Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவாக்கெடுப்பு மற்றும் சர்வதேச விசாரணைகோரி லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்.

Featured Replies

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு
நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய
அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ,
சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற
உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாநிலை போராட்டம்
குறித்து அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே
நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை
நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

தற்போது 12 வயதான
சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை
ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகமும்,
ஐ.நா. மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளது. 4 வருடங்களுக்கு
பிறகு இன்றும் ஐ.நா. மன்றமும், சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை மூடி
மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே தமிழ் ஈழத்திற்கான
பொதுவாக்கெடுப்பு மட்டுமே ஈழ மக்களுக்கு ஒரே தீர்வு ஆகும்.

இப்போது
எங்களது கோரிக்கைகள் என்னவென்றால், இலங்கையில் நடைபெற்றது வெறும்
போர்க்குற்றமோ, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. அது திட்டமிடப்பட்ட
இனப்படுகொலை.

சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்புமே தமிழ்
மக்களுக்கான ஒரே தீர்வு இதற்கான தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து கொண்டு
வர வேண்டும். சிங்கள இனவெறி அரசின் துணை தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து
வெளியேற்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்தியா இலங்கை அரசுடனான அனைத்து
அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணை குழுவில் இடம்பெறக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஈழத்
தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால்
தமிழகத்தில் இருந்து எந்த வரியையும் செலுத்த மாட்டோம். இதற்கான
பிரச்சாரத்தில் மாணவர்களாகிய நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம் என்றனர்.

 


இன்று மேலும் ஒரு போராட்டம்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று (08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஜெனீவாவில்
இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு
ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று
(08.03.2013) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 அப்போது பேசிய
மாணவர்கள், இலங்கையில் லட்சக்கணக்கில் நம் தமிழ் மக்களை கொடூரமாக கொலை
செய்யப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் என்பதைவிட திட்டமிட்ட தமிழின
படுகொலை என்பதுதான் உண்மை. இதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு ஏன் மவுனம்
காக்கிறது என்பது புரியவில்லை. இலங்கை என்ற நாடு இந்தியாவுடன் ஒப்பிட்டால்
ஒரு குட்டி தீவுதான். அதற்கு ஏன் இந்தியா பயப்பகிறது?
ஜெனீவாவில்
நடக்கும் ஐ.நா. மன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை
தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண
வேண்டும். தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு. இதற்காக நாங்கள் கடைசி வரை
போராடுவோம். தமிழ் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.
இதற்காக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம் என்றனர்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13206:loyola-college&catid=36:tamilnadu&Itemid=102

இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் , 
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் , 
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

 

https://www.facebook.com/photo.php?fbid=613942675287253&set=pcb.613945318620322&type=1&relevant_count=2&ref=nf

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

நன்றி உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.... நன்றி தோழர்களே....

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை.இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சரவதேச விசாரணை வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பிரிட்டோ, சதீஷ், மணி, திலீப் உள்ளிட்ட 9 மாணவர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தினுள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

(வைகோவின் பதிவுகள்)

 

லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தினை துவக்கி இருக்கிறார்கள்... வாழ்த்துக்கள் தோழர்களே... 


நண்பர்களே நீங்கள் சார்ந்திருக்கிற நிறுவனம், கல்லூரிகள், தொழிற்சங்கம் சார்பாக போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். மாணவர்கள் தங்களது கல்லூரி நிர்வாகத்தினை மீறி போராட்டம் நடத்த வரும் பொழுது நமக்கும் துணிவு இருக்கவேண்டும். பின்பு அரசியல் கட்சிகளை குறை சொல்லிப் பயனில்லை. நாம் போராடாமல் சமூகப் போராட்டம் நிகழாது. அரசியல் கட்சிகள் அடையாளப்போராடங்களை மட்டுமே நடத்தும். நமது போராட்டத்தினை நாம் நடத்துவோம்.

