Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பழகிய யாழ் உறவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்

 

(29)

 

தூயவன் அண்ணா...ஈழபோராட்டத்துக்கு வலு சேர்க்கும் ஒரு உறவு...எந்த திரியிலும் தன்ட மனசில் பட்ட கருத்தை அப்படியே எழுதுவார்..ஆளுக்கு கொஞ்ச  முன் கோவமும் இருக்கு...2008ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஏதோ பிரச்சனையில்  யாழை விட்டுப் போறேன் என்று போனவர்..பிறக்கு தயா அண்ணாவும் மற்றைய உறவுகளும் சமாதனம் படுத்தி ஆளை யாழுக்கு திரும்ப வரவழைத்தாச்சு...ஈழத்துக் காணொளி ஈழத்துப் பாடல்கள் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர்..ஒரு சில திரியில் ஈழத்துப் பாட்டு வரிகளும் எழுதி இருக்கிறார்

 

 

 

(30)

 

வாதவூரான்

 

 

வாதவூரான் அண்ணா...இவர் ரொம்ப வேகமானவர் என்று தான் சொல்ல வேனும்..கிரிக்கெட் மீது கொள்ளை பிரியம் கொண்டவர்...கிரிக்கெட் ஸ்கோர யாழிழ் வேகமாய் பதியிறது என்றால் நம்ம வாதவூரான் அண்ணாவை தான் இருக்கும்...இவருடன் நிறைய தடவை விளையாட்டு திரியில் கருத்தாடி இருக்கிறேன்...நல்ல ஒரு உறவு..

 

(31)

சுபேஸ்

 

 

சுபேஸ் அண்ணா...இந்த அண்ணா எழுத ஆரம்பிச்சா ஒருவராலும் இவர கட்டுப் படுத்த ஏலாது எழுதி கொண்டே இருப்பார்..இவர் போன வருடம் ஒரு கதை எழுதினார் அதை யாழ் உறவுகள் மறந்து இருக்க மாட்டினம்....2012ம் ஆண்டு உலகம் அழியப் போக்குது...அதை வைத்து ஒரு கதை எழுதி இருந்தார் அந்தமாதிரி இருந்திச்சு வாழ்த்துக்கள் அண்ணா.....ஒருதர் கூடவும் வம்புக்குப் போறதும் இல்லை தானும் தன்ர பாடும்..இணைந்து இருப்போம் யாழிழ் அண்ணா

 

 

(32)

 

வினித்

 

வினித் அண்ணா..இந்த அண்ணா ஒரு ஜொல்லுப் பாட்டி...இவரும் தீவிர கிரிக்கெட் ரசிகன்..2011 உலக கின்ன கிரிக்கெட் போட்டியில் வினித் அண்ணா கூட கருத்தாடி இருக்கிறேன்...யாழ் உறவுகள் சொல்லுவினம் இவர் தான் வடிவேலு என்று..சரி என்று இவர் கூட வடிவேலுவை பற்றி ஆரம்ப காலத்தில் எழுதினேன்..அவர் எனக்கு தந்த பதில் இது தான் குட்டிப்பையன் நீங்கள் நல்ல பையன் அதோடை நிப்பாட்டி போட்டார்...எதுக்கும் கோவப் பட மாட்டார் நல்ல நகைச்சுவையாய் எழுதுவார்..யாழில் இவர இப்ப பெரிதாக‌ காணக் கிடைப்பது இல்லை...

 

 

(33)

ஜீவா

 

ஜீவா மச்சி...யாழில் கதை கவிதை என்று எழுதும் ஒரு உறவு..ஜீவா யாழில் எழுதினது ஏரளாம்...ஒரு சில திரியில் எனக்கும் ஜீவா மச்சிக்கும் முரன்பாடு வரும் அதை அந்த அந்த இடத்திலையே விட்டு விடுவோம்....

 

(34)

கறுப்பி

 

கறுப்பி அண்ணா..எல்லாரும் இவங்கட பெயர பாத்து இவா பொண்ணு என்று நினைப்பாங்கள்...ஏதோ ஒரு திரியில் தான் ஆண் என்று சொல்லி இருந்தாங்கள்...இந்த அண்ணாவிடம் எனக்கு பிடிச்சது என்ன என்றால் பொருமையும்   எதுக்கும் கோவப் பட மாட்டார்...ஆரம்ப கலத்தில் செய்தியை அதிகம் இணைப்பார்..இப்ப கறுப்பி அண்ணாவை யாழில் காணக் கிடைப்பது இல்லை...யாழிழ் இருக்கும் நல்ல உறவுகளில் கறுப்பி அண்ணாவும் ஒரு ஆள்.......

 

 

(35)

குட்டி

 

குட்டி அண்ணா...இந்த அண்ணாவை எல்லருக்கும் பிடிக்கும்..அமைதியான ஒரு உறவு...ஈழம் சம்ந்தப் பட்ட குறும்படம் என்றால் குட்டி அண்ணாவுக்கு ரொம்ப பிடிக்கும்...இந்த அண்ணாவை இப்ப யாழில் பெரிதாக காண்பது இல்லை... எங்கு இருந்தாலும் நல்லா இருக்கட்டும்

 

(36)

கிருபன்

 

கிருபன் அண்ணா..இவர் ஆரம்ப காலத்தில் ஈழம் சம்மந்தப் பட்ட பல ஆய்வுகள் எழுதி இருந்தார்..கிட்ட தட்ட ஜந்து வருடத்துக்கு முதல் தேசிய தலைவர் வழி நடத்தலில் இடம் பெற்ற ஒரு தாக்குதலை பற்றி எழுதி இருந்தார்..அதை வாசித்து வியந்து போனேன்... யாழில் நான் இணைந்த போது கிருபன் அண்ணாவை யாழிழ் அதிகம் காண்பேன்..இப்ப பெரிதாய் காண்பது இல்லை...

