Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள அம்மாவின் இரண்டாம் வருட இதயஅஞ்சலி!… ‘பார்வதி அம்மா’…. உங்களை எழுத முடியாது!…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalavar-family2.gif

பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அல்லது அண்ணையின் அம்மா என்பதுடன் நின்றுவிடாது தேசத்தின்அன்னை என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விதந்துரைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளையின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போது மானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே இவரை உலகம்முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத்தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலைநடுக்கத்தை மறைத்துக்கொண்டமை உலகம் கண்டுகொண்ட உண்மையாகும்.

 

மேற்படி பெருமைபெற்ற மைந்தனைப்பெற்ற பார்வதி அம்மா வல்வெட்டித்துறை  கொத்தியால் ஒழுங்கையில் வாழ்ந்த வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் புதல்வியாவார். வல்லிபுரம் பருத்தித்துறையைச் சேர்ந்த சம்பானோட்டிக்கரையார்  என புகழ்பெற்றவரும் ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் என அழைக்கப்பட்ட ‘தெய்வர் நாகலிங்கத்தின்’   ஐந்து மைந்தர்களில் ஒருவராவார். 1861இல் பிறந்த நாகலிங்கம் ஆங்கிலேய அரசினால் ‘முதலியார்’ பட்டம் பெற்ற பெருமைக்குரிய கப்பல் உரிமையாளர்.

amma-Veedu.gif

(வல்வெட்டித்துறையில் கொத்தியால் ஒழுங்கையில் அம்மா பிறந்த இல்லம்)

 

பாக்கியலெட்சுமி சிவகாமசுந்தரி டென்சிதையல்நாயகி சின்னபர்வதம் சிவகங்கைபுரவி எனும் ஐந்து கப்பல்களிற்கு மட்டுமன்றி  பெருநிலபுலம்களிற்கும் சொந்தக்காரரானவர்.  இவர் தனது பேத்தியான பார்வதியம்மா பிறப்பதற்கு முன்னரே 26 நவம்பர் 1909ஆம் ஆண்டில் மறைந்துவிட்டார். (Notes On Jaffna (1920) page 91) அவர்வாழ்ந்து அவரது பெயரில் அமைந்த நாகலிங்கமுதலியார் வீதியை பருத்தித்துறையில் இன்றும் அடையாளம்  காணலாம்.  பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் 26 நவம்பர் 1954 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே அதிசயஒற்றுமை. வரலாறுகள் திரும்பும் போது விருட்சமா கின்றனவா?

 

வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினருக்கு பார்வதியம்மாவிற்கு முன் பிறந்த பெண் குழந்தை ஒன்று மலேசியாவில் சிறுவயதில் காலமானது. இதனால் இரண்டாம் முறையாக ‘சின்னம்மா’ கற்பமுற்றதும் சின்னம்மாவின் தாயார் மகளை இலங்கைக்கு அழைத்து தன்னுடன் வைத்திருந்து பத்தியம் பார்த்தகாலத்தில் பிறந்தவரே பார்வதிஅம்மா. இவரிற்கு ஐந்துவருடங்கள் பின்பாக பிறந்தவரே இவரின்தம்பி வேலுப்பிள்ளை ஆவார்;. பார்;வதி அம்மாவின் வீட்டுப்பெயர் ‘குயில்’ என்பதாகும். இவர் வல்வெட்டித்துறையின் பழம் பெருமைவாய்ந்த திண்ணைப்பள்ளிக்கூடமானதும் பின்னாட்களில் அமெரிக்கன்மிஸன் தமிழ்கலவன் ஆரம்பபாடசாலை என அழைக்கப்பட்ட அரியகுட்டிப்பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியை கற்றுக்கொண்டார். 7 ஆவணி 1931 இல் பிறந்த இவர்; தனது பதினாறாவது வயதில் 1947இல் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையில் வாழ்ந்து வந்த வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியான பாரம்பரியபெருமை மிக்கதுமான திருமேனியார்; வெங்கடாசலம்பிள்ளையின் குடும்பவழித்தோன்றலும்  ‘அக்கிரகாரத்துத்தம்பி’ அழைக்கப் பட்டவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையை தனது வாழ்க்கைத்துணையாகக் கொண்டார்.

appa-amma-varnakulaththan.gif

(தஞ்சாவூர் ராஜகோபுரத்தின் முன்னால் பார்வதி அம்மாவும் வேலுப்பிள்ளை அப்பாவும்)

 

மேற்குறிப்பிட்ட வெங்கடாசலம்பிள்ளை கடல்வணிகர்களிற்கு உரித்தான ‘மாசாத்துவன்’ எனும் பெருமையுடன் அன்னலட்சுமி அத்திலாந்திக்கிங் என பன்னிரண்டு கப்பல்களிற்கு அதிபதியாவும் வல்வெட்டித்துறையின் பெரியகோயிலான வைத்தீஸ்வரன் கோவிலை அமைத்த சங்கைக்குரியவர். இங்கு கூறப்படும் திருவேங்கடம் மற்றும் பார்வதிஅம்மாவின் தந்தையாரான வல்லிபுரம் என்போர்கள் மலேசியாவில் கடமையாற்றிபின்  திரும்பி வந்து வல்வெட்டித்துறையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அத்துடன் ஆரம்பத்தில் கொத்தியால் ஒழுங்கையிலேயே அருகருகான வீடுகளில் இவ்விருகுடும்பத்தினரும் அயலவர்களாக வாழ்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் உறவுமுறையாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான இரண்டு குடும்பங்கள் மற்றும் ஊராரின் நல்ஆசியுடனும் இவரது இல்லறவாழ்வு இனிதே ஆரம்பமாயிற்று.

 

வேலுப்பிள்ளையின் காதல்மனைவியாக வாழ்ந்த இவர்; 9.3.1948இல் மனோகரன் என்னும் மகனைப் பெற்றதன் மூலம் இனியதாயாகவும் மாற்றமடைந்தார். காலவேட்டத்தில் மனோகரனைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி என்றும் இரண்டுபெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரான வேலுப்பிள்ளையின் கடமையின் நிமித்தம் 1953ம் ஆண்டு செப்ரம்பரில் இவரது குடும்பவாழ்க்கை அநுராதபுரத்தில் ஆரம்பமாயிற்று.  இலங்கையின் புராதனநகரான அநுராதபுரம் முதலாவது தமிழ்அரசர்களான சேனன் குட்டிகன் என்போர்களினால் ஆளப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்கது.

