Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அளவெட்டியில் இருந்து அடையார்வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே"

 

"நீ என்ன மேளக்காரனின்  பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்"

 

"அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வ‌டிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், "

 

"எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை"


அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி  போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான்.

 

ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன்   இன்னும் இரண்டு கூட்ட
மேளம் அவ‌ர்களின் திருவிழா அன்று நடை பெறும் .எனையோரின் திருவிழாவில்  ஆறு ,எழு கூட்ட தவில்  கச்சேரி நடை பெறும்.ஒரு திருவிழாவையும் சுரேஸ் தவறவிடமாட்டான். திருவிழா வேலைகளை முன்னுக்கு நின்று சுரேஸ் கவனித்துகொள்வான்.
 

தவில் வித்துவான்களையும்,நாதஸ்வர வித்துவான்களையும் அச்சவாரம் கொடுத்து திருவிழா தினத்தன்று வரவழைப்பதற்காக  அளவெட்டிக்கும், இணுவிலுக்கும் சென்று வித்துவான்மாரிட்ட‌ காசையும் கொடுத்து திகதியைசொல்லுவான்.

 

"தம்பி இந்த முறை உபயகாரரிட்ட சொல்லி  காசை கூட்டி தாங்கோ"

 

"ஒம் வித்துவான் ,அப்பாவிட்ட சொல்லுறன்,ஆனால் நீங்கள் இந்த முறை புதுசா வந்த‌ மூன்றுமுடிச்சு படப்பாடலை முதல் தரம் எங்கன்ட திருவிழாவில்தான் வாசிக்க வேணும்"

 

"ஒம்,ஒமோம்...."

 

திருவிழா தினத்தன்று மதிய சாப்பாட்டுக்கு  அடிச்ச ஆடு ,சாராயம் எல்லாம் வீட்டில் வைத்து வித்துவான்களுக்கு கொடுக்கப்படும்.சாராயம் அளவாகத்தான் கொடுக்கப்படும்  போதை கூடினால் இரவுக்கச்சேரிக்கு வரமாட்டார்கள் என்று பயத்தால் அந்த முன் எச்சரிக்கை.

 

வித்துவான்கள்  தங்கத்தால் செய்த புலிப்பல் மாலை,ஐந்து விர‌லுக்கும் மோதிரம் அணிந்திருப்பார்கள் . சில வித்துவான்கள் தங்களது நாதஸ்வரத்திற்கு தங்கத்தால்  சில அலங்கார வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்.இவற்றை எல்லாம் பார்த்து சுரேஸ் எண்ணியதுண்டு இவர்கள் பெரிய பணக்காரர்கள்
என்று.


இப்படித்தான் ஒருமுறை திருவிழா ஒழுங்குகளுக்காக கூட்டம் நடை பெறும் பொழுது


"இந்த முறை சின்ன மேளத்தை கூப்பிடுவமோ"என ஒரு பெரிசு கருத்து சொல்ல‌


"சீ சீ ..சின்னமேளத்தை கூப்பிட்டியளோ நான் இந்த திருவிழா கொமிட்டியிலயே இருக்க மாட்டன்"என
இன்னொரு பெரிசு மாற்றுக்கருத்து சொல்ல


"நீ இல்லாட்டி கொடி ஏறாதே"


"என்னடா சொன்னாய்"

 

உடனே சமாதன விரும்பிகள் எல்லாம் இரண்டு பெரிசுகளையும் சாந்தப்படுத்தி சின்ன மேளம் இந்த
தடவை வேண்டாம் அடுத்த முறை கூப்பிடுவோம்...என ஏகமனதாக முடிவு செய்தனர்.

 

பொம்பிளைகள் தவில் அடிச்சு நாதஸ்வரம் வாசிச்சா நல்லா  இருக்காது.என சில அம்மாமார்
ஆதங்கப்பட்டினம்.


(1970 களில் சின்னமேளம் அழிய தொடங்கிவிட்டது.)

 

சிட்னியில் நடைபெறும் கலை,கலாச்சார,பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு சுரேஸ் சமுக அளிக்க
தவறுவதில்லை.இலவச நிகழ்ச்சியான அரங்கேற்றத்திலிருந்து பணம் செலுத்தும் தென்னிந்திய நட்சத்திர இரவு வரை செல்வது அவனது பொழுது போக்கு என்றோ,அல்லது அடுத்த சந்ததியினருக்கு
கலை பண்பாட்டை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு உயர்ந்த உள்ளம் என்றோ நீங்கள் நினைக்ககூடாது.....


சுவிங்கத்தை மென்றுகொண்டு குருத்தாரும், பாண்ட்ஸும் அணிந்து கலை ஆர்வமிக்க ந‌டுத்தர
வர்க்க கமானவான் போல அரங்கின் முன் அமர்ந்திருந்தான்.இடைக்கிடை தனது மீசையையும் தடவிக்கொள்வான்... நிகழ்ச்சி தொடங்கிய பின்புதான் தெரிந்த‌து அது மிருதங்க அரங்கேற்றம் எண்டு. வழ‌மையாக அரங்கேற்றம் என்றால் பரதநாட்டியம் தான் நடை பெறுவது வழக்கம். சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தால் குடியும் குடித்தனமும் ஆக‌ இருப்பான் என்ற காரணத்தால் மனைவி இவனை இப்படியான நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுவிடுவாள்.ரசனை இருக்குதோ இல்லையோ நிகழ்ச்சியில் இருப்பான்.


