Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்த பெண் மடக்கிபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தையுடன் பிச்சையெடுத்து வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைப் பிள்ளையுடன்; கடந்த சில நாட்களாக நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கொதிக்கும் வெய்யிலில் பி;ள்ளையையும் கொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பகல் பஸ் நிலையத்தை திறக்க வந்த யபாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறித்த பெண்ணைப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்தப் பெண்ணை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/local.php?vid=5936

பிரதேச சபை காரியதரிசி கொட்டேலுக்கு பெண்பிடிக்கப்போய் அவரை பொலீஸ் பிடிக்க திரிந்தது. இப்போது அவர் பொலிசுக்கு பஸ்ராண்டில் பெண்பிடித்து கொடுக்கிறார்கள்? தேவை இல்லாமல் நிர்வாகம் செயாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

----

இந்நிலையில் நேற்று பகல் பஸ் நிலையத்தை திறக்க வந்த யபாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறித்த பெண்ணைப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

------

நாய் பார்க்கிற வேலையை... கழுதை பார்க்கக் கூடாது.

இவர்களுக்கு, பிச்சைக்காரரை பிடிப்பதா வேலை.

அந்தப் பெண்ணை எச்சரித்து விட்டிருக்கலாம். பிடித்தது மட்டுமல்லாது... பொலிசிடமும் ஒப்படைத்துள்ளார்கள்.

ஈ.பி.டீ.பி. காரர்தான்... உந்த வேலைகளைச் செய்யக் கூடியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி யாழ்ப்பாணத்திலை பிச்சையெடுக்கிறதுக்கும் தடையோ? :rolleyes:

பிள்ளையின் நன்மை கருதி செயத்திருந்தால் நல்லது. 

வர வர யாழ்ப்பாணமும் இந்தியா மாதிரி கேவலமா வருகுது....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் பெரும் பொருண்மியத் தடைகள் இருந்த போதும் புலிகளின் காலத்தில் மக்கள் இப்படி பிச்சை எடுத்ததில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்த போதும்.. வேலை இன்றி இருந்த போதும்.. போக்குவரத்து இன்றி இருந்த போதும்.. கப்பல் உணவிற்கு காத்திருந்த போதும்.. அவற்றை சரிவர பங்கிட்டு.. பதுக்கலை தவிர்த்து புலிகள் செய்த சிவில் நிர்வாகமே மக்களை பாதுகாத்தது.

ஆனால் இன்று எல்லாம் இருக்கிறது. சிங்கள அரசின் இராணுவ மயப்படுத்தப்பட்ட.. ஒட்டுக்குழுக்கள் மயப்பட்ட.. ரவுடீச சிவில் நிர்வாகமே மக்களை நிர்க்கதியாக்கியுள்ளது..! இந்த அரசையும்.. இராணுவத்தையும்.. ஒட்டுக்குழுக்களையும் அகற்றாத வரை எமது மக்களுக்கு இந்த அவல நிலை தொடரவே செய்யும். இருந்தாலும்.. தமிழீழ சமூக அமைப்புக்கள் இவை பெருகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பற்ற சிங்கள அரசையும் கொள்ளையடிக்கும் கப்பம் வாங்கும் ஒட்டுக்குழுக்களையும் நம்பி மக்களைக் கையளிக்க முடியாது. கைவிடவும் முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழர்களின் சாம்ராட்சியமாய் ,,,,,,,,,,,மனிதமும்,மாண்பும்,பண்பாடும் ,ஆரோக்கியமும் கொண்டு தமிழின் புகழை எட்டுத்திக்கும் ஒலிக்கவிட்ட அந்த வன்னி இராச்சியம் நினைவில் வந்து என்னை கொள்கிறது 

அந்த வன்னி இராச்சியத்தை விட்டு ஏன் எல்லோரும் ஓடினார்கள் என்றுதான் விளங்கவில்லை .புலிகள் கூட வெளியில் செல்வதானால் பிணை விட்டுத்தான் விட்டார்கள் ,தெரியும் போனால் வரமாட்டார்கள் என்று அவ்வளவு அருமையான இராச்சியம் .

நான் ஒரு  பிரெஞ்சுப்பிரசை

எனது கடவுச்சீட்டின்  காலம் 5  வருடங்கள்

எனது விசாவின் காலம் 10  வருடங்கள்

நான் வேறு ஒரு நாட்டுக்கு சென்றால் தங்கக்கூடிய  மாதங்கள் ஒன்றிலிருந்து 6 மாதங்கள்.

நான் இருப்பது பெரும் ஐனநாயக நாடு

மனிதநேய  நாடு

போர் இல்லாத அமைதியான நாடு.

