Jump to content

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

New update about Chennai Metro Phase II - Extension of the project up to Thiruvottiyur, Chennai North.

 

 

18augthajs01_metro__165305e.jpg

 

 

 

சென்னை: வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் வழித் தடத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டபேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

ஆளுநர் ரோசய்யா தனது உரையின்போது, ''சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை இங்கு நான் மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். நமது முதலமைச்சர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்தடத்திற்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும் இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த அரசால் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் பொது அமைதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதை எதிர்கொண்டு தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு உறுதிக் கொண்டுள்ளது. இதன்மூலம் 2013௧4 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை மிஞ்சும்" என்று  கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23950

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

80981729.jpg

 

ஆஹா...! சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்துவிட்டதப்பு... :D:lol:

 

http://youtu.be/tOH8BY-Oj0I

 

 

15-1392458003-chennai-metro-600.jpg

 

15-1392457893-chennai-metro4-600.jpg

 

 

கோயம்பேடு- அசோக்நகர் இடையே 'மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டம்

 

சென்னை: கோயம்பேடு - அசோக்நகர் இடையே இன்று 2-வது நாளாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது.

 

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இன்று 2-வது நாளாக சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது.

 

சோதனை ஓட்டத்தின் போது வழிநெடுக வீடுகளில் உள்ள மக்கள் மாடியில் நின்று கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும். சென்னையில் இயக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயில் மற்ற மாநிலங்களில் ஓடக்கூடிய மெட்ரோ ரெயில்களை விட பல்வேறு சிறப்புகளை பெற்றது. சென்ட்ரல்- எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இது விடப்படுகிறது.

 

மொத்தம் 42 மெட்ரோ ரெயில்கள் சென்னையில் உலா வர இருக்கின்றன. இதில் 9 ரெயில்கள் பிரேசில் இருந்தும், மற்ற ரயில்கள் ஆந்திராவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். இந்த ரயில்கள் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். ஒரு மெட்ரோ ரயிலில் (4 பெட்டி) மொத்தம் 1276 பேர் பயணம் செய்ய முடியும் 176 இருக்கைகள் உள்ளன. 1100 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.

 

இந்த ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக 16 இடங்களில் கண்காணிப்பு கேமிரா இருக்கும். அவசர வசதிகளும், ஊனமுற்றோர், மற்றும் வயதானவர்கள் பயணம் செய்ய வீல் சேர்களும் இடம்பெற்று உள்ளன.

 

கடந்து சென்ற ரயில் நிலையம், வர இருக்கும் நிலையங்கள் உள்பட பல்வேறு விவரங்களை அறியும் வகையில் எல்.இ.டி.(LED) திரை ரயிலில் இருக்கும். இது தவிர ரயில் நிலையங்களை குறிப்பிடும் வரைப்படமும் பயணிகள் பார்வைக்காக இருக்கும். பயணிகளின் அவசர உதவிக்கு ரயில் டிரைவரை அழைக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தி அவரிடம் தகவல் தெரிவிக்கலாம்.

 

ரயில் பெட்டி முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயிலில் சிறப்பு வகுப்பு, சாதாரண வகுப்பு என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டி முழுவதும் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் வெளியே பார்ப்பதற்கு வசதியாக இருபுறமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

 

இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை, ஜூன் மாதத்தில் இயக்கப்படும் என்று தெரிகிறது.

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/chennai-metro-holds-trial-on-elevated-section-193582.html

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி.. :D

ஜூன் மாதத்தில் தொடங்குவதுதான் முதற்கட்ட ஓட்டமா? முதற்கட்டத் திட்டத்தில் எத்தனை சதவிகிதம் முடிவுக்கு வந்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.. :D

ஜூன் மாதத்தில் தொடங்குவதுதான் முதற்கட்ட ஓட்டமா? முதற்கட்டத் திட்டத்தில் எத்தனை சதவிகிதம் முடிவுக்கு வந்துள்ளது?

