Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபாஸ் நியானி! தொடரட்டும் உம் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்லதொரு சமயத்தில் யாழ்களத்தினை செம்மையுடனும் திறமையுடனும் சிறப்பாக வழிநடத்தும் நியானி (அக்கா?), நுணா, இணையவன் மற்றும் நிழலி ஆகியோருக்கு எனது அகம் நிறைந்த பாராட்டுக்கள்!

நீவிர் பல்லாண்டு வாழி!

நியானியை... அக்கா என்று சொல்லிக் கூப்பிட்ட படியாலை... காவாலிக்கு, வெட்டு விழப் போகுது.smiley-laughing014.gif

  • கருத்துக்கள உறவுகள்

நியானி ஆரம்பத்தில் அறிமுகமான போது, இருந்த நிலைக்கும், தற்போதைய கருத்துக்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது! ( உண்மையைச் சொல்லத்தானே வேணும்! :D )

நியானி என்ற பெயர் எல்லா உறவுகள் மனதிலும், ஒரு ஆழமான இடத்தைப் பிடித்துள்ளது! இது நியானியின் சாதனை என்று தான் சொல்வேன்!

நிழலி, இணையவன், நுணா மூவரும் ஒரே தளத்தில் பயணிப்பது, யாழுக்கு மிகவும் ஆரோக்கியமானது!

யாழின் சிறகுகளின் , பல திசை நோக்கிய விரிகைக்கும், தொலைநோக்கிய பறப்புக்கும்,உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அத்தியாவசியமானது!

மணிவாசகனுக்கும் எனது நன்றிகள்! 

பழைய பதிவுகளை தேடி எடுத்து முகப்பில் போடுவதால் என்ன நன்மை எனத் தெரியவில்லை...வேண்டுமானால் இங்கிருக்கும் பழைய கருத்தாளர்கள் தங்கள் பழைய பதிவுகளை பார்த்து மகிழக்கூடும்...யாழுக்கு வராமல் விட்ட பழைய உறுப்பினர்கள் தங்கள் பதிவுகளை முகப்பில் போடுவதை கண்டு விட்டு ஒரு நாள்,இர‌ண்டு நாள் வந்து தங்கள் பதிவுகளை பார்த்து விட்டு போகக் கூடும்...எதுவாகினும் நேர‌ம் மினக்கெட்டு பழைய படைப்புக்களை தேடி எடுக்கும் நியாணிக்கும்,இணையவனுக்கும் எனது பாராட்டுக்கள்

யாழின் புதிய வாசகர்கள் பழைய பதிவுகளை வாசித்திருக்க மாட்டார்கள். இனி வாசிக்க விரும்பினாலும் அனைத்து பழைய பதிவுகளையும் வாசித்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் சில முக்கிய பதிவுகளை தேர்ந்தெடுத்து போடும்போது வாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

Edited by துளசி

 நியானி நிழலி, நுணாவிலான், இணையவனுக்கு வாழ்த்துக்கள்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டவே பயமாயிருக்கு...........

கத்தியை எப்போ எங்கே போடுவார் என்ற புரியவில்லை.
 
கத்தியை போடவேண்டிய இடங்களில் போட்டுவிட்டால்.....
கத்தி போடவேண்டிய கருத்துக்களை நாங்கள் போட தேவை ஏதும் இல்லை.
 
தலைப்பு எங்கோ இருக்க ............ வெறும் கார்ப்புனர்வுகள் கருத்துக்களாக இருந்தால்?
சும்மா பார்த்துவிட்டு போகமுடியாது. நாம் கொடுத்த விலை எமது உணர்வு வாழ்வு எல்லாமே ஈழம்தான். ஈழத்தை எந்த அளவிற்கு ஒருவன் நேசிக்கிறானோ அதற்கு மேலாக அதை நேசித்த  மனிதர்களை அவன் நேசிப்பான்.
சம்பவங்களில் தவறிருக்கலாம்..........
சரித்திரம் தவறிவிட கூடாது....... இதற்கு நாம் கொடுத்த விலை இவுலகில் விலைமதிக்க முடியாதது.
தற்பெருமைக்கு நாடகம் போடுபவனுக்கு நாடு எக்கேடு கேட்டாலும் பரவயில்லை தனது பெருமை இருந்தால் போதும் என்றுதான் வாழ்வான் இங்கேயும் வாழுது... (கள் ).
யாழுக்கு வரவே சிலநேரம் பிடிப்பதில்லை.............
அந்தளவு கீழ்த்தரமான அசிங்கங்கள் சிதறி கிடக்கும். வீணான இரத்த அழுத்தம் என்றுவிட்டு மூடிவிட்டு போய்விடுவேன். 
 
