Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன சின்ன ஞாபகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு

மத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்னேறினர்.

உழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில்

சுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது.

வன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்கூடிய சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தது.நானும் ஒரு சிற்றிதழின் ஆசிரியராகவும் பொறுப்பாகவும் இருந்தேன். இதழின் பெயர் "விழி" மாதாந்த மருத்துவ இதழ்.இதழாசிரியராய்  இருப்பது போன்று பொறுப்பாய் இருப்பதும் சுமையானது. அச்சடித்த புத்தகங்களை விநியோகித்து கைகடிக்காமல் பார்த்தால்த்தான் அடுத்த இதழை வெளிக்கொண்டுவரமுடியும்.வன்னி போக்குவரத்து கடினமான பகுதி,

எல்லா குடியிருப்புக்களுமே தூர இடைவெளியில் இருக்கும்.அநேகரின் பொருளாதார நிலைமை சராசரி வாழ்வாகவே இருக்கும்.இவற்றுக்கு ஈடுகொடுத்து ஒரு இதழை பின்புல பலமற்று வெளியிடுவது ஓரளவு சவாலானதுதான். 2000ஆம் ஆண்டில் மருத்துவ இதழ் வெளியிடவேண்டும் என்ற அவா தோன்றிற்று.அப்பொழுது நாங்கள் அக்கராயனில் இருந்தோம்.

இதழை வெளியிடுவதற்கான பதிப்பகத்தையும் தெரிவு செய்தோம் .அந்த (கன்னிநிலம் பதிப்பகம்,ஸ்கந்தபுரம் )பதிப்பகம் இயக்கத்தின் ஒரு பிரிவின் கீழ் இயங்கியது.அது அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பத்திப்பகம் . என் ஞாபகத்தில் அப்போது கொம்புயுட்டரின் துணையுடன் அச்சடிக்கும் பதிப்பகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் வரவில்லை.அந்த பதிப்பகத்தின் முகாமையாளராய்   பாண்டியனார் அண்ணா இருந்தார்.எனக்கு அவரை முன்பு தெரிந்திருக்கவில்லை.பாண்டியனார் அண்ணா என்றால் அளவான கதை,கடமையில் மட்டுமே கண் ,எளிமை,நல்ல தமிழறிவு இதுதான் அவர்.நான் பதிப்பகத்தை தெரிவு செய்துவிட்டேன்.   பாண்டியனார் அண்ணா விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி அண்ணையின் அண்ணன்.ஒரு பிரமச்சாரி.தமிழ்நாட்டு அரசியலில் நன்கு பரிச்சயமாய் இருந்தார்.பெரியார்,அண்ணா,காமராஜர் ஆகியோரில் மதிப்பு வைத்திருந்தார்.அவரது அச்சகம் என்பது வெறும் இரும்புதான் .ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் . பிரச்சனை தீரும்வரை சாப்பிடாமல் ஆட்களை வைச்சு வேலை செய்வார்.அவரது அச்சகத்தில் இருந்து இயக்கத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக்கு உரிய படிவங்கள் உள்ளீடாய் பல படிவங்கள் அச்சிடப்படும். அச்சுக்காய்கள் தேய்ஞ்சு அச்சிட சரியாய் கஸ்டப்பட்டார். எப்படியிருந்தாலும் சொன்ன சொன்ன நேரத்திற்கு அவரது ஓடர்களை செய்துகொடுப்பார். சமாதான காலத்தில் கொம்புயுட்டர் அச்சிடுதல்கள் எல்லாம் வந்த போதும் பாண்டியனார் அண்ணாவின் அச்சகத்தையே பயன்படுத்தினோம்.