 

அத்துடன் அரசன் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய எல்லாளன் எனப்படும் ஈழாளன் (ஈழத்தை ஆண்டதனால் ஈழாழன் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்ட இவரின் பெயர் காலவோட்டத்தில் எல்லாளன் என மாற்றமடைந்து காணப்படுகின்றது) நாற்பத்துநான்கு ஆண்டுகள் செங்கோலோச்சிய புனிதபூமியாகவும் வரலாற்றில் இப்பிரதேசம் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்புமிக்க அநுராதபுரத்தில் 2101 ஆண்டுகளுக்கு முன் ஈழாளனின் நினைவாக கட்டப்பட்ட சேதியமான ஈழாளனின் நினைவுத்தூபி அமைந்திருந்த நுடயடய ளுழயெ (ளழயெ என்பது பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் ‘அருகாமை’ எனப்பொருள்படும்) என்னும் பகுதியிலேயே வேலுப்பிள்ளைக்குரிய அரசாங்க உத்தியோகஸ்தர் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது. மகாவிகாரை என அழைக்கப்படும் ருவான்வெலிசாயாவிற்கு அண்மையில் ரு12 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் புத்தளம் வீதி மற்றும் ரு28 வீதி  என அழைக்கப்படும் அநுராதபுரம் குருநாகல்வீதி என்பன ஆரம்பிக்கின்றது. மேற்குறிப்பிட்ட குருநாகல்வீதியில் தெற்கு நோக்கிச் செல்லும்போது கால்மைல் தூரத்திற்குள் சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து காணப்பட்ட இடமே நுடயடய ளழயெ எனப்படும் பிரதேசமாகும். இவ்வீதியின் வலதுபுறமாக அமைந்திருந்ததே நுடயடய வுழஅடி என்றழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத்தூபியாகும். இத்தூபியின் வடக்குப்புறமாக ஆரம்பமாகும் தக்குண டகோபாவீதி என்னும் சிறியவீதியொன்று ரு12 வீதியான புத்தளம்வீதியுடன் சென்று இணைகின்றது. இவ்வீதியில் குருநாகல் அனுரதபுரவீதிக்கு அண்மையில் அரசாங்கஊழியர்;கள் மற்றும் மருத்துவர் களிற்கான விடுதிகளமைந்திருந்தன.  இவ்விடுதிகளிலொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதியும் அமைந்திருந்தது. தமிழர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த அப்பிரதேசம் 1950களில் அநுராதபுரத்தின் நகரமுதல்வராக இருந்த தமிழரான சிற்றம்பலத்திற்கும் சிறிலங்கா சுதந்திரகட்சியை ஆரம்பித்த பண்டாரநாயக்காவிற்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து 1956இல்  பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் புனிதநகர் என்றபெயரில் தமிழ்மக்களின் குடியிருப்புகள் திட்டமிட்டு அங்கிருந்து அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1958 கலவரத்துடன் தமிழர்களினால் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட அப்பிரதேசம் இன்று காடுமண்டிய  அடையாளம் தெரியாத பூமியாகி விட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Thalavar-Amma-with-ele.gif

(தஞ்சாவூர் கோயில் யானையிடம் ஆசீர்வாதம் பெறும்  பார்வதி அம்மா)

 

மேற்படிவிடுதியில் மூன்று குழந்தைகளுடன் இனியவாழ்க்கையைத் தொடங்கிய பார்வதிஅம்மா மிகவும் சந்தோசமாக அக்காலத்தைக் களித்திருந்தார். வீட்டுவேலைகளை முடித்துவிட்டு காத்திருக்கும் இவரும் வேலைமுடிந்து பிற்பகலில் வீடுதிரும்பும் வேலுப் பிள்ளையும் குடும்;பசமோதரராக தமதுவிடுதியின் முன்அமைந்திருந்த ஈழாளனின் நினைவுத்தூபியுடன் அமைந்திருந்த புல்வெளியில் அமர்ந்து தமது மாலை நேரங்களைக் கழித்திருப்பர். ஐந்துவயதான மனோகரனும் நாலுவயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாடும் போது கைக்குழந்தையான வினோதினி தாயின்மடியிலும் தந்தையின் மடியிலும் மாறிமாறி தவழ்ந்த வண்ணமிருப்பார். ஈழாளனின் நினைவுத்தூபியின் எதிரே அமைந்திருந்த இவர்;களின் தங்கும்விடுதி, நினைவுத்தூபியின் அடியில் கழிக்கும் மாலை நேரங்கள். இவைஎல்லாம் இருபத்திரண்டு வயதுடைய இளம்தாயான பார்வதிஅம்மாவின் பார்வையில் தினம்தினம்  தெரிவதும் ஈழாளனின் வீரதீரக்கதைகளைக் கேட்பதுமாக இவரது உள்ளுணர்வுகள் ஈழாளனையே (எல்லாளன்) சுற்றிச்சுழன்று உவகை கொள்ளும் வேளையிலேயே புதியகரு இவரின் வயிற்றில் உருவானது. 1954ம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் உருவாகிய அக்கருவே 2011ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் இக்கட்டுரையை எழுதஎனக்கு ஏதுவானது.  அக்கருவே 1954 கார்த்திகை 26ம் திகதி இணுவில் மகப் பேற்று நிலையத்தில் பிரபாகரன் என்னும் தெய்வீகக்குழந்தையாக ஜனனமானது. ஈழாளனின்நினைவில் பிறந்த அக்குழந்தைக்கு  என்னபெயர் வைக்கலாம் எனக் குடும்பத்தினர்; சிந்தித்தபோது தந்தையார்; வேலுப்பிள்ளை சிவனையும் விஸ்ணுவையும் இணைத்து மூத்தமைந்தனின் மனோகரன் என்னும் பெயரின் தொடராக அரிகரன் என பெயரைக்கூறினார்;. குழந்தையின் தாய்மாமன் வேலுப்பிள்iயோ சூரியதேவனின் பெயரான ‘பிரபாகரன்’ எனும்பெயரைச் சூட்டினார். பார்வதியம்மாவின் தந்தையாரான வல்லிபுரம் போல் தோற்றமளித்த அக்குழந்தையினை தாய்வழிப்பேத்தியான சின்னம்மா தனது கணவரின் அழைபெயரான ‘துரை’ என கொஞ்சலாக அழைக்கமுற்பட்டார் அதுவே அக்குழந்தையின் வீட்டுப்பெயராக மாற்றமடைந்தது. மனோகரன், பிரபாகரன் என்னும் இனியசந்தங்களினால் இணையும் பெயர்கொண்ட குழந்தைகளுடன் முன்கூறிய ஜெகதீஸ்வரி மற்றும் வினேர்தினி என்னும் பெண்குழந்தைகளுடனும் மேலும் பதினொரு மாதங்கள் அநுரதபுரத்தின் ஏலாளசோணாவில் பார்வதியம்மா வாழ்ந்திருந்தார்.  1955 ஒக்டோபர் மாதம் கணவரான வேலுப்பிள்ளை உத்தியோக இடமாற்றம் காரணமாக புத்தளத்திற்கு மாற்றலாகிச்சென்றார். அக்காலத்தில் ஒருவயது பிரபாகரன் மற்றும் ஏனைய மூன்று குழந்தைகளுடனும் தாயார் சின்னம்மா சகோதரன் வேலுப்பிள்ளை என்பவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வல்வெட்டித்துறை ஆலடியில் பார்வதிஅம்மாவின் வாழ்கை இனிதாகத் தொடர்ந்தது. விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் கணவர் வேலுப்பிள்ளை எப்பொழுதும் குறும்பு செய்யும் குழந்தை பிரபாகரன் மற்றும் குழந்தைகளும் வீட்டு வேலைகளினை முன்னெடுத்துச் செய்யும் அன்னையாரும் என பார்வதிஅம்மாவின் அக்காலம் மிகமிக இனிமையானது.

