Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால், 'யாழ்வாணன்' என்று வருகின்றது!

 

எப்பவாம் அகராதி மாறினது புங்கையூரான் ? :D

 

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணன்.. அசத்தியேவிட்டீர்கள்..! :D பாவம் வாத்தியார்.. முதலில் பேசிய குற்றத்திற்காக நார் நாராக கிழிபடுறார்.. :lol:

 

 

 

மரத்தில் நிறையக் காய் கனிகள் இருந்தால் கல்லெறி விழுவது வழமையே :icon_mrgreen: 

 

எதற்கும் உங்கள் அணியினரை கொஞ்சம் மாற்றிப் புதிதாக ஏதாவது

யோசித்துப் பேசச் சொல்லுங்கள் :D 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து, தும்பளையானின்

தும்பாயப் போய் விட்ட வாதங்களை சற்று ஆராய்வோம் நடுவர்களே. அவருக்கு எமது

தைரியப்புயல் கூறியது விளங்கவில்லை போலும். அதனால் தானோ என்னவோ எடுத்த

எடுப்பிலேயே குறைந்த சம்பளத்தில் நிறைவாக வாழ்பவர்கள் அரசாங்கத்தை

ஏமாற்றுகிறார்கள் அல்லது கள்ளமட்டை அடிக்கிறார்கள் எனக்கூறுகிறார். ஏன்

நடுவர்களே எதிரணியினருக்கு புலம் பெயர்நாடுகளில் நடக்கும் இவ்வாறான

ஈனச்செயல்களே அதிகம் தெரிந்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது இவர்கள்

கண்களுக்கு நல்லவை புலப்படுவதில்லை என்று.

எமதுதைரியப்புயல்

பெற்றோர் பிள்ளைகள் நெருக்கம்பற்றிக் கூறியதற்கு இவர் கூறுகிறார்

புலம்பெயர்தேசங்களில் அவ்வாறான நெருக்கம் இல்லை என்று - புலம்பெயர்ந்த

பின்புதான் எம்மவர்கள் ஊரிலிருந்ததை விட பிள்ளைகளுடன் அன்பாகவும்

மரியாதையாகவும் பழகுகிறார்கள், இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையேனும்

வெளிநாட்டுப்பயணம், சுற்றுலா என்றெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள் நண்பர்

தும்புவினதும் அவரது அணியினரதும் கண்களுக்கு இவை தெரியவில்லையா?

நடுவர்களே

பெரியோர்களே இவரது வாதத்தின் பெரும்பகுதியை இவர் எமது தைரிய லக்ஷ்மியைத்

தாக்குவதில் தான் செலவிட்டிருக்கிறார். அதிலிருந்து என்ன புலப்படுகிறது

என்றால் புலம்பெயர்ந்து வந்தும் இவர் திருந்தவில்லை என்பதுதான், அதாவது

இவரது ஆணாதிக்க வெறி அடங்கவில்லை என்பதுதான்

ஒரு ஆணாதிக்கம் நிறைந்த

சமூகத்திலிருந்து தோற்றம் பெற்ற ஒரு தமிழ் மகள் ஆணித்தரமாகத் தனது

கருத்துக்களை வைக்கிறார் என்றால் அது போற்றற்குரிய விடயம் என்பது நிச்சயமாக

நடுவர்களான உங்களுக்குப் புரிந்திருந்தாலும் பாவம் எங்கள்

தும்பளையானுக்குப் புரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமே.

புலம்பெயர்ந்த

இவராலேயே ஆணாதிக்கத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கும்போது, ஊரில்

இருக்கும் ஆண்களைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இவரும் இவரது

அணியினரும் கூறுவது போல் ஊரில் நாம் தொடர்ந்தும் இருந்திருந்தால் இவர்கள்

போன்ற ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் அங்கிருக்கும் பெண்களின் நிலை எப்படி

இருந்திருக்கும் என்பதையும் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள் அவையோரே!

நாம்

ஊரிலேயே இருந்திருந்தால் இன்று பல சாதனைகளைப் புரிந்திருக்கும் எமது

தமிழ்ப் பெண்களால் இச்சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? தாயகத்தில் பெண்கள்

தனியாக வாழக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா நடுவர்களே! அவ்வாறு தனியாக வாழும்

பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லையா

நடுவர்களே! ஏன் இன்னும் இவர்கள் கிணற்றுத் தவளைகளாக இருக்கிறார்கள்.?

