Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் உதயன் பணியகத்தினுள் துப்பாக்கிச்சூடு – அச்சு இயந்திரங்கள் தீயிட்டு அழிப்பு

Featured Replies

யாழ்ப்பாணத்தில் உதயன் பணியகத்தினுள் துப்பாக்கிச்சூடு – அச்சு இயந்திரங்கள் தீயிட்டு அழிப்பு

 

[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:38 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]

 

uthayan.jpg

 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் தலைமைப் பணிமனைக்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத ஆயுதபாணிகள், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், அச்சுக்கூடத்தையும் தீயிட்டு எரித்துள்ளனர். 

யாழ்.நகரில், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் தலைமைப் பணியகத்தில், நாளிதழ் விநியோகப் பணி மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, இன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பாதுகாப்பு அதிகாரிகளையும், பணியாளர்களையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விட்டு, அச்சுக் கூடப் பகுதிக்குள் நுழைந்த ஆயுதபாணிகள்,அச்சு இயந்திரங்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதன் பின்னர், தாம் எடுத்து வந்திருந்த பெற்றோலை ஊற்றி அச்சு இயந்திரங்களையும், அச்சுத்தாள்களையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

சிறிலங்கா படைகளின் இறுக்கமான பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் யாழ்.நகர மத்தியில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2006ம் ஆண்டு உதயன் பணிமனைக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

http://www.puthinappalakai.com/view.php?20130413108099

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

உதயன் பிரதான அலுவலகத்தில் விசமிகள் அட்டகாசம்;அச்சு இயந்திரங்களும் எரிப்பு அதிகாலை சம்பவம்

b5114808bb004e20e10458152634286c.jpg

உதயன் பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்தில் வழமை போல் இன்றும் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேளை அதிகாலை 4.45மணியளவில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்தனர்.

 

அங்குள்ள அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி  அச்சு இயந்திரங்களையும் , அச்சுத்தாள்களையும்  கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

552656_115476615316950_424908108_n.jpg

 

558115_115476808650264_608575047_n.jpg

 

563751_115476015317010_1820393802_n.jpg

 

DSC(3).jpg

 

 

534873_115476471983631_1097645875_n.jpg

http://onlineuthayan.com/News_More.php?id=146791969513423009

  • தொடங்கியவர்

உதயன் பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்

 

13. 04. 2013, சனிக்கிழமை, தமிழீழ நேரம் 6:41

 
 
 


உதயன் பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோர் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.

uthayan.jpg

 

யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை நிறுவன பிரதான காரியாலயத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பணியாளர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக்கூடப் பகுதிக்குள் நுழைந்தவர்கள் அச்சு இயந்திரங்களையும் பெற்றோர் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.

அத்துடன் உதயன் வளாகத்திற்குள்ளும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

Uthayan office in Jaffna set on fire

SATURDAY, 13 APRIL 2013 07:36
 
 
 
The printing section of the Uthayan Tamil newspaper office in Jaffna has been set on fire by an unidentified armed group at around 5 am today, sources said.

Accordingly, three armed men first threatened the security guard of the office and later opened fire at the computers as well as the printing machines, before set on fire them.

Few weeks ago an unidentified group attacked the Kilinochchi office of the Uthayan newspapers injuring at least three persons and damaging a van.

http://www.dailymirror.lk/news/28098-uthayan-office-in-jaffna-set-on-fire.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆக்கிரமிப்பாளர், இருக்கும் வரை.... தமிழ்ப் பத்திரிகை அலுவகங்களை கொழுத்துவது வழமை.
ஆனால்.. வடக்கில், வசந்தம், பின்பும் கொழுத்துகின்றார்கள்... போக்கிரிகள்.
தமிழன், வாயையே... திறக்கக் கூடாது என நினைத்து விட்டானா? டக்ளஸும், அவனது மெய்யடியார்களும்.

*****************, தன்ரை... பத்திரிகையையே...... கொழுத்துகள்.

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
சில நொடிகளில் செய்திகள் உலகின் எந்த மூலையை அடையும் காலத்தில் மக்கள் வாழும் போது பத்திரிகையை எரிப்பதும் பயமுறுத்துவதும் சிறிலங்கா அரசின் மூடத்தனத்தையே காட்டுகிறது.
 