 

ஆமாம் டங்கு. இது மொத்த திட்டத்தில் தோராயமாக் கால் சதவீதம் மட்டுமே இருக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளெல்லாம் நிலதிற்கு கீழே 20 மீ ஆழத்தில் குடைந்து சுரங்கம் மூலம் இயக்கப்படுமாதலால், பணிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கும், சவால்களுக்குமிடையே மிக தாமதமாகவே நிறைவேறி வருகிறது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2enoisn.jpg

 

சோதனை ஓட்டத்திற்கு முன் பூஜை வழிபாடு..

 

 

ohpx8h.jpg

 

கோயம்பேடு நிலையத்தில் புறப்பட தயாரான நிலையில்..

 

 

2w3c7mf.jpg

 

ரயிலின் டிரைவர் அறையில்..

 

 

dpuvpg.jpg

 

சோதனை ஓட்டத்தில் நகர்வலம்..

 

 

2pouvpk.jpg

 

உற்சாகமாக கையசைத்து வரவேற்கும் மக்கள்.. :)

Link to comment
Share on other sites

இந்த மெட்ரோ ரயிலை இயக்கப்போவது யார்? இது தனியார் குழுமத்தால் (அரச உதவியோடு) நடத்தப்படபோவது தானே?

இந்த metro rail வேலைகளில் எவ்வளவு பேர் இறந்தார்கள் அல்லது கடுமையாக காயப்பட்டார்கள்? அவர்களுக்கு சரியான படி இழப்பீடு கொடுக்கப்பட்டதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெட்ரோ ரயிலை இயக்கப்போவது யார்? இது தனியார் குழுமத்தால் (அரச உதவியோடு) நடத்தப்படபோவது தானே?

இந்த metro rail வேலைகளில் எவ்வளவு பேர் இறந்தார்கள் அல்லது கடுமையாக காயப்பட்டார்கள்? அவர்களுக்கு சரியான படி இழப்பீடு கொடுக்கப்பட்டதா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய மத்திய அரசும், தமிழ் நாடு அரசும் இணைந்த கூட்டு நிறுவனமாகும். இருவருக்கும் இதில் சம பங்குண்டு. நடத்தப் போவது மத்திய அரசின் வழிகாட்டலில் தமிழக அரசு திறம்பட நடத்தும். (ஒரு நம்பிக்கைதான் :) )

இத்திட்டப் பணி நடக்குமிடத்தில் சில விபத்துக்கள் நடந்துள்ளன. ஆனால் இறந்த/காயம்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் அனுசரனையில் வேலை பார்த்தவர்கள். அவர்களின் ஆயுள் இழப்பீட்டுத் தொகைக்கு அந்நிறுவனமே பொறுப்பு. அரசாங்கமும் கருணைத் தொகை அளித்தது போக,  இழப்பீட்டுத் தொகையை சீக்கிரம் வழங்க உரிய அழுத்தமும் , நடவடிக்கையும் அவ்வப்பொழுது எடுத்தே வருகிறது.

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு..., வாழ்த்துக்கள்...! :D

 

காதலர் தினத்தை அண்மித்து ஆரம்பிப்பதால் காதலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்...! :wub:

Link to comment
Share on other sites

இந்த ரயில் சேவையை சிறப்பாக நடத்திக்காட்டி மற்ற மாநிலங்களுக்கு நல்லுதாரணமாக விளங்க வாழ்த்துகிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

கொஞ்ச  நாட்களில் 

மேலேயும்

கதவுகளிலும் ஆட்கள் தொங்காமல் இருந்தால் சரி........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு..., வாழ்த்துக்கள்...! :D

 

காதலர் தினத்தை அண்மித்து ஆரம்பிப்பதால் காதலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்...! :wub:

நன்றி சுவி.