அப்படியிருந்தும் இவ்வளவு கடடுப்பாடுகள் எதற்கு என அறியத்தந்தால்

பிரபாகரனின் சட்டங்கள் எங்கிருந்து வந்தன என நாங்களும் புரிந்து கொள்ளமுடியும்....

அந்த வன்னி இராச்சியத்தை விட்டு ஏன் எல்லோரும் ஓடினார்கள் என்றுதான் விளங்கவில்லை .புலிகள் கூட வெளியில் செல்வதானால் பிணை விட்டுத்தான் விட்டார்கள் ,தெரியும் போனால் வரமாட்டார்கள் என்று அவ்வளவு அருமையான இராச்சியம் .

பழைய குருடி கதவை திறவடி தான் அருச்சுனின் அரசியல் விவாதங்கள்.

அவர் அரசு செய்யும், செய்த 150,000 முள்ளிவாய்க்கால் போர்குற்றத்தை சரி என்று நியாயப்படுத்த புலிகள் ஆரம்ப நாட்களில் கொடுத்த தண்டனைகளை முன் வைப்பார்.  வேறே கிடைக்காது.

எத்தனை முறை, யார் யார், நமது உறவு அருச்சுனின் அரசியல் கண்களை திறந்து கொஞ்சம் வெளிக்க வைத்து  இந்த பழைய குருடி கதவை திறவடி அரசியல் கதைகளை நிறுத்தி வைத்தாலும் அவர் திறந்த கண்களை மூடிக்கொண்டோடிப்போய் "மொக்கு கூட்டத்திற்கு ஒன்றும் விளங்குதில்லை" என்று கூறிக்கொண்டு இந்த  பழைய குருடி கதவைத் திறவடி அரசியல் விழாமல் இருக்க முடியாமல் இருக்கிறார் இல்லை. நான் யாழுக்கு வந்த பின்னர் கூட குறைந்தது ஒரு தடவையாவது  இந்த பிணைக்கதை சம்பந்தமான திரி ஒன்றில் உறவு அருச்சுன் தொடக்கம் எல்லா மாற்றுக்கருத்துக்களுக்கும் கண்கள் திறப்பட்டு, அவர்கள் திரியைக் கைவிட்டு போனவர்கள். யாருக்கு கண் திறந்தாலும் நமது உறவு அருச்சுனுக்கு மட்டும் திரும்ப திரும்ப படித்ததுகள் எல்லாம் மறப்பதால் அதே மாதிரியே அரசியல் கண்ணும் குருடாகிறது. அவர் இந்த பிணைக்கதையுடன் தானே சொல்லும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடும் குறுகிய மன நிலையை மாற்றவே மாட்டார்.

பயங்கரவாத பாட்டுப் பாடிக்கொண்டு பிழைப்பு நடத்தும் மகிந்தா அரசு கூட தமிழ் மக்கள், புலிகள் நடத்திய அரசின் அரசியல் நடவடிக்கையின் நேர்த்தியால், அரசியல் என்ற கேள்வி வெரும் போது புலி அங்கத்தவர்களுக்குதான் வாக்களிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு  இன்னமும் அவர்களின் ஆலோசகர்களாக தான் காணும் தயாமாஸ்டர், K.P என்று தேர்தல் களத்தில் நிறுத்துகிறது.  ஆனால் தமிழ்மக்கள், கூட்டமைப்பு, மாவை என்றெல்லாம் கடந்து போய் நீதியரசர் விக்கினேஸ்வர்னை நிறுத்தியிருக்கிறார்கள். அதை கூட முன்னால் முன்னேறிவந்து  விளங்கிப்பிடிக்க முடியாத அரசியல் குருட்டு உலகத்தில் சஞ்சரிக்கிறார் நமது உறவு அருச்சுன். 

இதனால் பழைய குருடி கதை திறவடி என்று பிணைக்கதையை பீற்றிகொண்டு பொய் பொழுது போக்குகிறார். வன்னியில் நடந்த அரசு நேர்த்தியில் உலகத்துக்கே சவாலாக இருந்த்தால்தான் அழிக்கப்பட்டது. விட்டால் ஆபத்து என்று முளையில் கிள்ளி எறியப்பட்டது.  J. கிருஸ்ணமூர்த்தி தனது சமையச் சொற்பொளிவுகளில் இரணடாம் உலகப்போரில் அமெரிக்க நடவடிக்கைகளை  எதிர்த்தார். இதனால் சந்தேக நபராக கணிக்கப்பட்டு அவர் FBI யால் தண்டிக்கப்பட்டார். ஆனால் சமாதானம் வந்தவுடன் சமாதான தூதுவர் என்றமுறையில் ஐ.நா.வில் வந்து உரையாற்ற அழைக்கபட்டார். அரசியல் விளங்க தொடங்கும் நாள் அன்று  அருச்சுன் தான் தமிழரை மொக்கு கூட்டம் என்று கூறிக்கொண்டு இந்த பிணைக்கதையில் போய் விழும் பேதமைக்கு ஓட்டை சிரட்டையில் தண்ணி விட்டுக்கொண்டுதான் தற்கொலை செய்ய முயற்சிப்பார்.