 

Thirumurugan Gandhi

போராட்டங்களை நசுக்க சில சக்திகள் திட்டமிடும். அதையும் தாண்டி தொடர்ச்சியாக நடாத்தும் அனைவருக்கும் நன்றிகள்!

 

 

ஐ.நா. வாக்கெடுப்பு முடிந்தும் இவை தொடரவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் சாக வேண்டித்தான் வரும். இப்பொழுது சாகவும் விடமாட்டார்கள். தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் போட்டு விடுவார்கள். வேறு போராட்ட வடிவங்கள் பற்றி சிந்திப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நன்றி

கட்சிபேதம் இன்றி அனைத்து ஈழ உணர்வாளர்களும்

போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் மாணவமணிகளே....உங்களுக்கு உள்ள உணர்வுகூட .ஈழத்தவன் என்று பெயர்கொண்ட சிலருக்கு இல்லை...அதுதான் புதிய தலைமுறை  t,v  யில் 13+பாவித்து தீர்வு சொன்னவருக்கு....***

Edited by இணையவன்

லயோலா கல்லூரியில் உண்ணாநிலை தொடர முடியாத காரணத்தால்..

போராட்டம் கோயம்பேடு அருகில் மாற்றப்பட்டுள்ளது...

போராட்டம் தொடரும்........

  • கருத்துக்கள உறவுகள்
உறவுகளுக்கு நன்றி,
மாணவர் சக்தி மாபெரும் சக்தி ஒரு மாணவன் நினைத்தால் நிச்சயமாக கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.  
  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்றுஉள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

அப்போது பேசிய மாணவர்கள், இலங்கையில் இலட்சக்கணக்கில் நம் தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் என்பதைவிட திட்டமிட்ட தமிழின படுகொலை என்பதுதான் உண்மை. இதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு ஏன் மௌனம் காக்கிறது என்பது புரியவில்லை. இலங்கை என்ற நாடு இந்தியாவுடன் ஒப்பிட்டால் ஒரு குட்டி தீவுதான். அதற்கு ஏன் இந்தியா அஞ்சுகின்றது?

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றவாளி ஜனாதிபதி ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டும். தமிழ் ஈழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண வேண்டும். தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு. இதற்காக நாங்கள் கடைசி வரை போராடுவோம். தமிழ் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம். இதற்காக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம் என்றனர்.

protes0022025120020.jpg

 

இலங்கைத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரி மாணவர்கள் இன்றுஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொண்டு, பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணை தூதரகத்தை மூட வேண்டும், இந்திய அரசு இலங்கையுடன் வைத்திருக்கும் உறவை தூண்டிக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளிட்ட கோரி்க்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அங்கு படிக்கும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இதில் இலங்கை அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணை தூதரகம் அருகே உள்ள அக்கல்லூரி மாணவர்கள் ஜோ பிரிட்டோ, சண்முக பிரியன், பால்ஜூனத், லியோ ஸ்டாலின், திலீபன், பிரசாத், அனிஸ்குமார், ஆண்டனி ஷாஜி உள்பட 9 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://dinamani.com/latest_news/article1493483.ece

  • தொடங்கியவர்

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு
நடத்தக்கோரி சென்னை லயோலா கல்லூரி  மாணவர்களின்  தமிழீழ விடுதலைக்கான
மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா
கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன்,
சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 9
மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த    
காவல்துறையினர் அங்கு விரைந்து கல்லூரி அனுமதியின்றி வாளகத்தில் 
உண்ணாவிரதம் இருப்பதால் கைது செய்யபோவதாக கூறினார்கள். இதனை அடுத்து 
மாணவர்கள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதாவது மூவர் தூக்குதண்டனை க்கு 
எதிராக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தாம் தொடர்ந்தும் தமது போராட்டத்தை
முன்னெடுக்க போவதாக அறிவித்து தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம்
அருகாமையில் அப் போராட்டம் நடை பெற்றுக்கொண்டு உள்ளது . இதற்க்கு ஆதரவாக
உணர்வாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு வந்து தங்கள் ஆதரவை
தெரிவித்தவண்ணம்  உள்ளனர் .

இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து
அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே
நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை
நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.


தற்போது
12 வயதான சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது
இலங்கை ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச
சமூகமும், ஐ.நா. மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளது. 4
வருடங்களுக்கு பிறகு இன்றும் ஐ.நா. மன்றமும், சர்வதேச சமூகமும் இந்த
இனப்படுகொலையை மூடி மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே
தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மட்டுமே ஈழ மக்களுக்கு ஒரே தீர்வு
ஆகும்.

இப்போது எங்களது கோரிக்கைகள் என்னவென்றால், இலங்கையில்
நடைபெற்றது வெறும் போர்க்குற்றமோ, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. அது
திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

சர்வதேச விசாரணையும்,
பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு இதற்கான தீர்மானத்தை
இந்தியா முன்மொழிந்து கொண்டு வர வேண்டும். சிங்கள இனவெறி அரசின் துணை
தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இந்தியா இலங்கை அரசுடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

news2day.JPG

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13215:lolaya-college-students&catid=36:tamilnadu&Itemid=102

ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க 2 வது நாளாக கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டம் 
 
8/03/13 காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் , 

சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் , 

உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர் . இதில் 8 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர் . பின்பு மாலை நேரத்தில் காவல்துறை மாணவர்களை களைந்து செல்லும்படி மிரட்டினர் . கைது செய்வதாக கூறினர். அதனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தக்க வைக்கும் பொருட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள செங்கொடி திடலுக்கு  தங்கள் உண்ணா நிலை போராட்டத்தை மாற்றம்  செய்தனர் . இந்த இடத்தில தற்போது பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் பெரும் திரளாக வந்து மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . திரு வைகோ அவர்கள் இன்று காலை மாணவர்களை நேரில் சந்தித்துள்ளார் . 

 
உண்ணா நிலையில் இருக்கும் இலோயல கல்லூரி மாணவர்கள் விவரம் 
 
 
1.திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
 
2.ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு
 
3.அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
 
4.பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு
 
5.பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
 
6.மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு
 
7.சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
 
8.லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
 
போராட்டம் வெல்லும் வரை மாணவர்கள் உன்ன நிலையில் இருக்கப் போவதாக தெரிவித்தனர் . மேலும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மாணவர்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர் . 
 
 

537634_222825251197058_678636051_n.jpg

 

P1180307.JPG

 

P1180308.JPG

 

P1180306.JPG

 

vaiko+koyambedu.jpg

 

P1180332.JPG

 

 

 

 

http://newsalai.com/details/college-students-go-on-fast-for-the-2nd-day.html

  • கருத்துக்கள உறவுகள்

09-layalo-44-300.jpg

 

இலங்கை மீது நடவடிக்கை கோரி, சென்னை மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்!

சென்னை: இனப்படுகொலை நிகழத்திய இலங்கை மீது போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

"இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை..இந்த இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழம் அமைப்பது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

லயோலா கல்லூரிக்குள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியிருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு இடம் மாறினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

வாழ்த்துக்களும் நன்றிகளும் நட்புக்களே..

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

நன்றி உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்சக்தி மாபெரும் சக்தி.இவர்கள் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சிந்திப்பவர்கள்.மாணவர் போராட்டம் அரசியல்வாதிகளுக்கு தலைவலியாக இருக்கும்.வெல்லட்டும் மாணவர்போராட்டம்.நன்றி தொப்புள் கொடி உறவுகளே!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நீர்த்துப்போக செய்யும் குறுக்கு வேலைகளையும் மீறி, போராட்டம் பல்கிப் பரவிட வாழ்த்துக்கள்.

