Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரது படத்துடன் சுவிஸ் ஜெனிவாவில் ஒருவர் தீக்குழிப்பு?(படங்கள் இணைப்பு)

Featured Replies

சுவிஸ் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முறிந்த நாற்காலி அருகே ஒருவர் தீக்குளித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்குழித்தவர் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் கால்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. தீக்குளித்தவர் எரிகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

http://goldtamil.com/?p=8081

 

burn_geneva_1.jpg

ஐயோ 

அவசரமான தற்கொடை. சிக்கல் தெளியும் நேரம். இனி மேல் இவை தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 எதற்க்காக தீக்குளித்தார் ?  :o

யாருக்காவது ஏதாவது தெரியுமா ?  :rolleyes:

Un homme s’immole devant le siège de l’ONU

Par Laurence Bézaguet. Mis à jour à 18h30 

L’individu se trouvait allongé sur le dos et son corps était en grande partie brûlé, quand la police est intervenue

topelement.jpg

Décédée en fin d’après-midi au CHUV, la victime, n’a pas encore pu être identifiée. 

Image: Keystone

 

 

 
 
 

Vers 1 heure ce matin, un homme s’est immolé devant le siège de l’ONU. L’individu se trouvait allongé sur le dos et son corps était en grande partie brûlé, quand la police est intervenue.

À proximité du malheureux, se trouvait le portrait d’un militaire avec un sigle représentant l’organisation des tigres tamouls et des documents concernant divers cas d’immolation ayant eu lieu au Tibet.

A ses côtés se trouvait un jerrican fondu, qui avait contenu de l’essence. Grièvement atteint, l’homme a été conduit aux urgences de l’Hôpital cantonal de Genève puis héliporté au centre romand des grands brûlés au CHUV de Lausanne.

Décédée en fin d’après-midi au CHUV, la victime, n’a pas encore pu être identifiée.

http://www.tdg.ch/geneve/faits-divers/homme-s-immole-siege-lonu/story/15268836

 

ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் இன்று அதிகாலை ஒரு ஈழத் தமிழர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அவர்மேல் பற்றிய தீயை அணைத்து, அருகில் உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார்கள்.அத்துடன் அவர் அருகே பல  துண்டுப்  பிரசுரங்கள்காணப்பட்டதாகவும், அவை தமிழீழ விடுதலைப் புலிகள்  தொடர்பான படமும், மற்றும் திபெத் தொடர்பான புகைப்படங்கள் என்பதும்  பொலிசாரால் உறுதிசெய்யப்பட்டதாக செய்திகள்தெரிவித்தன,மேலும் பலத்த தீகாயங்களுடன் இருந்த அன்நபர் மேலதிக சிகிச்சைகாக லவுசாயினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4.30 மணியளவில் அன்நபர் உயிர்நீத்தார்.ன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4.30 மணியளவில் அன்நபர் உயிர்நீத்தார்.

www.tribune de geneve.ch

 

http://irruppu.com/?p=35264 

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் இன்று (05.09.2013) அதிகாலை தீக்குளித்த நபர் இன்று மாலை 17.00 மணியளவில் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. இவர் எரிந்த இடத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் நிழற்படம் இருந்ததாகவும். சில ஆவணங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர் சுவிற்சர்லாந்தின் சியோன் பகுதியை வதிவிடமாக் கொண்டவர் எனவும் தாயகத்தின் புங்குடுதீவை சேர்ந்தவர் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையார் என தெரியவந்துள்ளது.
40 வயது மதிக்கதக்க செந்தில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
. இன்று மாலை இவர் எரிந்த இடத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

1174762_702294076452188_1548160572_n.jpg

1017012_702294149785514_208972355_n.jpg

Thankx Facebook


Kumanan Murugesan
-PAXP-deijE.gif Mann in Genf setzt sich selbst in Brand In Genf hat sich in der Nacht auf Donnerstag ein Mann selbst in Brand gesetzt. Noch ist unklar, wer der Mann ist.

