விசுகு 3,523 Report post Posted August 7, 2013 கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தலைவர் பற்றிய சம்பவங்களை பகிர்ந்து கொண்ட நெடுக்ஸ்சுக்கு நன்றி. இது போன்று யாழ்குடும்பத்திலுள்ளவர்களும் தங்களுக்குத் தெரிந்த,அறிந்த, அறியக்கூடிய பல புதிய உண்மைச்சம்பவங்களை பதிவு செய்தால் தலைவரின் பல்வேறு பண்புகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கினறது. எப்போதும் தலைவரைப்பற்றி அறிவதற்கு “தேசியத்லைவரைப்பற்றி....!“ என்ற இந்தத்தலைப்பு ஒரு அடித்தளத்தைக் கொடுத்தால் நல்லாயிருக்கும். அவரைப்பற்றிய தனியொருவரால் சொல்லிவிட முடியாது. கூட்டுமுயற்சியாக தெரிந்தவர்கள் எல்லோரும் பதியத்தொடங்கினால் புதிய பல விடயங்கள் வெளிப்படும் அதில் நானும் ஒருவனாயிருப்பேன். நன்றி தலைவர் பற்றி பல ஆயிரம் கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் அவை சான்றுதல்களாக வரலாறாக வருவதற்கு அவற்றைக்கண்டவர்கள் உடன் இருந்தவர்கள் எழுதுவதுதான் சரியாகும் தொடருங்கள் Share this post Link to post Share on other sites
கதாநாயகன் 86 Report post Posted August 7, 2013 வாணண் எமது போராட்டம் பற்றிய கதைகளை எழுதமுன்னர் அதை உங்களுக்கு சொன்னவர் பெயரை போட்டு செவிவழியாக கேட்டது என்று எழுதுவது அல்லது கற்பனை என்று எழுதுவதே நீதி. இது இங்கு யாழில் போராட்டம் சம்பந்தமாக கதைகளை எழுதும் சாத்திரிக்கும் பொருந்தும். Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted August 7, 2013 (edited) விசுகு நீங்கள் சொல்வது சரிதான் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி Edited August 13, 2013 by வாணன் Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted August 13, 2013 (edited) தேசியத்தலைவர் பற்றி ........! 02 தீச்சுவாலை நடவடிக்கைக்கான தலைவரின் உபாயம் 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட 'கிணிகிர' இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது. மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது சிங்கள இராணுவம். தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அக்களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டளைத் தளபதிகள், தளபதிகள், களமுனைப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தலைவர் கலந்துரையாடலுக்காக அழைத்திருந்தார். அங்கு கலந்துரையாடலுக்காக ஒன்று சேர்ந்திருந்த வேளையில், மோட்டர் ஒருங்கிணைப்புத் தொடர்பான விடயங்களை கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது தலைவர் வந்தார். தலைவர் வரும்போது பானு அண்ணை மோட்டர் ஒருங்கிணைப்பைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தவர். கலந்துரையாடல் நடைபெற்ற பகுதிக்கு வந்த தலைவர் பானு அண்ணையிடம் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்க, மோட்டர் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக கதைக்கின்றோம் அண்ணை என்றார். அதற்குத் தலைவர் ‘அப்ப என்ன இன்னும் மோட்டர் ஓருங்கிணைச்சு முடியவில்லையா?’ எனக் கேட்டு விட்டு அமர்ந்தார். இயல்பிற்கு மீறிய இறுக்கம் தலைவரின் முகத்தில் காணப்பட்டது. கலந்துரையாடலை ஆரம்பித்த தலைவர் அண்மையகாலப் பின்னடைவையும் அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி இனி எவ்வாறு சண்டையை எதிர்கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி விளக்கினார். அதில் முக்கியமாக குறிப்பிட்ட விடயத்தின் சராம்சமானது ‘‘இந்த சண்டை மிகவும் கடினமானதாக இருக்கும் எல்லோரும் இறுக்கமான யுத்தத்திற்கு தயாராகவேண்டும். எல்லாத் தளபதிகளும் தங்கள் பகுதி லைனுக்குக் கிட்ட நிலையமைத்து இருக்கவேண்டும். அந்தந்தப்பகுதிச் சண்டைக்கு அந்தப்பகுதிக்குப் பொறுப்பானவர் தான் பதில் சொல்லவேண்டும். தங்களக்குக் கீழ் உள்ள பொறுப்பாளர் திறமையாக செயற்படமாட்டார்கள் என்று நினைத்தால் அவர்களை மாற்றுங்கள். அதேவேளை உங்களிற்கு கீழ் உள்ளவர்கள் சரியாக செயற்படாமல் விட்டால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. வழமையாக கட்டளைத்தளபதிகளுடன் தான் சண்டையைப்பற்றிக் கதைத்துவிடுவன். இந்தமுறை நான் உங்களையும் கூப்பிட்டதற்குக் காரணம் உங்களிடம் இந்த பொறுப்பை விடுவதற்காதத்தான். ஒரு பகுதியில் சண்டை நடைபெறும் போது அதில் அப்பகுதிக்கான போராளிகளும் வீரச்சாவடைந்து தளபதியும் வீரச்சாவடைந்து இடங்களும் விடுபட்டால் நான் அதை ஏற்றுக் கொள்ளுவன். இடங்களும் விடுபட்டு போராளிகளையும் வீரச்சடையவிட்டு பொறுப்பாளர்கள் தப்பி வந்து காரணம் சொல்லக்கூடாது. பொறுப்பாளர்கள் நேரடியாக நின்று சண்டையை வழிநடாத்த