தம்பி ஜீவாவின் வாதத்ததைப் பற்றிக் கூறும்போது,

சில

விடயங்கள் முடிந்த பின்னர்தான் அவற்றின் தார்ப்பரியங்கள் புரிகின்றது

என்றும், தான் புலம் பெயர்ந்த காரணமான உயர் கல்வி முடிவடைந்து விட்டது

என்றும் இவர் கூறினார். அப்படியானால் இவர் தாயகம் திரும்பிப்போக

வேண்டியதுதானே? அதை விடுத்து நாட்டுக்கு எந்த நேரமும் திரும்பிப் போகத்

தயாராய் இருக்கிறேன் என்று என்ன பித்தலாட்டம்?

யாருக்குக் கண்ணா காதில் பூச் சுத்துகிறீர்?

அவருடைய பித்தலாட்டத்திற்கு வக்காலத்து வாங்குமாய்ப் போல கனடா வந்த ஒருவரின் கதைவேறு.

நடுவர்களே!

எதிரணியினர் வாதிடுவது போல அங்கு சிறப்பான வாழ்வு இருந்திருக்குமானால்,

இவர்கள் ஏன் நாட்டை விட்டு வந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள். இவர்களால் அங்கிருந்து கொண்டு போதியளவு பொருளீட்டி

சிறப்பான வாழ்வை வாழமுடியாத காரணத்தினாலேயே புலம்பெயர் நாடுகளுக்குக்

குடியேறியிருக்கிறார்கள். பட்டப்படிப்பு முடித்த இவர்களாலேயே அங்கு

சிறப்பான வாழ்க்கை வாழ முடியாதிருக்கும்போது, வறுமைக் கோட்டில்

இருப்பவர்களைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கஞ்சியும் கூழும்தான்

இவர்களுக்கு சிறப்பான வாழ்வெனில் இவர்கள் ஏன் படிக்கவேண்டும்?

மேற்படிப்பிற்கெனவோ, பொருளீட்டவோ ஏன் புலம்பெயர்ந்திருக்க வேண்டும்

நடுவர்களே!

எதிரணியினர் வாதிடுவது போல், ஊரில் சிறப்பான வாழ்வு

இருக்குமாக இருந்திருந்தால் புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் ஊருக்குத்

திரும்பியிருப்பார்களே? ஏன் திரும்பவில்லை?அதிகபட்சம், முதியவர்களாவது

அங்கு சென்று வாழ்வார்களே. நடுவர்களே, இதிலிருந்தே புலம்பெயர் நாடுகளில்

நாம் மிகவும் சிறப்பாகவே வாழுகிறோம். இது அந்நிய நாடாக இருந்தாலும், எமக்கு

இங்கு எவ்விதக் குறைகளும் இல்லை. எமக்கிருக்கும் ஒரேயொரு கவலை, நாம் எம்

மண்ணை விட்டு, உறவினர்களை விட்டுப் பிரிந்திருப்பதே தவிர, அங்குள்ள

சிறப்பான வாழ்வை இழந்த கவலையில்லை.

தம்பி சுபேசின் வாதங்களை முறியடிக்க இவருக்கு வலு இல்லை போலும் அதனால் சேம் சைட் கோல் என்று கூறி ஒரு மழுப்பு மழுப்பப் பார்த்தார்.

நடுவர்களே உங்களிடமும் இவரிடமும் நான்கேட்பது என்னவென்றால்

இவரர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன,

"புலம்பெயர் தமிழரின் ஊர்பற்றிய கவலையானது நாம்புலம் பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்

என்ற கவலையே ????"

இவரது

தலைப்பில் ஊரிலியே இருந்திருந்தால் என்பது இறந்த காலத்தைக் குறிக்கிறது.

