Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்! கூட்டமைப்பு தீர்மானித்தது

Featured Replies

TNAWwigneswaran.jpg

 

கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.விக்னேஸ்வரனை நிறுத்துவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.

 

மேலும்,http://tamilworldtoday.com/?p=22576

Edited by Kashni

இது உண்மையாயின் இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று எடுத்டுக்குப்பிறகு நல்ல முடிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதே நடக்கட்டும்

சூழ்நிலைக்கு ஏற்ப வேறு பொருத்தமான தெரிவுகள் இல்லாததால் நல்ல முடிவு.

சம்பந்தனுக்கு அடிபணிந்தன கூட்டுக்கட்சிகள்; முதன்மைவேட்பாளராக சி.வி.வி!(2ஆம் இணைப்பு)

 

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
 
பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று (15) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
 
வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டும் என அக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தெரிவித்திருந்தனர். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் தீவிரமாகச் செயற்பட்டு சி.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னைய இணைப்பு:-
 
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்னாளர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
 
இன்று காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவவிடயம் குறித்து ஆராயப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.
 
வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியிருந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஒரு சாராரும் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி.யை நியமிக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் வலியுறுத்தியிருந்தனர். இதனால் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
சனிக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அன்றைய தினம் நடைபெறவில்லை. அந்தக் கூட்டமும் இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு பம்பலப்பிடடியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
 
முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று மாலை கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்

நமது  விருப்பங்கள்

எதிர்பார்ப்புக்கள்.............

இருக்கட்டும்

முதலில் முன்னாளர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் என்ன  சொல்கிறார் என்பதை பொறுத்துத்தான் எல்லாமே.....

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக யாரைத் தெரிவுசெய்கிறது என்பதல்ல இங்கு முக்கியம் யார் யாருக்காக வேட்பாளரைத்தெரிவுசெய்கிறார்கள் என்பதே முக்கியம். இந்தியாவினது விருப்பத்தின்பேரிலோ அன்றேல் சிங்களத்துக்கு சாமரம்வீசுதற்கோ ஒரு வேட்பாளரைத் தெரிவுசெய்தால், நாமே இன்னுமொரு கதிர்காமரையோ நீலம் திருச்செல்வத்தையோ, அன்றேல் கருணாவையோ உருவாக்குகிறோம் என்பதே அர்த்தம். தவிர சி வி கே சிவஞானம் அவர்கள் சரியான தெரிவல்ல, மாவையும் அவ்வழியே, இதற்குத் தகுதியானவர் கஜேந்திரகுமார் பென்னம்பலமே. இதுவரை எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளுக்கும் பணிந்துபோகாதவர். இந்தியாவால் வெறுக்கப்படுபவர், சிங்களத்திற்கு அனியாயத்துக்கும் அதிகமான கடும்கோட்பாட்டாளர். எனது தெரிவு கஜஏந்திரகுமார் பொன்னம்பலமே. அனால் சம்பந்தனும் சுமந்திரனும் முதலையும் முடவனும் போன்றவர்கள் தமிழர்களைக் கேவலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தமிழர்கட்குத் தேவை இப்போது இன்னுமொரு கட்சியல்ல இன்னுமொரு இயக்கம், அது கூத்தமைப்பாய் இருக்காது. 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை அபிலாசைகளை இவராவது பூர்த்தி செய்வாரா அல்லது மற்றைய அரசியல் வாதிகளைப்போலவே இவரும் இருப்பாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம் 


