Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடருங்கள்.

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply

பின்னேரம் பருத்திட்துறை முனைக்குப் போனால் பட்டப்போட்டி நடக்கும், அதை
சாட்டிட்டு அமாவாசையட்ட படிக்கிற பெட்டையளும், கூடுதலா வியாபாரி
மூலை,பருத்தித்துறைப் பெட்டையளும் குடும்பமா வருவாளுங்க பார்த்து சைட்
அடிச்சிட்டு வந்து இரவு பொடியள் தொடுத்து விட்ட பட்டத்திற்கு லைற்
போடுவங்கள், அதையும் முடிச்சிட்டு வர வீட்டை படுத்திடுங்கள்,

என்ரை மனிசி இதைப்பற்றி கதைகதையா சொல்லுவா . நான் முனையிலை நிக்கேக்கை உந்தக்கதையள்தான் போர்ட் இலை இருத்திப்போட்டு நடந்திது . நாங்களும் கோப்பாய் தரவையுக்கை பட்டம் விட்ட கிங்குகள்தான் . கதைக்குப் பாராட்டுகள் ஜீவா .

ஊர் பற்றியும் எழுதியுள்ளீர்கள்.  :)  புலம்பெயர்ந்து இருந்தாலும் ஊரின் நினைவுகள் நிச்சயம் எம்மை விட்டு அகலாதன... :rolleyes:

ஆஹா, இம்முறையும் உங்கள் மாமா பைக்கில் வருகிறாரா? நீங்கள் இருவரும் பஸ்ஸில்.... :icon_idea: தொடருங்கள்.. :)

தொடர் நன்றாகச் செல்கின்றது ஜீவா.
 
சில மாதங்களிற்கு முன்னர் தான் மணம் முடித்து, பலநாள் பிரிந்திருந்து, வெறும் பத்துநாள் விடுமுறையில் மனைவியைச் சந்திக்கச்சென்று, வீட்டிற்குள் சென்றதும் குளித்து விட்டு மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்கக் கூடத்தில் பேப்பர் படித்தீர்கள் என்ற விடயத்தை வாசித்தபோது, நமக்கெல்லாம் கூட்டுக்குடும்பம் எண்ணத்தில் கூடச் சரிவராது என்று தோன்றியது. வட அமெரிக்க வாழ்வின் நீட்சியில் பிரத்தியேகம் என்ற கருத்தாக்கம் எத்தனை தூரம் ஆழு வியாபித்து எமக்குள் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது புரிந்தது. 
 
இந்த பிரத்தியேகம் என்ற மிகச்சுருங்கிய வட்டத்தை உடைப்பது நினைத்தே பார்க்கமுடியாதாக இப்போதைக்கு எனக்குப் படுகின்றது. 99.99 வீதம், இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் என்னைப் போன்றவர்களின் நடவடிக்கை வீட்டிற்குத் தொலைவாக ஒரு ஹோட்டலினை புக் பண்ணிவிட்டுப் 10 நாளில் குறைந்த பட்சம் 8 நாள் ஹோட்டலில் நின்றபடி தனியே மனைவியுடன் ஊர்சுற்றத் தான் தோன்றும். மிக அதிகபட்சம் இரண்டுநாள் தான் கூட்டுக் குடும்பத்திற்கு ஒதுக்கப்படும். 
 
அவ்வாறில்லாது, கூட்டுக்குடும்பத்தோடு சேர்ந்து மகிழக்கூடிய உங்களது பொறுமைக்கும் மனப்பாங்கு அல்லது பக்குவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடங்களைப் பற்றிய 'நேர்முக வர்ணனை' அருமை, ஜீவா!

ம்ம்.. ஊரில் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோவில் தேர்முட்டியில் இருந்து, தேர்த் திருவிழா நேர்முக வர்ணனை கொடுக்ககக் கூடிய எல்லாத் தகுதிகளும் உங்களிடம் இருக்கு! :D

ஆனால், பொம்பிளைப் பிள்ளையள், அதிகமா வாற இடம்! அது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிக் கிடக்கு! :D     

நன்றி புங்கை அண்ணா..