 

 

தொடரும் 
 

 

 

 

 

 

 

 

 

Edited by பையன்26

  • Replies 108
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(37)

துளசி

 

துளசி அக்கா..இப்பத்த யாழ் உறவுகளுக்கு இவங்கள தெரியாமல் இருக்காது....மாணவர் போராட்ட செய்திகளை யாழிழ் உடனுக்குடன் இணைப்பா..மற்றவர்களுடன் அன்பாய் பழகுவதில் துளசி அக்காவை கேட்டு தான்...பெரிசா கோவப் பட மாட்டா...முகப் புத்தகத்தில் அதிகம் எழுதுவா...கொஞ்ச நாளாக யாழ் வருவது இல்லை குடும்பத்தில் ஏதோ சின்ன பிரச்சனை என்று....கூடிய விரைவில் யாழ் வருவா என்று எதிர் பாப்போம்....

 

 

 

 

(38)

புரட்சிகர தமிழ்தேசியன்

 

 

புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணா தமிழ் நாட்டில் வசிக்கும் உறவு...இவர்ட்ட பெயருக்கு ஏப்ப போல தான் இவர் இருபார்..பிடிக்காத ஆட்களை போட்டு தாக்குவார்..என்னையும் மச்சானையும் வேர ஒரு விளையாட்டு திரியில் போட்டு தாக்கினார்..நாங்களும் இவருக்கு பதில் தாக்குதல் நடத்தினோம் அதோடை அந்த திரி பூட்டப் பட்டது..இவர் கவுண்டமனியின் தீவிர ரசிகன்....அவர்ட்ட காமெடி என்றால் புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணாவுக்கு கொள்ளை விருப்பம்...இவரும் நல்லா பஞ்சு டையிலாக் விடுவார்...தமிழ் நாட்டில் வசிக்கும் எங்கள் ஈழ உறவுகளுக்கு உதவி செய்யும் ஒரு உறவு தான் நம்ம புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணா...

 

 

(39)

 

உடையார்

 

உடையார் அண்ணா...யாழ் களத்துக்கு தினமும் வந்து போக்கும் ஒரு உறவு..தமிழ் சிறி அண்ணாவுக்கும் உடையார் அண்ணாவுக்கும் நல்ல ஒத்துப் போக்கும்...சிறி அண்ணா திரும்பி வரும் வர நானும் யாழுக்கு வர மாட்டேன் என்று எழுதினேன்..அதையே தான் உடையார் அண்ணாவும் வந்து எழுதினார் அதையே கடைப் பிடித்தார் சிறி அண்ணா திரும்பி வரும் வர....அமைதியான யாழ் உறவு......

 

 

(40)

 

யாழ்கவி

 

யாழ்கவி..அவுஸ்ரெலியாவில் வசிக்கும் உறவு..ஜமுனாவுக்கு தெரிந்த உறவு .....இந்த உறவுடன் கருத்து களத்தில் எழுதினது பெரிசா ஞாவகம் இல்லை...ஆனால் அமைதியான உறவு.... பெரிசா அலட்டி கொள்வதும் இல்லை எழுத வேண்டிய இடத்தில் எழுதுவாங்கள்...

 

 

(41)

ராசவன்னியன் 

 

ராசவன்னியன்  அண்ணா..யாழிழ் அழகான படங்கள் இணைப்பார்..தமிழ் நாட்டில் வசிக்கும் உறவு....அரசியலில் ஆர்வம் கொண்டவர்...மற்ற உறவுகளை பகைத்துக் கொள்ளவதும் இல்லை எல்லாருடனும் அன்பாய் பன்பாய் பழகுவார்...ஈழப் பாடல்கள் மேல் ரொம்ப ஆர்வம் கொண்டவர்..ஒரு சில பாடல்களை யாழிழ் கேட்டும் இருக்கிறார்.....

 

 

(42) 

 

மருந்தங்கேனி

 
 
மருதங்கேனி அண்ணா.....இந்த அண்ணாவை அதிகம் ஊர்ப் புதினம்  அந்த திரியில் அதிகம் பார்க்கலாம்...தீவீர ஈழ ஆதரவாளர்..எதிர் அணியிர வாட்டி எடுப்பார்....ஈழத்துக்கு துரோகம் இழைக்கும் ஆட்களை ஓட ஓட விரட்டி அடிப்பார் தனி ஆளை நின்று..
மருந்தங்கேனி அண்ணாவுடன் நானும் சேர்ந்தால் அவர்கள் பாடு தின்டாட்டம் தான்....

 

தொடரும்

 

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா.நன்றாக உள்ளது தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்

புத்தன் அங்கில்...இவர்ட எழுத்தை பார்த்து நான் ஆரம்பத்தில் அதிர்ந்து போனேன்...புத்தன் அங்கில் வைக்கிற கருத்து இடியும் மின்னலைப் போன்று..நல்லா எழுதுவார் அந்த நாட்களில்..இப்ப எழுதுவதை கொஞ்சம் குறைத்து விட்டார்...ஜமுனாவின் மாமா...ஒரு நாள் ஜமுனா கூட கதைத்து கொண்டு இருக்கும் போது புத்தன் அங்கில் எப்படி இருப்பார் கந்தப்பு எப்படி இருப்பார் என்று கேட்டேன்..அப்ப ஜமுனா ஒரு படம் அனுப்பினார் இது தான் புத்தன் அங்கில் என்று அந்தப் படத்தில் கந்தப்பு அங்கிலும் வேர ஒரு ஆளும் நின்டார் சரி என்று படத்தை பார்த்ததும் அழித்து விட்டேன்.....மீண்டும் பழைய புத்தன் அங்கிலை நாங்கள் யாழிழ் பார்க்கனும்.... :D
நன்றிகள் பையன்......நான் தொடர்ந்து யாழில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்....மன்னிக்கவும் கிறுக்கிகொண்டிருக்கிறேன்....
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குட்டிப்பையா, உன் பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு..

