Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பெண் புலியல்ல; நவீபிள்ளை மகிந்தவிற்கு ஆறுதல்.

Featured Replies

‘ எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர்.

நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.’என அவர் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இந்த மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாக கேள்விநேரத்தின் போது ஆணையாளர் கூறினார்.

மூன்று அமைச்சர்களும் சேர்ந்து விட்ட நிலைமையில் கடந்த வாரத்தில் இவ்வகையான கேவலப்படுத்தல்கள் உச்சத்திற்கு போயிற்று என்றும் அவர் கூறினார்.

புலிகள் பற்றி தனது நிலைப்பாட்டை  தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் அதை ஈவிறக்கமற்ற கொலைகார இயக்கமென கூறியதாகவும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இந்த இயக்கத்திற்கு புகழ்மாலை சூட்டுவதை தவிர்க்குமாறு கூறியதாகவும் அவர் கூறினார்.

புலிகள் இயக்கம் பல உயர்களை கொன்றொழித்துள்ளது. அது பல குற்றச்செயல்களை புரிந்த இயக்கம். புலிகளை போற்றுகின்ற புலம்பெயர்ந்தோர் இதுபோன்ற இறக்கமற்ற இயகத்தின் புகழ்பாடலுக்கு இடமில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்’ எனக்கூறினார்.

குறிப்பு : நவீபிள்ளை அவர்களே !

விடுதலைக்கவும் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளை  கொலைகார இயக்கமென கூறியதற்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேரவேண்டும்

 

http://goldtamil.com/?p=7796

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உண்மையாக இப்படிக் கூறினாரா? அல்லது வேறு ஏதோ கூற..... அதை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் திரித்து வெளியிட்டதை, எமது இணையங்களும்.. வெளியிடுகின்றனவா?

நவிப்பிள்ளையால் ஒரு பக்கத்தை மட்டும் சாடி அறிக்கை விட முடியாது....அவ்வளவு சிக்கலானது எமது நிலை...

இதைதான் அர்ஜூன் சொல்லுறவர் :)

புலிகள் பற்றிய இந்த ஐ.நா அதிகாரியின் கூற்று உண்மைதான்.

தெரியாமல் கேக்கிறேன், (சிரிப்பை அடக்கிக்கொண்டு..) இவர் புலிகளை நியாயப்படுத்தி அல்லது தமிழ்த்தேசியத்தை ஆதரித்து கருத்து சொல்வார் என எதிர்பார்த்தீர்களா.. மனிசிக்கு மார்வின் அங்கிளொட மல்லுக்கட்டியே இந்த கொலிடே முடிந்துவிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

போரின்போது இரு பக்கதாலும் இழைகப்பட்ட தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுவது நியாயமானது. அதில் ஒரு பகுதியினரான  விடுதலைபுலிகள் தற்போது இல்லை என்பதால் மக்களின் மீது பயங்கரவாத்த்த்தை கட்டவிழ்த்து விட்ட இலங்கை அரசின் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நவி பிள்ளையின் அறிக்கை திருப்தி அளிக்கிறது. அவர் ஒரு ஐ.நாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்ற வகையில் அவர் பக்கச்சார்பாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.தமிழ்மக்களின் பார்வையில் புலிகளால் செய்யப்பட்ட சில நடவடிக்கைகள் நியாயமாகப்படலாம்.ஆனால் அதே நியாயத்தை ஒரு 3ம் தரப்பிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
இவர்கள் அப்படி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனெனில் விடுதலை புலிகள் இயக்கத்தை ஏற்க்கனவே பயங்கரவாத அமைப்பாகவே பிரகடனம் செய்திருந்தனர் இப்போது புதிதாக ஒன்றையும் கூறவில்லை இவர்களின் பார்வையில் விடுதலை புலிகள் ஏற்க்கனவே பயங்கரவாதிகள்தான் இதில் ஈவிறக்கமற்ற கொலைகார இயக்கம் என்பது அதனுள் அடங்கும். 
 
இப்படி தலைப்பை போடுவதில் இந்த செய்தியாளருக்கு அற்ப சந்தோசம் அதற்காக இப்படி எழுதி உள்ளார். 

