Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன அழுத்தம் - எப்படி தவிர்ப்பது ?

Featured Replies

லைவாணி எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவாள். அவள் அழுகையை அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவும் முடியாது. அதோடு, எப்போதும் அது இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று யோசித்துக் யோசித்து குழம்பிக் கொண்டே இருப்பாள். இதனால் அவளுக்கு அடிக்கடி தீராத தலைவலி வந்து சேரும். தலைவலிக்கு வைத்தியம் பார்க்க போனபோது தான் தெரிந்தது அவளுக்கு இருப்பது மன அழுத்தம் என்று. இதைக் கேட்டு அவளின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காரணம் அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் எப்படி மன அழுத்தம் வரும் என குழம்பிப் போனார்கள். கலைவாணி மட்டுமல்ல, இது போன்ற பலரும் இந்த மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள்.

mana_azhutham.jpg

இந்த மன அழுத்தம் யாருக்கு வரும், எதனால் வரும், அதை எப்படி தீர்ப்பது என்று சொல்லுகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா.

மனம்தான் நம்முடைய அத்தனை செயல்களுக்கும் அடிப்படை. மனதை நன்றாக வைத்திருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். மனதை சுத்தமாகவும், நிம்மதியாகவும் வைத்திருந்திருக்க யோகா, தியானம் என்று பல வழிகளைக் கையாள்கிறோம்.

மன அழுத்தம் என்பது வியாதி இல்லை என்பதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அது ஒருவிதமான மன சிக்கல் அவ்வளவுதான். ஆனால் மன அழுத்தம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் எதனால் வருகிறது ?

வாழ்க்கையில் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை என்றால் மன அழுத்தம் வரும். குழந்தை பெற்ற பெண்ணுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இன்றைய பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடும்பங்கள்தான். குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வது என்பது பலருக்கு தெரிவதில்லை. இரவில் கண்விழிக்க வேண்டி இருக்கும். சரியாக சாப்பிட முடியாது. இதையெல்லாம சமாளிப்பதற்கு பெண்களுக்கு எந்தவிதமான மனப்பயிற்சியும் தருவதில்லை. சிலருக்கு மரபு ரீதியாகவும் இந்த பிரச்னை வரும். பழக்க வழக்கம் குறித்த பிரச்னைகள், தாழ்வு மனப்பான்மை, எதாவது மிக பெரிய இழப்பு, நீண்ட நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டவர்கள், தவறான மருந்து எடுத்துக் கொண்டவர்கள், குடி - புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மன அழுத்தத்தின் அறிகுறி

பசி, தூக்கம் எதுவும் இருக்காது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை என்பது துளியும் இல்லாமல் இருப்பார்கள். எப்போதும் ஒருவிதமான விரக்தி, எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும். மற்றவர்களிடத்தில் சகஜமாக பேசாமல் விலகி இருப்பார்கள். நான் எதற்காக வாழ வேண்டும் என்ற மனநிலையில், தற்கொலை குறித்து யோசித்துக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு அதிகமான பசியும், தூக்கம் இருக்கும்.

தன்னை யாரும் கவனிப்பதில்லை, என்னுடைய பிரச்னைகளை யாரும் காது கொடுத்து கேட்பது இல்லை என்று அவர்களே நினைத்துக் கொண்டு, சுவற்றில் தலை மோதிக்கொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என அடிக்கடி முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்கள்.

எப்படி தவிர்ப்பது?

mana_azhutham_abilasha.jpgபிரச்னைகளை பற்றி கவலைப்படாமல், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு மனநிலையில் இருந்தாலே போதும் மன அழுத்தம் குறைந்து, படிப்படியாக குணமாகிவிடும். தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம். நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யலாம். செடி வளர்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, புத்தகங்கள் படிப்பது, இசையை ரசிப்பது போன்ற விஷயங்களை செய்யலாம்.