 

1958இல் வேலுப்பிள்ளை அப்பாவிற்கு மட்டக்களப்பிற்கு மாற்றம் கிடைத்தது. மீண்டும் குடும்பத்துடன் பார்வதியம்மா மட்டக்களப்பில் குடியேறினார். தாமைரைக்கேணி குறுக்குவீதீயில் 7ம் இலக்க வீட்டில் நான்குவயது பிரபாகரனுடன் பார்;வதி அம்மா குடிபுகுந்தார்.  இக்காலத்தில் தமது  வீட்டின்பின்புறம் குடியிருந்த ஆசிரியையான இராசம்மா என்பவருடன் மிகவும் நட்பாக பழகஆரம்பித்தார். வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியையாக பணியாற்றியவர். இராசம்மா என்ற அன்னப்பாக்கியம் ஆவார்.  அதே பாடசாலையில் பணியாற்றியவர் இவரதுகணவரான அரியக்குட்டி செல்லத்துரை ஆசிரியராவார்;. நாடகமொன்றில் வீமன் பாத்திரமேற்று நடித்தததனால் வீமன் செல்லத்துரை எனவும் இவர் அழைக்கப்படலானார். இவர் மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம் குறுக்குவீதியை பிறப்பிடமாகக்கொண்டவர். தாமரைக் கேணியைச் சேர்ந்த நல்லையாமுதலியாரின் மகளான இராசம்மா என்ற அன்னம்மாவை மணமுடித்து தாமரைக்கேணியை தமது வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.

 

குழந்தையான பிரபாகரன் வளரும் பருவத்திலேயே இராசம்மாவுடனான பார்வதி அம்மாவின் அன்பானநட்பும் வளர்;ந்து கொண்டது. இந்நிலையிலேயே 1958ம்ஆண்டு மே 25ந் திகதி மட்டக்களப்பு பதுளைவீதீயில் தொடங்கிய இனக்கலவரம் நாடளாவிய ரீதியில் தமிழினப்படுகொலையாக மாற்றமடைந்து. இலங்கையின் இனக்குழும வரலாற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய இக்கலவரம் நடைபெற்று 55 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் பாதிப்புக்கள் இன்றுவரை தொடரவே செய்கின்றன. ‘பண்டாரநாயக்கா அரசாங்கம்’ தமது அதிகாரத்தினால் கட்டுப்படுத்த அல்லது தடுத்துநிறுத்த மறுத்ததனால் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்திய இக்கலவரத்தின் ஆரம்பம் நிச்சயமாக இனப்பகையல்ல தனிப்பட்டபகையே.

 

1958ம் ஆண்டில் நுவரெலியாவின் முன்னால் மேயரான செனிவிரட்ணா என்பவர்; தமது பதவியை கைவிட்டுவிட்டு மட்டக்களப்பில் தென்னந்தோட்டம் ஒன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் அஙகிருந்த உள்ளூர் பெண்ணொருத்தியுடன் இவருக்கு தகாதஒழுக்கம் உருவாயிற்று.  இதனால் இவர் மீது பகமை கொண்ட அப்பெண்னின் கணவர் 25 மே 1958 இல் செனிவிரெட்ணாவை சுட்டுக்கொன்று விட்டார். 26 மே 1958 இல் இவரது உடலை பதுளை வீதி வழியாக நுவரெலியாவிற்கு எடுத்துச்செல்லும் பாதையிலேயே ‘சிங்களவனை தமிழன் கொன்றுவிட்டான்’ என பரவிய விசமத்தனமான செய்தி தமிழர்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

 

இக்காலத்தில் 27 மே 1958 இல் செவ்வாய்க்கிழமை வெலிமடையில் இருந்து பதுளைவழியாக மட்டக்களப்பிற்கு தனது நண்பர்;களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்;களுடன் திரும்பிக் கொண்டிருந்த செல்லத்துரை ஆசிரியர் ‘மகாஓயா’ என்ற இடத்தில் சிங்கள இனவெறியரால் கொல்லப்பட்டார்;. இதன்பின் எப்படியே மட்டக்களப்புக்கு தப்பிவந்த ஆசிரியையான இராசம்மா மட்டக்களப்பிலேயே தனது ஆசிரியத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டார். இதனால் பார்வதிஅம்மா மற்றும் இராசம்மாவின் அந்நியோன்னியம் அதிகமாகியது. அதேவேளை கணவனை இழந்ததனால் பொருளாதாரம் உட்பட பலசிக்கல்களை எதிர்நோக்கிய இராசம்மாவின் கதைகளை அமைதியாகச் செவிமடுத்து அவருக்கு ஆறுதல்கூறி உதவிகள் புரிவதில் பார்வதியம்மா நிறைவடைவார். அவ்வேளைகளில் இராசம்மா என்னும் அப்பெண்னின் கதைகளை தாயுடன் இருந்து  சிறுவன் பிரபாகரனும் கேட்பார்.  இவ்வாறு தலைவர் பிரபாகரனின் சிறுவயதுமனத்தில் இராசம்மாவினாலும் தாயாரான பார்வதிஅம்மாவாலும் விதைக்கப்பட்ட இவ்விதைகளே அநாதரவானநிலையில் சிங்களஇனத்தினரால் படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர்களக்கு சிங்களஇனத்திடம் இருந்து சலுகைகள் பெறுவதைவிட விடுதலை பெறுவதே தீர்வாகலாம் என்னும் உணர்;வு அச்சிறுமனதில் மையம் கொள்ள காரணமாயிற்று. (தினக்குரல் வாரஇதழ் 26 நவம்பா 2004) மட்டக்களப்பில் பார்வதிஅம்மாவுடன் சிறுவன் பிரபாகரன் வாழ்ந்த இக்காலத்தில் அவரிடம் குடிகொண்ட இவ் உணர்வே பின்னாட்களில் ஈழத்தமிழருக்கான விடுதலைவேண்டி தனிநாட்டிற்காக அவரை போராடத்தூண்டியது.  இதனையே அவர் 1984 பங்குனி மாதம் 11 மற்றும் 17ந் திகதிகளில் வெளிவந்த இந்தியாவின் ளுரnனுயல  ஆங்கில வாரஇதழுக்கு ‘அனிதாபிரதாப்’ என்ற செய்தியாளரின் இரண்டாவதுகேள்விக்கு பதிலாகக்கூறியிருந்தார். குறிப்பிட்ட இச்செவ்வி 46 கேள்விகளைக் கொணடிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் தாயைப்போலவே மற்றவர்களின் கருத்தினை ஆழ்ந்து செவிமடுக்கும் தனயனாக சிறுவயதிலேயே தலைவர் பிரபாகரன் உருவெடுத்தார். அத்துடன் விதவைத்தாயான இராசம்மா போல் மேலும் ஈழத்தமிழர்கள் கண்ணீர் விடக்கூடாது அவர்களிற்காக தன்னாலான ஏதாவது உதவிகளை செய்யவேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்ட தாயான பார்வதி அம்மாவின் உணர்வுகளும் செயல்களும் அவ்வாறே மகனான பிரபாகரனையும் உந்தித்தள்ளி செயற்படத்தூண்டின என்றால் மிகையல்ல.