அண்மையில் நாங்கள் தொடர்புகொண்டது குறைவு ஆனால் முதலில் அடிக்கடி சட் பண்ணி இருக்கிறம், என்னை டென்மார்க்குக்கு வாடா 2பேருமா சேர்ந்து புதிதாகத் தொழில் எல்லாம் ஆரம்பிக்கலாம் என்றவன். என்னை ஒன்லைன் பெட்டிங்கில் சேர்த்து விட்டவன். எனக்கு விளையாட்டில் பெரிதாக ஆர்வமில்லை என்றாலும் இடைக்கிடை இவனட்டை ஐடியா கேட்டு பெட்டிங் பண்ணி இருக்கிறேன்.

பையனா மாறினாலும் கூட இவன் எனக்கு குட்டிப்பையன் தான். இப்போது இவன் அடிக்கடி தீவிர அரசியல்(சீமான் அரசியல்) பேசும் போது சிரிப்பு வந்தாலும், ஒருநாள் கூட அவன் மேலை கோவப்பட்டதே இல்லை. ஒழிச்சுப் பிடிச்சு விளையாட்டு விளையாடுறதை விட எதையும் முகத்துக்கு நேரே பேசிவிடுவான். பக்குவம் வர அவனே உணருவான். அதனாலை குட்டிபையன் எப்பவும் "என் நண்பேன் டா" .. :)

 

 

இம்முட்டு விசயத்தை வைச்சிருந்திருக்கிறிங்கள்  அண்ணா.
வாழ்த்துக்கள்       
  • கருத்துக்கள உறவுகள்

 

 

(12)

 

விசுகு குகதாசன்

விசுகு அண்ணா யாழிழ் மூத்த ஒரு உறவு....தேசிய தலைவர் மேலும் அந்த போராட்டம் மேலும் நல்ல ஒரு பற்று கொண்ட ஒரு உறவு...நம்மல மாதிரி சின்ன பஸ்சங்களுக்கு நல்ல ஒரு வழி காட்டி என்று கூட சொல்லலாம்....போன மாதம் டென்மார்க் வந்து நின்ற பொழுது சந்திக்க கேட்டு இருந்தார்...ஓம் அண்ணா சந்திப்போம் என்று சொன்னேன்..பிறக்கு கலியாண வீடு போய் வந்து உடல் நிலையும் கொஞ்சம் சரி இல்லை அடுத்த முறை சந்திப்போம் என்று சொல்லி விட்டேன்....கருத்து களத்தில் மற்றவர்களுடன் சின்ன சின்ன முரன் பாடு இருந்தாலும் அதை மனதில் வைத்து கொள்ளாமல் பழக கூடிய ஒரு உறவு......

 

தொடரும் :) 

 

 

 

நன்றி  தம்பி  என்னையும்  பதிவு செய்தமைக்கு...

 

எழுதிக்கொண்டிருக்கும் போது

உங்கள் போன்றோரைக்கண்டால்

நான் எனது   வேலைகளைப்பார்க்கப்போய்  விடுவேன்.

அந்தளவுக்கு எல்லா விடயங்களிலும் ஒற்றுமைப்படும்  உறவு  தாங்கள்.

தம்பிமார்   நீங்கள்  இருப்பதால்

ஓய்வு எடுக்கும்  தைரியத்தில்     இருக்கின்றேன்

 

நானும்  அத்தாரின்  மறைவையொட்டி  வந்திருந்ததால்

உங்களை  வந்து  சந்திப்பதற்காக

அதிகம்  கவனம் செலுத்தமுடியாது போயிருந்தது.

ஆனாலும் குரலைக்கேட்டது சந்தோசம்.

ஆனால் அங்குள்ளவர்களுக்கு உங்களைத்தெரிந்திருந்தது.

(நீங்கள்   தந்த  தகவலுடன்)

அது தான்  டென்மார்க்கின்  பெருமை.

தமிழர்கள் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(43)

 

சித்தன்

 

சித்தன் அண்ணா......நான் யாழில் இணைந்த காலத்தில் அதிகம் எழுதுவார் யாழில்...முள்ளி வாய்க்கால் பிரச்சனையோடை இவரும் மனம் உடைந்து போய் விட்டார்...அந்த கவலையில் இருந்து மீண்ட மாதிரி தெரிய வில்லை...நல்ல ஒரு யாழ் உறவு..ஈழப் போராட்டம் என்றால் கானும் சித்தன் அண்ணாவுக்கு..அப்படி நல்லா நேசித்தவர் அந்த போராட்டத்தை..ஒரு திரியில்  எழுதி இருந்தார் அந்த போராட்டதை நினைத்து கொஞ்ச நாளாக தான் கோமாவில் இருந்தது என்று...அதை வாசிச்சு மன வருத்தப் பட்ட ஆட்களில் நானும் ஒருவன்...சித்தன் அண்ணா மீண்டு பழைய படி யாழுக்கு வரனும் வந்து மனசை விட்டு எழுதனும் எங்க கூட...ஜேர்மனில் வசிக்கும் உறவு....

 

(44)

வல்வை சகாறா

 

 

வல்வை சகாறா அக்கா..இந்த அக்காவை மாதிரி துனிந்த ஆட்களை நான் யாழில் பார்த்தது இல்லை...தன்ட படத்தை போட்டு கொண்டு ஈழத்துக்கு முழு ஆதரவு குடுத்து எழுதுவா...ஆரம்ப காலத்தில் தனி மடலில் ஈழப் பாடல்கள் வேணும் என்று கேட்டு எழுதுவா...யாழில் எங்கட ஒற்றுமையை பற்றி உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியுமே அடிடா புடிடா என்று சண்டை பிடிப்போம் அதை அடுத்த கனம் மறந்துடுவோம்...அதே மாதிரி தான் வல்வை சகாறா அக்காவும் நிழலி அண்ணாவும்..வல்வை சகாறா அக்கா மற்ற உறவுகளுக்கு மதிப்பளித்து யாழ் வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது..இணைந்து இருப்போம் அக்கா யாழில்...மற்றவர்களுடன் அன்பாய் பழகும் ஒரு உறவு...

