Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஓவல் மைதானத்தில் சிங்களர்வகளுக்கும், தமிழருக்கும் இடையே மோதல்!

Featured Replies

ovel-clashM.jpgலண்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அரங்கிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கும், கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடவந்த சிங்களர்வகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 

http://tamilworldtoday.com/?p=17185

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் போராட்டவாதிகள் மீது சிங்கள இனவெறியர்களால் வெறித்தனமான முறையில் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.


நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வெளியில் நின்ற ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் கவனயீர்ப்புப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.


இதனையடுத்து மதுபானப் பாட்டில்கள், கற்கள் சகிதம் அங்கு குழுமிய சிங்களவெறியர்கள், ஈழத்தமிழ்ப் போராட்டவாதிகள் மீது வெறித்தனமான தாக்குதல்களை தொடுத்தனர்.
எனினும் அங்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக தலையிட்டதால் ஈழத்தமிழ்ப் போராட்டவாதிகள் தரப்பில் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.


முக்கிய பேரணிகளைத் தவிர இலங்கை அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் அதிக அளவில் கலந்து கொள்வதை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் தவிர்த்து வருவதாலேயே இவ்வாறான நிலை தோன்றியிருப்பதாக போராட்டவாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு எதிர்வரும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பெருமளவில் ஈழத்தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று போராட்டவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15995:arpattam-in-london-on-the-news-of-the-fanatics-video-photos&catid=38:world&Itemid=104

 

 

londan-sri.JPG

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா .....

மற்றவர்கள்  எல்லோரும் எங்கே?
நாடு கடந்த அரசை விமர்சிக்க என்றால் வரிசை கட்டி வருவார்கள்.
நாடு கடந்த அரசில் செயற்பாடு இல்லை என்றால்.............. அதை அதன் பட்டில் விட்டு விட்டு நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். என்று சொல்லும்போதெல்லாம்.............
அதை எப்படி விடுவது? என்று எழுதும் போதே தெரியும்.
புறணி பாடி வாழ்வை ஓட்ட இவர்களுக்கு ஒருவன் வேண்டும்.
சிலருக்கு புலி 
சிலருக்கு நா. அ 

இதில் விமர்சிகிறதுக்கு என்ன இருக்கு..மொக்கு கூட்டம் ...(நான் சிங்களவனை சொன்னேன்... :) ) பார்த்தா வேணும் என்றெ அடிபட போன மாதிரி இருக்கு

 

வளமையான போரட்டம்...புதுசா அடிபிடியும்..

அந்த உதைஞ்ச நாயை Police பிடிச்சுதா?

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் நகரத்திலே ஒரு இளம் பெண்ணிணை காவல் துறையினருக்கு முன்னாலே எட்டி உதைக்கும் சிங்களக் காடையர்கள் தாயகத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று சர்வதேசம் உணர வேண்டும்.பிரித்தானியப் பிரதமர் சிறிலங்காவுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.சிங்களவர்களுக்கு குளிர் விட்டுப் போய் விட்டது.தமிழர்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்க வேண்டிய நிலைக்கு சிங்களவர்களே தமிழர்களைத் தள்ளுவார்கள் போலிருக்கிறது.இந்த நிலை தொடருமாயின் மீண்டும் ஆயுதப் போராட்டம் எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

இலண்டன் நகரத்திலே ஒரு இளம் பெண்ணிணை காவல் துறையினருக்கு முன்னாலே எட்டி உதைக்கும் சிங்களக் காடையர்கள் தாயகத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று சர்வதேசம் உணர வேண்டும்..

 

அதுவும் கோழைத்தனமாக முதுகில் உதைக்கும் சிங்கள காடையன்.

இந்தக் கோழைத்தனமாக காடையர் கூட்டம் வலிமை மிக்கவர்கள் என்று எழுதவும் சிலபேர் உள்ளனர்.

Edited by Sayani

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில்

அதுவும் லண்டனில்

எம்மீது சிங்களவன் கை வைக்கமுடிகிறது  என்றால்

எமது ஒற்றுமையை அவன் கவனித்து கணக்கு பண்ணிவிட்டான் என்று அர்த்தம்

நாம் எப்பொழுது அதை கவனிக்கப்போகின்றோம்???? :(  :(  :(

ஆட்டம் பார்க்கப்போன இலங்கை கூட்டத்தில் பாதிக்கு மேல் ஈழத்தில் பிறந்த பிரித்தானிய தமிழ் அகதிகள்..