எப்போதும் எல்லாரையும் ஊக்கப்படுத்தும் உங்கள் எழுத்துக்கும்,மனதுக்கும். :)

வார இறுதி வேலை கொஞ்சம் அதிகம் அதனால் தான் அதிகம் எழுத முடியவில்லை, புலன் வேறு வேலையைச் சுற்றியே.. :(

எங்களை நம்பி :rolleyes:  குடுக்கலாம் புங்கை அண்ணா, கோயில்லை சைக்கிள் பார்க் நடத்தினது நாங்கள் தான். :D

பொம்பிளைப் பிள்ளையள் வந்தால் தானே உற்சாகமா செய்வம். :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா நல்லா எழுதுகிறீர்கள். இளமையும் புதுமையும் நகைச்சுவையும் நன்றாக தெரிகிறது. அப்படியே என் வாழ்கையை பின்னோக்கி பார்த்த மாதிரி இருக்கு ஜீவா.

உங்கள் தேர்வுகள் நிச்சயம் பிழைக்காது. உங்கள் எதிர்பார்ப்புகளும் கூட.

நான் யாழ் தவிர்த்து வேறு எந்த ஒரு தளத்திலும் எழுதியதில்லை, ஒரு சில கவிதைகள் யாழில் எழுதியிருக்கிறேன் ஆனால் கதை, அல்லது இப்படி ஒரு அனுபவப்பகிர்வு எழுத இப்போது தான் பிள்ளையார் சுழி போடுகிறேன். உங்கள் கதையைப் படித்து வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன்.

நீங்களே நகைச்சுவையாக இருக்கு என்று சொல்லும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

உங்கள் எழுத்துக்களிலேயே ஊகித்துக்கொண்டேன் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று.. :rolleyes:

நன்றி அண்ணா,கருத்துப் பகிர்வுக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

பொங்காமல பொங்கியிருக்குமே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்கு ஜீவா.... தொடர்ந்து எழுதுங்கள். :)

ஆத்துக்காரி வேற திரும்பவும் யாழில வந்திருக்கா போல. :wub:  ம்ம்ம்ம்ம் ஜமாய்ங்க. :D

நன்றி கவிதை அண்ணா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி.....

அடக்கி வாசிக்கிறீங்கள் என்று தெரியுது.....

மாமி வீட்டுக்கு போய் இறங்கும்போதே நாய்தான் வரவேற்குது :icon_mrgreen:  எனக்கு அந்த நாய் வரவேற்ற விதம்தான் பிடிச்சிருக்கு.... வயிறு கொழுவிப்போச்சு... இனிமேல் உங்கள் மாமியார் வீட்டை வாசிக்கும்போது கவனமா இருக்கோணும் என்று முடிவுகட்டியிருக்கிறேன். :lol::D

படம் எடுத்து போடலாம் என்று தான் நினைச்சேன் கடிக்க கூடாத இடத்திலை கடிச்சு,கிடிச்சு போட்டாலும் என்று தான் துரத்தி விட்டேன்.. :lol: :lol:

நன்றி அக்கா கருத்து பகிர்வுக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜீவா நன்றாக எழுதுகிறீர்;கள் உங்கள் மாமியார் வீடு தொடரை வாசிக்கும்போது அந்தநாள் ஞாபகம் வந்ததே.... வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வரும் கணவருக்காக காத்திருக்கும் நானும் என் பெற்றவர் தம்பி தங்கைகளும்..... கூட்டுக் குடும்பத்தில் வாழும் பொழுது தடைகளையெல்லாம் தாண்டி தனிமையில் சந்திக்கும் இனிமைகள்...... உங்கள் எழுத்தோட்டம் நன்றாக உள்ளது. தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் விமானப் பயண அனுபவங்களை வாசிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும் எம்மில் பல மாற்றங்கள் தேவை என்பது உண்மை. பகிர்வுக்கு நன்றிகள்.

இன்று காலை 6:30 இற்கு எழும்பி விட்ட இடத்தில் இருந்து மிச்சமெல்லாம் வாசிச்சாச்சு...நல்லா இருக்கு ஜீவா... இளமைத் துடிப்புடன் தொடர் இருக்கின்றது. இன்னுமொருவன் குறிப்பிட்டுள்ளது போன்று பிரத்தியேகம் (Privacy) என்ற விடயத்துக்கு நாங்கள் கொடுக்கும் அளவு இன்று மிகவும் அதிகரித்துவிட்டது. என்னால் ஒரு கூட்டுக் குடும்பத்தின் சூழ்நிலையை நினைத்தும் பார்க்க முடியாது.

ஜீவா மிகவும் அழகாக எழுதுகிறீர்கள். பதில் போடாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கிறேன், தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் நன்றாகச் செல்கின்றது ஜீவா.
 
