Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல்னா என்ன???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள்,

"அப்பா, அது என்ன?"

"இது ஒரு பரிசு"

"இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???"

"இல்லம்மா"

"அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???"

"இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க"

"அப்பா, காதல்னா என்ன???"

மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

"உனக்கு பப்பியைத் தெரியும் தானே?"

"தெரியும்ப்பா!!!"

"பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடியாது, பப்பியால இப்போ குரைக்க முடியாது"

"அப்பா, பப்பிக்குக் கண்ணு கூடத் தெரியலன்னு அப்பத்தா சொன்னாங்க!!!!!"

"ம்ம்ம்ம்......ஆனாக் கூட பப்பி நம்ம ஊர்ல இருந்து போன உடனே என்னம்மா செய்யும்???"

"வால வால ஆட்டும்ப்பா!!!!!!"

"பப்பியால எதுவுமே செய்ய முடியலைன்னாலும், அதுக்கு உடம்பு முடியலைன்னாலும் கூட, எத்தனை நாள் ஆனாலும் கூட, அது உன்னைய, என்னைய, அம்மாவப் பாத்தா ஒடனே மறக்காம வால ஆட்டுது பாத்தியா???"

"ஆமாப்பா"

"அதுக்குப் பேரு தாம்மா காதல்."

எந்த எதிர்பார்ப்பும், எந்த லாபங்களும் இல்லாம இன்னொரு உயிர அன்பு செய்யுறதுக்குப் பேரு தாம்மா காதல்.

எங்கள் பத்து வருடக் காதலுக்குப் பரிசான நிறைமொழிக்கு இப்போது புரிந்திருக்கும், காதல் என்றால் என்ன என்று!!!!

Arivazhagan Kaivalyam

  • Replies 62
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு சுபேஸ். அறிவழகனும் நல்ல படைப்புக்களைத் தருபவர்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த எதிர்பார்ப்பும், எந்த லாபங்களும் இல்லாம இன்னொரு உயிர

அன்பு செய்யுறதுக்குப் பேரு தாம்மா காதல்.

பகிர்வுக்கு நன்றி சுபேஸ்.............

  • கருத்துக்கள உறவுகள்

//எந்த எதிர்பார்ப்பும், எந்த லாபங்களும் இல்லாம இன்னொரு உயிர அன்பு செய்யுறதுக்குப் பேரு தாம்மா காதல்//

சுப்பர்... நல்லதொரு பதிவு சுபேஸ்.

"

எந்த எதிர்பார்ப்பும், எந்த லாபங்களும் இல்லாம இன்னொரு உயிர அன்பு செய்யுறதுக்குப் பேரு தாம்மா காதல்.

மண்ணாங்கட்டி... எந்த எதிர்பார்ப்பும் எந்த லாபங்களும் பார்க்காத ஒரே ஒரு அன்பு பெற்றோரின்  அன்பு மட்டும்தான். தமிழில் இதனால் தான் பாசம் / காதல் என்ற இரு வேறு சொற்கள் இருக்கின்றன. காதல் என்பதே ஈர்ப்பு, Physical attraction மற்றும் இன்ன பிற விடயங்களை வைத்து எழுவதுதான்.

பப்பிக்கு கூட சாப்பாடு போடாவிட்டா பக்கத்து விட்டு ஜிம்மிக்கு சாப்பாடு போடுகின்றவரைப் பார்த்து வாலை ஆட்டும்

:lol:

தம்பி இன்னும் காதலில் விலல்ல போலக் கிடக்கு. அதான் ஒரு மிதப்பில திரியிரார்.  :D

இதில் தம்பி என்று சொன்னது சுபேசைத் தானே? பாவம், அடிபட இன்னும் அவருக்கு காலம் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

Down with romantic love.   

_65845916_toyheart624thinkstock.jpg
 
Our idealised notion of romantic love is actually the biggest enemy of long-lasting relationships, says Mark Vernon.