வேண்டும்” அத்துடன் தொடர்ந்து சொன்னார். ‘‘நான் என்னை ஒரு உண்மையான போராளி என்று சொல்லமட்டன். ஒரு உண்மையான போராளி என்பவன் தனது கொள்கையைில வென்றிருக்க வேண்டும் அல்லது அதுக்காக வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அல்லாதுவிடின் அங்கவீனப்பட்டிருக்க வேண்டும் அதில்லாமல் நாட்டிற்கு நான் முழுமையாகச் செய்திட்டன் என்டு சொல்லமாட்டன்” என்று கூறினார் தலைவர். அப்போது தான் விளங்கியது எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டு வந்தார் என்பது. இந்தக் கலந்துரையாடல் உளவியல் ரீதியாகவும் மனோதிட ரீதியாகவும் ஒரு மிகையான உந்துதலைக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். போராளிகளிற்கு நம்பிக்கையைக் கொடுத்து மனோதிடத்தை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கலந்துரையாடலைக் கையாண்டார். ஏனெனில் தொடர் சண்டைகளால் ஏற்பட்ட காயம், வீரச்சாவு காரணமாக பல அனுபவம் மிக்க போராளிகள் யுத்தமுனையின் பங்களார்களாக இருக்கமுடியவில்லை. எனவே அனுபவம் குறைந்த போராளிகளை வைத்து பலமான சிங்களத்திடம் விடுதலைப்புலிகளின் இயலுமையை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொருவரும் லைனை விட்டு அரக்காமல் சண்டையிடவேண்டும் லைனுக்கு நெருக்கமாக களமுனைப் பொறுப்பாளர்களும் நிற்க வேண்டும் என்பது அங்கு லைனில் நிற்கும் போராளிகளுக்கும் ஒரு மேலதிக தெம்பைக் கொடுக்கும் என உறுதிபட நம்பினார். மற்றும் தன்னுடைய இச்செய்தி அடிமட்டப் போராளிகளிற்கும் அவர்களுடைய நேரடிப்பொறுப்பாளர்கள் ஊடாகச் செல்வது போராளிகளின் மனோதிடத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதைக் கணித்திருந்தார் என்றே கூறவேண்டும். அத்துடன் முன்னணி நிலையில் இருந்த தளபதி பால்ராஜ் தலைமையில் இரண்டாவது நிலையை அமைத்து அதில் ஒரு சண்டை முனையை ஏற்படுத்தியிருந்தார். இராணுவம் பின்னுக்கு நகர்ந்தாலும் தளபதி பால்ராஜ் அவர்களின் அணி அதற்கான முறியடிப்பைச் செய்யும் என்ற நம்பிக்கையை முன்னரங்கில் இருந்தவர்களிற்கு ஏற்படுத்தியிருந்தார். அவ்வாறே தீச்சுவாலைச்சண்டை நடந்தேறியது. அதிகாலை ஐந்து மணிக்கு கிளாலி மற்றும் கண்டற்பக்கத்தால் உடைத்துக் கொண்டு முன்னேறி அணிகளை உள்ளடக்கி பொக்ஸ் அமைத்தது இராணுவம். உடைத்தபகுதி நிலைகளைத்தவிர எவரும் நிலைகளை விட்டு பின்நகரவில்லை. காவரலண்களிற்குப்பின் இருந்த களமுனைத்தளபதிகளின் கட்டளை மையங்களில் கூட தாக்குதல்கள் நடைபெற்றன. யாரும் தமது இடங்களை விட்டு அகலவில்லை. இதில் தளபதிகளான துர்க்கா, கோபித், வீரமணி, கிளாலிப்பகுதித்தளபதி போன்றவர்களின் கட்டளையிடங்களிலும் இராணுவம் தாக்குதலை மேற்கொண்டான். அப்படியான சந்தர்ப்பத்திலும் தங்களது கட்டளைகளையும் வழங்கிக் கொண்டு, தமதிடத்தில் நடந்த சண்டையையும் எதிர் கொண்டனர். குறிப்பாக துர்க்கா அக்காவின் கட்டளையிடத்தை இராணுவம் சுற்றி வளைத்தான். செல்விழுந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டவேளை, தான் நின்ற இடத்தைச்சுற்றி செல் அடிக்குமாறு கூறிவிட்டு அவர்களும் தங்கள் நிலைகளில் இருந்து தாக்குதலை மேற்கொள்ள, இராணுவம் தடுமாறத்தொடங்கினான். இவ்வாறு ஒருவரும் நகராமல் சண்டையைச் செய்தனர். மூன்று நாள் கடுமையான யுத்தம். காவலரண்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட உலர் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு தீவிரமாகப் போரிட்டு தீச்சுவாலை நடவடிக்கையை வெற்றி கொண்டன புலியணிகள். தலைவரின் தந்திரோபாயமும் தன்நம்பிக்கையான வழிநடத்தலினதும், இறுக்கமான சூழலைக்கையாளும் திட்டமிடற்பண்பினதும் விளைவாக அமைந்ததுதான் தீச்சுவாலை வெற்றி. ''சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்'' - தலைவர் பிரபாகரன். தேசியத்தலைவர் பற்றி .....! - 03 Edited August 20, 2013 by வாணன் 4 Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted August 13, 2013 தொடருங்கள் வாணன் Share this post Link to post Share on other sites
இசைக்கலைஞன் 2,963 Report post Posted August 13, 2013 அருமையான வரலாற்றுப்பதிவு.. தொடருங்கள் வாணன்..! Share this post Link to post Share on other sites
உடையார் 303 Report post Posted August 13, 2013 தொடருங்கள் வாணன் Share this post Link to post Share on other sites