இவரிடம் யார் யார் வன்னியை விட்டு ஓடப்பார்த்தார்கள், யார் வன்னியில் போய் சேர்ந்தார்கள் என்ற விபரம் கிடையாது. இவருக்கு எந்த காலத்தில் 1 1/2 இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை முழுவதையும் விட்டு வெளியேறினார்கள் என்பது தெரியாது. இன்று கூட வற்றாத ஊற்றாக சிங்களரும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதும் தெரியாது. போரில் நடக்கும் இடத்தில் Military Drafting  இருப்பது போரை தெரியாத இவருக்கு மட்டும்தான் ஆச்சரியம்.  இவர் மாதிரி அரசியல் ஆலோசகர்கள் இருந்ததால் தான்  PLOTE மாலைதீவு வரை போனது.

யோ .................அர்ச்சுன் அண்ணா ...யாழ் நகரில் ஒரு தமிழ்தாய் தன குழந்தையுடன் நின்று பிச்சை எடுத்தது என்ற செய்தி.............கேட்கவே மனதிற்கு கஷ்டமாய் இருக்கு .நேரே பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை என்னைப்போல கெட்டவங்களுக்கு புரியும் ...ஆனால் உங்களைப்போல நல்லவங்களுக்கு புரியவே புரியாது ............................

அப்படி ஒரு சம்பவத்தை என்னைப்போல கேட்டவர்களாகிய விடுதலைப்புலிகளும் அங்கே அனுமதிக்கவில்லை .............இது உங்களைப்போல நல்லவர்களுக்கு கஷ்டமாகவே இருக்கும் .............கஷ்டம் ,கொடுமை ..........
 
[...................................................................................................................]
 
யாராவது அடைப்புக்குறிக்குள் உள்ளதை நிரப்புங்க ...........இசை முயற்சியில் மனதை முடக்கியுள்ளேன் ........................நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத பாட்டுப் பாடிக்கொண்டு பிழைப்பு நடத்தும் மகிந்தா அரசு கூட தமிழ் மக்கள், புலிகள் நடத்திய அரசின் அரசியல் நடவடிக்கையின் நேர்த்தியால், அரசியல் என்ற கேள்வி வெரும் போது புலி அங்கத்தவர்களுக்குதான் வாக்களிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு  இன்னமும் அவர்களின் ஆலோசகர்களாக தான் காணும் தயாமாஸ்டர், K.P என்று தேர்தல் களத்தில் நிறுத்துகிறது.  ஆனால் தமிழ்மக்கள், கூட்டமைப்பு, மாவை என்றெல்லாம் கடந்து போய் நீதியரசர் விக்கினேஸ்வர்னை நிறுத்தியிருக்கிறார்கள். அதை கூட முன்னால் முன்னேறிவந்து  விளங்கிப்பிடிக்க முடியாத அரசியல் குருட்டு உலகத்தில் சஞ்சரிக்கிறார் நமது உறவு அருச்சுன். 

இது கூட அவருக்கு பொறாமை  ஏற்படுத்துமே தவிர  வாந்தியைக்குறைக்காது.

அதேநேரம் வியட்னாம்  மற்றும் கியூபாவிலிருந்து கூட லட்சக்கணக்கான மக்கள் வெறியேறினார்கள்.  ஏன் என்று அவர் எழுதினால் புரிந்து கொள்ளலாம்......

யாழ் நகரில் தமிழ் தாய் பிச்சை எடுப்பதை கேள்விப்பட கஷ்டமாக இருந்தால் மூன்று பிளேட்டை இன்று வெட்டிவிடுங்கள் நல்லா நித்திரை வரும் .

நீங்கள் எல்லாம் சேர்ந்து ஏன் நாடகம் போடக்கூடாது ,நூறு நாள் மேடை ஏறும் .

ராமபூமியில் தேனும் பாலும் ஒடுதென்று கவிஞன் பாடினால் தேனும் பாலும் ஒடுதென்று அர்த்தமில்லை .

அதே போலத்தான் வன்னி இராச்சியத்தை பற்றியும் வந்தாருக்கு இல்லை இல்லை என்று அள்ளிகொடுக்கவும் மிஞ்சியிருந்ததாக  கதைகளும் அளந்தார்கள். இதையெல்லாம் உண்மையென்று நம்புகின்ற கோஷ்டிகளும் நாட்டில் இருக்கு தானே .

கிழக்கின் விடியலும் வன்னியின் வசந்தமும் அப்படித்தான் .