நீங்கள் ஜோடியாக வந்தால் (ஓ..ரொம்பவும் கற்பனை செய்து விடாதீர்கள், உங்கள் இல்லத்தரசியுடன் தான்...!) நிச்சயம் முன்னுரிமை அளிக்கபடும் சுவி. :)

 

இந்த ரயில் சேவையை சிறப்பாக நடத்திக்காட்டி மற்ற மாநிலங்களுக்கு நல்லுதாரணமாக விளங்க வாழ்த்துகிறேன். :D

ரொம்ப நல்ல மனசு. நன்றி.

 

வாழ்த்துக்கள்

கொஞ்ச  நாட்களில் 

மேலேயும்

கதவுகளிலும் ஆட்கள் தொங்காமல் இருந்தால் சரி........

நன்றி.

யாரும் மெட்ரோ ரயிலில் தொங்கியவாறு பயணிக்க முடியாது, ஏனெனில் இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூடினால் தான் ரயில் கிளம்பும், ரயில் நிலையங்களில் மட்டுமே இது திறக்கும்.

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம்  சந்தோசம். அந்தரத்தில போற சாமான், சென்னை விமான நிலையம் போல கழன்று விழாட்டிக்கு இன்னும் நல்லது, கையோட தமிழக அரசு சென்னை விமான நிலையத்தில உருப்படியான மலசல கூடங்களையும் அமைத்து பராமரிக்க வேண்டும். யார் யார் எத்தினை கோடியை சுட்டு சுவிஸ் பாங்கில போட்டாங்களோ .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dpuvpg.jpg

இந்த மெட்ரோ பாலத்திலை நம்ம விஜய் பறந்து வந்து பைட் பண்ணுறமாதிரி ஒரு படம் எடுத்தால் அந்தமாதிரியிருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம். ஆளும்கட்சி மாறி அடுத்த தேர்தலில்பின் வேறு ஒருகட்சி ஆளும்கட்சியானால் சென்னை மெட்ரோ ரயிலில் ஊழல் என்று எதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள் என்று சந்தேகம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

நாட்டிலேயே சென்னை சுரங்கப் பாதை தான் சவாலானது...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 30% சுரங்கப் பணி முடிந்தது!

 

Tamil_Daily_News_23981440068.jpg

 

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் 30% முடிவடைந்துள்ளன. முழு பணியும் முடிவடைந்து சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயங்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். கடினப் பாறைகள், கடல் ஓர நகரம் என்பதால் பிற நகரங்களை விட சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் சுரங்கப் பாதை சவால் நிறைந்ததாக உள்ளது. சுரங்கப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் தடம் புரண்டலோ அல்லது தீ விபத்து நிகழ்ந்தலோ உடனடியாக ரயில் நிறுத்தப்படும்.

இதற்காக ஒவ்வொரு 250 மீட்டருக்கும் 2 நடைபாதைகளை இணைக்கும் வகையில் இணைப்பு பாதைகளும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு 100மீட்டருக்கும் ஒரு தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பணிகளை விட சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பணிகள் சவால் நிறைந்ததாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80737

 

 

அடுத்த ஆண்டு இறுதியில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்க திட்டம்!

 

metro1.jpg

 

metro2.jpg

சென்னை அண்ணா நகர் டவர் வரை தோண்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப் பணி

 

அடுத்த ஆண்டு (2015) இறுதியில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெறுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டம்) ராமநாதன் தெரிவித்தார்.

சென்னை ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெறுகின்ற இடத்துக்கு செய்தியாளர்கள் சனிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிவடைந்துள்ளன. மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இப்போது நேரு பூங்கா - எழும்பூர், ஷெனாய் நகர் - அண்ணாநகர் டவர் இடையிலான சுரங்கப் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. சுரங்கப் பணிகள் முடிந்ததும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கத்தில் மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு (2015) டிசம்பர் மாதத்தில் இருந்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக பயணிகள் பயன்பாட்டுக்கு வரும். இதனை திட்டமிட்டே வேலைகள் நடந்து வருகின்றன.