நவி பிள்ளையின் அறிக்கை திருப்தி அளிக்கிறது. அவர் ஒரு ஐ.நாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்ற வகையில் அவர் பக்கச்சார்பாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.தமிழ்மக்களின் பார்வையில் புலிகளால் செய்யப்பட்ட சில நடவடிக்கைகள் நியாயமாகப்படலாம்.ஆனால் அதே நியாயத்தை ஒரு 3ம் தரப்பிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

 

 

சரியா சொன்னீங்க பாஸ்.. ஐ.நா வழக்கம்போல இரண்டு பக்கமும் வன்முறையை விட்டு விட்டு  பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காணுமாறும், சிங்களவனும் வழக்கம்போல பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கும் எம்மை வன்முறை மூலம்  தீர்த்துகட்டுவதையும் பார்த்துபார்த்து அலுத்துப்போய் கடைசியில் இப்பொது எமது நிலை பார்த்து எமக்கே செம கொமடியா இருக்குதுப்பா..

 

 

 

இவர்கள் அப்படி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனெனில் விடுதலை புலிகள் இயக்கத்தை ஏற்க்கனவே பயங்கரவாத அமைப்பாகவே பிரகடனம் செய்திருந்தனர் இப்போது புதிதாக ஒன்றையும் கூறவில்லை இவர்களின் பார்வையில் விடுதலை புலிகள் ஏற்க்கனவே பயங்கரவாதிகள்தான் இதில் ஈவிறக்கமற்ற கொலைகார இயக்கம் என்பது அதனுள் அடங்கும். 
 
இப்படி தலைப்பை போடுவதில் இந்த செய்தியாளருக்கு அற்ப சந்தோசம் அதற்காக இப்படி எழுதி உள்ளார். 

 

 
 
இதயேதான் சிங்களவனும் சொல்லுரான். புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை கொல்வதில் பிழை எதுவுமில்லைஎண்டு....இதயேதான் அமெரிக்கவும் சொல்லுது,  ஏன் தமிழர்களின் ஜென்மவிரோதியான 'சர்வதேசமே' சொல்லுது..  சிங்களவன் பார்வையில் நீங்கள் யார்?
 
 
உண்மை கசக்கும்தான் அதுக்கு கூடத்தை குத்தம்சாட்டி பயனில்லைபாருங்கோ.. 

 

 
 
இதயேதான் சிங்களவனும் சொல்லுரான். புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை கொல்வதில் பிழை எதுவுமில்லைஎண்டு....இதயேதான் அமெரிக்கவும் சொல்லுது,  ஏன் தமிழர்களின் ஜென்மவிரோதியான 'சர்வதேசமே' சொல்லுது..  சிங்களவன் பார்வையில் நீங்கள் யார்?
 
 
உண்மை கசக்கும்தான் அதுக்கு கூடத்தை குத்தம்சாட்டி பயனில்லைபாருங்கோ.. 

 

 

தமிழர்களின் ஜென்மவிரோதி சர்வதேம் என்று முடிவுகட்டிவிட்டீர்கள். அப்படியானால் தமிழர்கள் வேறு கிரகத்தில் போய் வாழ்வதா? அல்லது ராஜதந்திர ரீதியில் சர்வதேசத்தை அனுசரித்து எமது கோரிக்கைகளை  பெற முயற்சிப்பதா?

 

தமிழர்களின் ஜென்மவிரோதி சர்வதேம் என்று முடிவுகட்டிவிட்டீர்கள். அப்படியானால் தமிழர்கள் வேறு கிரகத்தில் போய் வாழ்வதா? அல்லது ராஜதந்திர ரீதியில் சர்வதேசத்தை அனுசரித்து எமது கோரிக்கைகளை  பெற முயற்சிப்பதா?

 

 

 

எமக்கெதிராக நடந்த இனப்பிரச்சினையில் நடுநிலை வகித்த கோமாளிக்கும்பல் நாம் எம்மை சர்வதேசமட்டுமில்லை வெளிக்கிரவாசிகள்கூட விரோதிகளாகத்தான் பார்ப்பார்கள்.