புலிகள் பற்றி விமர்சனம் என்ற போர்வையில் நஞ்சை கக்குபவர்கள் இத்தைகைய தாக்குதல்கள் பற்றி கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் தங்களின் சுயமுகத்தையும் காட்டி விடுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

கலி முத்தியிட்டுது....விரைவிலை அழியப்போகுதுகள்...ஆப்பு வைக்கவெண்டே பிறந்த கூட்டம்..இந்தியக் குழுவை சந்திச்ச இரண்டு சின்ன மேள காரியளின்டை கதையக் கேட்க ....எமது இனமே மருந்து குடிக்கவேணும் போல கிடக்கு....என்ன செய்வது எல்லாம் விதி

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் தாக்குதல் - அச்சு இயந்திரப் பகுதி பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது :

13 ஏப்ரல் 2013
குளோபல்தமிழ்ச்செய்தியாளர்

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சரவணபவனுக்கு சொந்தமான உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்.நகரின் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்தில் வழமை போல் இன்றும் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேளை அதிகாலை 4.45மணியளவில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்தனர்.
 
அங்குள்ள அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி  அச்சு இயந்திரங்களையும் , அச்சுத்தாள்களையும்  கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.
 
முன்னதாக அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அங்கிருந்த பணியாளர்களை விரட்டிவிட்டே அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.அத்துடன் நாளைய தினம் வெளிவரவுள்ள வார இதழுக்காக அச்சிடப்பட்ட நிலையிலிருந்த கட்டுரைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சம்பவம் இடம்பெற்ற வேளை பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வெளியேறியிருந்தனர்.அதனால் சொல்லிக்கொள்ளத்தக்க உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.
 
தாக்குதலாளிகளது பிரதான நோக்கம் பத்திரிகையினை நிறுத்துவதேயாகுமென நம்பப்படுகின்றது.தொடர்ச்சியாக விநியோகப்பணியாளர்களை தாக்குவது பத்திரிகை பிரதிகளை தீக்கிரையாக்குவதன் தொடர்ச்சியாக அலுவலகத்தினுள் புகுந்து அச்சியந்திரங்களை தீக்கிரையாக்கும் கட்டத்pனை எய்தியுள்ளது.
 
முன்னதாக குறித்த அலுவலகத்தினுள் உட்புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலொன்றினில் இரு பணியாளாகள் பலியானதுடன் மேலும் பலர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வருட ஆரம்பம் முதல் தற்போது வரை பத்திரிகை மீது நான்கு தாக்குதல்கள் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90708/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று கருத்துகளை மதிக்க பழகாத வரை.

இது ஒரு அடாவடித்தனம் போன்றுதான் தெரியும்.
 
தயவு செய்து மாற்று கருத்துக்களை மதிக்க பழகுங்கள்.
உதயன் பத்திரிகை சுயமகா இயங்க வேண்டும் என்பது உங்களுடைய கருத்து.
 
தீயிட்டு கொளுத்தவேண்டும் என்பது எங்களுடைய மாற்று கருத்தாகும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாற்றுகருத்து என்றால்...பெரும்பான்மை இனத்திடம்..மண்டியிட்டு  நக்கி பிழைப்பதா......அந்த அடிவருடல் வேலைகளை  ஆதரித்து ..பாராட்டி பத்திரிகையில்  போட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாற்றுகருத்து என்றால்...பெரும்பான்மை இனத்திடம்..மண்டியிட்டு  நக்கி பிழைப்பதா......அந்த அடிவருடல் வேலைகளை  ஆதரித்து ..பாராட்டி பத்திரிகையில்  போட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

சொந்தமாக  சிந்தித்து செயற்பட தெரிந்தால் .... உங்களைபோல் நாமும் வேலைக்கு சென்று உழைச்சு சாப்பிடுவோம் தானே?

 
எமக்கு சொந்தமாக எந்த கருத்தும் இல்லை.
புலிகளின் அருவருடிகலான நீங்கள் எதை சொல்கிறீர்களோ அதை நாம் மாற்றி சொல்வோம்.
அதாவது "மாற்று கருத்தை" சொல்வோம்.
எமக்கு இலக்கிய விழாக்கள் இவற்றில் ஈடுபாடு இல்லை. அவப்போது நாமும் இருக்கிறோம் என்று காட்ட ஓரிடத்தில் கூடுவோம்.
எமது இலக்கியங்களை வாங்கி பருக இலக்கிய பற்றா குறை மனிதர்கள் வருவார்கள்.
அவர்கள் எமக்கு இலகுவான கிளாஸ்களில் பருக்குவார்கள்...
அவர்களுக்கு நாம் இலக்கியம் பருக்குவோம்.

