Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 1

 

மரண பயம்

 

 

பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு நிச்சயமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், மரணத்தைப் பற்றிச் சிந்தித்து மனதை நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.
 
இளம் வயதினர் தாம் இப்போதைக்கு இறந்து விடப் போவதில்லை என்ற உள்ளுணர்வு தரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வயோதிகர்களோ  மரணம் பற்றிய சிந்தனைகள் துன்பகரமானவை என்று நினைத்து அவ்வெண்ணங்களை மனதில் வளர விடுவதேயில்லை.
 
ஆனால், இறப்பு நாம் எதிர்பார்த்திருக்கும்போது இயல்பாகவும் வந்துவிடுகிறது. சற்றும் எதிர்பாராது இருக்கும்போது திடீரென்றும் வந்துவிடுகிறது. 
 
Irantha-Pin---1.pngவாழவேண்டும் என்ற ஆசை பொதுவாக எல்லோரிடமும் உண்டு. இதை அபிநிவேஸ என்று சமஸ்கிருதத்தில் கூறுவர். எழுந்து நடமாட முடியாத வயோதிகர்கள் கூட இன்னும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கடும் நோயினால் வருந்துபவர்கள் கூட, நோய் தீர வேண்டுமென விரும்புகிறார்களே ஒழிய இறந்துவிட்டால் நல்லது என்று எண்ணுவதில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் உயிர் வாழ வைத்தியர்கள் உதவ மாட்டார்களா என்று அங்கலாய்ப்பார்கள்.
 
ஆனால், ஏதோ ஒரு லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்து மரணத்தை விரும்பி அணைத்துக் கொள்பவர்களும், வைராக்கியத்தில் தற்கொலை செய்யும் துணிச்சல்காரர்களும், நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
பற்றற்று வாழும் துறவிகளுக்கும், "எல்லாம் அவன் செயல்" என்று இறைவனடியில் சரணடைந்துவிட்ட பக்திமான்களுக்கும் மரணபயமிருப்பதில்லை.
 
மரணம் பயங்கரமானது என்ற எண்ணம் மனிதர்களிடையே இருப்பதால் தான் "உங்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால்" என்று சுற்றிவளைத்துச் சொல்கிறோமேயொழிய "நீங்கள் இறந்துவிட்டால்" என்று பட்டவர்த்தனமாகக் கூறுவதில்லை.
 
எமது மரணத்தின் பின் எமது மனைவி மக்கள் வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் சில ஒழுங்குகளை முற்கூட்டியே செய்து வைத்துவிடுகிறோம். ஆனால் நாம் இறந்தபின் எமது ஆன்மாவின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 
 
மனத்தின் ஆழத்தில் உள்ள மரணபயம் காரணமாகவே நாம் இறப்பின் மர்மங்களையும் இறந்தபின் என்ன நிகழ்கிறது என்பதையும் அறிய ஆர்வங் கொள்வதில்லை.
 
நாம் சிறிதளவேனும் அறிய முயற்சிப்போமா?? 
 
வாருங்கள்..
 

Edited by ஜீவா

  • Replies 65
  • Views 63.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் யீவா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருப்பொருள், ஜீவா!

 

எனது வாசிப்புக்களில் பெரும்பாலானவை, மரணம் அல்லது மரணத்துக்குக் கிட்டப் போனவர்களின் (near death experiences)அனுபவங்கள் பற்றியதே! மேலும், மேலும் வாசிக்க, வாசிக்க எமது முன்னோர்கள், நாங்கள் நினைப்பதிலும் பார்க்கப் பல விடயங்களை அறிந்திருந்தார்கள், என்பதை அறிய மிகவும் ஆச்சரியமாக உள்ளது!

 

முன்பு இலங்கைக்கு வந்த யாத்திரிகன் ஒருவன், மரணிப்பவன் ஒருவரைச் சுற்றிப் பல உறவுகள் நின்றதையும், அந்த மரணிப்பவனின் முகத்தில், அவனது மரணப்பொழுதில் தோன்றிய மகிழ்ச்சியையும், திருப்தியையும் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டதாக எழுதியிருந்தார்! இதுவே மரணம் பற்றிய எனது ஆர்வத்துக்குக் காரணமாக இருக்கவேண்டும்! நீண்டகால வாசிப்புக்கள், மரணம் என்பது (இயற்கை மரணங்கள்) ஒரு விடுதலையே என்னும் கருத்தை என்னுள் ஆழப்புதைத்து விட்டன என்றே எண்ணுகின்றேன்! அத்துடன், மரணம் என்பது, ஒரு இடைதரிப்பே அன்றி வாழ்வின் முற்றுப்புள்ளியல்ல என்றும் நம்புகின்றேன்! 