( மற்றும் படிக்க வந்த *** )

 

 

யாரிட்ட சொல்லி அழ? :lol:  :lol:  :lol: :lol:  :lol:  :lol:  :lol:  

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

 

ரதியக்கா .....

மற்றவர்கள்  எல்லோரும் எங்கே?
நாடு கடந்த அரசை விமர்சிக்க என்றால் வரிசை கட்டி வருவார்கள்.
நாடு கடந்த அரசில் செயற்பாடு இல்லை என்றால்.............. அதை அதன் பட்டில் விட்டு விட்டு நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். என்று சொல்லும்போதெல்லாம்.............
அதை எப்படி விடுவது? என்று எழுதும் போதே தெரியும்.
புறணி பாடி வாழ்வை ஓட்ட இவர்களுக்கு ஒருவன் வேண்டும்.
சிலருக்கு புலி 
சிலருக்கு நா. அ 

 

 

உங்களை நினைச்சா எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருகுது.! அவங்க எல்லாம் விளையாட்டா எழுதிறதை நீங்க சீரியஸா எடுத்துடுறீங்க..! :lol::D

புலத்தில்

அதுவும் லண்டனில்

எம்மீது சிங்களவன் கை வைக்கமுடிகிறது  என்றால்

எமது ஒற்றுமையை அவன் கவனித்து கணக்கு பண்ணிவிட்டான் என்று அர்த்தம்

நாம் எப்பொழுது அதை கவனிக்கப்போகின்றோம்???? :(  :(  :(

 

நாங்களும் பதிலுக்கு வன்முறையில் இறங்கினால்.. நாங்க பயங்கரவாதி ஆகிடுவம். சிங்களவன் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவன் என்ற அனுதாபி ஆகிடுவான். ஊரில என்ன நடந்தது என்று தெரியுமில்ல. அந்த வகையில்.. நம்ம தமிழ் பட கீரோ போல.. முதலில அடி வாங்கனும். அப்புறம் தான் திருப்பி அடிக்கனும். கீரோவே முதலில அடிச்சா அவன் வில்லன் ஆகிடுவானில்ல. அதுபோலத்தான் இதுவும்.. சர்வதேசம் என்ற பார்வையாளர்களுக்கு நம்ம மேல ஒரு அனுதாபம் வரனும் என்றால் நாங்க அடி வாங்கனுமாமில்ல..! அதுதான் சட்டம்..! :(:rolleyes::icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் பார்க்கப்போன இலங்கை கூட்டத்தில் பாதிக்கு மேல் ஈழத்தில் பிறந்த பிரித்தானிய தமிழ் அகதிகள்..

( மற்றும் படிக்க வந்த *** )

 

 

யாரிட்ட சொல்லி அழ? :lol:  :lol:  :lol: :lol:  :lol:  :lol:  :lol:  

 

நீங்க என்ன ஒரு முக்கிய குறூப்பை விட்டிட்டீங்க. தமிழனுக்கு வேலை கொடுக்காமல் சிங்களவனுக்கு என்று மட்டும்.. தெரிந்தெடுத்து.. வேலை கொடுக்கிற நம்ம தமிழ் பெற்றோல் ஸ்ரேசன் காரங்க.. தமிழ்க் கடைக்காரங்க.. சிங்களவனுக்கு என்றே தெரிஞ்சு வீடு.. றூம் வாடைக்கு விடுற நம்ம அசைலக் கூட்டம்.. இதெல்லாம் உங்க தான் நின்றிருக்கும்..! :lol:

 

இதில இருந்து என்ன தெரியுது.. நம்மில பாதிக்கு மேல பொருளாதார அகதி. அதுகளுக்கு ஊரில ஒரு அரசியல் பிரச்சனையும் இல்ல. உயிர் ஆபத்தும் இல்ல. வாழ வழியில்ல.. புலியை சாட்டி ஓடி வந்து அசைலம் அடிச்சிட்டு சுரண்டி வாழுதுங்க..! அதுகள் உதுகளில போய் நிற்கிறது... ஒன்றும் புதுமையும் இல்லையே..! சிங்களவனுக்கே அடி எடுத்துக் கொடுக்கிறதுகளும் அதுகள் தான். மகிந்தவுக்கு மாலை போடுறதும் அதுகள் தான்.  :lol::D

Edited by இணையவன்
மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஓடி வந்து புலிக்கொடி தூக்கியர்வர்களின் வீரம் பற்றி சிங்களவனுக்கு  வடிவாக தெரியும்.