எங்களுக்கு அச்சிடும் இதழ்களை மாதத்தின் கடைசி நாள் தரவேண்டும்.நாங்கள் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை வெளியிட்டோம் .ஒரு தடவை கூட அவர் பிந்திதரவில்லை.வன்னியில பல நிறுவனங்களில் முதலாம் திகதிதான் மாதக்கூட்டம் நடக்கும்.அந்த கூட்டங்களில நாங்கள் விநியோகிக்க வேண்டும்.ஒவ்வொரு இதழும் 1350இல் இருந்து 2000பிரதிகள் வரை அச்சிட்டோம்.சில சிறப்பு இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது.  அறுவதாவது இதழ் வெளியீடு கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் வெளிட்டுவைத்தார்.விழி மருத்துவ இதழில் வந்த தங்கள் ஆக்கங்களை   உரிய எழுத்தாளர்கள் ஐவர் புத்தகங்களாய் வெளியிட்டு இருக்கிறார்கள். அன்புச்செல்வனின் இரண்டு தொடர் கட்டுரைகளும்,செல்வியின் விஞ்ஞானக்கட்டுரைகளும்  புத்தகமாக்கப்பட இருந்தன.தொண்ணூற்றி ஆறாவது இதழுக்கான வேலைகள் நடக்கும் போது அச்சகம் ஸ்கந்தபுரத்தில் இருந்து விசுவமடுக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. மீண்டும் அச்சகம் இயங்க போர் அனுமதிக்கவில்லை.

 

 ஒரு இதழை பதினைந்து ரூபாய்க்கு விற்றோம்.எங்களுக்கு அச்சிட பதின்மூன்று ரூபாய் முடியும் . விற்பவருக்கு ஒரு இதழுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தோம் .சிறப்பு இதழ்களில் கொஞ்ச லாபம் வந்தது.எல்லா இதழ்களும் விற்று தீர்ந்துவிடும் . பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை கற்கைக்கு (ஒப்படை) இந்த இதழ்களை பின்பு தேடி வருவார்கள்.கொடுக்க இருக்காது.அலுவலக பிரதியை வாங்கி பிரதி பண்ணிவிட்டுத் தருவார்கள்.புத்தகக்கடைகளுக்கூடாகவும் விற்க முயற்சி

செய்தோம் .அது பலனளிக்கவில்லை.அவர்கள் விற்கும் இதழின் முற்பது விகிதத்தை கேட்டார்கள்.அப்படி கொடுத்தால் இதழ் பிரதியின் விலையை கூட்டவேண்டிவரும்.நான் சம்மதிக்கவில்லை.  இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்து எட்டுவரை மாதம் தவறாமல் வெளிட்டோம்.நூறாவது இதழ் வெளியிடும் கனவுகளுடன் இருந்தோம்.

 

பாண்டியனார் அண்ணா முள்ளிவாய்க்காலுக்குப்பின் வவுனியா முகாமில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். நான் விழி மூடுகிறேன்

 

 

 

 

  • ஓவியன் -
  • Replies 148
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

" நான்  விழி  மூடுகிறேன் "  உங்கள் ஆதங்கம் அத்தனையையும் இதை விட ஆழமாகச் சொல்ல முடியாது லியோ !

  • கருத்துக்கள உறவுகள்

நான் விழி மூடுகிறேன்

 

தொடர்ந்து  இது  போன்ற வரலாறுகளை  இணைக்க வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைக் கனக்கச்செய்த பதிவு.. தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்க ஆவலாக உள்ளேன் லியோ.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் பதிவுகளை.....லியோ

இது உங்கள் சொந்த அனுபவமா லியோ? தொடருங்கள் வாசிக்க ஆவல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவி,விசுகு,இசை,புத்தன்,அலைமகள் தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

 

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச்சின்ன ஞாபகங்கள் ஒரு வரலாற்றையும் ஒரு காலத்தின் போராட்டத்தையும் குறித்து நிற்கிறது. ஞாபகங்கள் தொடர வேண்டும் அதுவே நாளைய சந்ததிக்கான மீதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாந்தி  