 

என்னாது? சர்வதேசத்தை அனுசரிக்கப்போறீங்களோ.. தலைக்குமேல் தண்ணிபோய் பிணம் அழுவி எழும்புகூட பொஸலா போயிட்டு.. இனித்தான் அனுசரிப்பு பற்றி பாடமெடுக்கிறீங்கள்.. :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய தேவை ஒருபுறம்! 

 

இந்தியா என்ற தேசத்தின் விவேகமில்லாத, தான் தோன்றித்தனமான, தீர்க்கதரிசனமில்லாத, சில நடவடிக்கைகளால், ஆப்பிழுத்த குரங்காக நிற்கும், இந்திய அரசின் கெளரவம், காக்கவேண்டிய தேவை மறுபுறம்!

 

இந்தியாவுடன் 'சம்பந்தியாகிப் போன; 'பான்கிமூனின் 'கெளரவம்' காக்கவேண்டிய தேவை இன்னொரு புறம்!

 

தான் ஏற்றிருக்கும் பதவிக்குரிய ;கெளரவம்' காக்க வேண்டிய 'அவசியம்' மற்றொரு புறம்!

 

அவ்வளவுக்கும் இடையில், முன்னாள் போர்க்குற்ற விசாரணைக் கமிசனின் பிரதி நிதியான அனுபவம் ஒரு பக்கம்!

 

பெண்ணாக இருப்பதனால், பெண்களின் பாதிப்புக்களைப் புரிந்து கொள்ளக்கூடிய அனுபவம்!

 

ஐ.நா. வின் அங்கத்துவ அந்தஸ்து உள்ள ஒரு தேசம்' சிறிலங்கா'!

 

இவ்வளவு பேரையும் அனுசரித்துத் தனது அறிக்கையில், கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்துள்ளார் என்றே எண்ணுகின்றேன்!

 

மிகுதியைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

எமக்கெதிராக நடந்த இனப்பிரச்சினையில் நடுநிலை வகித்த கோமாளிக்கும்பல் நாம் எம்மை சர்வதேசமட்டுமில்லை வெளிக்கிரவாசிகள்கூட விரோதிகளாகத்தான் பார்ப்பார்கள்.

 

என்னாது? சர்வதேசத்தை அனுசரிக்கப்போறீங்களோ.. தலைக்குமேல் தண்ணிபோய் பிணம் அழுவி எழும்புகூட பொஸலா போயிட்டு.. இனித்தான் அனுசரிப்பு பற்றி பாடமெடுக்கிறீங்கள்.. :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

 

அப்ப சரி பேசாமல் எமது சொந்த அலுவல்களை பார்த்து கொண்டு ஜாலியா  இருந்திருவோம். பிறகெதுக்கு கூட்டம் கொடி, ஊர்வலம் என்று நேரவிரயம். உங்கள் புதிய கருத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நவிப்பிள்ளை அப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை. சொல்லி இருந்தாலும் அவரின் கூற்று நியாயமானதாக இருக்க வேண்டின்.. அது மிகுந்த தர்க்கத்திற்கு உரிய ஒன்று.

 

விடுதலைப்புலிகள் அமைப்பை விட மோசமான படுகொலைகளை சிறீலங்கா.. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செய்துள்ளன. பல அமைப்புக்கள் செய்துள்ளன. ஈவிரக்கமற்ற நாடு என்றால்.. அமெரிக்காவை முதன்மையாகச் சொல்லலாம்.

 

அதற்காக அமெரிக்க மக்கள் அமெரிக்காவை நேசிக்க வேண்டாம் என்று நவிப்பிள்ளை பாடம் எடுக்க முடியாது.

 

அவரவர் தங்களின் தேசத்தின் பாதுகாப்பை நோக்கில் கொண்டு எடுக்கும் செயற்பாடுகளில் தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எதிரிகளைக் கொல்வது மானுட வரலாற்றில் நீண்டு வரும் ஒரு விடயம். விடுதலைப் புலிகளும் தமது தமிழீழ தேசத்தை மீட்கவும் பாதுகாக்கவுமே போரிட்டார்கள். வன்முறையாளர்களுடன் ஆக்கிரமிப்பாளர்களுடன் வன்முறையில் பேசினார்கள்.