உயர்மட்டப் பாதை பணிகளை திட்டமிட்டப்படியே குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிடலாம். ஆனால், சுரங்கப் பாதை பணிகளை அவ்வாறு திட்டமிட்டப்படி முடிப்பது சிரமம். சுரங்கப் பணியின்போது ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றார் ராமநாதன்.

சென்னை மெட்ரோ ரயில், முதன்மை பொது மேலாளர் (கட்டுமானம்) வி.சோமசுந்தரம்: நேரு பூங்கா - எழும்பூர் இடையே சுரங்கப் பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஏராளமான பாறைகள் பூமிக்கடியில் இருந்ததால், இந்தப் பணியை முடிக்க ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சென்னை பழமையான நகரம் என்பதாலும் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலான பகுதியில் பாரம்பரிய கட்டடங்கள் இருந்ததால், சுரங்கம் வாயிலாக மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டது.

மக்கள் நெரிசல் அதிகமிருக்கும் வட சென்னை பகுதி என்பதால் மிகவும் எச்சரிக்கையாகவே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் கட்டட விரிசலால் பிரச்னைகள் ஏற்பட்டன. அவற்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் சீரமைத்து கொடுத்துவிட்டது. இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் வரை சுரங்கப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் பணிக்காக 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிகையுடன் பணிகள் நடந்து வருகின்றன என்றார் சோமசுந்தரம்.

ரசாயனம் இல்லை:

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும்போது சில நேரங்களில் வெளியேறும் நுரையுடன் கூடிய நீர் ரசாயனம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் எளிதாக சுரங்கம் தோண்ட டனல் போரிங் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அப்போது நில மணலின் அழுத்தத்தை குறைக்கவும், மணலை மிருதுவாக்கவும், அறிவியில் முறையில் கலவை ஒன்று நீருடன் செலுத்தப்படுகிறது.

பூமிக்கடியில் டனல் போரிங் இயந்திரம் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக, நுரையுடன் கூடிய நீர் சில நேரங்களில் கண்ணுக்கு தெரியாத துளைகள் மூலமாக வெளியேறிவிடுகிறது. அந்த நீர்

ரசாயனக் கலவை இல்லை. இதனால் பொது மக்கள் அச்சமைடையத் தேவையில்லை என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அடியில் நடக்கும் பணிகள்:

1. சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

2. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ளன.

3. பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டருக்கு கீழ் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

4. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டர் கீழே தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக பாதை அமைகிறது.

5. தோண்டிய மண், பாறை போன்றவை கன்வேயர் பெல்ட் மூலமாக வெளியேற்றப்பட்டு விடும்.

6. 6.2 மீட்டர் விட்டத்தில் பள்ளம் தோண்டத் தோண்ட, அதையொட்டி, 0.4 மீட்டர் தடிமனில், கான்கிரீட் லேயர்களை உடனுக்குடன் போடும் வசதி உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

7. 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப்பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால் குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது.

8. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படும்.

9. மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே சுரங்கப் பணிகள் நடைபெறும். மீதமுள்ள நாள்கள் டனல் போரிங் இயந்திரம் பராமரிக்கப்படும்.

10.உலக சாதனையாக மண்ணடியில் ஒரே நாளில் 54 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

 சுரங்கத்தில் முழுமையான பாதுகாப்பு:

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் முழுமையான பாதுகாப்பு வசதிகள் பயணிகளுக்கு செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

1. மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் 100 அடிக்கு ஒரு தொலைபேசி

2. 100 அடிக்கு ஒரு தீயணைப்பு கருவி

3. தீ அல்லது எவ்விதமான விபத்து ஏற்பட்டாலும் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் நிறுத்தப்படும்.

4. சுரங்கத்தின் ஒவ்வொரு 250 மீட்டர் தொலைவிலும் அவசர வழி அமைக்கப்படும்.

5. பயணிகள் ஆபத்துக் காலத்தில் ரயிலில் இருந்து இறங்கி 250 மீட்டர் தூரத்தில் உள்ள அவசர வழி மூலம் பக்கத்து சுரங்கத்துக்கு சென்று விடலாம்.