தலைப்புக்கு சமந்தம் இல்லாத கருத்துகளில் கொஞ்சம் கவனம் எடுக்க முடியாதா???
 
ஆதாரம் அற்ற அவதுறுகளுக்கு கொஞ்சம் ஆதாரங்களை இணைக்கும் படி கேட்க்க முடியாதா?? 
 
எரிகிற வீட்டில் புடுங்கியது லாபம் என்று புடுங்கு கிறவனுக்கு............. 
அமெரிக்கா புலியை பயங்கரவாதி என்று சொல்லிவிட்டால் புல்லரிக்கு.
இன்று பல  கோடிகளை  கொட்டி அழிக்கும் பில்லாடன் கூட்டத்தை இதே அமெரிக்காவே பல கோடி கொட்டி வளர்த்தது. அன்றும் இன்றும் பில்லாடனின் கொள்கை ஒன்றுதான் . இஸ்லாம் புனித பூமிக்குள் யாரும் அத்து மீறி வந்தால் முஸ்லிம் சகோதரர்கள் ஒன்று கூடி அவர்களை விரட்டுவது. அப்போது ரசியா இப்போது அமெரிக்க .
 
ரசியாவை விரட்டும்போது அவனது கொள்கை பாரட்ட கூடியதாக இருந்தது 
இன்று அதே கொள்கை இவர்களுக்கு கசக்கிறது.
 
பின்லாடனுடைய கொள்கை சரியா?  தவறா? என்று விமர்சனம் வைப்பது ஆரோக்கியமானது. 
அமெரிக்க பயங்கரவாதி என்று சொல்லிவிட்டது என்று........... தொடங்குவது ?
 
யாழில் குறிப்பிட்ட பள்ளி தகுதி இருந்தால்தான் யாழில் கருத்தை வைக்கலாம் என்று எந்த நிபந்தனையையும்  காணவில்லை. அடுத்த மனிதனின் பள்ளி தராதரம் பற்றிய காழ்ப்புணர்வு  யாழில் எங்கும் சிதறி கிடக்கிறதே??? உள்மனதால் நலிந்தோரை  மிதிக்கும் இந்துவாதம் உங்களிடமும் இருப்பதுபோல்தான் எனக்கு படுகிறது. இது எந்த ஆதாரமும் அற்ற வெறும் தனிமனித தாக்குதல். எமது பள்ளி தராதரங்களை  அடுத்தவனுக்கு காட்டுவதற்கு நாம் படிக்கவில்லை. அதை அடுத்தவனிக்கு பயன்படுத்தவே  படிக்கிறோம்.
 
"சினிமா தணிக்கை" இதுபற்றி நிறைய அலசவேண்டிய ஒரு தேவை எனக்கு ஏற்பட்டது. அப்போது தான் அமெரிக்க கொலிவூட் படங்களை யார் தணிக்கை செய்வது என்பதே யாருக்கும் தெரியாது என்ற உண்மை தெரிய வந்தது.
விஜயின் படத்தில் நயன்தாராவின் மார்புக்குள்ளால் கமரா போய்வரும்.....
அதுவே ஒரு சாதாரண படைப்பாளி என்றால் ரவிக்கைக்கு போனாலே வெட்டு என்றாகிவிடும். 
தற்போதைய "விஸ்பரூபம்" பற்றிய விடயம் நீங்கள் அறிந்திருக்கலாம்.
நீதி என்பது அங்கு செத்து கிடக்கிறது என்பதை நான் சொல்லத்தேவை இல்லை. உங்களுக்கும்  நன்றாக தெரியும்.
 
யாழிலும் அது சாக வேண்டுமா?
உங்களுடைய பணி  சிரமம் எல்லாமே   பாராட்டப்பட்ட வேண்டியது. நானும் பாராட்டுகிறேன். 
 