 

இந்தாள் ஒரு 'தலை கழண்ட கேஸ்' போல கிடக்கு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது! :o

 

தொடருங்கள், ஜீவாதம்பி! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தூங்குவது போலும் சாக்காடு தூங்கி
விழிப்பது போலும் பிறப்பு -- திருவள்ளுவர்

பகிர்வுக்கு நன்றி. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா, முதுமை கார‌ண‌மாக‌ ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையில்... இருந்த‌ போது,
சில‌ நாட்க‌ள் உண‌ர்வு இழ‌ந்திருந்தார்... பின் ஒருநாள் விழித்து என்னுட‌ன் க‌தைக்க‌ விரும்புவ‌தாக‌, உற‌வின‌ர்க‌ளிட‌ம் கூறிய‌ போது...
அவ‌ர்க‌ள் கைத்தொலைபேசியை... கொடுத்தார்க‌ள், அவ‌ரும்... தெளிவான குரலில், "என‌க்கு, மேல் லோக‌த்தில் இருந்து அழைப்பு வ‌ந்துவிட்ட‌து, இர‌ண்டு நாள் அங்கு இருந்து விட்டுத் வ‌ருகின்றேன். ந‌ல்ல‌ அழ‌கான‌ இட‌ம், பார்க்க ஆசையாயிருக்கு, இனி.... க‌ன‌ நாள் இங்கு இருக்க‌ மாட்டேன், அங்கு போக‌ப்போகின்றேன் என்று கூறினார்". அத‌ன் பின் சுய நினைவு இழந்து... ஒரு கிழ‌மையில் இற‌ந்து விட்டார்.
அதன் பின், எனக்கும்... மரணத்தை பற்றி அறிய ஆவல் அதிகம் ஜீவா. எழுதுங்க‌ள்... வாசிக்க‌, ஆவ‌லாக‌ உள்ளோம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

நாம்வாழும் இந்த உலகம் ஐந்து மூலப்பொருட்களால் ஆனது. இவை அனைத்தும் ஒன்றாகி ஒரு உருவாகி கண்ணுக்குப் புலப்படும்போது அதனைப் பிறப்பென்று சொல்கிறோம். பின்பு அவை பிரிந்து கண்ணுக்கு மறைந்து பழைய நிலையை அடைந்துவிடுவதை இறப்பென்று சொல்கிறோம். எவையும் அழிந்துவிடுவதில்லை. என் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப எனக்கு என் சிந்தனை தரும் விளக்கம் இதுதான். இந்த நிலை ஒவ்வொருவரிடமும் மாறுபட்டுள்ளது. இந்த மாறுபாடுகள் பகிரப்படும்போது பரவசமேற்படுவதால் மனம் இதனைத் தொடரவே விரும்புகிறது. அடிமுடி தேடும் படலமாகவும் இதனைச் சுவைக்கலாம், தொடருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் உலாவும் இடங்களில் இரவுப்பார்வை கமராக்களை (Night vision Cameras) பொருத்தி எடுத்த காணொளிகளில், ஜீவா இணைத்த படத்தில் உள்ளதுபோன்ற சிறிய புகை வடிவம் வேகமாகச் செல்வதை காணக்கூடியதாக இருக்கும்.. :unsure: அதைத்தான் ஆன்மா என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.. :huh:

 

எது எவ்வாறாயினும், எனக்கு மறுபிறப்பு கிடையாது என்று ஜோசியர் சொல்லிவிட்டார்.. :wub:  நேரா சொர்க்கம்தானாம்..  :D   ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாரும் வெயிட்டிங்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பா  உங்களுக்கு பக்கத்தில் தான் இருக்கிறார்.சொர்க்கம் எல்லாம் போகத்தேவை இல்லை. :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் உலாவும் இடங்களில் இரவுப்பார்வை கமராக்களை (Night vision Cameras) பொருத்தி எடுத்த காணொளிகளில், ஜீவா இணைத்த படத்தில் உள்ளதுபோன்ற சிறிய புகை வடிவம் வேகமாகச் செல்வதை காணக்கூடியதாக இருக்கும்.. :unsure: அதைத்தான் ஆன்மா என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.. :huh:

 

எது எவ்வாறாயினும், எனக்கு மறுபிறப்பு கிடையாது என்று ஜோசியர் சொல்லிவிட்டார்.. :wub:  நேரா சொர்க்கம்தானாம்..  :D   ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாரும் வெயிட்டிங்.. :icon_idea:

அதுசரி  இசை , இவர்களுக்காக நீங்கள் எதுக்குச் சொர்க்கம் போகணும்.  கொஞ்சம் பணத்துடன் கேரளாவுக்குப் போனால் போதுமே ! :D

  • கருத்துக்கள உறவுகள்

எது எவ்வாறாயினும், எனக்கு மறுபிறப்பு கிடையாது என்று ஜோசியர் சொல்லிவிட்டார்.. :wub:  நேரா சொர்க்கம்தானாம்..  :D   ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாரும் வெயிட்டிங்.. :icon_idea:

 

உமி தூக்கும் பலமுள்ளவரையில் ஒருவன் ரம்பா, ஊர்வசி, மேனகா என்ன அதற்கு மேலான மோகனாங்கிகளையும் தூக்கலாம். ஆனாலும் நாரிப்பிடிப்பிற்கு மருந்து தேடுவதற்கு நீங்கள் மருத்துவப் பகுதியொன்றை யாழில் இணைக்கும் ஏற்பாடுகள் செய்துகொள்வது நல்லது. :huh: 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 2

 

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?

 

இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை.
 
மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது.
 
ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள்.
 

Irantha-Pin---2.png

 
பிரம்மஞான சங்கத்தைச் (theosophical Society)  சேர்ந்த சிலர் தாம்பெற்ற நுண்நோக்காற்றலால் (clairvoyance) நேரடியாக அறிந்து ஆய்வுசெய்த உண்மைகள் எனக் கூறி மரணத்தைப் பற்றிய மர்மங்களைத் துலக்கியுள்ளார்கள்.
 
மகாரிஷிகளும் சத்தியவழியில் வாழ்ந்த மகான்களும் கூறுபவைகள் உண்மையாகவே அவர்களால் உணரப்பெற்றவை என்பதை நாம் ஏற்காதிருக்க முடியாது. ஆனால் அவர்களுடைய சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கற்பனைகள் தான் பொய்த் தோற்றங்களாக அவர்களுக்கு வெளிப்பட்டனவோ என்ற ஐயம் ஏற்படுவதும் நியாயமே.
 
எவ்வாறாயினும் மகாத்மாக்கள் உலகுக்கு எடுத்துரைக்கும் உண்மைகள் தீர்க்கமான ஆய்வுக்குப்பின் வெளிப்படுத்தப்படும் துணிபுரைகள் என்று நாம் கொள்ளுதலே பொருத்தமாக இருக்கும்.
 
மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் சாங்கீயம் என்னும் தத்துவ விளக்கத்தை உலகுக்கு அளித்த கபிலமுனிவர் அண்டத்தைப் பற்றிக் கூறிய உண்மைகளைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சிகளின் பின்னர் கண்டு பிடித்து வெளியிடுகிறார்கள்.
 
மகரிஷி பரத்வர்ஜர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த சுவடிகளில் ஆகாய விமானங்களைப் பற்றியும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பற்றியும் பிற கோளங்களை ஆராயவ்தற்கான விண்வெளி விசையூர்திகளைப் பற்றியும் பல தொழில்நுட்ப விடங்களைக் கூறியுள்ளார். மைசூர் சமஸ்கிருத ஆராய்ச்சிக் கழகத்தினரால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வோலைச் சுவடிகளை ஆய்வு செய்ய மேலை நாட்டு அறிஞர்கள் வந்தவண்ணமிருக்கிறார்கள்.
 
இந்த ரிஷிகள் கடுமையான தபஸ் மூலம் அடைந்த ஞானத்தினாலம் நுண்நோக்காற்றலாலும் அறிந்துக்கொண்ட உண்மைகளே நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் இவ்விஞ்ஞான விளக்கங்கள். மரணத்தின் மர்மங்களும் இதேபோல ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளே.
 