When love breaks down   

_65828527_cake75627513.jpg
 
  • UK divorce rates are highest in those between the ages of 40 to 44, say ONS statistics
  • The highest proportion is among those married between five and nine years
  • 34% of marriages end in divorce by the 20th wedding anniversary
  • 49% of couples divorcing in 2011 had at least one child aged under 16

http://www.bbc.co.uk/news/magazine-21410275

Edited by nedukkalapoovan

வாலாட்டுகின்றதுதான் காதல் இதைத்தான் சுபாஸ் சொல்ல வந்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக  காதல் என்ற ஒன்று உண்டா?

நானறிந்தவரை இல்லை.

நிழலி  சொன்னது போல் இது தான் இருக்கு.

இது காதலா???

http://www.youtube.com/watch?v=NO8JnjGbaCU

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காதலாவது, கத்திரிக்காயாவது...!

'டொங்கு...டொங்'கென உடலவங்கள் ஆபாசமாக ஆட, பல நாள் பட்டினி கிடந்த மாடு, கழனித் தண்ணீரை நக்கி உறிஞ்சுவது போல உடலெங்கும் கரம் & சிரம் மேய வருவது காதல்னா... இக்காணொளியில் நிறுவ முயல்வதை என்னவென்று அழைப்பது?

http://youtu.be/ceLtI7itQz4

  • கருத்துக்கள உறவுகள்

காதலாவது, கத்திரிக்காயாவது...!

'டொங்கு...டொங்'கென உடலவங்கள் ஆபாசமாக ஆட, பல நாள் பட்டினி கிடந்த மாடு, கழனித் தண்ணீரை நக்கி உறிஞ்சுவது போல உடலெங்கும் கரம் & சிரம் மேய வருவது காதல்னா...

இக்காணொளியில் நிறுவ முயல்வதை என்னவென்று அழைப்பது?

இவ்வளவையும் இவ்வளவு நாள் கொட்டாமல் வைத்திருந்த சுமை தெரிகிறது.

என்னே  ஆவேசம் என்னே கொதிப்பு...... :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணாங்கட்டி... எந்த எதிர்பார்ப்பும் எந்த லாபங்களும் பார்க்காத ஒரே ஒரு அன்பு பெற்றோரின்  அன்பு மட்டும்தான். தமிழில் இதனால் தான் பாசம் / காதல் என்ற இரு வேறு சொற்கள் இருக்கின்றன. காதல் என்பதே ஈர்ப்பு, Physical attraction மற்றும் இன்ன பிற விடயங்களை வைத்து எழுவதுதான்.

பப்பிக்கு கூட சாப்பாடு போடாவிட்டா பக்கத்து விட்டு ஜிம்மிக்கு சாப்பாடு போடுகின்றவரைப் பார்த்து வாலை ஆட்டும்

ஏன் நிழலி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான பாசத்தை ஒருவர் மேல் வைக்க முடியாதா?...பெற்றோர் குழந்தைகள் மேல் வைக்கும் பாசமும் சுயநலமானது தான்.அவர்கள் வளர்ந்து தங்களை பார்ப்பார்கள் என்ட நம்பிக்கை வைத்து தானே குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறார்கள் அப்படி பார்த்தால் இதுவும் தூய்மையான பாசமாக இருக்க முடியாது...இந்த உலகத்தில் எதுவுமே 100% எதிர் பார்ப்பு இல்லாமல் இல்லை...
 
காதலுக்கும்,பாசத்திற்கும் நூலிடை தான் வித்தியாசம் என எங்கேயோ படித்த ஞாபகம்.

எந்த பெற்றோரும் பிறந்த குழந்தைகள் வளர்ந்து தம்மைப் பார்ப்பர் என்ற எதிர்ப்பார்ப்புடன் வளர்ப்பதில்லை. 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளை ஊனமாகவோ மூளை வளர்ச்சி குறைவாகவோ பிறந்து விட்டால் அந்த ஒரு பிள்ளைமீது அதிக பாசம் வைத்து வளர்ப்பதை பல இடங்களில் கண்டு இருக்கின்றேன். ஆனால் தான் பாசமாக வளர்த்த பிள்ளை தனக்கு இக்கட்டு வரும் போது தன்னை கைவிடாது என்ற எதிர்பார்ப்பு பிற்காலங்களில் எழுவது இயற்கையானது. இது சமூகங்களுக்கு சமூகம் மாறுபட்டு இருக்கும். மேற்கு நாடுகளில் எந்த வயதான பெற்றோரும் பிள்ளைகளில் தங்கி இருப்பதில்லை.