 

 

(45)

ரதி

 

ரதி அக்கா..இந்த அக்கா கூட போடாத சண்டை இல்லை..விளையாட்டு திரியில் சண்டை பிடிப்போம் அரசியல் திரியில் சண்டை பிடிப்போம்...நாங்கள் இரண்டு பேரும் குத்துச் சண்டை வீரர்களாக வர வேண்டிய ஆட்கள் ஏதோ யாழ் களத்தில் இருந்து வாய் சண்டை பிடிச்சு கொண்டு  இருக்கிறோம் :rolleyes: ...நல்லா எழுதுவாங்கள்...குமாரசாமி தாத்தாவும் பெருமையா சந்தோசமாய் சொல்லுவார் இவங்க தன்ட தங்கைச்சி என்று.....யாழிழ் ரதி அக்காவை தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...இணைந்து இருப்போம் அக்கா யாழிழ்......

 

 

(46)

சாந்தி

 

சாந்தி அக்கா..சாந்தி அக்காவின் தம்பிகள் மச்சான் தங்கைச்சி என்று எல்லாரும் டென்மார்க்கில் தான் வசிக்கினம்...அவங்க எல்லார் கூடவும் கதைத்து இருக்கிறேன் பழகி இருக்கிறேன்..ஆனால் சாந்தி அக்காவை இன்று வர நேரில் கண்டது இல்லை...உறவுகளுக்கு ஓடி ஓடி உதவும் ஒரு உறவு...ஈழம் சம்மந்தமாய் சாந்தி அக்கா பல ஆக்கங்கள் யாழிழ் எழுதி இருக்கிறாங்க...ஈழப் போராட்டத்துக்கு முழு மூச்சில் உதவின ஒரு உறவு...அதே போல் தான் சாந்தி அக்காவின் டென்மார்க்கில் வசிக்கும் மாமாவும்...யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் சாந்தி அக்காவும் ஒரு ஆள்.......

 

 

(47)
 

மனிவாசகன்

 

மனி வாசகன் அண்ணா...இவர் பெரிய கிள்ளாடி ஆனால் தன்னை பெரிய ஆள் மாதிரி காட்டிக் கொள்வது இல்லை...ஒரு திரியில் பிள்ளையானை பற்றி ஒரு நகைச்சுவை எழுதி இருந்தார்..அதை என்னால் ன்றும் மறக்க முடியவில்லை...( அந்த காமெடிக்கு பெயர் பிள்ளையானின் இங்கிலிஸ் ) இந்த அண்ணா கால்பந்து விளையாட்டில் எந்த அணி வெற்றி பெரும் என்று கணிப்பிடுவதில் மனி வாசகன் அண்ணாவை கேட்டு தான்...கிரிக்கெட் விளையாட்டு மேலையும் கொஞ்சம் ஆர்வம் கொண்டவர்..போன வருட‌ம் நடந்த T20 உலக கின்ன கிரிக்கெட் போட்டியில் பையினலில் வெஸ்சின்டீஸ் அணி வின் பன்ன மனிவாசக‌ன் அண்ணா அடைந்த சந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது :D 

 

 

தொடரும் 

 

Edited by பையன்26

களத்தில் பழகிய அனைவரையும் நினைவில் வைத்து அது குறித்துப் பதிவிடுவது என்பது இலகுவான காரியமல்ல. அந்த வகையில் பையனின் முயற்சி பாராட்டுக்குரியது. 

 

பையனின் இந்தப் பதிவைப் பார்த்த போது மாப்பிள்ளையின் ஞாபகம் தான் வந்தது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(48)

 

புலவர்

 

புலவர் அண்ணா..இவரும் மற்ற உறவுகள போல தமிழீழம் மேல் அதிக பற்று கொண்ட ஆள்...யாழில் நடக்கும் பரிசுப் போட்டியிலும் கலந்து கொள்ளுவார் பரிசுப் போட்டி ஆரம்பம்மாக்கி ஒரு கிழமை கழித்து தான் கலந்து கொள்வார்...கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..விளையாட்டு திரியில் நானும் புலவர் அண்ணாவும்  கூட அலட்டி இருக்கிறோம்......தாயகப் பாடல்களையும் புலவர் அண்ணா விரும்பி கேட்ப்பார்...


(49)
 

மல்லையூரான்

 

மல்லையூரான் அண்ணா..கருத்துகள‌த்தில் பெரிய பந்தியாய் எழுதுறது யார் என்று கேட்டால் நான் மல்லையூரன் அண்ணாவை தான் சொல்லுவேன்....யாழில் அதி வேகமாய் கருத்து எழுதும் ஆட்களில் மல்லையூரன் அண்ணாவும் ஒரு ஆள்....நான் பார்த்த மட்டில் ஒருதர் கூடவும் முரன்படுவது இல்லை இந்த அண்ணா...அரசியலில் ஆர்வம் கொண்டவர்...மல்லையூரன் அண்ணா எழுதின கருத்து கூட ஊர்புதினத்தில் தான்..சூறாவளி வேகத்தில் கருத்து எழுதும் மல்லையூரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்....

(50)
 

கோமகன்

 

கோமகன் அண்ணா..இவரும் யாழில் நிறைய எழுதி இருக்கிறார்..உள்ள போய் பார்த்தால் பெரிய பந்தி பந்தியாய் எழுதி இருப்பார்...கதை கவிதை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்...சில உறவுகளுடன் முரன் பட்டாலும் அதை அடுத்த கனம் மறந்து விடுவார்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்....