ஒவ்வொரு மனிதனும் தன்னகத்தே முதிர்வுறாத புலனுணர்வுகளைக் கொண்டவனாயுள்ளான். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனுக்கு இயல்பாக வெளிப்படக் கூடிய உணர்வுகள் இப்போதைய மனிதனிடம் மறையாற்றலாகவுள்ளன. அவ்வுணர்களைத் தக்க யோக முறைகளைக் கையாண்டு கடும் முயற்சியினால் மலர்வுறச் செய்கிறார்கள் ரிஷிகளும் யோகிகளும் மனவாற்றல் பெற்ற மகான்களும்.
 
அவ்வாறான ஆற்றலைப் பெற்றவர்களால் மரணத்தின் பின் உள்ள மர்மங்களை ஒரு சூட்சும தள நிலையில் இருந்து அவதானிக்கக் கூடியதாயிருக்கும்.
 
அது என்ன சூட்சும தளம்?

அடுத்து பார்க்கலாம்.
 

 

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 3

 

சூட்சும தளம்

 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளம் கிடைக்கப் பெறுவதுடன் அதனைப் பற்றிய சிறப்பான முடிவையும் பெற முடியும்.  தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.
 
சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரமைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,
 
  • புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
     
  • புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
     
  • கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
     
  • வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
     
  • தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
     
  • மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)
 
ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.  இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
 
Irantha-Pin---3.png
 
உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.  நம் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களையம் திணறடிக்கும் இவ்வுணர்வுகளுக்கான நிலைக்களன் வேறொரு சூட்சும தளம் (Astral Plane) என எண்ணவேண்டியுள்ளது.
 
இவற்றைப் பற்றி முதலில் பதிவு செய்தவர்கள் யார்?
 
இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தலை சிறந்த விஞ்ஞானிகளும் பெராசிரியர்களும் (Sir William Crooks, Dr, F.W.H.Miyers. Sir Oliver Lodge, Richardd Hodson, Edmmund Gurney, Frank Padmore, R.D. Own, Prof.Aksakof, Russel Wallace, C.N.Jones) ஒன்று சேர்நச்து சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். இவர்களால் மடனோதத்துவ ஆராய்ச்சியாளர் சங்கம் (Society for the Psychical Reserch)) என்ற ஓர் அமைப்பு 1885 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. எஸ்.பி.ஆர் என்று பிரபல்யமாகிய இச்சங்கத்திற்கு அமெரிக்காவிலும் ஒரு கிளை இருந்தது.
 
மனிதன் இறந்த பின் வேறொரு நிலையில் வாழ்கிறான் என்ற அபிப்பிராயத்தை யார் தெரிவித்தாலும் அவர் கிறிஸ்தவ உலகின் பலத்த கண்டனதுக்கு ஆளாகக்கூடிய கால கட்டத்தில் இச்சங்கம் தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளை துணிவுடன் வெளியிட்டுப் பரபரப்பை எற்படுத்தியது.
 
அப்படி என்னதான் வெளியிட்டார்கள்?..
 
தொடரும்..

ஜீவா இணைப்பிற்கு நன்றிகள் ...ஆர்வத்தில் நான் எல்லாப்பகுதியையும் வாசித்துவிட்டேன் .......... :D

 

 

 

இதில் நான் கூறுவதற்கு பயத்தை தவிர எதுவுமில்லை சகோ.............

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி? அறிவதற்குப் பயமா? ஆர்வமில்லையா? நடப்பது நடக்கும் நமக்கேன் சிரமம் என்ற மனநிலையா? கருத்தெழுதும் பலரை இங்கு காணவில்லையே! பருவ மங்கையின் பாவாடை சற்று மேலேறியது, அல்லது கீழிறங்கியது என்றால் திரியை மூடிவிடுமளவிற்கு கருத்துக்கள் குவிந்து விடுகிறதே! காரணமென்ன? இதன் மர்மத்தை நான் அறிந்துகொண்டேன். அண்ட சராச்சரங்களும் பெண்ணுக்குள் அடக்கம். அங்கு கைவைத்தால் என் கை முடிவின்றி எழுதும். :icon_idea: 

மரணத்துடன் சம்பந்தப் பட்ட ஓர் பதிவை எனது பாணியில் கடந்த ஏப்பிரல் மாதமளவில் போட்டிருந்தேன் . ஒரு சில காரணங்களால் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை . ஆனாலும் அது இந்தப் பதிவுக்கு உறுதுணை செய்யும் என நினைகின்றேன் .

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120457

 

மனிதனின் மரணத்திற்குப் பின் நடப்பவை

 

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்:

ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் :

கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் :

மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் :

பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் :

சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் :

சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்:

ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் :

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் :

அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

 

http://coimbatoresexologist.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்,கோமகன்!