6. பின்பு, பக்கத்து சுரங்கத்தில் இருந்து அருகில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு செல்லலாம்.

7. நில அதிர்வு, இயற்கை சீற்றங்களால் சுரங்கப் பாதையும் ரயில் பயணமும் மக்களை பாதிக்காது

8. சுரங்கப் பாதை முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படும்.

 சுரங்க ரயில் நிலையங்கள்:

சென்னை மெட்ரோ ரயிலுக்காக 19 சுரங்க ரயில் நிலையங்கள் இரண்டு வழித்தடங்களில் அமைக்கப்படுகின்றன.

வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே....

1. வண்ணாரப்பேட்டை
2 மண்ணடி
3. உயர்நீதிமன்றம்
4. சென்ட்ரல்
5. அரசினர் தோட்டம்
6. எல்.ஐ.சி.
7. ஜெமினி
8. தேனாம்பேட்டை
9. சேமியர்ஸ் சாலை
10. சைதாப்பேட்டை

சென்ட்ரல் - பரங்கிமலை (வழி: திருமங்கலம்) இடையே....

1. சென்னை சென்ட்ரல்
2. எழும்பூர்
3. நேரு பூங்கா

4. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி
5. பச்சையப்பன் கல்லூரி
6. ஷெனாய் நகர்
7. அண்ணா நகர் கிழக்கு
8. அண்ணா நகர் டவர்
9. திருமங்கலம்
 
உயர்மட்டப் பாதையில்...

சென்னை மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையில் 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன.

வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே....

1. சின்னமலை
2. கிண்டி
3. ஆலந்தூர்
4. ஓ.டி.ஏ.
5. மீனம்பாக்கம்
6. விமான நிலையம்
 
சென்ட்ரல் - பரங்கிமலை இடையே....

1. கோயம்பேடு
2. கோயம்பேடு பேருந்து நிலையம்
3. அரும்பாக்கம்
4. வடபழனி
5. அசோக்நகர் - கேகே நகர்
6. சிட்கோ
7. பரங்கிமலை

 

Thanks:Dinamani

 

Link to comment
Share on other sites

மேலும் புதிய படங்களையும் பதியுங்கள்..நீங்கள் சென்னையிலா இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் புதிய படங்களையும் பதியுங்கள்..நீங்கள் சென்னையிலா இருக்கிறீர்கள்?

 

இல்லை,துபை. பொறியாளர்களுக்கு சவாலான உலக விடயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டு. அந்தவகையில் இந்த சென்னை மெட்ரோ செய்திகளையும் படிப்பேன் (தமிழ்நாட்டின் தலைநகரில் வருவதாயிற்றே..!) யாழ்கள 'டங்குவாரு'க்கும் இச்செய்திகள், தொழில் சார்ந்திருப்பதால் சுவாரசியமாக இருக்கும்.

 

ஆனால் மற்ற வெகுஜனங்களுக்கு இவை சலித்துவிடும். ஆகையால் முக்கிய புள்ளிவிவரங்களை மட்டும் அடிக்கடி 'அப்டேட்(update)' செய்கிறேன். மேலும் அதிக படங்கள் இணைத்தால், யாழ் இணைய பக்கங்கள் கணணியில் மிக மெதுவாக தோன்றுமாதலால் தயங்குகிறேன். :)

'நாந்தான்', நீங்கள் பொறியியல் சம்பந்தப்பட்ட துறையிலா இருக்கிறீர்கள்?  ஆர்வமாக இருக்கிறீர்களே..? :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10.உலக சாதனையாக மண்ணடியில் ஒரே நாளில் 54 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

 

சுரங்கப் பாதை தோண்டும் பணியில்... உலகச் சாதனையாக, 54 மீற்றர் தமிழ் மாண்ணில் தோண்டி சாதனை படைத்த பொறியியலாளருக்கு நன்றி. :)