Ein Mann hat sich in der Nacht auf Donnerstag in Genf vor dem Hauptgebäude der UNO selber in Brand gesetzt. Er erlag am Donnerstagnachmittag seinen schweren Verletzungen. Das Opfer konnte bislang nicht identifiziert werden.

In seiner Nähe befanden sich ein Gegenstand mit einem Bezug zu der sri-lankischen Rebellenorganisation Tamil Tigers (LTTE) und Dokumente, die über Selbstverbrennungen in Tibet berichteten.

Die Polizei fand den Mann um 1.10 Uhr vor dem Haupteingang der Vereinten Nationen auf dem Place des Nations, wie die Genfer Polizei am Donnerstag mitteilte. Sie bittet um Hinweise auf die Identität des Mannes.

  • கருத்துக்கள உறவுகள்

என்னூரைச் சேர்ந்தவனே!

 

செந்நீர்க் களமாடி,

செருக்களத்தில் வீழ்ந்திருந்தால்,

கண்ணீரில் கரைந்திருப்பேன்!

 

அந்நியனின் தேசமொன்றில்,

அக்கினிக்குப் பசி தீர்க்க,,

உன்னுடலை ஈந்தாய்?

 

உன்னை நம்பி வந்தவரை,

நட்ட நடு வீதியில்,

நாதியற்று விட்டு விட்ட,

நெஞ்சின் ஈரம் காய்ந்தவன்,

நீ என்பேன்!

 

உனக்கு அஞ்சலிகள் தெரிவித்தால்,

உனது செயலை, 

நான் ஏற்றுக்கொண்டதாகாதா?

 

உனக்கல்ல,

உனது குடுமபத்துக்கு,

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

 

சுவிஸ் ஜேனிவாவில் தீக்குளித்த ரத்னசிங்கம் செந்தில்குமரன் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)

Written by இனியவன் | September 6, 2013 | 0

இரண்டாம் இணைப்பு ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள முன்றலில் வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் தீக்குளித்த ரத்னசிங்கம் செந்தில்குமரன் இன்று மாலை லவுசான் சூவ் வைத்தியசாலையில் மரணமானார்.

அதிகாலை ஒருமணியளவில் ஜெனிவா ஐ.நா. பகுதியில் ரோந்து சுற்றி வந்த காவல்துறையினர் ஒருவர் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அவரை ஜெனிவா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். அதன் பின்னர் கடுமையான எரிகாயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் லவுசான் சூவ் வைத்தியசாலைக்கு உலங்குவானூர்தியில் எடுத்து சென்றனர். அங்கு மாலை 4.30மணிக்கு அவர் இறந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீக்குழித்த ரத்னசிங்கம் செந்தில்குமரன் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தீக்குளித்த இடத்தில் சிறிய பிளாஸ்ரிக் கொள்கலன் ஒன்று எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதிலேயே அவர் எரிபொருளை எடுத்து வந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரத்னசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ்ஸை சேர்ந்த தமிழர் என்றும் தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் அறியமுடிகிறது. இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

1241635_10201024343745360_1112598738_n-e

burn_geneva_1-e1378383857535.jpg

burn_geneva_2-e1378383904711.jpg

http://tamilnaatham.dk/?p=15465

 

  • கருத்துக்கள உறவுகள்

வேதனைக்கு மேல் வேதனையை தனக்கே தருவித்திருக்கிறார்.. ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஐயே ஏன் இப்படி செய்தார், ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

-----

உனக்கு அஞ்சலிகள் தெரிவித்தால்,

உனது செயலை, 

நான் ஏற்றுக்கொண்டதாகாதா?

 

உனக்கல்ல,

உனது குடும்பத்துக்கு,

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

செய்தியைக் கேட்க... வேதனையாக இருந்தாலும், அஞ்சலி செலுத்த மனது மறுக்கின்றது.

மூன்று பிள்ளைகளின் தந்தை இப்படிச் செய்யலாமா? பாவம்... அவர் மனைவி. இனி பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பார்.

ஏன்... ஐயா... இந்த முடிவை எடுத்தாய்?

ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர்- புங்குடுதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை

Published on September 6, 2013-9:24 am   ·   No Comments

senthil-150x150.jpgசுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர் என தெரியவந்துள்ளது.  சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 34வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற ஜெனிவா ஐ.நா. முன்றலில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று இரவு அவருக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.  இவர் தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்தவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஒரு தமிழீழ செயற்பாட்டாளர் என்றும் தெரியவருகிறது.

நேற்று அதிகாலை ஐ.நா. முன்றலில் தீக்குளித்த இவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு லவுசான் மாநிலத்தில் உள்ள சூவ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 4.30மணியளவில் மரணமானார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்றுகாலை லவுசான் மாநகர சபை உறுப்பினரும் சுவிஸ் தமிழர் பேரவை செயலாளருமான த.நமசிவாயத்திடம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவித்ததுடன் இவர் தீக்குளித்த இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் காணப்பட்டதாகவும் எனவே இவர் தமிழராக இருக்கலாம் என தாம் கருதுவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தீக்குளித்தவர் ஈழத்தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்ற சுவிஸ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஐ.நா. முன்றலுக்கு சென்று மலர் கொத்து வைத்து மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முருகதாஸ் என்ற தமிழ் இளைஞர் ஜெனிவா ஐ.நா.முன்றலில் தீக்குளித்து இறந்தார் என்றும், சிறிலங்காவில் தமிழர்கள் படும் துன்பங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காக அவர் இதனை செய்ததாகவும் ஜெனிவா பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

 http://www.thinakkathir.com/?p=52156#sthash.BL4NjZVQ.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழச் செயற்பாட்டாளர்கள் இப்படி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது. அவரைப் போன்றவர்கள் சேவை எங்களுக்குத் தேவை.தயவு செய்து யாரும் இது போன்ற முடிவுகளை எடுப்பதை விடுத்து மாற்று வழிகளில் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்..அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!!!

ஜெனிவாவில் சோகம். தமிழீழ விடுதலை போராட்ட நெருப்புக்கு தன் உடலைக் கொடுத்த செந்தில் குமரன்!

நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள தமிழர் கிருஷ்ணா வெளியிட்ட செய்தியில் கீழ் கண்டவாறு கூறப்பட்டிருந்தது. 

சற்று முன் சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐநா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார், இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம். அருகே 24X7 தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த, தாங்கள் கண்ட, அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பனிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு பாட்டிலில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!

கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான். பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்! 

இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது. இவ்வாறு குழம்பிய நிலையில், அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது, ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி, மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்! 

காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34, அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்! 

நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால், காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் , குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே, அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. ஆம், தமிழீழ விடுதலை போராட்ட தீக்கு தன்னுடலையும் தின்ன கொடுத்து விட்டான், செந்தில் குமரன்!!! —

நன்றி : கிருஷ்ணா

◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
எங்களுடன் வலைத்தளத்தில் இணைய,
இணையத்தள முகவரி:- www.thaayakam.com
முகநூல் பக்கம்:- Thaayakam.Com
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே  புரியவில்லை

இதுவரை

ஏனிறந்தார்  என்றும்  தெரியவில்லை

எந்த  இனத்தவர்

என்பதிலும் இழுபாடு

காரணம்  சொல்லாத  சாவு

கேள்விகளை  எழுப்புமே???

தமிழருக்காக

தன்னையே  கொழுத்துவதற்கு

துணிந்திருந்தால்

இவரின்  இழப்பு

பெரும் இழப்பே

அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல

தமிழினத்துக்கும்........

 

எதற்காக  இறந்திருந்தாலும்

அஞ்சலிக்கின்றோம்

ஆத்ம சாந்திக்காய் வேண்டி நிற்கின்றோம்

அவரது குடும்பம் இதிலிருந்து மீள

ஆண்டவன் துணையிருக்கட்டும்..........

இப்படியான போராட்டங்கள் மூலம் எமக்கான விடிவை பெற்றுக்கொள்ள முடியாது இது ஒரு குறுட்டு உலகம்   :(

 

ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில்

ஈழத் தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்!