லியோ 245 Report post Posted August 13, 2013 அருமை, பகிர்விற்கு நன்றி ,தொடர்ந்து எழுதுங்கள் வாணன் Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted August 15, 2013 மெசொபொத்தோமியா சுமேரியர், இசைக்கலைஞன், உடையார், லியோ அண்ணை கருத்துக்களிற்கு நன்றிகள் Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted August 20, 2013 (edited) தேசியத்தலைவர் பற்றி ......! - 03 தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எவ்வாறு கையாண்டார் என்பதை எடுத்தியம்பும் இரண்டு சம்பவங்களை, மணலாற்றுக் காட்டில் தலைவருடன் இருந்த நண்பர் கூறிய சம்பவங்களை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இந்திய இராணுவத்தின் இறுக்கமான முற்றுகைக்குள் இருந்தது மணலாற்றுக்காடு. பல்லாயிரக்கணக்கான இந்திய துரும்பினர் தலைவரை அழிப்பதற்காகக் காட்டைச் சல்லடைபோட்டுத் தேடிக்கொண்டிருந்த காலப்பகுதி. உணவு, வெடிபெருள் தொடங்கி போராட்டத்தை கொண்டு நகர்த்துவதற்கான பொருட்களை மணலாற்றுக்காட்டுக்குள் நகர்த்துவது என்பது ஒரு சவாலான விடயமாகும். இந்திய இராணுவத்தின் ரோந்து, பதுங்கித்தாக்குதல்களை சமாளித்தே பொருட்களை காட்டு முகாம்களிற்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். மணலாற்றிற்குச் சாமான் வருவதாயின் இந்தியாவில் இருந்து தான் வரும். அதேநேரம் அலம்பிலில் இருந்த சில ஆதரவாளர்கள் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் என்றழைக்கப்படும் பகுதிக்கு மீன்பிடி வள்ளத்தில் ஜொனி மிதிவெடி செய்வதற்கான சாமான்களையும் கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி வரும் சமயங்களில் ஜந்து, ஆறு சாப்பாட்டுப்பாசல்களையும் கொண்டு வருவார்கள். இப்படியாக வரும் சாமான்களை நடந்து சென்று தான் தூக்கிக்கொண்டு வரவேண்டும். அதை ‘கம்பாலை அடித்தல்’ என்றழைப்பர்கள். அநேகமாக மணலாற்றுக்காட்டில் கம்பாலை அடித்த அநேகமானவர்களிற்கு நாரிவருத்தம் இல்லாமல் இருக்காது. அவ்வளவு சுமைகளை தூக்கி வரவேண்டும். கடுமையானதென்றாலும் கம்பாலை அடிக்கபோக வேண்டும் என்றால் போராளிகள் நான் நீ எனப் போட்டி போட்டுப் போவார்கள். ஏனென்றால் சாமான் வரும் படகில் நல்ல சாப்பாடு வரும் அதைச் சாப்பிடுவதற்காகத்தான் முந்தியடிப்பார்கள். முகாமில் வழமையாக உப்பில்லாமல் தண்ணீரில் அவித்த பருப்பும் சோறும் தான் உணவாகக் கிடைக்கும் இது மட்டுமே நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கான ஒரேயொரு வாய்ப்பு. அத்துடன் வண்டியில் உணவுப்பொருட்கள் வரலாம் எனவே கம்பாலைக்குச் சென்றால் வண்டியில் வரும் உணவுப்பொருட்களில் சிலவற்றை சாப்பிடலாம் என்ற நப்பாசையுடன் கூடச் செல்வார்கள் ஆனால் அதில் சைக்கிள் ரியூப், சிறிய கம்பிகள் அடங்கிய பொதிகளே கூடுதலாக வரும். காட்டில் இந்திய இராணுவத்தின் சுதந்திர நடமாட்டத்தைத் தடுத்து அச்சத்தை ஏற்படுத்திய ஜொனி மிதிவெடிகள் செய்வதற்கான மூலப்பொருட்களில் சிலதான் அவை. அதில் ஒரு பொதி தலைவருக்கு என்று தனியே வரும் அதில் தலைவருக்கான முக்கிய பொருட்கள் மட்டுமே இருக்கும். சமான்களை கொண்டு வந்ததும் நேரடியாகத் தலைவர் இருந்த கொட்டிலுக்கு முன் வைப்பார்கள். சாமான்களை இறக்கிவைத்துவிட்டு போராளிகள் வரிசையாக இருப்பார்கள். தலைவர் எல்லாப்பொதிகளையும் எங்கெங்கு கொடுக்க வேண்டும் எனப்பிரித்து விட்டு, தனக்கு வந்த பொதியை எப்போதும் எல்லோர் முன்னிலையிலுமேயே வழமையாகப் பிரிப்பார். அப்படியொரு ஒருநாள் பொதியைப் பிரித்தபோது, பற்றி உட்பட முக்கியமான சில பொருட்கள் இருந்தன. அவற்றுடன் இரண்டு ‘நெஸ்ரமோல்ட்‘ ரின்களும் வந்திருந்தன. கிச்சினுக்குப் பொறுப்பானவரை உடனடியாக அழைத்து, இரண்டு ரின்களையும் கொடுத்து கரைத்துக் கொண்டுவரும்படி கூறினார். அதை அங்கிருந்த எல்லோருக்கும் குடிக்கக் கொடுத்துவிட்டே பொதிகளை தான் சொன்ன இடங்களிற்கு கொண்டு போய்க் கொடுக்குமாறு கூறினார். இன்னுமொரு தடவை பல் துலக்க பற்பசை கொண்டு வருமாறு சொல்ல, ஒரு புதிய பற்பசையைக் கொண்டுவந்தார் போராளி. அதைப் பார்த்துவிட்டு ‘நேற்று கொண்டு வந்த பற்பசை எங்கே?‘ எனக்கேட்டார். அதற்கு அவர் ‘முடிந்துவிட்டது அண்ணை அதுதான் அதை எறிந்து விட்டு இதைக் கொண்டு வந்தேன்’ எனச் சொன்னார். உடனே தலைவர் அந்த பற்பசையை எடுத்துவரும்படி கூறினார். அவரும் பற்பசையை தேடி எடுத்து வந்தார். அது முழுமையாக முடிந்திருக்கவில்லை. தலைவர் அந்தப் பற்பசை ரியூப்பை பின்பக்கத்திலிருந்து மடித்துக் கொண்டுவர அதிலிருந்த பற்பசை முன்னுக்குவந்தது. அதையே பயன் படுத்தினார். அவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை அந்தப் பற்பசையைப் பயன்படுத்திவிட்டு, அந்தப்போராளியிடம் ‘‘எங்களை நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்துவதற்கு மக்கள் பணம் தருகின்றார்கள், அதில் அவர்களது வியர்வையும் நம்பிக்கையும் இருக்கின்றது. நாங்கள் மக்களின் பணத்தை ஒருபோதும் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது. தவறாகவும் வீணாக்கக்கூடிய வகையிலும் பயன் படுத்தக்கூடாது. இனிமேல் பற்பசை முடிந்ததும் என்னிடம் கொண்டு வந்து காட்டிய பின்னரே புதிது எடுக்கவேண்டும்” என்று கூறியனுப்பினார். தேசியத்தலைவரைப்பற்றி....!-04 Edited September 5, 2013 by வாணன் 8 Share this post Link to post Share on other sites