அதனால் தான் எமது அணியினர் அந்தத் தலைப்புக் குறிப்பது போல் நாம் எல்லா

வகைகளிலும் இவ்வளவு முன்னேறி இருக்க மாட்டோம் என்ற கருத்துப்பட எமது

வாதங்களை முன் வைக்கின்றோம். தமிழ் பேசினால் மட்டும் போதாது நடுவர்களே அதன

நன்கு கற்றுணர்ந்து பேச வேண்டும். இவர் போன்றவர்கள் பிறப்பார்கள் என்பதை

முன்கூட்டியே அறிந்திருந்ததாலோ என்னவோ அன்றே அந்த வள்ளுவப் பெருந்தகை

கற்கக் கசடற கற்பவை கற்றபின்

நிற்கஅதற்குத் தக

என்று எழுதிவைத்தார்.

அவையோரே! நடுவர்களே!

“புலம்பெயர் தமிழரின் ஊர்பற்றிய கவலையானது வெறும்பிரிவுகளின் கவலையே ??? ”

என்பது

தான் எனது ஆணித்தரமான வாதம். நடுவர்களே உங்களிருவரிடமும் ஏன் இங்கு

பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் எல்லோரிடமும் கூறுகிறேன். ஊரில்

சுமுகநிலை தோன்றினால் கூட எம்மால் ஊருக்குச் சென்று வாழமுடியாது என்பதே

யதார்த்தம்.

நீங்கள் எல்லோரும் புலம்பெயர் வாழ்வைத் துறந்து

ஊருக்குப் போவீர்களா? முடியாது என்பதை உங்கள் உள்மனம் நிச்சயமாக ஒத்துக்

கொள்ளும். ஏனென்றால் நீங்கள் எல்லோரும் புலம்பெயர் தேசங்களில் உங்களை

கால்களை நன்கு நிறுவி விட்டீர்கள். இந்த நிம்மதியான வாழ்வை விட்டு உங்களால்

இனிப் போக முடியாது. ஆகவே இனிமேலும் ஊருக்குத் திரும்பி

பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க உங்களால் முடியாது நீங்களும் புலம்பெயர்

வாழ்வில் நீங்கள்அனுபவித்த சுகஙகளைத் துறந்து,

பரம்பரைக் காணி

வாத்தியார் ஏங்கிய கேணி

பகலவன் முத்தமிடத் துடித்திட்ட மண்

தும்பளையான் தேடிய வெய்யில்

என்பவற்றுடன் உங்களால் நிச்சயமாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை

இன்று

அங்கு சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் புலம்பெயர் நாடுகளில்

உள்ள உறவினர்களின் உதவியினாலேயே சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஊரில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் நாமும் அங்கு

திரும்பிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விடும். அங்கு

சிறப்பான வாழ்க்கை இருக்குமாக இருந்திருந்தால் புலம்பெயர்ந்த தமிழர்களில்

பலர் நிச்சயமாகத் திரும்பியிருப்பார்கள் என்பதே உண்மை.

புலம் பெயர்

மண்ணில் தற்காலிகமாகவேனும் பெரும் பதவிகளை வகித்துக் கொண்டு - மெசின்

வாங்கித் தாங்கோ அத்தான், புட்டவிச்சுத் தாறன், இடியப்பம் அவிச்சுத் தாறன்

என்று கூறும் எம் நடுவர் போன்ற பெண்கள் தாயகம் திரும்பி அரிசி ஊறவைத்து,

உரலில் இட்டு மா இடித்து, இடியப்ப உரலாலும், புட்டுக்குழலாலும் அத்தானுக்கு

அவித்துப் போட மாட்டர்கள் என்பதே இந்த நூற்றாண்டின் மறைக்கப்பட முடியாத

உண்மை. யதார்த்தம் இப்படி இருக்கும் போது,

புலம்பெயர் தமிழரின் ஊர்பற்றிய கவலையானது நாம் புலம் பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்

என்றகவலையே

????" என்பதெல்லாம், புலம் பெயர் மண்ணில் நன்றாக உண்டு கொழுத்து வாழும்

எம் எதிரணியினர், தமது உடலில் இருக்கும் கொழுப்புக் கரைவதற்காக வைக்கும்

விதண்டா வாதமே அல்லாமல் வேறொன்றுமில்லை. என்று உறுதியாகக் கூறிக்கொண்டு,

புலம்பெயர்ந்த

தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது எமது மண்ணையும் மக்களையும்

பிரிந்திருப்பதே தவிர, அங்குள்ள சிறப்பான வாழ்வை இழந்த கவலையல்ல என்று

மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொண்டு இதுவரை நேரமும் என் வாதத்தை