ஆனால் காதல் ஒரு போதும் எதிர்பார்ப்பின்றி உருவாவதில்லை. அடிப்படையான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுவதால் தான் ஒருவர் மீது இன்னொருவருக்கு ஈடுபாடு வருகின்றது,  ஒருவர் தனது எந்தவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்துவராதவராக இருப்பாராயின் அவர் மீது காதல் வராது. இந்த எதிர்பார்ப்பு உடல் சார்ந்தும், உளம் சார்ந்தும் இருப்பன.

 நாங்கள் எல்லாவற்றின் மீதும் புனிதப் போர்வையை போர்த்திக் கொண்டு குற்றவுணர்வுகளில் திளைக்கும் ஒரு சமூகம் என்பதால் எல்லாவற்றின் மீதும் நடைமுறை சாத்தியமற்ற கருதுகோள்களை திணித்துக் கொள்கின்றோம். உண்மையான பாசம் / உண்மையான காதல் போன்ற பதங்களுக்கு வரவிலக்கணம் கொடுப்பதற்காக நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை போர்த்திக் கொள்கின்றோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா..சிலதுகளில் நீங்கள் ஓவர் யதார்த்தத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என் எண்ணப்படி...பாசத்துக்கு ஏங்கும் வெள்ளைக்காரர்களை முதியோர் இல்லங்களில் பார்த்தீர்களானால் மேலை நாட்டைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் விம்பம் பொய் என்பது தெரியும்.. பலர் தமது தனிப்பட்ட ஆசைகளை,தேவைகளை நிறைவேற்ற உறவுகள்,காதல்,பாசம் பொய் என்று சொல்லிக்கொண்டுகூட திரிகிறார்கள்..எப்படியும் வாழலாம் என்று மிருகங்களைப்போல கட்டாக்கலிகளாய் அலைகிறார்கள்..யதார்த்த வேசம்போடுகிறார்கள்..நடைமுறைசாத்தியம் அற்றது என்று நீங்கல் நினைப்பது இன்னொருவருக்கு நடைமுறை சாத்தியம் ஆகிறது...எனவே காதலோ அல்லது பாசமோ அல்லது குடும்பமோ எதுவானாலும் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக எடைபோடுவது தப்பு...

(பி:கு இது நம்மட நிழலி அண்ணாக்கு என்றபடியால்தான் எழுதிறன்..இப்பெல்லாம் யாழுக்குள் யாருடன் கருத்தாடுவதில்லை என்ற முடிவெடுத்திருக்கன்..இது என் தனிப்பட்ட விருப்பு,முடிவு..கஸ்ரப்பட்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு யாழ் உறவையும் சதம் பெறாத கருத்தாடலால் இழக்க விருப்பமில்லை..)

Edited by சுபேஸ்

நிழலி எல்லோராலும் எல்லாரையும் காதலிக்க முடியாது...தங்களுக்கு பிடித்தமானவரை பார்த்து தான் அன்பு செலுத்தவோ/காதலிக்கவோ தொடங்குகிறார்கள்...பிடித்தமானவரை தெரிவு செய்வதில் வேண்டுமானால் சுயநலம் இருக்கலாம்...ஆனால் ஒருவரை தெரிவு செய்த பிறகு அவர்கள் மீது செலுத்தும் அன்பானது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலே வைக்கப்படுகிறது என்பது என் கருத்து...நான் சொல்ல வருவது உண்மையான காதலையும்,அன்பையும் போலிக்கு வேசம் போடுபவர்களை பற்றி அல்ல :)

யதார்த்தம் என்பதில் ஓவர் யதார்த்தம் குறைவான யதார்த்தம் என்று ஒன்றுமில்லை.  வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட எந்த தத்துவங்களும், வரவிலக்கணங்களும் மனித வாழ்வில் அபத்தத்தைத் தான் தரும்.  நான் காதல் என்பதுக்கு மேல் போர்த்தியுள்ள புனிதப் பார்வையை விலக்கிவிட்டு பார்க்கின்றேன். நீங்கள் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு பார்க்கின்றீர்ர்கள்.