சில மாதங்களிற்கு முன்னர் தான் மணம் முடித்து, பலநாள் பிரிந்திருந்து, வெறும் பத்துநாள் விடுமுறையில் மனைவியைச் சந்திக்கச்சென்று, வீட்டிற்குள் சென்றதும் குளித்து விட்டு மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்கக் கூடத்தில் பேப்பர் படித்தீர்கள் என்ற விடயத்தை வாசித்தபோது, நமக்கெல்லாம் கூட்டுக்குடும்பம் எண்ணத்தில் கூடச் சரிவராது என்று தோன்றியது. வட அமெரிக்க வாழ்வின் நீட்சியில் பிரத்தியேகம் என்ற கருத்தாக்கம் எத்தனை தூரம் ஆழு வியாபித்து எமக்குள் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது புரிந்தது. 
 
இந்த பிரத்தியேகம் என்ற மிகச்சுருங்கிய வட்டத்தை உடைப்பது நினைத்தே பார்க்கமுடியாதாக இப்போதைக்கு எனக்குப் படுகின்றது. 99.99 வீதம், இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் என்னைப் போன்றவர்களின் நடவடிக்கை வீட்டிற்குத் தொலைவாக ஒரு ஹோட்டலினை புக் பண்ணிவிட்டுப் 10 நாளில் குறைந்த பட்சம் 8 நாள் ஹோட்டலில் நின்றபடி தனியே மனைவியுடன் ஊர்சுற்றத் தான் தோன்றும். மிக அதிகபட்சம் இரண்டுநாள் தான் கூட்டுக் குடும்பத்திற்கு ஒதுக்கப்படும். 
 
அவ்வாறில்லாது, கூட்டுக்குடும்பத்தோடு சேர்ந்து மகிழக்கூடிய உங்களது பொறுமைக்கும் மனப்பாங்கு அல்லது பக்குவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

வணக்கம் இன்னுமொருவன் அண்ணா,

உண்மை,இதே போன்ற கருத்தையே நெருங்கிப்பழகும் யாழ் உறவுகளும்,நண்பர்களும் சொன்னார்கள்.

ஹோட்டல்லை ரூமைப்போட்டு என்ஜோய் பண்ணுறதை விட்டு இப்படி கோயில்,குளம் என்று குடும்பத்தோடு சுற்றி விட்டு வாறியே என்று; இதுக்கா இவ்வளவு காசு செலவழித்துப் போகிறாய் என்று.

அநேக தடவை இதற்குரிய பதில் மௌனம் தான், எனக்கு தெரியவில்லை எது சந்தோசம் என்று என்னளவில் இந்த பத்து நாட்களும் சந்தோசமாக இருந்தேன், இல்லையெனில் இப்படியானதொரு பதிவிட வேண்டும் என்ற தேவையே வந்திருக்காதல்லவா?

உண்மையில் இந்த பிரத்தியேகம் என்பது புலம்பெயர்ந்த அனைவர் வாழ்விலும் அனேகமாக விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட அல்லது ஏற்றுக்கொள்ளவைக்கப்பட்ட தூக்குகயிறு போலத்தான் பொறுப்பு (தாங்கும் கதிரை, ஏதோ ஒன்று) தட்டுப்படாமல் ஓட வேண்டும், தட்டுப்பட்டால் மரணமும் நேரலாம் என்ற தறுவாயில் எனது தெரிவென்பது விசித்திரமாய் தெரியவில்லை.

தினமும் 8மணிக்கு வேலை தொடங்கினால் இரவு 12 மணிவரை 16 மணிநேர வேலை. உடம்புக்கு கஸ்டம் இல்லை என்றால் கூட 16 மணி நேரம் என்பது மிகவும் அதிகம்.

சொந்த வீட்டில் மேலும், கீழுமாய் இருந்து கூட சில வேளை அண்ணா,அண்ணியைக்கூட பார்க்க முடியாது, அப்படியான ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இருக்கும் எனக்கு அன்பின் தேவை எவ்வளவாய் இருக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அப்படி இருந்தும் இப்படியான ஒரு எண்ணப்பாடு இதுவரை தோன்றியதில்லை, ஆனால் நாங்கள் இருவரும் மட்டும் வெளியில் சுற்றவேண்டும் என்று தோன்றினாலும் தனிய இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை, ஒன்றில் நான் வளர்ந்த சூழ்நிலையாக இருக்கலாம். அதிகம் யாருடனும் பழகாததால் நிறைய கூட்டம் என்னைச் சுற்றி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு ஆனால் இது கூட இப்படியான பண்டிகைகளின் போது தான், இல்லையெனில் இருவர் தான் என்னோடு சேர்த்து மூவர்.