எதிர்காலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்களுடன் பழகுவது மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும். பக்தியும் இந்த விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் 'கடவுள்' என்பது பலரது நம்பிக்கைச் சின்னம். எனவே பக்தி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி, நீங்கள் சம்பந்தப்பட்டவரிடம் வாய்விட்டு பேசினாலே போதும், பல பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

நம்முடைய பழக்கவழக்கங்களை சீராக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த வழி. அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, சத்தான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள் வைத்திருந்தால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வாழ்க்கையை நேசியுங்கள்.. மனது தெளிவாகும்.. வாழ்க்கை வளமாகும்.!

 

 

http://youthful.vikatan.com/index.php?nid=622#cmt241

பகிர்விற்கு நன்றிகள் !!

 

தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம்

 

சிலவேளைகளில் வாராந்த 'நண்பர்கள் சங்கமம்' கூட மனவுளைச்சல்களை, மனவழுத்தங்களை தந்துவிடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பயன் தரும் பகிர்வு அபராஜிதன் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் மன அழுத்தம் இருக்குது...முந்தி என்ட‌ கண்ணாலே கண்ணீர் வாறாதே கஸ்ட‌ம் இப்ப தொட்டதிற்கெல்லாம் அழுகை வருகுது :o
 
எனக்கும் மன அழுத்தம் இருக்குது...முந்தி என்ட‌ கண்ணாலே கண்ணீர் வாறாதே கஸ்ட‌ம் இப்ப தொட்டதிற்கெல்லாம் அழுகை வருகுது :o
 

 

எல்லாக் கவலைகளும் இன்றே தீர்ந்துவிட்டால் நாளைக்கு வாழ உலகில் என்ன இருக்கிறது ?? இனிப்பு சுவையானதுதான் ஆனால் அதையே சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?? பிரச்சனைகள் இல்லா வாழ்வு சுவையற்றது என்று நினைத்துக் கொண்டால் எந்த மன அழுத்தமும் வராது. ஒவ்வொரு சிக்கலும் உங்களை செழுமைப்படுத்துகிறது. நாளைய பிரச்சனை நாளைக்கு.. அதைப் பற்றி இன்றே அதிகமாக கவலைப்பட்டு ஆவது என்ன?? போர்வையை போர்த்தும்போது பிரச்னைகளையும் போர்த்தி விடுங்கள்..:)

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்லதொரு பதிவு, அபராஜிதன்.

எனக்கும் மன அழுத்தம் இருக்குது...முந்தி என்ட‌ கண்ணாலே கண்ணீர் வாறாதே கஸ்ட‌ம் இப்ப தொட்டதிற்கெல்லாம் அழுகை வருகுது :o

ர‌தி, உங்க‌ள‌து... எப்போ, இருந்து இந்த‌ப் பிர‌ச்சினை உள்ள‌து என்ப‌த‌ன் மூல‌கார‌ண‌த்தை... அறிந்தால், அத‌னை த‌விர்த்துக் கொள்ள‌லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கவலைகளும் இன்றே தீர்ந்துவிட்டால் நாளைக்கு வாழ உலகில் என்ன இருக்கிறது ?? இனிப்பு சுவையானதுதான் ஆனால் அதையே சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?? பிரச்சனைகள் இல்லா வாழ்வு சுவையற்றது என்று நினைத்துக் கொண்டால் எந்த மன அழுத்தமும் வராது. ஒவ்வொரு சிக்கலும் உங்களை செழுமைப்படுத்துகிறது. நாளைய பிரச்சனை நாளைக்கு.. அதைப் பற்றி இன்றே அதிகமாக கவலைப்பட்டு ஆவது என்ன?? போர்வையை போர்த்தும்போது பிரச்னைகளையும் போர்த்தி விடுங்கள்.. :)

 

நன்றி உங்களது கருத்திற்கு...உண்மை தான்

ந‌ல்லதொரு பதிவு, அபராஜிதன்.

ர‌தி, உங்க‌ள‌து... எப்போ, இருந்து இந்த‌ப் பிர‌ச்சினை உள்ள‌து என்ப‌த‌ன் மூல‌கார‌ண‌த்தை... அறிந்தால், அத‌னை த‌விர்த்துக் கொள்ள‌லாம்.