பலர் தமது தனிப்பட்ட ஆசைகளை,தேவைகளை நிறைவேற்ற உறவுகள்,காதல்,பாசம் பொய் என்று சொல்லிக்கொண்டுகூட திரிகிறார்கள்

நீங்கள் எழுதிய இந்த வரிகளின் மூலமே நான் எழுதியதை நீங்கள் அறவே புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. காதலுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கு என்று நான் எழுதியதை,  திட்டமிட்டு தன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பொய் சொல்லி உறவாடுவதைப் பற்றி எழுதுகின்றேன் என நினைத்து எழுதியுள்ளீர்கள். நான் உடல் சார்ந்த உளம் சார்ந்த தேவைகள் தான் காதலின் அடிப்படை. நடைமுறை வாழ்வில் தன்னால் ரசிக்கப்பட முடியாத ஒருவரை எவரும் காதலிப்பதில்லை. ஆண்மை இல்லாத (impotent) ஒரு ஆண் மேல் எந்தப் பெண்ணுக்கும் நீடித்த காதல் தொடருவதில்லை. புரிந்து கொள்ளப்பட முடியாதவர்களுடன் கலகமில்லாத உறவு ஏற்படுவதில்லை.

நாங்கள் இப்படி எல்லாத்துக்கும் 'உண்மையான'/ புனிதமான' என்று வரைவிலக்கணங்களை விதித்துக்கொண்டு அதில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கின்றோம். தான் காதலித்தவன் / கட்டியவன் கயவன் என்று தெரிந்தும் வெளிவந்தால் குற்றம் என்று அவனையே கட்டி நரக வாழ்வு வாழும் பெண்கள் அதிகம் கொண்ட சமூகங்களில் ஒரு சமூகமாக நாம் இருக்கின்றோம் , கட்டினவள் எவ்விதத்திலும் ஒத்துப்போக முடியாதவள் என்பதற்காக மாரடிக்கும் அபலை ஆண்களையும் நாம் கொண்டிருக்கின்றோம். காதலித்து விட்டம் என்பதற்காகவே காலம் பூராவும் கொஞ்சம் கூட ஒத்துவராமல் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் குடும்பங்களையும் கொண்டிருக்கின்றோம்.

மற்றது,

நான் வயோதிபர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை. தன் பிள்ளைகள் தன்னை பார்க்கும் என்பதற்காக பெற்றோர்கள் பிள்ளை வளர்க்கின்றார்கள் என்று ரதி குறிப்பிட்டதுக்கு பதிலாகத்தான் அவ்வாறு தங்கியிருக்கும் சூழ்நிலை இன்று மேற்கு நாடுகளில் இல்லை என்று குறிப்பிட்டேன். ரதி குறிப்பிட்டதும் நான் தங்கியிருத்தல் என்று குறிப்பிட்டதும் பொருளாதாரம் சார்ந்தது. வயோதிப இல்லங்களில் தேவைகள் நிறைவேறாமல் இருக்கும் வயதானவர்களைப் பற்றியல்ல.

நிழலி எல்லோராலும் எல்லாரையும் காதலிக்க முடியாது...தங்களுக்கு பிடித்தமானவரை பார்த்து தான் அன்பு செலுத்தவோ/காதலிக்கவோ தொடங்குகிறார்கள்...பிடித்தமானவரை தெரிவு செய்வதில் வேண்டுமானால் சுயநலம் இருக்கலாம்...ஆனால் ஒருவரை தெரிவு செய்த பிறகு அவர்கள் மீது செலுத்தும் அன்பானது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலே வைக்கப்படுகிறது என்பது என் கருத்து...நான் சொல்ல வருவது உண்மையான காதலையும்,அன்பையும் போலிக்கு வேசம் போடுபவர்களை பற்றி அல்ல :)

ரதி ஒருவருக்கு ஒருவரை பிடித்துப் போகின்றது. காதலிக்கத் தொடங்கினம்.. ஆனால் தொடர்ந்து பழகும் போது அவரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் போது, அவர் எல்லாவிதங்களிலும் ஒத்து வருகின்றவராக இல்லை என அறியும் போது (இதற்கு அவர் கெட்டவராக இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை..) காதலித்தோம் என்ற காரணத்துக்காக தொடர்வது சரியா? இல்லை எம் எதிர்பார்ப்புகளுக்கும் முற்றிலும் மாறாக இருக்கின்றார் என்று இடையில் விலகிவிடுவது சரியா?