 

சிறுவன் பிரபாகரனின் மனதில்  இத்தகைய உணர்வுகள் கனன்று கொண்டிருந்த காலமான 1963இல் பார்;வதிஅம்மா சொந்தஊரான வல்வெட்டித்துறைக்கு திரும்பியிருந்தார். வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதியில் அமைந்திருந்து அண்மையில் நிர்மூலமாக்கப்பட்டு கற்குவியலாக காணப்படும் வீட்டிலேயே இவரின் வாழ்கை தொடர்ந்தது. பார்வதியம்மாவின் மூத்தமகளான ஜெகதீஸ்வரியின் பெயரில் அமைக்கப்பட்ட இவ்வீடு ‘ஈஸ்வரி வாசா’ என்னும் பெயர் கொண்டதாகும். வல்வெட்டித்துறைக்கு வந்த ஆரம்பநாட்களில் சாதாரண சிறுவர்;கள் போல் காணப்பட்ட பிரபாகரனின் நாளாந்த செயற்பாடுகள். அவரின் பதினான்காவதுவயதில் மாற்றமடைந்ததை முதலில் கண்டுபிடித்தும் பார்வதி அம்மாதான். 1968ம் ஆண்டில் சிறுசிறுபோத்தல்கள் மற்றும் பால்ப்பேணிகளை எங்கிருந்தோ கொண்டு வந்து அவற்றைச் சுத்தப்படுத்தி காயவைப்பதும் பின்னர்; அதனை எடுத்துச்செல்வதையும் கண்ட பார்;வதிஅம்மாவிற்கு ஏனென்ற காரணம் புரியவில்லை. எனினும் தொடர்ந்த நாட்களில் தீவிரவாதப்போக்குடைய சின்னச்சோதி, மற்றும் நடேசுதாசன் என்பவர்களுடன் மகனிற்கு ஏற்ப்பட்டிருந்த தொடர்பைப் தெரிந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்துவது போல் சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்;களையொத்த நண்பர்களும் பிரபாகரனைத் தேடி வீட்டிற்கு வருவதும் அவரை அழைத்துச்செல்வதும் அவருடைய சந்தேகத்தை அதிகரிக்க காரணமாகியது. வவுனியா கச்சேரியில் பணிபுரியும் கணவன் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும்போது  அவருடன் அன்பொழுக  ஒட்டி உறவாடும் மகன் ஏனைய நாட்களில்  வீட்டில் நிற்பதை தவிர்ப்பதும் இவர்மனதில் மேலும் பல கேள்விகளை உருவாக்கியது. இதனைவிட மூத்தமகன் மனோகரனின் வகுப்புத் தோழர்களான குட்டிமணி தங்கத்துரை போன்றோருடனான வயதுக்கு மீறிய  தொடர்பும் அன்னை பார்வதி அம்மாவின் கேள்விகளுக்கு மேலும் விடை கூறின.

எப்பொழுதும் தம்பியின் நடவடிக்கைகளை பாசத்துடன் கண்காணித்து வந்த பொறுப்புள்ள சகோதரரான மனோகரன் கூறும் செய்திகளும் இவரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. இந்நிலையிலேயே 1969இல் எழுச்சிபெற்ற ‘தமிழரின் சுயாட்சி’ என்னும் கோசத்துடன் மகனும் ஐக்கியமாகிவிட்டதை பார்;வதிஅம்மா புரிந்து கொண்டார்.  மேற்படி மகனின் எண்ணங்களும் செயல்களும் இவருக்கு ஆச்சரியமளித்தன. போலித்தனமான அரசியல் அபிலாசைகளை வெறுத்து எந்தஅரசியல்கட்சிக்கும்  எப்பொழுதுமே வாக்களிக் காமல் கடமையை மட்டுமே கண்ணாகக்கருதும் உண்மையான அரசாங்கஊழியரான வேலுப்பிள்ளைக்கு இப்படியொரு மகனா?  இதனை எப்படிக் கணவரிடம் கூறுவது?  காலங்கள் கழிந்தன. மகனிடம் மாற்றமில்லை. 1970 பொதுத்தேர்தலின் பின் சுயாட்சியும் தமிழரின்ஒற்றுமைக்குள் ஒன்றாகிய அதேவேளையில் வல்வெட்டித்துறையில் உருவாகிய தமிழர்கூட்டணி அலையுடன் ‘தமிழரின்விடுதலைக்கு தமிழீழமேதீர்வு’ என்ற அரசியல் விழிப்புணர்வும் அந்தமண்ணில் உருவாகி தீவிரம்பெற்று வளர ஆரம்பித்தது. பெரிய தந்தையார் ஞானமூர்த்தி வீட்டில் கூட்டணியாகக்கூடும்  கூட்டங்களுடன் மகனும் ஐக்கியமாகி விட்டதனை அறிந்துகொண்டார்;. படிக்கவேண்டிய வயதில் எதற்காக இப்படி செல்லமகன் அவன் சிந்தனையில் மாற்றம்வராதா?

 

1970 டிசம்பர்மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரணபரீட்சையில் தேற்றிய பின் மகனின் செயல்களில் மேலும் வேகம் கூடியது. 1971 ஜனவரியில் வேம்படியில்  கட்டப்பட்டிருந்த அன்றைய  கல்விஅமைச்சரான பதியுதீன்முகமட்டின் கொடும்பாவியில் காணப்பட்டது காக்கிநிறக்காற்சட்டை கேள்விப்பட்டவுடன் தேடிப்பார்த்தார் தங்கள்வீட்டில் இருந்ததே.  சுதந்திரகாலம் முதல் வல்வெட்டித்துறையில் எப்பொழுதும் காணப்பட்ட அரசஎதிர்ப் புணர்வும் 1970 பொதுத்தேர்தலின் பின் இலங்கை அரசியலில் ஏற்பட்டமாற்றங்களும் தமிழ்மாணவர் மீதான தரப்படுத்தலும் தனது மகனிலும் மாற்றங்களை ஏற்ப்படுத்தியதைப் புரிந்து கொண்டார்.  மூத்தவன் மனோகரனுடன் இணைந்து ஓய்வுநாளில் வீட்டிற்குவந்த கணவனிடம் விளக்கமாகக்கூறினார்.