 

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 100% மனித உரிமையை காக்க வேண்டின்.. முதலில் அதனை அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு கொண்டு வரும் தடையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

 

இங்கு சிலர் சந்தடி சாக்கில்.. புலிகள் மீதான வசையாகவே இதை காட்ட முனைகின்றனர். ஆனால்.. நவி அம்மையார்.. யாழ்ப்பாண மன்னன் டக்கிளசையோ பிற ஒட்டுக்குழுக்களையோ சந்திக்கவில்லை. இவர்களின் ஈவிரக்கம் பற்றியும் இவர்களின் சிறீலங்காவுக்கான கூலிக் கொலைகள் பற்றியும் அம்மையார் அறிவார்.

 

விடுதலைப்புலிகளின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் எதிர்கொள்ளத் தயார் என்று ஏலவே அறிவித்துவிட்டுள்ளனர். உலகில் எந்த ஒரு நாடும் அமைப்பும் இப்படியான ஒரு நேர்மையான அறிவிப்பை வெளியிட்டதில்லை.

 

நவிப்பிள்ளை அம்மையார் 100% திறமாகச் செயற்பட்டார் என்று சொல்வதற்கும் இல்லை. பாங்கி மூனோடு ஒப்பிடும் போது.. இந்திய தூதுக்குழுக்களின் விஜயங்களோடு.. ஒப்பிடும் போது.. இவரின் செயற்பாடு முன்னேற்றகரமானது என்பதை மட்டுமே சொல்ல முடியும். அதிலும் இவரின் எத்தினை பரிந்துரைகளை சிறீலங்கா அமுல்படுத்தப் போகிறது என்பது அடுத்த கேள்விக்குறியாகவும் உள்ளது.

 

இந்த நிலையில்.. அம்மையார் புலிகளைப் பற்றி சொன்னதாகச் சொல்லி சிங்களத்தை ஆசுவாசப்படுத்த சிங்கள ஊடங்கள் முனைவதில் ஆச்சரியம் இல்லை. அம்மையார் அப்படிச் சொல்லி இருந்தாலும்.. அது அவரின் சொந்தக் கருத்தே அன்றி.. அவர் ஒரு மக்களின் மீது தனது சொந்தக் கருத்தை திணிக்க முடியாது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகும். அந்த மக்கள் இனத்திற்கு தெரியும்.. எது ஈவு இரக்கம்.. எது இல்லை என்பது. :icon_idea:


நவிபிள்ளை அம்மையார் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய விடயங்களில் முக்கியமானது பிபிசியில் உள்ளது. அதில் எங்கும் அவர் விடுதலைப்புலிகளை மேற்படி செய்தியில் உள்ளபடி சாடியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இராணுவ பிரச்சன்னம்.. அதன் புலனாய்வு நடவடிக்கைகள்.. முன்னாள் போராளிகள்.. (பயங்கரவாதிகள் என்று சொல்லவில்லை) மீதான கண்காணிப்புக்கள்.. எதிர்க்கருத்துக்களை அடக்கும் விடயங்களை சிறீலங்கா செய்வதையே சொல்லி உள்ளார். நம்ம டக்கிளஸின் அடாவடி நடவடிக்கைகளும் இதற்குள் அடங்குவதால்.. இங்கு சிலர் புலிகளையும் விமர்சித்தார் என்ற ஒன்றை காட்டி.. அதற்கு சமனாக்க முனைகின்றனர்..!

 

http://www.bbc.co.uk/news/world-asia-23899082

Edited by nedukkalapoovan

அப்ப சரி பேசாமல் எமது சொந்த அலுவல்களை பார்த்து கொண்டு ஜாலியா  இருந்திருவோம். பிறகெதுக்கு கூட்டம் கொடி, ஊர்வலம் என்று நேரவிரயம். உங்கள் புதிய கருத்துக்கு நன்றி

 

 

இல்லை அப்படிச்சொல்லவரவில்லை..