அவர்களும் ஒரு மகனைப்போலவே பார்ப்பதால் ஏதோ சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு.. 26 வயது பிள்ளையின் உணர்வுகளைப் புரிந்த பெற்றோர் அதனால் குறித்த எண்ணப்பாடு வரவில்லை என்று நினைக்கிறேன்.

அதை விட ஒரு தேசாந்திரியாய், அந்த மக்களோடு மக்களாய் தூசி படிந்த தெருவில் அவள் கை கோர்த்து நடக்கும் போது வரும் சந்தோசம் சொல்லி வார்த்தை இல்லை.

மூக்குச்சளி சீறும் போது கறுப்பாய் இருக்கே இன்பெக்‌ஷன் வந்திடும் என்று புத்தி எச்சரித்தாலும் சமஹன் குடிச்சிட்டு போகலாம் என்று மனம் சொல்லும்.

(தெளிவாய் குழப்புகிறேன் போல.. :D  (மன்னிக்கவும்) )

நன்றி அண்ணா, வரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும்.. :)

ஜீவா

எந்த பொருளும்

எந்த விடயமும் கடின உழைப்பின்றி

அல்லது நேரவிரயமின்றி

அல்லது முழுவதும் இலவசமாக கேட்கும் போதெல்லாம் கிடைக்குமாயின்

பக்கத்திலிருக்குமாயின்

அதற்கு பெறுமதியோ

கேள்வியோ

தேடுதலோ கிடையாது.

இன்றைய  புலம் பெயர் சீர்கேடுகளுக்கு ஒரு காரணம்

இந்த  தனித்து வாழுதல் ராசா.

ஒருவரையே  தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதால் வரும் சலிப்பே இன்றைய பல திருமண  முறிவுகளுக்கு காரணம்.

கூட்டுக்குடும்பம் என்பதும் இதை ஒரு அளவுக்கு தவிர்த்து தள்ளி  வைப்பதால் சில வேள்விகளை  எழுப்பி வாழ்க்கை  இன்பமாக தொடர வைக்கிறது.

இதற்கு மேல் எழுதினால்  அது.........??? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடருங்கள்.

நன்றி லியோ அண்ணா, தொடர்ந்த்இருங்கள்.. :)

பின்னேரம் பருத்திட்துறை முனைக்குப் போனால் பட்டப்போட்டி நடக்கும், அதை

சாட்டிட்டு அமாவாசையட்ட படிக்கிற பெட்டையளும், கூடுதலா வியாபாரி

மூலை,பருத்தித்துறைப் பெட்டையளும் குடும்பமா வருவாளுங்க பார்த்து சைட்

அடிச்சிட்டு வந்து இரவு பொடியள் தொடுத்து விட்ட பட்டத்திற்கு லைற்

போடுவங்கள், அதையும் முடிச்சிட்டு வர வீட்டை படுத்திடுங்கள்,

என்ரை மனிசி இதைப்பற்றி கதைகதையா சொல்லுவா . நான் முனையிலை நிக்கேக்கை உந்தக்கதையள்தான் போர்ட் இலை இருத்திப்போட்டு நடந்திது . நாங்களும் கோப்பாய் தரவையுக்கை பட்டம் விட்ட கிங்குகள்தான் . கதைக்குப் பாராட்டுகள் ஜீவா .

ஓ.. அவா அதே ஊர் என்பதால் அதிகம் தெரிந்திருக்கும், அதெல்லாம் ஒரு பொற்காலம். :)

நன்றி அண்ணா, கருத்து பகிர்வுக்கு.. :)

http://www.youtube.com/watch?v=orzE8fUCFjY

ஊர் பற்றியும் எழுதியுள்ளீர்கள்.  :)  புலம்பெயர்ந்து இருந்தாலும் ஊரின் நினைவுகள் நிச்சயம் எம்மை விட்டு அகலாதன... :rolleyes:

ஆஹா, இம்முறையும் உங்கள் மாமா பைக்கில் வருகிறாரா? நீங்கள் இருவரும் பஸ்ஸில்.... :icon_idea: தொடருங்கள்.. :)

வயசுப்பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள் சிஸ்டர், அதனால் ............ :rolleyes:

நன்றி.. தொடந்து தரும் உங்கள் ஊக்கத்திற்கு.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்காமல பொங்கியிருக்குமே :lol:

இதுக்கு இப்படி பப்ளிக்கா எல்லாம் பதில் சொல்ல முடியாது அண்ணா.. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவா நன்றாக எழுதுகிறீர்;கள் உங்கள் மாமியார் வீடு தொடரை வாசிக்கும்போது அந்தநாள் ஞாபகம் வந்ததே.... வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வரும் கணவருக்காக காத்திருக்கும் நானும் என் பெற்றவர் தம்பி தங்கைகளும்..... கூட்டுக் குடும்பத்தில் வாழும் பொழுது தடைகளையெல்லாம் தாண்டி தனிமையில் சந்திக்கும் இனிமைகள்...... உங்கள் எழுத்தோட்டம் நன்றாக உள்ளது. தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் விமானப் பயண அனுபவங்களை வாசிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும் எம்மில் பல மாற்றங்கள் தேவை என்பது உண்மை. பகிர்வுக்கு நன்றிகள்.