 

(51)
 

தப்பிலி

 

தப்பிலி அண்ணா..யாழில் அலட்டாமல் அமைதியாய் இருக்கிற உறவுகளில் தப்பிலி அண்ணாவும் ஒரு ஆள்....பெரிசா எழுத மாட்டார்..பல அரசியல் திரிகளில் இவர் எழுதினதை பார்த்து இருக்கிறேன்...இணைந்து இருங்கள் அண்ணா யாழில்

 

 

(52)
 

சிறி

 

சிறி அண்ணா...இந்த சிறி அண்ணா ஈழப் பாடல்கள் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர்...பல ஈழ பாட்டு வரிகள் யாழிழ் எழுதி இருக்கிறார்...ஜேர்மனியில் வசிக்கும் உறவு..ஆரம்பத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்போம்...இப்ப சிறி அண்ணா யாழுக்கு துப்பரவாய் வருவது இல்லை..மீண்டும் சிறி அண்ணா யாழ் வந்து மற்ற உறவுகளுடன் கருத்தாடனும்.....


(53)
 

யாயினி

 

யாயினி அக்கா..கனடாவில் வசிக்கும் உறவு.. ஆரம்பத்தில் இந்த அக்காவை யாழில் அதிகம் காணலாம்...இப்ப வருவது குறைவு..ஒரு சில திரிகளில் இந்த அக்கா கூட கருத்தாடல் பன்னி இருக்கிறேன்....இணைந்து இருங்கள் அக்கா யாழில்

(54)

 

தமிழ்தங்கை

 

 

தமிழ்தங்கை அக்கா...இந்த அக்காவுக்கு ஈழம் சம்மந்தப்பட்டஅனிமிசன் அனுப்பி இருந்தேன் அவாக்கு அது நல்லாவே பிடித்துப் போய் விட்டது..அதை யாழில் போட்டு அழகு பார்த்தா...நல்ல ஒரு அக்கா..இரண்டு வருடத்துக்கு முதல் தான் திருமணம் நடந்தது..ஈழப் போராட்டம் மேல் அதிக பற்று கொண்ட ஒரு அக்கா...முள்ளி வாய்க்கால் பிரச்சனையோடை தமிழ்தங்கை அக்காவின்வருகையும் யாழில் குறைந்து விட்டது...தமிழ்தங்கை அக்கா மீண்டும் யாழுக்கு வந்து மற்ற உறவுகளுடன் கருத்தாடனும்.....யாழில் நல்ல உறவுகளில் தமிழ் தங்கை அக்காவும் ஒரு ஆள்.....

 

தொடரும்

 

 

 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(55)
 

காட்டாறு

 

 

காட்டாறு அண்ணா..இந்த அண்ணா நல்ல ஒரு கருத்தாளர்..இவரின் கருத்தை நான் தேடி தேடிப் போய் படிப்பேன்..ஈழ போராட்டத்துக்கு உதவின ஒரு உறவு..கருத்துக் களத்தில் சின்ன வரி தான் எழுதுவார் அப்படி எழுதினால் யாழ் இணையதளம் அதிரும்..ஏதோ தெரியல‌ இப்ப இந்த அண்ணாவும் யாழுக்கு வருவது இல்லை...நல்ல கருதாளர்கள் எல்லாம் யாழை விட்டு ஒதுங்கி நிப்பது கவலையை தருது....மீண்டும் யாழுக்கு காட்டாறு அண்ணா வரனும் வந்து மற்ற உறவுகளுடன் எழுதனும்......உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கு அண்ணா மீண்டும் யாழ் வாங்கோ.....

 

(56)
 

சுவி

 

சுவி அண்ணா..இந்த அண்ணா கூட பல திரிகளில் ஜாலியா எழுதி இருக்கிறேன்...நல்லா மனம் விட்டு எழுதக் கூடிய உறவு...சுவி அண்ணா எழுதினதில் எனக்கும் மிகவும் பிடித்தது இது தான்..ஒரு கோலும் அடிக்காமல் முடிந்த கால்பந்து விளையாட்டு எத்தனை..ஒரு ஓட்டமும் எடுக்காமல் முடிஞ்ச‌ கிரிக்கெட் விளையாட்டு எங்கையாவது இருக்கா என்று விளையாட்டு திரியில் நகைச்சுவையாய் எழுதி இருந்தார்.....பிரான்சில் வசிக்கும் உறவு..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்

 

 

(57)
 

ஹரி

 

ஹரி அண்ணா..இந்த அண்ணா சீமான் அண்ணாவின் காணொளிகள் யாழில் அதிகம் இணைப்பார்...ஈழத்துக்கு வலு சேர்க்கும் உறவுகளில் ஹரி அண்ணாவும் ஒரு ஆள்...உடல் நிலை சரியானதும் யாழ் வருவார்..நல்ல ஒரு உறவு.....

 

(58)

செவ்வந்தி

 

செவ்வந்தி அக்கா...யாழில் ஆரம்பத்தில் அதிகம் இந்த அக்காவை ஊர் புதினம் திரியில் பார்க்கலாம்...சாள்ஸ் அண்ணாவை பற்றி ஒரு திரியில் எழுதி இருந்தா அவரின் கொழும்பு வாழ்க்கையை பற்றி ...இப்ப பெரிசா யாழ் வருவது இல்லை....

 

(59)
 

தூயா

 

 

தூயா அக்கா...இந்த அக்கா நான் யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் யாழுக்கு தினமும் வருவா..இப்ப ஆள் வருவது இல்லை...இந்த அக்காவும் யாழில் பாட்டு வரிகள் சமையல் பற்றி நிறைய எழுதி இருக்கிறா..அவுஸ்ரேலியாவில் வசிக்கும் உறவு...நல்ல ஒரு அக்கா...தமிழ் ஈழப் பாடல் என்றால் நல்ல‌ விருப்பம் இந்த அக்காக்கு....