புங்கையூரன் 3,630 Report post Posted August 21, 2013 தொடர்ந்து எழுதுங்கள், வாணன்! Share this post Link to post Share on other sites
SUNDHAL 1,081 Report post Posted August 21, 2013 தொடர்ந்து எழுதுங்கள், வாணன்! Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted September 5, 2013 (edited) தேசியத்தலைவரைப்பற்றி .......! - 04 2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது. எதிரியின் நகர்வை அவதானிப்பதற்காக காவலரண்களுக்கிடையில் வழமையாக ரோந்து செல்வார்கள். அப்படி ஒரு அணி ரோந்து சென்று கொண்டிருந்தபோது இடையில், ஒரு யானை குட்டியுடன் நின்றது. (யானை குட்டி ஈன்று அதை வளர்த்தெடுக்கும் வரை குட்டிக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் எடுக்கும்). அப்போது இவர்களைக் கண்டுவிட்ட யானை அவர்களைத் துரத்த, பயந்து போன அவர்கள் தாய் யானையை நோக்கிச் சுட்டனர். அதில் தாய் யானை இறந்து விட்டது. அவர்களும் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர். ஆனால் இறந்த தாய் யானையை விட்டு குட்டியானை போகவில்லை. வேறு சிலர் சென்று பார்த்தபோது இறந்த தாய் யானையில் பாலைக் குடித்துக் கொண்டு அந்த இடத்திலேயே இருந்தது. இந்தத் தகவல் தலைவருக்குச் சென்றுவிட்டது. அப்போது தேசியத்துணைப்படைக்குப் பொறுப்பாக நடேசண்ணை இருந்தவர். நடேசண்ணையிடம் தலைவர் ‘மணலாற்றில் உள்ளவர்கள் யானையைச் சுட்டதால், அந்த நிர்வாகம் யானைக்குட்டியைப் பொறுப்பெடுத்துப் பராமரிக்க வேண்டும். யானைக்குட்டிக்கு விசேடமாக எந்தவித சிறப்பு ஒதுக்கீடும் இருக்காது. அவர்களுக்கு ஒதுக்கப்படும் வழங்கல்களையும் பால்மாவையும் வைத்தே யானைக்குட்டியை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்ற தண்டனையை சொல்லிவிட்டிருந்தார். ஒரு நாளைக்குப் பால் கொடுக்கவேண்டுமெனில் கிட்டத்தட்ட ஆறு ‘அங்கர்‘ பால்மா பைக்கற்றுகள் தேவைப்படும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் வழங்கல்களைக் கொண்டு அந்த யானைக் குட்டியைப் பராமரித்து வந்தனர். அந்த யானைக்குட்டி நிதர்சனம் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படத்திலும் நடித்தது. அங்கிருப்பவர்களிற்கு யானை வளர்த்த அனுபவம் இல்லையாகினும் அப்பிரதேசத்தில் இருந்த மிருகவைத்தியர் ஒருவரின் ஆலோசனையையும் பெற்று, யானையுடன் விளையாடிக் கொண்டு சந்தோசமாகவும் அன்புடனும் பராமரித்து வந்தனர். திடீரென ஒரு நாள் குட்டியானை இறந்து விட்டது. படையணிகளில் ஒருவராகப் பழகிவிட்ட அந்த யானைக்குட்டியின் பிரிவை ஏற்றுக் கொள்வது கடினமாகவே இருந்தது. பின்னர் குட்டியானை ஏன் இறந்தது என்ற காரணத்தை தெரியப்படுத்தவேண்டியிருந்ததால், யானையைப்பற்றித் தெரிந்த ஒரு முதியவரைத் தேடிப்பிடித்து காரணத்தைக் கேட்டபோது ‘யானைக்குட்டி வளர்ந்து வரும் போது ஒரு வயசுக்குப் பிறகு ஒரு விசப்பல்லு வளரும், அந்த விசப்பல்லை நீக்காவிட்டால் அப்பல்லு மறுதாடையில் குத்தி யானைக்கு விசம் ஏறி இறந்து விடும். தாய் யானைக்கு இந்த விடயம் தெரியும் என்பதால் விசப்பல்லு வளர்ந்து வர விளாங்காய் மாதிரி கடுமையான உணவைக் குட்டியானைக்கு சாப்பிடக் கொடுக்கும். அப்போது அந்த விசப்பல் உடைந்து வயித்துக்குள்ளபோய் செமிச்சு வெளியில வந்திடும்’ என்றார். தேசியத்தலைவரைப்பற்றி ......! - 05 Edited September 30, 2013 by வாணன் 3 Share this post Link to post Share on other sites
விசுகு 3,523 Report post Posted September 5, 2013 தொடர்ந்து எழுதுங்கள், வாணன்! Share this post Link to post Share on other sites
kkaran 31 Report post Posted September 5, 2013 அண்ணோய் தொடர்ந்து எழுதுங்கள் Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted September 5, 2013 தொடருங்கள் வாணன் Share this post Link to post Share on other sites
லியோ 245 Report post Posted September 7, 2013 வாணன் வரலாற்றின் பக்கங்களை தொடர்ந்து பதியுங்கள் Share this post Link to post Share on other sites