நன்று, தங்கள் தலையில் தாமே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார்கள், ஏற்கனவே உலக நாடுகளுக்கிடையில் பத்திரிக்கை சுதந்திரம் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளது இப்படியான செயற்பாடுகள் அவ்விடத்தை தக்க வைத்துகொள்ள மேலும் உதவும்

 

என்ன மாற்றுகருத்து என்றால்...பெரும்பான்மை இனத்திடம்..மண்டியிட்டு  நக்கி பிழைப்பதா......அந்த அடிவருடல் வேலைகளை  ஆதரித்து ..பாராட்டி பத்திரிகையில்  போட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

 

அண்ணை, பயப்படாதீர்கள். :D

மாற்று கருத்து என்ற பெயரில் புலிகளுக்கு எதிராக கருத்து வைக்கும் நபர்கள் பற்றி நக்கலடித்து வேணுமென்று தான் மருதங்கேணி அண்ணா அப்படி எழுதியுள்ளார். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தக்கு புரியக்கூடிய  ஒரே மொழி.......................??

அதைத்தான் சிங்களம் தேடுகிறது

அதற்கான இரையைத்தான் போட்டபடியுள்ளது

 

ஆனால் வலிகளைச்சுமந்த தமிழ் மண் இன்னும் எத்தனை  காலம் இவற்றை சகித்துக்கொள்ளும்.........???

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை தாக்குதல்… இலங்கைக்கு வைகோ கண்டனம்.

 

13-vaikospeech-300.jpg

 

சென்னை: இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையான உதயன் அலுவலகத்திற்குள் புகுந்த சிங்கள ராணுவத்தினர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி பத்திரிக்கைக்கு தீவைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 

இன்று (ஏப்ரல் 13ஆம் தேதி) அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குண்டர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இன்று நடந்த தாக்குதலை சிங்கள இராணுவத்தினரே செய்துள்ளனர்.

 

2006 ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி, இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இந்த யாழ்ப் பகுதி சிங்கள இராணுவத்தின் ஜெனரல் ஹத்ரு சின்கா கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் இரணில் விக்கிரம சின்கா அண்மையில்தான் குற்றம் சாட்டினார்.

 

நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் சிங்களவர்களால் தாக்கப்பட்டது. அதுவும் இராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது. கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை. தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் சிங்கள இராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும்.

 

உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவண பவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், சிங்கள இராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவமும் போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

 

இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது. மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் சிங்கள அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/13/tamilnadu-vaiko-condemn-udayan-news-paper-office-attack-jaffna-173394.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு பாசிசவாதிகளும்.. சிங்களப் பேரினப் பயங்கரவாதிகளும் இப்படிச் செய்வது இது முதல் முறையல்ல. இப்படி பல ஏடுகளை எரித்துவிட்டு புலிகள் மீது பழிபோட்டு தப்பித்து வந்திருக்கிறார்கள். இப்போ.. யார் மீது பழியோ..??!

 

அதுவும் அண்மையில் அமெரிக்க தூதுவர் உதயன் மீதான கிளிநொச்சி தாக்குதலுக்கு பிரத்தியேக கண்டனங்களைத் தெரிவித்த பின் இது நடந்துள்ளது.

 

உதயன் மற்றும் ஈழநாதம்.. மீது போர் விமானத் தாக்குதலைக் கூட சிங்களப் பயங்கரவாதிகள் போர் காலங்களில் திட்டமிட்டு நடத்தி இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்ப சும்மா விடுவார்களா..??! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பிரச்சினைகளை உருவாக்கி எண்பதுகளில் இருந்த நிலைமைகளை உருவாக்க நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை அரசபயங்கரவாதிகள் மேற்கொண்டாலும் அத்தனை தாக்குதல்களுக்கும் அஞ்சி பத்திரிகையை மூடிவிடாது தொடர்ந்து தனது பணியினை செய்வதன் ஊடாக உதயன் பத்திரிக்கை சிங்கள அரசின் பயங்கரவாதிகளின் நோக்கத்தை  தவுடு பொடியாக்கி உள்ளது. 