 

சிங்களவனுடன் காசுக்கும் பதவிக்காகவும் சேர்தியங்கும் தமிழர்களைவிட தன்னிச்சைய்யாக தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கூட்டம், தமிழருடன் சேர்ந்து இயங்க விரும்பாத கூட்டம், எதுக்கெடுத்தாலும் விவாதம் செய்யும் மோட்டுக்கூட்டம். அடிப்படை அறிவற்ற  பழைமைவாய்ந்த கூட்டம்.. என விஸுக்கோத்து கூட்டங்கள் எமது இனத்தில் உள்ளது..

 

இதுக்கு ஒரு முடிவுகட்டுப்படவேண்டும்.. ஐஞ்சு சேத்துக்கு உபயோகமில்லாத கூட்டம் கொடி, ஊர்வலம்களையும் நிருத்தினால்.. எல்லொரும் எல்லொரையும்போல சிந்தித்தால். தானாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணபடும்..

இல்லை அப்படிச்சொல்லவரவில்லை..

 

சிங்களவனுடன் காசுக்கும் பதவிக்காகவும் சேர்தியங்கும் தமிழர்களைவிட தன்னிச்சைய்யாக தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கூட்டம், தமிழருடன் சேர்ந்து இயங்க விரும்பாத கூட்டம், எதுக்கெடுத்தாலும் விவாதம் செய்யும் மோட்டுக்கூட்டம். அடிப்படை அறிவற்ற  பழைமைவாய்ந்த கூட்டம்.. என விஸுக்கோத்து கூட்டங்கள் எமது இனத்தில் உள்ளது..

 

இதுக்கு ஒரு முடிவுகட்டுப்படவேண்டும்.. ஐஞ்சு சேத்துக்கு உபயோகமில்லாத கூட்டம் கொடி, ஊர்வலம்களையும் நிருத்தினால்.. எல்லொரும் எல்லொரையும்போல சிந்தித்தால். தானாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணபடும்..

 

இவ்வுலகில் எங்குமே வித்தியாசாமான கருத்துடன் மக்கள் இருப்பார்கள். சர்வதேசமும் அப்படித்தான் சர்வதேசத்தை அனுசரித்து தான் இவ்வுலகில் வாழவேண்டும். அதில் முரண்படுவீர்களானால் தங்களுடன் விவாதம் செய்வதில் பிரஜோசனமில்லை. ஏன் வீட்டிலேயே மனைவி கணவனுடனும், கணவன் மனைவியுனும் அனுசரித்து போகவில்லை என்றால் அன்பான குடும்பமே காலி.

இல்லை அப்படிச்சொல்லவரவில்லை..

 

சிங்களவனுடன் காசுக்கும் பதவிக்காகவும் சேர்தியங்கும் தமிழர்களைவிட தன்னிச்சைய்யாக தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கூட்டம், தமிழருடன் சேர்ந்து இயங்க விரும்பாத கூட்டம், எதுக்கெடுத்தாலும் விவாதம் செய்யும் மோட்டுக்கூட்டம். அடிப்படை அறிவற்ற  பழைமைவாய்ந்த கூட்டம்.. என விஸுக்கோத்து கூட்டங்கள் எமது இனத்தில் உள்ளது..

 

இதுக்கு ஒரு முடிவுகட்டுப்படவேண்டும்.. ஐஞ்சு சேத்துக்கு உபயோகமில்லாத கூட்டம் கொடி, ஊர்வலம்களையும் நிருத்தினால்.. எல்லொரும் எல்லொரையும்போல சிந்தித்தால். தானாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணபடும்..

செயலில் மட்டும் அல்ல. பேச்சில் கூட அனுபவம் என்ற சொல்லை கேள்விப்படாத பன்னாடை தனமான கதையாக இருக்கிறது.  அண்மைக்கால ஜேர்மனியின் கிட்லர் முசோலினி, தொடக்கம் மார்கஸ், நோரியாகோ, குசெயின், கடாபி, அசாத்தின் கதைகளை கேள்விப்பட்டு இல்லை.