செவிமடுத்த நடுவர்களுக்கும் என் கருத்துக்களை உள்வாங்கிய அவையோருக்கும்,

இனியும் தொடர்ந்து பேச வேண்டுமா இல்லையா என்று விழிகள் பிதுங்க வீற்றிருந்த

என் எதிரணியினருக்கும் இப்பட்டி மன்றத்தில் என் வாதத்தை முன் வைக்க

வாய்ப்புத் தந்த யாழ் நிர்வாகத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்

கொண்டு

வாழ்க தமிழ்

வளர்க யாழ் களம்

என்று வாழ்த்தியபடி அமர்கிறேன்

நன்றி

வணக்கம்.

 

 

 

நடுவர்களே மறுப்பு அறிக்கை ஒன்று விடவேண்டிக் கிடக்கு, என்ன மாதிரி செய்யலாம்.  யாழ் வாணன் அண் ணருக்கு தமிழில தட்டச்சு செய்யிறது தான் சிக்கல்  ^_^  எண்டு பாத்தா தமிழ வாசிக்கிறதும் பக்கிளடிக்குதே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் உரிமைக்குரல் நெடுக்ஸ் வந்து "ஊரில் ஆண்களின் உரிமை" பற்றி படங்கள், வரைபுகள், காணொளிகள் மூலம் கருத்தரங்கு நடாத்துவார் என வாசகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணன் யாழுக்கு புதிதானாலும் பட்டிமன்றத்துக்கு புதிதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாணன் யாழுக்கு புதிதானாலும் பட்டிமன்றத்துக்கு புதிதாக தெரியவில்லை.

 

கல்லூரிக் காலத்தில் ஏறிய மேடைகளை

கண்முன் நிறுத்திய பட்டி மன்றத்தில்

கிறங்கிய மனது குதூகலமிட்டது

கிடைத்த வாய்ப்பினை கைவிடல் முறையோ?

 

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நடுவர்கள் கோமகன், சு.மோ அக்கா,

வாதத்தில் பங்குபற்றும் இ.கலைஞன், தமிழச்சி, சுபேஸ், புங்கையூரன், ஜீவா, யாழ்வாணன், அர்சுன், வாலி, வாத்தியார், பகலவன், தும்பளையான், சாத்திரி, குமாரசாமி அண்ணா,

இவர்களுடன், யாழ் உறவுகள், நிர்வாகத்தினர், வாசகர்கள் ஆகியோருக்கு வணக்கம்!

 

எமது அணித்தலைவர் எனது வாதத்தை அடுத்ததாக வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

பட்டிமன்ற விதிமுறைகளை கவனித்தபோது அதில் அரசியல், போராட்டம் சம்மந்தமான விடயங்களை தவிர்க்குமாறு கேட்கப்பட்டு உள்ளது. இதை பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள எனது விருப்பத்தை தெரிவித்தபின்னரே கவனித்தேன்.

 

உண்மையில் பட்டிமன்றத்தின் கருப்பொருளை பார்த்தபோது எனக்குள் சிலகாலமாக ஓடிக்கொண்டிருந்த ஓர் விடயத்தை அழுத்தமாக சொல்லவேண்டும் போல் இருந்தது. இதனாலேயே, ஆரம்பத்தில் எந்த அணிகளிலும் சாராது கருத்தை கூறுவதற்கு ஓர் வாய்ப்பு கேட்டேன். நான் கூறவந்தவிடயம், சொல்லநினைத்தவிடயம் இயலுமானவரை ஓர் அணிசார்ந்து வாதிடும் போது மறைந்து விடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டிய ஓர் தேவை உள்ளது, அதேசமயம் எமது அணியினரின் வாதத்தையும் வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, அத்துடன் பட்டிமன்ற விதிமுறைகளையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இந்த மூன்று விடயங்களையும் முக்கியமாக கவனத்தில் வைத்து விரைவில் எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

 