 

தொடரும்

 

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா... அமைதியாக இருக்கும் பையனுக்குள் இவ்வளவு ஞாபகசக்தியா.. எல்லாரையும் பிரிச்சு மேய்கிறியள்... தொடருங்கள் பையா... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(60)

 

சோழியன்

சோழியன் அண்ணா...பழைய யாழ் உறவு.....கொஞ்ச நாள் யாழ் வராமல் இருந்தார்...இப்ப பழைய போல யாழ் வருகிறார்  இணைந்து இருங்கள் அண்ணா எங்களுடன்...எங்கட முதல் கருத்தாடல் சண்டையில் தான் ஆரம்பிச்சது..அதை நான் அந்த நாளே மறந்து விட்டேன்... சோழியன் அண்ணாவும் மறந்து இருபார் என்று நினைக்கிறேன்....ஜேர்மன் நாட்டில் வசிக்கும் உறவு....

 

(61)
 

யாழ் அன்பு

 

யாழ் அன்பு அண்ணா..இந்த அண்ணா செய்திகளை யாழில் உடனுக்குடன் இணைப்பார்...அரசியலில் ஆர்வம் கொண்டவர்...நல்ல ஒரு கருத்தாளர்..யாழுக்கு இவர் ஆற்றும் பணி பெரியது...இணைந்து இருங்கள் அண்ணா யாழில்".....

 

சபேசன்

 

சபேசன் அண்ணா...பல ஆய்வுகள்  எழுதி இருக்கிறார் யாழில்...அரசியலில் ஆர்வம் கொண்டவர் அதிலும் தமிழ் நாட்டு அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..கருத்துக் களத்தில் முரன் படுவோம் அடுத்த கனம் மறந்துடுவோம்..இணைந்து இருங்கள் யாழில் அண்ணா.....

 

தொடரும்

 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(63)

 

மெசொபொத்தேமியா சுமேரியர்

 

மெசொபொத்தேமியா சுமேரியர் அக்கா...இந்த அக்காட பெயர வாசிக்க கஸ்ரப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன்..இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெயரா..இந்த அக்கா போன வருடம் தான் யாழில் இணைந்தா..பாரீஸ் போய் வந்த அனுபவத்தை யாழில்  எழுதி இருந்தா ..சந்திச்ச உறவுகளை பற்றியும் எழுதி இருந்தா...வாசிக்க நல்லா இருந்திச்சு..இணைந்து இருங்கள் யாழில் அக்கா....


(64)

 

அலைமகள்

 

அலைமகள் அக்கா..இவங்ள கூட திண்ணையில் கானலாம்...இந்த அக்காவும் சீமான் அண்ணாவுக்கு எதிரான அக்கா தான்.....கருத்துக்களத்தில் அப்ப அப்ப எதிர் கருத்து வைப்ப்போம் அம்மட்டு தான்...இணைந்து இருங்கள் யாழுடன் அக்கா 

 

 

(65)

சாத்திரி

 

சாத்திரி அண்ணா...இந்த அண்ணா யாழில் பல விடையங்கள் எழுதி இருக்கிறார்...சாத்திரி அண்ணாவின் கருத்துடன் சிலசமயங்களில் உடன் பாடு இல்லை...யாழுக்கு தினமும் வந்து போக்கும் ஒரு உறவு...சிரிப்போம் சிறப்போம் திரியில் சாத்திரி அண்ணா மற்றவர்களை சிரிக்க வைச்சதை மறக்க முடியாது..  .இணைந்து இருங்கள் அண்ணா யாழுடன்...


தொடரும்

 

Edited by பையன்26

பையனைப்பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். முன்பு பையனைப்பற்றி எழுதிய பழையதை தற்போது கிளறுவது வில்லங்கத்தில் போய் முடியுமோ தெரியாது. என்றாலும், பையன் சமாளிப்பான் என்பதனால் பழைய மேற்கோளை இணைக்கின்றேன்.

 

குட்டிபையன்26:

யாழில் அண்மையில இணைஞ்சு பல பகுதிகளிலையும் கலக்கி அடிச்சு வருகின்றார். எனக்கு இவர் எழுதியதில மிகவும் பிடிச்ச சுவாரசியமான பதிவு என்ன எண்டால் யமுனா அண்மையில ஆரம்பிச்ச ஒரு கருத்தாடலுக்கு... அந்த தலைப்பு இப்ப நினைவில இல்லை... அதற்கு இவர் எழுதிய சொந்தக் கருத்து.

டென்மார்க்கில இருக்கிற குட்டிப்பையன் தனது காதல் கதையை ஆரம்பத்தில இருந்து அது எப்பிடி ஏற்பட்டிசிது, ஆரம்பிச்சு வச்சவர் யார், எண்டு Step by Step ஆக விவரமாக சொல்லி இருந்தார். தன்மீது அதிகபற்றுகொண்ட தனது காதலி குட்டிபையனின் பெயரை தனது உடம்பில பச்சை குத்தின விசயமும் சொல்லி இருந்தார் (ஊரில சில ஆண்கள் காதலாகி கசிஞ்சு பெண்களுக்காக தூக்குகாவடி எடுத்தகதை தெரியும். ஆனால் பெண்கள் யாராவது காதலில கரைஞ்சு ஆண்களுக்காக பச்சை குத்தி நான் கேள்விப்பட இல்லை). வாசிக்க மிகவும் சுவாரசியமாய் இருந்திச்சிது. ஒரு குட்டிபையன் யாழில கதைக்கிற கதையோ இது எண்டு கேட்கக்கூடாது... யாழ் குட்டிதம்பி காதல் மன்னனாக விளங்கி காதலில வெற்றி பெற்று இருப்பது போல குட்டிபையனுக்கும் நல்லதொரு வாழ்வு அமைய வாழ்த்துகள்!

 

 

மேலதிகமாக சொல்வதென்றால்.. பையன் நல்ல திடகாத்திரமான சுறுசுறுப்பான இளைஞன். தமிழ்தங்கையுடன் முன்பு கதைத்தபோது தனது அவதாரை தானாகவே முன்வந்து பையனே செய்து தந்ததாகவும், அக்கா இதை போட்டால் நல்லாய் இருக்கும் என்று சொல்லி அந்த படத்தை தனக்கு தனிமடலில் அனுப்பியதாகவும் பின்னர் அதை தனது சுயவிபரக்கோவைக்குரிய படமாக்கியதாகவும் சொன்னார். பின்னர் இந்தப்படம் தமிழ்தங்கையினை யாழில் நினைவுபடுத்தும் சின்னமாகிவிட்டது. 