 

அரசு 4 வருடங்களாக வருந்தி அழைத்து ஏற்பாடு செய்த விடுமுறையை கழிக்க நவிபிள்ளை இலங்கை போகவே மகிந்தாவின் கட்டிய கொடுக்கு வரையும் உருவுண்டு பெலாரஸ் ஓடிப்போய தனிப்பட்ட சொத்துக்களை நாடு மாற்ற வரி சட்டங்கள் ஏற்படுத்தி (கம்பனி முதலீட்டு வரிச்சட்டங்கள் அல்ல-பெலாரசுடன்,  அதுக்கு நவி பிள்ளை வந்த போது ஏற்பட்ட தேவை என்ன?),  மூன்று முறை காலில் விழுந்து மந்தி(ரி) விட்ட பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டும் சரிவராமல், அறிக்கை என்று ஒன்று வெளியே வரமுதலே "உங்கள் அறிக்கை பக்க சார்பானது என்று மக்கள் சொல்கிறார்கள்" அவரிடமே பல்லிலிக்க வேண்டியிருக்கிறது மகிந்தாவுக்கு என்றால் உண்மையாக ஒரு அதிகாரி விசாரணைக்கு போனால் மகிந்தா மின்சாரக் கதிரையில் என்பதை உங்கள் மனம் சொல்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பற்றிய இந்த ஐ.நா அதிகாரியின் கூற்று உண்மைதான்.

தெரியாமல் கேக்கிறேன், (சிரிப்பை அடக்கிக்கொண்டு..) இவர் புலிகளை நியாயப்படுத்தி அல்லது தமிழ்த்தேசியத்தை ஆதரித்து கருத்து சொல்வார் என எதிர்பார்த்தீர்களா.. மனிசிக்கு மார்வின் அங்கிளொட மல்லுக்கட்டியே இந்த கொலிடே முடிந்துவிடும்..

 

நடுநிலையாக எமக்கே பேசத்தெரியவில்லை. மற்றவர்களிடம் எப்படி நீங்கள் நடுநிலையை எதிர்பார்க்கிறீர்கள்?
வி.புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்த நாடுகளில் எத்தனை நாடுகள் அப்பாவி மக்களை கொல்ல நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவவில்லை என கூறமுடியுமா?
  • கருத்துக்கள உறவுகள்

மாதமொரு தடவை என்னைச் சந்தித்துரையாடும் தமிழ் ஊடக தலைமை ஆசிரியர்கள்

என்னிடம் தெரிவிக்காது பிள்ளையிடம் முறையீடு

ஜனாதிபதி கடும் அதிருப்தி; விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஊடக அமைச்சருக்கு உத்தரவு

திருமலையில் ஊடகவியலாளர் பொலிஸாரால் துன்புறுத்தலாம்

 

(எஸ். சுரேஷ்)

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் அவர்களிடம் தெரிவித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல்துறை அமைச்சர் கெஹலியவிற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

குறிப்பாக திருகோணமலையில் அண்மையில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் துன்புறுத்தப் பட்டதாக பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நவநீதம் பிள்ளையுடன் வந்திருந்த உயரதிகாரிகளிடம் தெரிவித்தமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அத்தகைய ஒரு சம்ப வம் திருமலையில் நடைபெற்றதா எனவும், அதன் பின்னணிக்கான காரணம் என்ன என்பது தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப் பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

அத்துடன் உள்நாட்டில் இடம்பெறும் இதுபோன்ற சிறுசிறு சம்பவங்களை ஊடக அமைச்சரிடமோ அல்லது தனது கவனத்திற்கோ கொண்டு வராதிருந்த இந்தச் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருசிலர் அதனைப் பெரிதாக்கி நவநீதம் பிள்ளை குழுவிடம் முறையிட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

 

மாதமொருமுறை தான் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்திக்கும் போது கூட தெரிவிக்கப்படாத இதுபோன்ற சிறு சம்பவ நிகழ்வுகள் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு முறையிடப்பட்டமை வருந்தத் தக்கதொரு விடயம் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

 

தன்னை இவர்கள் சந்திக்கும் வேளைகளில் பல விடயங்கள் தனிப்பட்ட முறையில்கூடக் கலந்துரையாடப்படுவதுண்டு. அவ்வேளை இவர்கள் இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தால் அவ்விடத்திலேயே அதற்குத் தீர்வு காணப்படும் சூழல் ஏற்படும்.