வைகோ இரங்கல்

அனைத்துலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவைத் தட்டுவதற்காக, ஈழத் தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார். தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.

இதே ஜெனீவாவில்தான் 2009- தொடக்கத்தில் முருகதாÞ என்னும் ஈழத் தமிழ் இளைஞரும் ஈழத் தமிழினப் படுகொலையைத் தடுக்க ஐ.நா. மன்றத்தையும் மனித உரிமை ஆணையத்தையும் ஈழத் தமிழருக்கு நீதி வழங்குங்கள் என்று தனது நெஞ்சில் வடிந்த இரத்தக் கண்ணீரை உருக்கமான வேண்டுகோளாக ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து மாண்டார். இன்று வரையிலும் ஈழத் தமிழருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. உலகத்தின் மனச்சாட்சியும் விழிக்கவில்லை. 

தன் உயிரை அழித்துக் கொள்வதன் மூலமாகவாவது உலகத்தின் கவனம் நீதியின் பக்கம் திரும்பாதா? கொடியவன் இராஜபக்சேவின் கொட்டம் ஒடுங்காதா? என்று தன்னைத் தானே செந்தில்குமரன் அழித்துக் கொண்டான். உலகிலேயே நாதியற்றுப் போன இனம் தமிழினம் தானா? இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தான் பலியாவதோ? என்று தமிழகத்திலும், தரணியெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க வேண்டுகிறேன்.

தமிழீழத்தில் பிறந்து எங்கோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஜெனீவாவிலே தன் உயிரைப் பலியிட்டுக் கொண்ட செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். என் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன்.

‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

06.09.2013 மறுமலர்ச்சி தி.மு.க.,

971071_570153306377953_1824126554_n.jpg
Vaiko fb

 

மற்றோர் இனம் வெந்து செத்து  மடிகையில்
ஏறெடுத்தும் பார்க்காத உலகில்
இது போன்ற த‌ற்கொடைகள் செவிட்டு உலகின் காதில் சங்கு ஊதியது போன்றது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
ஆயினும் முத்துக்குமர், முருகதாசன்  என்று தொடர்ந்த தற்கொடைகள்
கடைசியாக செந்தில்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையின் தியாகத்துடன் எம்மை உலுக்கி நிற்கிறது.
 
இவை உலகின் கவனத்தை ஈர்ப்பதற்க்காகவோ
எதிரியின் முன்னெடுப்புக்களை முறியைப்பதற்க்காகவோ
இடம்பெற்ற முடிவுகளாக தெரியவில்லை.
மாறாக சோர்ந்து முடங்கியிருக்கும் புலம்பெயர் தமிழர்களை விழித்தெழுந்து
அறவழியில் போராட அழைப்பதற்க்காக விடுத்த அறைகூவலாக தெரிகிறது. 
செந்தில்குமாரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினரை
ஆற்ற வார்த்தைகள் இல்லை.
 
அன்னாருக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்.
இந்த உறவின் உணர்வுகளை ,விற்க விரும்பவில்லை .இறைவனுள் இவரது ஆன்மா இளைப்பாறக்கடவதாக .
 
வீர வணக்கம் ................
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இழப்புக்களை  ஏற்க மனம் மறுக்கின்றது.
வேண்டாம் இப்படியான இழப்புக்கள்   

அன்னாருக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்...

முட்டாள்த்தனமான ஒரு சாவு

செத்தவன் யார் என்றே இரண்டு நாட்களாக தெரியவில்லை

ஏன் செத்தான் என்று இன்று வரை தெரியவில்லை

என்ன இழவுக்கடா இது எல்லாம்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TCCயினர் அவசரமாக சாவiடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தியது சந்தேகமானது. வாங்கிய காசை TCC திருப்பி கொடுக்காததால் பலர் மனமுடைந்து சுவிசில் வாழுகின்றனர்.

 

 எதுவாக இருந்தாலும் தாயக விடுதலைப்பற்றுடைய ஒருவரை இழந்துள்ளோம்!!

 

அஞ்சலிகள்!!

Edited by onmai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.