 

டிஸ்கி: பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரி, லாரியாக‌ மண் அள்ளுவதில் தான்... எமக்கு முன் அனுபவம் இருக்கே... :D  :lol:

Link to comment
Share on other sites

சுரங்கப் பாதை தோண்டும் பணியில்... உலகச் சாதனையாக, 54 மீற்றர் தமிழ் மாண்ணில் தோண்டி சாதனை படைத்த பொறியியலாளருக்கு நன்றி. :)

டிஸ்கி: பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரி, லாரியாக‌ மண் அள்ளுவதில் தான்... எமக்கு முன் அனுபவம் இருக்கே... :D:lol:

அடப்பாவிகளா.. :D அந்த முறையில் அள்ளினால் ஒரு நாளைக்கு ஐந்து அடிகூட முன்னேற முடியாது.. :o

சுரங்கம் துளையிடும் இயந்திரம் ஒரு மண்புழு மாதிரி. மண்புழு எப்படி மண்ணை விழுங்கி பின் பக்கத்தால் தள்ளி முன்னேறுமோ அப்படித்தான் இந்த இயந்திரமும் செய்யும்.

கன்வேயர் பட்டியின் மூலம் வெளிவரும் பாறைத்துகள்களை ரெயில் கார் வசதி மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை மூலம் வெளியே எடுத்து வரலாம்.

இனைப்புகளுக்கு நன்றி ராசவன்னியன் அண்ணா..

Link to comment
Share on other sites

'நாந்தான்', நீங்கள் பொறியியல் சம்பந்தப்பட்ட துறையிலா இருக்கிறீர்கள்?  ஆர்வமாக இருக்கிறீர்களே..? :rolleyes:

 

எனக்கும் பொறியியல்/கட்டுமான/கனரக/ துறைகளில் உள்ள தொழிழ்நுட்பங்களை அறிவதில் ஆர்வம்....

நானும் கட்டட கட்டுமான பணியில் வேலை புரிந்தவன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் புதிய படங்களையும் பதியுங்கள்..

 

உங்கள் ஆசையை கெடுப்பானேன்? :rolleyes:

 

இதோ திட்டப்பணியிடத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்...

 

 

Metro%201_eps.jpg

 

Metro%207_eps.jpg

 

Metro%206_eps.jpg

 

Metro%204_eps.jpg

 

Metro%203_eps.jpg

 

Metro%202_eps.jpg

 

Metro%205_eps.jpg

 

 

Thanks: Indian Express.

 

Link to comment
Share on other sites

மிக்க நன்றி வன்னியன்...

இந்த இரயில் நிலையங்களின் ஆர்கிடெக்ட் நிறுவனங்கள் இந்திய (தமிழ்நாட்டு) நிறுவனங்களா?

 

தமிழ்நாட்டில் தமிழ் கருவோடு கட்டிடங்களை வடிவமைத்தால் இன்னும் நல்லது (கோயில் கோபுர சாயலில்) :)

 

முன்னறிய நாடுகளின் தொழில் நிறுவனங்களுடன் வேலை செய்யும் பொது இந்தியாவில் உள்ள தொழிலாளர்களும் பாதுகாப்பான முறையில் வேலை செய்ய முற்படுவார்கள்....

 

மும்பை விமான நிலைய நிர்மானிப்பை பற்றிய ஒரு படம் youtube  இல் உள்ளது..அதில் வேலை செய்யும் எந்த தொழிலாளரிடமும் பாதுகாப்பு கையுறை இல்லை...எல்லாரும் வெறும் கையால் தான் எல்லா வேலையும் (இரும்பை கையாளுதல்) செய்கின்றார்கள்...

 

இந்தியாவில் அளவு கூடிய மனித வலு..ஆகவே தான் அதற்க்கு மதிப்பு இல்லை....