இலண்டன் நகரத்திலே ஒரு இளம் பெண்ணிணை காவல் துறையினருக்கு முன்னாலே எட்டி உதைக்கும் சிங்களக் காடையர்கள் தாயகத்தில் என்ன செய்திருப்பார்கள் என்று சர்வதேசம் உணர வேண்டும்.பிரித்தானியப் பிரதமர் சிறிலங்காவுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.சிங்களவர்களுக்கு குளிர் விட்டுப் போய் விட்டது.தமிழர்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்க வேண்டிய நிலைக்கு சிங்களவர்களே தமிழர்களைத் தள்ளுவார்கள் போலிருக்கிறது.இந்த நிலை தொடருமாயின் மீண்டும் ஆயுதப் போராட்டம் எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

 

அந்த படத்தின் பிரதிகளை எல்லோரும் லண்டன் பாரளுமன்ற உறுபினர்களுக்கு மின்னல் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

ஓடி வந்து புலிக்கொடி தூக்கியர்வர்களின் வீரம் பற்றி சிங்களவனுக்கு  வடிவாக தெரியும்.

ஒருவேளை பயத்திலை விட்டுவிட்டு ஓடினவர்கள் சிங்களவனைக் கண்டு குலை நடுங்குகிறார்களாகும்.

 

நீங்கள் கிறிகெட் பார்க்கும் போது நாம் அரசியல் ஆக்கி குழப்பமாட்டோம். நீங்கள் போத்தலோடை ஆற அமர்ந்து பார்க்கலாம். எங்களை விட்டிடுங்கோ பிளீஸ்!

 

சும்மா முசுப்பாத்திக்கு துவக்கு எடுத்து விளையாட்டுக்கு ஆக்களை சுட்டு பார்க்க வெளிக்கிட்டவன் எல்லாம் இயக்கங்களில் சேர்ந்தால்தான் இயக்கங்கள் நிலை தடுமாறின. அவர்கள் அதில் இருந்த திறில் கலந்து போனபின்னர் வெறி முறிந்தவர்கள் மாதிரி  வேதாந்தாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இனம், சுதந்திரம், விடுதலைப்போர் என்ற புனித வார்த்தைகளுக்கும் சாக்கடை சிதம்பி மணக்கும் இவர்களின் கருத்துக்களுக்கும் எப்படி முடிச்சுப்போடமுடியும்? இவர்கள் எப்போ விடுதலை இயக்கங்களில் இருந்தார்கள்?

Edited by மல்லையூரான்

கொஞ்ச நேரம் கொடுங்கோ. அவர் அவசரமாக எதையோ எழுத்திப்போட்டார். இனி நேரம் கிடைக்கும் போது விக்கிப்பீடியாவைல் தேடிப்பார்த்து அரச குடும்பம் எப்போ கனடா வருகிறது என்று கூறுவார். முதலில் அவருக்கே அதை விக்கிப்பீடியாவில் தேடிப்பார்த்துத்தானே கண்டு பிடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ரதியக்கா .....

மற்றவர்கள்  எல்லோரும் எங்கே?
நாடு கடந்த அரசை விமர்சிக்க என்றால் வரிசை கட்டி வருவார்கள்.
நாடு கடந்த அரசில் செயற்பாடு இல்லை என்றால்.............. அதை அதன் பட்டில் விட்டு விட்டு நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். என்று சொல்லும்போதெல்லாம்.............
அதை எப்படி விடுவது? என்று எழுதும் போதே தெரியும்.
புறணி பாடி வாழ்வை ஓட்ட இவர்களுக்கு ஒருவன் வேண்டும்.
சிலருக்கு புலி 
சிலருக்கு நா. அ 

 

 

ஏன் உங்களால் சொந்தக் கருத்து வைக்க முடியாதா?...நாங்கள் வந்து எழுதினப் பிறகு தான் உங்கட கருத்தை எழுதுவீங்களோ?
 