திருமலைச்சீலன் 25 Report post Posted September 9, 2013 2009 ம் அண்டு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலில் தீபன் அண்ணை, கடாபி அண்ணை, விதுஷா அக்க்கா, துர்க்கா அக்கா ஆகியோர் உட்பட பலர் வீரச்சாவடைந்தனர். இரணப்பாலையும் எதிரியின் கைவசம் சென்று விட்டது. பொக்கணை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நேரம், முக்கிய தளபதிகளின் இழப்பால் போராளிகளின் உளவுரண் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் ஒன்று கூடுவதே கடினமாக இருந்த நிலையில் கூட சில தளபதிகளுடன் தலைவர் கலந்துரையாடினார். அங்கு கலந்துரையாடலுக்கு சென்ற தளபதியெருவருடன் சென்ற நான் , அது முடிந்த பின் தலைவர் என்ன சொன்னவர் என்று ஆவலுடன் கேட்டேன். அதற்கு அவர் சந்திக்கப்போகும் போது ‘எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ’ என்ற பாடலின் வரியை சொல்லி விட்டு கலந்துரையாடலைத் தொடங்கினார். அப்போது ‘தீபன் கடாபி வீரச்சாவுகள் எதிர்பார்த்ததுதான் ஆனால் துர்க்கா, விதுஷா ஆகியோரின் வீரச்சாவுதான் என்னை கவலைக்குள்ளாயிருக்கிறது. நான் இருந்தாலும் மகளிர் படையணியை அவர்கள் இருவரும் தான் வளர்த்து எடுத்தார்கள். நாங்கள் தொடர்ந்து சண்டையை பிடிப்பம்’ என்று கூறினார். இதைச் சொல்லிய தளபதி ‘கிளிநொச்சியில் எந்தளவிற்கு நம்பிக்கையுடன் தெளிவாக கதைத்தாரோ அதே நம்பிக்கையுடன் தலைவர் இருக்கிறார் ’ எனச் சொன்னார் 1 Share this post Link to post Share on other sites
தமிழரசு 2,941 Report post Posted September 9, 2013 ''நான் என்றும் நேசிக்கும் முதல் மனிதன் தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்கள்'' Share this post Link to post Share on other sites
வந்தியத்தேவன் 297 Report post Posted September 11, 2013 தொடருங்கள்........... Share this post Link to post Share on other sites
shanthy 1,194 Report post Posted September 11, 2013 வாணன், உங்கள் அனுபவப் பகிர்வை எழுதுங்கோ. காத்திருக்கிறோம். Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted September 11, 2013 வாணன், உங்கள் அனுபவப் பகிர்வை எழுதுங்கோ. காத்திருக்கிறோம். நன்றி சாந்தி அக்கா, திரியை சீர்படுத்தியமைக்கு Share this post Link to post Share on other sites
வாணன் 182 Report post Posted September 30, 2013 (edited) தேசியத்தலைவரைப்பற்றி ...........!-05 சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையின் வடிவங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டாளர்கள். தங்களுக்குத் தரப்படும் திட்டங்களை மெருகூட்டி மேன்மைப்படுத்தி செயற்படுத்துவதற்கும் பதில்சொல்வதற்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள். தலைவரின் திட்டத்தின் விளைவான வெற்றிச் செய்தியை சொல்லக்கடப்பாடுடையவர்கள். சண்டைக்களங்களில் தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்திய தளபதிகளும் வீரர்களும் இருக்கின்றார்கள். எதுவாகினும் பிரபாகரன் என்ற ஒரு தனிவீரனின் ஆளுமை அச்சில்தான் அவர்களது வீரமும் , ஆளுமையும் பதியப்படுகின்றது. ஈழவிடுதலைப்போராட்டத்தில் பலபோராளிகள் தங்களை இணைத்துக்கொண்டதும், பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை போராட்டத்திற்காக ஒப்படைத்ததும் தலைவர் பிரபாகரன் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடுதான். தனது பொறுப்பு என்ன? என்பதையும் தனது பொறுப்பை அடைய என்னென்ன செய்யவேண்டும்? என்பதையும் தெளிவாக உணர்ந்து செயற்பட்டவர். அவர் விடுதலைக்கான ஒவ்வொரு கட்டங்களைப்பற்றிய சிந்தனைகளை திட்டங்களாக்கி அதைச் செய்யக்கூடிய பொறுப்பானவர்களை இனங்கண்டு செயற்படுத்தியவர். தலைவரின் சிந்தனையில் ஒரு தீர்மானம் அல்லது திட்டம் குறுகிய காலத்தில் உதித்ததாகவும் இருக்கலாம். நீண்ட காலமாக அவரது மனதில் உருவாகிக் கொண்டிருந்ததாகவும் இருக்கலாம். தனது சிந்தனைகளை மனதிற்குள் வைத்து பொருத்தமான நேரத்தில் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தும் திறன் எல்லோரையும் விட மேலோங்கியே இருந்தது. எத்தனையோ சம்பவங்கள், சண்டைகள் அவரது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் ஒரு மாபெரும் சமரை எப்படி வழிநடத்தினார் என்பதற்குச் சான்றாக, அவருடைய தலைமைத்துவத்தின் மகுடமாக அமைந்தது முகமாலைப் பெட்டிச்சண்டை. முகமாலை பெட்டிச்சண்டையென்பது விடுதலைப்புலிகளின் அதிஉச்ச வீரத்தையும் சண்டையிடும் ஆற்றலையும் அதிசிறந்த திட்டமிலையும் வெளிப்படுத்திய சமர். இதனால்தான் இந்தச்சமரானது சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமராக விளங்குகின்றது. உலக இராணுவ வரலாற்றில் வியத்தகு சண்டைகளைப்பற்றி உரைக்கத் தலைப்படின் ‘இத்தாவில் பெட்டிச்சண்டை’ முதன்மையான சண்டையாக பதியப்படும். முகமாலைப் பெட்டிச்சண்டை போன்றதொரு பாரிய ஊடறுப்பு நடவடிக்கையைச் செய்வதற்கான சாத்தியப்பாட்டை தலைவர் பரீட்சித்துப் பார்த்தது 1998 ம் ஆண்டு நடைபெற்ற கிளிநொச்சி சண்டையில்தான். இந்தச்சண்டையில் தளபதி