நன்றி அக்கா, :)

உண்மையில் நான் எழுதிய நோக்கத்தைச் சரியாய் உணர்ந்து கருத்தெழுதியுள்ளீர்கள்.

ஆனால் எனக்கு உங்கள் போல பெரிய கூட்டுக்குடும்பம் கிடையாது. அத்தை ஒருவர் மட்டும் தான்.

மற்றவர்கள் எல்லாம் பண்டிகை,விஷேசம்  என்றால் வந்து போபவர்கள். தினமும் கூட இருப்பதில்லை,

இருந்தாலும் பகல் பொழுதுகளில் திருட்டுத்தனமாய் சந்திப்பதே தனி சுகானுபவம் தான். :rolleyes::icon_idea:

என்ன ஐயா எழுத்து . ம் அந்த மாதிரி.

என்ன ஐயா எழுத்து . ம் அந்த மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விரைவாக எழுதிவிட்டீர்களா. நன்றாகப் போகிறது ஜீவா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 8

Koyambedu%2BBus1jpg.jpg

கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கும் போதே திறந்தவெளி மலசல கூடம் போல நாத்தம் குடலைப் பிடுங்கியது..

பல்லாயிரக்கணக்கானோர் வந்து போகும் சென்னையின் மிகப் பெரிய புறநகர் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு நிலை எனும் போது அங்குள்ள அரசு செயற்பாடுகளை நினைக்க வியப்பாய் இருந்தது. எப்படித்தான் இந்த மக்கள் இதுக்கெல்லாம் பழக்கப்பட்டு போனார்கள்..!

மாட்டுப்பொங்கல் என்பதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திருத்தணி போகும் காலியான பஸ்ஸில் ஏறினோம், நீண்ட நேர காத்திருப்பின் பின் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது.

நகர்ப்புறம் தாண்டி கிராமங்களூடு பஸ் செல்லும் போது தமிழகத்தில் இப்படியான இடங்களும் கூடவா இருக்கிறது என்று வியக்கும் அளவுக்கு இயற்கை தன் அழகைப் பரப்பிவிட்டிருந்தாள். வயல் நிலங்கள்,சிறு பற்றைக்காடுகள், குண்டும் குழியுமாய்

காப்பெற் வீதிகளில் திரிந்த எனக்கு புது அனுபவமாய் இருந்தது.. அதுவும் தோளில் என்னவள் சாய்ந்திருக்கும் போது ..

"பின் சீட்டை எப்போதுமே காதலர்களுக்காகவே ஒதுக்குவார்கள் போல"..

ஆனால் சில இடங்களில் வயல் நிலங்களை ஆக்கிரமித்து வீடுவிற்பனை மனைகளுக்கான விளம்பரங்களாய் வியாபித்திருந்தது.

விளம்பரங்கள் கூட ஒருவித ஆக்கிரமிப்புச் சின்னமோ என்ற சிந்தனை மட்டும் எழத்தவறவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு,இரண்டரை மணிநேரப் பயணம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் தூங்கிவிடுவேன் என்று நினைத்தாளோ என்னவோ தான் முந்தி இருந்த இடத்தில் நடக்கும் மாட்டுப் பொங்கல் குறித்து சொல்லிக்கொண்டே வந்தாள்.