எனது தந்தையின் முப்பத்து ஒன்று கிரியைகள்  வரும் செவ்வாய்க்கிழமை வருகின்றது. மற்றும், அவரின் மறைவுடன் பல்வேறு காரியங்களில் மிகுந்த தேக்க நிலையேற்பட்டு விட்டது. இதனால், உடனடியாக எனது வாதத்தை வைக்காவிட்டாலும் பட்டிமன்ற விதிமுறையில் கூறப்படும் கால அவகாசத்தின்படி (ஏழு நாட்கள்) வரும் வியாழக்கிழமை முன் எனது வாதங்களை முன்வைக்கின்றேன். உங்கள் பொறுமைக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்.. :D

 

இதுமட்டும் எதோ ஓடுப்பட்டு திரிஞ்சவராம்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணாவின் வாதம் பசிலன் 2000 குமரப்பா..... என்று எல்லாம் கலந்த எறிகணை தாக்குதலா இருக்க போது எதிரணி காரங்க நிலை எடுக்க பதுங்கு குழி எல்லாம் பத்தாது........

என்ன நடக்க போகுதோ???

:(:D

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் எதிர் அணியிட்டையும் இந்தியாவின் அர்ஜுனா டாங்கி மாதிரி..... சும்மா எல்லாத்தையும் தூக்கி அடிச்சு முன்னேற அர்ஜுன் அண்ணாவும் இருக்கிறார்

வில்லுக்கு அர்ஜுனன்

விவாதத்துக்கு யாழ் கள அர்ஜுன்

என்ட மாதிரி அந்த பக்கம் இருந்தும் அதிர போகுது.......சும்மா அதிர போகுதில்ல......

:D

இவர்கள் மட்டும்மா

இசை அண்ணாவின் பக்கம் special task force மாதிரி இன்னும் ஒராள் training எடுத்திட்டு காத்து இருக்கார் தன்னோட அதிரடி பாச்சலுக்கு.....

வேற யாரா இருக்க முடியும்?

புங்கை மண் பெற்ற பொன் மகனாம்......

சிட்னி மண்ணின் தங்க தமிழ் மகனாம்

என்று சொல்லக்கூடிய புங்கை அண்ணா நிக்கிறார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே கமராவ திருப்பி யாழ் வாலி அண்ணா அணி பக்கம் சூம் பண்ணி பாத்தால் இந்தா பார் பாயூரன் எண்டிட்டு பதுங்கி இருந்து தாக்குதலில் பெயர் போனவரும்.... புலம்பெயர்ந்த வாழ்கையின் அவலங்கள் பலவற்றை தன் பக்கம் வைத்திருப்பவரும்........ ஒரு முறையாவது தான் பிறந்து வளர்ந்த மண்ணை முத்தம் இட முடியாத என்று தவிப்போடு இருப்பவர்.....

இவரு

மானிப்பாய் பெற்றெடுத்த மன்னவராம்......

யாழ் களத்தின் மூத்தவராம்.....

சாத்திரி அண்ணா இருக்காக.....

:D

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்களா இருக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்....

ஆனா சும்மா சாதாரண ஆக்களா நடுவரா இருக்காங்க......

திருவள்ளுவர் தனை தனக்கு வழிகாட்டியாய் கொண்டவராம்

தினம் யாழில் சுயபடைப்பு தருபவராம்.....

அவர் தான் எங்கள் கோப்பாய் பெற்ற கோமகனாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் எதிலும் பெண்களுக்கு சம உரிமை என்று பேச்சோட மட்டும் நிண்டா போதுமா? நாங்க வெறும் பேச்சோட மட்டும் இல்லை செயலிலும் காட்டுவம்ல.....யாழ்னா சும்மா வா? பெண் நடுவரும் இருக்காங்கல்ல...... அதுவும் யாரு.....இருக்கும் போதே என்ன ஒரு கம்பீரம்.....அணிகளிடம் அன்பு கலந்த கண்டிப்பு.....

இணுவை மண் பெற்ற இணையிலா தமிழ் மகளாம்.......தமிழர் பண்பாடு தனை அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்லும் மெசொபத்தேமியா..... சுமேரியராம்.....

  • தொடங்கியவர்

கரும்பு எதிரணிக்கு இனிக்குமா ???? கைக்குமா :lol: :lol: :D ????