பால்ராஜ் அவர்கள் தலைமையில் ஒரு ஊடறுப்பு நடவடிக்கையைச் செய்திருந்தார். கிளிநொச்சியின் வெற்றியைத் தீர்மானித்ததில் பிரதான பங்கை வகித்தது இந்த ஊடறுப்பு நடவடிக்கை. ஆனையிறவில் இருந்து கிடைக்கும் உதவியை தடுக்கும் நோக்குடன் மறிப்பு(cutout) கிளிநொச்சியில் இருந்து பின்வாங்கும் அணியை நிறுத்த தடுப்பு(cutoff) என இராணுவத்தின் பிரதேசத்திற்குள் ஊடுருவி நிலையமைத்திருந்து இராணுவத்தை பிரித்து வைத்திருந்ததே ஊடறுப்புத் தந்திரோபாயம். இந்த ஊடறுப்புத்தான் கிளிநொச்சி சண்டையை வெற்றியடைய வைத்ததில் பிரதான பங்கை வளங்கியது. சண்டை முடிந்ததும், தலைவர் திட்டமிட்டுத் தந்த முக்கிய சண்டையை வெற்றிகரமாக முடித்துள்ளேன் என்ற திருப்தியில் தளபதி பால்ராஜ் அவர்கள் தலைவரைச் சந்தித்தபோது கைகுடுத்து வாழ்த்திய தலைவர் ‘இந்தச்சண்டை உனக்கு ஒரு பரீட்சார்த்த சண்டைதான், உனக்கான சண்டை இதில்லை பால்ராஜ்’ எனக் கூறியதாகச் சொல்லிய தளபதி, ‘நான் ஏதோ நினைச்சுக்கொண்டு போக, அண்ணை இப்படிச் சொல்லிட்டார். அவர் பெரியளவில் திட்டம் ஒன்றை மனதிற்குள் வைத்திருக்கின்றார். எங்க எப்ப என்று தெரியவில்லை. ஆனால் அந்தச் சண்டையை தலைவர் எனக்குத்தான் தருவார். எனவே இதைவிடக் கடுமையானதொரு சண்டையை பிடிக்க தயாராக இருக்கவேண்டும்’ எனப்பகிர்ந்து கொண்டார். ஓயாத அலைகள் சண்டையின் ஒரு கட்டமாக, 2000 இல் மீண்டும் ஆனையிறவை வெற்றி கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை தலைவர் முன்னெடுத்தார். தளபதி பால்ராஜ் அண்ணையை அழைத்த தலைவர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் தளபதி பால்ராஜ் அண்ணைக்கான திட்டத்தைக் கொடுத்து அதற்குரிய வேவு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறினார். தலைவர் வழங்கிய திட்டத்தின் படி ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலை தளபதி தீபன் முன்னெடுக்க, பால்ராஜ் அண்ணை புதுக்காட்டுச்சந்திக்கும் பளைக்குமிடையில் ஊடறுத்து நிற்கவேண்டும். தலைவரின் திட்டத்திற்கமைய இதற்கான வேவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வேவு அணியினரும் அப்பகுதிக்குள் சென்று தடுப்பு, மறிப்பு செய்வதற்கான சாதகமான பகுதிகள் எவை என ஆராய்ந்தனர். சில இடங்களில் இராணுவத்துடன் முட்டுப்பட வேண்டி இருந்தாலும் தங்களது வேவு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தனர். இறுதியில் இராணுவ முகாங்களின் அமைவிடங்கள், அப்பகுதியில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த தொடர் சண்டைக்கான தயார்ப்படுத்தல்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து, புதுக்காட்டுச் சந்திக்கும் பளைக்கும் இடையில் ஊடறுப்பு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர். அதேவேளை பளைக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான இராணுவத்தின் நிலவரங்கள் தொடர்பான நிலைப்பாடுகளையும் பார்த்துவிட்டு வந்தனர் வேவு அணியினர். ஊடறுப்பு செய்வதற்கு கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள இராணுவத்தின் அமைவிடங்கள் செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான தகவல்களைக் கொடுத்து, புதுக்காட்டுச்சந்திக்கும் பளைக்கும் இடையில் ஊடறுப்பது சாத்தியமில்லை என்பதற்கான காரணத்தையும் தெரிவித்த வேவுப் பொறுப்பாளர், பளைக்கும் கொடிகாமத்திற்கும் இடையில் இராணுவத்தின் பாதுகாப்பு நிலவரம் பலவீனமாக உள்ளது என்ற கருத்தையும் தளபதி பால்ராஜ் அண்ணையிடம் தெரியப்படுத்தினார். தளபதி பால்ராஜ் அண்ணை அனைத்துத் தகவல்களையும் தலைவருக்குத் தெரியப்படுத்தினார். அதை உன்னிப்பாக ஆராய்ந்த தலைவர் ‘சண்டை பிடிக்க வாய்ப்பாயிருக்கின்ற இடத்திலேயே மறிப்பு (cutout) தடுப்பு (cutoff) க்களை போடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு’ கூறினார். இந்த சம்பவத்தைப்பற்றி பால்ராஜ் அண்ணை கூறும் போது ”பளையிலிருந்து ஆனையிறவு வரைக்கும் இராணுவத்தின் மிகவும் பலம்பொருந்திய அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பளையில் ஆட்லறித்தளமும் இருந்தது. எனவே இவ்வளவு ஆமியையும் தாண்டி ஊடறுத்து நிற்க முடியுமா? எதிர்கொள்வது சாத்தியமா? என்று யோசித்துக் கொண்டிருக்க, ‘நீ என்ன யோசிக்கின்றாய், பளைக்கும் கொடிகாமத்திற்கும் இடையில் சாத்தியமாக உள்ள இத்தாவிலிலேயே ஊடறுப்புசெய்வதற்கான இடத்தை உறுதிப்படுத்தச் சொல்லு பால்ராஜ்’ என அண்ணை சொன்னார். “இனி நாம் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்டப்பணிகளைத் தொடருவோம்” எனக்கூறி வேவு நடவடிக்கையை பூரணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்தார். ஊடறுப்பு நடவடிக்கைக்கான