"அனேக கிராமங்களில் அன்று போட்டிகள் வைத்து, பரிசளிப்பு விழா நடக்குமாம். இரவிரவாக விழாக்கள்,கவர்ச்சி நடனங்கள் எல்லாம் நடக்கும் என்று சொல்லும் போது தமிழ் சினிமாக் காட்சிகள் தான் மனதில் விரிந்தன"

"நாங்களும் தான் மாட்டுப்பொங்கல் செய்வோம், முதலில் வீட்டை கனக்க மாடுகள் இருந்தாலும் பிறகு எல்லாம் வித்து ரண்டுமாடும் , ஒரு கன்றுக் குட்டியும் தான் நின்றது, அன்றைக்கு நாங்கள் தோட்டத்துக்கு, மேய எல்லாம் அவிழ்த்து விடுறதில்லை.. கொட்டில்லையே கட்டி சாப்பாடு,புண்ணாக்கு எல்லாம் வச்சு பின்னேரக்கைக்கு தான் அதுக்கெல்லாம் நல்லா குளிப்பாட்டி வேப்பமரத்திலை கட்டிப்போட்டு மாட்டுக்கொட்டிலை எல்லாம் கூட்டி,தண்ணி தெளிச்சு, மாட்டுக்கு       சரம்போல மாலை கட்டி போட்டு திருநீறு பூசி,குங்குமம் எல்லாம் வச்சு கொட்டில்லை கொண்டுவந்து கட்டிப்போட்டு அதுக்கு ஸ்பெசலா அம்மா பசுப்பால் தான் விட்டு பொங்கல் செய்வா.. பொங்கி படைச்சு அதுக்கு "தீத்தி" விட்டு .. கன்றுக்குட்டியோடை விளையாடும் போது............."

"அன்றைக்கு அவை தான் ஹீரோ"

இனிய சம்பவங்களை அவளும் சொல்ல, நானும் சொல்ல நேரம் போனதே தெரியவில்லை நாங்கள் இறங்க வேண்டிய தரிப்பிடம் வந்தது. இறங்கியதும் அவர்களுக்கே சரியாக தெரியவில்லை அருகில் இருந்தவர்களிடம் திருத்தணிக்கு எப்படி போவது என்று கேட்ட போது பஸ்ஸில் வந்த ஒருவர் சொன்னார் தான் வழி காட்டுவதாக.

மிகத்தொலைவில் அல்ல ஒரு சில நிமிட நேர நடையில் அருகில் ஒரு இடத்திலிருந்து தான் கோயில் போகும் பஸ் என்றார்.

அங்கு போனதும் அதிர்ச்சி..

"சின்னஞ்சிறு குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பத்து வயது கூட நிரம்பாத பிள்ளையின் முதுகில் ரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தையை துணியோடு சேர்த்து கட்டி இருந்தார்கள், அந்த பிள்ளைகளின் முகம் ஜய்கோ........!!!!

நம்மைக் கண்டதும் ஓடி வந்து கையெடுத்துக் கும்பிட்டார்கள், காலில் விழுந்தார்கள். எழுத்தில் வடிக்க முடியாத அளவு நெஞ்சை உருக்கிய சம்பவம், அவ்வளவு விரைவில் என் ஆயுளில் அந்த சம்பவம் மறந்து போய் விடாது.

நான் காசை எடுக்கும் போது கையைத்தட்டி விட்டாள், குடுக்காதையுங்கோ. இவர்களை இப்படிப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் குடுத்தாலும் திரும்ப திரும்ப வருவார்கள் வேண்டாம், வயது போன தாத்தா, பாட்டிக்கு குடுங்கோ மற்றும் படி இப்படியானவர்களுக்கு குடுக்காதையுங்கோ என்றாள்."

அவளுக்கே தெரியும் நான் சில்லறைக்காசு மட்டும் தான் வைத்திருப்பேன் மற்றும் படி எப்பவும் காசு அவளிடம்,இல்லை அத்தையிடம் தான் குடுத்துவிடுவது, சில்லறைக்காசு வைத்திருப்பதே இதற்காகத்தான் யார் என்னிடம் கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை" சென்ற முறை கூட வடபழனி சென்றிருந்த போது ஒரு வயதான பாட்டியிடம் கேட்காமலே காசு தந்துவிட்டவள் கொண்டு போய் குடு என்று சொல்லி"

"இன்று இப்படிக் கதறியும்"

அக்கா அக்கா, அந்த தண்ணி பாட்டிலை தாங்கோ

"கையில் இருந்த தண்ணிப்போத்தலையும், மாஸா போத்தலையும் அவர்கள் பறிக்க முயற்சிக்கும் போது அடிச்சிடுவேன் ஓடிப்போயிடுங்க என்றாள்"

"குடடி"..

போங்க உங்களுக்கு இதுகளைப் பற்றி தெரியாது..

என் முகத்தைப்பார்த்து என் குறிப்புகளை உணர்ந்தவளாய் முகத்தை திருப்பிக் கொண்டாள் அந்த நொடி எனக்கும் அவளைப்பார்க்க பிடிக்க வில்லை.

அவள் திரும்பியதும் நான் என்னிடம் இருந்த காசுகளைக் குடுத்து விட்டேன்.