 

 

சுருக்கமாக சொன்னால் இயலாமை தான் மூல காரணம் என நினைக்கிறேன்
 
  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக சொன்னால் இயலாமை தான் மூல காரணம் என நினைக்கிறேன்

இல்லை ரதி. இயலாமை, அல்ல... முயலாமை.

உங்களது கருத்துக்களில்... உங்களை, ஒரு... வைராக்கியம் மிக்க.. பெண்மணியாக, உருவகம் ஏற்படுத்தி வைத்துள்ளேன்.

உங்களில்... அதிக, தாழ்வு மனப்பான்மை உள்ளது என, நினைக்கின்றேன். அதனை... இன்றுடன் விட்டொழியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரதி. இயலாமை, அல்ல... முயலாமை.

உங்களது கருத்துக்களில்... உங்களை, ஒரு... வைராக்கியம் மிக்க.. பெண்மணியாக, உருவகம் ஏற்படுத்தி வைத்துள்ளேன்.

உங்களில்... அதிக, தாழ்வு மனப்பான்மை உள்ளது என, நினைக்கின்றேன். அதனை... இன்றுடன் விட்டொழியுங்கள்.

 

நன்றி தமிழ்சிறி என்ட எழுத்திற்கும்,எனக்கும் வித்தியாசம் இருப்பதாக என்ட தம்பி சொல்லுறவன் ஆனால் முடிந்த வரைக்கும் தன்னம்பிக்கையும்,வைராக்கியமும் உள்ள பெண்ணாகவே வாழ விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி என்ட எழுத்திற்கும்,எனக்கும் வித்தியாசம் இருப்பதாக என்ட தம்பி சொல்லுறவன் ஆனால் முடிந்த வரைக்கும் தன்னம்பிக்கையும்,வைராக்கியமும் உள்ள பெண்ணாகவே வாழ விருப்பம்

என்ன... இருந்தாலும், எங்களுடன் பகிருங்கள். ஆலோசனை கேளுங்கள் ரதி.

நான்... இங்கிலாந்து வந்தால், நீங்கள் விரும்பினால்... உங்களையும், நிச்சயம் சந்திப்பேன்.

எனக்கும் மன அழுத்தம் இருக்குது...முந்தி என்ட‌ கண்ணாலே கண்ணீர் வாறாதே கஸ்ட‌ம் இப்ப தொட்டதிற்கெல்லாம் அழுகை வருகுது :o
 

 

ரதி

 

எல்லாருக்கும் பிரச்சனைதான். நாங்களும் மனிசன்தானே. இண்டைக்கு வாற கஷ்டமெல்லாம் நமது நல்லபடியான எதிர்காலத்திற்குத்தான். நம்பிக்கையாயிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

 

மனித மனம், ஒரு காற்றடைத்த இறப்பர் பந்து போன்றது!

 

சும்மா இருக்கும்போது, அதில் ஒரு மாறுதலும் இருக்காது!ஆனால், கடுமையான, சுவர்களில் படும் போது அதன் வடிவம் சிறிது மாறும்! அப்போது ஏற்படும் 'இடைநிலையே' மன அழுத்தமாகும்!

 

ஆனால், தளம்பாத மனநிலை இருக்குமெனில்,பந்து கட்டாயம் பழைய நிலைக்கு விரைவில் திரும்பி விடும்!

 

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

 

மனித மனம், ஒரு காற்றடைத்த இறப்பர் பந்து போன்றது!

 

சும்மா இருக்கும்போது, அதில் ஒரு மாறுதலும் இருக்காது!ஆனால், கடுமையான, சுவர்களில் படும் போது அதன் வடிவம் சிறிது மாறும்! அப்போது ஏற்படும் 'இடைநிலையே' மன அழுத்தமாகும்!

 

ஆனால், தளம்பாத மனநிலை இருக்குமெனில்,பந்து கட்டாயம் பழைய நிலைக்கு விரைவில் திரும்பி விடும்!