திட்டமும் பூரணப்படுத்தப்பட்டது. இதற்கான பயிற்சி நடவடிக்கைகளில் சண்டையின் பிரதான தளபதிகளான பால்ராஜ், தீபன், துர்க்கா, விதுஷா உட்பட அனைவரும் அங்கு நின்று தங்களது பகுதி சண்டைகளுக்கான பயிற்சியைக் கண்காணிக்க, தலைவர் அந்த முகாமிற்கு அடிக்கடி வந்து பயிற்சியின் முக்கியமான விடயங்களையும் சரிபார்த்தார். இந்தச் சண்டையில் கனரக அணிகளின் பங்கு முக்கியம் என்பதால் கனரக ஆயுதப் போராளிகளுடன் கூடுதலாக நேரத்தைச் செலவழித்தார். மற்றும் கடுமையான சண்டையை எதிர்கொள்ளவேண்டும் என்பது தலைவருக்கு தெரிந்திருந்ததால் போராளிகளின் உளவுரணை மேம்படுத்தவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒரு நாள் தலைவர் அந்த பயிற்சி முகாமிற்கு வந்து கொண்டிருந்தபோது அந்த முகாமிற்கு கிட்டவாக ஒரு தளபதியின் வாகனம் பழுதடைந்து நின்றது. அதில் தளபதியுடன் சென்ற போராளிகள் நின்றிருந்தனர். (தளபதிகள் வெளியில் போகும் போது, அவர்களுடன் நிற்கும் சில போராளிகள் மட்டும் தளபதியுடன் வெளியில் செல்லலாம்). அந்தத் தளபதி தலைவர் கலந்துரையாடலுக்கு வருகின்றார் என்ற காரணத்தால் அவர்களை வாகனத்துடன் விட்டுவிட்டு வேறு வாகனத்தில் சென்றுவிட்டார். கலந்துரையாடலுக்கு வந்த தலைவர் அந்தப்போராளிகள் பழுதடைந்த வாகனத்துடன் நின்றதைப் பார்த்துக் கொண்டு வந்தவர். கலந்துரையாடலை முடித்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கும் போது வாகனத்துடன் சில போராளிகள் நின்றதை நினைவுபடுத்தி, அவர்களுக்கு சாப்பாடு அனுப்பப்பட்டுள்ளதா? அனுப்பியிருக்காவிட்டால் சாப்பாடு அனுப்புங்கள் என்று கூறிவிட்டே சாப்பிட அமர்ந்தார். ஒரு முக்கியமான சண்டைக்கான கலந்துரையாடலைக் கையாண்டு விட்டு, சாப்பாட்டு நேரத்தில் தான் வழியில் கண்ட போராளிகளை அந்த தருணத்தில்கூட நினைவுபடுத்தியது, ஒவ்வொரு சின்ன விடயத்திலும் எவ்வளவு அக்கறையாக இருப்பார் என்பதற்கான சிறிய உதாரணம். பெட்டிச்சண்டைக்கான திட்டத்தில் சண்டைக்கு முதல் நாள் ஒரு பிளாட்டூன் தரையிறங்கி நிற்கும். சண்டையன்று, சண்டைக்கான முழு அணிகளும் தரையிறங்குவதற்கு முன் முதல் நாள் செல்லும் பிளாட்டூன் தரையிறங்கும் இடத்தில் கட்டவுட் போட்டு அணிகள் பாதுகாப்பாக தரையிறங்க வழிசமைக்கும் என்பதற்கமைவாகவே திட்டமிடப்பட்டது. சண்டைத்திட்டங்களை தாக்குதல் அணிகளுக்கு தளபதி பால்ராஜ் விளங்கப்படுத்திக் கொண்டிருக்கும் போது வந்த தலைவர், திட்டத்தில் மாற்றத்தைச் செய்து ‘முதல் நாள் செல்லும் அணியை அனுப்பவேண்டாம். எல்லாரும் ஒரே நாளே செல்லுங்கள். முதல் நாள் செல்லும் பிளாட்டூன் தரையிறங்கும் போது எதிரி அலேட் ஆனால் ஒட்டு மொத்த சண்டையையும் பாதிக்கும். மற்றும் எதிரி எதிர்பார்க்கமுடியாத இடத்தில் தரையிறங்குவதால் அணிகள் தரையிறங்கும் போது குழம்பினாலும் நிலைகளிற்குச் செல்வதில் சிரமம் இருக்காது. முதல்நாள் சிறு தவறு நடந்தாலும் ஒட்டு மொத்த திட்டத்தையும் பாழடித்துவிடும்’ என்று திட்டத்தின் மாற்றத்தை சொல்லிவிட்டுச் சென்றார். அவர் எதிர்பார்த்தமாதிரியே அணிகளின் நகர்வை ராடரில் அவதானித்த எதிரி தாக்குதலை ஆரம்பித்து விட்டான். 1500 பேர்களை கொண்ட திட்டத்தில் கிட்டத்தட்ட அரைவாசிக்கு பேருக்கு மேல் தரையிறக்க முடியவில்லை. முகமாலை பொக்ஸ் சமருக்கான கலந்துரையாடலில், நெப்போலியன் கையாண்ட ஒரு தந்திரோபாயத்தைப்போல ‘கடற்புலி உங்களை தரையிறக்கி விடும். ஏற்றுவதற்கு வராது. நான் பரந்தனில் நிற்பன் நீங்கள் அதால வந்து கைதாங்கோ’ என்ற விடயத்தைக் கூறி சண்டைக்கு அனுப்பிவைத்தார். இங்கு தரையிறங்கும் படையணிகள் சண்டையிட்டு வெற்றி பெறுவதே ஒரே வழி. பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற எண்ணத்தைப் போராளிகளுக்கு ஏற்படுத்தினார். இது வென்றேயாக வேண்டும் என்ற மனநிலையில் போராளிகளை வைத்திருக்கும். இந்தப் பொக்ஸ் சண்டைக்கு அது அவசியம் என்பது தலைவரின் கணிப்பு. சண்டை தொடங்கும் வரை கட்டளைத்தளபதிகள் ஊடாக சண்டையை நேரடியாகத் தயார்ப்படுத்திவிட்டு, சண்டை தொடங்கிய பின் பானு அண்ணையை இந்தச் சண்டையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கி சண்டையை ஒட்டுமொத்தமாக வழிநடாத்தினார். அந்த நேரத்தில் தளபதி தீபன் தலைமையிலான அணிகள் முகாவில் பக்கத்தால் உடைத்துக் கொண்டு, ஊடறுத்து நிற்கும் பால்ராஜ் அண்ணையின் அணியுடன் இணைய வேண்டும். இதற்காகத் தளபதி தீபன் அவர்களின் அணிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத்தழுவிக்கொண்டிருந்தன. மறுபுறம், சிங்களத்தின் சிறப்பு படைகளை எதிர்த்து கடுமையான சண்டையை பிடித்துக்கொண்டிருந்தது தரையிறங்கிய படையணி. பால்ராஜ் அண்ணையை உயிருடனோ அன்றி பிணமாகவோ கொண்டுவருவோம் என்ற உறுதிப்பாட்டில் சிங்களப்படை