவே சக்கரையும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். நுனி வாழை இலையை படையலுக்காக விரித்து வைத்தும், கரும்பு முற்றத்தில் கட்டி வைத்தும், வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் அணிந்தும், பொங்கல் பொங்கிவரும் வரும்வரை காத்திருப்பார்கள். சரியாக சூரியன் உதிக்கும் நேரத்திற்கு பொங்கல்  பொங்கிட "பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்! எனக் கூவி தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் இயற்கைக்கு வெளிப்படுத்துவார்கள். உழவர்களுக்கு இதுதான் ஆனந்தத்தின் உச்சகட்டமான இடம் என்றே சொல்லலாம்.

மூன்றாம்நாள் கனுமாட்டுப் பொங்கல்:- 

         மூன்றாம் நாளான இன்று தங்களளோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவிக்கும் நாளாக கருதி மிகவும் கடமை உணர்ச்சியோடு, கால்நடைகளை குளுப்பாட்டி பொட்டு வைத்து, பல பல வர்ணங்கள் அடித்து , கொம்பு சீவி அதில் சலங்கைகள் அணிந்து அல்லது கொப்பி அணிந்து, கழுத்தில் வெண்கல மணி மாலை அணிந்தும், அழகுபடித்தி பார்ப்பார்கள். ஆடு, மாடு என இரண்டிற்கும் ஒரேநேரத்தில் பொங்கல் வைத்து படிப்பவர்களும் உண்டு, பல இடங்களில் செம்மறியாடு வைத்திருப்பவர்கள் காலையில் ஆட்டுப் பொங்கலாகவும், மாலையில் மாட்டுப் பொங்கலாகவும் தனித்தனியாக கொண்டாடுவார்கள்.

 

fig_1a_and_1b.jpg


காலையில் எட்டு மணிக்கு தொடங்கி ஆடுகளை குளுப்பாட்டி பொட்டு வைத்து மாலையிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் அருகில் பொங்கல் வைத்து, பொங்கிய கஞ்சி நீரை தொட்டில்போல் செய்து அதில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஒரு குட்டி ஆட்டை நடக்கவைத்து வேடிக்கை பார்ப்பார்கள். வேப்பிலையின் மீது மஞ்சள் நூலையும் கட்டு சில ஆடுகளுக்கு கப்பு கட்டுவார்கள். மூன்று அல்லது ஐந்து கெடாக்களை பிடித்து அதன் கொம்பில் தேங்காயை உடைத்து படைப்பார்கள். படித்தபிறகு மஞ்சள் நீரை மாவிலையால் ஆட்டின்மேல் தெளிப்பார்கள். சிலர் ஆடுகளை பிடித்து படைத்த படையலை ஊட்டுவார்கள். இதேபோல்தான் மாலையில்

 

pongal-cows.jpg

மாட்டுக்கும் பொங்கல் வைத்து படைத்து மாட்டுக்கும் ஊற்றுவார்கள். இந்த நாளை தங்களுடன் உழைத்த கால்நடைகளுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாக கருதி சந்தோஷப்படுவார்கள்.

நான்காம்நாள் உழவர் திருநாள் அல்லது கரிநாள்:-

         முதல் மூன்று நாட்களை வீட்டை சுத்தம் செய்தும், மனதை சுத்தம் செய்தும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நற்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தவர்கள், பண்டிகையின் கடைசிநாளை தங்களுக்காக கொண்டாடினார்கள், முந்தையநாள் இரவு முதலே ஆட்டம்பாட்டம் எல்லாம் தொடங்கிட, மறுநாள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு சூரியன் வருவதற்குள் வீடு வந்து சேர்வார்கள். பெரியவர்கள் தங்களுடன் உழைத்த கூலி தொழிலாளிகளுக்கு பரிசுகளையும், புதிய ஆடைகளை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். சில இடங்களில் பணமாக கொடுப்பதும் வழக்கம். சிறிய குழந்தைகள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிவாதம் வாங்குவதும், பிறகு அருகில் உள்ள விளையாட்டு அரங்கிலோ
11-1357900813-pongal-fest6-600.jpg