Edited by naanthaan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு ஒப்பத்தங்களின்(Contracts) விபரம்:

 

இந்த திட்டத்தின் பல்வேறு பகுதிகள்(Modules) தனித்தனி பொதிகளாக(Pakages) வகைப்படுத்தப்பட்டு ஒப்பந்தங்கள் பலவேறு நிறுவனகளுடன் போடப்பட்டுள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் எந்தவொரு நிறுவனமும் திட்டவேலைகளை செயல்படுத்தலில் குறிப்பிட்ட காலதிற்குள் போதிய முன்னேற்றம் காண்பிக்கவில்லையெனில், அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு வேறு புதிய நிறுவனத்திற்கு வழக்கப்படும். அவ்வாறு சிலமுறை இத்திட்டத்திலும் நடந்துள்ளது.  இத்திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தேயாகவேண்டும்.

 

சில இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு நிறுவனமாக( Joint Venture - JV) பதிவு செய்து ஒப்பந்தகளும் பெற்றுள்ளன.

 

இனி ஒப்பந்தகாரர்களை பார்ப்போமா?

 

1. M/s. Soma Enterprise Limited  -  Design and construction of elevated viaduct from Koyambedu to Ashok Nagar.(Contract: Rs. 199.20 Crores)

 

2. M/s. Larsen & Toubro Limited (L&T) - Design and construction of elevated viaduct including viaduct at stations from Ashok Nagar to St. Thomas Mount (Contract:Rs. 145.03 Crores)

 

3. M/s. Larsen & Toubro Limited (L&T) - Design and construction of elevated viaduct including viaduct at stations from Saidapet to Officers Training Academy (OTA) (Contract:s. 173.31 Cr.)

 

4. M/s Tantia Construction Limited - Prefilling of Koyambedu Depot (Contract:Rs. 20.52 Crores)

 

5. M/s Consolidated Construction Consortium Limited (CCCL) - Design and construction of five elevated stations - Koyambedu, CMBT, Arumbakkam, Vadapalani and Ashok Nagar/K.K.Nagar (Contract:Rs. 139.54 Crores)

 

6. M/s Consolidated Construction Consortium Limited (CCCL) - Design and construction of five elevated stations - Little Mount, Guindy, Alandur, OTA and SIDCO (Contract: Rs. 94.99 Crores)

 

7. M/s Alstom Transport S.A & Alstom Projects India Ltd Consortium - Design, Manufacture, Supply, Testing and Commissioning of Electric Multiple Units (EMUs) and Training of Personnel (Contract: Rs. 1471.39 Crores)

 

8. M/s. Larsen & Toubro Limited (L&T) - Design and construction of Koyambedu Depot and Supply of Depot Minor Machines (Contract: Rs. 198.10 Crores)

 

9. M/S Transtonnelstroy-Afcons JV - Design and construction of underground stations at Washermanpet, Mannadi, High Court, Chennai Central and Egmore and Associated Tunnels (Contract: Rs. 1566.81 Crores)

 

10. M/S Metro Tunnelling Chennai (L&T - SUCG - JV) - Design and construction of underground stations at Nehru Park, Kilpauk Medical College and Pachaiappa's College and Associated Tunnels (Contract : Rs. 930.80 Crores)

 

11. M/S Transtonnelstroy-Afcons JV (Design and construction of underground stations at Shenoy Nagar, Anna Nagar East, Anna Nagar Tower and Thirumangalam and Associated Tunnels. (Contract: Rs. 1031.00 Crores)

 

12. M/S Consolidated Construction Consortium Limited (CCCL) - Design and construction of an elevated station at St.Thomas Mount.(Contract: Rs. 78.61 Crores)

 

13.  M/S. Larsen & Toubro Limited, Alstom Transport, SA and Alstom Projects India Ltd.- JV - Design and construction of Track Work in Viaduct, Tunnel, Underground and depot in Corridor I & II (Contract:Rs. 449.23 Crores)

 

14. M/S Johnson Lifts Pvt. Limited and SJEC Corporation - JV - Lifts and Escalators (Design and Build (Contract:Rs. 197.60 Crores)