 

av-3570.gif

 

 

பையன் ஆரம்பத்தில் எழுத்துக்கூட்டி யாழ் கருத்துக்களத்தில் எழுதிப்பழகி, இப்போது சுயமாகவே சரளமாக நீண்ட பந்திகளாக எழுதுவது நல்ல முன்னேற்றத்தை காட்டுகின்றது. இவ்வாறே வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பையன் நன்றாக முன்னேறவும், நல்ல ஒளிமயமான எதிர்காலம் பையனுக்கு அமைய எனது உளம் கனிந்த வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பையனைப்பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். முன்பு பையனைப்பற்றி எழுதிய பழையதை தற்போது கிளறுவது வில்லங்கத்தில் போய் முடியுமோ தெரியாது. என்றாலும், பையன் சமாளிப்பான் என்பதனால் பழைய மேற்கோளை இணைக்கின்றேன்.

 

 

 

மேலதிகமாக சொல்வதென்றால்.. பையன் நல்ல திடகாத்திரமான சுறுசுறுப்பான இளைஞன். தமிழ்தங்கையுடன் முன்பு கதைத்தபோது தனது அவதாரை தானாகவே முன்வந்து பையனே செய்து தந்ததாகவும், அக்கா இதை போட்டால் நல்லாய் இருக்கும் என்று சொல்லி அந்த படத்தை தனக்கு தனிமடலில் அனுப்பியதாகவும் பின்னர் அதை தனது சுயவிபரக்கோவைக்குரிய படமாக்கியதாகவும் சொன்னார். பின்னர் இந்தப்படம் தமிழ்தங்கையினை யாழில் நினைவுபடுத்தும் சின்னமாகிவிட்டது. 

 

av-3570.gif

 

 

பையன் ஆரம்பத்தில் எழுத்துக்கூட்டி யாழ் கருத்துக்களத்தில் எழுதிப்பழகி, இப்போது சுயமாகவே சரளமாக நீண்ட பந்திகளாக எழுதுவது நல்ல முன்னேற்றத்தை காட்டுகின்றது. இவ்வாறே வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பையன் நன்றாக முன்னேறவும், நல்ல ஒளிமயமான எதிர்காலம் பையனுக்கு அமைய எனது உளம் கனிந்த வாழ்த்துகள்!

 

 

இவ்வாறு

ஒவ்வொருவரும் எழுதினால்

மிகவும்  பயனுள்ள திரியாக இதுவும்  அமையும்

நன்றி  கரும்பு நேரத்திற்கும்  கருத்துக்கும்

(பச்சை  முடிந்துவிட்டதால் எழுதவேண்டியதாயிற்று)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையன் என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு. எல்லோரயும் பற்றி நன்றாக நினைவு வைத்து பதிவு செய்கின்றீர்கள். தொடருங்கள் வாழ்த்துக்கள் ! ! :D  :D

முதலில் இந்த சிறு வயதில் இப்படியொரு பரந்துபட்ட சிந்தனை உள்ளம் கொண்ட ஓர் வாலிபனை முதல் முதல் இந்த களத்தில் கண்டதையிட்டு பெருமையடைகிறேன் 
 
தமிழுக்கும் ,இனத்திற்கும்எதிராக  கருத்துரைப்போரை புலியாக பாய்ந்து எதிர்க்கருத்திட்டு யதார்த்தமான ,உண்மையான துணிவான கருத்தை வைக்கும் ஓர் உறவு .பல முறை தனி மடலிலும் முகப்புத்தகத்திலும் பேசியுள்ளேன் ....எப்பவுமே அவரது பேச்சுக்கள் தமிழீழம் சார்ந்தவையாகவே அமையும் ..
 
நாம் இந்த அவதாரில் பார்க்கும் பையனை  நினைத்துகொண்டு அவரை சாதாரணமான ஒருவராய் கணிப்பிடக்கூடாது என்னில் அவரது உருவத்தை புகைப்படம் மூலம் பார்த்தவன் என்ற வகையில் .............கூறுகிறேன் ................அழகான ,கட்டுடல் கொண்ட ஒரு வாலிபன் .
தென்னிந்திய நடிகர்கள் கூட இவனது அழகைப்பார்த்து நாணுவார்கள் ..................... :)
 
அருமையான பதிவு தொடருங்கள் பையா /////////////

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(66)
 

விவசாயி விக்

 

 

விவசாயி விக் அண்ணா...இந்த அண்ணாவும் போன வருடம் தான் யாழில் இணைந்தார்...ஊர்ப் புதினம் திரியில் இந்த அண்ணாவை அதிகம் காணலாம்...தேசப் பற்று உள்ள உறவு...இணைந்து இருங்கள் அண்ணா யாழில்

 

(67)
 

யாழ்வாலி

 

யாழ்வாலி அண்ணா..இந்த அண்ணா பழைய யாழ் உறவு என்று அடிக்கடி நினைப்பதுண்டு.. சேகுவேரா என்ற பெயரில் வந்தது இவரா இருக்குமோ என்று நினைப்பதுண்டு...இந்த அண்ணா கொஞ்ச நாளுக்கு முதல் ஒரு திரியை எனக்கு அனுப்பினார்...பின்னர் அதை பற்றி நானும் யாழ்வாலி அண்ணாவும் கருத்தாடிட்டு இருந்தோம்...யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் யாழ்வாலி அண்ணாவும் ஒரு ஆள்.....

 

(68)
 

வந்தியதேவன்

 

வந்தியதேவன் அண்ணா..அன்மையில் யாழில் இணைந்த உறவு...தமிழ் உணர்வு  உள்ள உறவு..இவங்களை கூட ஊர்ப் புதினம் திரியில் அதிகம் காண்பேன்..இணைந்து இருங்கள் எங்களுடன் அண்ணா....