 

தமிழான்விடுதலைக்கான அரசியல் சித்தாந்தங்களுடன் விளங்கிய  தமிழர்கூட்டணி ஸ்தாபகர் ஞானமூர்;த்திஅப்பா வீட்டில் 1971 மார்;ச் மாதமளவில்  பிரபாகரனைக் கண்டு வீட்டிற்கு அழைத்துவந்த தந்தையிடம் வரும்வழியிலேயே  ‘என்னை என்வழியில் விட்டு விடுங்கள். நான் தமிழ் இனத்திற்காக போராடப்போகின்றேன்’ எனக்கூறிய மகனிற்காக தாய்மனம் வேதனைப்பட்டது.  சிறுவன் விபரம்புரியாமல் விளையாட்டுத்தனமாக கூறினானா?  ஏது செய்யலாம்?  ஆனால் தொடர்;ந்த நாட்களில் மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல்ப்போயின. ஆயுதம் வாங்க அலைந்த மகனின் செயல்கள் மேலும் வியப்பை அளித்தன. வவுனியாவில் தந்தையுடன் தங்கியிருந்த மகன் பாடசாலைக்கும் செல்லாமல் தந்தையிடமும் கூறாமல்  1971 செப்டெம்பரில் ஊருக்கு திரும்பிவந்தது. தாயான இவரின் கேள்விகளை அதிகரித்தது. நாலுமொட்டையர்;களுடன் இணைந்து உன்னால் என்ன செய்யமுடியும்? பொறுக்க முடியாமல் ஒருநாள் மகனிடம் நேரடியாகவே கேட்டார்? நாலுமொட்டை நாளைக்கு நாற்பது மொட்டையாகும்;. நாற்பதுமொட்டையும் பின்னர்; நானூறு மொட்டையாகும். சிரித்துக் கொண்டெ மகன் கூறியது அன்னையை சிந்திக்கதூண்டியது.  மகனை மாற்றமுடியாது. மகனின் உறுதியில் முடிவு கண்டார். மகன் வீட்டிற்கு வருவது குறைந்தது. மீண்டும் ஒருநாள் அவன் வந்தபோது காலில் எரிகாயம் அம்மாவின் மனது துடித்தது. ஆனாலும் பாசமகனிற்குள் எரிந்து கொண்டிருக்கும் தமிழினவிடுதலை வேட்கையே மகனின் காலில் எரிகாயமானது புரிந்துகொண்டார். தமிழினத்தின் விடுதலையில் மகன் கொண்டிருக்கும்  காதலின் அடையாளம் அந்த தளும்பு என முடிவுசெய்தார்;. மகனை அவன் வழியில் விட்டுவிடுவோம்.

 

விளைவு……1973 மார்;ச் மாதம் 22ந் திகதி பகலில் மகனைத்தேடி பொலிசாருடன் வந்த பெயர்தெரியாத நண்பனும் (சிறிசபாரத்தினம்) 23ந்திகதி அதிகாலை வீட்டைச்சல்லடை போட்டுத்தேடிய சி;.ஐ.டி பொலிஸ்அதிகாரியான பஸ்தியாம்பிள்ளை குழுவினரும் தனது ஆசைமகனைத்தான் தேடிவந்தனர்;. புரிந்துகொண்டார்!  மகன் இனிமேல் வீட்டில் உறங்கமுடியாது. அதுசரி இரவு சினிமா பார்த்துவிட்டு உறங்கச்சென்ற மகன் அதிகாலை பஸ்தியாம்பிள்ளை வந்தபோது எங்கே போனான்? எப்படிப்போனான? மனது அலைபாய்ந்தது. அன்று முதல் மகன் வீட்டிற்கு வரவில்லை. ஆனால் பொலிசார் அடிக்கடி வந்தார்;கள். அவர்;கள் இவ்வாறு வருவது பார்வதிஅம்மாவிற்கு பிடித்திருந்தது. காரணம் மகனைப்பிடிக்க முடியாது அவர்கள் தவிக்கின்றனர்;.  பெருமிதம் கொண்ட மனதுடன் வருபவர்களை எதிர்கொள்ளத்தயாரானார். நாட்கள் நகர்ந்தன. நாற்பத்திரண்டு நாட்களின் பின் அலைகடலை தாண்டிவிட்டான் மகனென்ற சேதிவந்தது  மகனுடன்சென்று வேதாரணியத்தில் இறக்கிவிட்டு வந்த ‘மோகன்’  இற்கு மனதாலே நன்றிசொன்னார். அமைதிகொண்டார்.  மகனிற்கு இனி ஆபத்தில்லை ஆனால் பஸ்தியாம்பிள்ளையும் அவன் பரிவாரங்களும் தொடர்;ந்து வந்தார்கள் தொல்லை கொடுத்தார்;கள்.  பார்;வதிஅம்மா பயப்படவில்லை.  ஏனெனில் மகனில் இருக்கும் பயத்தினால்த்தானே அவர்கள் வருகின்றார்கள்.

 

இருண்டுவருடம் கடந்து 1975 சித்திரை மாதத்தில் தம்பி வேலுப்பிள்ளை கூறினார். உனதுமகன் யாழ்ப்பாணத்தில்! துள்ளிக்குதித்து மனசு சந்தோசத்தில் மகனைப்பார்கத் துடித்தார். ஆனால் மகன் இப்பொழுதும் வீட்டிற்கு வரவில்லை  ஆடிமாதம் வந்தது மாதம் முடியுமுன்னே துரையப்பா கொலை என்ற சேதியுடன்; வந்தது  ஆவணிமாதம் வந்தது. பஸ்தியாம்பிள்ளை பயங்கரகோபத்தில் அடிக்கடி வந்தார்;. எங்கே உனதுபிள்ளை?  கேள்வியும் அவரே கேட்பார். எப்படியும் பிடித்துக்காட்டுகின்றேன்பார்! பதிலும் அவரே தருவார். இப்பொழுது தாமோதரம்பிள்ளையும் வரத்தொடங்கினார்.  வாலிபனான மகன் தமிழரின் நல்வாழ்விற்காக தனதுவழியில் நடக்கத் தொடங்கிவிட்டான்.  மகனிற்காக மனது பிரார்;திற்கத்தொடங்கியது. செல்லுமிடமெல்லாம் கோயில்களில் மகனிற்காக அர்;சனை. தனக்காக எதையும் வேண்டாது மகனிற்காக வேண்டுவதே தாயுள்ளம். அதன் அடையாளம் பார்வதிஅம்மாவின் செயல்களே.

 

துரையப்பாவில் தொடங்கியது துரிதமாக வளர்ந்தது. எங்கும் ‘புதியபுலிகள்’ பற்றி மக்கள் பேசத்தொடங்கினர்;. யாழ்ப்பாணத்தில் துரையப்பா கொழும்பில் கனகரட்ணம். தமிழினத்துரோகிகளிற்கு  தொடரான பரிசுகள். அரண்டு போனது சிங்களஅரசு. பஸ்தியாம் பிள்ளைக்கு புதியபொறுப்பு. பார்வதிஅம்மாவின் பிள்ளையை வேட்டையாட வெறிகொண்டு அலைந்தார். அடிக்கடி ஆலடி வீட்டிற்கு வந்து மிரட்டிப்பார்;த்தார்;.  வாசல்படியிலே இருந்து பவ்வியமாகவும் கேட்பார்;. எப்படியோ ஒருநாள் அவரும் வேட்டையாடப்பட்டார். விடுதலைப் புலிகள் வெளிச்சத்திற்கு வந்தனர்.