புலிக் கொடிக்கு என்று ஒரு மரியாதை இருக்குது.அதைக் கொண்டு ஆர்ப்பாட்டத்திற்குப் போனால் அதற்குரிய மரியாதையை முதலில் அந்த கொடியை கொண்டு போகின்றவர்களும்,அந்த ஆர்ப்பாட்டத்திற்குப் போகின்ற தமிழர்களும் கொடுக்க வேண்டும்.
 
சிங்களவர்களிலும் ரவுடிகள் இருக்கிறார்கள்.அவர்கள் தான் இந்த கூத்தை செய்தது.கொஞ்சப் பேர் இப்படியான ஊத்தை வேலை செய்வதைப் பார்த்து மற்றவர்கள் அவர்களை அடக்கினார்கள்.
 
உந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்று கொடியைத் தூக்கிப் போகின்ற எல்லோருமே உண்மையான உணர்வோட போறதில்லை.விடுப்பு பார்க்கவும்,பெட்டையளைப் பார்க்கவும் தான் போறது.சிங்கள்வன் நக்கலடிக்கிறான்,கூக்குரல் இடுகிறான் என்டால் பதிலுக்கு புலிக் கொடியைப் பிடித்துக் கொண்டு இவர்களும் அதைத் தான் செய்கிறார்கள்.இதை நான் மு.வாய்க்கால் நேரத்திலும் அங்கு மக்கள் செத்துக் கொண்டு இருக்கின்ற நேரத்திலும் நான் கண்டேன்.***
 
2009 மு.வாய்க்கால் யுத்தம் முடிந்த உடனே லண்டனில் பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது.அந்த நேரம் லண்டனில் கிரிக்கெட் மட்ச் நடந்து கொண்டு இருந்தது.அது என்ன மட்ச் என்று மறந்து விட்டது.அந்த இறுதிப் போட்டியில் விளையாட இலங்கையும்,பாக்கிஸ்தானும் தெரிவானது.அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை இந்த மட்ச் நடக்கும் இடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்திற்கு வரச் சொல்லி அழைத்தார்கள் ஆனால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்ததோ 50 க்கும் குறைவான தமிழர்கள் ஆனால் அந்த மட்ச் பார்க்க வந்த தமிழாட்கள் எத்தனை பேர் இருப்பினம் என்று நினைக்கிறீங்கள்?...அதில் எத்தனை முக்கியமான தமிழ் பிரமுகர்கள் இருந்தார்கள் தெரியுமா? பிரிஎப்[btf] சேர்ந்தவர்கள் உட்பட.அப்படியானவர்கள் இப்பவும் தமிழ்ப் பிரமுகர்கள் தான்.அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட வெளியில் நின்று கொண்டு இலங்கைக்கு என்ன ஸ்கோர்,பாக்கிஸ்தானுக்கு என்ன ஸ்கோர்,இலங்கை வெல்லுமா,தோக்குமா என்று தான் கதைத்தவர்கள்.இந்த மட்ச்க்கு கூட போன சிங்களவர்களை விட‌ தமிழர்கள் தான் அதிகம்
 
ஏன் இன்னும் கூட,இவ்வளவு அழிவுக்குப் பிறகும் கூட உங்களால்[எங்களால்] மக்களை   ஒன்று இணைக்க முடியவில்லை? பல காரணங்கள் இருந்தாலும் உங்களை   மாதிரி ஆட்கள் தான் முதற் காரணம்.முதலில் தேசியம் பேசுகின்ற ஆட்கள் ஒழுங்காக இருங்கோ பிறகு மற்றவர்களை திருத்தலாம்.நான் இல்ங்கை டீமின் தீவிர ரசிகை தான் ஆனால் அங்கே மக்கள் செத்துக்  கொண்டு இருந்த அந்த நேரத்திலையும் மட்ச் பார்த்துக் கொண்டு இருக்கேல்ல
 