கோவிலுக்குப் போகும் பஸ் வந்தது ஏறியதும் எனது மனநிலை கோவிலுக்கோ, அல்லது சாமி கும்பிடும் நிலையிலோ இல்லை.

 பாலாவின் "நான் கடவுள்" படம் தான் நினைவில் வந்தது அதிலும் இப்படி ஒரு காட்சி அமைப்பு இருக்கணும்.

601294_408642565876699_1256907351_n.jpg

734690_408643105876645_896999812_n.jpg

65274_408642102543412_441102394_n.jpg

பஸ் மலைமீது ஏறி கோவில் வாசலில் விட்டதும், செருப்பு,சப்பாத்துக்கு எல்லாம் டோக்கன் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு போனால் கூட்டம் ஜாஸ்தி.. வரிசையாக நின்று ஒவ்வொருத்தராக போக கால் கடுக்க ஆரம்பித்தது,

இவள் குரங்குடன் சேட்டை விட்டுக்கொண்டிருந்தாள்..

25916_408641822543440_244122921_n.jpg

"கோயிலா இருக்கு ரொமான்ஸ் கூட பண்ண முடியாது..சா.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு நல்ல ஃபிகர் கூட இல்லை, நம்மடை பீலிங்ஸ் சை யார் தான் பா புரிஞ்சுக்கிறாங்க என்று நொந்து கொண்டது மனது"

ஒரு மாதிரி உள்ளே போனோம் ஒரு நிமிடம் கூட நின்று சாமி தரிசனம் செய்யவிடவில்லை விளக்கைக் காட்ட தொட்டு கும்பிட்டு காசை தட்டில் போட்டு விட்டு திருநீறு,குங்குமத்தை வாங்கிக்கொண்டு வரவேண்டியது தான். அத்தை என்னுடைய கையிலும் காசை திணித்திருந்தார் போடச் சொல்லி..

என்கண்கள் முருகன் மேல் அல்ல, ஜயரின் தட்டில் இவ்வளவு காசு இருக்கே ஒரு நாளைக்கே இப்படி என்றால் மாதத்திற்கு???

"இந்தியாவில் பிழைப்பதற்கு ஆன்மிகம் தான் சிறந்த வழி என்று எண்ணிக்கொண்டேன்."

அப்படியே வள்ளி, தெய்வயானையைத்தரிசிக்க போகும் போது ஜயர் தீபம் காட்டிவிட்டு

"கல்யாணம் ஆயிட்டோ அம்பி.."

ஓம்

"சீக்கிரம் பிள்ளை பாக்கியம் பிரார்த்ஸ்து.."

அது தான் ஒன்டு இல்லாத குறை.. சிரிப்புத்தான் வந்தது.

நான் திருநீறு பொட்டு வைக்க மாட்டேன் என்று தெரியும். என்னவள் தன் கையிலுருந்த பொட்டை வைத்து விட்டாள்.

வெளிய வரும் போது கூண்டில் மயில்கள் நின்றன அதையும் பார்த்து விட்டு சிறிது நேரம் இருந்து பேசிக்கொண்டிருந்தோம்.

இந்தாங்கோ அத்தை நீங்கள் தந்த காசு..!

ஏன்பா? ஏன் தட்டிலை போடலை?? பக்கப்பாட்டுக்கு இவள்

" உங்க மருமகன் மிச்சம் பிடிச்சு கொண்டுவந்திருக்கார்"

"குடுக்க வேண்டிய ஆக்களுக்கு குடுக்காதையுங்கோ இங்கை வந்து போடுங்கோ, எனக்கு சரி பிழை பார்க்க தெரியாது

இருக்கும் போது யார் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன்."

அமைதி ........

"வாங்கோ போவம்.."

வெளியில் வந்து போட்டோ எடுத்து விட்டு பஸ்ஸில் ஏறியதும் பழைய அந்த இடம்,

" உண்மையில் கோவிலுக்கு போய் வந்ததை அந்த இடம் வெட்கப்படுத்தியது"

எல்லாருக்குமே பசி என்பது முகங்களிலேயே தெரிந்தது.

"உயர் சைவ உணவகம் என்றதைப் பார்த்து   உள்ளே போனால் பார்க்க நல்லாத்தான் இருந்திச்சு

பரோட்டாவைக் கடிக்கவே பல்லுப் பறந்திடும் போல இருந்திச்சு.."

அங்கிருந்து பஸ்ஸில் சீட் கிடைப்பது அரிது. இருந்தாலும் எங்கள் நல்ல நேரம் சீற் காலியாக இருந்தது.