(பி:கு இது நம்மட நிழலி அண்ணாக்கு என்றபடியால்தான் எழுதிறன்..இப்பெல்லாம் யாழுக்குள் யாருடன் கருத்தாடுவதில்லை என்ற முடிவெடுத்திருக்கன்..இது என் தனிப்பட்ட விருப்பு,முடிவு..கஸ்ரப்பட்டு பெற்றுக்கொண்ட எந்த ஒரு யாழ் உறவையும் சதம் பெறாத கருத்தாடலால் இழக்க விருப்பமில்லை..)

இந்த பின்குறிப்பே அவசியமில்லாதது என நினைக்கின்றன்.  கருத்துகளில் சண்டையிட்டால் ஒருவர் பிரிந்து போய்விடுவார் என்றால் அவரது நட்பை முறிப்பது தான் சரி.மற்றப்படி சதம் பெறுமதி இல்லாத கருத்தாடல்கள் என்று எதுவுமில்லை. மனித சமூகம் முன்னோக்கி செல்வதே கருத்தாடலகளின் மூலம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஒருவருக்கு ஒருவரை பிடித்துப் போகின்றது. காதலிக்கத் தொடங்கினம்.. ஆனால் தொடர்ந்து பழகும் போது அவரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் போது, அவர் எல்லாவிதங்களிலும் ஒத்து வருகின்றவராக இல்லை என அறியும் போது (இதற்கு அவர் கெட்டவராக இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை..) காதலித்தோம் என்ற காரணத்துக்காக தொடர்வது சரியா? இல்லை எம் எதிர்பார்ப்புகளுக்கும் முற்றிலும் மாறாக இருக்கின்றார் என்று இடையில் விலகிவிடுவது சரியா?

இப்படியே கேள்வியை கல்யாணத்துக்கப்புறமும் கேட்டு கேட்டு ஒவ்வொண்டாய் விட்டு விட்டு எத்தனை பேரை கல்யாணம் செய்யப்போகிறீர்கள்..?இப்படி உங்களால் பாதிக்கப்படுபவர்களின் கண்ணீருக்கு என்ன பதில்? ஒருவரை பேசிப்பழகி வாழ்ந்து மனதை கெடுத்துவிட்டு ஏதோ ஒரு சில காரணம் பிடிக்கவில்லையாம் விட்டு விட்டு போகிறீர்களாம்..என்னவகையான மனிதர்கள் இவர்கள்..? மனித உணர்வுகள் என்ன சடப்பொருளா..? மனிதமனங்கள் என்ன உணர்ச்சியே இல்லாத ஜடங்களா..?வெறும் புணர்ச்சிக்காக இருப்பவையா..?சிலதுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசி உரையாடி மாற்றிக்கொள்ளவேண்டும்...அல்லது நீங்கள் மாறிக்கொள்லவேண்டும்..அதுதான் குடும்ப வாழ்க்கை..காதலும் அதுதான்..உங்கள் சுயநலத்துக்காக இன்னொமொரு நல்லதாய் தேடவேணும் எண்ட சுயநலத்துக்காக நம்பிக்கூட வந்தவர்களை விட்டுவிட்டு ஓடுவது கோழைத்தனம்...இப்படியான மனது ஒன்றுடன் நிறைவடையாது..இன்னொன்றை பிடித்தபின் அதைவிட இன்னொன்று பெஸ்டாய் வர அதனிடம் ஓடும் இதைவிட்டுவிட்டு..இப்படி நீங்கள் சொல்வதுபோல் மலருக்கு மலர்தாவுவதுக்கு பேர் காதல் அல்ல..அது வியாதி..கடைசியில் எயிட்சில் கொண்டுபோய்விடும் வியாதி.. :D
 
(இங்கு நீங்கள் நீங்கள் என்று நான் கேட்பது நிழலி என்ர மனிதனை அல்ல..இப்படியான எண்ணங்களை கருத்தை கொண்ட மனிதர்களை..)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோ, இப்பத்தான் விளங்குது, சபேஸ்!

