Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்கு ஒரு ஆன்ரொயிட்/அப்பிள் அப்ஸ் யார் செய்வீங்க..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

yarl-app.jpg

 

யாழுக்கு ஒரு சிமாட்போன் அப்ஸ் செய்யனுன்னு ஆசை. ஆனால் வெகு சின்ன முயற்சி தான் என்னால் எடுக்க முடிஞ்சுது. முன் மாதிரிக்கு ஒன்று செய்துள்ளேன். இதனைப் போல இன்றி நல்ல விரிவான வசதிகள் நிறைந்த ஒரு அப்ஸை.. செய்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைச்சு.. யாழும்.. சிமாட்போன் மற்றும் ராப்லெட் உலகில் அழகே உலா வர செய்தால் நன்றே அமையும் இல்லையா..??!

 

யாராவது.. இத்துறையில் சிறந்தவர்கள் முயன்றால் யாழை நடத்திறவங்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும்..!

 

ஆன்ரொயிட் போனுக்கு என்று எனது சின்ன முயற்சியில்.. செய்த யாழ் நியூஸ் பீட் அப்ஸ்...

கீழ் வரும் இணையத்தளத்திற்கு சென்றால் இலகுவாகச் செய்யலாம். ஆனால் வினைத்திறனாகச் செய்ய கொஞ்சம் அப்ஸ் பற்றிய ஆழமான அறிவு இருத்தல் அவசியம் என்று நினைக்கிறேன்.

 

http://www.appmakr.com/app_manager/builds/install_ota/230123?h=bd1a8ee8867b5226209c530dc3a3959b

 

ஏதோ என்னால் இயன்றது. ஒரு முன் மாதிரிக்காக..! (updated on 27th Feb)

 

http://www.appmakr.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு குறுகியவட்டத்திற்குள் நிற்காமல்.......தற்கால முன்னெடுப்பிற்கு என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி, வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஓரளவு நல்லா வேலை செய்கிறது. (updated on 27th Feb)

 

http://www.appmakr.com/app_manager/builds/install_ota/230083?h=a868cd860e35e18908d697c8731d773f

 

ஆன்ரொயிட் போன் உள்ளவர்கள் இறக்கிப் பாவிக்கலாம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள் nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி வாழ்த்துகள் நெடுங்ஸ் விறதர்........

மிகவும் தரமான முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு.. மாதிரி வடிவமாக யாழுக்கான ஆன்ரொயிட் அப்ஸ் செய்யப்பட்டு விட்டது.

 

உங்கள் ஆன்ரொயிட் போன் மூலம் யாழின் இந்தப் பதிவிற்கு வந்து இங்கு தரப்படும் இணைப்பை அழுத்தி அந்த அப்ஸை இறக்கி இயக்கிக் கொள்ளலாம்.

 

இதோ அந்த இணைப்பு: (updated on 27th Feb)

 

http://www.appmakr.com/app_manager/builds/install_ota/230123?h=bd1a8ee8867b5226209c530dc3a3959b

 

அது கீழ் வருமாறு தெரியும்..

 

Screenshot_2013-02-26-10-47-35.png

 

Screenshot_2013-02-26-10-47-51.png

 

ஆப்பிளிற்கும் வடிவமைத்த போதும் அதனை ஏவுவதில் சிக்கல் உள்ளது.

 

இது ஒரு மாதிரி வடிவமைப்பு மட்டுமே. இதனை போன்ற அல்லது விசேடித்த...  பல வகைகளிலும் முன்னேற்றிய.. யாழுக்கென்ற பல தனித்துவங்களோடு இன்னும் இன்னும் மெருகேற்றி அழகான ஒரு அப்ஸை வடிவமைத்து இத்துறையில் மேலும் மேலும் அனுபவமுள்ள கள உறவுகள் வழங்கினால் நன்றே அமையும்.

 

உங்கள் ஊக்குவிப்புக்கும் ஆர்வத்திற்கும் எமது சிறிய இலகு முயற்சிக்கு அளித்த பாராட்டிற்கும் நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நெடுக்ஸ், அருமையான முயற்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நெடுக்ஸ்,

அருமையான முயற்சி

 

பின்னர் எழுதுகின்றேன்


 

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் நெடுக்காலபோவான்.