"தண்ணீர் உற்றியா வளர்த்தோம் இப்பயிரை........
செந்நீர் ஊற்றியல்லவா வளர்த்தோம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியானி ஏற்கனவே எல்லோரும் தங்கள் கருத்தை பகிவிட்டுவிட்டார்கள். புதினமாக நான் எதை எழுத முடியும்? தற்சமயம் நிர்வாகம் வித்தியாசமான அணுகுமுறைகளை கருத்தாளர்களுக்குள் கடைப்பிடிக்கிறது. அதில் நியானி ,நிழலி, இணையவன், நுணாவிலான் என்று பிரித்துப்பார்த்து பாராட்டுகளை சொல்ல விரும்பவில்லை. நன்றாக கூட்டணியாக இயங்குகிறீர்கள். உங்களுடைய அத்திவாரம் என்பது வலிமையானதாக உணர்கிறேன். ஒவ்வொரு படியையும் நிதானத்துடனேயே முன்னெடுப்பதை அதிகம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது தொடர்ந்தும் உங்கள் சிந்தனைகள் வலிமையானவையாகவும் வளமானவையாகவும் பயணிக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

""யூத்" தில்லே ... அப்படித்தான் இருக்கும்.. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நியானி, நிழலி, நுணாவிலான் & இணையவனுக்கு வாழ்த்துக்கள்

யாழ்கள நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகள். உங்கள் வேலைச்சுமை, குடும்ப சுமைக்கு மத்தியிலும், யாழ் களத்தை சீரான வழியில் கொண்டு செல்ல நீங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, என்னால் இயன்ற உதவிகளை என்றைக்கும் செய்ய கடமைப்பட்டுள்ளேன்  என்பதயும் குறிப்பிட விரும்புகிறேன்.

உண்மையிலேயே உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் பொறுப்புணர்ந்து, கருத்துகளை பதிவிடுவதால், எங்கள் நிர்வாகிகளின் சுமையில் பாதியை குறைக்கலாம் என்பதை மறந்துவிடுகிறோம். நிர்வாகிகளை பாராடுவதொடு நின்றுவிடாமல் எதிகாலத்தில் அவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் நாகரிக கருத்தால்களை செய்ய வேண்டும் என்று கேட்டு நிற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பாராட்டுக்குரியவர்கள் இந்த நால்வரும்.அதோட அத்திவாரம் போட்ட மோகனுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய வாசகர்கள் பழைய பதிவுகளை வாசித்திருக்க மாட்டார்கள். இனி வாசிக்க விரும்பினாலும் அனைத்து பழைய பதிவுகளையும் வாசித்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் சில முக்கிய பதிவுகளை தேர்ந்தெடுத்து போடும்போது வாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

அது எனக்கு தெரியும் துளசி ஆனால் யாழில் தற்போது எழுதுபவர்கள் இப்போது உறுப்பினர்கள் எழுதும் ஆக்கங்களை வாசிக்கவோ,கருத்தெழுதவோ நேரமில்லாமல் இருக்கிறார்கள்.பிறகு எப்படி பழைய ஆக்கங்களை வாசிப்பார்கள்/கருத்தெழுதுவார்கள்?...ஒன்று,இரண்டு பேர் இருக்க கூடும்.

நீங்கள் யாழின் உறுப்பினர்களை மட்டும் யோசிக்கிறீர்கள். நான் யாழில் உறுப்பினர்கள் அல்லாத வாசகர்களையும் சேர்த்து கூறுகிறேன் அக்கா. யாழ் உறுப்பினர்கள் வந்ததும் உள்நுழைந்து விடுவார்கள். வாசகர்கள் முன்பக்கத்தை தான் அதிகம் பார்ப்பார்கள்.

அத்துடன் யாழின் உறுப்பினர்களிலும் எழுதுபவர்களை விட வாசகர்கள் தான் அதிகம்.

நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் அப்படி பார்த்தால் தற்போது எழுதுபவர்களது சிறந்த ஆக்கங்களைத் தானே முகப்பில் போட வேண்டும்?...எதற்கு யாழை விட்டு போனவர்களது பழைய ஆக்கங்களை தேடி எடுத்துப் போடுவான்?   