 

இந்த வில்லங்கத்திற்காகத்தான் மனதை, நித்தியானந்தா மாதிரி காற்றடைக்காத இறப்பர் பந்தாக வைத்திருக்க வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடகங்களை பார்க்காமல் விடுங்கோ. மன அழுத்தம் தானாக குறைந்து விடும். இணைப்புக்கு நன்றி ,அபி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வில்லங்கத்திற்காகத்தான் மனதை, நித்தியானந்தா மாதிரி காற்றடைக்காத இறப்பர் பந்தாக வைத்திருக்க வேண்டும். :D

இப்பிடியா... தப்பிலி.

http://www.youtube.com/watch?v=t414gcz4gPc

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் மன அழுத்தம் இருக்குது...முந்தி என்ட‌ கண்ணாலே கண்ணீர் வாறாதே கஸ்ட‌ம் இப்ப தொட்டதிற்கெல்லாம் அழுகை வருகுது :o
 

 

உங்கட கூட்டு எண் அப்ப ஒன்று.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கூட்டு எண் அப்ப ஒன்று.. :D

இல்லை.. இசை,4.

குரு பகவான் பார்வையில், ரதியின் முதுகுப் பக்கம், சின்ன மச்சம் உள்ளது.

நான் சொன்னது, சரியா... ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியா... தப்பிலி.

http://www.youtube.com/watch?v=t414gcz4gPc

 

இந்த காணொளியைப் பார்த்தால், மன அழுத்தம் வந்தவர்கள் அதைப் போக்க எப்படியெல்லாம் கஷ்டப்படுகின்றார்கள் என்று புரிகின்றது..

 