எந்த கருத்தையும் அறுதி உறுதியாக இப்போது சொல்ல முடியாது 

விக்கினேஸ்வரன் அரசியலில் அதிகம் அறியப்படாதவர். வடமாகாண சபை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட கூடியதல்ல. அப்படிப் பயன்பட்டால் அது அரசின் நிகழ்சி நிரலை முன்னெடுக்கத்தான் உதவும். இது தமிழ் மக்கள் மீது நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தை வெளிப்படுத்தும் பிரச்சாரத்திற்குதான் பயன் படும். அப்போதுதான் அகில இலங்கை தமிழரின் குரலையும் வெளிக்கொண்டுவர உதவும். காலா காலமாக தமிழரசுக்கட்சி கொழும்பு தமிழரின் குரலாக குற்றம் சாட்டப்பட்டிருக்கு. ஆனால் அதன் தலைமைகளின் நேர்மை, கொள்கையில் இருந்த  பிடிப்பு, அதை அசையாத தமிழரின் குரலாக வைத்திருந்தது. எனவே விக்கினேஸ்வரன் இன்னொரு கொழும்பு தமிழராக குற்றம் சாட்டப்பட்டால் அது தீமையாக முடிவடையும் என்பதல்ல. அவர் எல்லா தமிழரையும் இணைத்து, பிரதானமாக கக்கீம் போன்ற முதுகில் குத்தும் சதிகளால் அரசிடம் இழந்து போய்கொண்டு கிழக்கை மீழ அவரால் நிறையச் செய்ய முடியும்.

 

வடக்கை அபிவிருத்து செய்வதல்ல தற்போதைய அரசியல் பிரச்சனை. அபிவிருத்தி என்ற பெயரில் அரச அடிவருடிகள் கிழக்கையும் வடக்கையும் அரசிடம் அடகு வைக்காமல் தடுத்து நிறுத்துவதாகும். விக்கினேஸ்வரன் உணர்வுள்ள (Sensitive) மனிதர் போல காணப்படுகிறார். எனவே மரக்கட்டைக்கு மக்கள் எதை சொன்னாலும் கவனியாமல் தன் பாட்டில் போவார் என்று நான் நம்பவில்லை. சுமந்திரனுக்கு சில ஆசைகள் இருக்கலாம். ஆனால் சம்பந்தர் கூட்டமைப்பை மறக்க மாட்டார். எனவே அவர்கள் ஆதரித்த வேட்பாளர் என்பதற்காக விக்கினேஸ்வரன் மீது குற்றம் ஒன்றையும் வைக்காமல் தள்ளிவிடக்கூடாது. ஒத்துழைப்போம். நல்லது நடக்கும்.

வரவேற்போம் நீதியரசர் விக்கினேஸ்வரனை.


ஒட்டு மொத்த தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை அபிலாசைகளை இவராவது பூர்த்தி செய்வாரா அல்லது மற்றைய அரசியல் வாதிகளைப்போலவே இவரும் இருப்பாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்

 

நிதானமான சிந்தனை.

Edited by மல்லையூரான்

நல்ல விடயம். இவர் வெற்றியாளர் ஆனால் அதன் பின் சிங்களம் செய்யும் கூத்துக்களை  உலக நாடுகள் பார்க்கும் தானே.

 

பொதுவான ஒருவர் முதலமைச்சர் ஆனால் தான் பிரச்சனை உலக பக்கம் தெரிய வரும்..

 

ஒரு நீதியாளனே ஆள வரும் போது  உண்ண்மையை சொல்லாமால் போகப்போகிறாரா?

 

கிராணி பண்டாரா நாயாக்கா  போல்  இவரும் சிங்களத்தின் உண்மையை உலகுக்கு சொல்லும் நாள் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

எனி நடக்கிறதை கூத்துப் பார்க்க வேண்டியதுதான். அதுதான் தமிழர்களுக்கு கைவந்த கலையாச்சே..!

 

மீண்டும்.. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள்.. ஏமாற்றப்படப் போகும் காலம் அதிக தொலைவில் இல்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். இவர் வெற்றியாளர் ஆனால் அதன் பின் சிங்களம் செய்யும் கூத்துக்களை  உலக நாடுகள் பார்க்கும் தானே.

 

பொதுவான ஒருவர் முதலமைச்சர் ஆனால் தான் பிரச்சனை உலக பக்கம் தெரிய வரும்..

 

ஒரு நீதியாளனே ஆள வரும் போது  உண்ண்மையை சொல்லாமால் போகப்போகிறாரா?

 

கிராணி பண்டாரா நாயாக்கா  போல்  இவரும் சிங்களத்தின் உண்மையை உலகுக்கு சொல்லும் நாள் வரும்

 

சந்திரகாந்தனும் தான் விழுந்தடிச்சு வாங்கின முதலமைச்சர் பதவியை.. ஒரு உப்புச் சப்பற்ற முதலமைச்சர் பதவி என்று சொன்னார். எந்த உலகம் கேட்டிச்சுது..??!