திரைச்சேலை விலகியதும் செல்வன் கமேஸின் மிருதங்க அரங்கேற்றம் என அழகாக ஆங்கிலத்தில்
எழுதியிருந்தார்கள்.கமேஸும் தனது திறமைகளை ந‌ன்றாக வெளிப்படுத்தினான்.ஒவ்வோரு ஆவர்த்தன‌மும் முடிய சபையோர் பலத்த கரகோசம் செய்தனர்.

 

பிரதமவிருந்தினராக  வந்திருக்கும் "அடையாறு திரு சுப்பு சர்மா" அவர்களை மேடைக்கு வருமாறு தாழ்மையுடன் அழைக்கிறோம் என அறிவிப்பாளர் அறிவித்தவுடன் சுப்பு மேடைக்கு சென்றார்
சபையில் இருந்து பலத்த கரகோசம் எழும்பியது. சுப்பு சர்மா தனது சிஷ்யன் கமேஸ் பற்றி புகழ்ந்தார்
..இந்தியாவில் இருந்து கமேஸின் பெற்றோரின் பணத்தில் சிட்னிக்கு வந்து போட்டு கமேஸை
புகழாமல் உம்மடை பக்கத்து வீட்டுக்காரனையே புகழுவான் என நீங்கள் நினைப்பது புரிகின்றது.சுப்பு சர்மாவுக்கு பொன்னாடை போர்க்கப்பட்டது..கமேஸ் சர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

 

அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது மனிதன் இருந்தும் பாகுபாடு
. அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.

 

இப்படிதான் இன்னோரு நாள் எதோ வியுசன் முயுசிக் என்று போனான்.மேல‌த்தேய இசையும் கீழைத்தேய இசையும் ஒன்றாக கலக்கிற இடம் என்று சனம் சொன்னதை கேட்டுப்போட்டு இவனும் சென்றான்.


மேடையில் பலவிதமான இசைக்கருவிகள் இருந்தன‌ ஒரு சில இசைக்கருவிகள் மட்டும் இவனால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. பெண் ஒருவர் நாதஸ்வரம் போன்ற கருவியை வைத்திருந்தார் நாதஸ்வரத்தை விட சிறியது. இன்னொரு பெண் நாதஸ்வரம் போன்ற வளைந்த ஒரு கருவியை வைத்திருந்தார்.இரு கருவிகளும் நல்ல பளபளப்பாய் மின்னியது.வெளிநாட்டுக்காரன்  நாதஸ்வரத்தை மாத்திப்போட்டாங்கள் என்று எண்ணினான்.

 

"இங்க பாரன் எங்கன்ட நாதஸ்வரத்தை இந்த வெள்ளைகள் என்ன செய்து வைத்திருக்குதுகள்,அதை வைச்சிருக்கிறது எங்கன்டஆட்களின் பிள்ளைகளே"என பக்கதில் இருந்த மனைவியிடம் கேட்டான்.

 

"நாசமாய் போச்சு அது நாதஸ்வரமில்லை,வலப்பக்கம் இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது கிலாரினட்,நடுவில இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது சக்சாபோன்,அந்த இரண்டு பிள்ளைகளும்
எவ்வளவு அழகாக  வாசிக்கினம்.....உதுக்குத்தான் சொல்லுறனான் இப்படியான‌ இசை நிகழ்ச்சிக்கு
வந்து பொதுஅறிவை வளர்க்க வேணும் என்று
...."

 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கலைக்கும் பாகுபாடு காட்டுற எங்கடை சனம் எவளவு மேதாவிகள் :rolleyes: .நன்றி புத்தன் பதிவுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்திதுறையிலை சின்மேளம் பேமஸ். சின்னனில பாட்டாவோடை பாத்தனான் . எங்கடையாக்கள் ஒருக்காலும் திருந்த மாட்டினம் . உங்டை கதைக்கு என்ரை வாழ்துக்கள் புத்தன் .

  • கருத்துக்கள உறவுகள்

புத்ஸ்...

நீட்டி முழக்காமல் மெல்லிசா ஒரு குத்து குத்தியிருக்கிறியள் ஊசியாலை... :D

நல்ல ஆக்கத்திற்கு நன்றி.

அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு
கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது
மனிதன் இருந்தும் பாகுபாடு . அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.

 

 இதிலை குத்தியிருக்கிறியள் குத்தூசியாலை :lol: :lol: .வேலிப்பொட்டு அடைபட்டால் சரி  :D . பாராட்டுக்கள் புத்தா .