அல்லது ஆற்று மணலிலோ விளையாடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தெரிந்த கோ கோ , கும்மிப்பாட்டு, ஊசிநூல் கோர்ப்பது என பல விளையாட்டுகளை விளையாடி பரிசுகளை தட்டிச் செல்வார்கள். ஆண்கள் விளையாட்டுகள் எல்லாம் வீர விளையாட்டுகளாக இருக்கும், ஜல்லிக்கட்டு காளையை அடக்குதல், கபடி கபடி, மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மாட்டுவண்டி பந்தயம், பட்டி மன்றம், வழுக்குமரம் ஏறுதல் இப்போது

 

2311B_jal06.jpg

 புதியதாக கிரிகெட் போட்டிகள், என ஆங்காங்கே கலை கட்டும். இப்படிதான் நம் தமிழர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
நண்பர்கள்  அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
 

 

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

 கள உறவுகள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
  • கருத்துக்கள உறவுகள்

"பழையன கழித்து புதியன புக" அக்காலத்தில் தமிழ் மாதத்தின் கடைசி நாளாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை கருதினர்.ஃஃஃ அப்படியா? எங்கிருந்து இத்தகவல்களைப் பெற்றீர்கள். இத்தனை உறுதிபடத் தகவல் இருக்கின்றபோது அதற்கு ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா? என் புரிதலில் இந்தியா முழுவதும் தைப்பொங்கலை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றார்கள். அது எப்படித் தமிழரின் தனித்துவம் என ஏமாற்ற முடியும்? Andhra Pradesh, Bengal, Kerala, Bihar, Goa, Karnataka, Orissa, Madhya Pradesh, Maharashtra, Manipur, Uttar Pradesh -Makara Sankranthi

ஆந்திரா

http://telugupoetry.com/uploads/greetings/postcards/1255514316.jpg

kannada

http://egreetings.webdunia.com/cards/kn/makar_sankranti/bi_makar_09_jan_07_162506.jpg

north india

http://www.youtube.com/watch?v=kLkjEfiUkhE

Uttarayana- Gujarat and Rajasthan

http://wallpaper.365greetings.com/d/71604-2/uttarayana-1.jpg

அசாம்- போகிப் பண்டிகை

http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1250170421564-painting.jpg

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தைத்திங்கள் வரும்.. உழவர் பெருநாள் வாழ்த்துக்கள்.

 

தைப்பொங்கல் என்பது அறுவடைப் பெருநாள் ஆகும். இது உழவர்களின் பெருநாள். எமது தேசம் பண்டைய காலம் தொட்டு.. அரிசியை தரும் நெல்லை முதன்மை உணவுப் பயிராக கொண்டு வளர்ந்த தேசம். அதன் அறுவடைக்கால.. பெருநாளாக தைத்திருநாள் ஆகிய உழவர் பெருநாள் அமைகிறது. இதனை சிலர் புதிய ஆண்டு என்றும் சொல்லிக் கொண்டாடுகின்றனர். அவரவர் விளக்கங்களின் அடிப்படையில்.. அவை தவறும் அல்ல. ஆனால் இதன் பின்னால் உள்ள அடிப்படை.. உழவர்களின்.. இயற்கையின்.. மதிப்பினை.. மாண்பினை போற்றும் விழுமியத்தை இந்த மாற்றங்கள் சீரழிக்காது பார்த்துக் கொள்வதும் அவசியம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

12630_521750324525454_1626498458_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய  பொங்கல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

pongaal-vot.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் விளங்காத தெலுங்கு மொழியில் ஆதாரம் போட்டால் எப்படி நம்புவது. வேற்று இனத்தவர் பொங்குவார்கள் என்பது நம்பமுடியாதது. ஆனால் தெலுங்கும் தமிழிலிருந்து பிரிந்த மொழி என்பதுதானே வரலாறு.

 

தமிழர்கள் மட்டுமே பொங்கல் கொண்டாடும் ஒரே இனம் உலகில்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய  பொங்கல் வாழ்த்துக்கள்....!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அத்தனை பேரும் தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக கொண்டாட வேண்டும். இது தமிழர் திருநாள். இதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் அத்தனை பேரும் தமிழர்தாம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அல்லல்கள் ஒழிந்து அமைதியுடன் வாழ இத் தைத் திருநாளில் ஒற்றுமையாக வேண்டி நிற்போம்!....
தமிழர் அத்தனைப் பேருக்கும் எனது தமிழ்த் திருநாள் வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்
http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc7/394857_10151265866103579_1282667926_n.jpg உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் இதயம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் இனிய  பொங்கல் வாழ்த்துக்கள்....!