(69)
 

நந்தன்
 
நந்தன் அண்ணா..இந்த அண்ணா கூட கருத்து எழுதினால் எனக்கு சிரிப்பு தான் கூட வரும்...யாழில் நான் ஒரு காதல் பாட்டை இணைக்க இவர் வந்து கேட்டார் பையன் நீங்கள் இப்படியான பாடல் எல்லாம் கேட்பிங்களா என்று..நான் சொன்னேன் ஒம் அண்ணா என்று..உங்களுக்கும் இந்தப் பாடல் பிடித்து இருக்கா என்று கேட்டதுக்கு நந்தன் அண்ணா எழுதின பதில் இது தான்...( இந்தப் பாட்டை நான்  கேட்டுட்டுப் போக்கனும் தன்ட மனிசிட்டை அடி தான் வேண்டனும் என்று நகைச்சுவையாய் எழுதினார்..இணைந்து இருங்கள் அண்ணா யாழில்

 

 

 

(70)
 

ரகுநாதன்
 
ரகுநாதன் அண்ணா..இந்த அண்ணா ஈழம் சம்மந்தமான விடையங்கள் தான் யாழில் எழுதுவார்...2008ம் ஆண்டு ரகு அண்ணாவை யாழில் அதிகம் காணலாம்..இந்த அண்ணா இப்ப பெரிதாய் எழுதுவது இல்லை...தன்ர தம்பி போராட்டத்தில் வீரச்சாவு அடைந்தவர் என்று கூட எழுதி இருந்தார் ...அவுஸ்ரெலியாவில் வசிக்கும் உறவு....ரகு அண்ணா கூட விளையாட்டு திரியில் கருத்தாடி இருக்கிறேன்..ரகு அண்ணாவுக்கும் கிரிக்கெட் விளையாட்டு என்றால் கானும்...இணைந்து இருங்கள் யாழில் அண்ணா.....
 
 
 
 
 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரிதான் பையன். நான் வரும்போது யமுனா இல்லை. தெரியாதவர்களைப் பற்றிய உங்கள் வரிகள் வாசிக்கும்போது அவர்கள் மீண்டும் யாழில் வந்து எழுத மாட்டார்களா?? என்னும் ஆதங்கம் எழுகிறது. தொடருங்கள் பையா. :D

 

நன்றி அக்கா ...நீங்க கேட்ட போலவே உறவுகள பற்றி எழுதி இருக்கிறேன் நேரம் இருக்கும் போது படியுங்கோ....உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :D

 

 

தொடருங்கோ பையா . பழைய காலத்தை அசை போடுவதும் ஒரு சுகானுபவமே :) :) .

நன்றி அண்ணா  :)

தூயா பபா.. கலைஞன் மற்றும் சில கள உறவுகள்.. வரிசையில்.. நீங்களும் இதனைத் தொடர்வதில்.. வாழ்த்துக்கள்..! :)

நன்றி விறதர்  :)

அருமையான  பதிவு தம்பி

எனக்கு சிலவற்றை  யாழைவிட்டு நான் போகுமுன் யாழில் செய்யணும்  என்ற விருப்பங்களில்  இதுவும்  ஒன்று.

அதை  தம்பிகள்  செய்வது மகிழ்ச்சி  தருகிறது.

 

அதுவும் பையன்  செய்யத்தொடங்கியிருப்பது மேலும   மகிழ்ச்சி  தருகிறது

காரணம்

தமிழில்  எழுத அவர்   சிரமப்படுபவர்

ஆனால் இதை தேர்ந்தெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது

வாழ்த்துக்கள்  தம்பி

நன்றி அண்ணா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

பையன் 26 , வாழ்த்துக்கள் பையா !  நல்ல விடயங்களை  எழுதுகின்றீர்கள்  தொடர்ந்து எழுதுங்கோ !! :D  

நன்றி அண்ணா..

வணக்கம், பையா!

 

உங்கள் தமிழ் நடை, பேச்சுத் தமிழ் போல, அழகாக உள்ளது!  :D

 

தமிழ் எழுதுவதில், நீங்கள் நீண்ட தூரம் வந்து விட்டீர்கள்! தொடருங்கள்!

நன்றி அண்ணா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

உண்மையில் இங்கு எனக்கு பலரை தெரியாது நீங்க எழுதுவதால் அவர்களை அவர் குணங்களை அறிய முடிகிறது தொடருங்கள் பையா :)

நன்றி அண்ணா நாலு எழுத்துப் பிழை விட்டு எழுதி இருக்கிறேன் கொஞ்சம் சமாளிச்சு வாசியுங்கோ...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 

அருமையான பதிவு பையா..

பையனிடம் எனக்குப் பிடித்த பண்பு வெ ளிப்படையான தேசப்பற்று. பலர் (நான் உட்பட) சில கருத்துக்களை மறைமுகமாக அல்லது தவிர்த்தே எழுதுவோம். பையன் அப்படியல்ல.. மனதில் பட்டதை அப்படியே எழுதுவார். சீமானைப் போல.

வாழ்த்துக்கள் பையா..!

நன்றி டங்கு அண்ணா...
எப்பவும் வெளிப்படையாய் தான் கதைக்க வேனும் அண்ணா...எல்லாத்தையும் மனசுக்கு உள்ள வைத்து இருந்தால் அது மன ரிதியாய் பல நோயை தரும்..உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா என்னையும் நினைவு கூர்ந்ததற்கு.... தொடர்ந்திருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் திரி. ஏன் சிலர் யாழ் பக்கம் வருவதில்லை என்று கேட்டு எழுதுங்கள்!

பொண்ணுங்களோட பழகுவதில் ஆர்வம் இருப்பதால் பையனோடு பழக்கம் இல்லை!

நன்றி கிருபன் அண்ணா
 
யாருக்கு அண்ணா தெரியும் ஹா ஹா  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.