 

15. M/S Siemens, AG and Siemens India Limited Consortium - Traction/Substations (Power Supply and Overhead Equipment, Design and Build (Contract:Rs. 304.43 Crores)

 

16. M/S Gammon-OJSC Mosmetrostroy JV - Design and construction of Underground Stations at Government Estate, LIC Building and Thousand Lights and Associated Tunnels (Contract: Rs. 932.88 Crores)

 

17. M/S Gammon-OJSC Mosmetrostroy JV - Design and construction of Underground Stations at Gemini, Teynampet, Chamiers Road and Saidapet and Associated Tunnels (Contract: Rs. 1014.42 Crores)

 

18. M/S Siemens Aktiengesellschaft, Germany and Siemens Limited India Consortium - Signalling, Platform Screen doors and Tele-communications(Design and Build (Contract: Rs. 627.13 Crores)

 

19. M/S The Nippon Signal Co Ltd - Automatic Fare Collection (AFC) System - Design and Build (Contract:Rs. 109.88 Crores)

 

20. M/S Emirates Trading Agency LLC, Dubai and ETA Engineering Private Limited, India Consortium - Tunnel Ventilation System - Design and Build (Contract:Rs. 241.83 Crores)

 

21. M/S Voltas Ltd - Underground Stations Air Conditioning System (Design and Build) (Contract: Rs. 196.20 Crores)

 

22. M/S. Lanco Infratech Limited - Design and Construction of Elevated Station at Meenambakkam, Architectural Builders Works and Finishes(ABWF) and Building Services Works(BS) for Chennai Airport Station, Viaducts, Ramps and Cut - Cover Tunnel between OTA Station and Chennai Airport Station. (Contract: Rs. 178.94 Crores)

 

23. M/S Arthur D Little Limited - Independent Safety Assesment of Signalling & Train Control System & Platfform Screen Doors Systems (Contract: s. 3.33 Crores)

 

24. M/S SGS India Pvt Ltd - Inspection And Testing Of Rails at Tata Steels ( UK & FRANCE ) (Contract: Rs. 0.12 Crores)

 

25. The New India Assurance Company Limited, Chennai - Commercial General Liability Insurance - Sum Assured Rs.100 Crores (Contract: Rs. 0.41 Crores)

 

26. M/s Allied Digital Services Limited, Chennai. - AMC for Computers in CMRL. (Contract: Rs. 3.83 Lakhs)

 

27.  M/s Simplex Infrastructure Limited, Chennai. - Piling and Associated works for construction of Metro Head Quarters Building and Other Metro Amenities at Anna Salai, Nandanam, Chennai.(Contract: Rs.24.59 Crores)

 

28. M/s ITD Cementation India Limited, Mumbai - Construction of Balance Works of Ramps, Cut & Cover Tunnels U Sections, Box Sections, through the air funnel area between OTA station and Meenambakkam Station including surface water drain alongside ramps and Cut & Cover Tunnels of Chennai Metro Rail Project, Phase I (Contract: Rs. 64.86 Crores)

 

29.  M/s Thiruchitambalam Projects Limited, Chennai - Construction of 26 shops including civil, water supply & sanitary and Electrical works in Vegetable Market at Koyambedu (Contract: Rs. 3.2 Crores)

 

30. M/s URC Construction (P) Limited, Bangalore - Construction of Balance Works and services necessary for the complete Meenambakkam Station, Architectural finishes and Building Services Works for Chennai Airport Station MEP Works for Viaduct, Cut and Cover Tunnels and Stations of Chennai Metro Rail Project Phase I (Contract: Rs. 82.19 Crores)

 

31. M/s MV Power Consultants and Engineers (P) Limited, Chennai - Arrangement of Power supply to the Advertisement Boards on Piers and Portals from Koyambedu to Ashok Nagar (Package - 1) (Contract: Rs. 60.47 Lakhs)

 

 

Source: http://chennaimetrorail.gov.in/tenderaward.php

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.