அரசியல்வாதிகளும் இப்படிஎல்லாம் கதைகள் அளப்பார்கள் .

பிரான்சு வந்தும் சட்டம் ஒழுங்கு தெரியாமல் தான் எம்மவர் பலர் இன்றும் இருக்கின்றாக்கள் ,அண்ணையும் அந்த கூட்டத்தில் ஒன்று என்று இன்றுதான் தெரியும் .

யாழ் நகரில் தமிழ் தாய் பிச்சை எடுப்பதை கேள்விப்பட கஷ்டமாக இருந்தால் மூன்று பிளேட்டை இன்று வெட்டிவிடுங்கள் நல்லா நித்திரை வரும் .

அப்ப  சாராயத்த நீங்க ஊத்தி தாங்களேன் ............. :D  :D 

சரிதான் போ.  அவர் இன்னொரு பொன்மான் கதையில் இறங்குகிறார்.

அவர் பிணையை விட்டு விட்டு இப்போ கலையைப் பிடித்திருக்கிறார்.

இதானால் வன்னி இருந்து விட்டு வந்தோர் தேனும் பாலும் ஓடியது என்று கவிஞன் வாமிகியின்  இராமாயணம் பாடுகிறார்களாம்.  அப்போது ஏன்தான் பிணையை கொடுத்துவிட்டு வன்னியை விட்டு ஓடினார்கள் என்று சொல்லவில்லையா?

எதுவோ வன்னியில் தின்ன வழியில்லாமல் இருந்துவிட்டு தேனும் பாலும் ஓடும் கதைகளுடன் வந்தார்கள் என்றால் வயிற்றல் தான் அடிவிழுந்திருந்தாலும் நாவில் நல்ல செந்தமிழ் சுவையேற்றி  எல்லோரையும் ஒவ்வொரு வால்மீகளாக மாற்றி அனுப்பி வைத்திருந்திருக்கிறார்களே. அந்த தமிழ் பெருமைதன்னும் வன்னி அரசுக்குகிடையாதா ?

எழுத இருந்தால் எழுதலாமே.

கிழக்கின் விடியலும் வன்னியின் வசந்தமும் அப்படித்தான் .

இது என்ன கதை இது ?

இது இரவா பகலா?

இந்த பகலிலையே  ரோர்னடோவுக்கு பயந்து வீட்டுக்கை முடங்காமல், வெள்ளியிலை நல்ல வெளிச்சமாக இருக்கு சும்மா போய் ஒருக்கால் உலாவி பார்க்கலாமே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் இவர் அங்கிருக்கும் ஒட்டிய ஒட்டாத குழுக்களுக்குப்

போட்டியாக இருக்க முற்பட்டிருக்கின்றார்.

அதனால் இந்த ஒட்டிய ஒட்டாத குழுக்கள்

அவரைப் பிடித்துக் கொடுத்திருக்கின்றார்கள்

அந்த வன்னி இராச்சியத்தை விட்டு ஏன் எல்லோரும் ஓடினார்கள் என்றுதான் விளங்கவில்லை .புலிகள் கூட வெளியில் செல்வதானால் பிணை விட்டுத்தான் விட்டார்கள் ,தெரியும் போனால் வரமாட்டார்கள் என்று அவ்வளவு அருமையான இராச்சியம் .

PLOT காறராக இருந்தால் வெளியிலை போக போறன் எண்டாக்களை மண்டையிலை போட்டு இருப்பினம் இல்லையா...?? மக்கள் விடுதலை கேட்டால் ஒட்டு மொத்தமாக குடுக்க வேணும்... அதுதானே முறை...??

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்ணை போலீசில் பிடித்து கொடுத்தவர்கள் அவர்களுக்கு சோறு போடுவார்களா ? பசியால்தானே பிச்சை எடுத்தார் ....

கஸ்தூரியார் வீதியில் வைத்து ஒரு பெடியன் 10 - 12 வயது இருக்கும். "அண்ண வீட்டில கஸ்டம். அப்பா இல்ல. அக்காமார் தான். காசு தருவீங்களா" என்றான்.
 
அதிர்ச்சியாக இருந்தது.
 
இங்க சிறுவர்களிடமிருந்து இடைவெளி பேணும் கலாச்சாரத்தில் ஊறியதால் அவனிடம் கேள்வி கேட்க தோன்றவில்லை.
 
யாழ்ப்பாணத்தில் ஒரு முட்டை 25 - 30 ரூபா. 
 
இங்கே ஆகக் குறைந்த மாதாந்த‌ குடும்ப வருமானம் 350,000. அப்படி இருந்தும் முட்டையின் விலை 29 - 34 ரூபா. 
 
எப்படி குடும்பத்தலைவன் இல்லாதவர்கள் அங்கு சீவிப்பார்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.