ஆனால் இதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழுவிடம் முறையிடும் அளவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒருசிலர் முயற்சித்தமை குறித்து ஜனாதிபதி தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.

 

எது எவ்வாறாயினும் குறித்த பத்திரிகை ஆசிரியரினால் முறையிடப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

எமது நாட்டின் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உள் நாட்டில் இடம்பெறும் இதுபோன்ற சிறுசிறு சம்பவங்களை ஊடக அமைச் சரிடமோ அல்லது தனது கவனத் திற்கோ கொண்டு வராதிருந்த இந்தச் சிரேஷ்ட தமிழ் ஊடகவிய லாளர்களில் ஒருசிலர் அதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழு விடம் முறையிட் டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

 

மாதமொருமுறை தான் ஊடக நிறுவனங் களின் பிரதானிகள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்திக்கும் போது கூட தெரிவிக்கப் படாத இதுபோன்ற சிறு சம்பவ நிகழ்வுகள் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு முறையிடப்பட்டமை வருந்தத் தக்கதொரு விடயம் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

 

தன்னை இவர்கள் சந்திக்கும் வேளைகளில் பல விடயங்கள் தனிப்பட்ட முறையில்கூடக் கலந் துரையாடப்படுவதுண்டு.

அவ்வேளை இவர்கள் இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தால் அவ்விடத்தி லேயே அதற்குத் தீர்வு காணப்படும் சூழல் ஏற்படும். ஆனால் இதனைப் பெரிதாக்கி நவநீதம்பிள்ளை குழு விடம் முறையிடும் அளவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒருசிலர் முயற்சித்தமை குறித்து ஜனாதிபதி தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.

எது எவ்வாறாயினும் குறித்த பத்திரிகை ஆசிரியரினால் முறை யிடப்பட்ட சம் பவம் தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட் டுள்ளார்.

 

எமது நாட்டின் மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்திச் சில சக்திகள் முயன்று வரும் இவ் வேளையில் பொறுப்புள்ள ஊடக வியலாளர்கள் ஒருசிலர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது ஆரோக்கியமானதல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

குறிப்பிட்ட பிராந்திய நிருபர் அவரது தனிப்பட்ட பிரச்சினைக் காகவே பொலிஸாரினால் விசா ரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் அவர் தவறு செய்திருந்தாலும் தமிழ் ஊடகத் துறையைச் சேர்ந்தவர் என்பதனால் விசாரிக்கப்படக் கூடாது என்பதாகவே இப்பத்திரிகை ஆசிரியர்களது முறைப்¡படு கூறுகிறது எனத் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் கள், நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கமான சகோதரத்துவச் சூழல் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட் டத்தில் இதுபோன்ற பொறுப்பான பதவிகளிலுள்ளவர்களது இத்தகைய சிறுமையான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/09/01/?fn=n1309011

இந்த விவகாரம் பற்றி நேற்றே மனோ கனேசன் தெளிவான அறிக்கை வெளிவிட்டுவிட்டார். பனங்காய் தெரிவித்திருக்கும் கருத்து மனோ கனேசனின் பேச்சு இருப்பதே தெரியாமல் எழுதப்பட்டிருப்பத்தால் பனங்காயின் கருத்து பதில் அளிக்கத் தக்க தரத்தைக் காட்டவில்லை. அது அவரின் சமகால செய்திகளைப்பற்றிய அறிவு, அனுபவமின்மையைத்தான் காட்டுகிறது. அவர் மனோ கனேசனின் அறிக்கையை சுட்டிக்காட்டி எதையாவது எழுதினால் அதற்கு பதில்கள் இருக்கா என்று தேடிப்பார்க்கலாம்  

Edited by மல்லையூரான்

இவர் உண்மையாக இப்படிக் கூறினாரா? அல்லது வேறு ஏதோ கூற..... அதை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் திரித்து வெளியிட்டதை, எமது இணையங்களும்.. வெளியிடுகின்றனவா?