 

இந்நடவடிக்கையால் கல்லூரி படிப்பு சிறிதே தடைபட்டாலும், காலத்தின் தேவை கருதி, இன அழிப்பை தடுக்க, தமிழகத்தில் சொங்கியாய், மந்த நிலையில் உணர்ச்சியற்றிருக்கும் மக்களின் உணவுகளை தட்டியெழுப்பி, தீப்பொறியாய் பற்ற வைக்க ஒரு உந்து சக்தி இந்த மாணவர்கள்தான்.

 

என்ன செய்வது? தமிழனுக்கு எப்பொழுதுமே அடுத்தவன் இடித்துரைத்தால் மட்டுமே உறைக்கும்! :icon_idea:

Edited by ராஜவன்னியன்

உண்ணாவிரத பந்தலில் இருந்து உங்கள் ஊமை அழகிரி...


உறவுகளே வாருங்கள் ஓன்றுதிரள்வோம் ..
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்...

 

உண்ணாவிரதப்போராளிகளில் ஒருவன் தம்பி திலிபனின் அப்பா பேசியது கண்ணீரை வரவழைத்து விட்டது....

 

- முகநூல் நண்பர்

தமிழினம் காக்க காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் விபரம்"
=======================
1.திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு

2.ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு

3.அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

4.பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு

5.பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

6.மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு

7.சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு

8.லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

தமிழ்நாட்டு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழத் தமிழருக்கு புத்துணர்வைத் தருகின்றது- சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை..

 

65546_4451625818854_1991269952_n.jpg

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, லயோலா கல்லூரி மாணவர்கள், சென்னை கோயம்பேடு பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கை மிக மிக முக்கியமானது, வரலாற்று சிறப்பு மிக்கது. அமெரிக்க - இலங்கை ஒப்பந்தம் உருவாகி, தமிழீழத் தமிழர்களின் விடுதலை கோரிக்கையை அழிக்க இலங்கையோடு வெகு விரைவில் அமெரிக்காவும் கைகோர்க்க இருக்கும் நிலையில் , “ அமெரிக்கத் தீர்மானத்தினைப் புறக்கணித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து” என்கிற முழக்கம் தமிழகம், தமிழீழம், புலம்பெயர் என அனைத்து இடத்திலும் எதிரொளிக்க வேண்டும்.

 

 

இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்கிற பெயரில் எவ்வாறு இந்தியா தமிழர்களை காக்கிறோம் என்கிற பெயரில் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக தலைவிரித்து ஆடியதோ, அதே போன்றதொரு சூழல் தெற்காசிய பிராந்தியத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி உள்ளது. தமிழரின் பிரச்சனைகளை அமெரிக்க பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறது. ஒட்டகம் கூடாரத்தினுள் நுழைந்திருக்கிறது. 1987ல் இவ்வாறு இந்திய ஒட்டகம் நுழந்தபோது துரத்தியடிக்க தமிழர் படைகள் இருந்தன. இன்று நாம் மட்டுமே இருக்கிறோம். மக்களாக திரண்டால் மட்டுமே இதை வெல்ல முடியும். 2009இல் நம்மை பின்னுக்கு தள்ளிய ஆற்றல்களை நம்பி நாம் களம் காண முடியாது. நாமே ஆற்றல்களாக மாறுவோம்.


நீங்கள் நேர்மையான தமிழீழ ஆதரவாளர் என்றால் உங்கள் பகுதியில், பணியிடத்தில், கல்லூரியில் போராட்டத்தினை துவக்குங்கள்.

 

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான்

 

“ தமிழீழம் வெல்வது எனது காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை, அதற்காக என்னால் இயன்ற அனைத்து பங்களிப்பினை செய்வேன், இல்லையென்றால் சரித்திரம் என்னை மன்னிக்காது”.

 

தமிழீழத்தினை வெல்வோம். அதில் சமரசமில்லை.

 

திருமுருகன் காந்தி (முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.