 

சிறுவன் பிரபாகரன் ஏறி விளையாடிய ‘உயிரற்ற புலிப்பொம்மை’ பார்வதி அம்மாவின் வீட்டுமண்டபத்தினுள் பலவருடங்களாக அசைவின்றியே நின்றிருந்தது. எப்படியோ வெளியில் வந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்குள் சென்றது. ஆரியபாலாவிற்கும் அதனோடு விளையாட ஆசைபோலும். விடுதலைப் புலிகளின் உயிராய் இருந்த பிரபாகரனைப் பிடிப்பதற்குப்பதிலாக அவருடைய விளையாட்டுப்புலியை பிடித்ததில் ஆரியபாலாவிற்கு ஏதோபெருமை. வல்வெட்டித்துறைக்கு வந்த நாள்முதலாய் அவரும் அடிக்கடி வரத்தொடங்கினார்;. பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி அல்லவா?  மேலிடத்துக் கட்டளை எதுவோ? ஆனால் மென்மையாகக் கதைப்பார். அதிலே மிரட்டலும் இருக்கும்.  பதகளிப்பில்லா பார்வதி அம்மாவிற்கு இவைகள் பழகிப்போன விடயங்கள். பஸ்தியாம் பிள்ளையின்  மிரட்டலுக்கே அஞ்சாதவர் ஆரியபாலாவின் அதட்டலுக்கா அசைந்து கொடுப்பார். அதனால் வாசல்படியில் நின்றே பதிலைக் கொடுப்பார். எத்தனை நாள்தான் இப்படி நடக்கும். ஒருநாள் ஆரியபாலாவால் அழைத்துச் செல்லப்பட்டார்;. பார்வதி அம்மாவீட்டு கார்கராஜ்ஜில் வெடிமருந்து இருந்ததாக குற்றச்சாட்டு மறுநாள் வரையும் பொலிஸ்நிலையத்தில் அன்னை. மகனிற்காக கோயில்களில் தெய்வங்களின் அனுக் கிரகத்தை வேண்டிய அம்மா அதே மகனிற்காக இரவுமுழுக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.  மகனிற்காக தாயை வருத்தியது அதிகாரம்  அசைந்து கொடுக்கவில்லை பார்வதிஅம்மா. ஏனெனில் அவருக்குத்தானே தெரியும். பிரபாகரன் தனக்கு மகனல்ல. அவன் தமிழ்த்தாயினுடைய மகனென்று.  தன்னைப் பிடித்து அடைத்துவைத்தால் அம்மா என அவன் வருவானா? அலட்சியமாகவே அன்றைய இரவைக் கழித்தார்;. அடுத்தநாள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டமும் புலித்தடைச்சட்டமும் அன்னைக்குமுன்னால் ஆரவாரம்புரிந்தன.  இராசாயனப் பகுப்பாய்வுக்கு வெடிமருந்து செல்ல அம்மா  வீட்டிற்குவந்தார். ஓரிருவாரங்களில் ஆபத்தற்ற  இராசாயனப் பொருள்  என பயங்கரவாதச் தடைச்சட்டம் வாலைச்சுருட்டிக் கொண்டது.  இதன்பின் இவரதுவீட்டிற்கு உறவினர்; கூட வருவதில்லை. எனெனில் எந்தக் கணத்திலும் ஆயுதப்படைகள் வரலாம்.  ஆனால் தனித்திருந்தாலும் பார்வதியம்மா மட்டும் பயப்படுவதில்லை! புலி இருந்தகுகையல்லவா! அதனால் பயம் அதற்கும் பயம்போலும்.

 

எப்படி எப்படியோ நாட்கள் நகர்ந்தன. 1983 ஆடிக்கலவரத்தின் பின்னர்ஒருநாள் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் வீட்டை தீயிட்டுக்கொழுத்தினர். எல்லாம் எரிந்துபோயின. எரியுண்ட பொருட்களிடையே எரியாத ஒரேஒரு பொருள் ‘யாமிருக்கப் பயமேன்’ அபயம் அளிக்கும் முருகனின் திருவுருவம். கட்டம்போட்ட கண்ணாடிப்படம் மகனை நினைத்தார்.  இருவரும் ஒருவரா?  இருப்பதற்கு ஏதுவான இடமின்றி பலஇடம் அலைந்தாலும் இறுதியில் அபயம் அளிக்கும் முருகனின் கந்தவனமடத்திலே வாழ்கை. நாடுமீட்கப் புறப்பட்ட மகனால் இருந்த வீட்டையும் இழந்து அலைந்த பெற்றோர்கள். ஏதேச்சையாக நடந்ததா? அல்லது இறைவன் இட்டகட்டளையா? இவர்கள் இருந்த மடத்திற்கு சிலநூறுயார்  தூரத்தில் மகனின் மறைவிடம் அறியாதபெற்றோர் அறிந்தபோது மகன் அலட்டிக் கொள்ளாமல் கூறினார். ‘அவர்கள் மடத்திலே!… நான் றோட்டிலே!… நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்’ தகவல்கூறிய நண்பர்கள் திகைத்தார்கள். ‘எதிரேபார் உறவினர்களா? கவலைப்படாதே! அருச்சுனா வில்லைஎடு அம்பைத்தொடு’ இது பாரதத்தில் கண்ணன் சொன்ன பகவத்கீதை.  இங்கே அண்ணன் சொன்னதை நண்பன் சொன்னபோது என் வார்;த்தைகளிற்கு சக்தியில்லை இதற்கு ஏற்றதொருவசனத்தை என்னால் எப்பொழுதும் அமைக்கமுடியாது.

 

1983 இன் இறுதியில் ஈழத்தில் வாழமுடியாது தமிழ்நாட்டிற்குப் பயணம் பத்திரிகைகளில் படமாய்வரும் மகனைப்பார்;க்க பார்க்க அன்னைக்கு தினமும் பரவசம். திருச்சியில் நடந்த கண்காட்சியொன்றில் எத்தனைவிதமாய் எத்தனைபெரிதாய் மகனின் படங்கள். அத்தனையும் கலர் கலராய் அப்பப்பா! பன்னிரண்டு வருடங்களின் முன்னால் வீட்டில்இருந்த தன்னுடைய படங்கள் ஒவ்வொன்றையும் மகனே அழித்ததை நினைத்துப்பார்த்தார். ஆச்சரியம் அளவுகடந்தது. ‘தம்பி’ என அழைத்தவர்;கள் போய் இப்பொழுது ‘தலைவர்’  என அழைக்கின்றார்கள் நெஞ்சுநிறைந்தது. ஆனாலும் நேரேபார்;க்க தாய்மனம் தவித்தது.

appa-amma.gif

(திருமண நிகழ்வொன்றில்  பார்வதி அம்மாவும் வேலுப்பிள்ளை அப்பாவும்)

 