அது தமிழன் தன்னைத்தானே ஆண்ட காலம். சமாதானக்காலம் என்றாலும் பனி மூசிப்பெய்யும் மாசிமாதம்.ஒருநாள் காலைபொழுதில்  வழமைபோல் காரியாலயத்தில் முதல் வேலையாய் பத்திரிகையை புரட்டினேன். ஒரு செய்தி நெஞ்சை பலமாய் குத்திற்று. ஒரு ஐம்பத்திநான்கு வயது மூன்று பிள்ளைகளின் தாய் குளிரினால் நேற்று அதிகாலை இறந்ததாய் செய்தி .உடனேயே எல்லா கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு  அந்த கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.இன்றுதான் மரண வீடு நடப்பதால்

வீட்டை அடையாளப்படுத்த கடினம் இருக்கவில்லை.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய குடிசை என்று சொல்வதே பொருத்தப்பாடானது.

அங்கு ஏற்கனவே எமது பிரிவின் மாவட்ட பொறுப்பாளரும் வேறு அரசியல் போராளிகளுடன் நின்றார்.மாவட்ட பொறுப்பாளர் அந்தப்பெண்ணின் நோய் அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார்.அந்தப்பெண் சிறுநீரக பாதிப்பு  நோயாளி .ஒரு தடவை கொழும்புக்கும் போய்வந்திருக்கிறார் . அவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்திருக்கிறார்கள்.எமது மாவட்டப் பொறுப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன்  ஒழுங்குபடுத்தி அதற்குரிய செலவை புனர்வாழ்வுக்கழகம் ஏற்கயிருந்திருக்கிறது.    இரண்டு நாட்களாய் வீட்டில் இயலாமல் இருந்திருக்கிறார்.வசதியீனம் காரணமாய் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்படவில்லை.நேற்று கூட்டிப்போகும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார்கள்.விதி முந்திவிட்டது. நான் அந்த தாயின் கணவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த இடைவெளிக்குள் மாவட்டப் பொறுப்பாளர் நோய் அடையாள அட்டையை பிரதி எடுத்துவந்திருந்தார். பிரதியோடு நான்புறப்பட்டேன்.எங்களால் செய்யக்கூடிய உதவிகளை ஒழுங்குசெய்ய மாவட்டப்பொறுப்பாளர் அங்கு நின்றுவருவதாய் சொன்னார்.அரசியல் போராளிகளும் தங்களது பணியை செய்துகொண்டிருந்தார்கள்.

நான் காரியாலயம் வர ஒரு போராளி எனக்காய் காத்திருந்தான்.என்னைக்கண்டதும் முதுகுப்பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தை தந்தான்.அது கடிதம் அல்ல .அந்த பத்திரிகை செய்தித்துண்டு.

மதி அக்கா ( தலைவரின் மனைவி) கொடுத்து விட்டிருந்தா.நான் விபரத்தை சரியாய் எழுதி அந்தப் போராளியிடம் கொடுத்து அக்காவிடம் கொடுக்கச்சொன்னேன்.சில நாட்களுக்குப் பின் அண்ணையை ( தலைவர்)

வேறுவிடயமாய் சந்திக்கும் போது , அவ்வளவு கடமைக்குள்ளும் அந்த பத்திரிகைச் செய்தியையும் கேட்டார். அந்த தாயின் பிள்ளைகளின் வயதை கேட்டு ,ஏதாவது உதவி அவர்களுக்கு தேவைப்படின் உரிய ஒழுங்குகளை செய்து கொடுக்கும்படி கூறினார்.

 