பிறருடன் மனம் விட்டுப் பேசாமல் தங்களுக்குள் பிரச்சினைகளைக் குமைந்து கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தம் வராமல் என்ன செய்யும்?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புக்கள் வரும்பொழுது மனஅழுத்தம் வருவது தவிர்க்க முடியாதது. அதைத் தவிர்க்க மனநலவைத்தியரை நாடுவதைவிட எமது மனதை நாமே நலமாக்க முயல்வதுதான் சிறந்தது. இது என் சொந்த அனுபவம். எதிர்பாராமல் எனது கணவரின் இழப்பு ஏற்பட்ட பொழுது நான் மிகவும் உடைந்து போனேன். பலமுறை அவசரசிகிச்சை நிலையத்துக்கு சென்று வரவேண்டி ஏற்பட்டது. அப்பொழுது எனது குடும்ப வைத்தியர் என்னை மனநல வைத்தியரிடம் செல்வதற்கு திகதி குறித்து தந்தார். வீட்டிற்கு வந்தபின் நான் யோசித்தேன். மனநல வைத்தியரிடம் சென்றால் நான் ஓய்வாக இருப்பதற்காக நித்திரை குளிசைகளை தருவார். அதுவே பழக்கத்திற்கு வந்து விட்டால அதிலிருந்து என்னால் மீள முடியாது. மனநல வைத்தியரிடம் செல்வதை தவிர்த்து விட்டேன். எனது பிள்ளைகள் அப்பொழுது படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை எனக்குண்டு. எனவே என்னை நானை திடப்படுத்திக் கொண்டேன். நானும் முதியோர் பராமரிப்புக்கான கல்வி கற்றுக்கொண்டு பிள்ளைகளையும் படிப்பித்தேன். இப்பொழுது பிள்ளைகள் பல்கலைக்கழகக் கல்வி முடித்து விட்டார்கள். நானும் முதியோர் சேவை செய்வதில் மனநிறைவடைகிறேன். மனநலமாக இருப்பதற்கு முதலில் தேவையானது இறை நம்பிக்கை. அத்துடன் எம்மை நாமே சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இது என் சொந்த அனுபவம். நான் வீட்டிலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் ஏதாவது செய்து என்னை நானே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வேன். எழுதுவது புத்தகம் வாசிப்பது தைப்பது நண்பர்களுடன் கதைப்பது இணையத்தில் வாசிப்பது என்று ஏதாவது ஒன்று செய்வேன். சில நேரங்களில் தாங்க முடியாத மன வேதனை ஏற்பட்டால் கல்லறைக்குச் சென்று கண்ணீர் விட்டு அழுது என் கவலையைத் தீர்த்துக் கொள்வேன். தனியே உட்காந்து அழுது கொண்டிருப்பதை தவிர்ப்பதே மனஅழுத்தத்தை குறைப்பதற்கான மருந்து. மனநலம் மற்றவர்களால் தரமுடியாது எனது மனதை நாம்தான் நலமான வைத்திருக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் எல்லோருக்கும் உண்டு. ஒருவர் அதிகம் பாதிக்கப்படுவதற்கும் இன்னொருவர் பாதிப்பே இல்லாமல் இருப்பதற்கும் அவருடைய சூழ்நிலை அதிக காரணமாகிறது. எப்போதும் தோல்வி மனப்பான்மை இயலாமை எண்ணங்களுடன் வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஒருவருக்கு அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. எப்போதுமே உற்சாகமாக கலகலத்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் ஒருவருக்கு மன அழுத்தத்தின் பாதிப்பு அதிகம் ஏற்படாது. வெளிப்படையாக பேசுதல் அதாவது தம்மை அழுத்தும் விடயங்களை வெளிப்படையாகப்பேசும்போது ஒரு திணறல் நிலையில் இருந்து வெளிவரும் ஆசுவாசம் ஏற்படுகிறது. எங்கள் சமூகத்தில் வெளிப்படையாகப் பேசும் தன்மை குறைவு அப்படியே ஒரு தனிமனிதரின் மனஅழுத்தத்தை இன்னொருவரை நம்பி பேசும்போது அந்த இன்னொருவர் பாதிக்கப்பட்டவரின் அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய குணப்பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும். எமக்குள் அப்படியான சாத்தியங்கள் குறைவு. கதை கொண்டோடிகளாக புதினம் கதைப்பவர்களாக பலர் இருப்பதும், ஒருவருடைய அந்தரங்கத்தை கிளறி களிப்படைவதிலும் சுவார்சியமான பேர்வழிகளை நண்பர்களாக அதிகம் வைத்திருந்தால் மன அழுத்தம் அதிகரித்து மூளைப்பிசகு ஏற்பட்டுவிடும். தன்முயற்சியால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டவர்களும் உண்டு அது அவர்களுக்குள் இருக்கும் சூழலைப்புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருந்தே பிறந்திருக்கிறது. குறிப்பாக எண்ணங்களை ஒருங்கமைக்க அல்லது ஆளுமைக்குள் உட்படுத்த முடியாத பலவீனர்களே இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் முகங் கொடுக்கிறார்கள். மனநல வைத்தியர்களை அணுகியவர்கள் நலம் பெற்றார்கள் என்று முழுமையாக சொல்லமுடியாது. மனநலச்சிகிச்சை என்பது அவர்களுக்கு நம்பிக்கையை வளர்க்கும் முயற்சி. மனதிற்குப் பிடித்தமான இடம், பிடித்தமானவர்களின் கூட இருப்பது, பிடித்தமான கதையாடல், பிடித்தமான பொழுதுபோக்கு என்பன தொடர்ச்சியாக வாய்க்கும்போது இலகுவில் அந்த அழுத்தம் காணாமல் போய்விடும். துரித காலஓட்டம், எல்லாம் இருந்தும் எதனையும் செயற்படுத்த முடியாத வாழ்க்கை முறை, அவ்வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முடியாத பண்பு, சூழல் இவற்றிற்கு மேலாக இப்படித்தான் என்று எதனையும் துணிவாக ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை அநேகமாக எல்லோருக்கும் இருக்கும்...இவற்றால் பாதிப்பு என்பது மேலே குறிப்பிட்ட விடயங்களாலேயே அதிகப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி தமிழ்சிறி,தப்பிலி,புங்கையூரான்,நுணா, இசை,கண்மணி அக்கா,சகாறா அக்கா...அத்துட‌மன் இப் பதிவை இணைத்த அபராஜிதனுக்கும் நன்றி
 
 


என்ன... இருந்தாலும், எங்களுடன் பகிருங்கள். ஆலோசனை கேளுங்கள் ரதி.
நான்... இங்கிலாந்து வந்தால், நீங்கள் விரும்பினால்... உங்களையும், நிச்சயம் சந்திப்பேன்.