நாடு கடந்த அரசையும் விமர்சிக்க கூடாது.எங்களையும் விமர்சிக்க கூடாது.நாங்கள் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர்கள் அதனால் தானே அழிந்தோம்.இன்னும் மிச்சம் இருப்பவரையும் அழிப்போம்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் சிங்கள துடுப்பாட்ட அணிவரும் போது 2010,2012,2013 மைதானத்துக்குள் சென்று அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்திருக்கிறேன். 2010, 2012 அனுபவங்களை எனது வலைப்பதிவு, யாழிலும் பதிந்திருக்கிறேன். 2013ல் மைதானத்துக்கு வெளியே சிங்கள நாட்டின் துடுப்பாட்டத்தினை தடைசெய்யவேண்டும் என்று நடைபெற்ற பல கவனயீர்ப்பு நிகழ்வுகளில் சிட்னியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டேன். இலண்டனை விட அதிகளவு சிங்களவர்கள் வாழும் நாடு அவுஸ்திரெலியா. நாங்கள் காவல் துறை, நியூசவூத் வேல்ஸ் துடுப்பாட்டவாரியம் ஆகியவற்றின் அனுமதி பெற்று அமைதி முறையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. பல அவுஸ்திரெலியர்களும் கவனயீர்ப்பில் கலந்து கொள்வார்கள். இதனால் சிங்களவர்களினால் தமிழர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. இதனை இலண்டனிலும் பின்பற்றலாம் தானே. எனக்குத் தெரிந்த இலண்டனில் வசிக்கும் விடுதலைப்புலிகள், தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் இலண்டன் ஓவலில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தெரிவித்து துடுப்பாட்டம் பார்த்ததினை( சிங்களத்து தேசிய கொடியுடன்)தங்களது முக நூலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அணி எத்தனை முறை அவுஸ்திரெலியாவில் துடுப்பாட்ட அணி விளையாட வந்தாலும் நான் சிங்கள அணிக்கு எதிராகவும் , அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாகவும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். நான் உண்மையான உணர்வுடன் தான் கலந்து கொள்வேன். சிங்கள தேசத்தில் இல்லாத சுதந்திரத்தினை அவுஸ்திரெலியா எனக்கு தந்தது. அதற்கு எப்பொழுதும் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்தமாதம் சிங்கள தேசத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவர் சிட்னிக்கு வரவிருக்கிறார். அவர் யார் என்பதினை விரைவில் ஊடகங்களில் வரும். அவருக்கும் எதிராக நடைபெறும் கவனயீர்ப்பில் கட்டாயம் கலந்து கொள்வேன். முன்பு சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தெரிவித்ததினை எண்ணி வெக்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். இங்கு சிட்னியில் சிங்கள அணிக்கு எதிராக நடைபெறும் கவனயீர்ப்பில் கலந்து கொள்கிற அனைவரும் உணர்வுடன் தான் கலந்துகொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் கிரிகெட் போட்டியை எதிர்த்து வெளியே தமிழர்கள் ஒன்றுகூடி தமது அமைதியான போராட்டம் மூலம் தெரிவித்த பொழுது போட்டியை காண வந்த சிங்களர்கள் கண்மூடி தனமாக தமிழர்கள் மீது தாக்குதல்.. இப்படத்தில் "போராடும் தமிழ் சகோதரியை காலால் மிதிக்கும் சிங்கள வெறியன்.."

# லண்டனில் இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் பொழுதே ஒரு ஜனநாயக போரட்டதையை சகித்துகொள்ளாமல் சிங்களர்கள் இப்படி தாக்கும் பொழுது ஈழத்தில் என்ன என்ன செய்திருப்பார்கள் என்று இவ்வுலகம் எண்ணிப்பார்க்க வேண்டும். எம் அக்கா தங்கைகள் ஆயுதம் ஏந்திய நியாயத்தை இனியாவது புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும்..

@ பாக்கியராசன் சே

998618_491368824264547_1530772305_n.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

https://www.facebook.com/tamil.kalam

 

 

 

 

 

 

 

 

 

 

அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது அவரவர் சுதந்திரமும், ஜனநாயக உரிமையும் ஆகும். அவர் கையில் புலிக்கொடி வைத்திருப்பது அல்லது சிங்கக்கொடி வைத்திருப்பது அவரவர் விருப்பமும், சுதந்திரமும் அதேவேளை அதனால் வரக்கூடிய விளைவுகளிற்கு அவரவரே பொறுப்பு. ஆனால், அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது சுத்த காட்டுமிராண்டித்தனம். தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கலாம்.