எது எப்படியோ நிர்வாகத்திற்கு தெரிய்ம் தானே என்னவோ செய்து கொள்ளட்டும்

இப்பொழுதெல்லாம் சிறந்த ஆக்கங்களுக்கு பற்றாக்குறையோ தெரியவில்லை. :D  :icon_idea: யாரும் அடிக்க வந்து விடாதீர்கள். :icon_idea:  சரி முகப்பில் ஒரு சிறிய இடத்தை தானே பிடிக்கிறது.... அதனால் நட்டமிருப்பதாக தோன்றவில்லை. :rolleyes:

நீங்கள் சொல்வது போல் இதுவிடயமாக நிர்வாகம் என்னென்றாலும் செய்யட்டும்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது எனக்கு தெரியும் துளசி ஆனால் யாழில் தற்போது எழுதுபவர்கள் இப்போது உறுப்பினர்கள் எழுதும் ஆக்கங்களை வாசிக்கவோ,கருத்தெழுதவோ நேரமில்லாமல் இருக்கிறார்கள்.பிறகு எப்படி பழைய ஆக்கங்களை வாசிப்பார்கள்/கருத்தெழுதுவார்கள்?...ஒன்று,இரண்டு பேர் இருக்க கூடும்.

நீங்கள்

சொல்வது உண்மை தான் ஆனால் அப்படி பார்த்தால் தற்போது எழுதுபவர்களது சிறந்த

ஆக்கங்களைத் தானே முகப்பில் போட வேண்டும்?...எதற்கு யாழை விட்டு

போனவர்களது பழைய ஆக்கங்களை தேடி எடுத்துப் போடுவான்?   

எது எப்படியோ நிர்வாகத்திற்கு தெரிய்ம் தானே என்னவோ செய்து கொள்ளட்டும்

ஒன்று செய்யுங்க.. நீங்கள் பற்பல.. யுனிவேர்சிட்டிகளில் போய் படிச்ச அறிவை வைச்சு நியானிக்கு ஓர் அறிவுரை என்று சொல்லி அவருக்கு எந்தெந்த ஆக்கங்கள் நல்லது என்று எடுத்துச் சொன்னீங்கன்னா.. அவர் அதன்படி நடந்து கொள்ளுவார்.

உங்களுக்கு பிடிக்காதது மற்றவனுக்குப் பிடிச்சிருக்கும். சும்மா சும்மா எதற்கும் எதிர் கருத்தெழுதனும் என்று அலைஞ்சு திரியக் கூடாதுக்கா. உருப்படியா சிந்திக்கிற வழியைப் பாருங்க..! நியானிட ரசனையில நீங்க ஏன் தலையிடுறீங்க. அது அவருடைய சுதந்திரம்.. எதனை வாசிக்கனும்.. விடனும் என்றது.. அவருடைய தெரிவு. உங்களுக்கு வந்து யாராவது சொல்லிக்கிட்டு இருக்காங்களா... இது திறம்.. இதை தான் படின்னு.

இப்ப நீங்க நியானிக்கு கருத்துச் சொன்னது போல தான் நானும் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.. புதிசா ஒன்றையும் அல்ல. நீங்க சொன்னத்தை உங்களுக்கே ரிப்பீட் பண்ணி இருக்கன். புரிஞ்சு கொள்ள முனையுங்க.

எந்த ஒரு சிறிய ஆக்கமாயினும் அதனை ஆக்கியவனுக்கு அது திறம். அதனைப் புரிஞ்சு கொண்டு கருத்தெழுதவும் ஊக்குவிக்கவும் பழகிக்குங்க..! உங்களுக்கு பிடிக்கல்லைன்னா.. வாசிக்கிறதை.. கருத்துச் சொல்லுறதை தவிர்க்கலாம். எவனாவது வந்து உங்களட்ட கருத்துக்.. கேட்டானா.. இது திறமா.. திறமில்லையான்னு..???! :):lol:

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று செய்யுங்க.. நீங்கள் பற்பல.. யுனிவேர்சிட்டிகளில் போய் படிச்ச அறிவை வைச்சு நியானிக்கு ஓர் அறிவுரை என்று சொல்லி அவருக்கு எந்தெந்த ஆக்கள் நல்லது என்று எடுத்துச் சொன்னீங்கன்னா.. அவர் அதன்படி நடந்து கொள்ளுவார்.