 

இலங்கை அரச ஊடகங்களையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் தமிழர்களையும் வேறு யாரும் சொல்ல காணம்...  Google கடவுளையும் கேட்டேன்  அவரும் தரவில்லை... 

இலங்கை அரச ஊடகங்களையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் தமிழர்களையும் வேறு யாரும் சொல்ல காணம்...  Google கடவுளையும் கேட்டேன்  அவரும் தரவில்லை... 

உண்மை கூகிள் ஆண்டவர் மட்டுமல்ல உண்மையான ஆண்டவர் கூட தரமாட்டார் .............சிங்களவனை விட நாய்களாக குலைக்கும் எம் தமிழ் ஊடகங்களாலும் ,எங்கே பழிவாங்கலாம் என்று சீறும் பாம்புகளாக துடிக்கும் எம் நாய்த்தமிழர்களாலும் இந்த ஆண்டவர்களே மனம் நொந்து போய் உள்ள இந்த வேளையில்.............. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=13673&LangID=E

 

//Secondly, the LTTE was a murderous organization that committed numerous crimes and destroyed many lives. In fact, my only previous visit to Sri Lanka was to attend a commemoration of the celebrated legislator, peacemaker and scholar, NeelanTiruchelvam, who was killed by an LTTE suicide bomb in July 1999. Those in the diaspora who continue to revere the memory ofthe LTTE must recognize that there should be no place for the glorification of such a ruthless organization.//

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் படுகொலைகள் எல்லாம் மிக மோசமான ஈவிரக்கமற்ற செயல் என்றால் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மேற்கொண்ட படுகொலைகள்.. தாக்குதல்கள் எந்த வகைக்குள் அடங்கும்..??!

 

நவிப்பிள்ளையின்.. இந்தக் கூற்றுக்கள் ஏற்கக் கூடியவை அல்ல. என்ன தான் மனித உரிமைகள் பற்றிப் பேசினாலும் ஐநா வே எமது மக்கள் படுகொலைக்கு காரணமாகவும் இருந்தது. அந்தப் பக்கத்தைப் பற்றி நவிப்பிள்ளை பேசவும் மாட்டா..!! ஏன்னா அவா ஐநாவின் பிரதிநிதி.

 

ஆக.. நவிப்பிள்ளை புலிகள் பற்றி சொன்ன விமர்சனங்கள் இன்றைய பொழுதில் அவ்வளவு முக்கியமானவை அல்ல. மேலும்.. ஐநாவின் கடந்த கால புலிகள் பற்றிய விமர்சனங்களில் இருந்து இது மாறுபட்டதும் அல்ல. புலிகள் ஐநாவுக்கு கட்டுப்பட்ட அமைப்பும் அல்ல. ஆனால் ஐநாவால் அதில் அங்கம் வகிக்கும்.. அதன் நடைமுறைகளை ஏற்றுக் கொண்ட ஒரு அரசு கொடுமையான மனித உரிமை மீறல்களையும்.. இனப்படுகொலையையும் செய்வதை தடுத்து நிறுத்த முடியாமல் உள்ளமை.. ஐநா தோற்றுப்போன ஒரு அமைப்பு என்பதாகவே காட்டுகிறது.

 

இதற்கு முதலில் நவிப்பிள்ளை போன்ற தலைவர்கள் பதில் சொல்லனும் அல்லது இந்த நிலையை மாற்ற காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கனும். தமிழ் மக்கள் விரும்பிற வடிவில் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க ஐநா அவர்களுக்கு உதவனும்..! அதைவிட்டிட்டு.. ஐநாவோடு சம்பந்தப்படாத புலிகளை பற்றி விமர்ச்சித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களின் தமிழ் மகக்ளின் தாயக கோட்பாட்டை கட்டிக்காக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். அந்த வகையில்.. புலிகளைப் போற்றுவதும் வணங்குவதும் தமிழ் மக்களின் விருப்பம். அதனை நவிப்பிள்ளையோ ஐநாவோ.. தீர்மானிக்க முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.