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு ஆறுதலாகத் தன் வாதத்தை வைக்கட்டும். யாழ் வாலி அவர்களே! உங்கள் அணியில் வேறு ஒருவர் கரும்புக்கு முன்னர் கலந்துகொள்ளலாமே? அது கால
விரையத்தைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே, நமது உறவுகள் (நான் உள்பட) தமிழக மாணவர் போராட்டத்துக்கு உணர்வுபூர்வமாக ஆதரவு தந்துகொண்டிருக்கும் நிலையில் ஓருசில நாள்கள் பொறுத்தால் என்ன?

 

இதுபற்றிய கருத்துக்களை பட்டிமன்ற அமைப்பாளர் சுண்டலிடமும் எதிரணி, எமதணி உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றம் அதன் போக்கிலேயே போகட்டும்..! யாழ்வாலியின் கருத்தை ஆமோதிக்கிறேன்..!

வாலியின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் 

  • தொடங்கியவர்

பட்டிமன்ற விதிகளின்படி ,  யாழ்வாணன் தனது வாதத்தை வைத்தபின்பு எதிரணித்தலைவர் யாழ்வாலியால் அழைப்பு விடுக்கப்பட்டு கரும்பு ஒரு கிழமை கால அவகாசம் கேட்டுள்ளார் . எனவே விதிகளின்படி கரும்பு தனது வாதத்தை ஆரம்பிக்கும் வரை நாம் பொறுமைகாப்பது அவசியமாகின்றது .

 

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்ற விதிகளின்படி , யாழ்வாணன் தனது வாதத்தை வைத்தபின்பு எதிரணித்தலைவர் யாழ்வாலியால் அழைப்பு விடுக்கப்பட்டு கரும்பு ஒரு கிழமை கால அவகாசம் கேட்டுள்ளார் . எனவே விதிகளின்படி கரும்பு தனது வாதத்தை ஆரம்பிக்கும் வரை நாம் பொறுமைகாப்பது அவசியமாகின்றது .

சரி பட்டி மன்ற இடைவெளியை நிரப்ப ஒரு ஜோக்.....

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.

நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,

'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..

சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார்,

'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

:( :( :D

  • கருத்துக்கள உறவுகள்

மிக குண்டான ஒரு சர்தார்ஜிக்கு டாக்டர் சொன்னார்'தினமும் 8 கிலோ மீட்டர் வீதம் 300 நாள் ஓடினால் 34 கிலோ வரை எடை குறையும்.பின்னர் வந்து பாருங்கள்'300 நாள் கழித்து ச.ஜி டாக்டருக்கு போன் பண்ணார்'டாக்டர் நான் 34 கிலோ குறைந்து விட்டேன்.ஆனால் வீட்டிலிருந்து 2400 கிலோமீட்டர் தள்ளியிருக்கேன் எப்படி வருவது?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தார்ஜி புது கார் ட்ரையல் பார்க்க எடுத்துட்டு போனார்.வெகு நேரமாகியும் காணவில்லை என்று மொபைலில் கேட்டபோது “ அடப் பாவிகளா முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, பின்னால வாரதுக்கு ஒரு கியர்தான இருக்கு” அப்டின்னாராம்.

:D :d

  • தொடங்கியவர்

கடுப்படிக்கிறாங்கையா......... கடுப்படிக்கிறாங்கையா ............................. :icon_mrgreen:

 

ஒரு குளத்தில இருபது எறும்புங்க குளிச்சிட்டு இருந்தது. அப்போ அங்கே ஒரு யானை வந்தது. (எறும்புன்னதும் யானை அங்கே வந்தாகணுமே!) 
யானை குளத்தில டைவ் அடிக்குது. ( இது கதை. யானை கூட டைவ் அடிக்கும். கண்டுக்கப்படாது!) 
உடனே பத்தொன்பது எறும்பு கரையில விழுந்தது. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல விழுந்தது. ( அது எப்படின்னு கேட்கப்படாது)
அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்கு மாப்பிளே!!" 
( கான்பிடன்ஸ் மச்சி... கான்பிடன்ஸ்!!) :lol: :lol: :lol: .
 
 
ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப் படும்.
 
இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்
சொரிந்தபின் துன்பம் தரும்.
 
எல்லா விளக்கும் விளக்கல்ல எரியாத
Municipality விளக்கே விளக்கு.
 
போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்கு தக.
 
:lol: :lol: :D :D 
 
 

Edited by கோமகன்

ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப் படும்.
 
பொருள்? :unsure: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.