உங்களுக்கு பிடிக்காதது மற்றவனுக்குப் பிடிச்சிருக்கும். சும்மா சும்மா எதற்கும் எதிர் கருத்தெழுதனும் என்று அலைஞ்சு திரியக் கூடாதுக்கா. உருப்படியா சிந்திக்கிற வழியைப் பாருங்க..! நியானிட ரசனையில நீங்க ஏன் தலையிடுறீங்க. அது அவருடைய சுதந்திரம்.. எதனை வாசிக்கனும்.. விடனும் என்றது.. அவருடைய தெரிவு. உங்களுக்கு வந்து யாராவது சொல்லிக்கிட்டு இருக்காங்களா... இது திறம்.. இதை தான் படின்னு.

இப்ப நீங்க நியானிக்கு கருத்துச் சொன்னது போல தான் நானும் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.. புதிசா ஒன்றையும் அல்ல. நீங்க சொன்னத்தை உங்களுக்கே ரிப்பீட் பண்ணி இருக்கன். புரிஞ்சு கொள்ள முனையுங்க.

எந்த ஒரு சிறிய ஆக்கமாயினும் அதனை ஆக்கியவனுக்கு அது திறம். அதனைப் புரிஞ்சு கொண்டு கருத்தெழுதவும் ஊக்குவிக்கவும் பழகிக்குங்க..! உங்களுக்கு பிடிக்கல்லைன்னா.. வாசிக்கிறதை.. கருத்துச் சொல்லுறதை தவிர்க்கலாம். எவனாவது வந்து உங்களட்ட கருத்துக்.. கேட்டானா.. இது திறமா.. திறமில்லையான்னு..???! :):lol:

யாழ் ஒரு பொது கருத்துக்களம் அதில் எப்படி நியாணி தன்னிச்சையாக முடிவெடுப்பார்?... நான் ஒன்றும் எழுதுறதுமில்லை என்ட ஆக்க்த்தை தூக்கி முகப்பில போடச் சொல்லவுமில்லை... மற்றவர்கள் என்ன எழுதினாலும் ஊக்கப்படுத்திற ஆள் நான்...  உங்கட கருத்திற்கு மட்டும் மற்றவர்கள் வந்து எழுத வேண்டும் ஆனால் நீங்கள் ஒருத்தருக்கும் கருத்து எழுதவோ,ஊக்கப்படுத்தவோ மாட்டீர்கள்...ஏனென்டால் உங்களுக்குத் தான் மெத்தத் தெரியும்[உங்களை விட எழுதக் கூடியவர் யாழில் யார் இருக்கினம்]

நான் நியாணிக்கு அறிவுரை சொல்லவுமில்லை எனக்கு அறிவுரை சொல்லக் கூடிய தகுதி உங்களுக்குமில்லை...அரிச்சுது என்டால் சொறிஞ்சு போட்டு இழுத்து போத்துக் கொண்டு படுக்கவும்.

என்னுடைய கருத்தை களத்தில் சொல்லுவதற்கு எனக்கு உரிவை இருக்குது...உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் போங்கோ

நியானி: சீண்டல் வரிகள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஒரு பொது கருத்துக்களம் அதில் எப்படி நியாணி தன்னிச்சையாக முடிவெடுப்பார்?... நான் ஒன்றும் எழுதுறதுமில்லை என்ட ஆக்க்த்தை தூக்கி முகப்பில போடச் சொல்லவுமில்லை... மற்றவர்கள் என்ன எழுதினாலும் ஊக்கப்படுத்திற ஆள் நான்... உங்கட கருத்திற்கு மட்டும் மற்றவர்கள் வந்து எழுத வேண்டும் ஆனால் நீங்கள் ஒருத்தருக்கும் கருத்து எழுதவோ,ஊக்கப்படுத்தவோ மாட்டீர்கள்...ஏனென்டால் உங்களுக்குத் தான் மெத்தத் தெரியும்[உங்களை விட எழுதக் கூடியவர் யாழில் யார் இருக்கினம்]

நான் நியாணிக்கு அறிவுரை சொல்லவுமில்லை எனக்கு அறிவுரை சொல்லக் கூடிய தகுதி உங்களுக்குமில்லை...அரிச்சுது என்டால் சொறிஞ்சு போட்டு இழுத்து போத்துக் கொண்டு படுக்கவும்.