 

யாழ் கருத்துக்களமானது ஏற்கனவே mobile device களுக்கு ஏற்றாற்போல் தானாகவே மாறிக் கொள்ளும். அதாவது கைத்தொலைபேசி கொண்டு ஒருவர் யாழ் கருத்துக்களத்தினைப் பார்க்க முற்படுவாராயின் பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு முக்கிய விடயங்கள் மட்டும் காண்பிக்கும்.
http://www.yarl.com/forum3/files/IMG_0633.PNG
http://www.yarl.com/forum3/files/IMG_0634.PNG


யாழ் முகப்பும் mobile device களுக்கு ஏற்றாற்போல் தானாகவே மாறிக் கொள்ளும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. மிக விரைவில் அதுவும் பாவனைக்கு வரும்.
http://www.yarl.com/forum3/files/IMG_0635.PNG

  • கருத்துக்கள உறவுகள்

THANKS

Edited by purmaal

நல்லதொரு முயற்ச்சி. வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா..!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஈடுபாட்டுக்கு வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி. பெருமையாக இருக்கிறது.

மனம் நிறைந்த வாழ்த்துகள் 

நல்ல முயற்சி. வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா.. :)

 

நீங்கள் இதனை பாவித்துப் பார்த்தீங்களா..??!

 

இதனை விட இன்னும் எவ்வளவோ நல்லா வடிவமைக்கலாம். என்ன எவருமே வெளிப்படையா முன்வாறாங்கல்ல..! ஒருவேளை முக்கியமில்லை என்று நினைக்கிறாங்களோ என்னவோ..! :)

 

பார்ப்போம்.. எங்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் வாய்ந்தால்.. இதனை கூடிய அளவுக்கு மெருகேற்ற முயற்சிக்கலாம். :)

 

போனில்.. யாழ் இணைப்புக்குப் போய் முழு இணையத்தையும் லோட் பண்ணி  செய்தி வாசிக்கிறதிலும்.. இது வேகமாக இருக்குது. நான் இப்போ இதனை தான் அடிக்கடி பாவிக்கிறேன். அத்தோடு பிபிசி.. தமிழ்நெட் டுக்கும் இதே இடத்தில் செய்தி வாசிக்க வசதி செய்திருப்பதால்.. அவற்றையும் படிக்க முடிகிறது. தமிழ் ரீவி சனல்களையும் பார்க்க வசதி.. செய்யப்பட்டுள்ளது.

 

சில குறைகள்.. சில முக்கிய செய்திகளைத் தவிர மிச்ச செய்திகளுக்குரிய தலைப்பைத் தவிர செய்திகளை முழுமையாக வாசிக்க முடியவில்லை. இதர ஆக்கங்களையும் படிக்க  முடியாமல் செய்திருக்குது..! அது யாழுக்கு வாசகர்களை இழுக்க என்று விட்டிட்டம்..! ஏன்னா இது யாழுக்கு வாசகர்கள் வருவதை குறைக்கக் கூடாதில்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நீங்கள் இதனை பாவித்துப் பார்த்தீங்களா..??!

 

இல்லை. நான் பயன்படுத்துவது iphone. அதில் இதனை தரவிறக்கி பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.

நல்ல முயற்ச்சி, வாழ்த்துகள்

  • 1 month later...

முயற்சிக்கு பாராட்டுக்கள் நெடுக்ஸ். எனது நண்பன் ஒருவன் இத்துறையில் திறமையானவன். அவனிடத்தில் கதைக்கும்போது கேட்டுப் பார்க்கிறேன். நானும் அண்ட்ரொயிட் பாவனையாளன்தான். ஆனால் ஐபோன் பாவிப்பவர்களும் பெரும்பாலாக இருப்பதனால் அதற்கும் வடிவமைக்க வேண்டும். பார்க்கலாம். :)

சென்ற வாரம் முதல் யாழ் முகப்பு mobile device களில் தெரியக் கூடியவாறு செய்யப்பட்டுள்ளது.

mobile device மூலம் யாழ் முகப்பைப் பார்க்கும்போது வடிவமைப்பு தானாகவே மாறிக் கொள்ளும். அப்படி இல்லையெனில் கீழ்ப் பகுதியில் Theme : Yarl Mobile Theme என்பதைத் தெரிவு செய்து மாற்றிக் கொள்ளலாம்.

 

ஏதாவது பிழைகள் இருந்தால் அறியத் தாருங்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கான ஆன்ரொயிட் அப்ஸ் யாழினால் வெளியிடப்பட்டுள்ளது..! இங்கு சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

 

https://play.google.com/store/apps/details?id=com.yarl.yarlnews

 

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சார்த்தமாக யாழ் இணையத்திற்கான apps வெளியிடப்பட்டுள்ளது. இது Android 4 ற்கான கைத்தொலைபேசிகளுக்கு மட்டுமே தற்போது இயங்கும். பாவிக்க விரும்புபவர்கள் குகிள் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 

மேலும் இது தொடர்பான உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது. 

 

apps1.pngapps2.pngapps3.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.