காதலெண்டா, எப்பவுமே வாலை ஆட்டிக்கொண்டு தான் இருக்க வேணும் எண்டு! :D

கொஞ்சம் மறந்து போனா, வாலே போயிரும்!

அது சரி, கதையில வார பப்பி, ஆணா அல்லது பொண்ணா? :o

நீங்கள் எல்லாரும்..சாறைவிட்டிட்டு..சக்கையை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு..அடம்பிடிச்சா..நான் என்ன பண்ணா..? :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஒருவருக்கு ஒருவரை பிடித்துப் போகின்றது. காதலிக்கத் தொடங்கினம்.. ஆனால் தொடர்ந்து பழகும் போது அவரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் போது, அவர் எல்லாவிதங்களிலும் ஒத்து வருகின்றவராக இல்லை என அறியும் போது (இதற்கு அவர் கெட்டவராக இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை..) காதலித்தோம் என்ற காரணத்துக்காக தொடர்வது சரியா? இல்லை எம் எதிர்பார்ப்புகளுக்கும் முற்றிலும் மாறாக இருக்கின்றார் என்று இடையில் விலகிவிடுவது சரியா?

இந்த பின்குறிப்பே அவசியமில்லாதது என நினைக்கின்றன்.  கருத்துகளில் சண்டையிட்டால் ஒருவர் பிரிந்து போய்விடுவார் என்றால் அவரது நட்பை முறிப்பது தான் சரி.மற்றப்படி சதம் பெறுமதி இல்லாத கருத்தாடல்கள் என்று எதுவுமில்லை. மனித சமூகம் முன்னோக்கி செல்வதே கருத்தாடலகளின் மூலம் தான்.

எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக இருந்தால் விலகி விடுவது தான் சரி...ஒருவர் தனது வாழ்க்கையை ஓரளவுக்கு தான் அடுத்தவருக்காக அட்ஜஸ்ட் பண்ண முடியும்...எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக இருந்தும் அவருக்காக வாழ்க்கையை முற்றாகஅட்ஜஸ்ட் பண்ணி வாழ வெளிக்கிட்டால் ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கத் தான் பார்க்கும்...அப்படிப் பிரச்சனைப் பட்டு பிரிவதை விட முதலே பிரிவது மேல்...ஆனால் எது எப்படி இருந்தாலும் இருவருக்கிடையில் ஒத்துப் போகவில்லையே தவிர இருவருக்கிடையே இருந்த அன்பு உண்மையானது தானே :D

ஏன் நிழலி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான பாசத்தை ஒருவர் மேல் வைக்க முடியாதா?...பெற்றோர் குழந்தைகள் மேல் வைக்கும் பாசமும் சுயநலமானது தான்.அவர்கள் வளர்ந்து தங்களை பார்ப்பார்கள் என்ட நம்பிக்கை வைத்து தானே குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறார்கள் அப்படி பார்த்தால் இதுவும் தூய்மையான பாசமாக இருக்க முடியாது...இந்த உலகத்தில் எதுவுமே 100% எதிர் பார்ப்பு இல்லாமல் இல்லை...
 
காதலுக்கும்,பாசத்திற்கும் நூலிடை தான் வித்தியாசம் என எங்கேயோ படித்த ஞாபகம்.

ரதி நீங்கள் சொல்வதுபோல் , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான பாசத்தை ஒருவர் மேல் வைக்கலாம்தான், :rolleyes: 
ஆனால் பெற்றோர் குழந்தைகள் மேல் வைக்கும் பாசமும் சுயநலமானது அல்ல
ஒரு சில விதிவிலக்கான பெற்றோர் வேண்டுமானால் அங்கங்கே நீங்கள் சொல்வதுபோல் இருக்கலாம்.
ஆனால் எல்லாரும் அவர்கள் வளர்ந்து தங்களை பார்ப்பார்கள் என்ட நம்பிக்கை வைத்து  குழந்தைகள் மீது அன்பு செலுத்தவது இல்லை 
 
என்  பிள்ளை வளர்ந்து தன் வாழ்கையை நன்றாக வாழவேண்டும் என்றுதான் பாசமுள்ள பெற்றோர் நினைப்பார் .
 