-ஓவியன்-

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

காலத்தால் அழிக்கப்படக்கூடாத பதிவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் ஒரு நாள் பின்னேரம் நான்கு மணி இருக்கும் ஒரு வேலை முடிந்து மத்தியான சாப்பாட்டிற்கு முகாம் திரும்பிக்கொண்டிருந்தேன். நடைபேசியில் அவசர அழைப்பு பூநகரியில நிற்கிற எங்கட பெடியங்களுக்கு நேற்று காலமைக்குப் பிறகு சாப்பாடு போகயில்லையாம்.தலைசுற்றிச்சு .என்ன என்று வினவினேன்.சமையல்கூடம் நேற்று மாத்தினவையாம் அதுக்குப்பிறகுதான் ஏதோ பிரச்சனையாய் இருக்க வேண்டும்.பூநகரி களமுனையில எங்களுக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.அதில முன்னுக்கு நாலு பேரும் பின்னுக்கு ஆறு பேரும் நிற்கினம்.முன்னுக்கு நிற்கிறவைக்கு சாப்பாடு போயிருக்கு.   பின்னுக்கு நிற்கிற ஆட்களுக்கு ஏதோ தொடர்பாடல் சரியாய் இல்லாததால சாப்பாடு கிடைக்கவில்லை.அவங்களும் எங்களுக்கு உடன அறிவிச்சிருக்கலாம் ஆனால் எங்களுக்கு கரைச்சல் குடுக்கக்கூடாது என்று தவிர்த்துட்டாங்கள்.நான் முகாமுக்குப்போய் ஒரு பெடியனைக் கூட்டிக்கொண்டு முதல்ல கிளிநொச்சி கரடிபோக் சந்திக்கு அருகாமையில இருந்த பைந்தமிழ் பேக்கரிக்குப்போனோம்.

இந்த இடத்தில நான் கட்டாயமாய் பைந்தமிழ் பேக்கரியைப்பற்றி சொல்லோனும்.பாண் என்றால் பாண்தான் பணிஸ் என்றால் பணிஸ்தான்

சொல்லிவேலையில்லை.  எட்டு றாத்தல் பாண் வாங்கினம் பரந்தன் சந்தியில இரண்டு கிலோ கதலி

வாழைப்பழம் வாங்கினம்.அரை மணித்தியாலத்தில பெடியங்களின்ர இடத்திற்கு போயிட்டம்.அவங்கள் என்னென்டால் இளநி  குடிச்சு கோம்பையை வெட்டி வழுக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாங்கள்.ஆட்கள் கொஞ்சம் வாடித்தான் போய்ச்சினம் ஆனால் சிரிப்புக்கு குறைவில்லை.

உடன சாப்பிடச் சொன்னோம் அவங்கள் எங்களுக்கு பிளேன்டி ஊத்தப்போறாங்கள். பேசித்தான் சாப்பிடஇருத்தினம்.   அவங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கைக்கேயே எங்கட நிர்வாகப்பொறுப்பாளர் இன்னொருத்தரையும் ஏத்திக்கொண்டு மோட்டச்சையிக்கிளில வாறார். பின்னுக்கு இருக்கிறவர் இரண்டு வாளி

வைச்சிருக்கிறார்.நிர்வாகப்பொறுப்பாளருக்கு   நாங்கள் வெளிக்கிட்டது தெரியாது.அவர் எங்கட முகாம் சாப்பாட்டைக்கொண்டு வெளிக்கிட்டு இருக்கிறார்.பெடியள் சாப்பிடுறதை பார்த்துட்டுத்தான் அவற்றை முகம் வெளிச்சுது.   நீங்கள் சாப்பிட்டிங்களோ? என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.நான் சாப்பிடயில்லைத்தான் ஆனால் அவருக்கு சாப்பிட்டன் என்று சொன்னன். நீங்கள் சாப்பிட்டியளோ? என்றன்.சாப்பிட்டமாதிரி அக்ஸன் போட்டார்.எனக்கு தெரியும் அவர் சாப்பிடயில்லை என்று.அவர் தான் போய் பெடியளின்ரை சாப்பாட்டை ஒழுங்குபடுத்திட்டு  வாறன் என்று வெளிக்கிட்டார்.அவர் போய் முடிய எங்கட பிரிவின்ர இன்னொரு   போராளி வாறார்.அவர் தங்கட வீட்டை போய் மனிசி சமைச்சு வைச்ச சோறு கறியை கொண்டுவாறார். அவரும் அவரின் மனைவியும் போராளிகள்தான் . விடிய சமைச்சால் இரவு போய் சாப்பிடுவினம்.