1986 செப்டெம்பர் மாதம் தம்பி வேலுப்பிள்ளையின் மகளின் திருமணத்தில் அப்படியொரு எதிர்பாராத இனியசந்திப்பு! மகன் வருவானா? என்றெரு எதிர்பார்ப்பு. அப்படியே கொஞ்சி விளையாடும் பேரன் சார்ள்ஸைக் கொண்டுவந்தாள் முன்னேவந்த மருமகள்மதி. கணவன் வேலுப்பிள்ளையை கேட்காமலேயே அள்ளிஎடுத்தார் பார்வதிஅம்மா. யாருக்கும் கோபமில்லை. தந்தையுடன் கதைத்தபின்  தாயுடன் மைந்தன் அளவளாவினான் அன்பு சொரிந்தான். அவனே இப்போது தந்தையாகி விட்டான் அல்லவா! பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர் பிரிந்தவர்கூடினால்  பேசவும்வேண்டுமா  கொண்டாட்டம் குதூகலம் அன்பானஅரவணைப்பான பேச்சுக்கள் ஏக்கங்கள் எதிர்;பார்;ப்புக்கள் எல்லாம் தீர்ந்த நிம்மதியானநாட்கள். 1987ம் ஆண்டு ஆரம்பநாட்கள் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ தனயனின்  நம்பிக்கை வீண் போகவில்லை. தமிழகத்தில் இருந்த தமிழீழத்திற்கு களம்காண சென்றுவிட்டார். என்னவோ ஏதோ தாய்மனது தவித்தது. அதுபோலவே ‘வடமராட்சியில் விடுதலைச்சிகிச்சை’ மயிரிழையில் தப்பினார்; மகன் என்ற செய்தி மகனைப்பார்க்க மனசு துடித்தது.  எப்படி முடியம? இந்தியஅரசின் விருப்பமென்று கூறி  டில்லிக்கல்லவா தந்திரமாக அழைத்துச் சென்றனர்.  அசோகா விடுதியில் நாலைந்து நாட்கள் அடைக்கப்பட்டார்; மகனென்ற சேதி கசிந்தது. மனதுவலித்தது. இந்தியாவுடனும் பிரச்சனை ஆரம்பமானதா ? ஒப்பந்தம் ஒன்று இலங்கையில் நடந்ததும் இரண்டுநாட்களின் பின் அவசரஅவசரமாக சென்னைக்குத் திரும்பிய மகனை சிலநிமிடநேரங்கள் வாஞ்சையுடன் பார்த்தார். வேகம்விரைந்தது  பேசமுடியவில்லை.  டெல்லியின் திமிர்த்தனம் யாழ்ப்பாணத்தில் போர்; தொடங்கியது.  மகனைப்பற்றிய செய்திகள் தொடர்ந்தன.  இறுதியில் மணலாற்றுக்காட்டில் குமுழ முனையிலும்  நித்திகைக்குளத்திலும் முற்றுகையாம். கலங்கவில்லை அன்னையிவள். மகனோ முன்வைத்தகாலைப் பின்வைக்கவில்லை.  1990 ம் ஆண்டு இந்தியஇராணுவம் திரும்பி ஓடியது. அது வந்தபோது இருந்ததைவிட சென்றபோதே எமது எல்லைகள் விரிந்தன.  ஈழத்தில்  மகனின் நேரடிஆட்சி  திருச்சியில் அன்னையின் சிக்கனவாழ்க்கை. எப்பொழுதும் மகனைப்பற்றியே சிந்தனை.

thalavar-family1.gif

தனயனைக் கண்டு புன்னகை கொண்டாள்.

 

காலங்கள் நகர்ந்தன. 2000ம் ஆண்டு பார்;வதியின் கால்கள் மட்டும் நகர மறுத்தன ஆரம்ப பாரிசவாதமென மருத்துவர்; கையைவிரித்துவிட்டார். மகனின் தந்தையே தாய்க்குத் தாயும் தந்தையுமானார். வேலுப்பிள்ளைஅப்பாவின் மனைவி வேலுப்பிள்ளைஅப்பாவிற்க்கு பிள்ளையுமானார். அன்பான அவரின் பாராமரிப்பில் தாய் முசிறியில் அகமகிழ்ந்திருக்க  மைந்தனோ! ஓயாதஅலையாய் ஈழத்தில் களமாடினான்.  வெற்றிகள் குவிந்திட ஆனையிறவும் அடிபட யாழ்பாணத்திற்குள் புலிகள் புகுந்தனர். அகிலஉலகமும்  விழித்துக் கொண்டது.  கூடிப்பேசி கொள்கை வகுத்தன. முதுகில்குத்தவே முக்காடு போட்டன. கொழும்பிற்கு இணையாக கிளிநெச்சிக்கும் உலக இராஜதந்திரிகள்  ஓடிவந்தனர்;. போர்;நடந்த பூமிக்கு ஓய்வுநாள் வந்தது. ‘ஓயாத அலைகள்’ எப்படியோ ஓய்ந்து கொண்டது.

 

2003ம் ஆண்டு மே மாதம் இறுதிவாரம் எப்படியோ அன்னை தாயகம் வந்தாள். தனயனைக் கண்டு புன்னகை கொண்டாள். முப்பதுவருட தடைகளும் தகர்ந்தன. மகனின் பார்வையில் பார்வதிஅம்மா வாழ்ந்தார். பாரிசவாதம் தன்வலி இழந்தது. அன்னையின் நோயை மன்னவன் தீர்த்தான்.  முன்னைநாள் தான் கொண்ட ஆயுதக்காதல் அன்னைக்கு பிடிக்குமா தந்தைக்குப்பிடிக்குமா?  கேள்விகள் விடையாக தமிழ்த்தாய்காக ஆயுதம் தூக்கிய  மகன் தன் தாய்தந்தையின் முன்னால் எப்பொழுதும் வெறும்கையுடனே  போவான். மகனிடம் தாயைச்சேர்த்ததால்  தந்தையும் மகிழ்ந்தார். தனயனும் சிரித்தார். ஆறுவருடங்கள் எப்படிப்போனதோ?

 

சர்வதேசத்தின் சூழ்சிவலையில் சின்னஞ்சிறு தமிழர்தேசம் சிக்கிக் கொண்டது. சமாதானம் தோற்றுவித்த ஐநாசபையிலும் எங்களிற்கு எதிரான சதிவலைகள் பின்னப்பட்டன . வன்னியின் வான்பரப்பில் வல்லூறுகளின் வட்டம் ஓடிஒதுங்க இடம் இன்றி ஓடும்மக்கள். யாருக்கு யார்தான் காவல். பிணங்களின் மேலே இன்னெரு பிணமாய் யார் யாரோ? யாரும் யாரையும் பார்க்கும் நிலையில்  இல்லை. மக்களைப் பிரியா மன்னவனும் மன்னனனைப் பிரியா அன்னையிவளும் சொற்களால் இங்கே சொல்லமுடியாது. அத்தனை கனமாய் சொல்லேது. அன்னையும் தந்தையும்  மைந்தனைப் பிரிந்தனர்.