நானும் ஒரு குழந்தைக்கு தாய்தான். என் பிள்ளைக்காக என் சுயத்தையே இழந்து வாழ்கின்றேன். அவள்மேல் பாசத்தை கொட்டி வளர்க்கின்றேன்.  ஒரு வினாடிகூட வளர்ந்து என்னை என் பிள்ளை பார்க்கும் என்று எதிர் பார்க்கவும் இல்லை. இனி எதிர் பார்க்கவும் மாட்டேன். 
 
நான் மட்டுமல்ல பொதுவாக ஒரு தாய் பிள்ளைக்காக உயிரையும் கொடுப்பாள்.
அந்தப்பாசதை தாங்கள் சுயநலமானது என்று எழுதியதை வாசிக்க கவலையாக இருந்த படியால் தான் இவளவு எழுதுகின்றேன். :( இது உங்கள் மனதை புண்படுத்தினால் மன்னிக்கவும்.
 
 (தந்தையர்கள் கோவிக்காதையுங்கோ. ஒரு தந்தைக்குத் தான் தன் நிலையில் இருந்து சொல்ல முடியும். நான் தந்தை இல்லாமல் வளர்ந்ததனாலோ என்னவோ நான் தாய் என்று மட்டும் குறிப்பிட்டேன். மன்னிக்கவும்.

இதில் என் மனதை புண்படுத்த எதுமில்லை நீதிமதி...உங்களுக்கு சரியெனப்பட்டதை தொடர்ந்தும் எழுதுங்கோ

இப்படியே கேள்வியை கல்யாணத்துக்கப்புறமும் கேட்டு கேட்டு ஒவ்வொண்டாய் விட்டு விட்டு எத்தனை பேரை கல்யாணம் செய்யப்போகிறீர்கள்..?இப்படி உங்களால் பாதிக்கப்படுபவர்களின் கண்ணீருக்கு என்ன பதில்? ஒருவரை பேசிப்பழகி வாழ்ந்து மனதை கெடுத்துவிட்டு ஏதோ ஒரு சில காரணம் பிடிக்கவில்லையாம் விட்டு விட்டு போகிறீர்களாம்..என்னவகையான மனிதர்கள் இவர்கள்..? மனித உணர்வுகள் என்ன சடப்பொருளா..? மனிதமனங்கள் என்ன உணர்ச்சியே இல்லாத ஜடங்களா..?வெறும் புணர்ச்சிக்காக இருப்பவையா..?சிலதுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசி உரையாடி மாற்றிக்கொள்ளவேண்டும்...அல்லது நீங்கள் மாறிக்கொள்லவேண்டும்..அதுதான் குடும்ப வாழ்க்கை..காதலும் அதுதான்..உங்கள் சுயநலத்துக்காக இன்னொமொரு நல்லதாய் தேடவேணும் எண்ட சுயநலத்துக்காக நம்பிக்கூட வந்தவர்களை விட்டுவிட்டு ஓடுவது கோழைத்தனம்...இப்படியான மனது ஒன்றுடன் நிறைவடையாது..இன்னொன்றை பிடித்தபின் அதைவிட இன்னொன்று பெஸ்டாய் வர அதனிடம் ஓடும் இதைவிட்டுவிட்டு..இப்படி நீங்கள் சொல்வதுபோல் மலருக்கு மலர்தாவுவதுக்கு பேர் காதல் அல்ல..அது வியாதி..கடைசியில் எயிட்சில் கொண்டுபோய்விடும் வியாதி.. :D
 
(இங்கு நீங்கள் நீங்கள் என்று நான் கேட்பது நிழலி என்ர மனிதனை அல்ல..இப்படியான எண்ணங்களை கருத்தை கொண்ட மனிதர்களை..)

இதைத்தான் நாலடியாரில் 
             நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக்கொண்டாரை 
            அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் 
             நெல்லுக்கு உமியுண்டு  நீருக்கு நுரையுண்டு
            புல்லிதழ் பூவிற்கும் உண்டு 
என்று சொல்லியிருக்கு  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.