 

விளையாட்டு பார்ப்பது, போவது, வருவது அவரவர் விருப்பம். ஒவ்வோர் தனிநபர்களும் வெவ்வேறானவர்கள். அனைவரையும் ஒரேகூடையில் எடைபோடுவது தவறு.

 

போட்டி சம்மந்தமாக கூறுவது என்றால் கடந்த அவுஸ்திரேலியா, இலங்கை அணி போட்டி நிலவரத்தை இணையத்தளம் வாயிலாக இடையிடையே பார்ப்பதற்கு எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. தானாடாவிட்டாலும் தன்சதை ஆடும் எனும் கணக்கில் இடையிடையே இலங்கை அணி தோற்கும்போல் வந்த சமயத்தில் சற்று சோர்வு எனக்குள் ஏற்பட்டது உண்மை. ஆனாலும், அவுஸ்திரேலியா அணியின் கடைசிசோடி ஆடிய ஆட்டம் மிகவும் கவர்ந்தது. அதற்காகவாவது அவுஸ்திரேலிய அணி வென்றாலும் பரவாயில்லை போல் தோன்றியது.

 

என்னைப்பொறுத்தவரை மிகவும் திறமையான அணி வெற்றிபெறவேண்டும். குருட்டு லக்கில் ஒரு அணி வெற்றிபெறும்போது அதை அதிகம் ரசிக்கக்கூடியதாக இருப்பதில்லை. எதிர்வரும் இலங்கை - இந்தியா போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடையும் வாய்ப்பே அதிகமாக தென்படுகின்றது. அன்றைய தினம் இலங்கை அணிக்கு குருட்டு லக் வேலை செய்தால் நிலமை வேறுவிதமாக செல்லலாம். இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் தரம்குன்றியதுபோல் உள்ளது. மட்டையடியில் புதியவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சங்ககார, மகேல போன்ற பழையவர்கள் இளைப்பாறும்போது இலங்கை அணியின் நிலமை மோசமாக செல்லும்போலவே தெரிகின்றது. இந்த வெற்றிக்கிண்ணத்தில் தென் ஆபிரிக்க அணி இறுதி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாய் அமையும்.

Edited by கரும்பு

நன்றி கரும்பு ,உங்களது அதே கருத்துதான் எனதும் .அவுஸ் -ஸ்ரீ லங்கா மாட்ச் பத்து பேருக்கு மேல் இருந்து பார்த்தோம். ஒருவரை தவிர அனைவரும் ஸ்ரீ லங்கா ஆதரவுதான் .

அதே போல மைதானத்திற்கு  வெளியில் தமிழர்களை அடித்த போது தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பது போல் அந்த சிங்களவர்களை உதைக்க வேண்டும் போலிருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கிரிக்கெட் ரசிகர்களின் சிங்களவர்களின் காட்டுமிராண்டித் தனத்தை பல தடவைகள் கண்டிருப்பதனால்.. இந்தச் சம்பவம் என்னைப் பொறுத்த வரை அதிர்ச்சி தரவில்லை. ஆனால் இங்கிலாந்திலும் சிங்களவர்களால்.. இப்படியும் நடந்து கொள்ள முடியுது என்ற ஒரு ஆதங்கமே ஏற்பட்டது.

 

என்னைப் பொறுத்த வரை நான் சிறீலங்கா அணியை ஒரு போதும் ஆதரித்ததில்லை.  எனக்கு கிரிக்கெட் அறிவு வந்த நாளில் இருந்து சிறீலங்கா விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் எதிரணியையே ஆதரித்திருக்கிறேன். சிறீலங்காவை ஆதரி என்று மில்லியன் டொலர் தந்தாலும் மனதளவில் இயல்போடு ஆதனை ஆதரிக்கக்கூடிய நிலை இல்லை.