பொக்ஸ்சை சுற்றி வளைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. ”என்னை நம்பி அங்கு போராளிகள் இவ்வளவு பெரிய படைக்குள் நின்று, தக்கவைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இங்க உடைச்சுக் கொண்டு போகமுடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்” என்று தளபதி தீபன் அவர்களைக் கடுமையாகச் சாடிய தலைவர், மாற்றுத்திட்டமாக ஆட்லறிகளை நேரடிச்சூட்டிற்குப் பயன்படுத்தி உடைக்கிறீங்கள், உடைக்காமல் திரும்பி வந்து காரணம் சொல்லக்கூடாது என கண்டிப்பான கட்டளையைக் கொடுத்தனுப்பினார். இதற்கு மேல் தலைவரிடம் காரணங்களுடன் செல்ல முடியாது என்பது தீபன் அண்ணைக்குத் தெரியும். தானே நேரடியாகக் களத்தில் இறங்கி, மருதங்கேணியில் ஆட்லறிகளை வைத்து நேரடிச்சூட்டை வழங்கி உடைத்துக் கொண்டு நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச்சந்தியைக் கைப்பற்றிது. அதில் ஒரு தொகுதி அணி பின்னர் பளையை நோக்கி முன்னேறி, ஊடறுத்து நின்ற அணியுடன் கைகோர்த்தது. ஊடறுப்புச் சமருக்கான படையணிகளுக்கு மூன்று நாட்கள் எந்த வித சப்ளையும் கிடைக்காது என்பதை கணித்த தலைவர், அவர்களுக்குரிய வெடிபொருள்களை மட்டுமல்ல, உற்சாகமாகச் சண்டைபிடிப்பதற்கான சத்தான உலர் உணவுப்பொருட்களையும் தயார்ப்படுத்திக் கொடுத்திருந்தார். இதற்கென கலோரி கூடிய சொக்லேட்டுக்களைக் கூட வெளிநாட்டிலிருந்து எடுத்திருந்தார். அந்தளவிற்கு சிறிய விடயங்கள் தொடங்கி, ஒவ்வொரு விடயத்திலும் தன்னை நம்பி சண்டையிடும் போராளிகளின் சகல விடயங்களையும் சரிபார்ப்பார், கவனிப்பார், ஊக்கமளிப்பார். சண்டையின் ஒருவொரு நிமிடத்தையும் கண்காணித்து, அதை வெற்றியை நோக்கி மாற்றுவதற்கான சகல செயற்பாடுகளையும் திட்டமிடல்களையும் ஒழுங்கமைப்புகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருப்பார். சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் நிதித்துறைப்பொறுப்பாளர் கேணல் தமிழேந்தி அவர்களை அழைத்து பொக்ஸ்குள் சென்று அங்குள்ள போராளிகள், பொறுப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள், என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்று பார்த்துச் சரிசெய்யுமாறு அனுப்பினார். அவரைமட்டுமல்ல சண்டையுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையைச்சார்ந்த பொறுப்பாளர்களரையும் அழைத்துச் சகல விடயங்களையும் சரிபார்க்குமாறு அனுப்பி வைத்தார். ஒரு சண்டையை திட்டமிடும் நேரத்தில் அந்தச் சண்டையின் வெற்றியைச் சாதகமாக்கும் அல்லது வலுப்படுத்தும் பிற நடவடிக்கைகளைக்கூட தனது நேரடிக்கண்காணிப்பில் இருந்த அணிகளைக் கொண்டு ஒரு பக்கத்தால் செய்து கொண்டிருப்பார். ஆனையிறவு படைத்தள வெற்றியின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுப்பதிலிருந்து சண்டையில் இறுக்கங்கள் ஏற்பட்ட போது சம்பந்தப்பட்ட தளபதிகளுக்கு கடுமையான கட்டளைகளையும் மாற்றுத் திட்டங்களையும் வழங்கி சண்டையின் வெற்றிக்கான தலைமையை வழங்கியவர் தலைவர். சண்டையின் நினைவாக, பால்ராஜ் அண்ணை முகமாலை பொக்ஸ் சமருக்குள் எடுத்த படத்தை தனது அலுவலகத்தில் பெரிதாக்கி கொழுவியிருந்தார். அதுமட்டுமல்ல தளபதி பால்ராஜ் அவர்கள் வீரச்சாவடைந்த போது ‘என்னையும் விஞ்சிய போராளி’ என மனந்திறந்து சொன்ன தலைவர் சுயபுகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர். ஒரு சண்டையில் தலைவராகவும் இராணுவத்தளபதியாகவும் தனது பாத்திரம் என்னவோ அதைச் சரியாக செய்வதுடன் சண்டைக்கு தான் நியமிக்கும் தளபதிகளினூடாக அந்தப்பணிகளை செய்விப்பதற்கான சகல திட்டங்களையும் ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்குவார்.தனது கட்டளையை சரியாக செயற்படுத்தவில்லை என்று அறிந்தால் அந்த நிமிடமே குறிப்பிட்ட தளபதியின் பொறுப்பை மாற்றி, புதிய தளபதியை நியமித்து சண்டையை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருப்பார். இப்படியாக பல வகையில் தமிழீழ விடுதலைக்கான தலைமைத்துவத்தைக் கொடுத்ததால் தான் அவர் தமிழர் மனங்களில் என்றென்றைக்கும் தன்னிகரில்லாத் தலைவராகவும் சிறந்த இராணுவத்தளபதியாகவும் வாழ்ந்துகொண்டிக்கின்றார். Edited October 6, 2013 by வாணன் 13 Share this post Link to post Share on other sites
SUNDHAL 1,081 Report post Posted September 30, 2013 நன்றிகள் அண்ணா மீண்டும் தொடர்வதற்கு இன்னும் தொடருங்கள் Share this post Link to post Share on other sites
லியோ 245 Report post Posted September 30, 2013 வாணன் நன்றாக உள்ளது,தொடருங்கள். லீமாவின் தரையிறக்கப்படத்தையும் இணைக்கமுடியுமாயின் இணைத்து விடுங்கள் Share this post Link to post Share on other sites