2009 ஆண்டு வைகாசிமாதம் 16ம் நாளில் வட்டுவாகல் பாலத்தை கடந்தனர்; பெற்றோர்;.  மெனிக்பாம் முகாமில் ‘பிரபாகரனின் தந்தை நான்தான்’ வேலுப்பிள்ளையின் வெண்கலக்குரலில் பார்;வதிஅம்மாவும் சென்னார். ‘நான்தான் அன்னை’  பரபரத்த சிங்களஇராணுவம்  அன்னையையும் அப்பாவையும் பனாகொடைக்கு கொண்டுபோனது!  ஏழுமாதங்கள் எப்படிப்போனதோ? காராக்கிருகத்தில் கண்தெரியா இருளில்  கட்டியநாள் முதல்  கண்ணான கணவனுடன்  கைபிடித்த பார்வதிஅம்மாவும். யாருக்கும் தெரியாது? எங்கே இவர்கள்?  உலகம் முழுக்ககேள்வி பிறந்தது  விடையாய் வந்த அந்தச்செய்தி உலகில் இடியாய் இறங்கியது. பனாகெடைமுகாமில் காலனின் அழைப்பில்  வேலுப்பிள்ளை அப்பா!  அப்படியானால் பார்வதி அம்மா எங்கே? இறந்தவரைவிட இருக்கும் அம்மாவைத் தேடி உலகம் அங்கலாய்தது. செத்தும்கொடுத்த ‘சீதக்காதி’ அல்லவா!…. வேலுப்பிள்ளை அப்பா!  பார்வதி அம்மாவுடன் சிவாஜிலிங்கம் வெளியே வந்ததும்….. மயிலேறும்பெருமாள் அன்னையின் அடியில் தன்னைமறந்ததும்.

 

பிறந்தமண்ணில்   இந்திராணி  வைத்தியசாலையில் அம்மா… சிறுநடை நடந்தமண்ணில் இன்று சிந்தனைமறக்கும் பார்வதி அம்மா  உங்களை என்னால் எழுத  முடியாது.

Thalavar-amma-with-varnakulath.gif

(திருச்சியில் எழிமையாக வாழ்ந்த அம்மாவுடன் வருணகுலத்தான்)

நன்றியுடன்
 அன்புள்ள அம்மாவின் நினைவில் வருணகுலத்தான்

 

http://tamil24news.com/news/?p=45466

Edited by தமிழரசு

இவர் போன்ற அனைத்து வீரத்தாய்மாருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தாய்க்கு நினைவஞ்சலிகள்.

எங்கள் நெஞ்சத்தில் என்றென்றும் வாழும் வீரத்தாய்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஈழத்தாயிட்கு அஞ்சலிகள்.
 
தம்பி , மிகவும் பெறுமதியான கட்டுரை.
 
அண்ணாவின் பிறந்த ஆண்டு 1956 என்று போடப்பட்டுள்ளது. அதை 1954 என்று 
மாற்றி விடுங்கள்.
 அண்ணையின் மாமாவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவருக்குப்பெயரும் 
வேலுப்பிள்ளைதான். அண்ணைக்கு மாமாவில் சரியான விருப்பம்.மாமா 
இரண்டாவது மாரடைப்புடன் ( 2nd attack)கிளி பொன்னம்பலம் மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்தார். பின் இறுதி யுத்தகாலத்தில் கைவேலிப்பகுதியில் சிங்கள அரசின் செல் தாக்குதலில் மாமாவும்,மாமியும் உடல் சிதறி இறந்து விட்டனர். அண்ணையிட்கு
சில நாட்களுக்கு பின்தான் தெரியும். முகத்தை திருப்பி கிண்டி எடுத்து 
பார்க்களாமோ?   எனக்கேட்டார்.அவ்வளவு பாசம்.  
  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாவுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தாயிட்கு அஞ்சலிகள்.
 
தம்பி , மிகவும் பெறுமதியான கட்டுரை.
 
அண்ணாவின் பிறந்த ஆண்டு 1956 என்று போடப்பட்டுள்ளது. அதை 1954 என்று 
மாற்றி விடுங்கள்.
 

 1954 கார்த்திகை 26ம் திகதி இணுவில் மகப் பேற்று நிலையத்தில் பிரபாகரன் என்னும் தெய்வீகக்குழந்தையாக ஜனனமானது.

அண்ணன் அவர்களின் பிறந்த ஆண்டு சரியாகத்தானே உள்ளது 

 

வீரத்தாய்க்கு நினைவஞ்சலிகள்.

வீரத்தாய்க்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாவுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரத்தாய்க்கு என் நினைவஞ்சலிகள்.

வீரத்தாய்க்கு  நினைவஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் 26 நவம்பர் 1956 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே அதிசயஒற்றுமை. வரலாறுகள் திரும்பும் போது விருட்சமா கின்றனவா?

 

 

 

தம்பி, நான் இதைச் சொன்னேன் 

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தாய்க்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்.


 

பார்வதி அம்மாவுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் 26 நவம்பர் 1956 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே அதிசயஒற்றுமை. வரலாறுகள் திரும்பும் போது விருட்சமா கின்றனவா?

 

 

 

தம்பி, நான் இதைச் சொன்னேன் 

 

மாற்றியுள்ளேன் சகோ, 
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி லியோ.
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்  

 

வீரத்தாய் பார்வதி அம்மாவுக்கு எனது நினைவு அஞ்சலிகள்

பார்வதி அம்மாவுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாவுக்கு, இரண்டாமாண்டு நினைவஞ்சலிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாளின் 2ம் ஆண்டு நினைவு நாள் திருச்சி நாம்தமிழர் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

v-paarvathiammaalnews%20%282%29.jpg

photo.gifதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் பார்வதி அம்மாளின் இரண்டாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினரால் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி சத்திரம் பேரூந்து நிலையத்தில நாம்தமிழர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பார்வதி அம்மாளின் உருவப்படம் வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

 

v-paarvathiammaalnews%20%281%29.jpg

அகவணக்கத்தை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

v-paarvathiammaalnews%20%282%29.jpgv-paarvathiammaalnews%20%284%29.jpgv-paarvathiammaalnews%20%285%29.jpgv-paarvathiammaalnews%20%283%29.jpgv-paarvathiammaalnews%20%286%29.jpgv-paarvathiammaalnews%20%288%29.jpgv-paarvathiammaalnews%20%287%29.jpg

ஈழதேசம் இணையம்.

தாயே! வீரவணக்கம் 

வீரத்தாய்க்கு நினைவஞ்சலிகள்.


 

வணங்குகின்றேன் தாயே ............வார்த்தைகள் வெளிவரவில்லை ,உங்களையும் உங்கள் புதல்வரையும் ,பேரனையும் நினைக்கும் ஒவ்வொரு கணமும் எதோ ஓர் குற்ற உணர்வுடன் கண்கள் மூடிக்கொள்கிறது ...........நாமெல்லாம் மனிதர்காளா ,என்ன்று கூட சிந்திக்கத்தோன்றுகிறது .............நீங்கள் பெற்றெடுத்த அந்த சூரியப்புதலவனின் கட்டளைக்காக ,வரவிற்காக ஏங்கி நிற்கும் கோடான கோடி மாந்தரில் நானுமொருவன்.

உங்கள் ஆன்மா இறைவனுடன் நித்திய இளைப்பாற்றி அடைய பிரார்த்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தாய்க்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.