 

உங்கள் பதிவில் ஆரம்பத்தில் கூறப்பட்பவை, பெரும்பாலும் மனித மூளை, மரணத்திற்கு உடலைத் தயார் படுத்தும் நிலை என்று,சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்! ஒருவர் வாழ்ந்த வாழ்வின் அனுபவங்கள், மூளையின் ஒரு பகுதியிலிருந்து 'திரைப்படம்' போல வெகு விரைவாக இரை மீட்கப் படுகின்றது! இறந்துபோன உறவினர்கள், தாங்கள் வணங்கும் தெய்வங்கள் என்பன அவர்களது, ஆழ்மனத்தின் இரை மீட்டல்களே எனவும் கூறுகின்றார்கள்!காற்றில் மிதப்பது போன்ற அனுபவங்கள், சூக்கும சரீரம்  அல்லது ஆத்மா என்னும் மற்றைய உடலினது இயக்கமாக இருக்கலாம் எனக் கூறுகின்றார்கள்! ஒருவன் கனவு காணும் வேளையில், இந்த உடல், சரீரத்தை விட்டு வெளியில் போய் சஞ்சாரம் செய்வதாகவும் ஒரு கருத்து உண்டு! 

சுவாமி விவேகானந்தர், தனது உடலை விட்டுக், சூக்கும உடல்மூலம் கங்கை நதிக்கரையோரம் பறந்து திரிந்த பின்பு,மீண்டும் தனது உடலுக்குத் திரும்ப முடிந்ததாகக் கூறியிருக்கிறார்! தனது மரணத்தின் சரியான நாளை, இவர் கணித்துக் கூறியதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்!

ஐம் புலன்களையும் உபயோகிக்காமல், பார்க்கவும், கேட்கவும், வாசனைகளை முகரவும் மனித உடலால் முடியும் என்பதை, நான்  ஏற்றுக் கொள்கிறேன்! இது விஞ்ஞான ரீதியாகவும், நிறுவப்பட்டுள்ளது. ஒருவன் தனது தொடுகை மூலம் பல நிறங்களை, அடையாளம் காணவும் முடியுமாம்!

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உடலை விட்டு ஆவி பிரிந்து செல்லும் அனுபவம் பறறிய எழுத்துக்கள் ஆச்சியமாக உள்ளன.. சில நேரங்கள் இப்படி ஒரு அனுபவம் எப்படி இருக்கும் என நானே சயனத்தில் முயற்சித்தும் பார்ப்பதுண்டு.. :o உடலில் பாரம் குறைவது போலவும் பறப்பது போலவும் உணர்வுகள் ஏற்படும்.. :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல்வேறு நாடுகளுக்கும் போயிருக்கிறேன். இத்தாலி மிலானோ நகரில் இருக்கும்போது அந்த நகர் எனக்குப் மிகவும் பழக்கப்பட்டது போலவும், பலகாலம் அங்கே நான் வாழ்ந்தது போன்ற அனுபவத்தையும், ஏதோ ஒன்று உணர்த்தியதை உணர்ந்தேன். அங்குமட்டும்தான் அந்த உணர்வு ஏற்பட்டது வேறு எங்கும் ஏற்படவில்லை. இன்றும் அது எனக்கு வியப்பைத்தருகிறது.

 
எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்.  பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே.  என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.  மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும்.  எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.  எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  எமது வாழ்வில் நாம் செய்யாத கடமைகள் இருப்பின், மரணத்தின் பின்பும் நாம் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்போம் அல்லது மீண்டும் பிறப்பெடுப்போம்.  எமது பிறப்புகளில் நாம் செய்யும் நன்மை, தீமைகள் எமது கடைசிப் பிறப்புவரை தொடரும்.   நாம் பிரபஞ்சத்தின் Cycleஐ முடிக்கும்வரை எமது பிறப்புகளும் தொடரும்.  
 
இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களாலும் இயக்கப்படுகிறது.  பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதங்களும் எமது உடலுக்குள்ளும் உள்ளது.  இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறதோ அதைப்போலவே எமது உடலும் ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறது.  இவ் ஐம்பூதங்களை எம்மாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.  இவ் ஐம்பூதங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான் சித்தர்களும் முனிவர்களும்.  சித்தர்கள், முனிவர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள்.  ஆனால், அதனை ஏற்க மறுத்த, விளங்கிக் கொள்ள முடியாத மேற்கத்தேயர்கள் இவர்களின் சித்தாந்தங்களை வேண்டுமென்றே மறைத்தனர், மறுத்தனர்.  எமது சித்தாத்தங்களில் சொல்லாத விடயமே இல்லை என்று சொல்லலாம்.  
 
நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம்.  ஆகவே, இறப்பு என்பதும் அதன் பின்னான நிகழ்வுகளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே.  எமது வாழ்விற்கு எவ்வாறு நிகழ்வு நிலைகள் இருக்கின்றனவோ அதேபோல்தான் மரணத்திற்கும் அதற்குப் பின்னரும் உண்டு.  ஜீவா நீங்கள் குறிப்பிட்டுள்ள கடைசிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆற்றல்களை எமது வாழ்விலும் நாம் அனுபவிக்க முடியும்.  ஆனால், நாம் அவற்றில் அக்கறை செலுத்துவதில்லை.  மாறாக, இயற்கைக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.  சுனாமியின்போதும், இயற்கையாக நடைபெறும் அனர்த்தங்களின்போதும் விலங்குகள் தப்பி விடுகின்றன.  மனிதன்தான் அதிகம் இழப்புகளைச் சந்திக்கின்றான்.  இதற்குக் காரணம் நாம் உள்ளுணர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை.  இவ்வாற்றல்கள் எமக்கு இருப்பதாகவே நாம் நினைப்பதில்லை.  (We don't sense them).  கடைசிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, முயற்சி செய்தால் இச்சக்திகளை நாம் மீண்டும் பெறலாம். 

 

 

 

நான் பல்வேறு நாடுகளுக்கும் போயிருக்கிறேன். இத்தாலி மிலானோ நகரில் இருக்கும்போது அந்த நகர் எனக்குப் மிகவும் பழக்கப்பட்டது போலவும், பலகாலம் அங்கே நான் வாழ்ந்தது போன்ற அனுபவத்தையும், ஏதோ ஒன்று உணர்த்தியதை உணர்ந்தேன். அங்குமட்டும்தான் அந்த உணர்வு ஏற்பட்டது வேறு எங்கும் ஏற்படவில்லை. இன்றும் அது எனக்கு வியப்பைத்தருகிறது.

 

நீங்கள் போன முற்பிறப்பின்போது, அங்கு வாழ்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் உலாவும் இடங்களில் இரவுப்பார்வை கமராக்களை (Night vision Cameras) பொருத்தி எடுத்த காணொளிகளில், ஜீவா இணைத்த படத்தில் உள்ளதுபோன்ற சிறிய புகை வடிவம் வேகமாகச் செல்வதை காணக்கூடியதாக இருக்கும்.. :unsure: அதைத்தான் ஆன்மா என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.. :huh:

 

எது எவ்வாறாயினும், எனக்கு மறுபிறப்பு கிடையாது என்று ஜோசியர் சொல்லிவிட்டார்.. :wub:  நேரா சொர்க்கம்தானாம்..  :D   ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாரும் வெயிட்டிங்.. :icon_idea:

 

 

அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
 
சொர்கத்தில் அன்னை தேரேசாதான் கையை கூப்பிக்கொண்டு வாருங்கள் இசை என்று வாசலில் நிற்பா.
 
இப்பவவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை காலம் இருக்கிறது.
யோசித்து முடிவெடுங்கள் எங்கே போவது என்று.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மரணத்துக்குள் நிறைய ஆராய்ச்சி செய்யனும் என்று ஆசை. அதற்கு செத்துத்தான் ஆகனும் என்றால்.. செய்த ஆராய்ச்சியை சாகாத.. மனிதர்களிடம் சமர்ப்பிக்கிறது எப்படி என்று யோசிச்சுக்கிட்டே இருக்கிறேன்..! :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 4

 

எஸ்.பி.ஆர் சங்கம்

 

எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார்.
 
இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் "மீடியம்கள்" மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக உள்ளன. இறக்கும்பொழுது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆவல் காரணமாக தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு ஆவிகள் "மீடியம்" களை உபயோகிப்பதுண்டு.
 