 

சந்திரகாந்தன் முதலமைச்சர் ஆன போதும் அவர் முன்னாள் புலி என்று சொல்லி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன தானே. நாமே நம்மைச் சுத்தி ஒரு வட்டத்தை வரையப்படாது.

 

என்னுடைய கவலை.. விக்னேஸ்வரனை.. சந்திரகாந்தன் லெவலுக்கு சம்பந்தன் இறக்கினது தான்..! :lol:

Edited by nedukkalapoovan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்:

003_CI.jpg

 

வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டதையடுத்து எடுத்துக்கொண்ட படம். 
 
படத்தில் ஹென்றி மகேந்திரன்,  என்.சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, க.சர்வேஸ்வரன் ஆகியோர் அமர்த்திருப்பதைக்காணலாம். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதவான் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதவான் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நீதவான் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை பாராளுமன்றக் குழுத் தலைவர் இராசம்பந்தனும் உறுதி செய்துள்ளார்.
 
வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தெரிவதா அல்லது சீ.வீ.விக்னேஸ்வரனை தெரிவு செய்வதா என்பது தொடர்பில் சர்ச்சை நீடித்து வந்தது.
 
இதன்படி, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான தீர்மானங்கள் எதிர்வரும் காலங்களில்  எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இருக்கின்றார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்

விக்னேஸ்வரன் ஒரு சந்தர்ப்ப வாதியாக இருக்க விரும்பினால் தமிழ் இனத்தை முழுமையாக மகிந்தவின் காலடியில் விழ வைக்கலாம் .... வாசுவின் ஆசிர்வாதத்துடன் !!!!!!!!

அவர் தமிழர் மானம் காக்க விரும்பினால் வாசுதேவா விக்ரமபாகு மனோ கணேசன் போன்றதலைவர்களை ஓரணியில் திரட்டி தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்ற முயலலாம்

ஆனால்... அவற்றைச் செய்வதற்கு அவர் உயிருடன் இருக்க வேண்டும்,,,,.. தமிழர்களின் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அமைய அவர் துரோகிப் பட்டத்துடன் கொல்லப்படலாம் ....அல்லது... கோதபயாவினாலும் கொல்லப்படலாம் .......

பொறுத்திருந்து பார்ப்போம்

ஆனால்... அவற்றைச் செய்வதற்கு அவர் உயிருடன் இருக்க வேண்டும்,,,,.. தமிழர்களின் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அமைய அவர் துரோகிப் பட்டத்துடன் கொல்லப்படலாம் ....அல்லது... கோதபயாவினாலும் கொல்லப்படலாம் .......

பொறுத்திருந்து பார்ப்போம்

 

ஏன்  ஹிந்திய கொலைகாரக் கும்பலை விட்டுவிட்டீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி தவறு இருக்கட்டும்.4ட்டமைப்பு முடிவு எடுத்து விட்டது.விக்கினேஸ் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற வைப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்திற்கான தமது அவாவை மீண்டும் உலகுக்குக் காட்ட வேண்டும்.அளிக்னப்படும் வாக்குகள் விக்கிக்கோ,சம்பந்தனுக்கோ,சுமத்திரனுக்கோ அளிக்கப்படுவது என்று பொருள் ஆகாது.அந்த இடத்தில் ஒரு பொம்மைழய வேட்பாளாராக்கினாலும் வெல்ல வைக்க வேண்டியது தமிழ்மக்களின் கடமை.இது தமிழ்த்தேசியத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள் என்பதை சம்பந்தன் வகையறாக்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் உலகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • 1 year later...

பழையபதிவு

வேலியிலை போன மட்டத்தேளைப் பிடிச்சு சீலைக்குள்ளை விட்டுட்டமே எண்டு சம்சும் சும்சும் மாம்சும் இப்ப கவலைப்படுவினம்  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர் எதிர்தனர் என்று கூறவில்லை. புல வாலுகள், யாவாரிகள், ஓ த அமைப்பு போன்றவை எதிர்த்தார்கள்.

இதுக்கு இந்த திரியில் இவர்களால் எழுதபட்டவையே சாட்சியும் ஆகிறன.

பெரிய பொல்லைக் கொடுத்தால் அடியும் பலமாய்தான் விழும் :)

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.