 

 

தமிழ்சிறி லண்ட‌ன் வந்தால் அறியத் தாருங்கள்
 


தமிழ் நாடகங்களை பார்க்காமல் விடுங்கோ. மன அழுத்தம் தானாக குறைந்து விடும். இணைப்புக்கு நன்றி ,அபி.

 

 

என்னிட‌ம் தமிழ்தொலைக்காட்சியே இல்லை இணையத்திலும் பார்ப்பதில்லை
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ கெட்டதோ அதிகம் யோசிக்க வேண்டாம்..மனசுக்கு பிடிக்காத ஆக்களுடன் பழக வேண்டாம்... என்ர அனுபவத்தில் இதை நான் சொல்லுறேன்.......உங்களுக்கு பிடிச்ச பாடல்களை கேட்ட்டு ஜாலியாய் இருக்க பாருங்கள் எல்லாம் காலப் போக்கில் தானாக போய் விடும்....நேரம் இருக்கும் போது மக்கள் கூட வரதா நாளா பார்த்து கோயில் செச்சுக்கு போய் வாருங்கள்..வாழ்க்கையில் நல்ல சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைவிங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நன்மைக்கே நிகழ்ந்தது என்று எடுத்துக்கொண்டு அடுத்த நொடிக்காக வாழத்தொடங்கிவிட்டாலே மன அழுத்தம் தானாய் ஒழிந்துவிடும்..நன்றி அபராஜிதன் பகிர்விற்கு..

நல்லதோ கெட்டதோ அதிகம் யோசிக்க வேண்டாம்..மனசுக்கு பிடிக்காத ஆக்களுடன் பழக வேண்டாம்... என்ர அனுபவத்தில் இதை நான் சொல்லுறேன்.......உங்களுக்கு பிடிச்ச பாடல்களை கேட்ட்டு ஜாலியாய் இருக்க பாருங்கள் எல்லாம் காலப் போக்கில் தானாக போய் விடும்....நேரம் இருக்கும் போது மக்கள் கூட வரதா நாளா பார்த்து கோயில் செச்சுக்கு போய் வாருங்கள்..வாழ்க்கையில் நல்ல சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைவிங்கள்...

 

என்ன அருமையான வார்த்தைகள்.

எல்லாவற்றையும் நன்மைக்கே நிகழ்ந்தது என்று எடுத்துக்கொண்டு அடுத்த நொடிக்காக வாழத்தொடங்கிவிட்டாலே மன அழுத்தம் தானாய் ஒழிந்துவிடும்..நன்றி அபராஜிதன் பகிர்விற்கு..

 

சின்ன நூற்கண்டா நம்மைச் சிறுமைப்படுத்துவது,

எட்டி உதைத்து எதிர்காலம் கொள்வோம்  

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்...இதைப்பற்றி முன்பும் ஒரு திரியில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக நினைவு...மன அழுத்தம் உள்ள எவர் என்றாலும் மாத்திரை எடுக்கும் அழவுக்கு சென்று விடாதீர்கள்..மாத்திரை எடுக்க தொடங்கி விட்டால் அது இன்றி இயங்க முடியாத சூழ் நிலைக்கு போனவர்களும் உண்டு..நான் இவற்றில் இருந்து விடுபடுவேன்,விடுபடவேணும் என்று நினைத்தால் இவ்வாறன அழுத்தங்களிலிருந்து விடுபடலாம்.தேவை அற்ற விடையங்களை யோசிச்சு,கண்ணீர்விட்டு நீங்களே,உங்களை நோயாளி ஆக்கி கொள்ளாதீர்கள்...நாளாந்தம் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி கொண்டு தான் இருக்கிறோம்...அதற்காக மன அழுத்தம் வரும் அழவுக்கு மாறக் கூடாது...பிடிக்காதவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள்..
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.