பிலிப்ஸ் என்ற ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் 25 வருடங்களுக்கும் மேலாக செய்த தீவிர ஆராய்ச்சிக்குப் பின் "இறப்புக்குப்பின் வாழ்வு" என்ற ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றனர். பல ஆண்டுகளாக ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் அனுபவங்களையும், பல நாடுகளில் ஆவிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் மறு உலகத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் பிலிப்ஸ் தம்பதியர் நூலில் விளக்கியுள்ளனர். அந்நூலில் அடங்கிய ஏராளமான தகவல்களில் முக்கியமானதொன்று, இலண்டனில் 19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.
 
இங்கிலாந்தில் முதன்முறையாக புகைக்கூண்டுகளின் உந்து சக்தியைக்கொண்டு பறக்கவிடப்பட்ட ஆகாய விமானம் திசைத் தப்பிப் போய் எங்கோ விழுந்து நொருங்கிவிட்டது. அதில் சென்ற தலைமைப் பொறியியலாளரின் ஆவி.. எவ்வாறு இலண்டனில் உள்ள விமானக் கம்பெனியின் மேலதிகாரியையும் ஒரு பிரபல அரசியல்வாதியையும் மீடியம் மூலமாகத் தொடர்புக் கொண்டு விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகளைப் பற்றித்தெரிவித்தது என்பதே அது.
 
Irantha-Pin---4.pngஇந்நூலில் கூறப்பட்ட இன்னொரு சுவராசியமான சம்பவம்.. மார்க் என்னும் ஒரு பத்திரிகை நிருபர் பற்றியது. இவர் இலண்டனில் ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் ஒரு குழுவில் உறுப்பினராக இருந்தார். வழக்கம் போல் ஒரு இரவு, இக்குழு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆவி, "உனக்கு யுத்த முனையில் நிருபராக கடமையாற்றும்படி அழைப்பு வரும். போகாதே" என்று மார்க்கை எச்சரித்தது. யுத்த முனையில் கடமையாற்ற வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் கொண்ட மார்க் அழைப்புக் கிடைத்தவுடன் ஆவியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்று விட்டார். சில நாட்களுக்குப் பின்னர் மார்க் உறுப்பினராக இருந்த குழு, ஆவிகளுடன் தொடர்புக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆவி உலகில் இருந்து மார்க்கினுடைய ஆவி பேசியது.
 
"இங்குள்ள எனது வழிகாட்டி நண்பரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்றேன். அங்கு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது யாருக்கோ குறிவைத்து குண்டு ஒன்று எனது நெஞ்சில் பாய்ந்து விட்டது. மறுகணம் எனது உடலையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். பின்னர் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விட்டேன்" என்றது அது.
 
இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும் முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
 
இவரின் சுவாரசியமான ஆய்வின் விபரங்களை அடுத்து பார்க்கலாம்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மரணம் பற்றிய கருத்துக்கள் மிகவும் அழகாகச் செல்லுகின்றது!

 

குறிப்பாகத் தமிழச்சி, பாஞ்ச் போன்றவர்களின் கருத்துக்கள், மறுபிறவிக் கொள்கையையும் ஓரளவுக்குத் தொட்டுச் செல்கிறது!

 

இந்த இடத்தில, சைவமதம் தன்னைத் தெளிவாக்குகின்றது! 

 

'புல்லாகிப், பூடாகிப், புழுவாய் மரமாகிப், பல்மிருகமாய்ப் பறவையாய்ப் பாம்பாகி. எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்.... என மணிவாசகர் குறிப்பிடுகிறார்!இந்து மதம் போன்று, சைவமதம் பிறப்புக்களை வரிசைப்படுத்தவில்லை! மிருகமாய்ப் பிறந்த பிறகு, பாம்பாதலைக் கவனிக்கவும்!கருமாவைப் (கருமம்) பிறப்புடன் சம்பந்தப் படுத்தல், வருணாச்சிர தர்மத்தின் பின்பே நிகழ்ந்திருக்க வேண்டும்!

 

ஆனால் கிறிஸ்தவ மதத்தின், மரணம் பற்றிய கருத்தில் எனக்குத் தெளிவில்லை!

 

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வாசித்திருக்கின்றேன்!

 

அப்படியானால், மரணம் ஒரு தண்டனை எனக் கருதப்படுகின்றதா?

பலரிடம் கதைக்கும்போது கேட்டுப்பார்த்தேன்! ஒருவரும் தெளிவான விளக்கத்தைத் தரவில்லை!

யாழ் உறவுகளிடமிருந்து, இதற்கான தெளிவைப்பெறலாம் என எதிர்பார்க்கின்றேன்!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.