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ கலைஞர்களை எங்களது வளர்புமுறையும் பெற்றோரின் டொக்ரர் கனவும் சிதைத்து அழித்திருக்கிறது. நகைச்சுவையாக கதை எழுதியிருக்கிறீங்கள் புத்தன். ஆனால் சின்ன வயசில் சுரேசிற்கு மறுக்கப்பட்ட மிருதங்கக்கல்வி அவனது மனசை என்றும் காயப்படுத்திக் கொண்டிருக்கிற உண்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், நாங்க என்ன இனம் எண்டு, நீங்க நினைச்சீங்க?

 

படிச்சா டாக்குத்தர் ஆகவேணும்!

 

அடிச்சா 'லொட்டோ' அடிக்க வேணும்!

 

இந்த மத்தளம் அடிக்கிற கதையெல்லாம், எங்களுக்குச் சரிவராது பாருங்கோ! :D

 

அனுபவம் நல்லா இருக்குது, புத்தன்!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஊரில் இருக்கும்போது


நாத்து நட்டு இருக்கிறம்

வீடு கட்டக் கல்லெடுத்துக் கொடுத்திருக்கிறம்

 

பக்கத்து வீடு அண்டை அயலெல்லாம் கிணத்துக்குள்ளை இறங்கி

சேறு அள்ளி இருக்கிறம்


இரவிலை கடலுக்குள்ளை போய் லாம்பு வெளிச்சத்திலை  நண்டு பிடிசிருக்கிறம்.

கோயில் வேள்விகளில் பறை  அடிச்சிருக்கிறம்.


இஞ்சை கொஞ்சப் பேர் இருக்கினம் ஊரிலை பறையைத் 

தொட்டாலே தோசம் எண்டவை 

இப்ப வெளிநாடுகளில்  சுடலையிலை கிடங்கு வெட்டுகின்ற வேலையை 

ஜென்டில்மேன் வேலையா செய்யினம்  புத்தன் :)

அசத்தல் புத்தன். இது கிறுக்கல் அல்ல. நேர் கோடு.
 
 
என் உறவினர் ஒருவர் நாதஸ்வரம் தவில் ரசிகர். அவரின் வாயால் தான் நான் முதன் முதலில் பஞ்சமூர்த்தி கானமூர்த்தி என்ற பெயர்களைக் கேள்விப்பட்டனான். திருவிழா கச்சேரிகளில் இந்த வித்துவான்களுக்குப் பக்கத்தில் போய் இருந்து கொண்டு நன்றாக ரசிப்பார்.
 
ஊரில் அந்தக்காலத்தில் கோவில் திருவிழாக்களில் டிரக்டர் பெட்டியை மேடையாக்கி கச்சேரிகள் நடத்துவார்கள். இவரும் முன் வரிசையில் இருந்து கொள்வார்.
 
இன்று இவரின் சகோதரர்கள் எல்லாம் நல்லா இருக்கிறார்கள். இவரைத்தவிர.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு, படிப்பினை கதையை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் புத்தன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புத்தன் நல்ல பகிர்வு. நாங்களும் எம் சிறுபராயத்தில் 
வாயால வீணீர் ஒழுக முன் வரிசையில இருந்து மேளக்கச்சேரி பார்ப்போம். தட்சணாமூர்த்தி,கைதடி பழனியின்ர தவில் என்றால் 
அந்த மாதிரித்தான்.பஞ்சாபி கேசன்,பத்மநாதனின் நாதஸ்வர ஒலி
சொல்லி வேலையில்லை.
  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைக்கும் பாகுபாடு காட்டுற எங்கடை சனம் எவளவு மேதாவிகள் :rolleyes: .நன்றி புத்தன் பதிவுக்கு.

 

நன்றிகள் சஜிவன்

பருத்திதுறையிலை சின்மேளம் பேமஸ். சின்னனில பாட்டாவோடை பாத்தனான் . எங்கடையாக்கள் ஒருக்காலும் திருந்த மாட்டினம் . உங்டை கதைக்கு என்ரை வாழ்துக்கள் புத்தன் .

 

நன்றிகள் மைத்திரேயி

புத்ஸ்...

நீட்டி முழக்காமல் மெல்லிசா ஒரு குத்து குத்தியிருக்கிறியள் ஊசியாலை... :D

நல்ல ஆக்கத்திற்கு நன்றி.

 

நன்றிகள் இசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்,சாந்தி,லியோ,வாத்தியார்,வந்தியதேவன்,லியோ,புங்கையூரன்,தமிழ்சிறி,ஈசன் அனைவருக்கும் நன்றிகள் ...

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலாக சிறுவயதில் அரங்கேற்றம் பார்த்தது யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில். பார்வையாளர்களில் சிலர் அரங்கேற்றம் செய்பவரின் பெற்றோருக்கு தலையினைக் காட்டிவிட்டு அருகில் இருந்த றீகல் திரையரங்கில் படம் பார்க்கச் சென்றுவிட்டார்கள். சிட்னியில் சில அரங்கேற்றத்துக்கு போய் எப்ப தப்பிப்பிழைக்கலாம் என்று நினைத்ததுமுண்டு.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு நீங்களும் ஒரு மிருதங்க அரங்கேற்றம் செய்யலாமே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.