 

இதே உதையன் பத்திரிக்கையை மகிந்தாவுடன் சம்ந்தப்படுத்தி 2 கிழமைக்கு முன் ஒரு பதிவு யாழில கண்டனால் :lol:  அதுக்கு பல புலம் பெயர் தேடியவாதிகள்  நக்கலாக உதையனை எழுதினார்கள் ஆனால் இப்ப  -----

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய சிந்தனையை அடக்கி ஒடுக்கி அழிக்கும் முயற்சிகளில் ஒன்றாகத்தான் இத்தகைய செயல்களைப் பார்க்கவேண்டும். உதயன் பத்திரிகையும், அதன் பணியாளர்களும் தாக்கப்படுவது தாயகத் தமிழர்களின் குரலையும் பறித்து மெளனிக்கும் செயற்பாடு. இதை எல்லாம் சர்வதேசம் தட்டிக் கேட்கும் நிலைமை இன்னும் வரவில்லை.

புலிகளை சிங்கள அரசு பயங்கரவாதிகள் என்பதும் அதை நம்பி தமிழர்களை அடக்க அழிக்க உதவியவர்களும் மேலும் ஒருதரம் நிர்வாணமாக்கப்பட்டு நடுவீதியில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

இது சந்தேகத்துக்கு இடமானது. போரால் பாதிக்கப்பட்ட வன்னிமக்களை மாடுமேய்பவர்கள் என்று விழித்து எழுதிய உதயனின் மேட்டுக்குடித் திமிர்த்தனம் வெளிப்பட்டதால் அதிலிருந்து தன்னை மீள தக்கவைத்துக்கொள்ள எந்த நாடகம் வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள் என்பது எனது தனிப்பட்ட சந்தேகம். மையவாதிகளும் பேரினவாதிகளும் கூட்டுக்களவாணிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

யார் தாக்கியவர்கள் என்று தெரியாத நிலையில் ஒவ்வொருவரும் ராணுவம் ஒட்டுக்குழு என்று தத்தமது மனதில் தோன்றியதை எழுதுவதுபோல் எனது மனதில் தோன்றும் சந்தேகம் இது மற்றபடி எதுவேண்டுமானலும் உண்மையாய் இருக்கலாம். அது கடவுள் ஒருவனுக்கே தெரியும்.

இன்றைய விக்கிலீக்ஸ் காலகட்டத்திலும் ஒரு ஊடகத்தின் வாயை அடைக்க முனைந்தால் உண்மை மறைக்கப்பட்டு விடும் என்று நினைக்கும் வங்குரோத்து சிந்தனை கொண்டவர்களால் இச் செயல் நிகழ்த்தப்பட்டு இருக்கு.

 

சில நொடிகளில் செய்திகள் உலகின் எந்த மூலையை அடையும் காலத்தில் மக்கள் வாழும் போது பத்திரிகையை எரிப்பதும் பயமுறுத்துவதும் சிறிலங்கா அரசின் மூடத்தனத்தையே காட்டுகிறது.
 
புலிகள் பற்றி விமர்சனம் என்ற போர்வையில் நஞ்சை கக்குபவர்கள் இத்தைகைய தாக்குதல்கள் பற்றி கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் தங்களின் சுயமுகத்தையும் காட்டி விடுவார்கள்.

 

நியாமான கருத்து இதற்க்கு பதில் தர யாரும் வரமாட்டார்கள்

 

 

  • தொடங்கியவர்

இது மிசேல் சிசனின் பேச்சுக்கு நடந்த பாடம். சீனாவுக்கு பயந்த மேற்குநாடுகள் தமிழ் மக்களை கேடயமாக வைத்து அழித்துவிட்டு அது புலிகள் என்றார்கள். இப்போது மிசேல் சிசனின் பேச்சு நமக்கு விழும் அடிகளுக்கும் அது உதயன் கீழ் சாதிகளை தூற்றி எழுதியது. அதனால் தான் இது நடந்தது என்று கோழைத்தனமாக கூறிவிட்டு தப்புவார்களாக்கும்.  <_<



தென் கொரியாவை வடகொறியாவுக்கு அமெரிக்காவால் விட்டுக்கொடுக்க முடியாது. இதனால் அங்கு சீனாவின் உறவு வேண்டும். இங்கே சீனாவுக்கு விட்டுக்கொடுத்துவிடுவார்கள் போலுள்ளது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.