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை  கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள்  ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய  இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறும் சிறப்பு நாள்தான் பொங்கல் திருநாள்.  வீட்டிற்கு கொண்டுவந்த முதல் தானியத்தை சக்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் முதலில் படைத்து நன்றிகூறும் சிறப்பான நாள்தான் நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள்.

 

இந்த பொங்கல் திருநாளை ஒரே நாட்களில் கொண்டாடாமல், மொத்தம் நான்கு நாட்களாக முதல்நாள் போகிப்பண்டிகை, இரண்டாம்நாள் இயற்கையின் பொங்கல் அதாவது சூரிய பொங்கல், மூன்றாம்நாள் மாட்டுப்பொங்கல் அதாவது கனுமாட்டுப் பொங்கல், நான்காம் நாள் உழவர் திருநாள் என்றும் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளாக பிரித்து கொண்டாடினார்கள்.

 

எமக்கு என ஒரு நாடு இருந்தால் மேலும் சிறப்பாக இவற்றை கொண்டாட முடியும்.

 

நன்றி பகிர்விற்கு.

ஒரு காலத்தில் தமிழர்களின் ஒவ்வொரு வீட் டிலும் தானியக்களஞ்சியம் இருந்ததென்ற உண்மையை ஒரு கணம் எங்கள் சமகால இளம் சந்ததி நினைத்துப்பார்க்க வேண்டும்.

 

அரிசி, உழுந்து, பயறு என்ற உணவுத்தானி யங்களும் முக்கனிகளும் பசும்பாலும் தேனும் நெய்யுமென அனைத்தும் வீட்டில் விளைந்திருந் தது என்பதும் அதுவே விருந்தோம்பல் சிறப் பிற்கு வழிவகுத்ததென்பதும் உணர்தற்குரியது. இதன் காரணமாகவே தமிழர்களின் பண் பாடு உயர்வானதென்ற பெருமையை பெற்றுக் கொண்டது. மற்றவர்களின் வாழ்விற்காக தான் உழைக் கின்ற உயர்ந்த பண்புடமை தமிழர்களிடம் இருந்ததென்ற பெருமை மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=411:2013-01-14-05-57-52&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகாலை எழும்புறது கஷ்டமாக இருக்கும்தான், ஆனால் பொங்கல் நாளன்று எப்படி உற்சாகம் தொற்றிக்கொள்ளுமோ தெரியவில்லை, இரவிரவாக முழித்திருந்து ' தென்னோலைத் தோரணங்களை முற்றத்தில் கட்டி, மாவிலைத் தோரணங்களை வாசலுக்கும் கட்டிவிட்டுத்தான் படுக்கப்போவோம், எங்கே நித்திரை வரும்? ...எப்படா விடியும் என்றிருக்கும். விடிந்தவுடன்,,,,'காலைக்கடன்கள் முடித்துக்குளித்துவிட்டு, 'மணியக்கா வீட்டுக்குப்போய் 'பாலும், சாணியும் வாங்கி வர வேணும். ' அம்மா மெழுகி முற்றத்தில் கோலம் போட்டு அழகழகா பொங்கலுக்கு வைக்கும் கல்லையும் கழுவி மெழுகி, திருநீறு,சந்தணம், குங்குமப்பொட்டெல்லாம் வைச்சு....... 'அட அட!!!.......'அது ஒரு காலம் அழகிய காலம், அந்த நினைவுகளூடே இங்கு நிமிடங்கள் ஓடும்".

 

யாரிண்ட வீட்ட முதல்ல பொங்குதெண்டு 'வெடிக்கிற சத்தத்தில் தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......! கனடா வந்து 18 வருஷமாச்சு,,,,,,, இங்கு எப்படா விடுமுறை நாள் வருமோ அன்றுதான் 'கொண்டாட்டங்கள் அர்த்தப்படும். அதுவரை ஓடி ஓடி உழைத்துக்கொண்டே இருக்கிறோம். ....

 

என் இனிய யாழ்கள உறவுகள், நட்புகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.