யாழ் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொதுக்களம். மேலும்.. எந்த ஆக்கத்தைப் படிக்கனும் கருத்துச் சொல்லனுன்னது எனது சுதந்திரம். அதுபோலவே நியானிக்கும் உள்ளது. அதை நீங்க தீர்மானிக்க முடியாது.

எங்களின் ஆக்கங்கள் எங்களின் உள்ளத்து நிறைவுக்காக படைக்கபடுவனவே தவிர.. நீங்கள் வந்து கருத்தெழுதனுன்னு இல்ல. ரசனை உள்ளவங்க படிச்சு கருத்துச் சொல்லுறது அவங்க சுதந்திரம். அதில் நாங்கள் தலையீடு செய்வதில்லை. உங்களைப் போல.. உறுப்பினர்கள்.. யாரும் மற்றவர்களின் ஆக்கங்களை மட்டம் தட்டிக்கொண்டு திரிவதில்லை.

எல்லோரும் சுயமா முயன்று தான் முன்னுக்கு வருகிறார்கள். எடுத்தவுடன் எவனும் திறமாகப் படைப்பதில்லை...! அதனை ஊக்குவிக்கத் தெரியாட்டிலும்.. ஊமையாக இருப்பது மேல்..!

நியானி: மேற்கோளும் பதிலும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நியாணி 

யாழ் நிறுவாகத்திற்கு வாழ்த்துகள், தொடர்க உங்கள் பணி

நியானி  இந்தியா மீது வைத்துள்ள அதீத நம்பிக்கை - ஒரு பக்கச்சார்பானதாக மாறிவிட இடமளித்தல் கூடாது!

யாழின் புதிய வாசகர்கள் பழைய பதிவுகளை வாசித்திருக்க மாட்டார்கள். இனி வாசிக்க விரும்பினாலும் அனைத்து பழைய பதிவுகளையும் வாசித்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் சில முக்கிய பதிவுகளை தேர்ந்தெடுத்து போடும்போது வாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

பழைய பதிவுகளை வாசிக்க விரும்புவர்கள் தேடிப்போய் வாசிப்பார்கள்.அதை இப்படி போட்டால்தான் வாசிப்பார்கள் என்பது உங்கள் கருத்து தவறு :) .ஆனால் நிர்வாகம் இதற்கு வைத்த காரணம் இதுவல்ல.பழைய உறுப்பினர்களை ஊக்குவிக்க என்று சொல்லி இருந்தார்கள்.சிலவேளை அது சரியாக இருக்கலாம் அதில் சில பழைய உறுப்பினர்கள் வாசகர்களாக வருமிடத்து.அப்படி யாரும் வராவிட்டால் அந்த முயற்சியும் வீணே.நிர்வாகத்துக்குதான் தெரியும் அவர்கள் வருகிறார்களா இல்லையா என்று.

நியானி: சீண்டும் வகையில் அமைந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது.

சுயமான ஆக்கங்களை இன்னும் அதிகமாகப் படைப்பதை ஊக்குவிக்கும் முகமாகவும், யாழின் வளர்ச்சியில் துணைநின்ற கள உறவுகளை நினைவுகொள்ளும் வகையிலும் ஓவ்வொரு நாளும் ஒரு பழைய சுயமான ஆக்கம் பரணில் இருந்து எடுக்கப்பட்டு முகப்பில் உள்ள இன்றைய தெரிவு பகுதியில் காண்பிக்கப்பட்டு வருகின்றது.

நன்றி நியாணி அண்ணா சுட்டி காட்டியதற்கு.இதை நான் சில நாட்களுக்கு முன் வாசித்ததால் சிலபகுதியை மறந்துவிட்டேன்.சுய ஆக்கம்களை ஊக்குவிக்கவும் பழைய உறுப்பினர்களை நினைவு படுத்தி அவர்கலை கவுரவிக்கவும் என்ற உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் அண்ணா.அற்புதமான் பணி அண்ணா.நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.