 

மேலும்.. சிறீலங்காவின் சிங்கக் கொடி மீது எனக்கு ஒருபோதும் ஈர்ப்பு வந்ததில்லை. அதனை இலவசமாகத் தந்தாலும் பிடிக்கனும் என்ற மனநிலை வராது. அதன் மீது ஒரு ஒட்டும் இல்லை... உறவும் இல்லை. ஆனால் புலிக்கொடியை பிடிக்கனும் என்ற ஒரு ஈர்ப்பு தானாக வருகிறது. அதன் வடிவமைப்பில் அப்படி.. ஒரு கவர்ச்சி... வீரம்.. உள்ளது என்று நினைக்கிறேன். அதனை எனது கொடி என்ற உணர்வேந்தலோடு பிடிக்கும் இயல்பான மனநிலை வந்துவிடுகிறது. பள்ளிக்காலத்திலும் சிங்கக் கொடியை விட புலிக்கொடி பறக்கவிட்ட நிகழ்வுகளே அதிகம் என்பதால் புலிக்கொடி இயல்பில் மனதோடு ஒட்டிவிட்டது என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் இயல்பாகவே சிறீலங்காவின் சிங்கக் கொடியில் எனக்குப் பிடிப்பில்லை..! மற்றைய பல நாடுகளின் கொடியில் உள்ள ஈர்ப்பு சிங்களத்தின் கொடி மீது வருவதில்லை..!

 

ஆனால் சில தமிழர்கள் சிறீலங்கா அணியையும் சிங்கக் கொடியையும் தூக்கிப் பிடிப்பதில் பெருமை கொள்வதையும் கண்டுள்ளேன். அதில் அப்படி என்ன பெருமையோ.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஆனால் சில தமிழர்கள் சிறீலங்கா அணியையும் சிங்கக் கொடியையும் தூக்கிப் பிடிப்பதில் பெருமை கொள்வதையும் கண்டுள்ளேன். அதில் அப்படி என்ன பெருமையோ.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்..! :)

 

கூலிக்கு மாரடிப்பவர்கள், சிங்கக் கொடியை பிடித்தால் தான்...

அடுத்த வேளை... சோறு சாப்பிடலாம்.

அதனால் தான்.... ஒட்டுக் குழுக்கள், சிங்கக் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிங்களவன் வென்றாலும் அடிப்பான் ,தோற்றாலும் அடிப்பான் 
திருப்பி அடிக்கும்வரை 

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்களர்களின் இந்த செயலுக்கு இங்கிலாந்து தமிழ் இளையோர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அப்போது, இலங்கை அணியினை பார்வையிட சென்ற சிங்களவர்களால் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்த கவனியீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் மீது காவல்துறையினரையும் தாண்டி சிங்கள காடையர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலின் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்ட சிறுமியை காலால் எட்டி உதைத்தும் சிறுவனை அடித்தும் மேலும் அங்கு நின்றவர்களை பலமாக தாக்கியும் உள்ளனர். மற்றும் சிங்கள காடையர்களால் அநாகரிகமான வார்த்தைகளால் பேசியும் சைகை மூலமாக காட்டியும் சென்றுள்ளனர். தமிழர் தாயகத்தில் சிங்களம் எவ்வாறு எமது மக்களை அடக்கி அடிமைப்படுத்தவும் எமது நிலங்களை பறித்தும் கலாச்சாரத்தை சீர்கெடுக்க முனையும் இப்பொழுதில் தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளிலும் தனது இனவெறியை காட்டி எகத்தாளம் இடுகிறது. இவ்வேளையில் தமிழ் இளையோர் அமைப்பு சிங்கள காடையர்களின் இனவெறியை வன்மையாக கண்டிக்கும் நேரத்தில் லண்டன் காவல் துறையினரிடம் குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டியும். இலங்கையைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் அதிகமான மக்களை பங்கு கொள்ளுமாறும் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/world-sinhalese-attack-eelam-tamils-london-177428.html

 

சிங்களவன் வென்றாலும் அடிப்பான் ,தோற்றாலும் அடிப்பான் 
திருப்பி அடிக்கும்வரை 

 

 

திருப்பியடிச்சா கோவணத்தையும் உருவிபோட்டு கூட அடிப்பான்...என்றபடியா

பொத்திக்கொண்டு போவதே நல்லது...

Toronto மாதிரி இடத்திலே கிடைச்சா அடிப்போம்... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.