எப்போதும் போல பின் சீட்டிலேயே இருந்துகொண்டோம்..

வரும் போது மாலை மங்கியிருந்தது காற்றும் கூட சற்று பலமாகவே அடித்தது ..

பின் சீட்

திறந்த கண்ணாடி சாளரம்

பறக்கும் கூந்தல்

தேவதை..

"இனிய இரவின் வரவேற்பு இப்பவே"

mp3யில் பாடலை ஒலிக்க விட்டு ஹெட்போனை ஒன்றை ஒன்று ஒருவர்காதில் மாட்டியவாறு அவள் தோளில் சாய்ந்த படி பயணம்.. "கம்பனையே வென்றிடுவேன் அந்நேரக் கவி சொல்லி"

கிராமங்களூடு பஸ் பயணிக்கும் போது சில இடங்களில் வீதியோரமாக மேடை போட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது, சில இடங்களில் செவிப்பறை கிழியுமளவுக்கு பாடல்கள் ஒலித்தன

ஆங்காங்கே மாடுகளுக்கு வண்ண வண்ண ஆடை போட்டு பலர் வீதியெங்கும் ஊர்வலம் போலக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

மொத்தத்தில் இந்தப் பயணம் மறக்க முடியாத அனுபங்களைக் கொண்டதாய் அமைந்தது.

தொடரும்..

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... பிரியாவை நினைச்சுக் கொண்டே எழுதுகிறீர்கள் போல் ஜீவா. இவ்வளவு உற்சாகமாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

அப்ப நீர் பழைய கோயம்பேடு பஸ் ஸ்ராண்டை பாக்கேலையோ ஜீவா  :lol:  :lol:  :D ???  இதுக்கே இப்பிடி ஃபீல் பண்ணினா எப்பிடி :icon_mrgreen: ??? தொடருங்கோ :) .

அங்கு போனதும் அதிர்ச்சி..

"சின்னஞ்சிறு குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பத்து வயது கூட நிரம்பாத பிள்ளையின் முதுகில் ரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தையை துணியோடு சேர்த்து கட்டி இருந்தார்கள், அந்த பிள்ளைகளின் முகம் ஜய்கோ........!!!!

நம்மைக் கண்டதும் ஓடி வந்து கையெடுத்துக் கும்பிட்டார்கள், காலில் விழுந்தார்கள். எழுத்தில் வடிக்க முடியாத அளவு நெஞ்சை உருக்கிய சம்பவம், அவ்வளவு விரைவில் என் ஆயுளில் அந்த சம்பவம் மறந்து போய் விடாது.

நான் காசை எடுக்கும் போது கையைத்தட்டி விட்டாள், குடுக்காதையுங்கோ. இவர்களை இப்படிப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் குடுத்தாலும் திரும்ப திரும்ப வருவார்கள் வேண்டாம், வயது போன தாத்தா, பாட்டிக்கு குடுங்கோ மற்றும் படி இப்படியானவர்களுக்கு குடுக்காதையுங்கோ என்றாள்."

வாசிக்கும் போது கவலையாக உள்ளது. இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல எமது நாட்டிலும் தான்...

வெளிநாடுகளில் சிறு பிள்ளைகளுக்கு பிச்சை போடுவதில்லை. பிச்சை போட்டு பழக்கினால் அவர்கள் படிக்க, வேலை செய்ய முயற்சிக்காமல் பிச்சையையே தொழிலாக்கி விடுவார்கள் என்று.. ஆனால் இந்தியாவில் அல்லது எமது நாட்டில் எனும் போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேறு யாரும் பெரியவர்கள் கூறட்டும்.

நான் இந்தியாவுக்கு சென்றதில்லை. எனினும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் உணர்வு. தொடர்ந்து எழுதுங்கள். :)

ம்ம்.....மாமியா வீடு மகாசொளக்கியம் போலை! தொடருங்கள் ஜீவா!!  என்னவோ எனக்கு உந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை ஸ்ரைல் விருப்பமில்லை.  நானும் என் குடும்பமும்  என்றிருக்கத்  தான் விருப்பம் எப்போதுமே . எப்பாலும் இருந்திட்டு லீவில் போய் நிற்கும் போது ஓக்கே. மற்றும் படி அன்றாடம்... ஆண்டவா!!

  • கருத்துக்கள உறவுகள்

பயண நினைவுகளை மீட்டிப்  பார்த்து எழுதும்  போ து மீண்டும்  பயணிக்கும் சுவை. தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.