அன்றைக்கு அதைபோய் வழிச்சுக்கொண்டு வந்திட்டார்.பெடியள் எதை சாப்பிடுறது என்று தெரியாமல் நின்றாங்கள்.   ஐயோ எங்கட முகாம் தொடர்பாளர் பெடியள் சாப்பிட இல்லை என்றோன டென்சனில எல்லோருக்கும் அறிவிச்சிருக்கிறார் போல.எங்கட பிரிவின்ர உப பிரிவொன்றின்ர பொறுப்பாளர் ஒருவர் சிறப்பு வேலையாய் முட்கொம்பனுக்க நின்றவர்.அவரும் வாகனத்தில வாறார்.வன்னிக்கு உள்

பகுதிகளில தேத்தனிக்கடைகளில பெரிய அளவில சாமான் இருக்காது. அவர் ஒரு கடையில இருந்த முழு வாய்ப்பனையும் வாங்கி வந்திட்டார்.அந்த ஊரில யார் யார் திட்டிச்சினமோ தெரியாது.பெடியள் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில நிர்வாகப்பொறுப்பாளர் இரவு சாப்பாடு வாற வாகனத்தையும் கூட்டி வந்திட்டார்.வாகனக்காரர் புது ஆட்கள் இந்த இடத்தை தெரியாமல் விட்டுட்டாங்களாம். நாங்கள் வாய்ப்பனும் பிளேண்டீயும் அடிச்சம்.அவன் செல் அடிக்கிற பகுதி போங்கோ போங்கோ என்று பெடியள் எங்களை கலைச் சிட்டாங்கள்.

( நினைவுகள் கடினமானவை . இச்சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்களில் இருவர்தான் உயிரோடு இருக்கிறார்கள்.)

 

- ஓவியன்-   

Edited by லியோ

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்கள் எமக்கு நல்ல மனத்தெளிவை ஏற்படுத்துகின்றன.. நன்றி லியோ..!

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடியாக அமையும் இப்பதிவு என்று நம்புகிறோம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு..தொடருங்கள் அண்ணா..முன்னர்போல் இப்ப அதிகம் எழுதுவதில்லை ஏன் அண்ணா? நன்றாக எழுதக்கூடியவர் நீங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விசுகு,ரதி,இசை,நெடுக்ஸ்,சுபேஸ் கருத்திடலுக்கும்
வருகைக்கும் மிக்க நன்றிகள்  

தொடர்ந்து எழுதுங்கள் .ஆவலுடன் வாசிக்கின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சமாதானக்காலம். நாங்கள் அண்ணையுடன்( தலைவர் ) ஒரு உரையாடலில் இருந்தோம். அண்ணையின் பாதுகாப்புப் போராளியூடாக ஒரு அவசரக்கடிதம் ஒன்று அண்ணையிடம் கொடுக்கப்பட்டது. அண்ணை

அதை பிரித்துப்பார்த்தார் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.அண்ணை

இது என்ன என வினவி சிங்களம் வாசிக்கக்கூடிய ஒரு போராளி அழைக்கப்பட்டார்.

விடுதலைப்புலிகளால் போரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப்  படையினரை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அந்தக்கடிதத்தை தனது தந்தையை பார்க்க வந்த ஒரு எட்டு வயது பிள்ளை எமது தலைவருக்கு எழுதியிருந்தது.தனது தகப்பனை விடுதலை செய்யுமாறும் தான் தனது தகப்பனை மீண்டும் படையில் சேர விடமாட்டேன் என்று தனது குழந்தை மொழியில் உருகி எழுதியிருந்தது.வழமை போல அண்ணையின் கண்கள் உருண்டன.சில துளி யோசனைக்குப்பின் இப்ப எத்தின மணி இப்ப நீ போனாய் ன்டால் அந்த பஸ் வெளிக்கிடமுதல் போயிடுவியா? அந்த போராளி ஆம் என்றான். போய்

அந்த ஆமியை அந்த பிள்ளையின்ர கையில பிடிச்சு கொடுத்து அனுப்புற ஒழுங்கை செய் என்று அனுப்பி  வைத்தார்.

 எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அண்ணை ஒரு சொல்லுக்கூட அந்த ஆமி எப்படிப்பட்டவன்.எந்த சண்டையில பிடிபட்டவன். அவனின் ராங் ( நிலை) என்ன என்று கேட்கவில்லை.   

 

-ஓவியன் -

 

Edited by லியோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அர்ஜுன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு நீண்ட காலமாய் வழங்கல் சாப்பாடுதான்.அது பல பேருக்கு சமைக்கிறதால எப்படி சமைச்சாலும் ஆக நல்லா வராது என்று தான் நான் சொல்லுவன்.சிலர் இதை மாறியும் சொல்லலாம்.சுவை என்றது அவரவர் மனதைப்பொருத்ததும்தான். இயக்கத்திற்கு கஸ்டம் வரயிக்க சாப்பாட்டிலும் பிரதி பலிக்கும்.ஜெயசுக்குறு காலத்தில கத்தரிக்காயும் சோறும் கொஞ்ச நாள் நிரந்தரமாயிற்றுது.சில நாட்களில நாங்களும் ஏதாவது கறி வைப்பம்.அது நாங்கள் எத்தனை பேர் இருக்கிறம் என்றதைப் பொறுத்தது . எப்படி என்றாலும் எல்லோரும் ஒரே சாப்பாடுதான் சாப்பிடுவம்.  இரண்டாயிரம் ஆண்டுக்குப்பிறகு சாப்பாட்டின்ர தரம் கூடிற்றுது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.தொன்நூறுகளின்ர   ஆரம்பத்தில சில நடவடிக்கைகளுக்கு போயிருக்கைக்க சாப்பாடு சரியாய் பிந்திவரும் ,சில நேரம் பழுதாகியும் வரும்.பலவேகய ஒன்றில நாற்பத்தியொரு நாளும் பலவேகய இரண்டில முற்பது நாளும் மின்னலில  முற்பது நாளும் இப்படி போயிற்று.   

நாங்கள் முகாமைவிட்டு வெளிக்கிட்டு களைச்சுப்போனால் சில வீடுகளில சாப்பிடுவம் . அநேகமாய் அவை மாவீரர் அல்லது போராளிகளின் வீடுகளாய் இருக்கும்.அந்த வீடுகளும் மட்டு மட்டான வாழ்க்கை வாழுற வீடுகளாய்த்தான் இருக்கும்.நாங்கள் இரண்டு பேர் அல்லது நாலு பேர் போவம்.வீட்டுச்சாப்பாடு சாப்பிடுற அவா இருந்தாலும் அதை தவிர்க்கத்தான் விரும்புவம் ஆனால் அதுகள் விடாதுகள்.சில நேரம் கடையில எங்களுக்கு என்று சாப்பாடு கட்டிப்போய் அதுகளிற்ற அதை குடுத்திற்று வீட்டுச் சாப்பாட்டை நாங்கள் சாப்பிடுவம் அது எங்களிற்ற இருக்கிற காசைப்பொருத்தது. நான் நெடுந்தீவுல இருந்து தம்பிலுவில் வரை  மக்களிற்ற வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். இறுதிப்போரில் தேவிபுரம், இரணைப்பாலை,மாத்தளன்,வலைஞர்மடம்,இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் என  ஒன்றன் பின் ஒன்றாக எங்களுக்கு தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள் உடல் சிதறிப்போயின.நாளும் உயிரிழந்த மக்களின் செய்திகள் எங்களைப்புண்ணாக்கின.இறுதி இரு கிழமைகளும் நாளுக்கு ஒரு நேர கஞ்சியுடன் எங்கள் கடமை முடிந்தது.

 

- ஓவியன்-

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கக் கவலையைக் கிடக்குது, லியோ! :o

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் லியோ
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி லியோ.. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுக்குக் கூறுங்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.